வன்முத்தம் 8
தனக்கு பால் எடுத்து வருவதாக சென்றவனை கண் திறந்து பார்த்தாள்.
அவன் பேசியது கேட்டது நிலாவுக்கு, ஆனால் அவன் செய்வதை வேண்டாம் என்று மறுக்க அவளால் முடியவில்லை.
கீழே கிச்சனுக்கு வந்தவன் பால் காய்ச்ச உள்ளே செல்ல.. உள்ளே இருந்து ஆறுமுகம் தன் கையில் பால் க்ளாஸுடன் வந்தார்.
வளவனை அங்கு பார்த்தவர் “என்ன வளவன் இந்த நேரம் ” என்றான்.
“இல்ல மேடமுக்கு வொமிட் நிக்கல , அவங்க டேப்ளெட்ஸ் போடணும் அதான் பால் எடுத்துட்டு போக வந்தேன்” என்றவன் பேசி முடிக்கும் வரை அவரை பார்க்கவே இல்லை.
அவருக்கும் அவன் நிலை புரிந்தது. அவன் அம்மாவின் உயிரை பணயம் வைத்து இந்த திருமணத்தை முடித்திருக்கிறார் அல்லவா.. அவருக்கும் அந்த நேரத்தில் வேறு வழி தெரியவில்லையே… என்று நினைத்தவர். தன் நிலையை பற்றி வளவனிடம் நேரம் வரும்போது சொல்லி புரியவைக்க வேண்டும் என்றும் நினைத்துக்கொண்டவர் தன் கையில் இருந்த பால் கிளாஸை அவனிடம் கொடுத்து “இதை கொண்டு போய் நிலாகிட்டே கொடுங்க மாப்பிள்ளை . நான் தேனுக்கு வேற கொண்டு போறேன்” என்றார்.
“இல்ல பரவால்ல.. நானே.. “என்று வளவன் கூற…
“பரவால்ல மாப்பிள்ளை பிடிங்க” என்று அவன் கையில் பால் டம்பளரை கொடுத்துவிட்டு உள்ளே செல்ல.. வல்லவனும் பால் டம்பளரை எடுத்துக்கொண்டு பெட் ரூம் சென்றான்.
அவன் செல்லும் நேரம் நிலாவினி குமட்டிக்கொண்டு கட்டிலில் இருந்து எழுந்திருக்க.. அந்த நேரம் வளவன் உள்ளே வரவும் சரியாக இருந்தது, “ஹே! நிலா நில்லு நான் வரேன் ” என்றபடி உள்ளே வந்தவன் கையில் இருந்த டம்பளரை அவசரமாக வைத்துவிட்டு வருவதற்குள் அவள் வாந்தி எடுக்க ஆரம்பிக்க… வளவன் ஓடிச் சென்று அவள் வாந்தி எடுத்ததை கை நீட்டி ஏந்திக்கொண்டான்.
நிலா பதறி அவனைப் பார்க்க.. “பரவால்ல இன்னும் வருதா?” என்றான்.
அவள் கலங்கிய கண்களில் இல்லை என்று தலையை இடவலமாக ஆட்ட…
“சரி நீ அப்படியே உக்காரு நான் வரேன்” என்று பாத்ரூம் சென்று கைகளை கழுவிவிட்டு ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்துக்கொண்டு வந்தவன் அவள் முகத்தை அந்த தண்ணீர் கொண்டு துடைத்து விட்டவன் அவளுக்கு குடிக்கத் தண்ணீர் கொடுத்து வாயை கழுவ சொன்னான். அவன் சொன்னதை செய்தாள்.
அவளிடம் இருந்து தண்ணீரை வாங்கி கீழே வைத்தவன். அருகில் இருந்த பால் டம்பளரை எடுத்து நிலாவிடம் நீட்டியவன் “இந்த பாலை குடிங்க ” என்றான்.
சற்று முன் தன் பெயரை உரிமையாக அழைத்தவன் இப்பொது பழையபடி மரியாதையோடு பேசியது அவளுக்கு வலித்தது. ஆனால் அவனிடம் அதை கேட்க முடியவில்லை. அவன் நீட்டிய கிளாஸை வாங்கி பாலை குடித்து முடித்தவள் சாய்ந்து அமர்ந்தாள்.
கூடவே டேப்லட்டை எடுத்து அவளிடம் நீட்டி சாப்பிட சொன்னான், அதையும் வாங்கி போட்டவள் அவனையே பார்க்க.. அவள் பார்வையில் இருந்த மாற்றத்தைக் கண்டு வளவன் புருவம் சுருக்கினான். ஆனால் கேட்கவில்லை.
கிளாஸை வைத்தவன் அவள் முகம் கழுவிய பாத்திரத்தை எடுத்து வைத்துவிட்டு வந்தவன். “இப்போ ஓகேவா?” என்றான் அக்கறையாக.
“ம்ம்.. பரவால்ல கொஞ்சம் ” என்றாள்.
“சரி அப்போ படுத்துத் தூங்குங்க” என்றுவிட்டு சோபாவில் போய் படுத்துக் கொண்டான்.
நிலாவும் அவனைப் பார்த்துக்கொண்டே படுத்திருந்தவள் மாத்திரையின் வீரியத்தில் சிறிது நேரத்தில் உறங்கியும் விட்டாள்.
அதுவரை கண்கள் மூடி தூங்குவது போல படுத்திருந்தவன். மெல்ல சோபாவில் இருந்து எழுந்து அமர்ந்தான். பெட் லாம்ப் வெளிச்சத்தில் தெரிந்த அவள் முகத்தைப் பார்த்தவன் எழுந்து அவள் அருகில் வந்தான்.
சோர்ந்து வாடிப்போய் உறங்கிக்கொண்டு இருந்ததை கண்டான். என்னவோ அவன் மனம் பிசைந்தது. நிலாவின் முகத்தில் அவள் கூந்தல் காற்றில் படர.. அதை ஒதுக்கி அவள் காதோரம் விட்டவன் அவள் முகத்தருகே குனிந்தான். அவள் முகமும் அவன் முகமும் நெருக்கமாக இருந்தது. அவள் இதழ்களை பார்த்தான் அதை கண்டதும் எச்சில் விழுங்கியவன் தன் இதழ்களை அவனையும் அறியாமல் ஈரப்படுத்திக்கொண்டான். மேலும் அவளை நெருங்கி அவள் இதழ் அருகே குனிந்தான். தூக்கத்தில் நிலா திரும்பியவள் தன் கையை தூக்கி போட.. அது அவன் தோள் மேல் போய் விழுந்தது,
அதை சற்றும் எதிர்பார்காதவன் நிலாவை பார்த்தான். அவள் இன்னமும் தூங்கிக்கொண்டு தான் இருந்தாள். மெல்ல அவள் கையை பிடித்தவன் தன் தோள் மீது எடுத்தான். அவளோ அவன் கையில் இருந்த தன் கையை தூக்கத்தில் இழுத்தவள் அவன் முகத்தின் அருகே கொண்டு சென்று அவன் கன்னத்தில் தன் கையால் வருடினாள்.
அவ்வளவு தான் வளவன் அப்படியே அவள் விரல்களின் ஸ்பரிசத்தை எதிர்ப்பித்தவன் தன்னையும் அறியாமல் கண்களை மூடிக்கொள்ள.. அவன் கன்னத்தை தழுவிக்கொண்ட வந்த அவள் கைகள் அவன் உதட்டை வருடி அப்படியே கீழ் இறங்கி அவன் மார்பில் ஸ்பரிசிக்க..
வளவனோ என்னவென சொல்ல முடியாத உணர்வுகளில் ஆட்கொண்டு அவனையும் அறியாமல் அப்படியே நின்று இருந்தான். “ம்ம்.. க்கும்.. ” என்று தூக்கத்தில் சிணுங்கிக்கொண்டே அவள் திரும்பிபடுக்க…
அவள் விரல்கள் அவன் பனியனில் கொக்கி போல மாட்டிக்கொள்ள.. அவளோடு சேர்த்து அவன் மேலும் கீழே குனிந்தவன் தடுமாறி அவள் கன்னத்தில் தன் இதழ் பதித்து விட்டான்.
அதுவரை கண்கள் மூடி இருந்தவன் பட்டென்று கண்களை திறந்தவன் வேகமாக அவளை விட்டு விலகி நின்றான். அவன் பனியனில் மாட்டிக்கொண்ட கைகள் அவன் வேகமாக விலகியதால் பட்டென்று கீழே விழ… அதில் தூக்கம் கலைந்தவளாக கண்களைத் திறக்க..
அவள் முன் வேக மூச்சு எடுத்தவனாக நின்று இருந்தான் வளவன். அவனை பார்த்தவள் “என்ன வளவன் இங்க நிக்குறீங்க?” என்றபடி மெல்ல எழ முயன்றாள்.
“மேடம் இப்போ எதுக்கு எழறிங்க? ஒன்னும் இல்ல நான் பாத்ரூம் போக வந்தேன். நீங்க படுத்து தூங்குங்க” என்று சொல்லிவிட்டு வேகமாக பாத்ரூம் சென்று கதவை சாற்றிக்கொண்டான்.
அவளோ புரியாமல் பார்த்தாள். மீண்டும் தலை சாய்த்து படுத்தவள் தன் கைவிரல்களை பார்த்தாள். என்னவோ வித்தியாசமான ஸ்பரிசத்தை உணர்ந்தது போல தோன்றியது. கைவிரல்களை முகத்தருகே கொண்டு சென்றவள் கண்களை மூடிக்கொண்டே தன் முகத்தை வளவனை ஸ்பரிசித்த விரல்களால் தன் முகத்தையும் ஸ்பரிசித்தாள். என்னவோ வித்யாசமாக தான் தோன்றியது , அப்படியே அமைதியாக படுத்தும் விட்டாள்.
இங்கே பாத்ரூமிற்குள் வந்து கதைவடைத்தவன் கண்ணாடி முன் நின்று இருந்தான்,
“டேய்! வளவா! என்ன டா பண்ணிட்டு இருக்க? இங்க உனக்கான இடம் என்னனு தெரியும் தானே. அப்பறோம் எதுக்கு இந்த மாதிரி கேடுகெட்ட எண்ணம் எல்லாம் வருது உனக்கு” என்று தன்னை தானே திட்டிகொண்டவன் தன் முகமெல்லாம் சூடானது போன்ற ஒரு உணர்வு , பைப்பை திறந்து விட்டவன் தண்ணீரை பிடித்து முகத்தில் அடித்துக் கழுவினான். மீண்டும் தன் முகத்தை கண்ணாடியில் பார்த்தான்.
அவன் காது மடல்கள் சிவந்து இருந்தது. சிறிது நேரம் அப்படியே நின்றவன் டவலை எடுத்து முகத்தை துடைத்துக்கொண்டு வெளியே வந்தவன் நிலாவின் பக்கம் திரும்பவே இல்லை . நேராக சோபாவில் சென்று அமர்ந்தவன்.
“ச்சே! என்ன இது இன்னும் உடம்பெல்லாம் சூடா இருக்க மாதிரியே இருக்கு . ஏன் இவ்ளோ வேர்க்குது எனக்கு ” என்று நினைத்தவன் சட்டையை கழட்டி போட்டுவிட்டு வெறும் கை இல்லாத பனியனோடு தலைக்கு கை கொடுத்து அப்படியே படுத்துக்கொண்டான். நீண்ட நேரம் களைத்து தான் உறங்கினான்.
“விஜிம்மா எப்படி இருக்கீங்க?” என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தான் வஜ்ரவேல்.
அவருக்கு உணவு ஊட்டிக்கொண்டு இருந்த உமையாள் வஜ்ரவேல் வந்ததும் அவசரமாக பின்னால் நகர்ந்து அவனுக்கு வழி விட்டாள்.
அவளை சினேகமாக பார்த்து சிரித்தவன் “என்ன சாப்பிடறீங்க விஜிம்மா” என்று உமையாள் கையில் இருந்த உணவை எட்டி பார்த்தான்.
“ம்ஹும்.. இட்லியா? வீட்ல சுட்டதா?” என்றான்
“ஹ.. ஆமா தம்பி. என் பொண்ணு செஞ்சு எடுத்துட்டு வந்தா” என்று சற்று மூச்சு வாங்க பேசினார் விஜயலக்ஷ்மி.
“ம்ஹும்.. பரவால்ல.. குழம்பு வாசமே கமகமக்குது” என்றவன் ஸ்டெதஸ்க்கோப்பை வைத்து அவருக்கு உடல் நிலையை பரிசோதித்தான்.
“ஏன் தம்பி நீங்க எதுவும் சாப்பிடலையா?” என்றார் விஜி.
“இனிதான் கேன்டீன்ல சாப்பிடணும் விஜிம்மா” என்றான் சலிப்பாக.
“ஏன்ப்பா வீட்ல சாப்பிடலையா?” என்றார்.
“யாராவது இருந்தா செஞ்சு கொடுப்பாங்க” என்றவன் “ம்ம்ம்.. குட் நல்லா இருக்கு, ஸ்ட்ரைன் பண்ணாம ரிலாக்ஸ்சா இருங்க” என்றான்.
அவன் தனக்கு யாரும் இல்லை என்றதும் அவனை பாவமாக பார்த்தார் விஜி.
“பீல் பண்ணாதீங்க அம்மா. என் அம்மாவும், அப்பாவும் டூர் போயிருக்காங்க, வரதுக்கு 1 வாரம் ஆகிடும். அது வர நான் இங்க கேன்டீன்ல தான் சாப்பிடணும். எனக்கு இங்க இருக்க புட் சுத்தமாக பிடிக்கல” என்றான்.
“அடப்பாவி, யாருமே இல்லாத மாதிரி பேசுனானே” என்ற ரீதியில் பார்த்தாள் உமையாள்.
விஜ்யலக்ஷ்மியும் அவனை அந்த ரீதியில் தான் பார்த்தார்.
இருவரின் பார்வையும் புரிந்தது அவனுக்கு. “நான் அவங்க ஊர்ல இல்லேன்னு தான் சொன்னேன். அவங்களே இல்லேனு சொல்லலையே” என்று விஜியை முழுமையாக பரிசோதித்துவிட்டு நிமிர்ந்தான்.
அவனை பார்த்து சிரித்த விஜி, “சாப்பிடறீங்களா தம்பி ” என்றார்.
“இவ்ளோ நேரம் ஆச்சா இதை கேக்க உங்களுக்கு ” என்று சிரித்தவன் . “கை கழுவிட்டு வரேன்” என்று அங்கிருந்த வாஷ்பேசினில் கையை கழுவினான்.
“எப்போடான்னு இருக்கான் இவன்” என்று நினைத்து அவனை முறைத்தாள் உமையாள்.
“அம்மு! தம்பிக்கு இட்லி போட்டுக்கொடு டா” என்றார்.
“ம்ம்.. போட்டுக்கொடு அம்மு” என்று விஜியின் கால் அருகில் கட்டிலில் அமர்ந்தான்.
“ஐயோ தம்பி” என்று அவர் பதற..
“விஜிம்மா ரிலாக்ஸ்.. நான் தான் ஸ்ட்ரெய்ன் பண்ணக்கூடாதுனு சொன்னேன் இல்ல.. ” என்றவன் “நீங்க படுங்க ” என்று அவரை படுத்த வைத்தவன் “அம்மு, நீ இட்லி வைம்மா” என்றான்.
தட்டில் இட்லியை வைத்து கொண்டு வந்து அவன் கையில் திணித்தாள்.
அவனோ அதை கண்டுகொள்ளாமல் சாப்பிட துவங்கினான்.
“ம்ம்.. சூப்பரா இருக்கு விஜிம்மா… ” என்றான்.
“என் பொண்ணு நல்லா சமைப்பா தம்பி, அவ தான் செஞ்சு எடுத்துட்டு வந்தா” என்றார்.
“அப்படியா!” என்று உமையாளை பார்த்தவன். “இன்னும் ரெண்டு இட்லி வை அம்மு” என்றான் உரிமையாக.
அவனை முறைத்துக்கொண்டு கேட்க கேட்க இட்லியை வைத்தாள் உமையாள். அவனும் கூச்சம் இல்லாமல் இட்லியை வாங்கி சாப்பிட்டவன் “இட்லிக்கு தக்காளிக்குருமா சூப்பர் காம்பினேஷன்” என்றான்.
அவனை முறைத்தவள் “இருக்காதா பின்ன . கொண்டு வந்த மொத்த இட்லியை எங்களுக்கு இல்லாம சாப்பிட்டு முடிச்சாச்சில்ல.. ” என்றவள் “தட்டை கொடுங்க காயுது” என்றாள் .
“எது?” என்றான்.
“ம்ம்ம் தட்டு” என்று அவனிடம் இருந்து தட்டை வெடுக்கென்று பிடிங்கி சென்றாள்.
அவளை சிரித்துக்கொண்டே பார்த்தான் வஜ்ரவேல்.
“தம்பி அவளை தப்ப எடுத்துக்காதீங்க, எப்பவும் இப்படி தான் ” என்று சிரித்தார் விஜி.
“பரவால்ல ம்மா… ” என்றவன் உமையாள் தட்டு கழுவிக்கொண்டு இருக்க… எழுந்து அவளிடம் சென்றவன் திரும்பி விஜயலட்சுமியை பார்த்தான். அவர் கண் மூடி படுத்திருக்க..
“சாப்பாடு சூப்பர் ” என்றவன் “நீயும் சூப்பர்” என்றான்.
தட்டுக் கழுவிக்கொண்டிருந்தவள் அதிர்ந்து அவனை பார்க்க..
அவளை பார்த்து கண் சிமிட்டியவன் கை கழுவினான், அவனை அவள் முறைக்க…
“கியூட்டா முறைக்குற தக்காளி” என்று அவள் சுடிதார் துப்பட்டாவில் கையை துடைத்துவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறி இருந்தான்.
உமையாளுக்கு என்ன நடந்தது என்று ஒன்றும் புரியவில்லை.
