Home Uncategorizedவல்லவனின் வன்முத்தம் 11

வல்லவனின் வன்முத்தம் 11

by Layas Tamil Novel
51 views

வன்முத்தம் 11

“மேடம்” என்று கேபின் கதவை தட்டிக்கொண்டு உள்ளே நுழைந்தான் வளவன்.

அவனை பார்த்ததும் மென் புன்னகையை சிந்தியவள் “உக்காருங்க வளவன்” என்று அவனைப் பார்க்காமலேயே பதில் சொன்னாள் நிலாவினி.

அவள் முன் நின்றவன் நிலாவினியை ஆழ்ந்து பார்த்தான் அப்போதுதான். சிவப்பு நிற காட்டன் சாரீ அணிந்து அதற்கு மெட்சாக ப்ளௌஸ் அணிந்து அழகாக இருந்தாள், தலைமுடியை தூக்கி கொண்டையிட்டு இருக்க… அவள் வெண்மையாக சங்கு கழுத்தில் அவன் கட்டிய மஞ்சள் தாலி மின்னியது அவன் கண்ணில்.

காதில் சின்ன ஜிமிக்கி போட்டிருந்தாள். அங்கிருந்து அவன் பார்வை அப்படியே அவள் விழிகளை நோக்கி நகர…

அவள் வளவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சட்டென சுதாரித்தவன்”இட்ஸ் ஓகே மேம், நான் வழக்கமா உங்க முன்ன உக்கார மாட்டேன் தானே.. இப்போ என்ன புதுசா” என்றவன். ” எனக்கு ஒரு விஷயம் கேக்கணும் உங்ககிட்டே” என்றான்.

“அப்போ நீ என்கிட்டே பியேவா இருந்த டா, இப்போ நீ என் புருஷன் அந்த வித்யாசம் கூடவா உன்னால தெரிஞ்சுக்க முடியல” என்று சொல்லத் தோன்றியது அவளுக்கு.

அவனை ஏறிட்டவள் “சொல்லுங்க” என்று சீட்டில் சாய்ந்து அமர்ந்தாள்.

” இந்த ப்ரோமோஷன் நியாயமான முறையில் எனக்கு கிடைச்சதா தெரியல மேடம், உங்க வீட்டுக்கு வீட்டோட மாப்பிள்ளையா வந்ததுக்காக கொடுத்தது போல இருக்கு” என்றான்.

அவனை ஆழ்ந்து பார்த்தவள் “எதை வெச்சு அப்படி சொல்றிங்க வளவன்” என்று சீட்டில் இருந்து எழுந்து வந்தவள் அவன் முன் டேபிள் சாய்ந்து கை கட்டிக்கொண்டு அவனை பார்த்தாள்..

“சம்மந்தமே இல்லாம. இவ்ளோ நாள் கழிச்சு அதுவும் உங்களுக்கும், எனக்கும் கல்யாணம் ஆன உடனே எனக்கு ப்ரோமோஷன் கொடுத்திருக்கிங்க. அப்போ அதானே அர்த்தம். நம்ம ஆபீஸ்ல திறமையான என்னைவிட எஸ்பியரின்ஸ் ஆன ஆட்கள் நிறைய இருக்காங்க. அவங்கள்ள வேற யாருக்கும் கொடுத்திருக்கலாம்” என்றான்.

“நீங்க நினைக்குறது போல இல்ல வளவன், என் அப்பா சொன்னதை கேட்டீங்க தானே நீங்க. இது நம்ம கல்யாண பேச்சு எடுக்குறதுக்கு முன்னமே எடுத்த முடிவு” என்றாள்.

“அது சும்மா கண் துடைப்புக்கு சொல்லி இருப்பார் மேடம், உங்களை கல்யாணம் செய்துட்டு நான் உங்களுக்கு கீழயே பியேவா வேலை பார்த்தா அது உங்க கெளரவத்துக்கு குறைச்சலா இருக்கும்னு சொல்லிட்டு இந்த ப்ரோமோஷன் தந்திருக்கார்” என்றான்.

“அப்டியா!” என்றவள் நின்ற இடத்தில் இருந்து லேசாக திரும்பி இன்டெர்காமை அழுத்தியவள் “கௌரி, நான் சொன்னேனே அந்த பைலை என் கேபினுக்கு கொண்டு வாங்க” என்று போனை வைத்தாள்.

அவள் வளைந்ததில் அவள் மெல்லிய இடை லேசாக அவன் பார்வையில் அகப்பட.. அதை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு திரும்பிகொண்டான் பார்வையை.

சற்று நேரத்தில் கௌரி பைலுடன் வந்தவள் அதை கொடுத்துவிட்டு வெளியே செல்லப்போக.. “கௌரி, நீயும் இரு” என்றாள்.

அவள் தயங்கிக்கொண்டே அப்படியே நின்றிருக்க..

அவள் கொடுத்த பைலை வளவனிடம் தந்தவள் “நீங்களே பாருங்க வளவன் அப்போதான் உங்களோட ப்ரோமோஷன் எதுக்காகனு புரியும்” என்றாள்.

அவள் நீட்டிய பைலை யோசனையுடன் வாங்கியவன் அதை பிரித்து பார்க்க.. அதில் அவனுடைய ப்ரோமோஷன் லெட்டர் இருந்தது. 

அவன் அதை படித்துவிட்டு நிலாவினியை பார்க்க.. “அந்த ஜெர்மனி கம்பெனியுடன் பேச்சு வார்த்தை ஆரம்பித்த நேரத்திலேயே இந்த ப்ரோமோஷன் லெட்டர் ஆறுமுகம் சார் சொல்ல சொல்ல நான் தான் அடிச்சேன். இந்த ப்ராஜெக்ட் சக்ஸஸ்புலா நீங்க கண்டிப்பா முடிச்சிருவிங்கன்னு சார் என்கிட்டே சொன்னார். அந்த சக்ஸஸ் மீட்ல தான் உங்களுக்கு இந்த ப்ரோமோஷன் லெட்டர் குடுக்கிறதா இருந்துச்சு” என்று கௌரி சொல்ல..

அவளை நுமிர்ந்து பார்த்துவிட்டு நிலாவினியை பார்த்தான்.

“இப்போ சொல்லுங்க வளவன். என் அப்பா நீங்க என்னை கல்யாணம் பண்ணின ஒரே காரணத்துக்காக தான் இந்த ப்ரோமோஷன் கொடுத்தாருன்னு இன்னமும் நம்புறீங்களா?” என்றாள்.

அவன் தலை இல்லை என்று இடவலமாக ஆட..

“ம்ம்.. தட்ஸ் இட். இனி நீங்க என்னோட பியே கிடையாது. இந்த கம்பெனியில் உங்களுக்கு ஒரு பொறுப்பு வந்திருக்கு. அதை நல்லபடியா செய்விங்கனு நம்புறேன்” என்றாள்.

அதற்கு மேல் அவளிடம் மருத்துப் பேச அவனிடம் எதுவும் இல்லை. 

“இனிமேல் என்னோட பியேவா கௌரிக்கு ப்ரோமோஷன் கொடுத்திருக்கேன். நீங்க உங்களுக்கு கொடுத்த போஸ்டிங்கிற்கு வேலை செய்தால் போதும். உங்களுக்கான கேபின் அதோ அங்கிருக்கு” என்றாள்.

அவள் அப்படி சொன்னதும் கௌரி அதிர்ந்து நிலாவினியை பார்க்க.அவளோ கண்கள் மூடி ஆம் என்று பதில் சொன்னவள்.

“உங்களுக்கு பியேவா மிஸ்டர் அருண் ஒர்க் பண்ணுவார்” என்றாள்.

எல்லாமே சடுதியில் உருவானது போல ஒரு பிம்பம் அவன் மனதில் எழுந்ததும். கல்யாணம், ப்ரோமோஷன் இரண்டும் தான். அவன் நினைத்து பார்க்காத நேரத்தில் வந்திருக்க.. அதை அவன் மனம் இன்னமும் ஏற்றுக் கொள்ளவில்லை.

யோசனையோடு அவன் நின்று இருக்க.. 

“மேடம் நான் வெளிய இருக்கேன்” என்று கௌரி கிளம்பி இருந்தாள்.

வளவனும் நீண்ட பெருமூச்சை எடுத்துவிட்டவன் “ஓகே மேடம் எனக்கு ஒர்க் இருக்கு ” என்று அவன் கிளம்ப.

“ஒரு நிமிஷம் வளவன் ” என்றவள் டேபிளில் இருந்து சுற்றி வந்தவள் மேஜை ட்ராயரை திறந்து அதில் இருந்த ஒரு சிறு பெட்டியை  எடுத்து அவனிடம் நீட்டினாள்.

அவள் கையில் இருந்த பெட்டியை பார்த்தான் வளவன் அது பொன்னிற கிப்ட் பேப்பரால் சுற்றி இருந்தது. அதில் சிவப்பு நிற ரிப்பன் கட்டி இருக்க.. அதை பார்த்துவிட்டு நிலாவினியை பார்த்தான்.

“வாங்கிக்கோங்க வளவன் உங்க ப்ரோமிஷனுக்காக ஒரு சின்ன கிப்ட்” என்றாள்.

“இந்த ப்ரோமோஷனே எனக்குத்தானானு

நான் இன்னும் யோசிச்சிட்டு இருக்கேன். இதுல இந்த கிப்ட் எல்லாம் தேவை இல்ல மேடம்” என்றான்.

அவளை பார்த்து பெருமூச்சு விட்டவள். ” என்னை கல்யாணம் செய்துட்டனால தான் இந்த கிப்ட் உங்களுக்கு கொடுக்கிறேன்னு நீங்க தப்பா நினைச்சுட்டீங்க வளவன். ஆக்சுவலா இந்த போஸ்டிங்க்கு யார பிரமோட் பண்ணி இருந்தாலும் அவங்களுக்கு நம்ம கம்பெனி சார்பாக இந்த கிப்ட்ஸ் கண்டிப்பா கொடுத்து இருப்போம். அதுதான் உங்களுக்கும் கொடுத்து இருக்கேன்” என்றாள்.

 யோசனையோடு அவள் கையில் இருந்த அந்த கிப்ட் பாக்ஸை வாங்கியவன் திரும்பி செல்ல…

 “வளவன் ஒன் மினிட், அந்த கிப்ட் என்னென்ன நீங்க ஓபன் பண்ணி பாக்கலையா?” என்றாள்.

 பெருமூச்சொன்று எடுத்து விட்டவன் திரும்பி அவள் முன் வந்து அவள் முன்னாலேயே அந்த பெட்டியை திறக்கலானான்.

அந்த கிப்ட் திறப்பதியில் வளவனுக்கு ஆர்வம் இல்லை. ஆனால் அவன் எதிரி நின்றிருந்த நிலாவின் முகத்தில் தான் அத்தனை ஆர்வம்.

அந்த பரிசை பார்த்துவிட்டு அவன் முகம் எந்த மாதிரியான உணர்வுகளை கொடுக்கப் போகிறது. அவன் சந்தோஷப்படுவானா? அவனுக்கு இது பிடித்திருக்குமா? என்று ஆயிரம் கேள்விகளோடு அதே எதிர்பார்ப்போடும் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

 மேலே இருந்து கிப்ட் ராப்பரை பிரித்துவிட்டு அந்த  பெட்டியை திறந்தான். அதற்குள்ளும் இரண்டு சிறிய பெட்டிகள் இருந்தது.

 புருவம் முடிச்சிட பார்வை மட்டும் உயர்த்தி நிலாவினியை பார்க்க..

“பிரிங்க வளவன்” என்று லேசாக சிரித்தாள்.

அந்த பாக்ஸை அருகில் இருந்த சேரில் வைத்தவன்  அதில் இருந்த முதல் பெட்டியை எடுத்து திறந்து  பார்க்க அதனுள் ஒரு கொத்து சாவி இருந்தது. அது ஒரு வீட்டின் சாவி போல இருந்தது.

 அந்த சாவினுடைய ஒரு டாக் போன்ற அட்டை தொங்கிக் கொண்டிருக்க அதில் எழுதிய வாசகத்தை படித்துப் பார்த்தான். அதில் ஹோம் ஸ்வீட் ஹோம் என்று எழுதி இருந்தது.

 வாசகத்தை படித்திடுமே தான் நினைத்தது சரிதான் என்று நினைத்தவன் நிமிர்ந்து நிலாவினை பார்த்து ” மேடம் என்ன இது? ” என்றான்.

 “இன்னொரு பாக்ஸையும் பிரிச்சு பார்த்துட்டு மொத்தமா உங்க சந்தேகத்தை  கேளுங்க”  என்றாள் 

 கண் முடித்திருந்தவன் அருகில் இருந்த மற்றொரு பெட்டியை திறந்து பார்க்க அதில் ஒரு ரிமோட் கீ இருந்தது. அதைப் பார்த்ததுமே புரிந்து விட்டது கார் சாவி என்று.

 மேடம் இது ரெண்டுமே என்னோட தகுதிக்கு மீறி என்ன கிப்ட் எனக்கு எதுவும் வேண்டாம் என்றான்.

 “வளவன் இது உங்களோட திறமைக்கு கிடைச்ச பரிசு, இத வேண்டான்னு நீங்க மறக்கக்கூடாது” என்றாள்.

 “இல்ல மேடம், எனக்கு இது வேண்டாம்” என்று தயங்கினான். 

சிறிது யோசித்து விட்டு கார் சாவியை மட்டும் எடுத்துக்கொண்டு அந்த வீட்டுச் சாவியை அவளிடம் நீட்டினான்.

நிலா அவனை புரியாமல் பார்க்க..

“நீங்க கொடுத்த பரிசு நான் வாங்கணும் அவ்வளவு தானே? எனக்கு இந்த கார் மட்டும் போதும் இந்த வீடு வேண்டாம்” என்றான்.

 “பட் வளவன் இந்த ரெண்டு கிப்ட்சுமே உங்களுக்காக தான்” என்று கார் சாவியை வாங்க மறுத்தாள் நிலாவினி.

இந்த காரை நான் ஏத்துக்கிட்டதுக்கு  காரணமே  நீங்களும் நானும் பிசினஸ் விஷயமாகவோ அல்லது நம்ம குடும்ப விஷயமாகவோ ஒண்ணா போக வேண்டி இருக்கும். இவ்வளவு வசதி படைத்த உங்களை சாதாரணமா என்னோட பைக்ல கூட்டிட்டு போறது உங்களோட அந்தஸ்துக்கு குறைவா இருக்கும்” என்று அவளை பார்த்தான்.

அவள் இல்லை என்று மறுப்பாக தலையை ஆட்ட… அதை கண்டுகொள்ளாதவன்.

“அதுக்காகத்தான் இந்த காரை எடுத்துக்கிட்டேன். ஆனால் இந்த வீடு எனக்கு வேண்டாம்.  நான் உழைச்சி சம்பாரிச்சு கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வச்சு லோன் போட்டு வாங்கின வீடு இருக்கு. அதனால எனக்கு இந்த வீடு தேவையில்லை” என்று மறுத்தான்.

நிலாவினி பேச வார்த்தைகள் இல்லாமல் நின்றிருக்க..

அவள் அவள் அருகில் வந்தவன் ” உங்க அந்தஸ்துக்கு என்ன கொண்டு வரணும்னு நினைக்கிறது தப்பு இல்ல. ஆனா எனக்குன்னு ஒரு தன்மானம் இருக்கு அதை விட்டுக் கொடுத்துட்டு எல்லாத்துக்கும் சரின்னு என்னால தலையாட்டிட்டு இருக்க முடியாது” என்றான்.

 அவள் மேஜை மீது சாவியை வைத்தவன் திரும்பி நிலாவினியை ஒரு பார்வை பார்த்துவிட்டு சாரி என்றான் 

 புரியாமல் அவள் அவனைப் பார்க்க..

“இந்த ரெண்டு நாள்ல உங்க மனசு நோகும்படி நான் நிறைய பேசிட்டேன். இப்போ வரன்னு நினைக்கிறேன். ஆனா நீங்களும் என் மனச கொஞ்சம் புரிஞ்சுக்கணும்”  என்றான்.

“உங்க மன்னிப்பை நான் ஏத்துக்கணும்னா நான் சொல்றத நீங்க செய்யணும், இல்லன்னா இந்த வீட்டு சாவியையும் நீங்க எடுத்துக்கணும்”  என்றாள்.

 என்ன என்பது போல வளவன் நிலாவை பார்க்க..

அவன் முகத்தருகே சற்று நெருங்கியவள் சொன்ன வார்த்தைகள் கேட்டு அவளை விழி விரித்துப் பார்த்தான் வளவன்.

“ஓகேவா?” என்று அவள் கண் சிமிட்ட..

அவனோ அவள் கேட்டதற்கு இல்லை என்று மறுப்பதற்கு மனம் இல்லாமல் சரி என்று தலையை ஆட்டினான் 

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured