Home Uncategorizedவல்லவனின் வன்முத்தம் 15

வல்லவனின் வன்முத்தம் 15

by Layas Tamil Novel
63 views

வன்முத்தம் 15

“வ.. வளவன் என்ன கீழே இறக்கி விடுங்க” என்று அவன் பார்வையில் சிக்கித் தவித்தவள் அதிலிருந்து மீள முடியாமல் திக்கித் திணறி பேசினாள்.

 அவளாலேயே மீள முடியவில்லை அவன் நிறைவு அதற்கு மேலே..

நிலாவினி பேசியது அவன் காதில் விழவே இல்லை. 

 இருவரின் முகமும் தொட்டுவிடும் தூரத்தில் மிக நெருக்கத்தில் இருப்பது. 

 இதயம் படபடக்க வளவனை பார்த்தாள் நிலாவினி.

 அவனோ அவள்   முகத்தருகே தன் முகத்தை மெல்ல கொண்டு சென்றான்.

 நிலாவினிக்கு  வியர்த்தே விட்டது. அவளும்  வளவனின் விழிகளில் கட்டுண்டுவள் போல அப்படியே இருக்க..

 அனைத்து பிடித்திருந்ததில் நிலாவினியின் வேகமாக துடிக்க அதை உணர்ந்தவன் உடலோ  மேலும்  உஷ்ணம் ஏற்றி இருந்தது அவள் உதட்டை தொட்டுவிடும் தூரத்தில் நெருங்கி விட்டான் வளவன்.

 வளவன் நெருங்கி வரவும், தன்னை அறியாமல் பெண்ணவள் கண்களை மெல்ல மூடிக்கொள்ள..

 நிலாவினியின் துடிக்கும் இதழ்களை பார்த்துக்கொண்டே கீழே குனிந்த நொடி “அண்ணா! அண்ணா! அம்மா உங்க ரெண்டு பேரையும் கூப்பிடுறாங்க” என்று உமையாள் குரல் கொடுக்க..

அதில் உணர்வு வந்த இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க அடுத்த நொடி வளவன் நிலாவை கீழ இறக்கி விடவும் நிலா அவன் பிடியிலிருந்து இறங்கவும் சரியாக இருந்தது.

 “அண்ணா!” என்று மீண்டும் உமையாள் குரல் கொடுக்க 

“வரேன் அம்மு” என்றான் வளவன் 

நிலாவிற்கோ அவன் முகத்தை பார்க்கவே முடியவில்லை.

 அவள் நிலையை உணர்ந்த வளவன் திரும்பி நின்ற படி  “நீ டிரஸ் பண்ணிட்டு வா நிலா. நான் வெளிய வெய்ட் பண்றேன் ” என்று   வெளியே வந்தவன் கதைவடைத்துவிட்டு தனக்குள் வெடித்துக்கொண்டிருந்த பூகம்பத்தை தலையை அழுந்த கொத்தி தடுக்க முயன்றான்.

இங்கே நிலாவோ  தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள   மூச்சை இழுத்து விட்டுக்கொண்டிருந்தாள். அவளுக்கு இன்னமும் பதட்டம் தனியவில்லை. அப்படியே நெஞ்சம் படபடக்க.. சிறிது நேரம் கட்டிலில் அமர்ந்தவள்  தன்னை நிதானப்படுத்திக்கொண்டு சேலையை கட்டிவிட்டு வெளியே வந்தாள் .

அங்கே வளவன் இல்லை. சற்று பதற்றத்தோடே ஹாலுக்கு வந்தவள் அங்கே நின்று இருந்த வெற்றியையும், உமையாளையும் பார்த்தாள்.

இருவரும்  நிலாவினியையும், வளவனையும் பார்த்து தங்களுக்குள் ஏதோ பேசி சிரித்துக்கொள்ள..

அவர்களை வளவனும் கண்டு கொண்டவன் “என்ன சிரிச்சிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும் போய் வேலையைப் பாருங்க” என்று அதட்ட..

“சிபி! நீ எப்பவும் மாடியில் வெயிட் லிப்ட் பண்ணிட்டே இருப்பியே அது ஏன்னு எனக்கு அப்போ புரியல.. ஆனா இப்போ புரிஞ்சிடுச்சு “என்று சொன்ன வெற்றி அங்கிருந்து ஓடிவிட..

“டேய்!” என்று வளவன் சத்தமிட.

“வெற்றி சரியா தான் சொல்லிட்டு போறான். அண்ணியை நீ அலேக்கா தூக்கிட்டு ரூமுக்குள்ள போயிட்டியாமே..” என்றாள் உமையாளும். அவளை நின்ற இடத்திலேயே திரும்பி பார்த்தான் வளவன் .

அடுத்த நொடி அவள் கிச்சனுக்குள் ஓடிவிட..

நிலாவினிக்கோ தர்ம சங்கடம் ஆனது. வளவனை எதிர்கொள்ள முடியாமல் மற்றவர்களிடமும் பேச முடியாமல் விஜயலக்ஷ்மி ரூமிற்குள் தஞ்சம் புகுந்து கொண்டாள்.

 நீண்ட நேரம் கழித்து தான் வளவன் அவன் அம்மாவின் அறைக்குள் நுழைந்தான்.

அங்கே நிலாவினியும் அவன் அம்மா விஜியும் அமர்ந்திருந்தார்கள். விஜி இத்தனை ஆண்டுகளில் இப்படி ஒரு நிம்மதியான, மனப்பூர்வமான சிரிப்பைச் சிரித்து வளவன் கண்டதில்லை. அவன் கால்கள் தானாகவே நின்றுவிட,வளவன் அறைக்கதவோரம் சாய்ந்து  நின்றான்.

விஜியின் சிரிப்பு அவனை ஆச்சர்யப்பட வைத்தது.

நிலாவினி அங்கே அமர்ந்து, தன் கைகளால் ஏதோ ஜாடைகள் காட்டிப் பேசிக்கொண்டிருந்தாள்.

“அத்தை… இப்போ இருக்கிற பசங்க பண்ற கலாட்டா இருக்கே, அது தனி ரகம்! தாரா காலேஜ் சேர்ந்த புதுசுல, அவளுக்கு சீனியர்ஸ் எல்லாம் சேர்ந்து ஒரு ‘ராகிங்’ பண்ணிருக்காங்க. நான் அப்போதான் கோர்ஸ் முடிச்சிட்டு வெளிய வந்திருந்தேன்…” என்று நிலாவினி ஆரம்பிக்க,

விஜி ஆர்வமாக அவள் முகத்தையே பார்த்தார்.

“தாரா ரொம்ப அப்பாவி அத்தை. ஆனா அவளுக்குள்ள ஒரு சின்ன திமிர் உண்டு. ‘என் அக்கா இதே காலேஜ்ல தான் படிச்சா, அவளைத் தெரியாத ஆளே இல்லை’ன்னு அங்க போய் சொல்லிட்டா. உடனே அந்த சீனியர்ஸ் எல்லாம் அவளைக் கூப்பிட்டு, ‘அப்படியா? அப்போ உங்க அக்கா பாடின ஒரு பாட்டை நீ இப்போ பாடு’ன்னு சொல்லிருக்காங்க.”

நிலாவினி சிரித்துக்கொண்டே தொடர்ந்தாள், “எனக்கு பாடவே வராதுன்னு தாராவுக்குத் தெரியும். ஆனா இவ என்ன பண்ணா தெரியுமா? அங்க இருந்த ஒரு சீனியர் பையனோட போனை வாங்கி, நேரா எனக்கு வீடியோ கால் பண்ணிட்டா! நான் அப்போதான் ஒரு இன்டர்வியூ முடிச்சிட்டு வெளிய வர்றேன். போனை எடுத்தா, அங்க ஒரு முப்பது பேர் முன்னாடி தாரா நிக்கிறா.” என்றாள்.

விஜி வியப்போடு, “அப்புறம் என்னாச்சு நிலா?” என்றார்.

“தாரா போன்ல என்கிட்ட, ‘அக்கா… இவங்க எல்லாரும் நீங்க பாடின அந்தப் புகழ்பெற்ற பாட்டைப் பாடச் சொல்றாங்க’ன்னு ஒரு போடு போட்டா. எனக்குப் புரியல. ஆனா அவ கண்ணுலயே ஏதோ சிக்னல் கொடுத்தா. நான் யோசிக்காம, அங்கேயே நின்னுகிட்டு ஒரு பழைய மெலடி பாட்டைப் பாட ஆரம்பிச்சேன். ஆனா பாருங்க அத்தை… நான் பாட ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துல அந்த சீனியர்ஸ் எல்லாம் ஓடிட்டாங்க. ஏன்னா என் பாட்டு அவ்வளவு ‘அருமையா’ இருக்கும்!” என்று நிலாவினி வாய்விட்டு சிரிக்க..

“நீயும் தாராவும் சேர்ந்து அந்தப் பசங்களையே ஒரு வழி பண்ணிட்டீங்க ” என்று அவரும் சிரித்தார்.

சிரிப்பு அடங்கியதும் நிலாவினியின் குரலில் ஒரு நிதானம் வந்தது.

“அத்தை, தாராவுக்கு நான் அக்கா மட்டும் இல்ல, ஒரு அம்மா மாதிரி. அவ காலேஜ் போறப்போ அவளுக்குத் தேவையான டிரஸ்ல இருந்து, அவளோட நோட்ஸ் வரைக்கும் நானே தான் பார்த்துப்பேன். சில நேரத்துல அவளைத் திட்டுவேன், ஆனா அன்னைக்கு அந்த ராகிங்ல இருந்து அவளைக் காப்பாத்துனப்போ அவ என் கையைப் பிடிச்சுக்கிட்டு சொன்னா… ‘நீ இருக்கிற வரைக்கும் எனக்கு யாரைப் பார்த்தும் பயம் இல்லைன்னு சொன்னா.”

நிலாவினி இதைச் சொல்லும்போது அவள் கண்களில் ஒரு மென்மை இருந்தது.

“அப்போதான் எனக்குப் புரிஞ்சது அத்தை, நமக்காக ஒரு உயிர் காத்துக்கிட்டு இருக்குங்கிறப்போ வர்ற தைரியமே தனி. என்னை நம்பி யார் இருக்காங்களோ அவங்களை நான் எந்த சூழ்நிலையிலும் கைவிட மாட்டேன்”என்றாள் .

இதைக் கேட்டுக்கொண்டிருந்த வளவனுக்குள் ஏதோ ஒரு புரிந்தது போல இருந்தது. நிலாவினி அவள் வயதிற்கு எவ்வளவு பக்குவமாக பேசுகிறாள், எவ்வ்ளவு பொறுப்போடு இருக்கிறாள் என்று நினைத்தான்.

‘இத்தனை பக்குவமான ஒருத்தியையா நான் சரியாய் புரிஞ்சுக்கலையா?” என்று வளவன் தன்னைத்தானே கேட்டுக்கொண்டான். அவள் அழகை விட, அவளது அந்த ஆளுமை அவனை ஈர்த்தது.

விஜி நிலாவினியின் கையை வருடிக்கொண்டே சொன்னார், “உன் அம்மா கொடுத்து வச்சவ நிலா. உன்ன மாதிரி ஒரு பொண்ணு என் வீட்டுக்கு மருமகளா வாரத்துக்கு நான் கொடுத்து வெச்சிருக்கணும், நீ எங்க குடும்பத்துல ஒருத்தி ஆகிட்ட .. இனி இந்த வீட்டோட பொறுப்பு மொத்தத்தையும் நீ தான் பார்த்துக்கணும்” என்றார்.

“அப்போ மருமக வந்ததும் எல்லா பொறுப்பையும் தூக்கி கொடுத்துட்டீங்க, இத்தனை நாள் உங்களையும், இந்த வீடு பொறுப்பையும் பார்த்துட்டு இருந்த என்னை மறந்துட்டீங்க அப்படித்தானே” என்று நிலாவினியை தாண்டி சென்று அவன் அம்மாவின் காலடியில் அமர்ந்தான்.

அவன் குரல் கேட்டதும் நிலாவினி எழ..

கட்டிலில் அமர்ந்தவன் “உக்காரு ” என்று உரிமையாக அவள் கையை பிடித்து நாற்காலியில் அமர வைத்தான்.

நிலாவினிக்கோ அவனின் இந்த உரிமையான தீண்டல் ஆச்சர்யமாக இருந்தது.

“சொல்லுங்க அம்மா, நிலா வந்ததும் நான் யாரோ ஆகிட்டேனா” என்று பொறாமையில் பேசினான்.

“டேய் என்ன டா பேசுற நீ வேற, அவ வேறையா இந்த வீட்ல . இனி உன்னோட இடத்துல இருந்து என் மருமக தானே எல்லாம் பாத்துக்கணும்” என்றார்.

“இவ்ளோ நாளும் நான் இதை தானே செய்துட்டு இருந்தேன் , இப்போ இவ வந்ததும் அவளை தலையில தூக்கி வெச்சுக்கிட்டாங்க” என்று நினைத்தவன் நிலாவை பார்க்க..

அவளோ அவனை மெல்லிய புன்னகையோடு பார்த்து சிரித்தாள்.

“இந்த சிரிப்பு இது தான் என்னை ஏதோ செய்யுது , என்னை மட்டும் இல்ல என் அம்மாவையும் இந்த் சிரிப்புலையே இவ மயக்கி வெச்சிருக்கா. இவகிட்டே கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கனும். இல்லேன்னா என்னோட இடத்தை இவ பிடிச்சிருவா போல இருக்கே” என்று நினைத்தவன்.

“நிலா அவனுக்கு உன் மேல பொறமை . இவ்ளோ நாளா இந்த வீட்ல இவனோட ராஜ்ஜியம் தான் நடக்கும் யாரும் எதுவும் பேசக்கூடாது , சொல்லக்கூடாது இவனுக்கு. இப்போ நீ அவன் இடத்துக்கு வந்துட்டேனு சொன்னதும் இவனுக்கு பொறுக்கல பாரேன்” என்று வளவனை கிண்டல் செய்ய.

“அம்மா நான் எப்போ சொன்னேன் இப்படி எல்லாம். நீங்களாவே ஏதாவது சொல்ல வேண்டியது”என்று நிலாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு. “நான் வெளிய இருக்கேன் ” என்று சென்றுவிட்டான்.

“டேய்! இப்போ எதுக்கு டா முகத்தை இப்படி சோகமா வெச்சிருக்க.” என்று அறைக்குள் விஜி வளவனை கேட்டார்.

“அம்மா எனக்கு வீட்டோட மாப்பிள்ளையா போக இஷ்டமே  இல்ல. உங்களுக்காக மட்டும் தான் ஆறுமுகம் சார் சொன்னதுக்கு நான் சம்மதிச்சேன். உங்க கூடவே இருந்துடறேன். உங்களுக்கு வேற உடம்பு முடியாம இப்போதான் ஆபரேஷன் பண்ணி இருக்கு. இப்போ உங்க கூட இல்லாம நான் அங்க போறது சரியா இருக்காது” என்றான் வருத்தம் நிறைந்த குரலில்.

“டேய் என்ன டா இது சின்ன புல்லை மாதிரி முகத்தை வெச்சிட்டு , பாக்க நல்லாவே இல்ல” என்று அவன் கையை பிடித்துக்கொண்டவர்.

“வீட்டோட மாப்பிள்ளையா போறது கேவலமா ஏண்டா நினைக்குற. பொண்ணுங்க மட்டும் அவுங்க குடும்பத்தை விட்டு மொத்தமா கல்யாணம் ஆனதும் போறதில்லையா? அதுபோலனு சாதாரணமா எடுத்துக்கோ டா ” என்றவர். “என்னை பாத்துக்க தான் வெற்றியும், உமையாலும் இருக்காங்களே” என்றார்.

“அவங்க இருக்காங்க தான் , ஆனா இந்த நேரத்துல நான் கூட இருக்கணுமே.. அடலீஸ்ட் நீங்க கொஞ்சம் உடம்பு தேறி வர வரைக்குமாவது நான் கூட இருக்கக்கூடாதா” என்று வளவன் கேட்க.

மகன் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று அவருக்கு தெரியவில்லை. “அண்ணா டிபன் ரெடி சாப்பிடலாம்” என்று உமையாள் வர..

“அம்மாவுக்கு முதல்ல போட்டு கொண்டு வா நான் அம்மாவுக்கு சாப்பாடு கொடுத்திட்டு அப்பறோம் வந்து சாபிட்றேன்” என்று  எழுந்தான்.

“நீங்க எல்லாரும் சாப்பிடுங்க அத்தைக்கு நான் சாப்பாடு கொடுத்துகிறேன்” என்று கையில் உணவு தட்டுடன் வந்தாள் நிலாவினி .

“நிலா குடு நான் அம்மாவுக்கு கொடுக்கிறேன்” என்று வளவன் தட்டை வாங்க போக..

“ம்ம்.. நான் தான் என் அத்தைக்கு கொடுப்பேன்” என்று விஜியின் அருகில்  அமர்ந்து “அத்தை எங்க ஆ காட்டுங்க.. ” என்று உணவை அவருக்கு சாப்பிட கொண்டு சென்றாள்.

“நானே சாப்பிடுகிறேன் நிலா” என்று அவர் சொல்ல..

“ம்ஹும்.. நான் தான் கொடுப்பேன்” என்று அவள் ஊட்ட அவரும் சிரித்துக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தார்.

இந்த வேலையும் அவள் தன்னிடம் இருந்து பறித்துவிட்டாள் என்று வல்லவனுக்கு உச்ச பச்ச பொறாமையில் இருந்தான் அவள் மேல்.

இரவு உணவை முடித்துவிட்டு விஜியையும் தூங்க வைத்த பின்பு தான் இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured