அயோக்கியன் 26
“சொல்லு மாலு! என்ன தான் உன் பிரச்சனை “என்றான் ராக்கி கை கட்டி அவளை ஏறிட்டபடி நின்று.
“மாமா எனக்கு அந்த ஜீவனை கண்டாலே சுத்தமா ஆகல, அவன் பேச்சும் நடவடிக்கையும் எனக்கு சுத்தமா பிடிக்கல ” என்றாள் மாளவிகா.
“ஏன்? என்ன ஆச்சு?” என்றான்.
மாளவிகா தயக்கமாக அவனை பார்க்க..
“என்கிட்டே சொல்ல பிடிக்கலையின்னா பரவால்ல , ரதிகிட்டேயோ இல்ல ஓவியா கிட்டியோ ஒரு நாள் உன் மனசுல இருக்கறதை வெளிப்படையா பேசிடு. அப்போதான் உன் மனசுல இருக்க பாரம் கொஞ்சமாவது குறையும் ” என்றவன் “சரி என்கிட்டே ஏதோ பேசணும்னு சொன்ன என்ன மாலு சொல்லணும்” என்றான்.
“மாமா அது வந்து…” என்று அவள் தயங்க “சொல்லு மாலு, ஜீவனை பத்தி வேற எதுவும் நீ என்கிட்டே சொல்லணும்னு யோசிக்கிறியா. அவன் எதுவும் தப்பு பண்ணுறானா?” என்றான் அவளை கூர்ந்து பார்த்தபடி.
அதை சொன்னதும் “ஹையோ! அப்படி எல்லாம் இல்ல மாமா . அவன் எந்த தப்பும் … ” என்று சொன்னவள் “அவனை பத்தி பேசவே எனக்கு பிடிக்கல . அவனை விடுங்க, நான் சொல்ல வந்த விஷயமே வேற” என்றாள்.
“சரி நான் அவனை பத்தி பேசல” என்றவன் “ஜீவன் மேல இவளுக்கு கோபம் தான் ஏதோ இருக்கு ஆனா அவன் மேல வெறுப்பு இல்லேன்னு நினைக்குறேன்” என்று நினைத்தவன் அவளையே பார்க்க.
“மாமா நான் கவர்ன்மெண்ட் எக்ஸாம் எழுதி பாஸ் பண்ணின விஷயம் உங்களுக்கு தெரியும் தானே.. ” என்றாள்.
“ம்ம்… ஆமா உனக்கு வேலை பாக்க ஆர்டர் கூட வந்துச்சே ” என்றான் ராக்கி.
“ஆமா மாமா அப்போ நான் இருந்த குழப்பத்துல அந்த வேலையை பத்தி பெருசா எடுக்கல. ஆனா இப்போ அதை மிஸ் பண்ணிட்டானோன்னு தோணுது எனக்கு ” என்றாள்.
“உனக்கு அந்த வேளைக்கு போகணும்னு தோணுதா மாலு” என்று நேரடியாக கேட்டான் ராக்கி.
அவன் சட்டென்று கேட்டுவிட்டதும் அவனை தயக்கமாக பார்த்தவள் “ஹும்.. ஆமா போகணும்னு தோணுது. எனக்கு வீட்லையே இருக்க பிடிக்கல . ரதி எப்படி அவளுக்குனு ஒரு வேளையில் இருக்காளோ நானும் அது போல வேலை பார்க்கணும் ,எனக்குன்னு ஒரு அடையாளத்தை நான் ஏற்படுத்திக்கணும்னு நினைக்கிறேன் மாமா” என்றாள்.
“சபாஷ் மாலு, ரொம்ப சந்தோசம் . அவ்ளோ பெரிய பதவி உனக்கு கிடைச்சும் நீ ஏன் அதை வேணாம்னு இருக்கேன்னு நான் நிரைய முறை நினைச்சிருக்கேன், ஆனா இப்போ உன்னை நினைச்சு சந்தோசப்படறேன். ஒரு பொண்ணா உன் வாழ்க்கையில் உனக்கு சாதிக்க நிறைய வாய்ப்பு இருக்கு. அதை சரியா பயன்படுத்திக்க வேண்டியது உன்னோட கடமை . நீ மட்டும் இல்ல. எல்லா பொண்ணுங்களுக்கு தான் சொல்றேன். குடும்ப விஷயம், வேற பிற கஷ்டம் அழுத்தம் அதை எல்லாம் உங்க குறிக்கோளை எப்பவும் நிறுத்தாம நீங்க பாத்துக்கணும். உங்க ஆணி வேர் உங்களுக்கு எதுவோ அதை கப்புன்னு புடிச்சுக்கணும், அதை யாருக்காகவும், எதுக்காகவும் விட்டுக்கொடுக்கவே கூடாது சரியா ” என்றவன்.
“சீக்கிரமே உன்னோட வேளைக்கு அப்பாகிட்டே சொல்லி ஏற்பாடு செய்றேன் ” என்று அங்கிருந்து கீழே வர,.
அவர்கள் என்ன பேசினார்களோ என்று பதற்றத்தில் அமர்ந்து இருந்தவர்களை பார்த்தவன்.
“இப்போதைக்கு மாளவிகா, ஜீவனுக்கு இடையில இருக்க பிரச்சனையை ஆறப்போடுவோம்”என்றான்.
ரதி அவனை பார்க்க.. அவளை பார்த்து கண்மூடி திறந்தவன் பார்த்துக்கொள்ளலாம் என்றான். அதன் பிறகு அவள் எதுவும் பேசவில்லை .
இரவு உணவை அங்கேயே முடித்துவிட்டு ராக்கி வீட்டிற்கு கிளம்பியவன் “ரதி போலாமா?” என்று அவளை பார்த்தான்.
அவளுக்கோ மிகவும் குழப்பமாக இருந்தது. அவனிடம் கோபித்துக்கொண்டு தான் இங்கே வந்தாள். இப்பொது மளவிகாவும் இங்கு வந்திருக்க.. தானும் இங்கு புருசனுடன் சண்டையிட்டு பிரிந்து வந்திருக்கிறோம் என்று தன் குடும்பத்திற்குத் தெரிந்தால் ஏற்கனவே உடைந்து போனவர்கள் மொத்தமாக நம்பிக்கை இழக்கும் வாய்ப்பு வந்து விடும் என்று தோன்ற.. ராக்கியுடன் செல்வது என்று முடிவோடு போலாம் என்றவள். “எதுனாலும் எனக்கு கால் பண்ணு மாலு, எதை பத்தியம் யோசிக்காத சரியா” என்றாள்.
“சரி க்கா ” என்று அவளை அணைத்து விடுவித்தாள் மாளவிகா.
அனைவரிடமும் சொல்லிக்கொண்டு வீட்டிற்கு ராக்கியுடன் கிளம்பினாள் ரதி.
அவள் சூழ்நிலை காரணமாக தான் தன்னோடு வீட்டிற்கு வருகிறாள் என்று ராக்கிக்கும் தெரியும் ஆனாலும் அதை காட்டிக்கொள்ளாமல் வீடும் வந்து சேர்ந்தான் அவன்.
உள்ளே நுழைந்ததும் நேராக டவலை எடுத்துக்கொண்டு குளிக்க சென்றாள் ரதி. ஷவரை திறந்து விட்டு வெகு நேரமாக அதன் கீழே நின்றவளுக்கு மனதில் ஆயிரம் எண்ணங்கள் ஓடியது. ராக்கியுடன் ஒன்றாக இருக்க ஏனோ அவள் மனம் இடம் தரவில்லை. அவள் வீட்டில் போய் இருக்கும் சூழலும் இப்பொது அங்கு இல்லத்தில்.
குழப்பத்தோடு குளித்து முடித்து வெளியே வந்தவள் கண்ணில் கட்டிலில் படுத்திருந்த ராக்கி தான் தென்பட்டான் .
வேறு உடைக்கு மாறி இருந்தான். அவன் தலைமுடியும் ஈரமாக இருக்க.. ஓவியாவின் ரூமில் சென்று குளித்திருப்பான் என்று அவளுக்கு தோன்றியது.
எதுவும் பேசாமல் ரதி கட்டிலின் மறுபக்கம் அவனுக்கு முதுகு காட்டியபடி அமர்ந்து இருந்தாள்.
அவளுக்கு உடல் சோர்வு , மனச்சோர்வு என்று இருந்தது . இந்த நேரத்தில் ராக்கியிடன் தன் மனதில் இருப்பதை எடுத்து சொல்லவும் அவளுக்கு சக்தி இல்லை.
ஒருவாறு தன்னை தேற்றிக்கொண்டு “ராக்கி” என்று பேசுவதராக அவள் திரும்ப..
அவனோ கையில் தலையணையும், போர்வையும் சகிதமாக நின்றிருந்தவன் “என்ன ரதி சொல்லு”என்றான் .
அவன் தன்னை பெயர் சொல்லி அழைப்பது கேட்டதும் அவளுக்கு ஒரு மாதிரி தான் இருந்தது, ஆனால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள அவளுக்கு தோன்றவில்லை.
“எங்க? ” என்றாள்
“வெளிய ஹால்ல தூங்கி போறேன் ரதி” என்றான்,
அவள் எதுவும் பேசாமல் அவனையே பார்க்க..
“நீ என் மேல கோபமா இருக்க. என்கூட இருக்க பிடிக்காம தானே உன் அம்மாவீட்டுக்கு போன.. மாளவிகா அங்க வந்ததுனால வேற வழி இல்லாம என்கூட கிளம்பி வந்துட்ட சரியா” என்றான்.
அவள் மனதில் இருப்பதை அபப்டியே புரிந்து கொண்டவனை கண்டு ஆச்சர்யப்பட்டாலும் அதை காட்டிக்கொள்ளவில்லை பெண் அவள்.
“உனக்கான தனிமையை நான் கொடுக்க விரும்புறேன். என் மேல இருக்க கோவம் என்னிக்கு குறையுதோ அப்போ நீயா என்னை உள்ள கூப்டா இந்த ரூமுக்குள்ள வருவேன், அதுவரை நான் ஹால்ல இருந்துகிறேன் ” என்றவன் வெளியே சென்றுவிட..
தான் அவனிடம் பேச நினைத்ததை ராக்கி சொல்லிவிட்டு போனதில் சற்று அதிர்ச்சி தான் அவளுக்கு . இது அவள் நினைத்தது தானே.. என்று அவன் சென்றதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் எழுந்து வந்து கதவை சாற்றிவிட்டு படுத்து விட்டாள்.
வெளியே டிவியை ஆன் செய்துவிட்டு வந்து சோபாவில் படுத்தவன் உறக்கம் தான் தொலைந்து போனது . அவளை கட்டிக்கொண்டு தூங்கியே பழகிவிட்டிருந்தானே . வேறு வழியே இல்லை இதை பழகி தான் ஆகவேண்டும் என்று இருந்துவிட்டான்.
ஒருவாரம் கடந்தித்திருக்கும் அவரவர் வேளையில் தங்களை நுழைத்துக்கொண்டு அவர்கள் நாட்கள் நகர்ந்து கொண்டு இருந்தது.
வேலு கட்சி வேலைகளில் மூழ்கி இருக்க… திகழோ தன் குடுமபத்துடனும், வேலுவின் குடும்பத்துடனும் நேரத்தை செலவழித்துக் கொண்டிருந்தாள்.
அன்று மாலை கட்சி அலுவலகத்தில் இருந்து வந்த வேலு சிவராஜனை சந்திக்க நேராக அவர் அறைக்கு சென்றான்.
அவருடன் செல்வியம், திகழும் இருக்க..
அவர்களை பார்த்ததும் தான் பேச வந்ததை எப்படி சொல்வது என்று தயங்கினான்.
அதை கண்டுகொண்ட செல்வி “என்ன மாப்பிளை அவர்ட்ட எதுவும் பேசணுமா? நாங்க வேணா வெளிய இருக்கட்டுமா ?” என்று அவர் எழுந்தார்.
“இல்ல அத்தை நீங்க இருங்க. எப்படியும் உங்க எல்லார்கிட்டயும் இத சொல்ல தான் போறேன்” என்றவன் அவர் அருகில் இருந்த திகழினியை ஒரு பார்வை பார்த்துவிட்டு சிவராஜனிடம் வந்து அமர்ந்தான்.
“சொல்லுப்பா.. என்ன விசயம் ” என்றார் கட்டிலில் சாய்ந்து படுத்துக்கொண்டே.
“மாமா! நான் இப்படி பேசுறேன்னு என்னை நீங்க தப்பா எடுக்க வேணாம். என் மனசுல இருக்கறதை நான் சொல்லிடறேன்” என்றான்.
“பில்ட் அப் கொடுக்காம சீக்கிரம் சொல்லு ” என்றாள் திகழ் ஆர்வம் தாங்காமல்.
அவளை முறைத்துவிட்டு திரும்பியவன் “மாமா எனக்கும் , திகழுக்கும் கல்யாணம் ஆன நாள்ல இருந்து கிட்டத்தட்ட 3 மாசமா இங்க தான் இருக்கேன். இனிமேலும் நானும், என் குடும்பமும் இங்க இருக்கணுமான்னு எனக்கு தோணுது ” என்றான்.
அவன் அப்படி சொன்னதும் “ஏன் மாப்பிளை உங்களுக்கு இங்க மரியாதையை குறைவா எதுவும் நடந்துதிருச்சா. யாரும் எதுவும் சொல்லிட்டாங்களா?”என்றார் செல்வி.
“ஐயோ! அதெல்லாம் எதுவும் இல்ல அத்தை . எனக்கு நான் என் குடும்பம்னு தனியா இருக்கணும்னு தோணுது , இங்க என்னால சாதாரணமா இருக்க முடியல.. வீட்டோட மாப்பிள்ளையா இருக்க போலவே தான் இருக்கு, கட்சியில கூட சிலர் … ” என்று அவன் தயங்க,
“கட்சியில இல்ல வேற யாரும் என்ன சொன்னாலும் அதை எல்லாம் பெருசா எடுத்துப்பியா. அதை எல்லாம் ஏன் நீ பெருசா எடுத்துகிற.. “என்றாள் திகழ்.
“ஹே! மாப்பிள்ளை மரியாதை சொல்லி கூப்பிடுன்னு எவ்ளோ வாட்டி சொல்றது உனக்கு ” என்று செல்வி திகழ் தலையில் குட்ட..
“அத்தை அவளை எதுவும் சொல்லாதீங்க, அவ இப்படி இருக்குறது தான் எனக்கு பிடிச்சிருக்கு” என்று அவரை அமைதிப் படுத்தியவன்.
“எனக்குன்னு குடும்பம் ஆகிடுச்சு. தவிர திகழ்.. ” என்று அவளை பார்க்க,.
“என்ன டா..எனக்கு என்ன?” என்று அவனை பார்த்தாள்.
பின்னால் இருந்து செல்வி அவள் தோளில் கிள்ள..
“ஷ்.. அம்மா “என்று அவரை திரும்பி முறைத்தாள் திகழ்.
“கொன்னுடுவேன் ஒழுங்கா பேசு ” என்று அவளை மீண்டும் அதட்டினார்.
“சொல்லுங்க மாப்பிளை திகழுக்கு என்ன?” என்றார் சிவராஜன்.
“அவங்க இங்க இருக்க வரை உங்க பொண்ணா தான் இருக்காங்க . அவங்களுக்குன்னு ஒரு குடும்பம் வந்திருச்சு. அவங்களுக்குன்னு சில பொறுப்புகள் இருக்குன்னு அவங்க புடிஞ்சுக்கணும். எப்பவும் உங்களையும், அத்தையையுமே எதிர் பார்த்துட்டு அவங்க இருக்க முடியாதில்ல.. நிறைய விஷயம் அவங்க தெரிஞ்சுக்க வேண்டி இருக்கு. இந்த வெளியுலகத்தை அவங்க பார்க்க வேண்டியது நிறைய இருக்கு. அது இங்க இருக்க வரை நடக்காது . அதான் ” என்றான்.
“எனக்கு எதுவும் தெரியாதா டா.. நான் என்ன சின்ன பொண்ணா ?” என்று அவள் எகிற..
“திகழ்! என்று இப்பொது சிவராஜன் அவளை அதட்ட..
அவள் கப்சுப் என்று வாயை மூடிக்கொண்டாள்.
“இப்போ என்ன மாப்பிளை பண்ணலாம் நீ கண்டிப்பா யோசிச்சிட்டு வந்திருப்பிங்க .. சொல்லுங்க .” என்றார் சிவராஜன்
“அதனால நாங்க எங்க வீட்டுக்கே போகலாம்னு நினைக்குறேன் மாமா ” என்றான்.
“உங்க வீட்டுக்கா! அங்க எல்லாம் என்னால் வர முடியாது. என்னால எல்லாம் அங்க வந்து இருக்க முடியாது” என்றாள் திகழ்.
அவள் பேசுவதை வேலுவோ மற்றவர்கலோ காதில் வாங்கியதாக தெரியவில்லை.
சிறிது நேரம் யோசித்த சிவராஜன். “சரி மாப்பிளை நீங்க சொல்றதும் சரி தான், இவளுக்கும் வெளியுலகம் கொஞ்சம் தெரிஞ்சுக்கட்டும்” என்றவர். “ஒரு நல்ல நாளா பார்த்து ” என்று அவர் தொடர,.
“வர புதன்கிழமையே நல்ல நாள் தான் மாமா . அன்னிக்கே நாங்க கிளம்பறோம்” என்றான்.
“வரும்போதே மாப்பிளை எல்லா ஏற்பாடும் பண்ணிட்டு தான் வந்திருப்பார் போல.. ” என்று செல்வி சிரிக்க..
“நான் எங்கையும் போகல ” என்று முகத்தை தூக்கிக்கொண்டு அந்த அறையை விட்டு திகழ் எழுந்து வெளிய செல்ல..
“இவ என்னங்க இப்படி பேசிட்டு போறா.. ” என்றார் செல்வி.
“நான் அவகிட்ட பேசிக்கிறேன் அத்தை ” என்றவன் “மாமா நான் கட்சி ஆபீஸ்க்கு ஒரு 3 நாள் லீவு போட்டுக்கிறேன் . என் வீட்ல கொஞ்சம் வேலை எல்லாம் இருக்கு. திகழ் அங்க வரும்போது அவளுக்கு அங்க எந்த அசௌகரியமும் வந்திரக்கூடாது அதான் கொஞ்சம் வேலை இருக்கு ” என்றான் வேலு,
“சரிப்பா.. ” என்று அவர் சிரிக்க..
வேலுவும் அவரிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி இருந்தான்.
“எங்க நம்ம பொண்ணை மாப்பிள்ளை நல்லபடியா பாத்துப்பாருங்க அதுல சந்தேகமே இல்ல. ஆனா உங்க பொண்ணை நினைச்சா தான் .. ” என்று செல்வி கவலைப்பட..
“அதெல்லாம் மாப்ப்ளிளை கவனிச்சுப்பார் மா “என்றார் சிவராஜன்
இங்கே வேலுவோ சிவராஜன் சொன்னது போல.. வேலு தன் இதழால் திகழினியின் இதழை முத்தம் கொடுத்து கவனித்துக் கொண்டிருந்தான்
