அயோக்கியன் 30
சென்னையின் பரபரப்பான மெரினா காற்றையும், அடையாறு சிக்னல்களையும் பழகிய மாளவிகாவிற்கு, இந்த அமைதியான ஊர் ஒரு விசித்திரமான உணர்வைத் தந்தது. சென்னையிலிருந்து சுமார் நானூறு கிலோமீட்டர் தள்ளி, மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருக்கும் அந்த மாவட்டத்தின் ஆர்.டி.ஓ (RDO) அலுவலகத்தின் முன்னால் அரசு ஜீப் வந்து நின்றது.
அதன் டிரைவர் பாண்டியன் வண்டியை நிறுத்திவிட்டு, ஓடி வந்து கதவைத் திறந்தான்.
மாளவிகா ஜீப்பிலிருந்து இறங்கினாள். அவளது கண்கள் அந்தப் பழைய அலுவலகக் கட்டிடத்தை ஒருமுறை அளவெடுத்தன.
இறங்கி அவள் முன்னே நடக்க.. அவள் வருவதை பார்த்துக்கொண்டிருந்தவர்கள்
“சென்னை பொண்ணு… இவ்வளவு தூரம் தள்ளி வந்து இங்க வேலை பார்த்து என்ன பண்ணப்போறாளோ? இவ எல்லாம் ஒரு ரெண்டு நாள் கூட இந்த ஊர்ல தாக்குப் பிடிக்க மாட்டா பாரு” என்று அங்கிருந்தவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டது அவள் காதுகளில் விழாமல் இல்லை. ஆனால், அவளது கவனம் முழுவதும் இப்போது அவள் கையில் இருந்த அந்த அதிகாரத்தில் மட்டுமே இருந்தது.
நேராகத் தனது அறைக்குள் நுழைந்தவள். அங்குள்ள மேஜையில் ‘M.மாளவிகா B.E., RDO‘ என்ற பெயர் பலகை அவளை வரவேற்றது. அதன் அருகில் வந்து அதை தன் விரல்களால் வருடியவள் வந்து தன் இருக்கையில் அமர்ந்தாள்.
“மேடம், வணக்கம் என் பேரு முத்துராமன் இது நீங்க தங்குறதுக்கான குவார்ட்டர்ஸ் சாவி. ஆபீஸ்க்கு பின்னாடியே தான் இருக்கு. ஆனா, அது ரொம்பப் பழசு மேடம்… நீங்க வேணும்னா டவுன்ல தனியா வீடு பார்த்துக்கலாம்,” என்றார் அவர் , அந்த அலுவலகத்தில் தலைமை எழுத்தராக வேலை பார்க்கிறார்..
மாளவிகா அந்தச் சாவியை வாங்கிக்கொண்டாள். “இல்லை முத்துராமன் சார், எனக்கு இந்த ஆபீஸ் பக்கத்துல இருக்குறதே வசதிதான். ஏன்னா, நான் இங்க வந்துருக்கிறது ஜாலியா இருக்க இல்ல… வேலை பார்க்க! சென்னையில இருந்து இவ்வளவு தூரம் தள்ளி என்னை எதுக்கு போட்டிருக்காங்கன்னு சீக்கிரமே இந்த ஊருக்கு நான் புரிய வைப்பேன்,” என்றாள்.
அவளது குரலில் இருந்த உறுதி, அங்கிருந்த ஊழியர்களை ஒரு நிமிடம் மிரள வைத்தது.
மாலை 6 மணி.
அலுவலக வேலைகள் முடிந்து, அந்தப் பழைய குவார்ட்டர்ஸ் வீட்டிற்குள் நுழைந்தாள் மாளவிகா. வீடு முழுவதும் ஒருவிதமான அமைதி. சென்னையில் இருந்திருந்தால் இந்நேரம் குடும்பத்தோடு அமர்ந்து சிரித்துப் பேசிக் கொண்டிருப்பாள். ஆனால் இப்போது, அவள் ஒரு தனிமரம்.
ஜன்னல் வழியாகத் தெரிந்த அந்த ஊரின் மலை முகடுகளைப் பார்த்தபடி நின்றாள்.
உள்ளுக்குள் ஒரு வெறுமை ஏனோ காரணம் இல்லாமல் ஜீவனின் நினைவுகள் அவள் எண்ணத்தில் தோன்றியது.
“அத்தை !… ” என்று துளிகுத்தித்து ஓடி சென்று ஜெயந்தியைக் கட்டிக்கொண்டனர் மாளவிகாவும், ரதியும்.
“அடடே என் தங்கங்களா! என்ன இது வரேன்னு ஒரு வார்த்தை கூட சொல்லாம இந்த அத்தையை பார்க்க வந்துட்டீங்க ” என்று இருவரையும் கட்டி அணைத்து அவர்கள் நெற்றியில் ஆசையாக முத்தமிட்டார் .
“என்ன ஜெயந்தி புதுசா கேக்குற , லீவு விட்டா போதுமே இவங்க ரெண்டு பேரும் கிளம்பி உன்னை பார்க்க இங்க வந்திருவாங்களே” என்று அவர்கள் உடைமைகளை தூக்கிக்கொண்டு வீட்டிற்குள் நுழைத்தனர் மூர்த்தியும், அவரோடு சேர்த்து சோபனாவும்.
“எனக்கும் தெரியும் தான்னா , எப்பவும் எனக்கு தகவல் சொல்லிட்டு தானே கிளம்புவீங்க, இன்னிக்கு திடீர்னு வந்துட்டீங்களே , நீங்க வரது முன்னமே தெரிஞ்சிருந்தா நான் தங்குறதுக்கு எல்லா ஏற்படும் செய்து வெச்சிருப்பேனே.. ” என்றார்.
“நம்ம வீடு தானே ஜெயந்தி ஆளுக்கு ஒரு வேலையை பார்த்துக்கிட்டா போகுது ” என்றார் சோபனா.
“சரிங்க அண்ணி நீங்க உக்காருங்க நான் குடிக்க மோர் எடுத்துட்டு வரேன்” என்று உள்ளே அவர் செல்ல அவர் பின்னாலேயே மாளவிகாவும் ஜெயந்தியை தொத்திக்கொண்டு சென்றாள்.
“அத்தை நான் மோர் கலக்குறேன்” என்று அவரிடம் கேட்டு தயிரை எடுத்து கடைய ஆரம்பித்தாள்.
“பரீட்சை எல்லாம் எப்படி டி எழுதி இருக்க” என்றார் ஜெயந்தி,
“ஓஹ் ! சூப்பரா எழுதிருக்கேன் அத்தை ” என்றவள் விழிகள் கிட்சேன் ஜன்னல் வழியே பின்னால் இருந்த தோட்டத்தில் எங்கும் ஜீவன் இருக்கிறானா என்று தேடியது.
ஆனால் அவன் அவள் கண்ணனுக்கு அகப்படவே இல்லை. “ஆமா எங்க உன் புள்ள வழக்கம் போல இனிக்கும் ஒற்றை சுத்த கிளம்பிட்டானா?” என்றாள் .
“அவனா இந்நேரம் யாருகிட்ட வம்பளந்துட்டு இருக்கானா தெரியல டி.. ” என்றவர் சலிப்பாக “ஒத்தை புள்ளையின்னு செல்லம் கொடுத்து வளர்த்தினது தான் என் தப்பு . நான் சொன்னா எதுவும் கேக்க மாட்டேங்குறான். ஊர்க்கார பசங்களோட சேர்ந்து வெட்டியா ஊரை சுத்தவும் , எவனாவது எதையாச்சும் பண்ணினா அங்க போய் நியாயம் கேக்குறேன்னு பிரச்னையை இவனே இழுத்துவிடுக்கிறான். இவனுக்கு பஞ்சாயத்து பேசியே என் காலம் போய்டும் போல” என்றார் கவலையோடு.
“சின்ன வயசு தானே அவனுக்கும் சரியாகிடுவான் ஜெயந்தி ” என்று அங்கு வந்தார் சோபனா.
“இந்தாங்க அண்ணி ” என்று கடைந்த மோரை எடுத்து அவருக்கு கொடுத்தவர் “என்ன அண்ணி சின்ன வயசு. 21 வயசாகுது இன்னும் 4, 5 வருசத்துல கல்யாணம் பண்ற நேரமும் வந்திரும். ஒரு வேலை வெட்டின்னு போகாம இப்படி ஊரை சுத்தி ஊதாரியா இருந்தா எப்படி அண்ணி இவனுக்கு கல்யாணம் நடக்கும். எனக்கு அப்பறோம் அவனை பாத்துக்க அவன் பொண்டாட்டி தானே இருக்கணும் ” என்றார்.
“சரி விடு ஜெயந்தி, ஜீவன்கிட்டே பேச சொல்லி நான் உங்க அண்ணன்கிட்டே சொல்றேன்” என்றார்.
சோபனாவும் , ஜெயந்தியும் மதிய சமையலை முடித்துவிட்டு அவர்கள் தங்குவதற்காக இடத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தார் .
மூர்த்தி வெளியே இருந்த திண்ணையில் பாயை விரித்து உறங்கிக்கொண்டு இருந்தார்.
கொள்ளையில் சாப்பிட்ட பாத்திரங்களைக் கழுவிக்கொண்டு இருந்தாள் .
மாளவிகா மட்டும் ஹாலின் நடுவே படுத்துக்கொண்டு கால் மேல் கால் போட்டபடி கண்களை மூடி பாட்டு பாடிக்கொண்டிருந்தாள்.
உள்ளே இருந்த சோபனாவோ “இங்க ஆளுக்கு ஒரு வேலையை இழுத்து போட்டு செஞ்சிட்டு இருக்கோம் , இவ பெரிய மகாராணி மாதிரி கால் மேல் கால் போட்டு நடு ஹால்ல எப்படி படுத்திருக்கா , வந்து ஏதாவது ஒத்தாசை செய்யலாம்ல ” என்று புலம்பியபடி அடித்துப் பெருகிக்கொண்டு இருந்தார்.
“விடுங்க அண்ணி, இப்போதான் +2 பரிச்சை முடிச்சிருக்கா . கொஞ்சம் புள்ள ஜாலியா இருக்கட்டும்” என்று மாளவிகாவுக்கு பரிந்து பேசினார்.
“நீ விட்டுக்கொடுப்பியா அவளை , நாளைக்கு அவ உன் வீட்டுக்கு மட்டும் மருமகளா வந்தான்னு வை உன்னை வேலை வாங்கிட்டு இப்படி தான் கால் மேல காலை போட்டுட்டு ஹாயா உக்கார்ந்திருக்க போறா.” என்று சிரித்தார் சோபனா.
“நாம மட்டும் தான் நினைக்கிறோம் அண்ணி ஜீவனுக்கும், மாலுவுக்கும் கல்யாணம் பேசலாம்னு . ஆனா அதுங்க மனசுல என்ன இருக்குன்னு தெரியல. என் பையன் வேற இப்படி ஊதாரியா சுத்திட்டு இருக்கான். எங்கண்ணா கிட்டே போய் எப்படி பொண்ணு கேக்குறதுனு எனக்கு தான் பயமா இருக்கு” என்றார்.
“நீ எதுக்கு அபப்டி எல்லாம் யோசிக்குற. ஜீவன் என்ன அப்படியேவா இருக்க போறான். அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமா சொல்லி புரிய வை. அவனுக்கு விருப்பம்னா நம்ம மாலுவை கட்டி வெச்சிரலாம். இல்லேனா வேற பொண்ணை பார்த்துட்டா போகுது “என்று மனதில் ஜீவனை பத்தி எந்த தப்பான எண்ணமும் இல்லாமல் பேசினார் ஜெயந்தி,.
“சரி அண்ணி சமயம் வரட்டும் அவனுக்கு மொதல்ல புத்தி சொல்லி வெக்குறேன்” என்றார்.
அப்போது தான் ஊரை சுற்றிவிட்டு தன் டிவிஎஸ் பிப்டி வண்டியைக் கண்டு வந்து வாசலில் நிறுத்தியவன் தன் வீடு திண்ணையில் படுத்திருந்த மூர்த்தியைப் பார்த்தான்.
“ஐயோ! இவர் எப்ப ஊர்ல இருந்து வந்தாரு, இது தெரிஞ்சிருந்தா நான் இந்த பக்கம் வந்திருக்கவே மாட்டேனே ” என்று நினைத்தவன் மெல்ல வண்டியில் இருந்து இறங்கி வர..
சத்தம் கேட்டு கண் விழித்தவர் “வாங்க துரை எப்படி இருக்கீங்க” என்றார்.
“mம்ம்.. நல்ல இருக்கேன் மாமா ” என்றான் ஜீவன் பவ்வியமாக.
“நாங்க வந்து எவ்ளோ நேரம் ஆச்சு , துரை எங்க ஊரை சுத்திட்டு வரீங்க” என்றார்.
“அது வந்து மாமா.. பிரெண்ட்ஸ் ஓட.. கம்மாயில … ” என்று தலையை சொரிந்தான்.
அவனை என்ற இறங்க பார்த்தவர் “சாப்பிட்டியா” என்றார்.
“அதுக்கு தான் வந்தேன்” என்றார்.
“சரி போ.. ” என்று அவனை அனுப்பிவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டார்.
உள்ளே வந்தவன் “அப்பாடா ” என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே உள்ளே வர.. அங்கே ஹாலில் படுத்திருந்த மாளவிகாவை பார்த்தான்.
“குட்டச்சி எப்படி நடு ஹால்ல படுத்திருக்கா பாரு” என்று நினைத்தவன் “உன்னை பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு டி… இந்த முறை உன்னை விட்றதா இல்ல. என் லவ்வ உன்கிட்டே சொல்லி உன்னை ஓகே பண்ண வெக்கிறேனா இல்லையான்னு பாரு ” என்று சொல்லிக்கொண்டே சத்தமில்லாமல் வர..
“மாலு ஒரு சொம்பு தண்ணி கொண்டு வா டா.. ” என்று உள்ளிருந்து ஜெயந்தி குரல் கொடுக்க..
“தோ .. எடுத்துட்டு வரேன் அத்தை ” என்று எழுந்து கிச்சனுக்குள் ஓடினாள். வாசலில் நின்று இருந்த ஜீவனை அவள் பார்க்கவில்லை எழுந்து கிச்சனுக்குள் செல்ல..
ஜீவனும் சுற்றிலும் யாரும் இல்லை என்று உறுதி செய்து கொண்டு “இன்னிக்கு மாட்டுன டி நீ..” என்று கிச்சனுக்குள் அவள் பின்னாலேயே நுழைந்தான்.
அவன் வருவது தெரியாமல் பாட்டு பாடிக்கொண்டே அருகே இருந்த வடகத்தை எடுத்து வாயில் போட்டவள் தண்ணீர் எடுக்க திரும்ப…
“மல்லு !.. ” என்று மெல்ல அழைத்துக்கொண்டு அவளை நெருங்கிய ஜீவனை அதிர்ந்து மாளவிகா பார்க்க..
அவனோ அவள் முகத்தை பிடித்து அவள் வாயில் இருந்த வடகத்தை தன் வாய்க்கு மாற்றிக்கொண்டே முத்தமிட்டவன் “ம்ம். செம்ம டேஸ்ட்டா இருக்கு டி.. ” என்றுவிட்டு வெளியேறி இருந்தான்.
இதை எதிர்பார்த்திராத மாளவிகாவோ செய்வதறியாது கண்களில் கண்ணீரோடு விக்கித்து நின்று இருந்தாள்.

1 comment
Super super super super super super