Episode 16
அக்னிமித்ரன், தூரிகா இருவரும் சேர்ந்து நிற்க, தூரிகாவின் கையில் ஆரா இருந்தாள். மூவரையும் சேர்த்து ஆரத்தி சுற்றிக்கொண்டிருந்தார் இதழியா.
அக்னிக்கு அவ்வளவு மகிழ்ச்சி! எந்தக் காரணமும் கேட்காமல் தன் திருமணத்தை ஏற்றுக்கொண்டார் தன் அம்மா என்று அவனுக்கு நிம்மதியாக இருந்தது.
“பாப்பா, அடலீஸ்ட் அவன் ஏன் இந்தக் கல்யாணத்தை பண்ணினான்னு கேளுடி. அவனுக்கும் அந்தக் குழந்தைக்கு சம்மந்தம் இருக்கா, அது அவன் குழந்தைதானான்னு கேளு,” என்றார் ராஜன்.
“யுவா, அது அவன் பொண்ணு இல்ல,” என்றார் இதழியா.
“அப்போ, அந்தக் பொண்ணுக்கு இது ரெண்டாவது கல்யாணமா?” என்றார் ராஜன்.
“அது எனக்குத் தெரியலை,” என்றார் இதழியா.
“அப்புறம், அந்தக் குழந்தை அவளோட குழந்தையும் இல்ல,” என்றார்.
“அந்தப் பொண்ணோட சாயல் லேசா இருக்கு. பட், அவ குழந்தையா இருக்கவும் சான்சஸ் கம்மிதான்,” என்றார்.
“ஐயோ, எனக்கு இப்போ அந்தக் குழந்தை யாரோடதுன்னு தெரிஞ்சு ஆகணும்,” என்று புலம்பினார்.
“அங்கிள், இப்போ எதுக்கு நீங்க இவ்ளோ டென்ஷன் ஆகுறீங்க? நாங்க எதுக்கு இருக்கோம்? நடந்ததை ஆன்டி கேக்கலைன்னாலும் எப்படியும் அக்னியே வந்து சொல்லத்தான் போறான். அதுக்கு முன்ன நாங்களே சொல்லிடறோம்,” என்றான் ராகுல்.
“அட, உங்களை எப்படி நான் மறந்தேன்!” என்றவர், “பாப்பா, நீயும் வா, என்னனு கேட்டுத் தெரிஞ்சுக்கலாம்,” என்று தன் மனைவியின் கையைப் பிடித்து அழைத்து வர,
“யுவா, எனக்கு என் புள்ளையே வந்து சொல்லுவான். நீ வேணா போய் கேளு, நான் வரல,” என்றவர், “நீங்க ரெண்டு பேரும் நைட் டிபன் சாப்பிட்டு போங்க,” என்றார்.
“சரிம்மா,” என்ற அர்ஜுன் வாசலில் நின்று போனில் ரீல்ஸ் பார்த்துக்கொண்டிருந்த ப்ரியாவை அழைத்தான்.
அவள் வேகமாக அவனிடம் ஓடி வர,
“ப்ரியா, நீ வீட்டுக்கு கிளம்பி மார்னிங் ஸ்டேஷனுக்கு வந்திரு, ஓகேவா?” என்றான்.
அவளும் சல்யூட் அடித்து விடைபெறப் போக,
“நீயும் இரும்மா, சாப்பிட்டு அப்பறோம் கிளம்பலாம்,” என்றார் கிச்சனுக்குள் நுழைந்தபடி இதழியா.
ப்ரியா அர்ஜுனையும், ராகவையும் பார்க்க, “சரி, சாப்பிட்ட அப்பறோம் போய்க்கலாம், வெயிட் பண்ணு,” என்றான் அர்ஜுன்.
அவளும் வெளியே செல்லப் போக,
“அட, வெளியே எங்கம்மா போற? நீ வா, வந்து இப்படி சோஃபாவில உக்காரு,” என்றார் ராஜன்.
ப்ரியா தயங்க,
“அட, உக்காருமா. இவனுங்க ஏதும் சொல்ல மாட்டானுங்க,” என்றார்.
ராகவ் சோஃபாவை பார்வையால் ப்ரியாவிடம் காட்ட,
அவள் அமைதியாக வந்து சோஃபாவில் அமர்ந்துகொண்டாள்.
மொத்தக் குடும்பமும் ராகவ்வையும் அர்ஜுனையும் ஆர்வமாகப் பார்க்க, அக்னி-தூரிகா திருமணம் பற்றி ஒன்று விடாமல் சொல்லிக்கொண்டு இருந்தான் ராகுல். இடையிடையே தங்கள் போர்ஷன் வரும் வேளையில் தம்பிரானும், அர்ஜுனும் சொல்லிக்கொண்டு இருந்தனர்.
இங்கே அக்னியின் அறையில் தயக்கத்தோடு ஆராவுடன் உள்ளே சென்றாள் தூரிகா.
“நீ ரெஸ்ட் எடு, நான் குளிச்சிட்டு வரேன்,” என்று அவளிடம் கூறிவிட்டு தூரிகாவிடம் வந்தான் அக்னி.
அவனையே தூரிகா பார்த்துக்கொண்டு நிற்க, அவள் கையில் இருந்த ஆயாவிடம் வந்தவன், “ஆரா குட்டி, கொஞ்ச நேரம் அம்மாவும் நீயும் ரெஸ்ட் எடு, அப்பா போய் குளிச்சிட்டு வரேன்,” என்றான்.
அவன் தன்னை ‘அப்பா’ என்று குழந்தையிடம் கூறியதும் தூரிகாவின் விழிகள் ஆச்சர்யத்தில் விரிந்தது.
அவள் முகத்தில் தோன்றிய உணர்வுகளை கண்டுகொண்டவன் அதை காட்டிக்கொள்ளாமல் ஆராவின் கன்னத்தை கிள்ளி, “இனிமேல் என்னை நீ ‘ரவுடி மாமா’ன்னு கூப்பிடக்கூடாது. ‘அப்பா’ன்னுதான் கூப்பிடணும் சரியா?” என்றான்.
“சரி, ரவுடி மாமா,” என்றாள் ஆரா மழலையில்.
“ஹேய், இப்போதான் சொன்னேன்,” என்று அவளுக்குக் கிச்சுகிச்சு மூட்டியவன், “‘அப்பா’ சொல்லு,” என்றான்.
ஆராவும் சிரித்துக்கொண்டே, “ஹ ஹ ஹா அ அ அப்பா,” என்று அழகாக கொஞ்சும் மழலையில் கூறினாள்.
“ம்ம்ம், இதைக் கேட்க எவ்ளோ நல்லா இருக்கு,” என்றான்.
தூரிகா இன்னமும் அவனையே பார்த்துக்கொண்டு இருக்க,
“எவ்ளோ நேரம் என்னையே பார்க்குறதா ஐடியா?” என்றான் கப்போர்டில் இருந்த டவலை எடுத்துக்கொண்டே.
அவன் கேள்வியில் சுயநினைவு வந்தவள், “இ இல்ல அது, ஆரா… அப்பா,” என்று தூரிகா அவனைப் பார்த்தாள்.
“ஆமா, உன்னை ‘அம்மா’ன்னு கூப்பிட்டு என்னை ‘ரவுடி மாமா’ன்னு கூப்பிடறா. உனக்கும் எனக்கும் இருக்கிற முறை சரியா வராது இல்ல, அதான் என்னையும் ‘அப்பா’ன்னு கூப்பிட்டா இவ நம்ம குழந்தை ஆகிடுவா,” என்றான்.
“நம்ம குழந்தை” என்று அவன் உரிமையாகச் சொன்னதும் அதைக் கேட்டு தூரிகாவின் தேக்கி வைத்திருந்த கண்ணீர் கன்னத்தில் வழிந்தது.
“ஹேய் தூரிகா, இப்போ எதுக்கு அழற? கண்ணைத் துடை,” என்றான்.
“எவ்ளோ பெரிய ரவுடியா இருந்தும் நீங்க நியாயத்தோட எனக்காக, என் அக்கா புருஷன்கிட்ட சண்டை போட்டு எனக்கு வாழ்க்கையே கொடுத்திருக்கீங்க. அதையெல்லாம் விட என் அக்கா குழந்தையை ‘நம்ம குழந்தை’ன்னு உரிமையா நீங்க சொல்றதைக் கேட்கும்போது எனக்குள்ள இருந்த பயம் மொத்தமும் போயிடுச்சு,” என்று அழுதாள்.
முதல்முறை தூரிகா அவனிடம் இவ்வளவு பேசுகிறாள். ஆனால், இந்த அழுகை மட்டும் அடிக்கடி அவளிடம் வந்து ஒட்டிக்கொள்கிறது என்று நினைத்தவன்,
“பயமா? எதுக்கு?” என்றான்.
“இல்ல, நீங்க ஒரு ரவுடி,” என்று தயங்கி அவனைப் பார்க்க,
“ம்ஹும், இந்த ‘ரவுடி’ப்பட்டம் இன்னும் என்னை விட்டுப் போகமாட்டேங்குதே,” என்று சலித்துக்கொண்டவன்,
“ம்ம்ம் சொல்லு, நான் ரவுடிதான். அதுக்கு என்ன?” என்றான்.
“இல்ல, நீங்க நிறையப் பேரை அடிச்சு கொடுமை படுத்துவீங்க,” என்று அவனைத் தயக்கமாகப் பார்க்க,
“ம்ம்ம், ம்ம்ம்ம், மேல சொல்லு,” என்றான் கையில் இருந்த டவலை தோளில் போட்டுக்கொண்டே.
“அப்படி அடாவடியா இருக்க உங்களை கல்யாணம் பண்ணிட்டேன். உங்ககூட நான் எப்படி வாழ்றது?” என்று தலையை குனிந்துகொண்டாள்.
“ஓகோ, இவனே ஒரு ரவுடி, அடிதடி, வெட்டுக் குத்துன்னு சுத்துறவன், இவனைக் கல்யாணம் பண்ணிட்டு நாம எப்படி வாழப் போறோம்னு நினைச்சு பயந்துட்டியா நீ?” என்றான், அவள் முடிக்காமல் விட்ட வார்த்தையைச் சொல்லி.
தூரிகா தயக்கமாகத் தலையை ஆட்ட,
“இங்க பாரு,” என்று ஏதோ பேச வந்த நேரம்,
“ராசா, சின்ன ராசா,” என்று வெளியே இருந்து பழனியின் குரல் கேட்டது.
“ஒரு நிமிஷம் இரு,” என்றவன், “ஆரா அப்பாட்ட வா,” என்று அவளைத் தூரிகாவிடம் வாங்கிகொண்டவன், “உன்கிட்டே வந்து பேசிக்கிறேன்,” என்று திரும்பி நடந்தான்.
அவன் முதுகையே பயம் விலகாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் தூரிகா.
“சின்ன ராசா, இந்தா இதை நீயும் உன் பொண்டாட்டியும் குடிங்க,” என்று ட்ரேயில் அவர்கள் இருவருக்கும் ஜூஸ் எடுத்து வந்திருந்தார் பழனி.
“பழனி, நீயேன் இதை எடுத்துட்டு வர? மாலா அக்காகிட்டே கொடுத்து விட்டிருக்கலாம்ல?” என்றான்.
“அவ தான் கொண்டு வந்தா. நான் தான் என் ராசாவைப் பார்க்கணும்னு ஜூஸை வாங்கிட்டு வந்தேன்,” என்றவர்,
கீழே ராகவ்வவும், அர்ஜுனும் தூரிகாவை பற்றிச் சொன்னதைக் கேட்டுவிட்டு மனம் தாங்காமல் வந்தவர், அக்னியிடம், “என் சின்ன ராசா எவ்ளோ பெரிய காரியத்தை பண்ணி அந்தப் பொண்ணு வாழ்க்கையை காப்பாத்தி இருக்கீங்க! அதான் என் ராசாவைப் பார்த்து அந்தப் பொண்ணை நல்லபடியா பார்த்துக்க சொல்லிட்டுப் போலாம்னு வந்தேன்,” என்றவர் ஜூஸ் ட்ரேயை அவனிடம் கொடுத்துவிட்டு, அவன் கையில் இருந்த ஆராவை கொடுக்கச் சொல்லி வாங்கிகொண்டவர்,
“கிழவி, கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்த எனக்கு அவளை பார்த்துக்க தெரியாதா? நீ வேற தனியா சொல்லணுமா?” என்று சிரித்தான்.
“சரி ராசா, நீ பாத்துப்பேன்னு எனக்குத் தெரியும்,” என்று பொக்கை வாய் தெரிய சிரித்தவர்,
“நீயும் உன் பொண்டாட்டியும் குளிச்சு ரெடியாகிட்டு வா. நைட் டிபன் உன் அம்மாவே ரெடி பண்ணிட்டு இருக்கா,” என்று திரும்பி, ஆராவை கீழே இறக்கிவிட்டு அவளோடு கீழே செல்ல,
“கிழவி, ஆராவை எங்க கூட்டிட்டு போற? அவளுக்கு இன்னும் யாரையும் தெரியாதே,” என்றான்.
அவனைத் திரும்பிப் பார்த்து, “இந்த ஆரா தங்கம் இனிமே நம்ம வீட்டுப் புள்ள ராசா. அவளை நாங்க பாத்துக்குவோம். நீ உன் பொண்டாட்டி கூட ஜாலியா இரு,” என்று சிரித்தவர் அக்னிக்கும் தூரிகாவுக்கும் தனிமையைத் தந்துவிட்டு ஆராவுடன் கீழே சென்றார்.
“ம்ம், கிழவி சரியான ஆள்தான்,” என்று நினைத்தவன் கதவைச் சாற்றிவிட்டு ஜூஸ் ட்ரேயுடன் உள்ளே வர,
அவன் கையில் ஆரா இல்லாததைக் கண்டு வேகமாக அவனிடம் வந்தவள், “அ ஆரா எங்க?” என்று அவனைத் தாண்டி பின்னால் பார்த்தாள்.
கதவு சாத்தி இருக்க,
“அவ கீழ தான் இருக்கா. நீ இந்த ஜூஸைக் குடி,” என்று அவளிடம் ட்ரேயை நீட்டினாள்.
“இல்ல எனக்கு வேணாம், நான் ஆராவை போய் பார்க்குறேன்,” என்று வேகமாக வெளியே கதவைத் திறக்கப் போனாள்.
“ஹேய், அவ எங்கையும் போயிட மாட்டா. கீழ எல்லாரும் இருக்காங்க. ஆராவை பத்திரமா பாத்துப்பாங்க,” என்றான்.
அவன் பேசியது காதில் விழுந்தாலும் அதற்குப் பதில் சொல்லாமல் கதவைத் திறக்கப் போனவளை,
“ஏய் நில்லுடி,” என்று அவன் அதட்டல் அப்படியே நிறுத்தி இருந்தது.
அவன் அதட்டலில் பயந்தவள் சேலைத் தலைப்பை இறுக்கிப் பிடித்தபடி பயத்தோடு திரும்பி அவனைப் பார்க்க,
“வாடி இங்க,” என்று மீண்டும் அதட்டினான்.
தூரிகா அவன் முன் வந்து நிற்க, “இந்த ஜூஸைக் குடி,” என்றான்.
“இல்ல அ அப்பறோம் குடிக்கிறேன். ஆரா… ஆரா வெளிய தனியா…,” என்று தயங்கித் தயங்கி அவள் கூற,
“ஏய், நீ என்ன தெய்வமகன் விக்ரமா? அவரை மாதிரியே விக்கி விக்கி பேசுற? அதான் ஆராவைக் கீழ பாத்துப்பாங்கன்னு சொல்றேன் இல்ல,” என்று மீண்டும் அதட்ட,
விறுக்கென்று பயந்தவள் விழிகளில் மீண்டும் கண்ணீர் எட்டிப் பார்த்தது.
“ஏய், ஏய், இப்போ எதுக்கு அழற? உன் கண்ணுல இருந்து தண்ணி வெளிய வந்துச்சுன்னா அப்பறோம் நான் பேச மாட்டேன், என் துப்பாக்கிதான் பேசும்,” என்றான்.
ஏற்கனவே பயந்திருந்தவளுக்கு அக்னியின் அதட்டலும் அவன் துப்பாக்கியைப் பற்றிப் பேசியதும் உள்ளுக்குள் உதறல் எடுத்து அவசர அவசரமாக கண்களைத் துடைத்துக்கொண்டு அவனை படபடத்த பட்டாம்பூச்சி விழிகளால் ஏறிட்டாள்.
“ம்ம்ம், அது அப்படித்தான் இருக்கணும். இனிமேல் காரணம் இல்லாம அழுதா என் துப்பாக்கிக்குத்தான் நீ பதில் சொல்ல வேண்டி வரும்,” என்று தன் பேண்ட் பாக்கெட்டை சுட்டிக்காட்டினான்.
அதைப் பார்த்த தூரிகா, அவன் பாக்கெட் புடைத்துக்கொண்டு இருக்க அதில் உண்மையாகவே துப்பாக்கி இருக்கும் போல என்று பயந்தவள், “இல்ல இல்ல நான் அழல, அழமாட்டேன்,” என்று வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டே கூறினாள்.
“அடி லூசு, எதை சொன்னாலும் அப்படியே நம்புறாளே,” என்று நினைத்தவன்,
“சரி சரி, எவ்ளோ நேரம் இந்த ட்ரேயை நானே வெச்சிருக்கிறது? ஜூஸை எடுத்து குடி,” என்று மீண்டும் அதட்டினான்.
“ம்ம்ம் சரி,” என்று தலையை வேகமாக ஆட்டியவள், அக்னியிடம் இருந்து ஜூஸை வாங்கி மடமடவென உள்ளே சரித்துவிட்டு அவனிடம் டம்ளரை நீட்டினாள்.
அவளைப் புருவம் உயர்த்தி ஏறிட்டவன், “நான் என்ன உனக்கு வேலைக்காரனா?” என்று வேண்டுமென்றே வம்பு பேசினான்.
“ம்ஹும், இல்ல,” என்று தலையாட்டினாள்.
“அப்போ, இந்த ட்ரேயை பிடி,” என்று அவள் கையில் திணித்தவன் ட்ரேயில் இருந்த ஜூஸை எடுத்து குடித்தவன், “ஆமா, உன்கிட்டே கேக்கணும்னு நினைச்சேன். உன் அக்கா எப்படி இருந்தாங்க? உன் அம்மா அப்பாவும் இறந்துட்டாங்கன்னு சொன்னியே, என்ன ஆச்சு அவங்களுக்கு?” என்றான்.
அவள் குடும்பத்தைப் பற்றி அக்னி கேட்டதும் தூரிகாவுக்கு அழுகை வந்துவிட, “ம்ம்ம்,” என்று அவன் கண்ணீரைக் கண்டு அதட்டினான்.
அதில் தன் அழுகையைக் கட்டுப்படுத்திக்கொண்டே தேம்பியபடி, “என் அப்பாவுக்கு உடம்பு சரியில்லேன்னு அக்காவும் அம்மாவும் அவரை ஹாஸ்பிடல் கூப்டு போனாங்க. நான் ஆராவைப் பார்த்துட்டு வீட்ல இருந்துட்டேன். அவங்க மூணு பேரும் போன கார் ஆக்சிடென்ட் ஆகிடுச்சு. அதுல மூணு பேருமே…” என்று மீண்டும் அவள் அழ,
அவளை எதுவும் சொல்லவில்லை அக்னி. “அப்போ உன் அக்கா புருஷன், அதான் அந்த நாதாரி எங்க போனான்?” என்றான்.
“அவர் ஆபீஸ் போய் இருந்தார்,” என்றாள்.
“ம்ம்ம், அவன் போயிருக்க வேண்டிய கார்ல பாவம் உன் அக்கா போயிருச்சு,” என்றபடி தூரிகாவையே பார்த்துக்கொண்டு இருந்தவன், “நீ பார்க்க சின்னப் பொண்ணு மாதிரி இருக்க. உனக்கு எவ்ளோ வயசாச்சு?” என்று கேட்டவன் ஜூஸை வாயில் வைத்து குடிக்கப் போனவன் ஜூஸ் புரையேறி கீழே துப்பிவிட்டான் அக்னி.
“என்னடா? ஏன் ஜூஸை துப்பிட்டான்னு தானே யோசிக்கிறீங்க? அது ஏன்னு நீங்களும் கெஸ் பண்ணிருப்பீங்க, கரெக்ட்டா?”
ஆமாங்க, தூரிகா அவ வயசு என்னனு சொன்னதும் தான் நம்ம அக்னி ஜூஸைத் துப்பிட்டான்.
அப்படி தூரிகாவுக்கு எவ்ளோ வயசா இருக்கும்?
EPISODE 17
கார்டனில் அக்னி இருந்த இடத்திற்கு அர்ஜுனும் ராகவ்வும் சென்றனர்.
“என்னடா, ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்ன, என்ன விஷயம்?” என்று அர்ஜுன் கேட்டான்.
அவர்களைப் பார்த்த அக்னி, “மைனர் பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டா எதுவும் பிரச்சினை வருமா?” என்று கேட்டான்.
“ஆமாம்டா, 18 வயசு ஆகி இருக்கணும் கல்யாணம் பண்ணிக்க. ஏன், யார் மைனர்?” என்றான் ராகவ்.
“தூரிகா தான்,” என்றான் அக்னி.
அதைக்கேட்டு அதிர்ந்த இருவரும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“என்னடா சொல்ற? உன் மனைவி மைனரா? டேய், இதை முன்னமே சொல்ல மாட்டியா? நீ வேற, எங்க ஸ்டேஷன்ல வெச்சு கல்யாணம் பண்ணிருக்க. இது மட்டும் வெளிய தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா? எங்க மேல என்கொயரி வரும்,” என்றான் அர்ஜுன்.
“டேய் அக்னி, உன் வைஃப்க்கு என்ன ஏஜ் ஆச்சு? அவளை பார்த்தா சின்ன பொண்ணு மாதிரி தான் தெரியுது. ஆனா, மைனர்னு சொல்றதை என்னால நம்ப முடியல,” என்றான் ராகவ்.
“நானும் அப்படித்தான் நினைச்சேன். சும்மா அவளை பத்தி விசாரிச்சிட்டு இருக்கும்போது அவ வயசை எதார்த்தமா கேட்டேன்,” என்றவன், “அவ வயசை கேட்டதும் எனக்கு தூக்கி வாரிப்போட்டுடுச்சு. ஐயோ, இவ்வளவு சின்ன பொண்ணையா கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு இருக்குடா. அம்மாவுக்கு மட்டும் விஷயம் தெரிஞ்சா என்னடா சொல்றது? அவளை வேணாம்னு சொல்லிடுவாங்களா? நான் வேற வீராப்பா அவ கழுத்துல தாலி கட்டி, நல்லா பார்த்துக்குவேன்னு சொல்லி என்கூட கூட்டிட்டு வந்துட்டேன். எனக்கு இப்போ என்ன செய்யறதுன்னே தெரியல,” என்றான் அக்னி.
அவனை இப்படி குழப்பத்தோடும் பதட்டத்தோடும் இருவரும் இதுவரை பார்த்ததில்லை.
“டேய், முதல்ல சிஸ்டர் வயசை முதல்ல சொல்லுடா,” என்று டென்ஷனாகக் கேட்டான் அர்ஜுன்.
“17,” என்றான் அக்னி.
“டேய்,” என்று இருவரும் அக்னியை பார்த்தவர்கள், “உனக்கு 28 இல்ல, 29 இருக்குமாடா?” என்றான் ராகவ்.
“ஏன், 30ன்னு சொல்லேன்,” என்று அவனை முறைத்தவன், “அடுத்த மாசம் வந்தா 26 முடியப் போகுது,” என்றான்.
“அப்போ உனக்கும் அவளுக்கும் கிட்டத்தட்ட 10 இயர்ஸ் ஏஜ் டிஃபர் ஆகுதுடா,” என்றான் ராகவ்.
“ம்… அதான் எனக்கு ஏஜ் பத்தி பெருசா அக்கறை இல்லை. ஆனா அம்மா…” என்று அவன் முடிக்கும் முன், “அக்னி!” என்ற இதழ்யாவின் குரல் மூவரையும் திடுக்கிடச் செய்தது.
“என்னடா ஆச்சு? ஆன்ட்டி எதுக்கு உன்னை கூப்பிடறாங்க?” என்றான் ராகவ்.
“தெரியல, வாடா,” என்று அவர்களோடு உள்ளே சென்றான்.
“டேய், நீங்க ரெண்டு பேரும் போலீசா இருந்து என்ன பிரயோஜனம்? ஒரு மைனர் பொண்ணுக்கு போய் இந்த தடிமாடை பிடிச்சு கல்யாணம் பண்ணி வெச்சிருக்கீங்க. பாவம்டா அவ,” என்று தூரிகாவுக்காக பரிந்து பேசினார் இதழ்யா.
“ஆன்ட்டி, அது வந்து எங்களுக்கே இப்போதான் அக்னி சொன்னான்,” என்றான் ராகவ்.
“உங்களை,” என்றவர், “தூரிகா, இப்போ சொல்லு. நீ சின்ன பொண்ணு. உன்னோட சூழ்நிலை இப்படி எல்லாம் நடக்க ஆகிடுச்சு. உனக்கு நான் ஒரு நல்ல பையனா, அதுவும் உன் வயசுக்கு பொருத்தமானவரா பார்த்து நானே கல்யாணம் பண்ணி வைக்கிறேன்,” என்றார் இதழ்யா.
“அம்மா, என்ன இப்படி சொல்றீங்க?” என்று அக்னி பதறினான்.
“டேய், நீ பேசாத. வாயை மூடு. உன் வயசுக்கும் இவ வயசுக்கும் செட் ஆகாதுடா. ஏஜ் கேப் இருந்தா ரெண்டு பேருக்குள்ள மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் அதிகம் வரும்,” என்றார்.
“அம்மா, அதெல்லாம் வராது. நான் பார்த்துக்கிறேன்,” என்றான் அக்னி.
“என்னடா பார்ப்ப? நீ சும்மா இரு,” என்று அவனை அதட்டியவர், “சொல்லு தூரிகா. உனக்கு என்ன மனசுல தோணுதோ அதை ஓப்பனா சொல்லு. யார் என்ன சொன்னாலும் நான் உன் பக்கம் நிப்பேன். நீ எடுக்குற முடிவு தான் இப்போ ரொம்ப முக்கியம்,” என்றார் இதழ்யா.
அவளைப் பார்த்த அக்னி, “அம்மா, அவ சின்னப் பொண்ணு. இப்படி கேட்டா என்ன பதில் சொல்லுவா?” என்றான்.
“டேய், நீயே சொல்லிட்டே சின்னப் பொண்ணுனு. நீ பேசாம இரு,” என்று தூரிகாவை பார்த்தார்.
அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கைகளை பிசைந்து கொண்டு அக்னியை பார்க்க, அவனோ அவள் என்ன சொல்லப்போகிறாளோ என்று பதைபதைப்போடு அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான்.
“நீ யாருக்காகவும் யோசிக்க வேண்டாம் தூரிகா. உன் மனசுல என்ன நினைக்கிறியோ அதை அப்படியே சொல்லு,” என்றார்.
“அது…” என்று அவள் பேச்சை ஆரம்பித்திருக்கவில்லை.
“அம்மா, எனக்கு இவளை பிடிச்சிருக்கு. இவ வயசை பத்தி எனக்கு எந்த கவலையும் இல்லை,” என்றவன் வேகமாக தூரிகாவின் கையை பிடித்து, “நீ வா,” என்று அவனோடு அழைத்துக் கொண்டு வெளியே சென்றான்.
“டேய், நில்லுடா,” என்றார் இதழ்யா.
“அம்மா, நான் எங்கேயும் போகல. இவள்கிட்ட பேசிட்டு வரேன்,” என்றான்.
“சரி, நீ விடியற வரை வேணா பேசிட்டு இரு. ஆனா, தூங்கப் போகும்போது தூரிகாவை அஞ்சனா ரூம்ல விட்டுட்டு போ,” என்றவர், தூரிகாவைப் பார்த்து, “உனக்கு காலையில் ஐயர் இங்க வர வரைக்கும் ஒரு தடவை யோசிச்சு உன் முடிவை சொல்லு. அப்புறம் நாளைக்கு தாலி பிரிச்சுக் கோர்க்க நேரம் பார்த்துட்டா, நீயே நினைச்சாலும் நான் உன்னை இங்க இருந்து அனுப்ப மாட்டேன்,” என்றார்.
அவள் அதற்கும் பதில் சொல்லாமல் இருக்க, இதழ்யா திரும்பி தன் அறைக்குச் சென்றார். மற்றவர்களும் அவரவர் அறைக்குச் சென்றுவிட்டனர்.
அர்ஜுன், ராகவ் இருவரும் அக்னி தூரிகாவிடம் வந்தவர்கள், “சரி, நாங்க கிளம்பறோம். காலைல டியூட்டிக்கு போகணும்,” என்றனர்.
“சரிடா, கிளம்புங்க,” என்றவன், “நீ வா,” என்று தூரிகாவின் கையைப் பிடித்து கார்டனுக்கு அழைத்துச் செல்ல, ராகவ், அர்ஜுன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு தோளை குலுக்கிவிட்டு அங்கிருந்து கிளம்பினர்.
இங்கே கார்டனுக்கு வந்த அக்னி, “என் அம்மா கேட்டதுக்கு எந்த பதிலும் சொல்லாம வாயை மூடிட்டு இருக்க? வாயை திறந்து சொல்ல வேண்டியதுதானே?” என்றான்.
அவன் அதட்டலில் பயந்தவள், “எ… என்ன சொல்லணும்?” என்றாள் முந்தானையை திருகிக்கொண்டு.
“ம்… என்னை பிடிச்சிருக்கு. இவர் தான் வேணும். எனக்கு வேற யாரும் வேணாம்னு சொல்லியிருக்கணும்ல?” என்றான்.
“ஆ…” என்று அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“என்ன பாக்குற? சொல்லியிருக்கணுமா இல்லையா?” என்றான்.
“ம்…” என்று அவள் தலையை மெல்ல ஆட்டினாள்.
“என்ன ம்? நாளைக்கு என் அம்மா உன்னை கூப்பிட்டு கேக்குறப்போ என்ன சொல்லணும்?” என்றான்.
அவள் பேந்த பேந்த விழித்துக்கொண்டு அக்னியை பார்க்க, “என்னடி, நான் பேசிட்டு இருக்கேன். இப்படி அமைதியா இருந்தா என்னடி அர்த்தம்?” என்று மீண்டும் அதட்டினான்.
அவன் அதட்டலில் பயந்தவன், “நீ… நீங்க…” என்று வார்த்தைகள் தடுமாறின.
“என்ன நீ, நீன்னு இழுத்துட்டு இருக்க? சொல்லுடி,” என்றான்.
“இப்போ எதுக்கு என்னை அதட்டறீங்க? நானும் அப்போ இருந்து பார்த்திட்டு இருக்கேன். பாவம் சின்ன பொண்ணு, நான் கொஞ்சம் பார்த்து பேசணும்னு தோணுதா உங்களுக்கு? துப்பாக்கியை காட்டி மிரட்டறீங்க. சும்மா சும்மா ‘டி’ போட்டு பேசறீங்க. ஏதாவது சொல்லி என்னை திட்டிக்கிட்டே இருக்கீங்க. இப்படி எல்லாம் பண்ணினா மறுபடியும் எனக்கு உங்களை பிடிச்சிருக்கான்னு அத்தை கேட்டா ‘பிடிக்கலை’ன்னு சொல்லிருவேன்,” என்று எப்படி தான் இவ்வளவு பேச தைரியம் வந்தது என்று அவளுக்கே தெரியவில்லை. பொரிந்து தள்ளிவிட்டாள் அக்னியிடம்.
அவள் பேசுவதை அதிர்ந்து பார்த்தவன், “நான் எவ்வளவு பெரிய ரவுடி. என்னையே எதிர்த்து பேசுறியா? நீ எவ்வளவு தைரியம் இருந்தா என் அம்மாகிட்டயே போய் என்னை பிடிக்கலைன்னு சொல்லப்போறதா என்கிட்டேயே சொல்ற நீ?” என்று அவளை நெருங்கினான்.
இவ்வளவு நேரம் பட்டாசாக பொரிந்து தள்ளியவள் அக்னியைக் கண்டு பயந்து பின்வாங்க, “எங்கடி போற? நில்லு,” என்றான்.
“இ… இல்லை… நான் தெரியாம பெ… பேசிட்டேன்,” என்றாள்.
“எப்படி சொன்ன? நான் உன்னை சும்மா சும்மா ‘டி’ போட்டு கூப்பிடறேனா? அப்படித்தான் ‘டி’ போட்டு கூப்பிடுவேன். என்னடி பண்ணுவ?” என்றான்.
மேலும் அவளை நெருங்கி, “தூரிகா இ… இல்லை,” என்று தலையை ஆட்டிக்கொண்டே பின்னால் சென்றவள் சுவற்றில் மோதி நிற்க, அவளைப் பார்த்து புன்னகைத்தவன் அவள் முகத்தருகே குனிந்து, “இப்படி அப்பாவி மாதிரி முகத்தை வெச்சுக்கிட்டா நான் பாவம் பார்ப்பேன்னு மட்டும் நினைக்காத. நான் நினைச்சா உன்னை என்ன வேணாலும் பண்ணுவேன்,” என்று விழிகளை உருட்டி மிரட்டினான்.
அவனை அப்படி பார்த்ததும் தூரிகாவுக்கு உதறல் எடுத்தது. உதடுகள் நடுங்கின.
அதை பார்த்து ரசித்து உள்ளுக்குள் சிரித்தவன், “சரியான பயந்தவளா இருக்காளே. இந்த ரௌடி வேஷம் கூட எனக்கு சரியா தான் செட் ஆகியிருக்கு. இவ விஷயத்துல கொஞ்ச நாளைக்கு இப்படியே மெயின்டெயின் பண்ணுவோம்,” என்று நினைத்தவன் தொடையை செருமிக்கொண்டே, மேலும் அவள் உடலை உரசும் அளவுக்கு நெருங்கியவன், “நாளைக்கு அம்மாகிட்டே என்கூட இருக்கத்தான் பிடிச்சிருக்கு. என் கூட சேர்ந்து வாழ விருப்பம்னு நீ சொல்லணும்,” என்றான்.
அவள் இன்னமும் பயம் குறையாமல் அவனையே பார்த்தாள்.
“என்ன, புரிஞ்சுதாடி?” என்று அதட்டினான்.
விறுக்கென்று பயந்தவள் முகத்தில் வழிந்த வியர்வையை கூட துடைக்க மறந்தவளாக, “ம், புரிஞ்சுது,” என்றாள்.
“என்ன புரிஞ்சுது?” என்று சுவற்றில் கைகளை இருபக்கமும் அவளைச் செல்லவிடாமல் அணை கட்டி நிற்க வைத்து கேட்டான்.
“அ… அத்தை கேட்டா உ… உங்களை பிடிச்சிருக்குனு சொல்லணும்,” என்றாள்.
“சொல்லிருவியா?” என்றான்.
“ம், சொல்றேன்,” என்றாள்.
“மறக்க மாட்டியே?” என்றான்.
“ம்ஹும்… ம்ஹும்… ம்ஹும்… இல்ல, மறக்கல,” என்று வேகமாக தலையை ஆட்டினாள்.
“இல்ல… இல்ல… நீ ரொம்ப பயப்படற. பயத்துல நீ எதுவும் மாத்தி உளறிட்டா என்ன பண்றது?” என்று தன் தாடியை வருடிக்கொண்டே அவளைப் பார்த்தவன், சட்டென்று தூரிகாவின் இடையில் கை கொடுத்து அவளை தன் உயரத்திற்கு தூக்கியவன், “நாளைக்கு மட்டும் நான் சொல்லிக்கொடுத்த மாதிரி நீ என் அம்மாகிட்டே சொல்லலைன்னு வை,” என்று அவளை மேலும் இறுக்கிப் பிடிக்க, அவன் தோளில் பதட்டத்தில் கை வைத்திருந்தவள் அதை இறுக பற்றிக்கொண்டு, “சொல்… சொல்லிருவேன்,” என்றாள்.
“ம்… சரி,” என்றவன், “உனக்கு 18 ஆக இன்னும் ரெண்டு நாள் இருக்குன்னு நான் பொறுமையா இருக்கேன். இல்லைன்னு வை…” என்று அவள் முகத்தில் இருந்த தன் பார்வையை தாழ்த்தி தூரிகாவின் இதழுக்கு கொண்டு வர, “இ… இல்லைன்னா?” என்று அவனை கேள்வியாக பார்த்தாள்.
“சிவந்திருக்க உன்னோட லிப்ஸை இன்னும் சிவக்க வெச்சிருப்பேன், ஜாக்கிரதை,” என்று அவளை கீழே இறக்கிவிட்டு, “உள்ள போனதும், லெப்ட் சைடுல ரெண்டாவது ரூம், அஞ்சனாவோடது. அங்க போய் தூங்கு. நான் உன்னை காலையில் வந்து பார்க்கிறேன்,” என்று திரும்பி நின்று அவளை பார்க்காமல் கூறினான்.
விட்டாள் போதும் என்று அடுத்த நொடி அங்கிருந்து சிட்டாக பறந்து இருந்தாள் தூரிகா.
“என்னடா, இனிக்குத்தான் தாலி கட்டின அதுவரை தூரிகா பத்தி எதுமே நினைக்கல ஆனா பொண்டாட்டி ஆனதும் உரிமையா பேசுற அவளை டி போட்டு கூப்பிடுற இது எல்லாம் கூட பரவால்ல. இல்லாத துப்பாக்கியை காட்டி வேற அவளை மிரட்டுற, இவ வந்த ஒரு நாள்ளையே இப்படி ஆகிட்ட? அவளை பார்த்தா உனக்கு என்ன என்னவோ எல்லாம் தோணுது,” என்று தன் தலையை அழுந்த கோதியவன், திரும்பி சிரித்துக்கொண்டே மாடியில் இருந்த அவன் அறைக்குச் சென்றுவிட, இதையெல்லாம் மறைவாகக் கேட்டபடி ஒரு உருவம் கார்டனில் இருந்த மரத்துக்கு பின்னால் நின்று இருந்தது.
EPISODE 18
ஷ்…ஷ்… என்று சத்தம் கேட்டது அஞ்சனாவின் அறைக்குள்
படுத்திருந்த தூரிகா தலையை நிமிர்த்தி சுற்றிலும் பார்த்தாள்
ஏய் யாரை தேடுற நான் இங்க இருக்கேன் என்னைப் பாரு என்று அக்னியின் குரல் கேட்கவும்
சத்தம் வந்த திசையை திரும்பிப் பார்த்தவர்களுக்கு அதிர்ச்சியானது அஞ்சனாவின் அறை வாசல் முன்பு நின்றிருந்தான் அக்னி
அவனைப் பார்த்ததும் சட்டென எழுந்து அமர்ந்தவள்
தன் அருகில் படுத்திருந்த அஞ்சனாவை திரும்பிப் பார்த்தால் அவள் நன்றாக உறங்கிக் கொண்டிருக்க
அவதான் தூங்கிட்டு இருக்கா இல்ல அவளை ஏன் பார்த்துட்டு இருக்க வா டி என்று அறைக்குள் வந்தவன் தூரீகாவின் கையை பிடித்து வெளியே இழுத்துச் செல்ல
போர்த்தி இருந்த போர்வையை அவசரமாக விலக்கிவிட்டு அவன் இழுப்பிற்கு அவன் பின்னால் ஓடினாள்
தூரிகாவை அழைத்து வெளியே வந்தவன் ஹாலில் மறைவாக இருந்த இடத்திற்கு அவளை அழைத்துச் சென்று சுவற்றில் அழுத்தி நிறுத்தியவன்
பதற்றத்தில் இருந்த அவள் முகத்தை பார்த்தான் தலைமுடி கலைந்து இன்னமும் தூக்கம் தெளியாத அவள் கண்களை அழுத்தி அழுத்தி மூடி திறந்து அவனை பார்க்க முற்பட்டாள் தூரிகா
சுவற்றில் அழுத்தி நிற்க வைத்தவன் அவள் முகத்தருகே தன் கையை கொண்டு செல்ல
அஹ் என்று பயத்தில் தலையை பின்னால் எடுக்க சுவற்றோடு ஒட்டி நின்றிருந்தவள் தலை சுவற்றில் மோதி விட்டது
அதில் லேசாக தலையில் அடித்து விட ஷ் இன்று அவனைப் பார்த்துக் கொண்டே தலையை தேய்க்க போனாள்
அவள் கையைப் பிடித்து நிறுத்தியவன் கரடு முரடனா தன் கை கொண்டு கலைந்திருந்த அவள் தலைமுடியை அழுந்தக் கோதி சரி செய்துவிட்டு அடிபட்ட இடத்தை லேசாக தடவிக் கொடுத்தான்
ஆணின் ஸ்பரிசும் முதல் முறை என்பதை விட பாசமான அக்கறையான ஒரு தீண்டல் அவளை நிலைகுலைய செய்தது
அவன் தடவி கொடுத்தது அப்படியே கண் மூடி அதை உணர நினைத்தாள் ஆனால் அதற்கு முன் அவள் தலையில் இருந்து கையை அக்னி எடுத்துவிட
கண்களைத் திறந்து தனக்கு நெருக்கமாக இருந்தவனை ஏக்கத்தோடு பார்த்தாள்
அதை கவனிக்காத அக்னியோ நேத்து நான் சொன்னத நல்லா ஞாபகம் வெச்சிருக்க தானே என்றான்
உரசிக் கொள்ளும் தூரத்தில் இருந்த அவன் முகத்தை பார்த்தவாறு ம்ம் என்றாள் சத்தம் வராமல்
என்ன ம்ம் பதில் சொல்லு டி என்று மேலும் நெருங்கினான் அக்னி
அவன் நெருக்கத்தில் மூச்சடைத்தது தூரிக்காவுக்கு.
வேகமாக மூச்சேடுத்தபடி நி நீங்க இப்படி கிளோசா வந்தா எனக்கு எனக்கு என்று மூச்சு விட சிரமப்பட்டவளாக ஆழ்ந்து மூச்சேடுத்தப்படி அவனை ஏறிட்டாள்
தன் நெருக்கம் தூரிகாவை தினரடிப்பதை உணர்ந்தவன் உள்ளுக்குள் பெருமை கொண்டான்.
ஏன் நான் க்ளோசா வரக்கூடாதா உனக்கு நான் தாலி கட்டி இருக்கேன் டி இவ்வளவு க்ளோசா என்ன இதுக்கும் மேல க்ளோசா வருவேன் பாக்குறியா என்று அக்னி சொன்னதும் அதிர்ந்து பார்த்த அவள் விழிகளை பார்த்துக் கொண்டே பல்லி போல சுவற்றில் ஒட்டிக் கொண்டிருந்தவள் மீது தன் உடலை அவள் மேல் அழுத்தி நின்றான்
ஏற்கனவே மூச்சுவிட திணறியவள் அவனின் இந்த அழுத்தம் மேலும் திணறடிக்க வேகமாக மூச்சு எடுத்தபடி அவனை நிமிர்ந்து பார்த்தாள்
இவ்வளவு க்ளோஸ் போதுமா என்று நக்கலாக கேட்டான்
இ இல்ல நி நீங்க என்று தயங்கி அவன் மார்பில் கை வைத்து தன்னிடம் இருந்து அவனை விளக்க உற்பட்டாள்
ஏய் என்னடி தள்ளி விடுற நான் எவ்வளவு பெரிய ரவுடி தெரியுமா என் மேல கைய வைக்க உனக்கு அவ்வளவு தைரியமா எங்க மறுபடியும் என்னை பின்னாடி தள்ளு பாப்போம் என்று அவளை மேலும் அழுத்திக்கொண்டு நிற்க
ம்ஹும்ம்ம் இல் இல்ல இன்று அவசரமாக அவன் மார்பில் இருந்த தன் கைகளை கீழே இறக்கினாள்
கீழே இறக்கிய அவள் கைகள் இரண்டையும் பிடித்து தன் மார்பு மீது போட்டுக் கொண்டவன்
நான் ரவுடிதான் மத்தவங்க யாரும் என் மேல கை வைக்க முடியாது ஆனால் உனக்கு மட்டும் தான் நான் அந்த உரிமையை கொடுக்கிறேன் வச்சுக்கோ ஒன்னும் தப்பில்லை என்று சுவற்றில் ஒரு கையை ஊன்றி அவள் தாடையைப் பிடித்து தன்னை பார்க்க வைத்தான்
மெல்ல அவனை பார்த்தவள் அமைதியாக இருக்க
ஏண்டி நானே தான் பேசிட்டு இருக்கேன் நீ ம்ம்ம் இல்ல நீங்க அது இப்படின்னு மணிரத்தினம் படத்தில் வரும் மாதிரி வார்த்தையை பிச்சு பிச்சு பேசுற கோபம் வந்தா மட்டும் தான் கூறுவாயா பேச விரும்ப உனக்கு இந்த மாதிரி நேரத்துல பேச வராதா என்றான்
ஹான் என்று அவன் பேசியது கேட்டு விழி விரித்தவள் இப் இப்போ எப்படி பேசுறது என்று மூச்சை அடக்கிக் கொண்டு பேசினாள்
ரொம்ப அழுத்தி நிற்கிறேன் போல என்று அவளை விட்டு லேசாக விலகி நின்றான்
விலகி என்றால் அவளை விட்டு ஒரு அடி தள்ளி அல்ல ஒரு இன்ச் தான் தள்ளி நின்றான்
தூரிகாவிற்கு பேச்சே வரமாட்டேன் என்றது இப்படி தடாலடியாக ஒரே நாளில் தன்னிடம் நெருக்கம் காட்டுவதும் உரிமை எடுத்து பேசுவதும் அவளுக்கு வித்தியாசமாக இருந்தது
விடியும் வேலை என்பதால் வீட்டில் உள்ளவர்கள் ஒவ்வொருவராக எழுந்து வெளியில் வரும் சத்தம் கேட்கவும் அவளை விட்டு விலகி நின்றவன் இங்க பாரு எப்படி இன்னும் கொஞ்ச நேரத்துல ஐயர் ஒருவர் அதுக்கு முன்ன அம்மா உன்னை கூப்பிட்டு வச்சு கேப்பாங்க அப்ப ஒழுங்கா நான் சொல்லிக் கொடுத்த மாதிரி சொல்லணும் சரியா என்றான்
என்ன சொல்லணும் என்றால் அவனைப் பார்த்து
ஏய் நேத்து கேட்ட இதே கேள்வியை கேட்காதே அப்புறம் நான் டென்ஷன் ஆயிடுவேன் என்றவன்
அவள் முகத்தருகே லேசாக குளிர்ந்து என்ன பிடிச்சிருக்குன்னு சொல்லு சொல்லணும் என்றான்
ம்ம்ம் என்று அவள் தலையை கிளிப்பிள்ளை போல ஆட்ட
அதை ரசித்தவன் சரி போ யாராவது வந்துடப் போறாங்க என்று அவள் தோளில் கை வைத்து வெளியே தள்ளினான்
அப்போது சரியாக உடலை முறுக்கிக் கொண்டு தன் அறையை விட்டு வெளியே வந்த ராஜன் திடீரென அவற்றின் பின்னால் இருந்து வெளியே வந்து நின்ற தூரிகாவை பார்த்தான்
இந்த பொண்ணு என்ன இவ்வளவு சீக்கிரத்துல அதுவும் அந்த சுவுத்துக்கு பின்னாடி இருந்து வருது என்று ராஜன் நினைத்துக் கொண்டிருக்கும் போதே அவள் பின்னால் அக்னி வந்தான்
தூரிகா ராஜனை பார்க்கவில்லை ஆனால் அக்னி அவரைப் பார்த்து விட்டான்
அவர் தன்னையும் தூரிகாவையும் அதிர்ச்சியாக மாறி மாறி பார்ப்பதை கவனித்தவன்
இந்த ஆள் என்ன இன்னைக்கு இவ்வளவு சீக்கிரம் எழுந்து வந்துருச்சு என்று நினைத்தவன் உள்ளுக்குள் குறும்பாக எதையோ யோசித்து விட்டு சிரித்தவன் ராஜனின் அதிர்ந்த முகத்தை பார்த்துக் கொண்டே
தன் முன்னாள் நடந்து சென்ற தூரிகாவின் கையை பிடித்து தன்னை நோக்கி இழுத்தவன் அவள் என்ன என்று யோசிப்பதற்கு முன்பு தூரிகாவின் முகத்தை தன் இரு கைகளிலும் ஏந்தி குனிந்து அவள் இதழில் முத்தம் வைத்திருந்தான்
அதை அதை சற்றும் எதிர்பாராத தூரிகவின் கண்கள் அதிர்ச்சியில் அவனைப் பார்க்க
ராஜனும் அதை பார்த்ததும் அதிர்ந்தவர் அடப்பாவி நான் இருக்கிறது தெரிந்தும் என் முன்னாடி இப்படி பண்றானே டேய் அது சின்ன பொண்ணுடா இன்னும் 18 வயசு கூட ஆகல என்று நினைத்தவர் பாப்பா என்று கத்திக் கொண்டே திரும்பி தன்னறைக்கு வேகமாக நடந்து சென்றார்
ராஜனின் குரல் கேட்டதும் தூரிகா சட்டென்று அக்னியின் மார்பில் கை வைத்து அவனை தள்ளி விட சிரித்துக் கொண்டே தலையை அழுந்த கோதியவன்
இனி மறுபடியும் அம்மா கேட்டா என்ன சொல்லணும்னு என்கிட்ட கேட்க மாட்டியே என்று சிரித்தான்
அவள் இல்லை என்பது போல தலையை இடவளம் ஆட்ட சரி போ என்று அவளை அஞ்சனா அறைக்கு அனுப்பி விட்டு ஜாகிங் செல்ல வெளியே சென்றான்
இங்கே அஞ்சனாவின் அரை கதவை திறந்து கொண்டு அக்னி அவனுக்கு கொடுத்த முத்தத்தை நினைத்து அதிர்ச்சி மாறாமல் நடந்து வந்தாள்
அப்போதுதான் தூங்கி எழுந்திருந்த அஞ்சனா போர்வையை மடித்து வைத்துக் கொண்டே தூரிகாவை பார்த்தவள் எங்க போன இவ்ளோ காலையில என்றாள்
அ ஆ ஆராவை பார்க்கப் போனேன் என்று சமாளித்தாள்
எழுந்துட்டாளா என்றாள் அஞ்சனா
ம் ம்ஹும் இன்னும் இல்ல அதான் அவங்கள தொந்தரவு பண்ணாம திரும்பி வந்துட்டேன் என்று பொய் சொன்னாள்
சரி நீ குளிச்சிட்டு வந்துறியா இல்ல நான் குளிக்க போகட்டுமா என்றாள்
ன்னநானே போறேன் என்றவள் பிறகுதான் யோசித்தாள் குளித்ததும் மாற்றிக்கொள்ள அவளுக்கு உடைகள் இல்லை என்ற தூரிகா தயங்கிக் கொண்டு நிற்க
ஏன் நீ அப்படியே நிற்கிற போ போய் குளிச்சிட்டு வா என்றாள் அஞ்சனா
அக்கா தயக்கமாக அஞ்சனாவை பார்க்க
அவளின் இந்த அக்கா என்ற அழைப்பு அஞ்சனாவிற்கு சந்தோஷத்தை கொடுத்தது சிரித்துக் கொண்டே சொல்லு தூரிக்கா என்ன என்றாள்
அக்கா மாத்திக்க மாத்திக்க டிரஸ் என்று அவளை பார்க்க
ஓ அதுக்கு தான் இவ்வளவு தயவுசெஞ்சு நீ குளிச்சிட்டு வா நான் உனக்கு டிரஸ் எடுத்து வைக்கிறேன் என்று அவளை அனுப்பி வைத்தாள்
தூரிகாவும் தலையாட்டிவிட்டு குளிக்கச் சென்றாள்
ஹாலில் அனைவரும் ஒன்று கூடி இருந்தனர்
தூரிகாவை பார்வையாலேயே தூரத்திலிருந்து மிரட்டி கொண்டிருந்தான் அக்னி அவ்வப்போது தன் பேண்ட் பாக்கெட்டை தடவி அவளை முறைத்துக் கொண்டிருக்க
அவன் பாக்கெட்டில் இல்லாத துப்பாக்கியை கண்டு இங்கே இவள் அரண்டு மிரண்டு கொண்டிருந்தாள்
தூரிகா நேத்து நான் சொன்னதை பத்தி யோசிச்சியாமா என்று இதழ்யாவின் குரல் அவள் கவனத்தை திருப்பி இருக்க
அவள் பதட்டமாக அவரை திரும்பிப் பார்த்து ம்ம்ம் என்று தலையாட்டினாள்
அப்போ நீ என்ன முடிவெடுத்து இருக்கேன்னு சொல்லுமா என்ற ராஜன்
தூரிகா தயக்கத்தோடும் பயத்தோடும் அக்னியை பார்ப்பதை கண்டவர் உன்ன யாரும் எதுவும் சொல்லிட முடியாது நான் இருக்கேன் தைரியமா நீ என்ன நினைக்கிறியோ அதை சொல்லு என்றார்
அவை எல்லாரும் முன்னாடியும் பேச கூச்சப்படுறேன்னு நினைக்கிறேன் யுவா கொஞ்சம் போது நானே அவ்வளவு தனியா கூப்பிட்டு போய் கேட்கிறேன் என்று இதழ்யா எழுந்து தூரீகாவிடம் வர
அவரை பதட்டமாக பார்த்தாள் தூரிகா
எதுக்காக தூரிகா இவ்வளவு பதட்டப்படற உன்னை யாரு இங்க எதுவும் செஞ்சுட முடியாது நீ வா என்று அவளை ஆதரவாக அணைத்துக் கொண்டு தன் அறைக்குள் அழைத்துச் சென்றார்
இதிலியாவின் அறைக்குள் செல்வதற்கு முன்பு தூரிகா திரும்பி அக்னியை பார்க்க
அவள் குழப்பமான முகத்தை கண்டவனுக்கு உள்ளுக்குள் ஏதோ நெருடலாக இருந்தது அவசரப்பட்டு அவளிடம் உரிமை எடுத்துவிட்டோமோ அவளுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லையோ ஏன் அவள் முகம் இப்படி இருக்கிறது என்று அக்னி யோசித்துக் கொண்டிருக்கும் போதே
இதழ்யாவின் அறைக்குள் அவள் செல்ல அவளை உள்ளே விட்டு கதவை சாற்றி இருந்தார் இதழ்யா
EPISODE 19
“டேய் தம்பி, தூரிகா என்ன சொல்லிருப்பா? அம்மா கிட்ட, என்கூட சேர்ந்து வாழ சம்மதம்னு சொல்லிருப்பாளா? இல்லை, வேண்டாம்னு சொல்லிருப்பாளா?” என்று பதற்றத்தில் தம்பிரானிடம் புலம்பிக்கொண்டிருந்தான் அக்னி.
“தெரியலையே மச்சி, எனக்கும் அதான் டென்ஷனா இருக்கு,” என்றான் தம்பிரான்.
அப்போது குளித்துவிட்டுப் புது உடை அணிந்து அங்கு வந்த ஆரா, அக்னியைப் பார்த்ததும் ஓடி வந்து, “அப்பா,” என்று அவன் காலை கட்டிக்கொண்டாள்.
“ஆரா குட்டி வந்துட்டியா? எங்க போன இவ்ளோ நேரம்?” என்று அவளைத் தூக்கிக் கொஞ்சினான் அக்னி.
“அப்பா, பாட்டி எனக்குக் குளிச்சுவிட ஹெல்ப் பண்ணினாங்க. இங்க பாத்தீங்களா, நான் புது டிரஸ் போட்டிருக்கேன். பாட்டிதான் போட்டுவிட்டாங்க,” என்று சந்தோஷமாக தான் அணிந்திருந்த ஃப்ராக்கைப் பிடித்து அவனிடம் காட்டினாள்.
“ஹே, சூப்பரா இருக்குடா ஆரா உனக்கு,” என்று அவனும் அவள் சந்தோஷத்தை உள்வாங்கிக்கொண்டு பேசிக்கொண்டிருந்தான்.
ஆரா அக்னியை ‘அப்பா’ என்று அழைப்பதும், அவனும் ஆராவைத் தூக்கிக் கொஞ்சிப் பேசுவதையும் பார்த்த ராஜன், சகுந்தலா, அஞ்சனா, செல்வம், தர்மன் என அனைவரும் ஆச்சரியமாகப் பார்த்தனர்.
‘தருதலைக்கு ‘அப்பா’ன்னு கூப்பிடுற அளவுக்கு ஒரு உறவு வந்திருச்சா? ம்… சந்தோஷமாத்தான் இருக்கு. அந்தக் குழந்தை நல்ல விஷயம் தான் செய்திருக்கு,’ என்று ராஜன் நினைத்துக்கொண்டார்.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், தன் அறையிலிருந்து ஆபீஸ் கிளம்பி வெளியே வந்தாள் நந்தினி.
“நந்து, வாடா, கிளம்பிட்டீயா?” என்று அவள் கை பிடித்து ஹாலுக்கு அழைத்து வந்தார் பழனி.
“ம்… ஆமா கிழவி, கிளம்பிட்டேன்,” என்றவள், “மாம் எங்க காணோம்?” என்று தேடினாள்.
“அவ தூரிகாவோட உள்ள பேசிட்டு இருக்கா நந்தும்மா. நீ இன்னும் சாப்பிடலதானே? வா, நம்ம ரெண்டு பேரும் சாப்பிடலாம்,” என்று ராஜன் அங்கு வர,
“ஓகே டேட்,” என்றவள், “ஹே அஞ்சனா, தர்மா நீங்க சாப்பிட்டீங்களா?” என்றாள்.
“ம்ஹும், இன்னும் இல்லை,” என்று இருவரும் தலையை ஆட்ட,
“நீங்களும் வாங்க, சாப்பிடலாம்,” என்றாள் நந்தினி.
“இல்ல நந்து, இதழ் ஒரு முக்கியமான விஷயமா உள்ள பேசிட்டு இருக்காங்க. நீ சாப்பிடுடா,” என்றார் செல்வம்.
“என்ன மாமா, எல்லாரும் ரொம்ப டென்ஷனா இருக்கீங்க? எதுவும் ப்ரோப்ளெமா?” என்றாள் நந்தினி.
“ப்ரோப்ளெம் இல்லடா, ஆனா கொஞ்சம் முக்கியமான விஷயம். அதான்,” என்றவர் அக்னியைப் பார்த்துவிட்டு, “அக்னி கல்யாணம் பத்திதான் பேச்சுவார்த்தை நடந்துட்டு இருக்கு,” என்றார்.
அதைக் காதில் வாங்கினாலும் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல், “ஓகே மாமா. நீங்க மாம் வந்ததுமே சாப்பிடுங்க. எனக்கு டைம் ஆச்சு. மத்த விஷயத்தைப் பேசுறதுல எனக்கு டைம் தான் வேஸ்ட் ஆகும்,” என்று அக்னியை முறைத்துவிட்டு, டைனிங் சென்று சாப்பிட அமர்ந்தாள்.
மாலா வந்து ராஜனுக்கும் நந்தினிக்கும் உணவு பரிமாறிக்கொண்டிருக்க,
“உன் தம்பி கல்யாணம் பண்ணி கூப்டு வந்த பொண்ணு மைனர்ன்னு நேத்துதான் எங்களுக்குத் தெரிஞ்சுது. அதான் அந்தப் பொண்ணுகிட்ட உன் அம்மா, அவளுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இருக்கா, அந்தத் தருதலை கூட சேர்ந்து வாழ அவளுக்கு விருப்பமான்னு விசாரிச்சிட்டு இருக்கா,” என்றார் ராஜன்.
ராஜன் சொல்வதையெல்லாம் சாப்பிடும்போதே முழுவதும் கேட்டவள், “அவன் யாரைக் கல்யாணம் பண்ணினா எனக்கு என்ன? வந்துச்சு? அவன் என்னவோ பண்ணிட்டுப் போறான். தயவுசெஞ்சு அவனைப் பத்தி என்கிட்டப் பேசாதீங்க டேட். இரிடேட்டா இருக்கு,” என்று கோபமாகச் சொன்னாள்.
“சரி சரிடா, நீ சாப்பிடு. நான் அவனைப் பத்தி எதுவும் பேசல,” என்றார் ராஜன்.
இருவரும் அமைதியாகச் சாப்பிட்டுக்கொண்டிருக்க, இதழ்யாவின் அறைக்கதவு திறக்கும் சத்தம் கேட்டது.
அனைவரின் கவனமும் இதழ்யாவின் அறையின் பக்கம் திரும்ப, உள்ளிருந்து முதலில் இதழ்யாதான் வந்திருந்தார்.
அவரைப் பார்த்ததுமே தூரிகாவைத்தான் அக்னியின் விழிகள் தேடின. ஆனால் அவள் வரவில்லை.
“அம்மா, நீங்க மட்டும் வர்றீங்க, அவ எங்க?” என்று அவரிடம் வந்தவன், அறையைப் பார்க்க,
“டேய், இப்போ எதுக்கு இவ்ளோ அவசரம் உனக்கு? கொஞ்சம் பொறு, வருவா,” என்றார் இதழ்யா.
“மா, அவ வரும்போது வரட்டும். நீங்க சொல்லுங்க, அவ என்ன சொன்னா?” என்றான் பொறுமை தாங்காமல்.
“எதுக்கு இப்போ இவ்ளோ அவசரம் உனக்கு? அவளை என்னவோ வருஷக்கணக்கா காதலிச்ச மாதிரி ரொம்பதான் பண்ற,” என்று அவனை இடித்துப் பார்க்கப் பார்த்தவர், “உனக்கு எவ்ளோ நாளா தூரிகாவைத் தெரியும்?” என்றார்.
“இப்போ எதுக்கு மா அதெல்லாம்?” என்று அலுத்துக்கொண்டவன் பார்வை முழுவதும் தன் தாயின் பெட்ரூம் கதவையே வெறித்துக்கொண்டிருந்தது.
“சொல்லுடா,” என்றார்.
“என் பர்த்டே அப்போதான் அவளை நான் ஃபர்ஸ்ட் பார்த்தேன்,” என்றான், அவரைப் பார்க்காமலேயே.
“அப்போ எல்லாம் உனக்குத் தூரிகா மேல எதுவும் விருப்பம் இருந்ததா?” என்றார்.
“மா!” என்று அவரைப் பார்க்க,
“சொல்லுடா,” என்றார்.
“மா, அப்போ எல்லாம் இல்லை. நான் எப்போ அவ கழுத்துல தாலி கட்டினேனோ, அப்போ இருந்து…” என்றான்.
“ஓஹோ, தாலி கட்டினதும் உரிமை வந்திருச்சா உனக்கு அவ மேல? அதனாலதான் நேத்து அவளைத் தனியா கார்டனுக்கு இழுத்துட்டுப் போய், ‘உன்னை பிடிக்கும்’னு சொல்லச் சொல்லி அவளுக்கு ட்ரெய்னிங் கொடுத்துட்டு இருந்தியா?” என்றார் நக்கலாக.
“என்னது, அந்தப் புள்ளைய தனியா கார்டனுக்கு உன் மவன் தள்ளிட்டுப் போனானா?” என்று அங்கு வந்தார் ராஜன்.
“ஸ்ஸ்…ப்பா, இவரு வேறயா?” என்று அலுத்துக்கொண்டவன், “மா, அது சும்மா. அவகிட்ட நான் பேசி அவ மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க கூப்டு போனது,” என்றான்.
“இல்லையே, நீதான் அப்படி சொல்ற. ஆனா தூரிகா அப்படி சொல்லலையே? அவ வேற மாதிரி இல்ல சொன்னா?” என்று அவனைப் பார்த்தார்.
“வேற என்ன சொன்னா உங்ககிட்ட?” என்று பதைபதைப்போடு கேட்டான்.
“ம்… அதை நீயே போய் அவகிட்ட கேளு,” என்றார்.
அவரைப் புரியாமல் அக்னி பார்க்க, “அவ என்கிட்ட என்ன சொன்னான்னு நான் சொல்றதைவிட, நீயே போய் அவளை சொல்லச் சொல்லி கேளு,” என்றார்.
“மா, என்ன விளையாடுறீங்களா? வந்ததுல இருந்து அவ என்ன சொன்னான்னு கேட்டா எதுவும் சொல்லாம, இப்போ போய் அவளையே கேட்கச் சொல்றீங்க,” என்று அவரை முறைத்துவிட்டு அடுத்த நொடி இதழ்யாவின் அறைக்குள் நுழைந்து பெட்ரூம் கதவை சாற்றிவிட்டான்.
“ஏய் அது நம்ம ரூம்டி,” என்று ராஜன் அவசரமாகக் கூற,
“விடுப்பா பொறு. அவன் பேசிட்டு வரட்டும்,” என்றவர், “அண்ணி, வாங்க நாம சாப்பிடலாம், எனக்குப் பசிக்குது,” என்றார்.
சகுந்தலாவும் அவரோடு சேர்ந்து சாப்பிடச் செல்ல, நந்தினி சாப்பிட்டு முடித்து கை கழுவிவிட்டு வெளியே வந்தாள்.
“சாப்பிட்டியாடி?” என்றவர், “ஆஃபீஸுக்கு டைம் ஆச்சா?” என்று மணியைப் பார்த்தார்.
“ம்… ஆமா மாம். பட் ஒரு முக்கியமான வேலை இருக்கு. அதை முடிச்சிட்டுப் போறேன்,” என்றவள், ஹாலுக்கு வந்து தன் மொபைலை எடுத்து நோண்டிக்கொண்டிருந்தாள்.
‘இவ என்ன வேலை இருக்குன்னு சொல்லிட்டு ஃபோனை நோண்டிட்டு இருக்கா?’ என்று நினைத்த ராஜன், ‘நமக்கு என்ன தெரியும்?’ என்கிற ரீதியில் தம்பிரானின் அருகில் வந்து அமர்ந்தவர், “ஏண்டா, அவன் உள்ள போய் இவ்ளோ நேரம் ஆச்சு, என்னடா ஆளை காணோம்?” என்றார்.
“எனக்கு என்ன தலைவரே தெரியும்? இப்போதானே போயிருக்கான்? பேசிட்டு பொறுமையா வரட்டும். அப்போதான் நான் ஃப்ரீயா என் வேலையைப் பார்க்க முடியும்,” என்று டைனிங் டேபிளைப் பார்த்தப்படி பேசினான்.
“உனக்கு என்னடா வேலை இங்க?” என்று அவனைப் பார்த்தவர், அனைவரும் சாப்பிடுவதைத் தம்பிரான் பார்த்துக்கொண்டிருப்பதை கவனித்த ராஜன், “அங்க என்னடா பார்வை? பசிச்சா போய் போட்டு சாப்பிடுன்னு சொல்லிருக்கேன் இல்ல? போடா,” என்று அவன் தோளில் இடித்து அனுப்பி வைத்தார்.
தம்பிரானும் எழுந்து சென்றவன் அனைவரோடும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.
இங்கே அறைக்குள் வந்த அக்னி, கட்டிலின் விளிம்பில் அமர்ந்து கைகளை பிசைந்து கொண்டிருந்த தூரிகாவைப் பார்த்தான்.
கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் அவசரமாக எழுந்து நின்றவளிடம் வேகமாக வந்தவன், தூரிகாவின் தோளைப் பிடித்து உலுக்கி, “அம்மா கிட்ட பேசிட்டியா?” என்றான்.
“ம்ம்ம்…”
“என்ன சொன்ன என் அம்மா கிட்ட?”
“அது… நீ… நீங்க…”
“ம்… என்ன நீங்க?”
“அது… நீங்க சொன்ன மாதிரியே சொல்லிட்டேன்.”
“எது? நேத்து நைட் நான் உன்னை கார்டென்ல வெச்சு மிரட்டினத்தை சொன்னியா?”
“ம்ஹும்… இல்லை. நான் ஏதும் சொல்லல,” என்று பதறினாள்.
“அப்பறம் அம்மாவுக்கு நம்ம நேத்து கார்டென்ல பேசின விஷயம் எப்படித் தெரியும்?” என்றான்.
“ம்ஹும்… எனக்குத் தெரியல,” என்றாள் பயந்து. அவன் விழிகளைப் பார்த்து,
“சரி அதை விடு. அம்மா உன்கிட்ட என்ன கேட்டாங்க? நீ என்ன சொன்ன?”
“அது… அது…” என்று மீண்டும் அவள் இழுக்க,
“சும்மா எதுக்கு இழுத்துட்டு இருக்க? சீக்கிரம் சொல்லு,” என்று அதட்டினான்.
அதில் பயந்தவள், “நான் சொன்னதை பத்தி யோசிச்சியா? என்ன முடிவெடுத்தேன்னு அம்மா என்கிட்ட கேட்டாங்க,” என்று பயத்தில் கூறினாள்.
“அதுக்கு நீ என்ன சொன்ன?”
“நான்… நான்…” என்று புடவையைக் கசக்கிக்கொண்டிருக்க,
“ஏய், இப்போ எதுக்குடி இப்படிப் போட்டுத் துணியைக் கசக்குற?” என்று மீண்டும் அவன் அதட்ட,
“ஆஹ்ஹ்…” என்று கண்ணைக் கசக்கிக்கொண்டு தூரிகா அழுதுகொண்டிருந்தாள்.
“கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிடாத,” என்று மீண்டும் அதட்டியவன் அவள் உயரத்திற்கு குனிந்து, “ம்… சொல்லு,” என்றான்.
அவனை அவ்வளவு நெருக்கத்தில் பார்த்தவளுக்கு உள்ளுக்குள் உதறல் எடுக்க, எச்சிலைக் கூட்டி விழுங்கியவள், “நீங்க சொல்லிக் கொடுத்ததை அப்படியே சொல்லிட்டேன்,” என்றாள்.
‘நான் சொல்லிக் கொடுத்ததைத்தான் சொல்லிருக்கேன்னு சொல்றாளே ஒழிய, சரியா நான் எதிர்பார்க்குற வார்த்தை இவ வாயில் இருந்து வரலையே?’ என்று அவளை இடித்துப் பார்க்கப் பார்த்தவன், “நீ இப்படி எல்லாம் பேசினா சரிப்பட்டு வர மாட்ட,” என்றவன் அடுத்த நொடி அவள் முகம் புதைத்து, தூரிகாவின் இதழில் தன் இதழைப் பொருத்தி இருந்தான் அக்னி.
இதில் அதிர்ந்த தூரிகா மிரண்டு அவன் விழிகளைப் பார்க்க, அவள் விழிகளையே பார்த்தபடி முத்தமிட்டவன், தூரிகாவைத் தன்னிடம் இருந்து விடுவித்து, “நீ என்ன பதில் சொல்லிருந்தாலும் எனக்குக் கவலை இல்லை. எனக்கு இந்த ஜென்மத்துல நீதான் பொண்டாட்டி. உன்னை நான் இனி எங்கேயும் விட்டுறது இல்லை. இந்த வீட்டை விட்டு என்னை விட்டுப் போறேன்னு சொன்னேன்னு வை, அப்பறம் உன்னை என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது,” என்றவன், “அப்படி மட்டும் நீ என்னை வேண்டாம்னு சொல்லியிருந்தது தெரிஞ்சதுன்னு வை, உன்னை…” என்று பேண்ட் பாக்கெட்டில் இருந்த மொபைலை துப்பாக்கி இருப்பதுபோல அவளிடம் காட்டி, “அப்பறம் உன்னைப் போட்டுருவேன்டி,” என்று அவன் விழிகள் சிவந்து பேசிக்கொண்டிருக்க,
“ஐயோ, இல்லை,” என்று பதறியவள், “நா… நா… எனக்கு உங்ககூட சேர்ந்து வாழ விருப்பம்னு தான் சொன்னேன்,” என்றாள் அவசரமாக.
“ஹப்பா… இந்த ஒரு வார்த்தையை இவ கிட்ட இருந்து வாங்குறதுக்குள்ள நான் எவ்ளோ கஷ்டப்பட வேண்டியதா இருக்கு,” என்று நினைத்தவன், “இதைச் சொல்ல இவ்ளோ நேரமாடி?” என்று அவளை நெருங்கி, மீண்டும் முத்தமிடும் ஆசையில் தூரிகாவின் ரோஸ் நிற இதழைத் தன் கட்டைவிரலால் தடவியவன், “செம்ம டேஸ்ட் டி உன் லிப்ஸ்,” என்றான்.
அவள் அதிர்ந்து அவனைப் பார்க்க, அதைக் கண்டு சிரித்தவன் முத்தமிட இதழைக் கொக்கி குனிய, “டேய் அக்னி, கொஞ்சம் வெளிய வாடா. இங்க வந்து என்னன்னு பாரு,” என்றார் இதழ்யா.
“ச்சே… கொஞ்ச நேரம் ரொமான்ஸ் பண்ண விட மாட்டாங்களா?” என்று சலித்துக்கொண்டவன், “போலாமாடி?” என்றான்.
அவன் வாயில் இருந்து வரும் வார்த்தைகள் கணீர் என்று ஒலிக்கவும், அவசரமாகத் தலையாட்டிவிட்டு அவன் பின்னால் ஓடினாள்.
“என்னம்மா அதுக்குள்ள உங்களுக்கு…?” என்று வந்தவன், அங்கே சில போலீஸ் ஆட்கள் நிற்பதைப் புருவம் சுருக்கிப் பார்த்தான்.
“என்ன சார் என்ன விஷயம்? என் வீட்டுக்கு எதுக்கு வந்திருக்கீங்க?” என்று அவர்களிடம் வந்தான்.
“மிஸ்டர் அக்னிமித்ரன், ஒரு மைனர் பொண்ணை விருப்பம் இல்லாம கல்யாணம் செய்து அவ வாழ்க்கையைச் சீரழிச்சிருக்கீங்க. அதுக்காக உங்க மேல கம்பளைண்ட் வந்திருக்கு,” என்றார்.
“வாட்? என் மேல கம்பளைண்ட்டா?” என்றான் புரியாமல்.
“ஆமா சார்,” என்று அந்தக் கான்ஸ்டேபிள் சொல்ல,
“யார் என் மேல கம்பளைண்ட் கொடுத்தது? அவன் யாருன்னு மட்டும் சொல்லுங்க, அவங்களை நான் உண்டு இல்லைன்னு ஆக்கிடுறேன்,” என்று அக்னி புலம்பிக்கொண்டிருக்க,
“ஏன், நான் தான் உன்மேல கம்பளைண்ட் கொடுத்தேன்,” என்று அங்கு வந்தாள் நந்தினி.
அவளின் இந்தச் செயலை அனைவரும் அதிர்ச்சியாகப் பார்த்தனர்.
EPISODE 20
“ஹலோ யது, என்னடா இது? வீட்டுக்குப் போனதும் நம்ம கல்யாண ஏற்பாட்டைப் பண்றேன்னு சொன்ன, உன் வீட்ல இருந்து எங்க வீட்ல பேச வராங்கன்னு சொன்ன. ஆனா, எதுவுமே நடக்கலையே, என்ன ஆச்சு?” என்று மெசேஜ் அனுப்பியிருந்தான் அபிமன்யு.
“சாரி அபி, இங்க ஒரு பிரச்சினை. என் பேரண்ட்ஸ் உன் வீட்டுக்குத்தான் கிளம்பியிருந்தாங்க. அந்த நேரம், என் தம்பி ஒரு பிரச்சினையை இழுத்துவிட்டுட்டான். அதனாலதான் வர முடியல அவங்களால,” என்றாள் யது.
“சரி, அவங்க அந்தப் பிரச்சினையை சால்வ் பண்ணிட்டு வரட்டும். அதுவரை இப்படி மெசேஜ்ல மட்டுமே பேசிட்டு இருக்கணுமா? எனக்கு உன்னை நேர்ல பார்க்கணும்போல இருக்கு யது,” என்று மெசேஜிலேயே கெஞ்சினான் அபிமன்யு.
அதைப் பார்த்தவள் மெலிதாகப் புன்னகைத்துவிட்டு, “நான் இன்னைக்கு உன் ஆபீஸ்க்கு வரேன். அந்தப் பழைய பெண்டிங் ஒர்க் இன்னும் முடிக்காமலேயே இருக்கு,” என்று அனுப்பி இருந்தாள்.
“யது டியர், என்ன இது? நம்ம மீட் பண்ணிப் பேசலாம்னு நான் சொன்னா, நீ ஆபீஸ்க்கு வரேன்னு சொல்ற. இட்ஸ் நாட் குட்,” என்று ஒரு கோப ஸ்மைலியை அனுப்பியிருந்தான்.
அதைக் கண்டு வாய்விட்டுச் சிரித்தவள், “முதல்ல பிசினஸ், அப்புறம் மத்ததெல்லாம்,” என்று அனுப்பிவிட்டு, போனை அணைத்துவிட்டு நிமிர்ந்தாள்.
அவள் எதிரே கோபமாக நின்று இருந்த இதழ்யாவைப் பார்த்தவள், “ஓ ஷிட்! நான் வீட்ல இருக்குறதையே மறந்துட்டேன்,” என்று நினைத்துக்கொண்டாள். பிறகு, “வாட் மாம்?” என்றாள் கூலாக.
“உனக்கு இப்படிப் பண்ண எப்படிடி மனசு வந்துச்சு? அவன் அப்படி என்ன பண்ணிட்டான்? தூரிகாவுக்கு 18 வயசு ஆகலை, அவ மைனர்னு தெரிந்திருந்தா கண்டிப்பா அக்னி அவள் கழுத்துல தாலியைக் கட்டி இருக்கவே மாட்டான். அதுக்காக எப்படி நீ அவன் மேல கம்ப்ளைன்ட் கொடுக்கலாம்?” என்றார் இதழ்யா கோபமாக.
“மாம், உங்களுக்குத் தெரியாது. அவன் அந்தப் பொண்ணை மிரட்டித்தான் கல்யாணம் செய்திருக்கான். நேத்து நைட், உங்க உத்தம புத்திரன் அந்தப் பொண்ணைத் தனியா கூப்பிட்டு வச்சு மிரட்டினான். ‘உங்ககிட்ட அவனைப் பிடிக்கும்னு சொல்லச் சொல்லி’ அந்தப் பொண்ணை வற்புறுத்தினான். அதை நானே பார்த்தேன்,” என்றாள் நந்தினி.
“ஹே! என்ன அப்படியே நின்னுட்டு இருக்க? உனக்காகத்தானே நான் பேசிட்டு இருக்கேன்? இங்க வா, வந்து அவன் நேத்து உன்னை என்ன சொல்லி மிரட்டுனானு சொல்லு,” என்று தூரிகாவின் கையைப் பிடித்து இழுத்து வந்து இதழ்யாவின் முன் நிறுத்தினார் நந்தினி.
அவள் பயந்துகொண்டு நின்று இருக்க, அக்னியின் கையில் இருந்த ஆரா அவனை விட்டு இறங்கி வந்து தூரிகாவைக் கட்டிக்கொண்டாள். “என் அம்மாவை ஏன் திட்டாதீங்க,” என்று நந்தினியை முறைத்தாள்.
“ஹேய்! நான் உன் அம்மாவை திட்டலை. சொல்லப்போனா, அவங்களை இந்த ராஸ்கல்கள்கிட்டே இருந்து காப்பாத்தத்தான் நான் ட்ரை பண்றேன்,” என்றாள் நந்தினி.
“ஹேய்! யாருடி ராஸ்கல்? ஒழுங்கா போயிட்டு நீ பண்ணின காரியத்துக்கு உனக்கு எதுவும் செய்யாம இருக்கேனேன்னு சந்தோஷப்பட்டுக்கோ. எனக்கு இருக்க கோபத்துக்கு உன்னை என்ன செய்வேன்னு எனக்கே தெரியல,” என்று வந்த கோபத்தை பல்லைக் கடித்துக்கொண்டு கட்டுப்படுத்தியபடி பேசினான் அக்னி.
“என்னடா? என்னடா பண்ணுவ? விட்டா என்ன வேணா பேசுவியா நீ? இந்த மிரட்டி உருட்டுற வேலை எல்லாம் வேற யார் கிட்டயாவது வெச்சுக்கோ. என்கிட்டே எதுவும் நடக்காது, சரியா?” என்று அவளும் பதிலுக்கு நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு அவனிடம் சண்டைக்குச் சென்றாள்.
“கடவுளே! ரெண்டு பேரும் ஏன் தான் இப்படி இருக்கீங்களோ? கொஞ்ச நேரம் பேசாம இருங்க,” என்ற இதழ்யா, “ஏய் நந்தினி! இவன் நேத்து தூரிகாகிட்டே பேசிட்டு இருக்கும்போது நானும் கார்டன்லதான் இருந்தேன். அக்னி தூரிகாவை மிரட்டுனது என்னவோ உண்மைதான். அதனாலதான் நான் தூரிகாவைத் தனியாக் கூப்பிட்டுப் போய், அவ மனசுல என்ன இருக்கோ அதை ஓப்பனா சொல்லச் சொல்லி கேட்டேன். உண்மையாவே தூரிகா அக்னி கூட சேர்ந்து வாழ விருப்பப்படுறா. அவளுக்காக இல்லேன்னாலும் ஆராவுக்காக அவ இந்த கல்யாணத்தை மனப்பூர்வமா ஏத்துக்கிட்டதா என்கிட்டே சொன்னா. வேணும்னா நீயே கேளு,” என்று தூரிகாவைப் பார்த்தார். “நீ என்கிட்ட என்ன சொன்னியோ, அதை இவக்கிட்டயும் சொல்லு. இவ மட்டும் இல்ல, இங்க இருக்க எல்லாரும் கேட்கட்டும்,” என்றார்.
தூரிகா படபடவென ஒரு பதட்டத்தோடு கையில் இருந்த ஆராவை அணைத்தபடி நின்று இருந்தவள், “எனக்கு அவர் கூட சேர்ந்து வாழ சம்மதம் தான். என் ஆராவுக்கு இவர் கூட இருந்தா பாதுகாப்பா இருக்கும். இவர் என்னையும் ஆராவையும் பத்திரமா பார்த்துக்கிறதா சொல்லிருக்கார்,” என்று அக்னியைப் பார்த்தாள்.
அவள் சொன்னது கேட்டு சந்தோஷமான அக்னி, இதழ்களைக் குவித்து யாருக்கும் தெரியாமல் தூரிகாவை நோக்கி காற்றில் முத்தமிட, அதைக் கண்டதும் விழிவிரித்தவள், சுற்றிலும் பார்த்துவிட்டுத் தலையைக் கவிழ்த்துக்கொண்டாள்.
“டேய்! இதெல்லாம் டூ மச்! டூ டூ மச் டா! நாங்க எல்லாம் இருக்கோம். போதாதுக்கு உன்னை அரெஸ்ட் பண்ணிக் கூட்டிட்டு போக போலீஸ் வேற வந்திருக்கு. அவங்களை எல்லாம் வெச்சிட்டு இப்படிப் பட்ட பகல்ல அந்தப் பொண்ணுக்கு ‘ஃப்ளையிங் கிஸ்’ கொடுக்குற! என்னடா இதெல்லாம்?” என்று ராஜன் அக்னியின் சேட்டையைப் பார்த்துவிட்டுப் பொறுக்க முடியாமல் கூறினார்.
“இந்த ஆள் பார்த்துத் தொலைச்சிட்டாரா?” என்று அலுத்துக்கொண்டவன், “அது என்ன அந்தப் பொண்ணு? ஏன் என் பொண்டாட்டின்னு சொல்றது இல்ல? உன் மருமகள்னு சொல்றது? அதை விட்டுட்டு என்ன பேச்சு இது?” என்று பேச்சை மாற்றினான்.
“டேய்! பேச்சை மாத்தாத! இங்க என்ன பிரச்சினை போயிட்டு இருக்கு? நீ என்ன செய்துட்டு இருக்க?” என்று அவனை அதட்டினார்.
“பா! எனக்கு என்ன உன்னை மாதிரி அறிவு இல்லேன்னு நினைச்சுட்டியா? நானே ‘உன் ஆசை பொண்ணு இந்த அடங்காப்பிடாரி என் மேல கம்ப்ளைன்ட் கொடுத்துட்டாளே’ன்னு கடுப்புல இருக்கேன். இதுல எனக்கு ரொமான்ஸ் எங்கிருந்து வரும்?” என்றான் அக்னி.
“டேய்! பொய் பேசாதடா! நீ என் மருமகளுக்கு முத்தம் கொடுத்ததை நானே பார்த்தேன்,” என்று அவர் கூற,
“யுவா, இது ரொம்ப முக்கியமா இப்போ?” என்று அவரை அதட்டிய இதழ்யா, தன் மொபைலை எடுத்து அர்ஜுனுக்கு அழைத்தார்.
அவர் போன் செய்ததும் காலை அட்டெண்ட் செய்து, “ஆன்டி,” என்றான் அர்ஜுன்.
“டேய் அர்ஜு! அவதான் புத்தி கெட்டுப்போய் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கான்னா, நீயும் அதை பெருசா எடுத்துட்டு இவனை அரெஸ்ட் பண்ண போலீசை அனுப்பியிருக்க,” என்று பொங்கிக்கொண்டு இருந்தார் இதழ்யா.
“ஆன்டி, கம்ப்ளைன்ட் வந்தபிறகு அதைத் தட்டிக்கழிக்க என்னால முடியல. அதனாலதான் நான் வராம கான்ஸ்டபிள்ஸ் ரெண்டு பேரை அனுப்பி வெச்சிருக்கேன்,” என்றான் அர்ஜுன்.
“இங்க பாரு, இன்னும் ரெண்டு நாள்ல தூரிகாவுக்கு 18 வயசு ஆகப்போகுது. நீ என்ன செய்வியோ, எது செய்வியோ எனக்குத் தெரியாது. இவனை ஸ்டேஷனுக்கு எல்லாம் என்னால அனுப்ப முடியாது,” என்றார் இதழ்யா.
“ஆன்டி, ப்ரொசீஜர்,” என்று அர்ஜுன் இழுக்க,
“என்ன ப்ரொசீஜர் டா?” என்றார்.
“அது இல்ல, கேஸ் கொடுத்தவங்க கம்ப்ளைன்ட்டை வாபஸ் வாங்காம என்னால எதுவும் செய்ய முடியாது,” என்றான்.
“அதை நான் பார்த்துக்கிறேன்,” என்றவர், “ஏய்! கேஸை வாபஸ் வாங்கிக்கிறேன்னு அர்ஜுன்கிட்டே சொல்லுடி,” என்றார்.
“ம்மா…” என்று நந்தினி சலித்துக்கொள்ள,
“சொல்லுடி,” என்று இதழ்யா அவரை அதட்டவும்,
“பாப்பா, இப்போ எதுக்கு நந்துவை அதட்டுற? அவகிட்டே பொறுமையா சொல்லு,” என்று அவர் முடிக்கும்முன் இதழ்யா ராஜனை முறைக்க,
அவர், “கப் சுப்,” என்றார்.
“என்னடி? சொல்லப்போறியா இல்லையா?” என்று மிரட்ட,
இதழ்யாவின் கையில் இருந்த போனை வெடுக்கென்று பிடுங்கியவள், “அர்ஜு, கேஸை நான் வித்ட்ரா பண்ணிக்கிறேன்,” என்றாள்.
“ஓகே நந்து, நான் ஃபார்மாலிட்டீஸ் முடிச்சிட்டு சொல்றேன். நீ நேர்ல வந்து ஒரு சைன் பண்ண வேண்டி இருக்கும்,” என்றான் அர்ஜுன்.
“ம்ம்… ஓகே,” என்று போனை இதழ்யாவிடம் நீட்ட,
“உனக்குத்தான் இங்க வேலை முடிஞ்சிருச்சில்ல? கிளம்பி ஆபீஸ் போ,” என்று அவளை அனுப்பி வைத்தார்.
நந்தினியும் அக்னியை முறைத்துவிட்டு, “இவன்கிட்டே இருந்து தப்பிக்க உனக்கு நல்ல சான்ஸ் கிடைச்சும், நீ மிஸ் பண்ணிட்ட. இனி யாரும் உன்னைக் காப்பாத்த முடியாது,” என்று தூரிகாவிடம் சொன்னவள், விருட்டென அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.
அங்கிருந்த கான்ஸ்டபிள்களுக்கு அர்ஜுன் போன் செய்து அவர்களைக் கிளம்பி வரச் சொல்ல, அவர்களும் கிளம்பி இருந்தனர்.
அவர்கள் சென்றதும் சரியாக அந்த நேரம் ஐயர் உள்ளே நுழைந்தார்.
“யுவா, வா! ஐயர் வந்துட்டார். நம்ம அடுத்து ஆக வேண்டிய வேலையைப் பார்ப்போம்,” என்று ராஜனுடன் வந்து சோபாவில் அமர, அவர்களோடு சகுந்தலா, செல்வமும் வந்து அமர்ந்தனர்.
“நீங்க பேசிட்டு இருங்க. ஆரா இன்னும் சாப்பிடல. நாங்க சாப்பிட்டு வரோம்,” என்றான் அக்னி.
“டேய்! உனக்குத்தான்டா நாள் பார்க்குது. நீங்க இல்லாம எப்படி?” என்று ராஜன் கூற,
“அம்மா பார்த்துப்பாங்க. நான் எதுக்கு?” என்றவன், “நீ வா,” என்று தூரிகாவின் கையைப் பிடித்து சாப்பிட அழைத்துச் சென்றான்.
“அக்னி, நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க. நான் ஆராவுக்கு சாப்பாடு கொடுத்துக்கிறேன்,” என்று ஆராவுக்கு சாப்பிட என்ன பிடிக்கும் என்று கேட்டு உணவை எடுத்துக்கொண்டு அவளையும் அழைத்துக்கொண்டு அஞ்சனா வெளியே செல்ல, அவளுடன் கூட தம்பிரானும் சென்றான்.
“சரி வா,” என்று தன் அருகில் இருந்த சேரில் தூரிகாவை அமரச் சொன்னவன், தட்டை இருவருக்கும் எடுத்து வைத்து உணவை எடுத்து வைத்து அவளை சாப்பிடச் சொல்ல,
“ஐயோ போதும், நிறைய வெச்சுட்டீங்க. நான் இவ்வளவு சாப்பிட மாட்டேன்,” என்றாள் தூரிகா.
“இனி சாப்பிடப் பழகிக்கோ. பாரு, பார்க்க எவ்வளவு ஒல்லியா இருக்கேன்னு? என் சைஸ்க்கு இல்லேன்னாலும் கொஞ்சம் பூசின மாதிரி இருந்தா கட்டிப்பிடிக்க நல்லா இருக்கும்,” என்றான்.
வாயில் உணவை வைக்கப்போனவள், அக்னி பேசியதைக் கேட்டு அவனை அதிர்ச்சியாகப் பார்க்க,
“என்ன பார்க்குற? கட்டிப்பிடிச்சா எலும்புதான் குத்துது. இருக்க வேண்டியது மட்டும் நல்லா வெச்சிருக்க. மத்த இடமும் அப்படியே இருந்தா நல்லா இருக்கும். சாப்பிடு,” என்றுவிட்டு அவன் பார்வை தூரிகாவின் கழுத்தைத் தாண்டி கீழே செல்ல,
அதில் கூசிப்போனது அவள் உடல். அவன் பார்வையைத் தவிர்க்க முடியாமல் திணறியவளைக் கண்டு சிரித்தவன்,
“சரி, சாப்பிடு. நான் எதுவும் சொல்லல,” என்று சாப்பிட ஆரம்பித்தான்.
தூரிகாவுக்குத்தான் சாப்பிட முடியவில்லை. ஒருவித கூச்சமும் வெட்கமும் கலந்து தவித்துக்கொண்டு இருந்தாள்.
