EPISODE 21
“அபி, இது ஆபீஸ் ரூம். நீங்க பண்றது கொஞ்சமும் சரியில்லை,” என்று நந்தினி சொன்னது காதில் விழாதவன் போல, அவளைப் பின்னாலிருந்து அணைத்துக்கொண்டே அங்கிருந்த சோபாவிற்கு வந்திருந்தான் அபிமன்யு.
“ஆபீஸ் ரூம்தான் யது, எனக்கும் அது நல்லாவே தெரியுது. ஆனா, ஐ காண்ட், யதும்மா. ஐ மிஸ் யூ சோ மச்,” என்று சோபாவில் அமர்ந்தவன், நந்தினியை அவன் மடியில் அமர வைத்துக்கொண்டான்.
“அபி, திஸ் இஸ் சோ ஃபாஸ்ட் டா. ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர்செல்ஃப். எனக்கு நீங்க பண்றதெல்லாம் பார்த்தா பயமா இருக்கு,” என்று அவன் மடியில் உட்காரக் கூச்சப்பட்டுக்கொண்டே நெளிந்தாள்.
“நோ யது. என்னால முடியாது. நான் ஃபாஸ்ட் இல்ல. நீதான் ஸ்லோ. உங்க வீட்லதான் ஸ்லோ. இந்த நேரம் நம்ம கல்யாணம் பேசி முடிச்சிருக்கணும். அவங்க இட்ஸ் பின் டூ வீக்ஸ் ஆகிருச்சு யது, நம்ம மீட் பண்ணி. பட் இன்னும் எந்த ஸ்டெப்பும் எடுக்கல,” என்றான்.
“ஏன், நாங்கதான் ஃபர்ஸ்ட் ஸ்டெப் எடுக்கணுமா? சாருக்கு நான் வேணும்னா, நீங்கதானே என் வீட்ல வந்து பேசணும்? அது எப்படி பொண்ணு வீட்ல இருந்து ஃபர்ஸ்ட் அப்ரோச் பண்ணனும்னு நினைக்கிறீங்க?” என்றாள்.
அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து அவள் வாசனையை உள்ளிழுத்துக்கொண்டவன், “நான் இப்போ கூட என் அம்மாகிட்ட சொல்லி உன் வீட்ல வந்து பேசச் சொல்லுவேன். ஆனா, நீதான் உன் சைட்ல இருந்து ரெஸ்பான்ட் பண்ண இவ்வளவு டைம் எடுத்திருக்க. நேத்து வரேன்னு சொல்லிட்டு லாஸ்ட் மினிட்ல ஏன் கேன்சல் பண்ணுனீங்க?” என்றவன், அவள் இடையில் கை கொடுத்து அப்படியே தூக்கி தனக்கருகில் சோபாவில் நந்தினியைப் போட்டு அவள்மேல் சாய்ந்தான்.
அவன் மார்பில் கை வைத்துத் தடுத்தவள், “அபி, நோ,” என்று அழுத்தமாகச் சொன்னவள், அவனைத் தன்னிடமிருந்து விலக்கி அமர வைத்தாள். பிறகு, எழுந்து அவனை விட்டுச் சற்றுத் தள்ளி அமர்ந்தபடி, “ரொம்ப பண்றடா நீ. கொஞ்ச நேரம் சும்மா இரு,” என்று வெட்கத்தோடு சொன்னவள், “சாரி அபி, நேத்து வீட்ல ஒரு ப்ராப்ளம்னு சொன்னேனே, அதான் என் வீட்ல இருக்கறவங்களால வர முடியல,” என்றாள்.
“அப்படி என்ன நான் ரொம்ப பண்ணிட்டேன்?” என்றவன், “ஏன் இவ்ளோ டிஸ்டன்ஸ்? ஐ டோன்ட் லைக் இட்,” என்றவன், நந்தினியின் கையைப் பிடித்துத் தன் பக்கம் இழுத்து அமர வைத்தான். அவளைத் தோளோடு சேர்த்து அணைத்தபடி, “அப்படி என்ன ப்ராப்ளம்? அவங்க பொண்ணோட கல்யாண விஷயமா பேசக்கூட வர முடியாத அளவுக்கு என்ன பிரச்சனை வந்துச்சு? என்கிட்ட சொல்லணும்னு நினைச்சா சொல்லலாம். உனக்கு ஒரு சொல்யூஷன் என்னால கிடைக்கலாம்,” என்றான்.
அவன் அணைப்பு இதமாக இருக்க, அதைத் தவிர்க்க எண்ணாமல் அமர்ந்திருந்தவள், “அந்தப் பிரச்சினைக்கு நோ சொல்யூஷன்,” என்றவள், பெருமூச்சுவிட்டபடி, “எனக்கு ஒரு கூடப் பிறந்தவன் இருக்கான்னு சொன்னேனே, ஞாபகம் இருக்கா?” என்றாள்.
“ம்ம்ம்… யெஸ். உனக்கும் அவருக்கும் கூட இடையில் நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இல்லைனு சொன்னியே,” என்றான்.
“ம்ம்ம்… யெஸ். அவன் நேத்து ஒரு பொண்ணைத் திடீர்னு கல்யாணம் செய்துட்டு வந்து நின்னுட்டான். அதுவும் என் வீட்ல எல்லாரும் நம்ம கல்யாண விஷயமா பேசக் கிளம்பின நேரத்துக்கு வந்துட்டான்,” என்றாள்.
“வாட்? கல்யாணம் பண்ணிட்டாங்களா? என்ன சொல்ற யது? உன் பிரதர் இவ்ளோ ஃபாஸ்ட்டா? நான் தான் வேஸ்ட் போல. அவர் நினைச்ச பொண்ணைக் கூப்பிட்டுப் போய் கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டாரு. ஆனா, என்னைப் பாரு, உன்னை சும்மா இப்படி வெச்சு பேசிட்டு இருக்கேன்,” என்றான்.
அவன் பேச்சில் இருந்த அர்த்தம் புரிந்தாலும், அதைக் காட்டிக்கொள்ளாமல், “சும்மா இரு அபி,” என்று சிரித்தவள், “அவன் கல்யாணம் பண்ணிட்டு வந்த பொண்ணு மைனர்,” என்றாள்.
“வாட்? மைனர் பொண்ணை கல்யாணம் செய்துகிட்டாரா? அப்போ உன் பிரதருக்கு எவ்வளவு வயசு ஆச்சு?” என்றான்.
“அவனுக்கு என்ன, ஒரு 25, 26 இருக்கும்,” என்றாள்.
“ஓ மை காட்! அப்போ ரொம்ப வயசு வித்தியாசம் இருக்கும் போல,” என்றான்.
“ம்ம்ம்… எப்படியும் 10 இயர்ஸ் ஏஜ் கேப் இருக்கும்,” என்றாள்.
“ஓ காட்! எப்படி யது?” என்றான்.
“ம்ப்ச்… அபி, இப்போ எதுக்கு அவனைப் பத்தி பேசிட்டு? விடுங்க அதெல்லாம். அவன் பாடு. நம்ம வீணா டென்ஷன் ஆக வேணாம்,” என்றாள்.
“யூ ஆர் ரைட் பேபி. நமக்குப் பேசவே நேரம் இல்ல,” என்றவன், “சோ, நாம இப்போ என்ன பண்ணலாம்?” என்று அவள் முகத்தைத் தன் பக்கம் திருப்பி அவள் இதழைப் பார்த்தபடி கேட்டான்.
“ம்ம்ம்… இப்போ நம்ம பிசினஸ் பத்தி பேச வந்திருக்கோம்,” என்று தன் முகத்தைத் திருப்பப் போனவளைப் பிடித்துத் தன் பக்கம் திருப்பியவன், “நோ பேபி,” என்றவன், “ஐ வாண்ட் திஸ்,” என்று அவள் இதழைத் தன் பார்வையால் சுட்டிக்காட்டினான்.
அதில் அதிர்ந்தவள், “நோ அபி,” என்று விழிவிரித்தவளை, “ப்ளீஸ்,” என்று பார்வையால் கெஞ்சியவன், அவள் மறுப்பு எதுவும் சொல்லாமல் இருக்க, அதையே சம்மதமாக்கி மெல்ல யதுவின் இதழை நெருங்கினான்.
நந்தினியும் இருவரின் முதல் முத்தத்திற்குத் தயாரானவள் கண்களை மூடிக்கொள்ள,
அபிமன்யுவும் அவள் இதழை நெருங்கியவன், தன் இதழ்களை ஈரம் செய்து நந்தினிக்கு முத்தம் வைக்கப் போக,
“மே ஐ கம் இன் சார்?” என்று அவன் அறை வாசலில் இருந்து குரல் வரவும், முதலில் அதை உணர்ந்த நந்தினி அவசரமாகத் தன்னை விட்டு அபிமன்யுவைப் பிரித்துவிட்டவள், எழுந்து அவனுக்கு எதிரே இருந்த சோபாவில் போய் அமர்ந்துகொண்டாள்.
“ஹே, வாட் இஸ் திஸ் டா?” என்று அபி ஏங்கித்தவிக்க,
“யாரோ வந்திருக்காங்க அபி,” என்று அவன் கவனத்தைத் திசை திருப்பினாள்.
தலையை அழுந்தக் கோதி, “எனக்கு வேணும், ஆனா சீக்கிரமே,” என்றவன், நேராக அமர்ந்துகொண்டு, “கம் இன்,” என்று குரல் கொடுக்க,
அறைக்கதவைத் திறந்துகொண்டு அவன் பி.ஏ. கத்தீஜா வர, அவள் பின்னால் அபிமன்யுவின் அம்மா லட்சுமி வந்தார்.
அவரைப் பார்த்ததும் எழுந்த அபிமன்யு, “அம்மா வாங்க, என்ன திடீர்னு?” என்றான்.
“ஏண்டா, என் புள்ளையைப் பார்க்க நான் வரக்கூடாதா?” என்று கேட்டுக்கொண்டே வந்தவர், அவன் எதிரில் நின்று இருந்த நந்தினியை அப்போதுதான் பார்த்தார்.
“அபி, நீ சொன்ன யது இவ தானா?” என்றார் பார்த்ததுமே.
“அம்மா, எப்படி?” என்று சிரித்தவன், “யது, திஸ் இஸ் லட்சுமி, சி.இ.ஓ. ஆஃப் மை கம்பெனி,” என்று அவரை அறிமுகம் செய்து வைத்தான்.
“டேய்! எனக்கு இதெல்லாம் என்னடா தெரியும்? என் பேரை நீ வெச்சுட்டு, என்னை இதுல இழுத்து விடாத,” என்றவர், “என் மருமககிட்டே என்னை உன் அத்தைனு அறிமுகம் பண்ணி வைடா. அதை விட்டுட்டு இப்படியா சொல்வ?” என்றார்.
அவர்கள் பேசிக்கொள்வதைப் பார்த்து ஆச்சர்யமானவள், சிரித்தபடி லட்சுமியைப் பார்த்து, “நீங்களும் உங்க மகன் மாதிரி ரொம்ப ஃபாஸ்ட்டா இருக்கீங்க,” என்றாள்.
“ஏன்மா?” என்றார் லட்சுமி.
“இல்ல ஆன்டி…” என்றவளை, “அத்தைன்னு வாய் நிறையக் கூப்பிடுமா,” என்றார்.
“சரிங்க அத்தை,” என்றவள், “என்னை பார்த்ததுல இருந்து ‘எப்போ கல்யாணம்? எப்போ கல்யாணம்?’னு என்னை படுத்தி எடுக்குறார். நீங்க அதைவிட ஒரு படி மேல போய் என்னை மருமகள்ன்னே கூப்பிட்டுட்டீங்க,” என்றாள்.
“அது என்னவோ, நானும் இவனும் இப்படித்தான்மா. மாத்திக்க முடியல,” என்றவர், “சரி, நீங்க பேசிட்டு இருங்க. நான் கிளம்பறேன்,” என்றவர், “சீக்கிரமே உன் வீட்டுக்கு நாங்க பொண்ணு கேட்க வரோம்,” என்றுவிட்டு அங்கிருந்து கிளம்பி இருந்தார்.
அபிமன்யுவின் அறைக்கதவு சாற்றும் வரை அவருக்கு டாட்டா காட்டிக்கொண்டு நின்றிருந்தவன், கதவு சாற்றி முடிந்ததும் தான் தாமதம். அடுத்த நொடி, தன் அருகில் நின்றிருந்த நந்தினியை இழுத்து அவள் இதழில் தன் இதழைப் பொருத்தியிருந்தான்.
அவனின் இந்த வேகம் அவளுக்கு அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் அளித்தாலும், அபிமன்யுவைத் தடுக்க எண்ணம் வரவில்லை. அவன் முத்தத்தைக் கண்மூடி ஏற்றுக்கொண்டாள்.
ஐயர் குறித்துக் கொடுத்த நாள் சரியாகத் தூரிகாவின் பிறந்த தினத்தன்றே வந்திருந்தது. அன்றே சொந்தங்களை அழைத்து இவர்கள் தாலி பிரித்துக் கோர்க்கும் விழாவை நடத்திட இதழ்யாவும் ராஜனும் முடிவெடுத்திருந்தனர்.
“அக்னி, நீ தூரிகாவை அழைச்சிட்டுப் போய் அவளுக்கும் ஆராவுக்கும் வேணும்ங்குற துணியை எடுத்து கொடு. இங்க வந்ததுல இருந்து அஞ்சனா டிரஸ்ஸையே போட்டுட்டு இருக்கா இவ,” என்றார் இதழ்யா.
“சரிம்மா. இன்னைக்கு மார்க்கெட்ல ஒரு வசூல் இருக்கு. இவங்களைக் கூப்பிட்டு அந்த வேலையை முடிச்சிட்டு அப்படியே கடைக்குப் போறேன்,” என்றான் அக்னி.
“ஐ! மச்சான், ஷாப்பிங்கா? அப்போ நானும் அஞ்சனாவும் கூட வரோம்,” என்றான் தர்மன்.
‘நானே இவ கூட தனியா பேச நேரம் கிடைக்க மாட்டேன்னு இருக்கேன். இதுல இவன் என்கூட வந்தா என்ன ஆகுறது? இவனை எப்படி கழட்டி விடுறது?’ என்று அக்னி யோசித்துக்கொண்டு இருக்க,
“டேய்! இன்னைக்கு சாயங்காலம் என்னோட ஃபிரெண்ட் வீட்ல பர்த்டே பார்ட்டி இருக்கு. அதுக்கு நாம போகணும்னு சொன்னேனா இல்லையா?” என்றார் செல்வம்.
“ஐயோ, ஆமா இல்ல. அதை நான் மறந்தே போய்ட்டேன்பா,” என்றவன், “மச்சான், நான் வரல,” என்றான்.
‘சந்தோஷம்’ என்று நினைத்தவன், “அஞ்சனா, அப்போ நீ…?” என்றான் அக்னி.
“இல்ல, அவ வேணாம் அக்னி,” என்றார் சகுந்தலா.
“என்ன அத்தை? அவ வந்தா என்ன? ஏன் வேண்டாம்னு சொல்றீங்க?” என்றான் அக்னி.
“இல்ல, வேணாம் அக்னி. சொன்னா புரிஞ்சுக்க,” என்றவர், “ஏய், நீ எங்கேயும் போக வேணாம். உள்ளே போ,” என்று அஞ்சனாவை அதட்ட, அவளும் வேறு வழியில்லாமல் உள்ளே சென்றுவிட்டாள்.
அவர் அப்படிப் பேசியதைப் பார்த்ததும், “என்ன ஆச்சு அண்ணி? நானும் ரெண்டு மூணு நாளா கவனிச்சிட்டுதான் இருக்கேன். உங்க முகமே சரியில்லை. என்னவோபோல இருக்கீங்க. என்ன ஆச்சு?” என்றார் இதழ்யா.
“அதெல்லாம் ஒன்னும் இல்ல இதழ். நீங்க வெளிய கிளம்பணும்னு சொன்னீங்களே, போங்க,” என்றவர் தன் அறைக்குச் சென்றுவிட,
000000000000000செல்வமும் ஏதோ சரி இல்லை என்பதை உணர்ந்தவர், “மாப்பிள்ளை, நீங்க கிளம்புங்க. சாயங்காலம் தம்பியை மட்டும் அனுப்பி விடுங்க. நான் அஞ்சனாவை அனுப்பி வைக்கிறேன்,” என்றார்.
“சரி மாமா, நான் போயிட்டு அவனை அனுப்பறேன். அஞ்சனாவை கொஞ்ச நேரத்துல ரெடியா இருக்கச் சொல்லுங்க,” என்று தன்னோடு தூரிகாவையும் ஆராவையும் அழைத்துச் சென்றான் அக்னி.
சிறிது நேரத்தில் தம்பிரான் வந்துவிட, அவனை முறைத்துக்கொண்டே காரின் பின் சீட்டில் ஏறி அமர்ந்தாள் அஞ்சனா. அவள் அமர்ந்ததும் காரைக் கிளப்பிய தம்பி, அவர்கள் வீட்டை விட்டுச் சிறிது தூரம் சென்றிருப்பார்கள். காரை ஓரமாக நிறுத்தி, பின்னால் அமர்ந்திருந்த அஞ்சனாவைப் பார்த்து, “ஏண்டி, என்கிட்ட எல்லாம் வந்து உட்கார மாட்டியா? பெரிய இவளாட்டம் பின்னாடி போய் உட்கார்ந்திருக்க?” என்றான் எடுத்த எடுப்பிலேயே.
“டேய், வாடி போடின்ன வாயைக் கிழிச்சிருவேன். நான் உன்னைவிட 5 வயசு மூத்தவடா. அதை ஞாபகத்துல வெச்சுக்கோ. பார்த்துப் பேசு, சரியா?” என்று அவனிடம் எரிந்து விழுந்தாள்.
“நீ என்னைவிட 5 இல்ல 50 வயசு பெரியவளா இருந்தாலும் நான் உன்னை அப்படிதான்டி கூப்பிடுவேன். ஏன்னா, நான் உன்னை அவ்வளவு லவ் பண்றேன்டி,” என்றான் சிறிதும் பயமில்லாமல்.
EPISODE 22
“டேய் விடுடா என்னை விடுடா ராஸ்கல்! என் தம்பி வயசு இருந்துட்டு எனக்கு முத்தம் கொடுக்குற? உனக்கு அறிவில்ல? விடுடா என்னை,” என்று காருக்குள் தம்பியுடன் சண்டையிட்டுக்கொண்டு இருந்தாள் அஞ்சனா.
“ஏய் ஏய் நிறுத்து! இப்போ எதுக்கு இவ்ளோ குதிக்குற? நான் என்ன உனக்கு லிப்லயா கிஸ் கொடுத்தேன்? இல்லையே? என்னை அடிக்க நீட்டுன கையைப் பிடிச்சு உன் கைக்குத்தானேடி கொடுத்தேன்,” என்றான் தம்பி.
“ச்சி! விடுடா நாயே! இதுக்குத்தான் நான் உன்கூட வரமாட்டேன்னு அவ்ளோ சொன்னேன். எங்கப்பனுக்கு அறிவே இல்ல. உனக்கு நல்லவன்னு சர்டிஃபிகேட் கொடுத்து என்னை அனுப்பி வெச்சுட்டார் உன்கூட,” என்று ஆத்திரத்துடன் பேசினாள்.
“என் மாமா நல்ல வேலைதான்டி பண்ணிருக்கார். நம்ம ரெண்டு பேரும் தனியா இருந்தாத்தானே ஒருத்தரை ஒருத்தர் பேசிப் புரிஞ்சுக்க முடியும்? அவர் சரியாத்தான் செஞ்சிருக்கார்,” என்றவன், “இப்போ நீ வந்து முன்னாடி உட்காரப்போறியா? இல்லையா?” என்றான்.
“முடியாதுடா! என்ன பண்ணுவ?” என்றாள் கைகளைக் கட்டிக்கொண்டு.
“அப்போ நான் பின்னாடி வரேன்,” என்றவன் தான் இருந்த இருக்கையின் சீட் பெல்ட்டைக் கழற்றியவன், அப்படியே காருக்குள் பின்னால் தாவினான்.
“டேய் லூசு!” என்று அஞ்சனா பதறி விலகியவள், காரின் கதவைத் திறந்துகொண்டு வெளியே அவசரமாக இறங்க,
“ஏய்! எங்கடி இறங்கிட்ட? உனக்காக நான் பின்னாடி வந்தேனே,” என்று பின்னால் இறங்கினான்.
“இங்க பாரு, இப்படி எல்லாம் ஏதாவது பண்ணி என்னை டென்ஷன் பண்ணிட்டே இருந்தா, நான் இப்படியே வீட்டுக்குக் கிளம்பிடுவேன். பார்த்துக்கோ,” என்றாள்.
“சரி சரி, நான் எதுவும் பண்ணல. கம்முன்னு வரேன். நீ முன்னாடி மட்டும் வந்து உட்காரு போதும். கார் ஓட்டும்போது என்னால திரும்பித் திரும்பிப் பார்த்து வண்டி ஓட்ட முடியலடி. நீ கிட்ட இருந்தா அப்போ அப்போ உன்னைப் பார்த்துப்பனே,” என்றான்.
“என்னை ஏன்டா நீ பார்க்கணும்? நான் எங்கேயும் வரல. நீ கிளம்பு, நான் வீட்டுக்கு போறேன்,” என்று அஞ்சனா திரும்பி வீட்டிற்கு நடக்க,
“ஏய் ஏய் அஞ்சுகுட்டி! நில்லுடி செல்லம்,” என்று அவள் கையைப் பிடித்தவன், “நான் எதுவும் சொல்லமாட்டேன். நீ வா ப்ளீஸ் டி,” என்று ரோடு என்று கூடப் பார்க்காமல் அவளிடம் கெஞ்சினான்.
“டேய்! கையை விடுடா ராஸ்கல்!” என்று அவன் கையை உதறியவள், “இப்படித் தொட்டுப் பேசினா அவ்ளோதான்,” என்று அவனை எச்சரிக்கை செய்தாள்.
“சரி சரி, தொடல,” என்றவன், ‘என்னைக்கு இருந்தாலும் நான் தொடத்தான்டி நீ,’ என்று நினைத்துக்கொண்டவன், “ப்ளீஸ் அஞ்சு, உள்ள வந்து உட்காரு. அக்னி வேற அங்க வெயிட் பண்ணிட்டு இருப்பான்,” என்று மீண்டும் கெஞ்சினான்.
அவனை அப்படிப் பார்க்கப் பாவமாக அவளுக்குத் தோன்ற, “ஒழுங்கா வண்டி ஓடணும், நான் இருக்க பக்கமே திரும்பக் கூடாது, அப்படின்னாத்தான் நான் உன்கூட வருவேன்,” என்று கண்டிஷன் போட்டாள்.
இப்போதைக்கு அவள் காரில் ஏறினாள் போதும் என்று நினைத்தவன், “சரி, டீல். நீ இருக்கப் பக்கமே நான் திரும்ப மாட்டேன், ஓகேவா?” என்றவன் ஓடிச் சென்று காரை எடுத்துக்கொண்டு அவள் இருந்த இடத்திற்கு வந்தவன், அவன் சீட் அருகில் இருந்த கதவைத் திறந்துவிட,
அவனை முறைத்துக்கொண்டு காரில் ஏறி அமர்ந்தாள் அஞ்சனா.
கொஞ்ச நேரத்துக்கு வாலைச் சுருட்டி வைத்துவிட்டு காரைக் கிளப்பினான் தம்பிரான்.
“அடடே! வாடா செல்வம், என்ன இவ்ளோ லேட்டாவா ஃபங்ஷனுக்கு வரது?” என்று செல்வத்தின் கை பிடித்து அழைத்துச் சென்றார் எம்.எல்.ஏ. விருத்தாச்சலம்.
“அதான் பார்ட்டி ஆரம்பிக்குறதுக்குள்ள வந்துட்டேனே, விருது. அப்புறம் என்ன? வா,” என்றவர், “இவன்தான் என் புள்ள தர்மன்,” என்று அறிமுகம் செய்து வைத்தார்.
“வாங்க தம்பி, இன்னைக்குத்தான் நான் உங்களைப் பார்க்கிறேன். நல்லா இருக்கீங்களா?” என்றார்.
“நல்லா இருக்கேன் அங்கிள்,” என்றவன் அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் சுற்றிலும் பார்த்தான்.
“தம்பி, இது நம்ம வீடு. உங்களுக்கு என்ன வேணுமோ எடுத்துச் சாப்பிடுங்க. அப்படியே சுத்திப் பார்த்துட்டு வாங்க,” என்றவர், “டேய் செல்வா, நீ வா. நாம அங்க போகலாம்,” என்று அவருக்கு சைகை காட்டினார்.
அதை தர்மனும் புரிந்துகொள்ள, அவர்களைத் தனியே விட்டுவிட்டுச் சுற்றிப் பார்த்தபடி நடந்து சென்றவன், தூரத்தில் காக்கி உடையில் பந்தோபஸ்துக்கு நின்று இருந்தவரைப் பார்த்துவிட்டு, “அட,” என்று நேராக உள்ளே சென்றான்.
அங்கே தேமேவென்று நின்று இருந்த ப்ரியாவின் பின்னால் சத்தமில்லாமல் வந்தவன், “பே…” என்று திடீரென சத்தமிடவும், “ஐயோ அம்மா!” என்று அவள் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு திரும்பியவள், அங்கே தர்மனைப் பார்த்ததும், “நீயா?” என்று புருவம் சுருக்கினாள்.
“அதென்ன ‘நீங்களா’ன்னு அப்படி பார்க்குற? நான் எல்லாம் இங்க வரக்கூடாதா?” என்றான்.
“நான் அப்படி ஏதும் கேட்கலையே. உங்களை இங்க எதிர்பார்க்கல,” என்றவள், அங்கு வந்த சில அரசியல் பிரமுகர்களைப் பார்த்ததும், சல்யூட் அடித்தாள்.
“இப்படி வரவங்க போறவங்களுக்கு சல்யூட் அடிச்சிட்டே எவ்ளோ நேரம் தான் நின்னுட்டு இருப்ப? வா, நான் தனியாத்தான் சாப்பிடணும். எனக்கு வந்து கம்பெனி கொடு,” என்றான்.
“உனக்கு நான் எதுக்கு கம்பெனி கொடுக்கணும்? பசிச்சா நீ போய் சாப்பிடு. டியூட்டியில இருக்க என்னை ஏன் தொந்தரவு செய்ற?” என்றாள் ப்ரியா.
“ஆமா, பொல்லாத டியூட்டி. நீ என்ன திருடங்களை விரட்டியா பிடிச்சிட்டு இருக்க? சும்மா வெட்டியாத்தானே நின்னுட்டு இருக்க? பேசாம வா. ரொம்பப் பண்ணாத,” என்றவன், அவள் கையைப் பிடித்து இழுத்துச் செல்ல,
“ஏய்! என் கையை விடு. நான் வரேன். யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க?” என்று அவன் கையை உதறினாள்.
“என்ன நினைப்பாங்க? கான்ஸ்டபிளை ஒரு ஹேன்ட்சமான ஆள் தள்ளிட்டுப் போறாங்கன்னு நினைப்பாங்களா?” என்றான்.
அதை கேட்டதும் அவனை அதிர்ந்து அவள் பார்க்க,
“என்ன லுக்? சோறு திங்கத்தான் கூப்பிடறேன். வா. என்னவோ உன்னைக் கடத்திட்டுப் போற மாதிரி இப்படிப் பார்க்கிற,” என்றவன் முன்னே நடக்க, அவன் பின்னால் ப்ரியாவும் சாப்பிடச் சென்றாள்.
அவளுக்கோ தயக்கம். வேலை நேரத்தில் இப்படி வந்து சாப்பிடுவதை உயர் அதிகாரிகள் யாரேனும் பார்த்துவிட்டால் தன் வேலை அவ்வளவுதான் என்று பயந்து பயந்து தர்மன் பின்னால் ஒளிந்து நின்று சாப்பிட்டாள்.
“அட, என்ன நீ? இப்படியா பயப்படுவ? உன்னை யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க. நீ சாப்பிடு,” என்றான்.
“இல்ல, என்னோட சீனியர்ஸ் யாராவது பார்த்துட்டா, அவ்ளோதான்,” என்று ப்ரியா பயப்பட,
“அதெல்லாம் அதும் ஆகாது. நீ இப்படி வந்து உட்கார்ந்து சாப்பிடு,” என்று தன் பின்னால் இருந்தவள் கையைப் பிடித்துத் தன் பக்கம் இழுத்தான்.
அவன் இழுத்த வேகத்தில் கால் இடறி அவன் மடியிலேயே வந்து அமர்ந்துவிட்டாள் ப்ரியா. அவ்வளவுதான். இருவரின் பார்வையும் ஒருவரை ஒருவர் விலக்கவிடாமல் கொக்கி போலப் பிடித்துக்கொண்டது.
இருவரும் அப்படியே அமர்ந்திருக்க, அங்கே சாப்பிட வந்த சிலர், “காலம் எப்படி கேட்டுக்கெடக்குதுன்னு பார்த்தீங்களா?” என்று பேசிக்கொள்ள, அது அங்கே அந்த அர்ஜுன் காதில் விழுந்துவிட்டது.
அவர்களைத் தாண்டி தர்மனையும் ப்ரியாவையும் பார்த்தவன், ‘இவன் இங்க என்ன பண்ணிட்டு இருக்கான்? இவன் கூட ப்ரியா எப்படி?’ என்று அங்கு வந்தவன்,
“ம்ஹும்,” என்று தொண்டையைச் செருமினான்.
இருவரும் அவன் குரல் கேட்டுத் திரும்புவதாக இல்லை.
“ப்ரியா! டியூட்டி பார்க்காம இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்று அவன் குரல் அதட்டலாக விழ,
அதில் தெளிந்தவள், தான் தர்மனின் மடியில் அமர்ந்து இருப்பதைப் பார்த்துவிட்டு வேகமாக அவன் மடியில் இருந்து இறங்கியவள், தடுமாறிக்கொண்டே நின்றாள்.
அவளுக்கு எதிரே நின்று இருந்த அர்ஜுனைப் பார்த்தவள் பேந்தப் பேந்த விழிக்க, “என்ன ப்ரியா இது? இவன் கூட நீங்க எப்படி? டியூட்டி பார்க்கலையா?” என்றான்.
“சார், சாரி. அது வந்து இவன் தான்…” என்று ப்ரியா தர்மனைக் கைகாட்டி நடந்ததைக் கூற வர,
“அர்ஜு அண்ணா வாங்க. நல்ல வேலை நீங்க வந்தீங்க. நான் அப்பாகூட இந்தப் பார்ட்டிக்கு வந்தேன். அப்பா அவர் ஃப்ரெண்டுகிட்டே பேசிட்டு இருந்தார். நான் அப்படியே சும்மா இங்க சுத்திப் பார்க்கலாம்னு வந்தேன். அப்போ இந்தப் பொண்ணு இருக்கே… அது பேரு…” என்று யோசித்தவன், அவள் சட்டையில் இருந்த நேம் பேட்ஜை பார்த்து, “அஹ்… ப்ரியா, என்னைப் பார்த்ததும் எனக்கு ரொம்பப் பசிக்குது, எனக்கு இந்த வேலை பார்க்கவே பிடிக்கல. தேவையில்லாம என்னைக் கொண்டு வந்து இங்க டியூட்டி போட்டுட்டாங்கன்னு சொல்லி, இவளுக்குப் பசிக்குதுன்னு என் கையைப் பிடிச்சு இங்க இழுத்துட்டு வந்துட்டா. நான் வரலேன்னு சொன்னதுக்கு விடாம என்னை இங்க இழுத்துட்டு வந்து உட்கார வெச்சு என் மடிமேல் ஏறி உட்கார்ந்துட்டு அழிச்சாட்டியம் பண்ணிட்டு இருக்கா. எல்லாரும் பார்க்குறாங்கன்னு சொன்னா, ‘யார் பார்த்தா எனக்கு என்ன’னு என்கிட்டேயே திமிரா பேசுறா,” என்று அப்பட்டமாகப் பொய் பேசினான்.
அதைக் கேட்டவளுக்குத் தலையே சுற்றிவிடும்போல இருந்தது. “சார், நான் அப்படி எல்லாம் பண்ணல. இவன் தான்…” என்று அவள் அழுத விழிகளோடு தர்மனைப் பார்க்க,
“ஐயோ அண்ணா! இவ பொய் சொல்றா. நம்பாதீங்க,” என்று மீண்டும் அவளை அர்ஜுனிடம் மாட்டிவிட்டான்.
“ப்ரியா, நீங்க போய் டியூட்டி பாருங்க. இனிமே இவன் கூட உங்களை சேர்த்துப் பார்த்தேன், அவ்ளோதான்,” என்று மேற்கொண்டு எதுவும் பேசாமல் அவளை அங்கிருந்து போகச் சொன்னான்.
ப்ரியாவும், “சாரி அண்ட் தேங்க் யூ சார்,” என்று கையில் இருந்த தட்டை வைத்துவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டாள்.
“ஐயோ! என்ன இது? நான் சொன்னதைப் பத்தி அவகிட்ட ஒரு வார்த்தை கூடக் கேட்காம அவளை விட்டுட்டீங்க. இது சரியில்ல,” என்றான் தர்மன்.
“டேய் தர்மா! உன்னோட விளையாட்டுத்தனத்தை எல்லாம் வீட்டுக்குள்ளேயே மூட்டைகட்டி வெச்சிட்டு வந்திரு. ப்ரியாகிட்ட தேவையில்லாம வம்பு வளர்க்க நினைக்காத. அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன்,” என்றான்.
“அர்ஜு அண்ணா, அவதான்…” என்று மீண்டும் தர்மன் பேச வர,
“எனக்கு ப்ரியாவைப் பத்தி நல்லாவே தெரியும். தேவையில்லாம அவளைச் சீண்டுற வேலையை வெச்சுக்காத. ஜாக்கிரதை,” என்று தர்மனை எச்சரித்துவிட்டு அங்கிருந்து கிளம்பி இருந்தான் அர்ஜுன்.
‘ம்ஹும், அவள் மேல அர்ஜு அண்ணாவுக்கு அப்படி என்ன அக்கறை வந்துச்சு? இது சரியில்லையே,’ என்று யோசித்தவன் சாப்பிட ஆரம்பித்தான்.
EPISODE 23
“இங்க பாரு, இந்த சைஸ் உனக்கு சரியா இருக்குமா?” என்று ஒரு கையில் மேல் உள்ளாடையும், மற்றொரு கையில் கீழ் உள்ளாடையும் பிடித்துக்கொண்டு நின்றிருந்தான் அக்னி.
ஆராவுக்கு உடைகளை பார்த்துக்கொண்டிருந்த தூரிகா அவனைப் பார்த்து அதிர்ந்து போனாள். அங்கே இருந்த சேல்ஸ் கேர்ள்கள் அவனைப் பார்த்து சிரித்துக்கொண்டே வெட்கத்தில் வேறு பக்கம் திரும்பிக்கொள்ள, “ஐயோ, என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்று அவன் கையிலிருந்த உள்ளாடைகளைப் பிடுங்க வந்தாள்.
“ஹேய், இப்போ என்ன பிரச்சனை? நான் தானே இதெல்லாம் உனக்குப் பார்த்து வாங்கி கொடுக்கணும்,” என்று கைகளை பின்னால் இழுத்துக்கொண்டான்.
“கடவுளே, அதை முதல்ல என்கிட்ட கொடுங்க,” என்று ஆராவை கீழே இறக்கிவிட்டு அக்னியிடம் சென்றாள்.
“ம்ஹும்… எதுக்கு கொடுக்கணும்? இது உன்னோட சைஸ் வருமான்னு மட்டும் சொல்லு. நான் பார்த்து எல்லாமே உனக்கு செலக்ட் பண்ணி வாங்கி கொடுக்கிறேன்,” என்றான்.
“என்னது, நீங்க செலக்ட் பண்ண போறீங்களா? இதெல்லாம் பொண்ணுங்க விஷயம். எனக்கு வேணும்னா நானே வாங்கிக்கிறேன். ப்ளீஸ், இதை கொடுங்க,” என்று அவன் கையிலிருந்து பிடுங்கப் போனாள்.
“ம்ஹும்… நீ சைஸ் என்னன்னு சொல்ல மாட்ட. நானே உனக்கு எது சரியா இருக்கும்னு பார்த்து வாங்கிக்கிறேன்,” என்றவன் அவளை மேலும் கீழும் பார்வையாலேயே அளந்தான்.
அதைக்கண்டு தூரிகாவின் உடல் கூசிவிட, வேகமாகத் திரும்பிக்கொண்டவள், “ப்ளீஸ், இப்படி எல்லாம் செய்யாதீங்க. எனக்கு ஒரு மாதிரி இருக்கு,” என்று கெஞ்சினாள்.
அவள் பேசுவதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் திரும்பி நின்றவளை அளந்தவன், “இவ்ளோ குட்டியா இடுப்பை வெச்சுட்டு எப்படி நீ ஆராவை தூக்கி வெச்சுக்கிற?” என்றவன், இடைக்குக் கீழே பின்புறத்தைப் பார்த்துவிட்டு, “சின்ன டிக்கி டி உன்னோடது,” என்றானே பார்க்கலாம்.
அவ்வளவுதான், தூரிகா சட்டென அவனைத் திரும்பிப் பார்த்தாள். குனிந்து தன் இடையையும் பார்த்தவளுக்கு என்னவோ போல ஆகிவிட்டது. எங்காவது ஒளிந்துகொள்ள வேண்டும் போல ஆகிவிட்டது அவளுக்கு. “எனக்கு ட்ரெஸ்ஸும் வேணாம், ஒண்ணும் வேணாம், நான் போறேன்,” என்று ஆராவை தூக்கிக்கொண்டு வேகமாக கடையைவிட்டு வெளியே சென்றாள்.
கையில் இருந்த ப்ராவையும், பேண்டீஸையும் டேபிளில் போட்டுவிட்டு, “ஏய், நில்லுடி! எதுவுமே எடுக்காம போற. ஏய், நில்லுடி!” என்று அவள் பின்னால் ஓடினான் அக்னி.
தூரிகாவோ திரும்பியும் பார்க்காமல் வேகமாக நடந்து செல்ல, “இவளை!” என்று நின்றவன், “ஏய், சின்ன டிக்கி! இப்போ நீ நிக்க போறியா இல்லையா?” என்று கத்தினான்.
அவ்வளவுதான், அடுத்த நொடி திரும்பி அவனிடம் ஓடி வந்தவள், “என்ன வேணும் உங்களுக்கு? எதுக்கு இப்படி கத்திக் கூப்பிட்டு என் மானத்தை வாங்குறீங்க?” என்று அவனிடம் கோபமாகக் கேட்டாள்.
“நான் கூப்பிட்டதும் நின்னிருந்தா, நான் ஏன்டி கத்தப் போறேன்?” என்றான்.
அவனை முறைத்தவள், “எனக்கு எதுவும் வேணாம். நான் வீட்டுக்கு போகணும். இப்போ நீங்க வர்றீங்களா, இல்லை நானே போகட்டுமா?” என்று அவனை மிரட்டும் தோரணையில் கேட்டாள்.
“ஏய், சின்ன டிக்கி! உனக்கு அவ்ளோ தைரியம் வந்திருச்சா? என்னையே மிரட்ட பார்க்குற? நான் யாருன்னு தெரியும் இல்ல?” என்று தன் பேண்ட் பாக்கெட்டை தடவிக்கொண்டே அவளைப் பார்த்தான்.
“நீங்க ரௌடி தான்னு அடிக்கடி சொல்லிக்காட்டணும்னு அவசியம் இல்லை. எல்லாத்துக்கும் நான் பயந்துகிட்டு இருக்க மாட்டேன்,” என்றாள்.
“ஓஹோ… உனக்கு அவ்ளோ தைரியம் வந்திருச்சா? அப்போ ஓகே, நீ வா. வந்து உனக்கு என்ன சைஸ் வேணும்னு பார்த்து எடு,” என்று அவள் கையைப் பிடித்து இழுத்தான்.
“எனக்குத்தான் எதும் வேணாம்னு சொன்னேன்ல?” என்றாள்.
“எதும் வாங்காம போனா அம்மா என்னை திட்டுவாங்கடி. நீ வா, வந்து உனக்கு என்ன வேணுமோ அதை வாங்கிக்க,” என்றான்.
“உங்களை வெச்சுட்டு நான் இனி எதுவும் வாங்குறதா இல்லை. நீங்க கடைக்குள்ள வரலைன்னா, நான் எனக்கு வேணும்ங்குறதை எடுத்துக்கிறேன்,” என்றாள்.
“ஏன்? நான் தான் உனக்கு செலக்ட் பண்றேன்னு சொல்றேனே. உனக்கு மட்டுமா, நம்ம ஆரா குட்டிக்கும் தான் செலக்ட் பண்ணனும்,” என்றான்.
“ஆராவுக்கு தானே? அவளுக்கு நீங்களே வாங்கிக் கொடுங்க,” என்று ஆராவை அவன் கையில் கொடுத்தவள், “எனக்கு நானே வாங்கிக்கிறேன்,” என்று அவனைத் தாண்டி கடைக்குள் சென்றாள்.
அவள் நடந்து செல்கையில், பின்புறம் இடை ஆடுவதைக் கண்டு, அவள் நடைக்கேற்ப ஆடிக்கொண்டே அவள் பின்னால் அக்னி செல்ல, அவன் செயலைக் கவனித்த தூரிகா வேகமாகத் தன் முந்தானையை இழுத்து இடையை மறைத்துச் சுற்றிக்கொண்டவள், “கொஞ்சம் கூட இங்கிதமே இல்ல இவர்கிட்ட,” என்று முணுமுணுத்துக்கொண்டே கடைக்குள் சென்றாள்.
“ஆரா குட்டி!” என்று தூரிகாவை ஏக்கமாகப் பார்த்துக்கொண்டே அழைத்தான்.
அவன் கையிலிருந்த ஆரா, அக்னியின் போனை அவன் பாக்கெட்டிலிருந்து எடுத்து நோண்டிக்கொண்டே அவன் அழைத்ததும் பார்த்தாள்.
“உன் அம்மாவுக்கு ஏன் இவ்ளோ கோபம் வருது?” என்றான்.
அதற்குப் பதில் சொல்ல அவளுக்குத் தெரியவில்லை. “அப்பா, அப்பா… எனக்கு ஐஸ்கிரீம் வேணும்,” என்று அவர்கள் இருந்த கடைக்கு அருகில் இருந்த ஐஸ்கிரீம் கடையைக் காட்டி கேட்டாள்.
“டிரஸ் எடுத்துட்டு வந்து நம்ம மூணு பேரும் சாப்பிடலாம், சரியா?” என்றான்.
அவளும் சமத்துப்பிள்ளையாய், “சரி,” என்று தலையாட்டிவிட்டு அவனுடன் சென்றாள்.
“என்ன மச்சி, டிரஸ் எல்லாம் எடுத்தாச்சா?” என்று தம்பிரானின் குரல் அவன் பின்னே கேட்க, குரல் வந்த திசையை திரும்பிப் பார்த்த அக்னி, அங்கே கோபமாக வந்த அஞ்சனாவைப் பார்த்துவிட்டு அவள் பின்னால் வந்த தம்பியைப் பார்த்தான்.
“நீ வீட்டுக்கு போகும்போது நான் உன்கூடவே வரேன். என்னால எல்லாம் இவன் கூட வர முடியாது,” என்றாள்.
“ஏன்? அவன் என்ன பண்ணினான்?” என்றான் அக்னி.
“ம்ம்ம்…” என்று தம்பியைத் திரும்பி முறைத்தவள், “அதை உன் தம்பிகிட்டேயே போய் கேளு,” என்று ஆராதனாவை அவனிடமிருந்து வாங்கியவள் உள்ளே சென்றுவிட, “என்னடா பண்ணிவெச்சா அஞ்சனா வரும்போதே இவ்ளோ டென்ஷனா இருக்கா?” என்றான் அக்னி.
“எல்லாம் வழக்கம் போல தான்டா மச்சி. நம்ம வீட்டுக்கு வந்ததுல இருந்து என்னால அஞ்சுகூட சரியா பேசவே முடியல. சரி, இன்னிக்கு வகையா மாட்டிக்கிட்டா எப்படியாவது கைல கால்ல விழுந்து என் காதலுக்கு சம்மதம் வாங்கிடலாம்னு நினைச்சேன்,” என்றான்.
“சம்மதிச்சுட்டாளா?” என்றான் அக்னி நக்கலாக.
“ம்க்கும்… சம்மதிச்சுட்டு தான் மறுவேலை. நானும் ரெண்டு வருஷமா என் காதலை ஏத்துக்க சொல்லி கெஞ்சிக்கிட்டு இருக்கேன். ஆனா, உன் மாமன் பொண்ணு ஒத்துக்கவே மாட்டேங்குறாளே,” என்றான் வருத்தமாக.
“சரி, விடுடா. உனக்கு தான் வயசு இருக்குள்ள. வெயிட் பண்ணி அவ சம்மதத்தை வாங்கு,” என்றான் அக்னி.
“எனக்கு வயசு இருக்குடா. உனக்கே தெரியும், என்னை விட 5 வயசு பெரியவ. அவளுக்கு தானே இப்போ வயசு ஏறிட்டே போகுது,” என்றான்.
“விடுடா. நான் அன்னைக்கே சொன்னேன். அஞ்சனா கண்டிப்பா உன் லவ்வை ஏத்துக்க மாட்டா. வீணா ஆசையை வளர்த்துக்காதேன்னு. நீ எங்க கேக்குற? இப்போ என்ன ஆச்சு?” என்றான்.
“அதெல்லாம் பரவாயில்லைடா. எனக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம்னு ஒன்னு நடந்தா, அது அஞ்சனா கூட தான்,” என்றான் தீர்க்கமாக.
“டேய், வாயில அடி. அப்படி சொல்லாதடா. நான் உன் நண்பன். நீ எனக்கு மோட்டிவேட் பண்ற போல இல்ல பேசணும்,” என்றான் தம்பி.
“இதுக்கெல்லாமா மோட்டிவேஷன் வேணும்? உனக்கு இங்க ஒரு ரைட்டர் டெய்லி விடாம UD போட்டுட்டு இருக்காங்க. அவங்களை மோட்டிவேட் பண்ற மாதிரி யாரும் கமெண்ட் பண்றது இல்ல. சரியா வியூஸ் போக மாட்டேங்குது. அட, ஒரு ஸ்டிக்கர் கூட அவங்களுக்கு வரலைன்னா பாத்துக்கோடா,” என்றான் அக்னி.
“யாருடா அந்த ரைட்டர்? என்ன கதை எழுதுறாங்க?” என்றான் தம்பி.
“அவங்க நிறைய கதை எழுதுறாங்கடா. நம்ம ப்ரதிலிபியில் எழுதிட்டு இருக்காங்க. ஏன், நம்ம கதை ‘தீயில் விழுந்த தூரிகை’ ஸ்டோரி எழுதுறாங்களே, நம்ம லயா, அவங்களை தான் சொன்னேன்,” என்றான்.
“அட, அவங்களா? அவங்க ஸ்டோரி நல்லா இருக்குமே,” என்றான் தம்பி.
“ம்ம்… மோட்டிவேஷன் பத்தலைன்னு காலையில இருந்து ஸ்டோரி எழுதாம இருக்காங்க,” என்றான் அக்னி.
“மோட்டிவேஷன் தானே? அதெல்லாம் நாம கொடுத்திடலாம். நீ லயா ரைட்டர்கிட்ட சொல்லி, அப்படியே என் ஆளை என் லவ்வுக்கு ஓகே பண்ண வெச்சிர சொல்லேன்,” என்றான்.
“அது எல்லாம் நான் சொல்ல மாட்டேன். நீயே உன் அஞ்சனாகிட்டே பேசு,” என்றவன், “சரி, நான் போய் என் பொண்டாட்டி என்ன பண்றான்னு பார்த்துட்டு வரேன்,” என்றபடி கடைக்குள் செல்ல, பெருமூச்சு விட்டபடி ஆராவுக்கு ஆடைகளை எடுத்துக்கொண்டிருந்த அஞ்சனாவிடம் சென்றான்.
“எவ்ளோ தைரியம் இருந்தா என் மேல கேஸை போட்டு என்னை உள்ள தள்ளிருப்பான் அந்த மார்க்கெட் காரன். போதாத குறைக்கு தூரிகாவையும் ஆராவையும் கூட்டிட்டு போய்ட்டான். என் முன்னாடியே நான் கட்டவேண்டிய தாலியை எனக்கே தெரியாம அவன் கட்டிருப்பான்,” என்று புலம்பிக்கொண்டிருந்தான் சாமிநாதன்.
“ஏய், அங்க என்ன சத்தம்?” என்று ஒரு கான்ஸ்டபிளின் அதட்டலில் அமைதியானவன், “எல்லாம் என் நேரம். நல்லவேளை தூரிகா என் மேல எந்த கம்பளைண்ட்டும் கொடுக்கல. இல்லைன்னா, இந்த 15 நாள் ஜெயில் எனக்கு வருஷக்கணக்குல நீடிச்சிருக்கும்,” என்று நிம்மதி பெருமூச்சு விட்டவன், “போருடி. நான் வெளிய வந்த அப்பறம் உன்னை கவனிச்சுக்கிறேன். என்னை கல்யாணம் பண்ணிட்டு ஒரு வருஷம் என்னை உன் பின்னாடி அலையவிட்டதும் இல்லாம, அவனைப் பார்த்ததும் என்கிட்ட செஞ்சு கொடுத்த சத்தியத்தை எல்லாம் மறந்துட்டு அவன் பின்னாடி போய்ட்டே இல்ல? இதை நான் சும்மா விட மாட்டேன். நீ எப்படி அவனை கல்யாணம் பண்ணிட்டு நிம்மதியா இருக்கேன்னு நான் பார்க்குறேன்,” என்று உள்ளுக்குள் தூரிகாவையும் அக்னியையும் பழிவாங்க காத்துக்கொண்டிருந்தான் சாமிநாதன்.
டேய் சாமிநாதா உன்னை பார்க்க யாரோ வந்திருக்காங்க வா என்று காவலாளி ஒருவர் வந்து அவனை அழைத்தார்
என்னை பார்க்கவா யாரு வந்திருக்கா சார் என்று எழுந்து அவன் அறையில் இருந்த ஜெயில் கதவின் கம்பியை பிடித்துக்கொண்டு கேட்டான்
ஏன் உன்னை பார்க்க யாராவது VIP பார்க்க வந்தா தான் வருவியோ என்று அவனை நக்கலடித்து காவலாளி அவன் அறைக்கதவை திறந்து விட்டு அங்க போய் நீயே அதை யாருன்னு பாரு என்று அவனை தன்னோடு அழைத்து சென்றான்
சாமிநாதனை 15 நாள் காவலில் அவன் ஊரின் சென்ட்ரல் ஜெயிலில் அடைத்து இருந்தனர்
யோசனையோடே அந்த காவலாளியின் பின்னால் நடந்து சென்றான்
அங்கே அவர்களுக்காக ஒதுக்க பட்ட இடத்திற்கு வந்ததும் அவனுக்காக காத்திருந்தவனை பார்த்ததும் சந்தோசம் ஆனான்
EPISODE 24
“அபி, வேர் ஆர் யூ, ஐ நீட் டு சீ யூ” என்று மெசேஜ் அனுப்பி இருந்தாள் நந்தினி.
“ஐயம் ஆன் தி வே பேப், 5 மினிட்ஸ்” என்று அபிமன்யு அனுப்பிய பதிலை பார்த்ததும், இவ்வளவு நேரம் இருந்த டென்ஷன் எல்லாம் காணாமல் போயிருந்தது அவளுக்கு.
தன் கேபினில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தவளுக்கு, அவன் பதில் ஒருவித உற்சாகத்தை அளித்திருக்க, கையில் இருந்த போனை சோபாவில் வீசிவிட்டு, வாசலையே பார்த்துக்கொண்டு அபிமன்யுவிற்காக காத்திருந்தாள்.
அவள் அறைக்கதவு திறந்துகொண்டு உள்ளே வந்த அபிமன்யுவை கண்டதும் ஓடிச்சென்று கட்டிக்கொள்ளப் போனவள், வந்த வேகத்தில் அப்படியே சமாளித்துக்கொண்டு நின்றுவிட்டாள்.
காரணம், அபிமன்யு மட்டும் அவளை பார்க்க வரவில்லை. அவனுடன், அவன் அலுவலகத்தில் அக்கவுண்ட் டிபார்ட்மெண்டில் வேலை செய்யும் மணிகண்டனும் வந்திருந்தார்.
அவள் முகத்தில் தெரிந்த ஆர்வத்தையும் சந்தோஷத்தையும் பார்த்ததுமே கண்டுகொண்ட அபிமன்யு, அவள் இன்று சேலை அணிந்து இருப்பதை பார்த்ததும், “ச்சே! இன்னிக்குன்னு பார்த்துட்டு இவரை கூட அழைச்சிட்டு வந்துட்டேனே” என்று தன்னையே நொந்துகொண்டவன், “ஹலோ மிஸ் நந்தினி, யாரையோ ஆவலா எதிர்பார்த்தது இருக்கீங்க போல” என்றபடி அவள் அருகே வந்தான்.
“எஸ் மிஸ்டர் அபிமன்யூ, எனக்கு தெரிஞ்சவங்க ஒருத்தர் வரேன்னு சொல்லியிருந்தார். அவர் வருவாருன்னு நினைச்சேன். ஆனா நீங்க வந்திருக்கீங்க. அதுவும் இன்போர்ம் பண்ணாமையே வந்துட்டீங்க” என்று பல்லை கடித்துக்கொண்டு அவள் கூற,
தன் மீது கோபத்தில் இருக்கிறாள் என்று அவள் பல்லைக் கடித்ததிலேயே அறிந்துகொண்டவன், பார்வையாலேயே கண்களை சுருக்கி அவளிடம் மன்னிப்புக் கேட்டான்.
அவனை முறைத்தவள், “உக்காருங்க சார்” என்று அவள் எதிரே இருந்த சோபாவை காட்டிவிட்டு, நந்தினி அமர்ந்து கொள்ள,
அவள் காட்டிய சோபாவில் அமராமல், அபி சென்று நந்தினி அமர்ந்த சோபாவில் அவளை விட்டு சற்று தள்ளி அமர்ந்துகொண்டான்.
அதை கண்டு மணிகண்டன் அதிர்ந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல், அவர் சோபாவில் அமர்ந்தவர், சில பைல்களை எடுத்து அவள் முன் நீட்டி, “மேடெம், நீங்க கேட்ட டீடெய்ல்ஸ் எல்லாம் இந்த பைலில் இருக்கு. ஒருவாட்டி செக் பண்ணிட்டீங்கன்னா அடுத்து என்ன பண்ணனும்னு பார்த்துக்கலாம்” என்றார்.
“ஓகே சார், நான் என் பிஏ கிட்ட சொல்லி இதை எல்லாம் செக் செய்ய சொல்றேன்” என்றாள்.
அவள் அருகில் அமர்ந்து இருந்த அபிமன்யுவோ, இவர்கள் பேசுவதை கவனிக்காமல், இருவருக்கும் தெரியாமல் நந்தினியை சைட் அடித்துக்கொண்டு இருந்தான்.
“ஏன் சார், முன்ன இருந்த ஆடிட்டர் இவ்ளோ பணம் கட்டாம உங்களுக்கு ஃபைன் போடுற அளவுக்கு விட்டுவெச்சிட்டு போயிருக்கார். ஏன் அதை எல்லாம் நீங்க ஃபாலோ பண்ணலையா?” என்றாள்.
“சாரி மேடெம். நான் அக்கவுண்ட்ஸ்ல இருந்தாலும் இந்த டாக்ஸ் பே பண்ற ஒர்க் எல்லாம் அவர் தான் பார்த்துட்டு இருப்பார். எப்பவும் சரியா தான் செய்வார். ஆனால் கடைசி நேரத்துல அவர் இப்படி செய்வாருன்னு நாங்க நினைக்கல” என்றார்.
“ஏன், உங்க எம்டி எல்லாத்துலயும் கவனமா இருக்கிறவர் இந்த விஷயத்துல எப்படி கோட்டை விட்டார்?” என்று நக்கலாக திரும்பி அபிமன்யுவை பார்க்க,
அவனோ தன்னை நக்கல் செய்வது கூட தெரியாமல், நந்தினியின் சேலை விலகி தெரிந்த குட்டி தொப்பையும், அதற்கு மேல் விலகியும் விலகாமல் தெரிந்த அவன் ஆண்மையை கிளற காத்திருந்த திரண்டு திமிறிக்கொண்டு இருந்த கனியையும் காண ஆவலாக இருந்தான்.
அவன் பார்வை சென்ற திசையை உணர்ந்த அடுத்த நொடி, சட்டென்று தன் சேலையை இழுத்து விட்டவள், “ராஸ்கல்! பிச்சுருவேன் ஜாக்கிரதை” என்று முணுமுணுத்தவள்,
“மிஸ்டர் அபிமன்யு, நாங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருக்கோம். உங்க கவனம் இங்க இல்லையே” என்றாள் சற்று கோபமாக.
அவள் அழைப்பில் தன் பார்வையை அவள் முகத்தில் பதியவிட்டவன், “ஆமா மிஸ் நந்தினி, என் கவனம் முழுக்க ஒரே இடத்தில மாட்டிக்கிச்சு. என்னால் அதுல இருந்து மீண்டு வரவே மாட்டேங்குது. நான் என்ன செய்வேன்? ஐயம் சாரி” என்று அவள் கோபம் கண்டு உண்மையாக மன்னிப்புக் கேட்டான்.
“ஓகே” என்றவள்,
“பிசினெஸ் பேசுற நேரத்துல உங்க கவனத்தை பிசினஸில் மட்டும் வெச்சா நல்லா இருக்கும். அதுதான் உங்களுக்கும் உங்க பிசினஸுக்கும் நல்லது” என்றவள்,
“மிஸ்டர் அபிமன்யு, எனக்கு இந்த ப்ராப்ளமை சால்வ் பண்ண ஃபுல் அக்சஸ் வேணும். உங்க ஆடிட்டிங் டீம் அதுக்கு எனக்கு ஃபுல் சப்போர்ட் பண்ணனும். அப்போ தான் இந்த பிரச்னையை என்னால ஈஸியா சால்வ் பண்ண முடியும்” என்றாள்.
“கோ அஹெட் யது” என்றவன், மணிகண்டன் முன் அவர்களுக்கு இடையில் இருக்கும் நெருக்கத்தை இப்போதைக்கு காட்டிக்கொள்ளக் கூடாது என்று நினைத்தவன், “சாரி, மிஸ் யதுநந்தினி” என்றான்.
“ஓகே சார். ஒரு 2 டேஸ்ல உங்க ஆபீஸ்க்கு நானும் என்னோட டீமும் வரோம்” என்றாள்.
“ஏன் மிஸ் நந்தினி? நாளைக்கே உங்க ஒர்க்கை ஸ்டார்ட் பண்ணிடலாமே?” என்றான்.
“சாரி அபிமன்யு. நாளைக்கு என் வீட்ல ஒரு ஃபங்ஷன். என்னால எங்கயும் வர முடியாது” என்றாள்.
“ஓ” என்றவன், என்ன விசேஷம் என்று கேட்க நினைத்தாலும், அதை இப்போது கேட்பது சரியாக இருக்காது என்று நினைத்து அமைதியானான்.
பார்வதியும் மற்ற டீடெய்ல்களை எடுத்துக்கொண்டு உள்ளே வந்தவர்கள், நந்தினியிடம் இந்த பிரச்னையை எப்படி சரி செய்வது என்று கேட்டவள், அதை அபிமன்யுவிடமும் மணிகண்டனிடமும் தெளிவாக கூறினாள்.
“ஓகே மிஸ் நந்தினி. அப்போ நீங்க என் ஆபீஸ் வரும்போது நாம மீட் பண்ணலாம்” என்று எழுந்தவன் அவளிடம் கையை நீட்ட,
அவளும் மென் புன்னகையோடு அபிக்கு கை கொடுத்தாள்.
அவள் கையை பிடித்து மென்மையாக குலுக்கியவன், தன் விரல் கொண்டு அவள் உள்ளங்கையை தீண்டியவன் அவளை பார்க்க,
அதில் நந்தினி ஒரு நிமிடம் அதிர்ந்தாலும் பின் சுதாரித்துக்கொண்டவள், அவனிடம் இருந்து வலுக்கட்டாயமாக தன் கையை எடுத்துக்கொண்டாள்.
பின் அபியும் மணிகண்டனும் அங்கிருந்து கிளம்பினார்கள்.
அவன் செல்வதையே ஏக்கமாக பார்த்துக்கொண்டு இருந்த நந்தினி, பார்வதியிடம் திரும்பி, “ஏய்! நாளைக்கு உன் ஃப்ரெண்டுக்கு கல்யாணம் டி. காலையில சீக்கிரம் வந்திருவே இல்ல? எனக்கு அங்க கம்பெனி கொடுக்க வந்திரு டி” என்றாள்.
“ஏய், அவன் எனக்கு ஃப்ரெண்ட் தான். ஆனா உனக்கு தம்பி டி. இப்படி எத்தனை நாளைக்கு ரெண்டு பேரும் எதிரிங்க மாதிரி நடந்துப்பீங்க? நீங்க ரெண்டு பேரும் பழையபடி ஒண்ணா பேசி சிரிச்சு சந்தோஷமா இருக்கறதை பார்க்க எங்க எல்லாருக்குமே ஆசையா இருக்கு டி” என்றாள் பார்வதி உண்மையான அக்கறையோடு.
“ஏய், இப்போ எதுக்கு டி லெக்சர் எடுத்துட்டு இருக்க? காலையில் சீக்கிரமா வா, அவ்ளோ தான். போடி” என்றாள்.
“ஏய் நீ இருக்கியா?” என்று நந்தினி கழுத்தை நெறிப்பது போல பார்வதி செய்துகொண்டு இருக்க,
“என்ன, உங்க மேடமுக்கு இங்க கொஞ்சமும் மரியாதை இல்ல போல” என்றபடி கிளம்பி இருந்த அபிமன்யு திரும்ப நந்தினியின் அறைக்குள் நுழைந்தான்.
அவனை பார்த்ததும் நந்தினியை விட்டு பின்னால் தள்ளி நின்ற பார்வதி, “அப்படி எல்லாம் இல்ல சார். இவங்களும் நானும் காலேஜ் டேஸ்ல இருந்து ஃப்ரெண்ட்ஸ். அந்த உரிமையில் தான்” என்று பார்வதி தயங்கிக்கொண்டு, ‘இப்படி அடுத்தவர் சொல்லும் அளவு நடந்துகொண்டோமே’ என்று தன்னையே திட்டிக்கொண்டாள்.
பார்வதி சங்கடப்படுவதை பார்த்ததும், “மிஸ்டர் அபிமன்யு” என்று நந்தினி பேசவர, அதை கண்டுகொள்ளாமல்,
“அப்போ நீங்க இங்க வெறும் ஸ்டாப் மட்டும் இல்ல, உங்க மேடமோட க்ளோஸ் ஃப்ரெண்டும் கூட. அப்படித்தானே?” என்றான்.
“அ… ஆமா சார்” என்று பார்வதி வார்த்தைகளை முழுதாக முடித்திருக்கவில்லை,
“அப்போ ஓகே” என்றவன்,
“ஏய் யது, என்னடி இது? சேலையில இவ்ளோ அழகா இருக்க. என்னை டெம்ப்ட் ஏத்தி பார்க்குறதே உன் வேலையா போயிடுச்சு” என்று நந்தினியை அபிமன்யு நெருங்கினான்.
அவன் யது என்று செல்லமாக குழைந்து அழைப்பதும், நந்தினியை டி போட்டு உரிமை கொண்டாடுவதையும் பார்த்து பார்வதி வாயை பிளக்க,
“அபி, என்ன இது?” என்று அவன் நெருங்கி வருவதை கண்டு ஏதோ சரி இல்லை என்று நந்தினி உணர்ந்து பின்னே செல்வதற்குள்,
“என்னால முடியல டி” என்றவன், திரும்பி பார்வதியிடம், “சாரி சிஸ்டர், முடிஞ்சா கண்ணை மூடிக்கோங்க” என்றவன், நந்தினியிடம் திரும்பி அவள் இதழை கவ்வி இருந்தான்.
“சாரியா? எதுக்கு சாஆஆ…” என்று பேச வந்தவள், நந்தினியை அவள் கண் முன்னே முத்தமிட, அதை கண்டு அப்படியே திறந்த வாயை மூட கூட மறந்தவளாய் உறைந்து போனாள்.
“ம்ம்.. ம்ம்…” என்று நந்தினி அபிமன்யுவின் இந்த திடீர் தாக்குதலை சமாளிக்க போராட,
அவள் போராட்டம் எல்லாம் அவன் தந்த முத்தத்தில் கரைந்து போனது.
அப்படியே அவளை தள்ளிக்கொண்டு சுவற்றருகே அபிமன்யு செல்ல,
அதற்கு மேல் அங்கே இருந்தால் சரிவராது என்று அவர்களை திரும்பி பார்த்தவள், இருவரும் பிசுக்கு பிசுக்கு என்று முத்தத்தை சத்தத்தோடு கொடுத்துக்கொண்டு இருக்க,
கண்களை இருக்க மூடியவள், “முருகா! என்னை இப்படி சிங்கிளா விட்டுட்டு இதை எல்லாம் பார்க்க வெச்சுட்டியே” என்று புலம்பிக்கொண்டே அங்கிருந்து ஜுட் விட்டிருந்தாள் பார்வதி.
அதை எதுவும் கவனிக்கும் நிலையில் இல்லாமல், இருவரும் தங்களை மறந்து தீவிர முத்தம் கொடுத்துக்கொண்டு இருந்தனர்.
அவனிடம் இருந்து சிரமப்பட்டு பிரிந்தவள், “அபி, என்ன டா இது? பார்வதி முன்னாடி” என்று அவள் தன்னை என்ன நினைப்பாளோ என்று தவித்தபடி கேட்டாள்.
“அவ உன் ஃப்ரெண்ட் தான டி? எதுவும் நினைக்க மாட்டா. நீ வா” என்று மீண்டும் அவள் இடையில் கைகொடுத்து இறுக்கி அணைத்தவன், “எப்போ டி இது எல்லாம் எனக்கு கொடுக்க போற?” என்று அவள் கீழ் இதழை கவ்வி இழுத்தான்.
“ஷ்… ராஸ்கல்! மெதுவா டா. ஏற்கனவே பார்வதி முன்னாடி என் மானத்தை வாங்கினது போதாதா? இப்படி முத்தம் கொடுத்து என் லிப்ஸை புண்ணாக்கிடுவ போல” என்று அவன் மார்பை கை வைத்து தள்ளினாள்.
“நான் என்ன பண்ணுவேன்? நீ இவ்ளோ அழகா இருந்தா” என்று மீண்டும் ஆழ்ந்த அழுந்த முத்தமிட்டு அவளை விட்டு விலகி நின்றவன், “இதுக்கு மேல இங்க இருந்தா நமக்கு கல்யாணம் ஆகுறதுக்கு முன்னமே ஃபர்ஸ்ட் நைட் முடிச்சிருவேன் நான்” என்றான்.
“ம்ஹும்! அந்த நினைப்பு வேற இந்த ராஸ்கலுக்கு இருக்கோ” என்று அவன் இடையை கிள்ளியவள், “முதல்ல இங்க இருந்து கிளம்பு டா” என்று வாசல் கதவை காட்டினாள்.
“போகணுமா?” என்று அவளை அபிமன்யு நெருங்க,
“ராஸ்கல்! படுத்தாதடா என்னை” என்று அபிமன்யுவின் சட்டையை பிடித்து இழுத்து அவன் உயரத்திற்கு மேலே கால்களை நிறுத்தியவள், அவன் இதழில் முத்தமிட்டு விலகி, “கிளம்பு ப்ளீஸ். என்னாலும் முடியல. அப்பறோம் ஃபர்ஸ்ட் நைட் கன்ஃபார்ம்ட்” என்று சிரித்தாள்.
“சீக்கிரமே நிறைவேத்திடறேன். டோன்ட் ஒர்ரி பேபி” என்று அவள் இடையை கிள்ளிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.
EPISODE 25
“கெட்டி மேளம் கெட்டி மேளம்” என்று ஐயரின் குரல் ஒலித்ததும் மேள வாத்தியங்கள் முழங்கின.
தங்கக் கோடியில் மாங்கல்யம் கோர்த்திருக்க, அதனூடே சுற்றியிருந்த மஞ்சள் கயிற்றோடு தாலி கோடியை இதழ்யாவும் ராஜனும் எடுத்துக் கொடுக்க, அதை வாங்கி தூரிகாவின் கழுத்தில் கட்டினான் அக்னி.
அவள் கழுத்தில் தாலியைக் கட்டிவிட்டு, “சின்ன டிக்கி… ஹேப்பி பர்த்டே டி” என்றான் அக்னி.
அவனைத் திரும்பி முறைத்தவள், “இந்த மாதிரி யாராவது வாழ்த்து சொல்லுவாங்களா? அதுவும் இப்பேர்பட்ட பேரை வெச்சுட்டு?” என்றாள் தூரிகா.
“ஏன்? எல்லார் முன்னாடியும் சொல்லலைன்னு வருத்தமா?” என்றவன், “நான் வேணும்னா இன்னொரு முறை எல்லாருக்கும் கேட்குற மாதிரி சத்தமா பிறந்தநாள் வாழ்த்து சொல்லட்டுமா?” என்றான்.
அவனை அதிர்ந்து தூரிகா பார்க்க, “சொல்லட்டுமா?” என்று சிரித்துக்கொண்டே, “சின்ன…” என்று அவன் வாயைத் திறக்க, “வாயை மூடுங்க” என்று எட்டி அவன் வாயைப் பொத்தியிருந்தாள் தூரிகா.
“அடியாத்தி! என்ன டி இது? என் பேரனை கல்யாணம் ஆன அப்போவே பேசவிடாம வாயைப் பொத்துற நீ?” என்று வாயில் கை வைத்தார் பழனி.
“ஐயோ பாட்டி! அப்படி எல்லாம் இல்லை” என்றாள் தூரிகா.
அவள் திணறுவதை ரசித்தவன், “பழனி, சும்மா விளையாடுறா அவ” என்றான் அவளுக்குப் பரிந்து பேசி.
“ஓஹோ! அதுக்குள்ள உன் பொண்டாட்டிக்கு வக்காலத்து வாங்க வந்துட்டியா சின்ன ராசா நீ?” என்றார் பழனி.
“அட கிழவி! சும்மா இரு. இப்பதான் எல்லாம் நல்லபடியா போயிட்டு இருக்கு. நீ வேற ஏன் இன்னைக்கே ஆரம்பிக்கிற?” என்று அவர் வாயை அடைத்தார் ராஜன்.
அனைவரும் ஜோடிகளுக்கு அர்ச்சதை தூவி வாழ்த்தினர்.
தூரிகாவின் பின்னே நின்றிருந்த அஞ்சனாவின் பின்னால் வந்த தம்பிரான், “உன் கழுத்துல எப்போ டி நான் தாலி கட்டுறது?” என்றான்.
அவனைத் திரும்பி முறைத்தவள், “தாலிதானே கட்டிக்கிடுவேன். ஆனா உன் கையால் இல்லை, என் வீட்டில் பார்க்கிறவன் கையால்” என்றவள் அவனைவிட்டுத் தள்ளிப்போய் நின்றுவிட்டாள்.
‘பார்க்கிறேன்… எவன் வந்து உன் கழுத்துல தாலி கட்டுறான்னு நானும் பார்க்கிறேன்’ என்று நினைத்துக்கொண்டான்.
அக்னியின் திருமணத்தில் மூன்றாவது நபர் போல ஓரமாக அமர்ந்து, தன் மொபைலையும் வாசலையுமே பார்த்துக்கொண்டிருந்தாள் நந்தினி.
அவள் எதிர்பார்த்ததுபோல அபிமன்யுவின் கார் அவர்கள் வீட்டு வாசலில் வந்து நின்றது.
அவன் காரைக் கண்டதும் முக மலர்ச்சியோடு எழுந்து வாசலுக்கு ஓடினாள் நந்தினி.
காருக்குள் இருந்து நந்தினியைப் பார்த்தவன், அவள் தன்னைக் காண ஆர்வம் காட்டுவதைக் கண்டு சந்தோஷமாகச் சிரித்தான்.
“என்னடா இவ்ளோ அழகா சிரிக்கிற?” என்று வெளியே பார்த்த லட்சுமி, நந்தினி வருவதைப் பார்த்துவிட்டு, “இதுதான் உன் சிரிப்புக்கு காரணமா?” என்று அவனை கிண்டல் செய்தார்.
“அம்மா! போதும் என்னைக் கலாய்ச்சது. வாங்க போலாம்” என்று கீழே இறங்க, அவனோடு சேர்ந்து அவரும் இறங்கினார்.
அபிமன்யு மட்டும் வருவான் என்று எதிர்பார்த்திருந்தவளுக்கு, அவனுடன் வந்த லட்சுமியையும் பார்த்துவிட்டு ஆச்சரியமானது.
“ஆண்டி! வாங்க. நீங்க வருவீங்கன்னு அபி என்கிட்டே சொல்லவே இல்லை” என்றாள் நந்தினி.
“நீதான் என்னைக் கூப்பிடவே இல்லையே! அதான் உன்கிட்டே சொல்லாம வந்தேன்” என்று அவர் சிரிக்க, “ஐயோ ஆண்டி! சொல்லக்கூடாதுன்னு எல்லாம் இல்லை. எங்க வீட்டில் இருந்து உங்களைப் பார்த்து இன்னும் பேசவே இல்லை. எனக்கும் என்ன பண்றதுன்னு தெரியலை” என்று தலையைச் சொறிந்தாள்.
“ஹஹ்ஹா” என்று சத்தமாகச் சிரித்த லட்சுமி, “அதனால என்னடா? அதான் நாங்களே வந்துட்டோமே. இன்னைக்கே உங்க வீட்டில் எல்லாரையும் பார்த்து பேசிடலாம்” என்றார்.
“சரிங்க ஆண்டி. உள்ள வாங்க” என்று அவரையும் அபியையும் உள்ளே அழைத்துச் சென்றாள்.
“ஹேய்! இந்த பிங்க் சேலை உனக்கு சூப்பரா இருக்கு” என்று அவளுக்கு மட்டும் கேட்கும்படி கூறினான்.
“தேங்க் யூ” என்றாள் அவளும் அவனுக்கு மட்டும் கேட்கும்படி.
உள்ளே அவர்கள் வரவும், வந்தவர்களிடம் பேசிக்கொண்டிருந்த இதழ்யா, நந்தினி சிரித்து பேசிக்கொண்டு வருவதைப் பார்த்தவருக்கு, அவளிடம் வருபவர் யார் என்று யூகிக்க முடிந்தது.
“மாம்! திஸ் இஸ் அபி, அபிமன்யு. இவங்க லட்சுமி ஆண்டி, அபியோட அம்மா” என்று அவர்களை அறிமுகம் செய்து வைத்தாள்.
“வாங்க. திடீர்னு என் பிள்ளை கல்யாணம் பண்ணிட்டு வந்து நின்னுட்டான். அந்தப் பிரச்னையைச் சரி செஞ்சு, மத்த வேலைகளைக் கவனிச்சதுல எங்களால அன்னைக்கு உங்களை மீட் பண்ண வரமுடியாமப் போயிருச்சு” என்றார் இதழ்யா.
“பரவாயில்லை. இதெல்லாம் எதிர்பார்த்தா வரும்? நம்ம கையில ஏதும் இல்லைையே! நானும் தான் என் பிள்ளையை கல்யாணம் செய்துக்க சொல்லி நிறைய முறை கேட்டிருக்கேன். அப்போ எல்லாம் ‘கல்யாணமே வேணாம்’னு சொல்லிட்டு, உங்க பொண்ணைப் பார்த்ததும், ‘கல்யாணம் பண்ணிக்கிறேன்’னு வந்து நிக்கிறது எங்க வீட்டில் எல்லாருக்குமே ஆச்சரியம்தான்” என்று சிரித்தார் லட்சுமி.
அதற்குத் தன் சிரிப்பை பதிலாகத் தந்தவர், “இந்த விசேஷம் எல்லாம் முடிஞ்சதும் சொல்றேன். நீங்களே ஒரு நல்ல நாளா பார்த்து பொண்ணு பார்க்க வாங்க” என்றார்.
“இனி என்ன பொண்ணு பார்க்கிற வேலை எல்லாம்? அதெல்லாம் தான் பார்த்தாச்சே. அடுத்து ஸ்ட்ரெய்ட்டா கல்யாணமே பேசி முடிச்சிருவோம். என் வீட்டில் அவர்கிட்டே பேசிட்டு சொல்றேன்” என்றார்.
‘அபிதான் ஃபாஸ்ட்டுன்னு நினைச்சேன். அவர் அம்மாவும் செம்ம ஃபாஸ்ட்டா இருக்காங்களே’ என்று அவள் நினைத்துக்கொண்டிருக்க, “ஆண்டி! நீங்க பேசிட்டு இருங்க. நான் என் வருங்கால மச்சானை பார்த்துட்டு வந்துடறேன்” என்றவன், “யது வா” என்று அவளையும் தன்னோடு அழைத்துச் சென்றான்.
அவர்களை விட்டுச் சற்று தள்ளி வந்ததும், “அபி! நீங்க மட்டும் போய் அவனைப் பார்த்துட்டு வாங்க. நான் வரலை. உங்களுக்கே தெரியும் எனக்கும் அவனுக்கும் ஆகாதுன்னு” என்றாள்.
“வரலையா அப்போ நீ?” என்றான்.
“ம்ஹும்! ப்ளீஸ்” என்றாள் கெஞ்சுதலாக அவனைப் பார்த்து.
“ம்ம்ம்ம்” என்று யோசித்தவன், “சரி. நான் மட்டும் போய் பார்க்கிறேன். ஆனா அதுக்குப் பதிலா எனக்கு வேணும்” என்று தன் கீழ் உதட்டை நாவால் வருடிக்காட்டி அவளிடம் முத்தம் கேட்டான்.
அவனை அதிர்ந்து பார்த்தவள், “போடா” என்றாள்.
“சரி, போகலை. நீ இந்த டீலுக்கு ஓகே சொல்லலைன்னா, நீயும் என் கூட வந்தாகணும்” என்றான்.
“ஓ காட்! நீ இருக்கியே” என்று சிரித்தவள், “டீல். போயிட்டு வா அபி” என்று அவனை அனுப்பி வைத்தாள்.
ஹாலில் வெளியே இருந்து ஹாலுக்குள் காலடி எடுத்து வைத்த அபி, மணமக்கள் எங்கே இருக்கிறார்கள் என்று பார்த்தவனுக்கு, அங்கே அக்னி, ஆராவை கையில் தூக்கிக்கொண்டு தூரிகாவுடன் ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் அப்படியே நின்றுவிட்டான்.
அவன் பின்னே வந்த நந்தினி, “என்ன அபி? இங்கேயே நின்னுட்டிங்க? போகலையா? ரொம்ப ஆர்வமா வந்திங்க” என்றாள்.
“இல்லை. இவன்… இவர்… இவர்தான் உன் தம்பியா?” என்றான்.
“ம்ம்ம். அவன்தான். ஏன் அபி? இவனை முன்னமே உங்களுக்குத் தெரியுமா?” என்று அவள் ஆர்வமாகக் கேட்டாள்.
“ம்ம்ம்” என்று அபி தலையை ஆட்டிக்கொண்டிருக்க, “அப்படியா? எப்படி தெரியும்?” என்று அவள் ஆர்வமாகக் கேட்டாள்.
அவன் பதில் பேசாமல் நின்று இருக்க, மேடையில் இருந்த அக்னியின் கண்களில் அபிமன்யு தென்பட்டுவிட, புருவம் சுருங்கியவன், தூரிகாவிடம் ஆராவைக் கொடுத்துவிட்டு அவனை நோக்கி வந்தான்.
“என்ன அபி? நான் கேட்டுட்டு இருக்கேன். என்ன அவனைப் பார்த்துட்டு இருக்கீங்க?” என்றாள்.
“நீயா? உனக்கு இங்க என்ன வேலை? இங்கேயும் வந்து அந்த சாமினாதனுக்காக வக்காலத்து வாங்க வந்திருக்கியா?” என்றவன், “அவன் இப்போ எங்க இருக்கான் தெரியுமா? ஜெயில்ல. நீயும் வேணா சொல்லு, உன்னையும் பிடிச்சு ஜெயில்ல போட்டுடலாம்” என்றான் நக்கலாக.
அவன் அப்படிச் சொன்னதும், “டேய்! என்னடா என்ன பேசுற? மரியாதையா பேசு” என்று கோபமானாள் நந்தினி.
“ஏன்? இவனுக்கு என்ன மரியாதை வேண்டி இருக்கு? என்ன ஏதுன்னு விசாரிக்காம என்னைப் பிடிச்சு உள்ளே போடப் பார்த்தவன் இவன். இவனுக்கு என்ன வந்துச்சு?” என்றவன், “ஏய்! நீ எதுக்கு இங்க வந்த? உனக்கு என்ன வேலை இங்க?” என்றான்.
“டேய்! ஒழுங்கா பேசு” என்று மீண்டும் நந்தினி பேச வர, “யது! வெயிட்” என்றவன், “உங்க கோபம் கரெக்ட்தான். நான் அன்னைக்குச் சரியா விசாரிக்காம அப்படி நடந்துட்டேன். அப்புறம் அர்ஜுன் மூலமாதான் எனக்கு உண்மை தெரிய வந்துச்சு” என்றவன், “சாரி. ஏதும் விசாரிக்காம உங்களைப் போலீஸ் ஸ்டேஷன் வரை கொண்டு வந்து விட்டுட்டேன்” என்றான்.
அபிமன்யு இப்படி இறங்கி வந்து பேசவும், அதற்கு மேல் அக்னியால் கோபத்தை அவனிடம் காட்ட முடியவில்லை. அவன் அபியை ஆச்சரியமாகப் பார்க்க, “நான் முறையா என்னை அறிமுகப்படுத்திக்கிறேன். என் பேரு அபிமன்யு. யது என்னை ‘அபி’னு செல்லமா கூப்பிடுவா” என்று அவளைப் பார்த்துச் சிரித்தவன், “நானும் உங்க சிஸ்டரும் சீக்கிரமே கல்யாணம் செய்துக்க போறோம்” என்றான்.
அவன் சொன்னதை நம்பமுடியாமல் இருவரையும் அக்னி பார்க்க, சிரித்துக்கொண்டே, “வாழ்த்துக்கள்! ஒரு நல்ல முடிவை எடுத்து அவங்க லைஃபை சேவ் பண்ணிருக்கீங்க” என்று தூரிகாவையும் ஆராவையும் சுட்டிக்காட்டி கூறியவன், அக்னியிடம் கையை நீட்டினான்.
அதற்கு மேல் அக்னி என்ன செய்ய முடியும்? “தேங்க் யூ” என்று அபியின் கையைப் பிடித்துக் குலுக்கினான்.
பிறகு தூரிகாவையும் பார்த்து, தான் அவசரப்பட்டு செய்த காரியத்துக்கு மன்னிப்பும் கேட்டவன், அவர்கள் இருவரோடும் சேர்ந்து ஃபோட்டோ எடுத்துக்கொண்டு மேடையை விட்டுச் சிரித்த முகமாக கீழே இறங்கினான்.
அவற்றை எல்லாம் கீழே இருந்து பார்த்துக்கொண்டிருந்த நந்தினி, அபிமன்யு அவளிடம் வந்தவன், “என்ன அபி இது? எவன் வந்து உங்களை மரியாதை இல்லாமப் பேசினான்? நீங்க ஏதாவது சொல்வீங்கன்னு பார்த்தேன். அப்புறம் என்னவோ பேசினாங்க ரெண்டு பேரும். நீங்க எதுக்கு அவங்ககிட்டே மன்னிப்பெல்லாம் கேட்டீங்க?” என்றாள் சற்று கோபமாக.
“ஹேய் யது! கூல். நான் உனக்கு அப்புறம் கிளியரா எக்ஸ்பிளைன் பண்றேன்” என்றவன், “நீ வா. அம்மாவைப் போய் பார்க்கலாம்” என்று அவளை தன்னோடு அழைத்துச் சென்றான்.
லட்சுமியும் அக்னி, தூரிகாவை வாழ்த்திவிட்டு, இதழ்யா, ராஜனிடம் வந்தவர், “ஒரு கல்யாணம் நல்லபடியா முடிஞ்சிருச்சு. அடுத்து, கையோட உங்க பொண்ணுக்கும் என் பையனுக்கும் கல்யாணத்தைப் பேசி முடிச்சிரலாமே?” என்றார்.
“நான் நாளைக்கே உங்க வீட்டுக்கு வரேன். மற்றதை நேரில் பேசிக்கலாம்” என்ற ராஜன், “எங்க நந்துவுக்குக் கல்யாணம். அதை இந்த ஊரே பார்த்து மெச்சற அளவுக்கு பிரம்மாண்டமா பண்ணிடலாம்” என்றார்.
அவர் அப்படிச் சொல்லவும், “அப்படித்தான் கல்யாணம் செய்யணும்னு நீங்க நினைச்சா, எனக்கு இந்தக் கல்யாணமே வேணாம் அங்கிள்” என்றான் அபிமன்யு.
“டேய் அபி! என்னடா பேசுற? இப்படியா பெரியவங்க முன்னாடி நடந்துகுவ?” என்று லட்சுமி அவனை கடிந்துகொள்ள, “அம்மா! இந்த விஷயத்துல நான் காம்ப்ரமைஸ் பண்ணிக்கிறதா இல்லை” என்றவன், “ஆண்டி, அங்கிள், சாரி. எனக்கும் யதுவுக்கும் கல்யாணம் ரொம்ப ரொம்ப சிம்பிளா நடக்கும்னு நான் நினைக்கிறேன். என் வீட்டு ஆளுங்களும் உங்க வீட்டு ஆளுங்களும் மட்டும் இருந்தா போதும் எங்க கல்யாணத்துக்கு. இதுக்கு உங்க எல்லாருக்கும் ஓகேன்னா எனக்கும் ஓகே” என்றவன், “அம்மா! போலாம்” என்று அங்கிருந்து கிளம்பியிருந்தான்.
அவனின் இந்தக் பேச்சு இதழ், ராஜன், நந்தினி மூவருக்குமே அதிர்ச்சியாக இருந்தது.
என்ன செய்வது என்று தெரியாமல் மூவரும், கிளம்பிச் சென்ற அபிமன்யுவின் காரையே வெறித்தபடி நின்று இருந்தனர்.
