logo

layastamilnovel

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
412
மயக்கம் அடைந்த மீனுவை தூக்கிக்கொண்டு ஹாஸ்பிடளுக்கு செல்ல போனான் ஜெய் அப்போது "நிழலும் ஜெய்.." என்று கம்பீர குரலில் அதிகாரமாக ரியா ஜெய்யை அழைத்தாள் .

அவள் அழைப்பில் அப்படியே உறைந்து நின்றவன் மீனுவை கையில் ஏந்தியபடி திரும்பி ரியாவை பார்த்தான் .

"என்ன ஜெய் உன் ஆருயிர் காதலியை பார்த்ததும் துடிச்சு போயிட்டியா? அதனால் தான் என்கிட்டே எழுதிக்கொடுத்த ஒப்பந்தத்தை மறந்துட்டு அவளை தூக்கிட்டு ஹாஸ்பிடல் கிளம்பிட்டியா?" என்றாள் நக்கலாக சிரித்துக்கொண்டே.

அப்போதுதான் தான் ரியாவிற்கு எழுதிக்கொடுத்த ஒப்பந்தம் ஜெய்யிற்கு நினைவில் வரவே அவன் அபப்டியில் நின்றான் .

ரியா சொன்னதை கேட்டு ஜெய்யிடம் வந்த பரமன் "மாப்பிள்ளை என் பொண்ணு என்ன சொல்றா ... அவ கிட்டே நீங்க என்ன ஒப்பந்தம் போட்டீங்க... எனக்கு ஒன்னும் புரியலை" என்றார்.

"மாமா அதெல்லாம் நான் அப்பறோம் சொல்றேன் முதல்ல மீனுவை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும். வந்து நான் எல்லாமே டீடைலா சொல்றேன்" என்றவன் மேடையில் இருந்து அவனை நோக்கி நடந்து வந்த ரியாவை பார்த்துவன் "ரியா ப்ளீஸ் இந்த ஒரு முறை மட்டும் மீனுவை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போக அலோ பண்ணு . அவளை ஹாஸ்பிடலில் சேர்த்துட்டு என்ன ஆச்சுன்னு கேட்டுட்டு வந்துடறேன் " என்று அவளிடம் அனுமதி வேண்டி நின்றான் .

ஜெய் இப்படி ரியாவிடம் கெஞ்சி நிற்பதை பார்த்து சந்தோஷ் , சூர்யா இருவருக்கும் அதிசயமாக இருந்தது. எப்போதும் யாருக்கும் தலைவணங்காதவன் இன்று கேவலம் இந்த ரியாவிடம் சம்மதம் வேண்டி நிற்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை .

"டேய் ஜெய் என்ன இது ... இவகிட்டே ஏன் பெர்மிஸ்ஸின் கேட்டு நின்னுட்டு இருக்கே.. இவை கழுத்துல நீ தாலி தானே கட்டிருக்க ... அதுக்காக இவகிட்டே கேட்டு தான் எல்லாம் செய்யணுமா? " என்று கொதித்தெழுந்தான் சூர்யா .

"டேய் சூர்யா பேசிட்டு இருக்க இது நேரம் இல்லை. முதல்ல மீனுவை ஹாஸ்பிடலில் சேர்க்கணும் மத்ததை எல்லாம் அப்பறோம் சொல்றேன் டா " என்று மீனுவிற்கு என்ன ஆனதோ என்று பதற்றமாக பேசியவன் ரியாவை பார்த்தான் .

"ஹே சூர்யா என்ன சொன்னே என் கழுத்துல வெறும் தாலி தான் கட்டிருக்கானா?" என்று சிரித்தவள் "இது வெறும் தாலி கயிறு கிடையாது உன் பிரெண்டுக்கு நான் போட்ட விலங்கு இந்த தாலி "என்று மீண்டும்ம் சிரித்தவள் ஜெய்யை பார்த்தவள் "என்ன ஜெய் நான் சொன்னது சரிதானே .." என்றான்.
 

Author: layastamilnovel
Article Title: ராட்சசன் 50
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top