Home Uncategorizedஅயோக்கியனின் அரியாசனம் இராக்கதன் part-2 -28

அயோக்கியனின் அரியாசனம் இராக்கதன் part-2 -28

by Layas Tamil Novel
117 views

அயோக்கியன் 28

ம்ம்ம்.. ம்ம்..  விடு டா என்று கடினப்பட்டு தன் இதழ்களை வேலுவிடம் இருந்து விலகி நின்று மூச்சு வாங்கினாள் திகழ்.

தன் உதட்டில் இருந்த எச்சிலை துடைத்துக்கொண்டே அவளிடம் முன்னேறியவன் “இன்னோருமுறை ஏதாவது கோக்கு மாக்கா பேசினா இப்படி தான் உன் வாயை அடைப்பேன் டி போர்ஜெரி” என்றான்.

“அப்பாடித்தான் டா பேசுவேன். உன் வீட்டுக்கு போறேன்னு நீ உன் இஷ்டத்துக்கு வந்து என் அப்பா, அம்மாகிட்டே சொல்ற.. ஏன் என்கிட்டே எல்லாம் சார் டிஸ்க்கஸ் பண்ண மாட்டிங்களோ..” என்றாள்.

“உன்கிட்டே டிஸ்கஸ் பண்ணணும்னு எனக்கும் தான் டி ஆசையா இருக்கு. ஆனா நீ இருக்கியே.. அதுவும் இந்த வாய் இருக்கே.. ” என்று அவள் இதழை பிடித்து இழுத்தவன் “ஏதாவது பேசி என்னை கடுப்பேத்திக்கிட்டே இருக்கும் அதான் உன்கிட்டே சொல்லாம நேரா உன் அப்பாகிட்டே போய் சொன்னேன்” என்றான்.

“கடுப்பா நான் ஏன் டா கடுப்பேத்துறேன் உன்னை . எனக்கு என்ன வேற வேலை இல்லையா?” என்றாள்.

“உனக்கா உனக்கு என்ன வேலை இருக்கு. காலையில எழுந்திருப்ப… பிரெஷ் ஆகிட்டு வந்து காபி குடிப்ப.. கொஞ்ச நேரம் கையை காலை ஆட்டிக்கொடி யோகா பண்ணறேன்னு சீனை போடுவ , அப்பறோம் டிபன் முடிச்சிட்டு கிளப்பி பிரெண்ட்ஸ் பாக்க போறேன். கிளப்புக்கு போறேன், ஷாப்பிங் போறேன்னு கிளம்பிடுவ. நீ போறது இல்லாம ஹரிணியையும் உன்கூட ஷாப்பிங் கூப்டு போய் பழக்கி அவளையும் கெடுத்து வெச்சிருக்க.. ” என்றான்.

“டேய் வேற என்னடா என்னை பண்ண சொல்ற.. நான் அமெரிக்காவுல இருந்திருந்தா இந்த நேரம் எனக்குன்னு ஒரு வேலையை இருந்துச்சு, ஒரு லைப் ஸ்டைல் இருந்துச்சு. என் இஷ்டத்துக்கு ஊரை சுத்தினேன். வேணும்ங்குறதை செஞ்சேன். அந்த ராகவ் இடியட் என்னை ஏமாத்தி இங்க கூப்டு வந்தான். கடைசியில உன்னை கல்யாணம் பண்ண வேண்டி ஆகிருச்சு . அதுவும்  அந்த ஓவியா கழுதையால வந்தது. இல்லேன்னா நான் இந்த நேரம் மறுபடியும் அமெரிக்கா இல்ல போயிருப்பேன். உன்கூட இப்படி மல்லுக்கு நின்னிருக்க மாட்டேனே” என்றாள்.

“ஏன் டி .. ஏன்  எனக்கு என்ன டி குறைச்சல் என்னை கல்யாணம் பண்ணிடுன்னு அவ்ளோ லேசுல சொல்லிட்டே.. என் அத்தை பொண்ணுங்க , மாமன் பொண்ணுங்க , என் கூட காலேஜ்ல படிச்சா பொண்ணுங்கன்னு எத்தனை பேர் என்னை சுத்தி வந்தாங்கன்னு உனக்கு என்ன டி தெரியும். கல்யாண மேடையில என் பக்கத்துல இருக்குறது ஓவியா இல்லை நீ தான்னு தெரிஞ்சிருந்தா அப்போவே இந்த கல்யாணம் வேணாம்னு எழுந்து போயிருப்பேன். போனா போகுதே தாலியை கட்டிட்டோமேன்னு பாவம்னு உன்கூட இருந்தா எப்போ பாரு என்னை கடுப்படிச்சுக்கிட்டே இருக்க நீ.. ” என்று அவனும் பொரிந்து தள்ளினான் திகழினியைப் போல..

“என்னது போனாப்போகுதுன்னு நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டியா , ஆஹா..  ஏன் சொல்ல மாட்ட . அந்த ஓவியா, ரதி, எல்லாரும் நீ ரொம்ப நல்லவன் ,  என்னை நல்லா பத்துப்ப.. என் பழைய புருஷன் மாதிரி நீ இருக்க மாட்ட.. ரொம்ப பொறுப்பானவன்னு உனக்கு செர்டிபிகேட் கொடுத்தாளுங்க . சரி இவ்ளோ சொல்றாங்களே நீ அவங்க சொன்னது போல இருப்பியோன்னு ஒரு நப்பாசையில் உன்னை கட்டிகிட்டேன்டா.” என்று அவனை மேலிருந்து கீழ் வரை பார்த்தவள்,

” ஆனா நீ என்னடான்னா கல்யாணம் ஆன நாள்ல இருந்து என்னை உன் பொண்டாட்டியா ஒரு முறை கூட ட்ரீட் பண்ணினதே இல்ல. எப்போ பாரு நீ தான் டா என்னை கடுப்பேத்துற. என் பழைய புருஷன் மாதிரி இல்லாம நான் நினைச்ச மாதிரி என் புக்ஸ்ல வர ஹீரோ போல இருப்ப.. என்னை கைக்குள்ள வெச்சு பாத்துப்பா. என்னை நல்லவிதமான ட்ரீட் பண்ணுவேன்னு நினைச்சு நம்பி உன்னை கல்யாணம் செய்துகிட்டேன். நீ அதுக்கெல்லாம் சரியே இல்ல டா பிஏ. என் அப்பாவுக்கு பியேவா இருக்க மட்டும் தான் நீ லாயக்கு. எனக்கு புருஷனா லட்சணமா இருக்க தான் உனக்கு  தெரியல.. போ .. போய் என் அப்பா கொடுத்த வேலையாச்சும் பொறுப்பா பாரு..அதையாவது உருப்படியா செய் போ…” என்று மூச்சிரைக்க பேசியவள்.

அதே ஆக்ரோஷத்தோடு சென்று கட்டிலில் அமர்ந்து கொண்டாள்.

கட்டிலில் விளிம்பில் அமர்ந்து மூச்சு வாங்கிக்கொண்டிருந்தவளைப் பார்த்தான். நேராக அவளிடம் வந்தவன் “இப்போ என்ன தான் டி உனக்கு பிரச்சனை ” என்றான்.

“எனக்கா எனக்கு எந்த பிரச்சனையும் இல்லைப்பா நான் நல்லா தான் இருக்கேன். உனக்கு தான் ஏதாவது பிரச்சனையான்னு டாக்டர்கிட்டே போய் செக் பண்ணனும் ” என்றாள்.

அவள் சொன்னது கேட்டு ஒரு நிமிடம் அதிர்ந்து போனான் வேலு.

அவள் தன் ஆண்மையை அல்லவா இப்பொது குறை சொல்கிறாள். “உனக்கு எவ்ளோ கொழுப்பு இருந்தா என்னை பார்த்து இப்படி ஒரு வார்த்தையை சொல்லுவ நீ.. “என்றான்.

“அப்படி தான் டா சொல்லுவேன் பியே. கல்யாணம் ஆகி எவ்ளோ மாசம் ஆச்சு. இப்போவரை என்கிட்டே கொஞ்சமாச்சும் ரொமான்டிக்கா பேசிருக்கியா நீ. அதிசயமா இன்னிக்கு தான் ஒரு கிஸ் கொடுத்திருக்க.. அதுவும் நான் உன் வாயை பிடுங்கினேன்னு கோபத்துல கொடுத்தது . என் மேல ஆசையா ஒரு கிஸ் கொடுத்திருப்பியா நீ” என்று அவனை பார்த்தாள்.

அவனோ இன்னமும் அதிர்ந்து திகளினியையே பார்த்துக்கொண்டிருக்க..

“அதை விடு டா.. இங்க தான் வேலை , கட்சி அது இதுன்னு பிஸியாவே இருந்த. எல்லாரும் ஹனிமூன் போனோமே அங்க வந்து எண்ணத்தை டா நீ கிழிச்ச. அங்கையும் வந்து சும்மா தானே நீ இருந்த . ஆனா ஓவியா, ரதி எல்லாம் பாரு ரெண்டு பேரும் வயித்துல லோட் வெச்சிருந்தாலும் அவ்ளோ பிரச்சனையிலும் ஹனிமூனை கொண்டாடினாங்களா இல்லையா . அப்போ தான் அப்போதான் டா எனக்கு உன் மேல டவுட் வரவே ஆரம்பிச்சுது. நீ ஆம்பளையா?இல்லையான்னு” என்று அவள் சொல்லி விட…

“என்ன டி விட்டா உன் இஷ்டத்துக்கு பேசிக்கிட்டே இருக்க.. இப்போ என்ன டி உனக்கு தெரியணும் நான் ஆம்பளையா? இல்லையான்னு தெரியணுமா. அப்படி ஒன்னும் உன்கிட்டே ப்ரூப் பண்ணனும்னு எனக்கு ஒன்னும் அவசியம் இல்ல.. ” என்றான்.

“ப்ரூப் பண்ணினா தெரிஞ்சிருமே உன் வண்ட வாலம்” என்று அவள் முடித்திருக்கவில்லை.

அடுத்த நொடி திகழினியின் இதழை தன் முரட்டு இதழ்களால் கவ்வி இருந்தான் வேலு.

இதை சற்றும் எதிர்பார்த்திராத திகழ் அவன் தோளில் தன் பலம் கொண்ட மட்டும் அழுத்தி அவனிடம் இருந்து தன்னை பிரித்தெடுத்தவள் அவனிடம் இருந்து பின் வாங்க.

“எங்க டி போற.. வா டி இன்னிக்கு என்னை ப்ரூப் பண்ணாம உன்னை இந்த ரூமை விட்டு அனுப்பிறதா இல்ல.. ” என்று தன் சட்டையை கழட்டிக்கொண்டு அவளிடம் நெருங்கி செல்ல..

“டேய் பியே .. வேணாம் சொன்னா கேளு . நான் ஏதோ ஒரு கோபத்துல அப்படி பேசிட்டேன். பேசாம போயிரு. இல்லேன்னா என் அப்பாகிட்டே.. இல்ல போலீஸ்கிட்டே பிடிச்சு கொடுத்திருவேன் டா.. ” என்று பின்னால் நகர்ந்தாள்.

“உன் அப்பாகிட்டே, ஏன் போலீஸ்கிட்டே யார் கிட்டே வேணா போய் கம்பளைண்ட் பண்ணிக்கோ. அதுக்கு முன்ன இன்னிக்கு நமக்கு பஸ்ட் நைட் அதை முடிச்சிடறேன் . அதையும் சேர்த்து கம்பளைண்ட் கொடு” என்று எட்ட சென்றவேல் இடையை வளைத்து தன்னோடு சேர்த்து அணைத்திருந்தான்


“வேலு ப்ளீஸ் வேணாம்” என்று திகழ் பயந்து அவனைப் பார்க்க..

“இத்தனை நாள் பியேவா இருந்த நான் இப்போ தான் வேலுவுக்கு வந்திருக்கேன் . இன்னிக்கு அதை எல்லாம் தாண்டி உன் புருஷனாவும் இருக்க போறேன் டி.. ” என்றவன் அவளை அப்படியே சுவற்றில் தள்ளி இதழை கவ்வி முத்தமிட துவங்கினான்.

திகழோ வேலுவிடம் இருந்து தப்பிக்க நினைக்க.. அவனோ அவளை விடாமல்  முத்தமிட்டுக்கொண்டே அவள் மேனியில் தன் கரத்தை மேயவிட்டான்.

அவன் கை சென்ற இடம் எல்லாம் கூசியது பெண் அவளுக்கு. முதலில் அவன் முத்தத்திற்கு முரண்டு பிடித்தாள். அவள் கீழ் அதரங்களை தன் பற்களால் நசுக்கி அதில் காயத்தை ஏற்படுத்தியவன் அவளை விட்டு பிரிந்து அவள் முகத்தை பார்த்தவன் “இன்னிக்கு முழுக்க நீ தூங்க போறது இல்ல டி.. உன்னோட பூக்ஸ்ல வர ஆன்டி ஹீரோ என்ன எல்லாம் பண்ணுவானோ அது அத்தனையும் நீ இன்னிக்கு அனுபவிக்க போற..” என்றான்.

“வேலு வேணாம் டா சொன்னா கேளு” என்றாள் அவள் கெஞ்சுதலாக.

“வேணாமா? என்கிட்டே எதுவும் பிரச்சனை இருக்கான்னு பாக்கணும்னு சொன்னியே அப்போ யோசிச்சிருக்கணும் . இனி நீ கெஞ்சி எந்த ப்ரயோஜனமும் இல்ல”என்றவன் அவளைத் தூக்கிக்கொண்டு கட்டிலில் கிடத்தியவன் அவள் மேல் படர்ந்து இருந்தான் . 

அவள் கெஞ்சுவதற்கு கூட வாய்ப்பு தராமல் அவளை கட்டிலில் முழுவதுமாக தனதாக்கிக்கொள்ள அவன் ஆண்மை விழித்துக்கொண்டது.

அவனின் இந்த ஆளுமையை எதிர்த்து போராடியவள் தன்னையே மறந்து அவனை தழுவிக்கொண்டு இருந்தது அவள் கைகள்.

அவனோ அவள் உடல் முழுவதும் முத்த ஊர்வலம் நடத்தி அவளை பேச்சற்று கட்டிலில் மயங்க வைத்து இருந்தான்.

ஒரு பக்கம் அவனிடம் தான் தோற்றுபோகக்கூடாது என்று கோபம் இருந்தாலும், மறுபக்கம் அவன் தொடுதலுக்கு தன் உணர்வுகள் அப்பட்டமாக அடங்கி போய் இருப்பதைக் கண்டு அதிர்ந்து தான் போனாள் .

அவள் எதிர்வினை ஆற்றுவதை நிறுத்தி இருக்க.. அதை உணர்ந்தவன் திகழினியை முத்தமிட்டபடியே மேலேறி வந்தவன் “இவ்ளோ ஆசையை மனசுல வெச்சுட்டு என்னை பிடிக்காத மாதிரியே ஏன் டி ஸீன் போட்ட… ” என்று கேட்டபடி அவளை விட்டு தள்ளிப் படுத்தவன்.

“உனக்கு என்னை பிடிக்கும்னு உன் கழுத்துல நான் தாலி கட்டின அன்னிக்கு ராத்திரியே நான் தெரிஞ்சுகிட்டேன். நீயா வந்து என்னை பிடிச்சிருக்குனு  சொல்ல வெக்கணும்னு நினைச்சேன். நான் நினைச்சது வேற மாதிரி ஆனா நீ.. இருக்கியே எப்படி என்னை மாத்தி வெச்சிருக்கன்னு நீயே பாரு. உன்னை இப்படி பிடிவாதம் பண்ணி அடையுறதுல எனக்கு துளியும் விருப்பம் இல்ல.. அதுக்காக நான் உத்தமனும் இல்ல.. இப்படி அழகான பிகரை பொண்டாட்டியா பக்கத்துல வெச்சிக்கிட்டு சும்மாவே இருக்குறதுக்கு. உனக்கும் எனக்கும் பஸ்ட் நைட் என் வீட்ல என் பெட்ரூம்ல நடக்கும்னு நினைச்சு தான் டி உன்கிட்டே கூட சொல்லாம இந்த ஏற்பாட்டை எல்லாம் செய்தேன்.” என்று எழுந்தவன் டவலை எடுத்துக்கொண்டு பாத்ரூம் சென்றவன் அவளை திரும்பி பார்த்தான்.

அவளோ இன்னமும் அதே நிலையில் அவன் விட்டு சென்ற அதே நிலையில் படுத்திருக்க..

“நம்ம பஸ்ட்  நைட்ல என்னோட பெர்பார்மென்ஸை பாத்துட்டு அப்பறோம் டாக்டர்கிட்டே போலாமா? வேணாமான்னு முடிவு பண்ணிக்கலாம் சரியா” என்றவன் “உன்னோட ஆன்டி ஹீரோவை எல்லாம் தூக்கி சாப்பிடற பெர்பாமென்ஸ் உனக்காக காத்திருக்கு பேபி… ” என்று அவனை மூச்சிரைக்க பார்த்தவளை பார்த்து சொன்னவன் கண்டித்துவிட்டு எரிந்து கொண்டிருந்த உணர்வுகளை ஷவருக்கடியில் தனித்துக்கொள்ள சென்றுவிட..

இங்கே சும்மா இருந்தவனை தூண்டி விட்டு வாயை கொடுத்தவள் இப்பொது தனக்குள் எரிந்து கொண்டிருக்கும் உணர்வுகளுக்கு அணை போட முடியாமல் திண்டாடிக்கொண்டிருந்தாள்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured