Home Uncategorizedஎன்னை கொண்டாட பிறந்தவனே 16

என்னை கொண்டாட பிறந்தவனே 16

by Layas Tamil Novel
337 views

ENNAI  16

“அண்ணா என்ன சொல்றீங்க  என்ன தேடிட்டு அந்த ராகேஷ் விஜய் சார் ஆபீஸ்க்கு வந்துட்டானா!! ஐயய்யோ!! நான் இங்க இருக்குற விஷயம் அவனுக்கு தெரிஞ்சிருச்சா.. இப்ப நான் என்ன பண்ணுவேன்”  என்று  அர்ஷ் சொன்னதைக் கேட்டு பதறினாள் இனியா .

“இனியா இப்போ எதுக்கு இவ்வளவு கடத்தப்படுற  நீ நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவும் நடக்கல கவலைப்படாத அந்த ராகேஷ்  வாயை விஜய் அடச்சிட்டான் “என்றான்  அர்ஷ் .

அவன் சொன்னதே புரியாமல்  இனியா ” போச்சு போச்சு இப்ப நான் என்ன பண்ணுவேன் தயவுசெய்து எனக்கு வேற ஏதாவது ஒரு நல்ல பாதுகாப்பான இடம் இருந்தா நீங்க சொல்லுங்க அண்ணா. நான் அங்க போய் இருந்துகிறேன். என்னால விஜய் சாருக்கு எந்த தொந்தரவும் வேண்டாம். அந்த ராகேஷ் லேஸ் பட்டதும் கிடையாது .  என்ன ஏலத்துல இருந்து எடுத்துட்டு அவனோட கெஸ்ட் ஹவுஸ்க்கு தான் என்ன கூட்டிட்டு போனான் அங்கே இருக்கிற ஆளுங்க ஒவ்வொருத்தரும் பனைமரம் மாதிரி பெருசா இருந்தாங்க அவங்களை எல்லாம் பார்த்தாலே ரொம்ப பயமா இருக்கும்” என்று  புலம்பினாள்.

“ஐயோ இனியா இப்போ  எதுக்கு இவ்வளவு பதட்டப்படுற  நீ பயப்படுற மாதிரி எல்லாம் எதுவும் நடக்காது . நீ அந்த ராகேஷ் கிட்ட இருக்கிறார் என்றால் நான் பார்த்திருக்கேன் நம்ம விஜய்யோட பாடி   கார்ட்ஸை  பார்த்ததில்லையே” என்றான் .

“ம்ஹும்… இல்லை” என்று இனியா தலையாட்ட..

“அது சரி உன்ன நாங்க ஹாஸ்பிட்டல் இருந்து அந்த வளர்ந்து கெட்டவன் கிட்ட மாட்டிக்காம தூக்கிட்டு வரும்போது நீ தான் மயக்கத்திலே இருந்தியே ” என்றவன் “ஏர்போர்ட்ல நம்ம பிலைட்டை விட்டு இறங்கி கார்ல ஏறி கிளம்பும்போது அங்கே நிறைய வாட்ட சாட்டமான ஆளுங்க எல்லாம் வந்து நம்மள பத்திரமா கார்ல ஏத்தி அனுப்பி வச்சாங்களே ஞாபகம் இருக்கா?” என்றான் அர்ஷ் .

“ம்ம்ம்… ஞாபகம் இருக்கு அண்ணா ” என்றாள் .

“ம்ம்ம்… அவங்க தான் விஜய் ஓட காட்ஸ் அவங்க பாக்குறதுக்கு  நார்மலா இருக்கிற மாதிரி தான் இருக்கும் ஆனா அவங்கள ஸ்பெஷல் கோர்ஸ்ல ட்ரைனிங் எடுத்துக்கிட்டு விஜய்க்கு பாடிகார்டா வந்து இருக்காங்க .  அவங்க இருக்கும்போது யாரையும் அவங்கள தாண்டி விஜய்யையோ உன்னையோ தொட முடியாது” என்றான்.

அர்ஷ் சொன்னதைக் கேட்டு  இனியா வாயை பிளக்க   அதைப் பார்த்து சிரித்தவன் . “எவ்வளவு வெள்ளந்தியா இருக்கா இப்ப இவ்வளவு போயி இந்த மாதிரி ஒரு இடத்துல  மாட்டி விட்டுட்டாங்களே அவன் மட்டும் என் கையில கிடைச்சா சும்மா விடமாட்டேன்” என்று இனியாவின் இவ்வளவு கஷ்டத்திற்கும் காரணமானவனை நினைத்து கோபப்பட்ட அர்ஷ் அதை அவளிடம் காட்டிக் கொள்ளாமல் .

“பயப்பட வேண்டியது இல்ல ஏன்னா அந்த ராகேஷ் உன்னை பத்து கோடிக்கு ஏலத்துல எடுத்துன்னு வந்து விஜய் கிட்ட சொன்னப்போ அதைவிட எத்தனை மடங்கு வேணா அதிகமா குடுக்குறேன்னு சொல்லி ஒரு பிளான்க்  செக்கில்  கையெழுத்து போட்டு அவன் மூஞ்சில தூக்கி எறிஞ்சிட்டான் .  அந்த  ராகேஷும்  பிளாங்க் செக்க பாத்ததும் நாய் மாதிரி வாலாட்டிக்கிட்டு அதை வாங்கிட்டு இனிமேல் உனக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு விஜய்கிட்ட சொல்லிட்டு அங்கிருந்து கிளம்பிட்டான்.  அதனால இனிமேல் நீ ராகேஷ்  உன்னை வந்து தூக்கிட்டு போவான் என்று  பயப்பட வேண்டிய அவசியம் இல்லை .  நீ எங்க வேணாலும் நிம்மதியா  போகலாம்.  இந்த ஊரு சுத்தி பாக்கலாம் ”  என்றான் .

“என்ன அண்ணா சொல்றீங்க நீங்க சொல்றதெல்லாம் என்னால நம்பவே முடியலையே ..  இப்போ அந்த ராகேஷ் என்ன தேடி வர மாட்டானா!! அவன் கூட என்ன கூட்டிட்டு போறேன்னு எந்த பிரச்சனையும் பண்ண மாட்டானா ?” என்றாள்  ஆர்வமாக .

“ஆமா இனியா   ராகேஷால் இனிமேல் எந்த பிரச்சனையும் வராது . நீ என்ன செய்யணும் நினைக்கிறியோ அதை செய்.  கண்டிப்பா நானும் உனக்கு சப்போர்ட் பண்ணுவோம்” என்றான் அர்ஷ் .

“நீங்க சொல்றதெல்லாம் நான் என்னால நம்ப முடியல ஆனா எனக்காக விஜய் சார் நான் செக்குல கையெழுத்து போட்டு கொடுத்திருக்கார்ன்னு நினைக்கிறப்போ எனக்கு பேச்சு வர மாட்டேங்குது .  அவர் எனக்கு செஞ்ச உதவிக்கு நான் அவருக்கு என்ன நன்றி கடன் செலுத்த போறேன்னு தெரியல” என்று குரல்  தழு தழுக்க  கூறினாள்.

“நீ எந்த நன்றி கடனில் செய்ய வேண்டாம் என்கிட்டயும் இந்த வீட்டில் இருக்கிறவங்ககிட்டயும் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியே போகாமல் இங்கேயே இரு அது போதும்” என்றபடி உள்ளே நுழைந்தான்  விஜய் .

“என்ன விஜய் அப்படி சொல்ற ..  அந்த ராகேஷ் தான் இனியா இருக்கிற பக்கமே தலை வைத்து படுக்க மாட்டேன்னு சொல்லிட்டானே அப்புறம் என்ன இனியாவுக்கு என்ன தேவையோ அதை செய்து கொடுக்க வேண்டியதுதானே. அவ படிக்கிறேன் என்று சொன்னா படிக்கட்டும் இல்ல வேற எதுவும் புதுசா கத்துக்குறேன்னு சொன்னா அதை செய்யட்டுமே” என்றான் அர்ஷ் .

“புரியாம பேசாத அர்ஸ் நம்ம கொடுத்த பிளாங்க் செக்கை ராகேஷ் வாங்கிட்டு  போயிட்டான்னதும் அவன்   இனியாவது எதுவும் செய்ய  மாட்டான்னு நீ எப்படி சொல்ற . அவ நான் கொடுத்த  பிளாங்க் செக்கை வாங்கிட்டு போனதுக்கு காரணமே அவன நம்ம முழுசா நம்பனுங்கறது தான் அவனோட பிளான் ” என்று சொன்ன விஜயை பார்த்து  இனியாவும் அர்ஷும் அதிர்ச்சி அடைந்தவர்கள் ஒருவரை ஒருவர் திரும்பி பார்த்துக் கொண்டனர் .

என்ன ரெண்டு பேருக்கும் ஷாக் ஆயிடுச்சா என்று பேசிக்கொண்டே தன் பாக்கெட்டில் இருந்தால் சிகரெட்டை எடுத்து வாயில் வைத்து  பற்ற வைத்தவன் அங்கிருந்து சோபாவில் வந்து அமர்ந்து “நான் சொல்றத ரெண்டு பேரும் கவனமா கேட்டுக்கோங்க ராகேஷ் அவ்வளவு சீக்கிரத்தில் எந்த ஒரு விஷயத்தையும் விட்டுக் கொடுக்கிற ஆள் கிடையாது . ஹியூமன் டிராபிக்ல இனியாவ இவ்வளவு பணம் கொடுத்து அதுவும் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கி இருக்கானா அவனுக்கு இனியா மேல எவ்வளவு இன்ட்ரஸ்ட் இருந்திருக்கணும் அதை நீ யோசிக்கலையா?” என்றான் அர்ஷை பார்த்து .

“விஜய் அப்போ அந்த ராகேஷ்னால இனியாவுக்கு ஆபத்து இருக்குன்னு சொல்றியா?” என்றான் அர்ஷ்.

“ஆமா கண்டிப்பா அந்த ராகேஷ் இனியாவை நாம மறைத்து வைத்திருக்கிற இடத்தை கண்டிப்பா தேடி கண்டுபிடிப்பான்.போ போ அவங்க பவர்ல எழுதி எப்படியாவது பிளான் போட்டு நம்ம கண்ணுல மண்ண தூவிட்டு இனியாவை அவன் கண்டிப்பாக தூக்கிட்டு போயிடுவான்” என்றான்  விஜய் .

“நீ சொல்றதும் கரெக்ட் தான் விஜய் இப்போ என்ன செய்றது நம்ம  இனியாவை வேற எங்கேயாவது பாதுகாப்பான இடத்துல கூட்டிட்டு போய் மறைத்து வச்சிடலாமா ?” என்றான்  அர்ஷ் .

இவர்கள் இருவரும் மாறி மாறி தன் பாதுகாப்பை பற்றி தீவிரமாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்த இனியாவிற்கு   தன்னால் விஜய்க்கும் அர்ஷுக்கும்  தேவையில்லாத கஷ்டம் என்று முடிவு செய்தவள் .

“போதும் ரெண்டு பேரும் மாத்தி மாத்தி என்ன குத்தியே யோசிச்சிட்டு இருக்கீங்களே அந்த ராகேஷ்னால உங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது ஆபத்து வந்து வந்தா அதை எப்படி சமாளிக்கணும்னு கொஞ்சம் வருது யோசிச்சீங்களா எனக்காக யாரும் எதுவும் செய்ய வேண்டாம்” என்றவள் விஜய்யை பார்த்து

“சார்  நான்  இங்கே இருந்தா   வீணா  உங்களுக்கும் அண்ணாவுக்கும் தான் பிரச்சனை . என்ன ஏதாவது ஒரு லேடீஸ் ஹாஸ்டல்ல கொண்டு போய் சேர்த்து விட்டுடுங்க … அப்படியே வேலைக்கு வாங்கி  கொடுத்துட்டீங்கன்னா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன். இல்லையா பேசாம நான் இங்கே இருந்து போயிடுறேன் .  அந்த ராகேஷ் கண்ணுல படாம நான் எங்கேயாவது தலைமுறை வா இருந்துக்கிறேன் . வீணா என்னால உங்களுக்கும் கஷ்டம்” என்றவள் அங்கிருந்து உடனே செல்ல போக ” .

இனியா பேசியதே கேட்டு கோபமடைந்து விஜய் அங்கிருந்து செல்லப் போனவர்களின் கையைப்பிடித்து வேகமாக இழுத்தவன் அவள் கன்னத்தில் ஓங்கி பலார் என்று ஒரு அறை விட்டிருந்தான் .

அதை இனியாவோ  அர்ஷோ இருவருமே எதிர்பார்க்கவில்லை . கன்னத்தில் கைவைத்தபடி கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்க  இனியா  நின்று இருக்க …

“உன்  மனசுல நீ என்ன நெனச்சிட்டு இருக்க … நீ பாட்டுக்கு  இங்கிருந்து கிளம்பி போற … இங்க பாரு உன்ன இப்போ அந்த ராகேஷ் கிட்ட இருந்து நான் விலை கொடுத்து வாங்கி இருக்கேன். நீ இந்த வீட்டை விட்டு போகணுமா? வேண்டாமான்னு நான் தான் முடிவு பண்ணனும் .  என்னோட  பர்மிஷன் இல்லாம இந்த வீட்டை விட்டு காலை எடுத்து வச்ச உன் கால ரெண்டையும் வெட்டி போட்டு விடுவேன்” ஜாக்கிரதை என்றான் கோபத்தில் உச்சத்தில் .

அவன் கோபத்தைக் கண்டு இனிய அரண்டு போய் நிற்க …  அதை அரசு தினம் தினம் பார்த்து இருந்தாலும் இன்றைய விஜய்யின் கோபம் வழக்கத்தைவிட  சற்று காட்டமாகத்தான் இருந்தது .

இனியாவிற்கு மற்றவர்கள் முன்பு தன்னை பேசினால் பிடிக்காது என்று இருந்துபோதில் இப்போது அனைவரும் முன்னிலையிலும் இனியாவை கைநீட்டி விஜய் அடித்திருக்க அவளுக்கு  அனைவரும் முன்னிலையிலும் தன்னை விஜய் அடித்து விட்டானே என்று  அவன்  மீது கோபம் வந்தது அந்த கோபம் கண்ணீராக வெளிப்பட கன்னத்தில் கை வைத்த படி தன் அருகில் நின்றிருந்த அர்ஷை திரும்பி பார்த்தாள் .

அவளைப் பார்த்து கண்கள் மூடி திறந்தவன் நான் இருக்கிறேன் என்று  இனியாவை சமாதானம் செய்துவிட்டு  விஜய் அருகில் வந்தவன் .

” விஜய் இப்போ எதுக்கு நீ இவ்ளோ டென்ஷன் ஆகற அவதான் சின்ன பொண்ணு நின்னு பேசறதுன்னு தெரியாம எது எது ஓடிட்டு வீட்டை விட்டு போறேன்னு நினைக்கிறேன் அதுக்காக அவளை கைநீட்டி அடிப்பியா அவளுக்கு நம்மள விட்டா யார் இருக்கா . கொஞ்சம் பொறுமையா எடுத்துச் சொன்னா புரிஞ்சுக்க போறா ” என்றான் .

“இங்க பாரு அவ ஒன்னும் சின்ன பொண்ணு கிடையாது. சும்மா அவள சின்ன பொண்ணு சின்ன பொண்ணுன்னு சொல்லி இப்படியே வச்சுக்கலாம்னு நினைச்சிட்டியா ?   இந்த வீட்டை விட்டுவிட்டு  போகணும்ங்குற நினைப்பே இவளுக்கு வரக்கூடாது . நானா எப்போ அவளை வெளியே போலாம்னு சொல்றேனோ இப்பதான் இந்த வீட்டை விட்டு வெளியே போகணும். அதுவரைக்கும் இவ இந்த  காம்பவுண்ட விட்டு வெளியே போகக்கூடாது. அதுக்கு நீ தான் பொறுப்பு அப்படி என் பேச்சையும் மீறி இனியா இந்த வீட்டை விட்டு வெளியே போயிட்டான்னா  அதுக்கு பிறகு  அவளுக்கு என்ன நடந்தாலும் அது பத்தி நான் கவலைப்பட மாட்டேன் . மறுபடியும் என்கிட்ட வந்து உதவி வேணும்னு வந்து நின்னா நான் சட்டை பண்ணாமல் போய்க்கிட்டே இருப்பேன்” என்றான்.

“ஏன்டா இப்போ தேவையில்லாம இவ்வளவு டென்ஷன் வாங்கிட்டு இருக்க இந்த வீட்டை விட்டு போகாதேன்னு சொன்னா அவ கேட்டுக்க போற என்றவன் ஏன் இது ஏன் அப்படித்தானே விஜய் சொல்லாம இந்த வீட்டை விட்டு வெளியே போக மாட்டேன் தானே  என்றால் இனியாவை  பார்த்து .

” அவள் இன்னுமும் தேம்பி கொண்டு நின்றிருக்க அதை பார்த்து கோபமடைந்து விஜய் அவள பாருடா நீ இவ்வளவு சப்போர்ட் பண்ணி அவளுக்காக பேசுற சரின்னு ஒரு வாட்டி தலையை ஆட்டுராளான்னு பாரு. என்னவோ அவளுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி நம்ம வேற யாரையும் பேசிட்டு இருக்குற மாதிரி இல்ல நிக்கிறா . இவளுக்கு வெளி உலகமே தெரியல அதனாலதான்  இப்படி ஹியூமன் டிராபிக் வரைக்கும் போய் மாட்டி இருக்கா  இவள …”என்று மீண்டும் அவளை அடிப்பதற்காக விஜய் கையை ஓங்க.

” டேய் … டேய் … என்னடா பண்ணிட்டு இருக்க இது என்ன புதுசா இப்படி கோவம் வருது உனக்கு அப்படியே கோபம் வந்தாலும் இப்படித்தான் கை நீட்டுவியா?” என்று குறுக்கே புகுந்து விஜய்யின் கையைப்பிடித்து தடுத்த அர்ஷ் .

இனியாவை பார்த்து ”  என்ன இனியா நான் சொன்னது காதுல விழுந்துச்சா இல்லையா இனிமேல் விஜய் பர்மிஷன் இல்லாமல் இந்த வீட்டை விட்டு நீ வெளியே போக மாட்ட தானே” என்றான் .

இந்த முறை அரஷ் கேட்டு முடிப்பதற்குள் வேகமாக  இல்லை என்று தலையை இடவலமாக ஆட்டினாள் .

“பாரு உன் பேச்சை மீறமாட்டேன்னு   சொல்லிட்டா . அவ கண்டிப்பா உன் பேச்சைக் மீறி எதுவும் செய்ய மாட்டா” என்றான் .

இப்போதுதான் சற்று இனியாவின் பதில் சமாதானமான விஜய் “நீங்க அங்க  அப்படியா நான் இப்படி தள்ளிக்கு வந்துட்டா கூட கொஞ்சம் தான் இருக்கும் இல்ல சரி நான் போய் ரெஸ்ட் எடுக்கிறேன். அம்மா எதுவும் கால் பண்ணா ஆபீஸ்ல முக்கியமான வேலையா இருக்கேன்ன்னு சொல்லிடு நான் இன்னைக்கு வீட்டுக்கு போகல” என்றான்  விஜய் .

“ஆமா நானே கேட்கணும்னு நினைச்சேன் அந்த ராகேஷ் கிளம்புன கொஞ்ச நேரத்துல வம்சி உன்ன பாக்க வந்தானே இதுவும் முக்கியமான விஷயமா அவன் வந்துட்டு போனதுக்கு பிறகு தான் நீ இவ்வளவு கோபமா இருக்க என்ன ஆச்சு எதுவும் சீரியஸ் ப்ராப்ளமா” என்றான் அர்ஷ்.

“அத பத்தி எதுக்கு இப்போ கேட்டுட்டு இருக்க அது முடிஞ்சு போன கதை” என்றவன்  தன் அறைக்கு சென்றான் .

விஜய்யின் கோபமும் அவன் மனநிலையையும் கணித்த ஹர்ஷ் வம்சி வந்து தாமரையை பற்றி தான் ஏதாவது அவனிடம் பேசி இருக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டான் ஏற்கனவே அவளை வம்சி திருமணம் செய்து கொண்டது விஜய்க்கு  தாங்க முடியாத ஒரு  வலியை ஏற்படுத்தி விட்டது .

அந்த டென்ஷனில் தான் வந்து இனியாவை அடிக்கவும் செய்து விட்டான் என்று புரிந்து கொண்ட அர்ஷ . மாடி படிகளில் ஏறி மிகவும் சோர்ந்து போய் தன்னடைக்கு சென்று இருப்பவனை பார்த்த அர்ஷ் பெருமூச்சு விட்டவன்.

“இனியா விஜய் சொன்னதை எல்லாம் நல்லா கேட்டுக்கிட்டு தானே அவன் பர்மிஷன் இல்லாமல் நீ எங்கேயும் போகக்கூடாது வரக்கூடாது சரியா என்றவனும் சரி நேரமே சாப்டுட்டு படுத்து தூங்கு நான் போயிட்டு காலையில வரேன்” என்று சொல்லி ஆஷா அங்கே இருந்து கிளம்பினான்.

அவன் சென்றதும்  வேலையாட்களை எல்லாம் அனுப்பி வைத்துவிட்டு வந்து வழக்கம் போல சோபாவில் படுத்து உறங்க ஆரம்பித்திருந்தாள்  இனியா

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured