EPISODE 15
வம்சியம், தாமரையும் பிரிவதாக முடிவு செய்து டிவேர்ஸ் அப்ளை செய்த பேப்பரை கொண்டு வந்து விஜய்யிடம் கொண்டு வந்து காட்டியவன் . தாமரைக்கும் , விஜய்க்கும் வம்சியே வீட்டில் இருப்பவர்களிடம் பேசி திருமணம் செய்து வைப்பதாக கூறுகிறான் .
அதை கேட்டதும் விஜய்க்கு மேலும் அதிர்ச்சி ஆனது . அவன் வம்சி சொன்னதை நம்பமுடியாமல் உறைந்து போய் நின்று இருந்தான் .
“என்ன விஜய் எவ்ளோ பெரிய விஷயத்தை சொல்லிட்டு இருக்கேன் . நீ எதுமே பேசாம நின்னுட்டு இருக்க ” என்று விஜய்யை பார்த்தான் .
அதே அதிர்ந்த விழிகளோடு வம்சியை பார்த்தவன் அவன் அருகில் நெருங்கி வந்து “என்ன வம்சி சொல்றே… இது உண்மையா ? ” என்று தன் கையில் இருந்து விவாகரத்து பத்திரத்தை அவன் முன் காட்டி கேட்டான் .
“ஆமா விஜய் அதை தான் நான் வந்ததுல இருந்து சொல்லிட்டு இருக்கேன் ” என்றான் வம்சி .
“என்ன டா வம்சி பண்ணி வெச்சிருக்க… உன்னை யார் இந்த மாதிரி ஒரு வேலையை பார்க்க சொன்னது . யாரை கேட்டு நீ இந்த முடிவை எடுத்த ” என்று கோபத்தில் அவன் சட்டையை பிடித்து இருந்தான் .
தனக்கும், தாமரைக்கும் விவாகரத்து வாங்கிய விஷயம் விஜய்க்கு தெரிந்தால் அவன் கண்டிப்பாக சந்தோசத்தின் எல்லைக்கே போய்விடுவான் என்று வம்சி நினைத்து இருந்தவன் . இப்பொது விஜய் கோபத்தின் எல்லையில் தன் சட்டையை பிடித்திருக்க அவனை புரியாமல் பார்த்தான் .
“ஏன் விஜய் இவ்ளோ கோபப்படுறே… நீ கோபப்படுற அளவுக்கு நான் ஒன்னும் பெரிய விஷயத்தை பண்ணலையே ” என்று தன் சட்டையில் இருந்து அவன் கையை எடுத்துவிட போக..
அவன் சட்டையை இறுக்கி பிடித்து “எது டா பெரிய விஷயம் இல்லை… நீ என்ன பண்ணி இருக்கேன்னு உனக்கு தெரியுமா ? நம்ம குடும்பத்துல இத்தனை வருசத்துல யாராவது ஒருத்தர் டிவேர்ஸ்ன்னு போயிருப்பாங்களா .. சொல்லு. ஆனா நீ ரொம்ப சாதாரணமா உனக்கும் , தாமரைக்கும் விவாகரத்து வேணும்னு எழுதி கொடுத்துட்டு வந்திருக்கேன்னு சொல்றே.. என்ன இதெல்லாம் . இதுக்கு எப்படி தாமரை சம்மதிச்சா என்னாலையே இதை தாங்கிக்க முடியலை . தாமரை எப்படி இதை தாங்கிகிட்டா . அவ எப்படி இதுக்கு சம்மதிச்சா ” என்றான் இன்னமும் வம்சி சொன்னதை நம்ப முடியாமல்.
“முதல்ல என் சட்டையில் இருந்து கையை எடு விஜய். என்னவோ நான் வேணும்னு டிவேர்ஸ்க்கு அப்ளை பண்ணினமாதிரி பேசிட்டு இருக்க.. தாமரை என்கிட்டே டிவேர்ஸ் வேணும்னு கேட்டா . உங்க ரெண்டு பேர் வாழ்க்கையும் என்னால வீணாகிடக்கூடாதுன்னு நான் இதுக்கு சம்மதிச்சு டிவேசர்ஸ் அப்ளை பண்ணிட்டேன் ” என்றான் வம்சி .
“என்ன! தாமரை உன்கிட்டே டிவேர்ஸ் வேணும்னு சொன்னாளா ! ” என்றான் விஜய் நம்பமுடியாமல் .
“ஆமாம் ” என்றான் வம்சி மிகவும் சாதாரணமாக .
“டேய் அவ தான் முட்டாள் தனமா விவாகரத்து வேணும்னு கேட்டான்னு நீயும் கொடுத்திருக்க… கொஞ்சமாவது யோசிச்சு பார்த்திருக்க வேணாமா டா ” என்றான் கொஞ்சமும் கோபம் குறையாமல் .
வம்சிக்கு ஒன்றும் விளங்கவில்லை எதற்க்காக விஜய் இவ்வளவு கோபப்படுகிறான் . அவனுக்கு நல்லது தானே பண்ணி இருக்கிறேன் என்று யோசித்த வம்சி ” ஏன் விஜய் இவ்ளோ கோபப்படுற… நியாப்படி நானும் தாமரையும் பிரியுறதை நினைச்சு நீ சந்தோசம்தானே படனும் அதை விட்டுட்டு இப்படி கோபப்படுறே… சொல்லப்போனா உனக்கும் தாமரைக்கும் நான் நல்லதுதானே பண்ணியிருக்கேன் ” என்று தன் மனதில் எழுந்த கேள்விகளை விஜய்யிடம் நேரடியாக கேட்டேவிட்டிருந்தான் வம்சி .
” டேய் என்ன டா நல்லது பண்ணி இருக்க முட்டாள்… முட்டாள் … முட்டாள் நீயும் தாமரையும் பிரியுறது எனக்கு சந்தோசத்தை கொடுக்கும்னு யார் உன்கிட்டே சொன்னது ” என்றான் விஜய் .
“யார் சொல்லணும் விஜய் . நீயும் தாமரையும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறீங்க தானே . அப்போ நான் தாமரையை விட்டு விலகி போறது உனக்கு சந்தோசத்தை தானே கொடுக்கணும் ” என்றான் வம்சி .
” டேய் புரியாம சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லாத… நானும் தாமரையும் காதலிச்சது உண்மை தான் . அதுக்காக நீ தொட்டு தாலி கட்டின பிறகு நான் எப்படி டா தாமரையை முன்ன மாதிரி நினைக்க முடியும் ” என்றான் விஜய் .
“என்ன சொல்றே விஜய் எனக்கு புரியலை” என்றான் வம்சி .
” ஐயோ வம்சி நான் சொன்னது உனக்கு புரிஞ்சுதா? இல்லையா?” என்று தலையை பிடித்துக்கொண்டு சோபியாவில் அமர்ந்தான் விஜய் .
“விஜய் நீ என்ன சொல்ல வர.. எனக்கு ஏதும் புரியலை . நீயும் தாமரையும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறீங்க தானே ?” என்றான் மீண்டும் அதே கேள்வியை கேட்டு .
“ஐயோ கடவுளே ! நான் என்ன சொல்லி இவனுக்கு புரியவைப்பேன் ” என்று எழுந்தவன் ” டேய் வம்சி நானும் , தாமரையும் முன்ன காதலிச்சது உண்மைதான் . அவ கழுத்துல நீ எப்போ தாலி காட்டுனியோ அப்போவே நான் அவ மேல வச்சிருந்த காதலை குழி தோண்டி புதைச்சிட்டேன் ” என்றான் .
” விஜய் என்ன இப்படி சொல்ற… தாமரை உன்னை நினைச்சிட்டு நீதான் வேணும்னு இவ்ளோ பெரிய முடிவை எடுத்திருக்கா . ஆனா நீ என்னவோ ரொம்ப சாதாரணமா அவ மேல நீ வெச்சிருந்த காதலை குழிதோண்டி புதைச்சிட்டேன்னு சொல்ற ” என்றான் வம்சி அதிர்ச்சி மாறாமல் .
” டேய் என்னை வேற என்ன செய்ய சொல்லற …” என்றான் விஜய் .
“விஜய் நீயும் தாமரையும் மனசார ஒருத்தரை ஒருத்தர் விரும்புறீங்க.. அப்பறோம் ஏன் இப்படி எல்லாம் பேசுற நீ . என்ன காரணத்துனால நீ தாமரையை இப்போ வேணாம்னு சொல்ற… அதை எனக்கு முதல்ல சொல்லு ” என்று வம்சி விடாமல் விஜய்யிடம் கேள்வி கேட்டான் .
“காரணமா… காரணமா வேணும் உனக்கு … நான் தாமரை மேல எனக்கு இருந்த காதலை குழி தோண்டி புதைச்சதுக்கு காரணமே நீ தான் டா…” என்று கத்தினான் விஜய் .
“நான் காரணமா !… நான்…நான் அவ கழுத்துல தாலி கட்டினதை தவிர வேற என்ன தப்பு செய்தேன் விஜய் ” என்றான் விஜய்யை பார்த்து .
“இது ஒன்னு போதாதா வம்சி . நீ கட்டின தாலி தாமரை கழுத்துல இருக்கு. தாமரை என் தம்பியோட மனைவி . என் தம்பி மனைவியை நான் எப்படி காதலிக்க முடியும் . ” என்று உள்ளம் வெடித்து சுக்குநூறாக சிதறியபடி வந்து விழுந்தது விஜய்யின் அந்த வார்த்தைகள் .
விஜய் சொன்னதை கேட்டு வம்சிக்கு எப்படி ரியாக்ட் பண்ணுவது என்று தெரியவில்லை . அங்கே தாமரை விஜய்யுடன் வாழ வேண்டும் என்று தன்னை விவாகரத்து செய்ய தயாராகிவிட்டாள் . இங்கே விஜய் தாமரையை இனி பழையபடி நினைக்க முடியாது என்று சொல்லிவிட்டான் . இவர்கள் இருவரின் மனநிலையும் இப்படி இருக்க தான் இதில் என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நின்றான் வம்சி .
“என்ன வம்சி அமைதியாகிட்டே .. நான் சொன்னதை நல்லா கேட்டுகிட்டே தானே இதையே நீ தாமரைகிட்டே போய் சொல்லு . அவ புரிஞ்சுப்பா இனி என்னையும் தாமரையையம் சேர்த்து வைக்குறேன் . அவளை விவாகரத்து பண்ணுறேன்னு சொல்லிட்டு இருக்காதா…
“இல்ல… இல்ல விஜய் அது வந்து… தாமரை.. ” என்று வம்சி பேச வர…
அவனை பேசவிடாமல் தடுத்த விஜய் ” தாமரை இப்போ என்னோட காதலி கிடையாது . அவ இப்போ என் தம்பியோட பொண்டாட்டி . உன்னோட மனைவி . ஒழுங்கா ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து வாழுற வழியை பாருங்க . டிவேர்ஸ் அது இதுனு சொல்லிட்டு இருக்காதிங்க சரியா … முதல்ல டிவேர்ஸ்க்கு அப்ளை பண்ணினதை வாபஸ் வாங்குங்க ” என்றான் விஜய் .
“விஜய் அப்போ உன்னோட வாழ்க்கை . தாமரை உன்கூட வாழணும்னு கனவு கண்டுட்டு இருக்காளே அவளோட நிலைமை ” என்றான் வம்சி .
“வம்சி நான் சொல்லிட்டு இருக்கிறது உனக்கு புரியுதா? இல்லையா ? அவ உன் மனைவி உனக்கு மட்டுமே சொந்தமானவ … இனிமேல் இந்த மாதிரி என்னையும் அவளையும் சேர்த்து வெச்சு பேசாத புரிஞ்சுதா ” என்றவன் “மறுபடியும் சொல்றேன் நல்லா கேட்டுக்கோ.. தாமரை உன்னோட பொண்டாட்டி அவளை யாருக்காககவும் நீ விட்டுக்கொடுக்க கூடாது . நான் சொல்றதை சொல்லிட்டேன் அப்பறோம் உன்னோட இஷ்டம் ” என்று அவன் ஆபீசை விட்டு வெளியியேறி இருந்தான் விஜய் .
இங்கே அவன் பேசிவிட்டு சென்றதை எல்லாம் கேட்டு என்ன செய்வது தாமரையிடம் விஜய் சொன்ன விஷயங்களை எப்படி சொல்லி புரியவைப்பது என்று தெரியாமல் விஜய் ஆஃபீஸை விட்டு வெளியேறி இருந்தான்.
…
விஜய் பேசியது எல்லாம். தன் மனதில் ஒடவிடப்படி சோபாவில் சாய்ந்து அமர்ந்திருந்தான் வம்சி.
இரவு அதிதியுடன் கிட்சன் வேலையெல்லாம் முடித்துவிட்டு தன் அறைக்குள் நுளைந்த தாமரை, வம்சி கண்கள் மூடி அமர்ந்திருத்ததை பார்த்தவள் அவன் அருகில் வந்தாள் .
தன் பக்கம் நிழல் ஆடுவதை உணர்ந்தவன் கண்களை திறந்து பார்க்க…
அவன் முன் அரக்கு கலர் அடிதார் அணிந்து அவன் கட்டிய தாலி அவள் மார்பை உரசிக்கொண்டு இருக்க… தன் அருகில் நின்றிருந்தவளை நிமிர்ந்து பார்த்தான்
“என்ன வம்சி மாமா எப்போ வந்தீங்க ? ஏன் இங்கே உட்கார்ந்து இருக்கீங்க? ” என்றாள் தன் ஷாலால் முகத்தில் வழிந்த வியர்வையை ஒற்றி எடுத்தபடி.
“நான் வந்து கொஞ்ச நேரம் தான் இருக்கும் தாமரை” என்றான்.
“அப்படியா நீங்க வந்ததை நான் கவனிக்கவே இல்லை” என்றவள். அவன் முகம் ஒரு மாதிரி இருப்பதைக் கண்டு அவனை நெருங்கி வந்தவள்
“என்ன வம்சி மாமா உங்க முகம் ஏன் டல்லா இருக்கு உடம்புக்கு எதுவும் முடியலையா?” என்று அவன் நெற்றியை தொட்டுப் பார்த்தாள்.
அவள் அக்கறையாக வம்சியின் உடல் நலன் பற்றி விசாரிப்பதைப் பார்த்தவன். தன் நெற்றியில் இருந்த அவள் கையை எடுத்துவிட்டு.
“தொட்டு பேசக்கூடாதுன்னு எனக்கு மட்டும் தன் ரூல்ஸ் போடுவியா தாமரை. அது உனக்கும் பொருந்தும் தானே” என்று அவளைப் பார்த்தான்.
வம்சி அப்படி சொன்னதும் அவன் கைப்பிடிக்குள் இருந்த அவள் கையை விளக்கிக் கொண்டவள்.
“சாரி… நான் நமக்கு கல்யாணம் நடந்ததையே மறந்துட்டேன். இன்னமும் நாம பழைய மாதிரி பேசிப்பழகுற நினைப்பிலயே…” என்று தயங்கியபடி அவனைப் பார்க்க….
“அதே உரிமையில் தான் நீ அன்னிக்கு உன் தலையில் அடிச்சுட்டு உன் வாழ்க்கையே வீணாப்போயிடுச்சேன்னு அழுத அப்போ. உன் வாழ்க்கை இப்படி ஆனதக்கு, நானும் ஒரு காரணம் ஆகிட்டேன்னு வருத்தத்துல உன்னை நீயே காயப்படுத்திரக் கூடாதுன்னு தான் உன் கையைப் பிடிச்சேன் தாமரை” என்றான்.
வம்சி பேசியதும் தாமரை அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினாள்-
“தாமரை நீயும், நானும் நமக்கு இந்த வாழ்க்கை . ஒத்து வராதுன்னு முடிவு பண்ணி ரெண்டு பேரும் சேர்ந்து டிவோர்ஸ் அப்ளை பண்ணிட்டோம். அதனால….” என்று வம்சி தாமரையைப் பார்க்க…
“சொல்லுங்க மாமா…ஏன் தயங்குறீங்க” என்றாள்.
“அதனால் நமக்கு விவாகரத்து கிடைக்குற வரை நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடந்ததை மறந்துட்டு முன்ன நம்ம எப்படிப் பேசிப் பழகினோமோ…அதே போல இருக்கலாம்” என்றான். அவளை ஒருவித எதிரிபார்ப்போடு பார்த்து தாமரை என்ன பதில் சொல்லப்போகிறாள் எண்து பார்த்தது.
“அம்மு இதை சொல்ல ஏன் இவ்வளவு தயங்கற ” என்றாள் சிரித்துக்கொண்டே.
அவள் முன்பு தன்னை பட்டப் பெயர் வைத்து அம்மு என்று கூட்பிடுவதுபோல இப்போது கூப்பிட்டதும். சந்தோஷமானவன் சோபாவில் இருந்து எழுந்து ” என்னைப் புரிஞ்சுக்கிட்டதுக்கு ரொம்ப சந்தோஷம் தாமரை” என்று அவள் கையை உணர்ச்சிப் பெருக்கில் பிடித்துவிட்டான்.
அப்போது தாமரை வம்சியை முறைத்தாள் . “இப்போ தானே சந்தோஷமா என்கிட்ட சிரிச்சு பேசினா அதுக்குள்ள என்ன ஆச்சு இவளுக்கு ” என்று புரியாமல் அவளை பார்த்தான்.
” ஏன் அம்மு நீ சொன்னதும் நான் உன்னை பழையமாதிரி அம்முன்னு கூப்பிடறேன் இல்ல. நீ மட்டும் என்னன உரிமையா கூப்பிடாம் தாமரைன்னு பேர் சொல்லி கூப்பிடுற… உனக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா?” என்று அவனிடம் கோபித்துக் கொண்டாள்-
-எங்கே தெரியாமல் அவள் கையைப்பிடித்ததற்க்குத் தான் தாமரை அவனை முறைத்தாள் என்று நினைத்தவனுக்கு. தன்னை தன்னை முன்பு போல உரிமையாக செல்லப் பெயர் வைத்து அழைத்துப் பேசவில்லை என்று அவள் கோபித்துக் கொண்டதைப் பார்த்து நிம்மதி அடைந்தவன்.
” உன் ஐயோ குட்டிமா… இதுக்கு தான் கோபமா . நான் கூட நீ முறைச்சதை பார்த்து பயந்துட்டேன்.” என்றான்..
“என்கிட்ட எதுக்கு அம்மு பயம் !” என்றவள் ‘இனிமேல் எப்பவும் போல இருப்போம் சரியா” நாம எப்பவும் என்றாள்.
” சரி குட்டிமா…”என்றான்.
“சரி நூன் வரும் போது ஏதோ முகம் ஒரு மாதிரி டல்லா இருத்தியே.. என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரி இருந்தே “என்றாள்.
“அது… அது வந்து..” என்று தன் முன்னே கள்ளம் கபடம் அற்ற முகத்தோடு சிரித்துக் கொண்டு நின்றிருந்தவளின் முகம் பார்த்தவன்
” விஜய் தாமரையை வேணாம்னு சொன்னது இவளுக்கத் தெரியக்கூடாது. எனக்கும் தாமரைக்கும் டைவேர்ஸ் கிடைக்குற வனுக்கும் தாமரைகிட்ட விஜய்யை நான் மீட் பண்ணினது. அவன்கிட்ட எங்க விவாகரத்து, பத்தி பேசினது. இதை எதுவும் சொல்ல வேண்டாம். நானும் தாமரையும் டிவெர்ஸ் வாங்குற வரைக்கும் முன்ன மாதிரி இயல்பா பேசி பழகிட்டு இருப்போம்” என்று முடிவெடுத்தவன். விஜய்யை சந்தித்து விட்டு வந்ததை தாமரையிடம் சொல்லாமல் மறைத்தான்.
“அது ஒன்னும் இல்லை கட்டிமா தலைவலி அதுதான் டல்லா இருந்தேன் ” என்றான்.
“என்ன அம்மு நீ வந்ததும் சொல்லிருக்கலாமே. சரி இவ்ளோ நேரம் தலைவலியோடவா இருந்த…” என்றவன்
” நீ கொறேடு றுேம் ஓய்வெடு நான் உஊக்கு காபி போட்டு எடுத்துட்டு வரேன் “என்று வம்சிக்கு காபிபோட சென்றாள் .
வம்சிக்கும் அவள் இப்படி சகஜமாக பேசுவது சற்று நிம்மதியை தந்தது
தாமரையை விஜய் வேண்டாம் என்று சொன்ன விஷயம் அவளுக்கு தெரிய வரும்போது என்ன செய்வாளோ.
