News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

தப்பு 49

by Sinamika Writes
20 views
A+A-
Reset

தப்பு 49

“நானா! நானா அவளை தண்டிக்குறேன், என் வாழ்க்கை அவ அம்மாவால எப்படி ஆகிருச்சுனு நீயும் தானே கேட்டுட்டு இருந்த. எனக்கு அந்த வலி இருக்காதா? சும்மா எல்லா தப்பையும் என் மேலையே போடுற நீ.. ” என்ற பர்வதம் “ஏய் கஸ்தூரி நீயே சொல்லு டி யாரு மேல தப்பு ” என்றார்.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

“ஹா! அம்மா . என்னைக் கேட்டா எனக்கு என்னம்மா தெரியும் ” என்று கஸ்தூரி நழுவிக்கொள்ள.

“இவ ஒருத்தி உன்கிட்டே வந்து கேக்குறேன் பாரு ” என்றவர் “எனக்கும் மனசு இருக்கு, நானும் மனுசி தான். எனக்கும் கஷ்டமா தான் இருக்கு. இந்த வீட்ல தானே இருக்க நீ.. இப்போ கூப்டு பேசின போல என் ரூமுக்கு வந்து என்கிட்ட பேசி இருக்க வேண்டியது தானே.. என்னை கண்டுகிட்டியா நீ.. அதான் எனக்கு என்னனு நானும் இருக்கேன் ” என்றார்.

“ஓஹோ.. அப்போ நான் வந்து பேசிருந்தா நீ என்கிட்டே நல்லமுறையில் பேசிருப்ப அப்படி தானே ” என்றார்.

“ஆமா பேசிருப்பேன் ” என்றார்  பர்வதம்

“உங்கண்ணன் பண்ணின தப்புக்கு நான் பொறுப்பாக முடியாது,. பூவிழி  என்ன பாவம் பண்ணினா இவ்ளோ நாள் தான் உங்கண்ணன் அவளை அந்த கொடுமை பண்ணினார் , ஏதோ யுகேன்  அவன் அப்பா மாதிரி இல்ல. அவளைப் பாத்துக்கிறான், எனக்கு ஒன்னும் இங்க இருக்கணும்னு ஆசை இல்ல. நான் இங்க இருந்து போய்ட்டா என் பூவை யாரையும் பாத்துக்க மாட்டிங்கன்னு தான் இங்க இருக்கேன் ” என்றார்.

“அதெப்படி நீ சொல்லலாம் நாங்கன்னு என்னையும் எதுக்கு சேர்த்துக்குற.. எனக்கு அவ மேல ஒன்னும் கோவமில்ல.. என் மனசு சரி இல்ல அதனால நான் வெளிய வரல ” என்ற பர்வதம் “இப்போ என்ன ஆச்சு ? நீ என்கிட்டே வாய்க்கு வாய்  வம்பு பேசிட்டு இருக்க?” என்றார்.

“ஒன்னும் ஆகல , அவ குழந்தைக்கு பசியாத்த முடியாம அவதிப்பட்டுட்டு இருக்கா. அவளுக்கு லேகியம் செய்யணும். நீ அந்த சரண்யாவுக்கு செஞ்சு கொடுத்தே இல்ல. அப்படியே என் பொண்ணுக்கும் வந்து செஞ்சு கொடு .அதுக்கு உன்னை இழுத்து பிடிச்சு வெச்சு பேசிட்டு இருக்கேன் ” என்றார்.

“அடியாத்தி இது தான் நாத்தனார் ,கொழுந்தியா சண்டையா? இன்னிக்கு தான் நானே பாக்குறேன் ” என்று வாயில் கையை வைத்துக்கொண்ட கஸ்தூரி இருவரையும் மாறி மாறி பார்க்க..

குளித்துவிட்டு குழந்தை குழந்தையின் பசியை ஆற்ற நினைத்த பூவிழி அது முடியாமல் போக குழந்தையை தூக்கிக்கொண்டு காவேரியிடம் வந்து விஷயத்தை சொல்ல நினைச்சு வெளியே வர..

இங்கே அவ்ர்கள் இருவரும் பூவிழியின் பிரச்னையை எல்லார் முன்னிலையிலும் சொல்லவும் அவர்களை பார்க்க கூச்சப்பட்டு வந்த வேகத்தில் உள்ளே சென்றுவிட்டாள்.

யுகேனும் அவள் பிரச்னையை இவர்கள் இருவரும் பேசக் கேட்டு பூவிழியைக் காண மேலே சென்றான்.

“இப்போ என்ன பண்ணனும் உனக்கு ‘ என்று பர்வதம் இடுப்பில் சேலையை தூக்கி செருகிக்கொண்டு கேட்க.

“என் பூவுக்கு கருப்பட்டி கலி கிளறிக்கொடு ” என்றார் காவேரியும் சளைக்காமல்

“அவ எனக்கும் பொண்ணு தான் , என்கிட்டே இதை முதல்லயே சொல்லாம வீணா வாய் பேசி நேரத்தை வீணடிச்சிட்டு இருக்க நீ.. ” என்று கிச்சனுக்குள் புகுந்தவர் கருப்பட்டியை எடுத்து பொடியாக்க ஆரம்பித்தவர் “கஸ்தூரி வந்து அந்த பூண்டை எடுத்து உரி ” என்று கட்டளையிட .

காவேரியும் அவர்களோடு சேர்ந்து உதவ ஆரம்பித்தார்.

“ம்ஹும்.. எப்படியோ ரெண்டு பேரும் ராசியாகிட்டாங்க போல , நமக்கு இங்க வேலை இல்ல நீ வா நாம ரூமுக்கு போலாம் “என்று ஆராவை தள்ளிக்கொண்டு அறைக்குள் செல்ல..

அங்கே ராஜேந்திரன் மட்டும் நின்று இருந்தவர் நடப்பதை எல்லாம் பார்த்துவிட்டு அமைதியாக தன் அறைக்குள் சென்றுவிட்டார்.

 இங்கே அறைக்குள் வந்த யுகேன் கதவை அடைத்துவிட்டு உள்ளே வர.. அங்கே பூவிழி குழந்தைக்கு பால் கொடுக்க முயன்று கொண்டு இருந்தாள்.

கையில் வைத்திருக்கும் குழந்தையை சேலைக்குள் வைப்பதும் உடனே முகத்தை சுளித்துக்கொண்டு அவனை வெளியே எடுப்பதுமாக பண்ணிக்கொண்டு இருந்தாள். அவள் செயலே புதிதாக இருக்க..

“என்ன டி பண்ணிட்டு இருக்க?” என்று சட்டையைக் கழட்டிக்கொண்டு அவள் அருகே சென்றான்.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“அது.. அது இவனுக்கு பால் கொடுக்க முடியல” என்று தயங்கினாள்.

அவள் பேச்சில் இருந்தே ஏதோ சரி இல்லை என்பதை உணர்ந்த யுகேன் அவள் அருகே வந்து அமர்ந்தவன் “கீழ அம்மாவும், அத்தையும் பேசிக்கிட்டாங்களே அதனாலையா?” என்றான்.

“ம்ஹும்.. இல்ல, அம்மாகிட்டே என்னால சொல்ல முடியல ” என்றாள் கையில் அலுத்து கொண்டிருந்த தன் மகனை சமாதானம் செய்ய முடியாமல்.

அவள் தடையைப் பற்றி மேலே உயர்த்தியவன் பூவிழியின் முகத்தைப் பார்க்க அவள் கண்களில் நீர் கோர்த்திருந்தது.

“ஏய் அமுக்காஞ்சி , என்ன டி ஆச்சு? ஏன் அழற? ” என்றான்.

“மாமா!” என்று அவன் சட்டையைப் பற்றி தன் பக்கம் இழுத்தவள் அவன் வேற்று மார்பில் சாய்ந்து கொண்டு மீண்டும் அழுதாள்.

“ஏய் என்ன டி ஆச்சு?” என்று பதற்றமானான் யுகேன்.

அழுதுகொண்டே அவனை நிமிர்ந்து பார்த்தவள் “மாமா இவனுக்கு பசியாத்தணும்னு  எனக்கும் ஆசையா தான் இருக்கு. ஆனா என்னால முடியல ” என்றாள்.

யுகேனுக்கு எதுவுமே விளங்கவில்லை அவளைப் புரியாமல் பார்த்துக்கொண்டே தன் மகனை வாங்கிக்கொண்டவன் “உனக்கு பால் வரலையா? அதனால தான் இவனுக்கு பசியாத்தமுடியாலையின்னு வருத்தப்படுறியா?” என்றான்.

“இல்ல மாமா , எனக்கு பால் எல்லாம் நல்லா தான் இருக்கு ” என்று தன் மார்பை தன்னிச்சையாக சேலையோடு தொட்டுப் பார்த்தவள் “ஆனா பிரச்சனை அது இல்ல.. ‘என்றாள்.

“பால் வருதுன்னா அப்போ கொடு.. இதுல என்ன டி பிரச்சனை ” என்றான்.

“அது வந்து.. அது வந்து.. “என்று பூவிழி அவனை விட்டு விலகி அமர்ந்தவள் கைகளை பிசைந்து கொள்ள..

“இங்க பாரு என்கிட்டே சொல்றதுக்கு ஏன் நீ இவ்ளோ கூச்சப்படுற.. என்ன விஷயம்னு சொன்னா தானே இதுக்கு ஒரு முடிவு தெறிஞ்சுக்க முடியும். இவனும் முழுகாம இருப்பான் இல்ல ” என்று தன் மகனைக் காட்டி சொன்னான்.

சற்று தயங்கியவள், ‘சொல்லலாமா? வேண்டாமா?’ என்று தவித்துவிட்டு, ஒரு முடிவாக  அவனிடம் சொல்லும் முனைப்போடு யுகேனின் காதில் அந்த ரகசியத்தைச் சொன்னாள்.

அவள் சொன்னதைக் கேட்ட யுகேனின் முகத்தில்  ஆச்சரியமும், அடுத்த கணமே குறும்பான ஒரு புன்னகையாக மாறியது!

“சிரிக்காதிங்க மாமா, நானே என்ன பண்றதுனு தெரியாம முழிச்சிட்டு இருக்கேன்..” என்று சொல்லிவிட்டு வெட்கத்தில் காது வரை சிவந்துபோய் அவனைப் பார்த்தவள் அவன் தோளில் லேசாக அடித்தாள் பூவிழி.

யுகேனின் காதில் பூவிழி சொன்னது..  குழந்தை அவளிடம் வாய் வைத்துப் பால் குடிக்கும் போது எல்லாம் , அவளுக்கு வெறும் தாய்மை உணர்வோடு நின்றுவிடாமல், உடல்ரீதியாக எதிர்பாராத ஒருவித உணர்வைத் தூண்டியது, அவளால் அந்த உணர்வை தாங்கிக்கொண்டு குழந்தைக்கு பசியாற்ற முடியவில்லை. அதைக் கையாளத் தெரியாமல் கூச்சத்திலும் திணறலிலும் விழித்திருந்தாள் இந்தச் சின்னப் பெண், அதனாலேயே மகனுக்குப் பால் கொடுக்க முடியாத அளவுக்கு அவள் நிலைமை இருந்தது.

அவளின் அந்தத் தயக்கத்தைக் கண்ட யுகேன், பூவிழியின் கன்னத்தைக் கிள்ளி சிரித்தான்.

“ஹோ.. இதுதான் விஷயமா அமுக்காஞ்சி? பீலிங்ஸ் வருதுன்னு சொன்னியே என்ன மாதிரி வருது” என்று குறும்பாய் கண்ணடித்து அவளைக் கேலி செய்தவன், அவள் முகத்தில் இருந்த பயத்தைப் பார்த்துவிட்டுச் சீரியஸ் ஆனான்.

“இங்க பாரு பூவிழி.. நீ மனசுக்குள்ள எதையோ நினைச்சு உண்மையாவே ரொம்ப கஷ்டப்படுறன்னு இப்போதான் எனக்குப் புரியுது. உனக்கு பால் சுரக்குறதுல எந்தப் பிரச்சினையும் இல்லைனு நீயே சொல்ற, ஆனா அந்த உணர்வு உனக்கு ரொம்ப அதிகமா உறுத்துறதனால உன்னால இயல்பா இருக்க முடியல, இல்லையா?” என்றவன், அவளது கையைப் பற்றி நெஞ்சோடு அணைத்துக்கொண்டவன்.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“இவன் அழுகையை சமாளிக்குற அளவுக்கு இவனுக்கு பாலை கொடு. ரெண்டு பேரும்  ஹாஸ்பிடல் போய் ப்ரியாகிட்ட இதுக்கு என்ன பண்ணலாம்ன்னு கேட்டுட்டு வந்துடலாம். இப்போதைக்கு நீ ரொம்ப குழப்பிக்கிட்டு மனசை அலட்டிக்காத..” என்று தன் மகனை அவள் கைகளில் கொடுத்தவன் “இதெல்லாம் சாதாரண விஷயம் தான் சரியா” என்றான்.

“மாமா இப்படி எல்லாம் எனக்கு இருக்கே இது தப்பில்லையா?” என்றாள் அப்பாவியாக.

“இதெல்லாம் தப்பே கிடையாது. நீயே வந்து பிரியாகிட்டே விஷயத்தை சொல்லிக் கேளு” என்றான்.

“இதை எப்படி நான் அவங்ககிட்டே சொல்றது. அவங்க என்னைத் தப்ப எதுவும் நினைச்சுட்டா ” என்று அவனைப் பார்த்தாள்.

“நான் உன் கூடவே இருக்கேன், பயப்படாத செல்லம்..” என்று அவள் நெற்றியில் முத்தமிட்டு அவளுக்குத் தைரியம் ஊட்டினான் யுகேன்.

அவனிடம் தலையை ஆட்டியவள் தன்  மகனுக்கு அமுதூட்ட ஆரம்பிக்க.. அதில் பூவிழி சொன்னது போல உணர்வுகள் அவளுக்கு தோன்றவும் அதை தன் கீழ் இதழைக் கடித்தபடி சமாளித்தாள்.

யுகேனோ  அவளையே கூர்ந்து கவனித்தவன் அவள் உணர்வுகளை அவள் இதழைக் கடிதத்திலிருந்தே புரிந்து கொண்டவன் சிரிக்க..

அவனைப் பார்க்க முடியாமல் தலையைக் குனிந்து கொண்டாள்.

யுகேனும் பூவிழியும் மருத்துவமனைக்கு வந்து பிரியாவைச் சந்தித்தனர். உள்ளே சென்றதும், என்ன விஷயம் டா , இந்த நேரத்துல வைத்திருக்கிங்க என்றாள்.

“என் பொண்டாட்டிக்கு ஒரே பீலிங்கா இருக்குன்னு சொல்றா. அதை எப்படி கண்ட்ரோல் பண்ணனும்னு தெரியாலையினு சொல்றா” என்றபடி முன்னாள் இருந்த சேரில் வந்து அமர்ந்தான் யுகேன்.

அதைக் கேட்டு ப்ரியா அதிர்ச்சியாக இருவரையும் பார்க்க..

பூவிழியோ யுகேனை முறைத்தவள் “ஹையோ! அக்கா அவர் சொல்றது போல எல்லாம் எதுவுமில்லை.. எனக்கு வேற பிரச்சனை” என்று அவசரமாக மறுத்தாள.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.