EPISODE 6
பால் செம்புடன் வீராவின் அறைக்குள் நுழைந்த பூவிழியின் கையிலிருந்த செம்பை வாங்கி, அருகில் இருந்த மேஜையில் வைத்தவன் அவளை இழுத்து அணைத்துக்கொண்டான்.
“இங்கே இருக்கிற என்னோட ரூமுக்குள்ள வரதுக்கு இவ்ளோ நேரமா?” என்று சொல்லி அவளைக் கட்டிலில் தள்ளி அவள் மேல் பாய்ந்தான் வீரா.
இதைச் சற்றும் எதிர்பாராத பூவிழி, தன்மேல் விழுந்தவனை கஷ்டப்பட்டுத் தள்ளிவிட்டாள். வேகமாகப் படுக்கையில் இருந்து எழுந்து நின்றவள், “டேய் மச்சி, என்ன ஆச்சு உனக்கு? ஏன் இப்படி எல்லாம் நடந்துகிற?” என்றாள்.
“இவ்ளோ நாள் என் கூடப் பேசாம இருந்ததற்காக என்னைப் பழி வாங்க, என்கிட்ட இப்படி நடந்துகிட்டு பிராங்க் பண்றியா?” என்றாள்.
அவள் மீது பாய்ந்திருந்த வீரா, தன்னைத் தடுத்துவிட்டாள் என்ற கோபத்தோடு கட்டிலில் இருந்து அமர்ந்தான். பூவிழியைப் பார்த்து, “ரோஸ் மில்க், யாராவது பிராங்க் பண்ண இந்த மாதிரி எல்லாம் நடந்துக்குவாங்களா? சத்தியமா இது பிராங்க் இல்லடி… உண்மையாவே எனக்கு நீ வேணும். வா” என்று எட்டி, தன் அருகில் நின்றிருந்தவளின் கையைப் பிடித்து இழுத்தவன் அவளை இடையோடு சேர்த்து அணைத்துக்கொண்டான்.
இதைச் சற்றும் எதிர்பாராத பூவிழி, அதிர்ச்சியில் தன்னைக் கட்டிக்கொண்டிருந்தவன் முகத்தைப் பார்த்தாள். ஆனால், அவனும் அவள் அதிர்ச்சியை எல்லாம் கண்டுகொள்ளாதவனாகப் பூவிழியை அணைத்துக்கொண்டு, அவள் இதழில் முத்தமிட வந்தான்.
இதைச் சற்றும் எதிர்பாராத பூவிழி, அவன் முகத்தின் குறுக்கே தன் கையை வைத்து, தனக்கு முத்தம் கொடுக்க விடாமல் தடுத்தாள். “டேய் மச்சி, என்ன காரியம் செய்துகிட்டு இருக்க? நான் உன்னோட ஃப்ரெண்டுடா. ஒரு ஃப்ரெண்டுகிட்ட யாராவது இப்படித்தான் அத்துமீறி நடந்துகொள்வார்களா? போதும், நீ விளையாடுவதெல்லாம். முதல்ல என்னை விடு” என்றாள்.
தன்னை முத்தமிடாமல் தடுத்த பூவிழியின் கையைப் பிடித்தவன், அவள் முகத்தைப் பார்த்து, “என்ன சொன்ன? நான் உனக்கு ஃப்ரெண்டா? அது எல்லாம் மலையேறி வருஷமாச்சு. நீ என்னோட பொண்டாட்டி, நான் உன் புருஷன். அவ்வளவுதான் நமக்குள்ள இருக்கிற உறவு” என்றவன், “பழையபடி ஃப்ரெண்டு கிண்டுன்னு தூக்கிட்டு வராத” என்று குனிந்து அவள் இதழில் முத்தமிட வந்தான்.
அவன் மார்பில் கை வைத்துத் தடுத்த பூவிழி, “வேண்டாம் வீரா. இந்த மாதிரி எல்லாம் பேசாத. எனக்குப் பயமா இருக்கு. நீ முன்ன மாதிரி இல்ல. நீ பேசுவதைப் பார்த்தால் உன்கிட்ட ஏதோ வித்தியாசம் தெரியுது. தயவுசெய்து என்னை விடுடா… இந்த மாதிரி என்கிட்ட நெருங்கிப் பேசுற வேலை எல்லாம் வேண்டாம்” என்று அவனைத் தன்னிடம் இருந்து பிரிக்க முயன்றாள்.
அவள் பேசுவதை எல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாத வீரா, பூவிழியை முன்பைவிட இறுக்கித் தன்னோடு நெருக்கமாக அணைத்தான். அவள் கன்னத்தைப் பிடித்து தன் முகத்தருவில் இழுத்து, அவள் இதழில் தீவிரமாக முத்தம் வைத்தான்.
இதை வீராவிடமிருந்து சற்றும் எதிர்பாராத பூவிழி அதிர்ந்து, கண்களில் நீர் வழிய, தனக்கு முத்தமிட்டுக்கொண்டிருந்தவனைப் பார்த்தாள்.
தீவிரமாகப் பூவிழிக்கு முத்தமிட்டவன், அவள் உதட்டில் இருந்து தன் உதட்டைப் பிரித்து அவள் கண்களைப் பார்க்க, அவள் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. அந்தக் பார்வையும் அவள் கண்ணீரும், இத்தனை நாள் அவன் மீது நண்பன் என்று அவள் வைத்திருந்த நம்பிக்கை முற்றிலும் உடைந்துபோனதை அவனுக்கு உணர்த்தியது.
அவள் முகத்தைத் தன் இரு கைகளிலும் ஏந்திய வீரா, தன் கட்டை விரல்களால் பூவிழியின் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துவிட்டு, “இங்க பாரு பூவிழி, எத்தனை வருஷமா உன்கிட்ட நான் பேசாம இருந்ததற்கான காரணம் என்னன்னு உனக்கு நல்லா தெரியும். அதைப்பத்தி பேசி இப்போ நான் உன்னோட மனநிலையைச் கெடுக்க விரும்பல. ஆனா, இத்தனை வருஷமா நீ என்ன ஃப்ரெண்டா நினைச்சுப் பழகி இருக்கலாம். ஆனா, எப்போ நான் உன்னை முதல் முதல்ல காலேஜ்ல பார்த்தேன், அப்போ இருந்து உன்னை என்னோட காதலியா, என்னோட பாதியாத்தான் நினைச்சிருக்கேன். நான் உன்னை உயிருக்கு உயிராக் காதலிக்கிறேன்னு ரொம்ப வருஷமா உன்மேல பைத்தியமா சுத்திக்கிட்டு இருக்கேன். ஆனா, உன்கிட்ட இதைச் சொல்ல சந்தர்ப்பமும் நேரமும் எனக்கு அமையல. எனக்கு நீ வேணும் பூவிழி. நீ முழுசா என்னுடையவளா வேணும்” என்றவன் மீண்டும் அவளை அணைத்து இதழில் முத்தம் வைக்கப்போக…
அவன் கன்னத்தில் ‘பளார்’ என ஓங்கி அறைந்த பூவிழி, “ராஸ்கல்! உன் மனசுல என்னடா நினைச்சுட்டு இருக்க? உன் மனசுல இத்தனை நாளும் என்னைப் பற்றி இப்படி ஒரு எண்ணத்தை வெச்சிட்டுதான் நீ இருந்திருக்க, அப்படித்தானே? இது தெரியாம நானே தேவையில்லாம வந்து உன்னோட வலையில மாட்டிக்கிட்டேனே! உன்னை கல்யாணம் பண்ணி நான் பெரிய தப்பு பண்ணிட்டேன்” என்று அவனிடம் இருந்து வேகமாக விலகி நின்றவள், தன் தலையில் அடித்துக்கொண்டு அழுதாள்.
“ஏய் பூவிழி, என்ன இது? எதுக்காக இப்படி செய்யற?” என்று பூவிழி தன்னை அறைந்ததைக்கூட பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அவசரமாக அவள் அருகில் வந்தான். பூவிழியின் கையைப் பிடித்துக்கொண்டவன், “இங்க பாரு பூவிழி, இப்படி நீ அழுது புலம்பறதுனால எதுவும் மாறிடப் போறது இல்ல. நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோ. நீ இத்தனை நாளும் என்ன ஃப்ரெண்டா நினைச்சுப் பழகி இருக்கலாம். ஆனா, நான் உன்னை என்னோட பாதியா நினைச்சுதான் பழகி இருக்கேன். நான் உன்னைத் தீவிரமாக லவ் பண்றேன் பூவிழி. அதை நீ கொஞ்சம் புரிஞ்சுக்க ஆரம்பி. நாம ரெண்டு பேரும் சந்தோஷமா ஒரு அழகான வாழ்க்கையை வாழலாம் பூவிழி” என்று சொல்லி வீரா, பூவிழியை இறுக்கி அணைத்துக்கொண்டான்.
அவனிடமிருந்து பிரிந்தவள் மீண்டும் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்து, “ராஸ்கல்! என்னைக் கட்டிப்பிடிக்கிறது, முத்தம் கொடுக்கிறது, தொட்டுப் பேசுற வேலையெல்லாம் விட்டுக்காத. உன்னோட ஃப்ரெண்ட்ஷிப்பை நான் இத்தனை வருஷம் மதிச்சு எவ்வளவு மரியாதை கொடுத்திருந்தேன் தெரியுமா? மரியாதையை இப்படி ஒரே ராத்திரியில நீ குழி தோண்டிப் புதைத்துவிட்டாய். இனி உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நான் இப்பவே இந்த வீட்டை விட்டுப் போறேன். உனக்கும் எனக்கும் ஒத்துவராது” என்றவள், “இந்தா, நீ என் கழுத்துல கட்டின தாலி. இது எனக்கு ஒரு வேலியா இருக்கும்னு நினைச்சுதான் உன்னை கல்யாணம் பண்ணிக்கச் சம்மதித்தேன். ஆனால், ‘பயிரை மேய்ந்த கதையா’ உன்னை நம்பி, என்னோட நட்பை நம்பி கல்யாணம் செய்துகிட்ட என்கிட்ட நீ இவ்வளவு மோசமா நடந்துகிற. இனியும் நீயும் நானும் ஒண்ணா ஒரே அறையில், ஒரே வீட்டில் இருக்கிறது சாத்தியமே கிடையாது. எனக்கு நீ வேண்டாம். நான் வெளியே போய் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை, உன் கூட இந்த மாதிரி என்னால இருக்க முடியாது” என்று சொன்னவள், வேகமாக அவன் அறைக்கதவைத் திறக்கப் போக…
“என்னடி நானும் பார்த்துட்டே இருக்கேன். நான் சொல்றதை காதலியே வாங்கிக்காம உன் இஷ்டத்துக்குப் பேசிக்கிட்டே இருக்கிறாய்?” என்றவன் வேகமாக அவள் முன்பு வந்து, பூவிழி அந்தக் கதவைத் திறக்க விடாமல் குறுக்கே கதவை ஒட்டி நின்றான்.
“உன் கழுத்துல ஊரறிய நான் தாலி கட்டி என் பொண்டாட்டியா ஏத்துக்கிட்டேன். உனக்குப் பிடிச்சாலும் பிடிக்காட்டியும் நீ இந்த வீட்ல என் கூடத்தான் இருப்ப, என் பொண்டாட்டியா. அதை ஞாபகம் வெச்சுக்கோ. வெளியே போய் இங்க நடக்கிற விஷயத்தை எல்லாம் சொல்லணும்னு நீ நினைச்சா சொல்லிக்கோ. அதுல எனக்கு எந்தப் பிரச்சனையும் கிடையாது. ஆனால், அப்படி நீ இந்த விஷயத்தைப் போய் வெளியே சொன்னா, முதல்ல இந்த விஷயத்தைக் கேட்டு அதிர்ச்சியாகிச் சாகிறது உன்னோட அம்மாதான்” என்றான்.
அவ்வளவு நேரம் கோபமாக நின்றிருந்த பூவிழி, அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியோடு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“அந்த வீட்டிலிருந்து உன் அம்மாவை இங்கே கூட்டிட்டு வர என் ஆளுங்க எல்லாம் எவ்வளவு விலை கொடுத்திருக்காங்கன்னு உனக்குத் தெரியுமா? உன் அம்மா, நீ கல்யாணம் பண்ணி சந்தோஷமான வாழ்க்கையை ஆரம்பிக்கப் போறேன்னு கனவு கண்டுகிட்டு இருக்காங்க. அவங்க கிட்ட போய் உனக்கும் எனக்கும் ஒத்துவராது, நம்ம ரெண்டு பேரும் பிரிஞ்சு போறோம்னு சொல்லப் போறியா? அப்படியே நீ சொன்னாலும் அதை நடக்க நான் விடமாட்டேன்” என்றவன் வேகமாக அவள் அருகில் வந்து, அவள் கழுத்தில் கை கொடுத்து அவளைத் தன்னருகே இழுத்துக்கொண்டு, மீண்டும் பூவிழியின் இதழில் அழுத்தமாக முத்தமிட்டான்.
“நீ என் பொண்டாட்டி. நீ எனக்கு மட்டும்தான் சொந்தம். நீ மட்டும் இல்லை, உன்னோட உடம்பும் எனக்குத்தான் சொந்தம்” என்று பூவிழியின் இதழைத் தீவிரமாகக் கவ்விய வீரா, அவளுக்கு மூச்சு முட்டி மயங்கித் தரையில் சரணடையும் வரை முரட்டுத்தனமாக இத்தனை நாள் காதலைத் தெரிவிப்பதாக நினைத்துத் தன் முரட்டுத்தனத்தால் அவளுக்கு முத்தமிட்டுக்கொண்டிருந்தான்.
அவள் மயங்கித் துவண்டு அவன் மீது சரிந்து விழ, முத்தம் இடுவதை நிறுத்தி பூவிழியின் முகத்தை நிமிர்த்திப் பார்த்தான். அவள் மயங்கியிருப்பதை கண்டதும், “லூசு, இதுக்கே மயக்கம் போட்டுட்டா எப்படி?” எனச் செல்லமாக அவளைக் கடிந்துகொண்டவன், அவளை அப்படியே தன் கைகளில் ஏந்தி மெத்தையில் படுக்க வைத்துவிட்டு, அவளோடு தானும் சேர்ந்து படுத்துக்கொண்டான்.
மயங்கிச் சரிந்தவளுக்குத் தண்ணீர் தெளித்து எழுப்பக்கூட மனமில்லாமல், தன்னை மறந்து கண்மூடிப் படுத்திருக்கும் பூவிழியைப் பார்த்து, அவள் இதழைத் தன் விரலால் வருடியவன், “ரோஸ் மில்க், இந்த லிப்ஸில் இவ்ளோ டேஸ்ட் இருக்கும்னு இத்தனை நாள் எனக்குத் தெரியாமலே போயிடுச்சுடி. இது தெரிஞ்சிருந்தா எப்பவோ என்னோட காதலை உன்கிட்ட சொல்லி உன்னை என்னோட கூட்டிட்டு வந்திருப்பேன். இத்தனை வருஷத்தை நான் தேவையில்லாம வேஸ்ட் பண்ணிட்டேனே” என்று தன்னையே கடிந்துகொண்டான்.
பின் விளக்கை அணைத்தவன், தன்னருகில் முயல்குட்டி போலச் சுருண்டு படுத்திருந்த பூவிழியின் இடையில் கை கொடுத்துத் தன்னோடு இழுத்து அணைத்தான். அவள் கட்டியிருந்த சேலையை உருவித் தூர வீசி, அவள் மார்பில் தலை வைத்து கண்மூடிப் படுத்துக்கொண்டான்.

1 comment
Super super super super super super super super super super super super