News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

மோகம் முத்தாடுதே 7

by Layas Tamil Novel
787 views
A+A-
Reset

EPISODE 7

மயக்கம் தெளிந்து இரவு வெகு நேரம் கழித்து கண் விழித்த பூவிழி, தன் இடுப்பைக் கட்டிக்கொண்டு மார்பில் முகம் புதைத்து உறங்கிக்கொண்டிருந்த வீராவைப் பார்த்தாள்.

அவளுக்கு ஆத்திரம் வந்தது. அப்போதுதான் கவனித்தாள், அவள் உடலில் தான் கட்டியிருந்த சேலை இல்லாமல், வெறும் பிளவுஸும் பாவாடையும் மட்டும் அணிந்து படுத்திருந்தாள்.

தன்மேல் படுத்திருந்தவனை வேகமாகப் பிடித்து மெத்தையில் தள்ளிவிட்டு, அவசரமாகக் கட்டிலில் இருந்து எழுந்தாள் பூவிழி.

அவள் தள்ளிவிட்ட வேகத்தில் தூக்கம் கலைந்து கண்விழித்துப் பார்த்த வீரா, தனக்கு எதிரே கோபத்தில் மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்க நின்றிருந்த பூவிழியைப் பார்த்தான்.

சேலையில்லாத அவளது அழகு அப்பட்டமாகத் தெரிய, அவளது கோபத்தில் மூச்சுவிடவும் அசைந்தாடும் அங்கம்தான் அவன் பார்வையில் முதலில் பட்டது.

வீராவின் பார்வை சென்ற இடத்தை உணர்ந்த மறுநொடி, தன் கைகளைக் கொண்டு மார்புக்குக் குறுக்கே வைத்துக்கொண்ட பூவிழி, “என்னடா செஞ்சுகிட்டு இருக்க? கொஞ்சம் கூட உனக்கு வெக்கமே இல்லை! என் சேலையை எதுக்குடா கழட்டுன?” என்றாள்.

“எதுக்குக் கழட்டுவாங்கன்னு உனக்குத் தெரியாதா?” என்று சிரித்துக்கொண்டே கட்டிலில் இருந்து இறங்கி அவளை நோக்கிச் சென்றான் வீரா.

“இங்க பாரு, எதுவா இருந்தாலும் அங்கே நில்லு. என்கிட்ட வந்து பேசுற வேலை வேண்டாம். அப்புறம் நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது” என்றாள்.

“ஓ… நான் உன் பக்கத்துல வரேன். நீ என்னதான் செய்றன்னு பார்க்கலாமே” என்றவன், தான் நின்றிருந்த இடத்திலிருந்து ஒரே எட்டில் குதித்து அவள் முன்பு வந்து நின்றான்.

இவர்கள் இருவரும் நட்பாகப் பழகியபோதுகூட இவ்வளவு விளையாட்டுத்தனமாக அவளிடம் அவன் பேசியதில்லை. ஆனால் இன்று அவன் அறைக்குள் பூவிழி வந்ததிலிருந்து அவளிடம் அதிக உரிமை எடுத்துக்கொண்டு அவளைப் பாடாய்படுத்திக் கொண்டிருந்தான். அவன் இப்படி வந்து நின்றதை அதிர்ச்சியாகப் பார்த்த பூவிழி பின்னால் செல்ல…

“ஏய் ரோஸ் மில்க், பக்கத்துல வந்தா நடக்கிறது வேறன்னு சொன்ன, இப்படிப் பின்னாடி நடக்கிறதுதானா சொன்ன?” என்று கிண்டல் அடித்தவன், சிரித்தபடி அவளை நெருங்கினான்.

“டேய் மச்சி, சொல்றத கேளு, பேசாமப் போயிடு. இப்படி எல்லாம் என்கிட்ட நடந்துகாதே. எனக்கு இதெல்லாம் பிடிக்கலடா. நான் உன்கிட்ட அப்படி நினைச்சு இதுவரைக்கும் பழகுனதே இல்ல. உன்னை ஒரு நல்ல ஃப்ரெண்டாதான் நினைச்சேன். ஆனா, நீ நடந்துகிறது எல்லாம் பார்த்தா எனக்குப் பயமா இருக்கு. தயவுசெய்து என்னை விட்டுடுடா, ப்ளீஸ்” என்று கையெடுத்துக் கும்பிட்டு கெஞ்சினாள் பூவிழி.

அவள் கும்பிட்ட கையைப் பிடித்துத் தன் அருகில் இழுத்த வீரா, “இங்க பாரு, நீயும் நானும் ஃப்ரெண்ட்ஸாதான் பழகினோம். இல்லைன்னு சொல்லல. ஆனா, ஒரு கட்டத்தில் எனக்கு ஃப்ரெண்ட்ஷிப் என்பது தாண்டி உன்மேல காதல் வர ஆரம்பிச்சிடுச்சு. ஆனால் அந்தக் காதலை மாத்திக்க முடியல. இனியும் அது நடக்காது. நான் சொல்றத கேளு, என்னோட காதலைப் புரிஞ்சுக்க ட்ரை பண்ணு. என்னை இத்தனை நாளா நீ ஃப்ரெண்டா பார்க்க ஆரம்பிச்ச இல்லையா? இனி காதலனாப் பாரு. இல்லை, அதுவும் பிடிக்கலையா? நேரடியாக நான் உன் புருஷன் கூட என்கிட்ட பழகணும்னு நினைச்சுப் பாரு. எல்லாமே கண்டிப்பா மாறும்” என்றான்.

“சுட்டுப் போட்டாலும் உன்மேல எனக்கு அப்படி ஒரு ஃபீல் வரவே வராதுடா… என்னைக் கொஞ்சம் புரிஞ்சுக்கோ” என்றாள் பூவிழி.

“அதேதான்டி நானும் சொல்றேன், நீ என்னைப் புரிஞ்சுக்கோ. இப்ப வேணா உனக்கு என்மேல அந்த மாதிரி ஃபீல் வராமல் இருக்கலாம். என் கூட ஒண்ணா இருந்து பாரு, என் கூடப் பேசிப் பழகிப் பாரு. நான் உன்மேல வெச்சிருக்கிற காதல் உனக்குப் புரியும். என்னோட காதல் உனக்குப் புரியும்போது, தானாவே உனக்கும் என்மேல காதல் வரும்” என்றான்.

அவள் எதுவும் பேசாமல் அவனையே பார்க்க, “ஐயோ ரோஸ் மில்க், இந்தக் கண்ணை இப்படி உருட்டி உருட்டி என்னைப் பார்க்காதடி. நீ இப்படிப் பார்த்துப் பார்த்துதான் என்னை மயக்கிட்டே… உன்கிட்ட நான் விழுந்து கிடக்கிறேன்” என்று தன் இதயத்தில் கை வைத்து அதைத் தடவி காட்டினான் அவளிடம்.

அவன் பேசுவதையே அவளையறியாமல் ரசித்தபடி நின்றிருந்த பூவிழியின் முகத்தில் லேசாகப் புன்னகை அரும்பியது, அவன் பேசிய விதத்தைப் பார்த்து.

“பாத்தியா… பாத்தியா? நான் பேசும்போது உனக்குச் சந்தோஷமா இருக்கு. அதனால்தான் உன் முகத்துல சிரிப்பு வருது” என்று அவளை நெருங்கி வந்தான் வீரா.

அவன் சொன்னதும் தான் தன்னையுமறியாமல் சிரித்துக்கொண்டிருப்பதை உணர்ந்த பூவிழியின் முகம் இறுக்கமானது.

தன் அருகில் நெருங்கி வந்தவனை மார்பில் கை வைத்துப் பின்னால் விலக்கப் போக…

“ஏய் ரோஸ் மில்க், இப்படி எல்லாம் என்னைத் துரத்திக்கிட்டே இருக்காதடி… எனக்கு ரொம்ப மனசு வலிக்குது. இந்த நாளுக்காக நான் எவ்வளவு ஏங்கியிருக்கேன்னு தெரியுமா? உன்னைக் கட்டிப்பிடிச்சுக்கிட்டு படுத்துத் தூங்க எனக்கு எவ்வளவு ஆசை தெரியுமா? இப்படிப் பாதி ராத்திரி என் தூக்கத்தைக் கலைச்சு விட்டுட்டியே? வாடி, போய்த் தூங்கலாம்” என்று அவள் கை பிடித்து இழுத்தான்.

“உனக்குத் தூக்கம் வந்தா போய் தலையணையை கட்டிப்பிடிச்சுட்டுத் தூங்கு. என்னைக் கூப்பிடுறேன், நான் வரமாட்டேன். நீ ஒழுங்கா அங்கே போய் படு. நான் இங்கே இருக்குற சோஃபாவிலேயே படுத்துக்கிறேன்” என்று அவன் கையை உதறிவிட்டு, கீழே கிடந்த அவள் சேலையை ஒன்றுக்கு இரண்டாக உடலில் சுற்றிக்கொண்டு போய் சோஃபாவில் படுத்தாள்.

“ஒழுங்கா என் பக்கத்துல வந்து படுன்னு சொன்னா படுக்கணும். உன் இஷ்டத்துக்குத்தான் இருப்பேன்னு அதையும் இதையும் பண்ணிக்கிட்டு இருந்தேன்னு வை…” என்று சோஃபாவில் படுத்திருந்தவளின் அருகில் வந்து கை நீட்டி அவளை மிரட்டினான் வீரா.

இதற்கெல்லாம் பூவிழி அஞ்சுபவளா என்ன? அவனை என்ன இன்று நேற்றா பார்க்கிறாள்? எத்தனை வருடங்களாக அவனோடு பழகியிருக்கிறாள்.

அவன் பேசியதைக் கேட்டு சோஃபாவில் இருந்து எழுந்து அமர்ந்தவள், “அப்படித்தான்டா பண்ணுவேன். என் இஷ்டத்துக்குத்தான் இருப்பேன். என்னடா செய்வ? சும்மா வந்ததிலிருந்து பெரிய இவனாட்டம் என்னைப் அதட்டிக்கிட்டு இருக்க. போ, போய் ஒழுங்காப் படுத்துத் தூங்கு. இல்லை, நடக்கிறது வேற” என்று அவனை கைநீட்டி அதட்டினாள் பூவிழி.

நீட்டிய கையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்ட வீரா, சிறுபிள்ளை போலக் கைகளையும் கால்களையும் உதறிக்கொண்டே சிணுங்கியபடி, “பூவிழி, சொன்னா கேளுடி. நீ இல்லாம எனக்குத் தூக்கமே வராது. ப்ளீஸ் வாடி” என்று அவள் கை பிடித்து இழுக்க…

அதைப் பார்த்து முகம் சுளித்தவள், “என்னடா நீ? வெளியேதான் டெரர் பீஸ் மாதிரி உடம்பையும் முகத்தையும் இறுக்க வெச்சிட்டு இருக்க. இங்க என்கிட்ட சின்னப் பிள்ளை மாதிரி கெஞ்சிட்டு இருக்க. உனக்கு வெக்கமா இல்ல? ஒழுங்கா என்னை விடு, போய் படுத்துத் தூங்கு. எனக்குத் தூக்கம் வருது” என்றாள்.

“ரோஸ் மில்க், ப்ளீஸ் வாடி” என்று வீரா கெஞ்ச…

“இவ்ளோ நாள் எப்படிப் படுத்துத் தூங்குனியோ, அதேபோல இப்பவும் போய் படுத்துத் தூங்கு. என்னமோ நான் இருந்தாத்தான் தூக்கமே வர மாதிரி ரொம்பப் பேசுற நீ” என்று அவனிடம் செல்லமாக மறுத்தாள் பூவிழி.

அவள் கையைப் பிடித்திருந்தவன் வேகமாக இழுத்து நிற்க வைத்தவன், அவள் இமைக்கும் நேரத்தில் அவள் கட்டியிருந்த புடவையைக் கழற்றித் தூக்கி எறிந்தான்.

பூவிழியைத் தூக்கிக்கொண்டு போய் மெத்தையில் போட்டு, அவளுடைய மெலிந்த இடையைக் கட்டிக்கொண்டு, முன்பு போலவே மார்பில் தன் முகத்தை அழுத்திப் படுத்துக்கொண்டான்.

அவன் மீசை முடி அவள் மார்பில் குறுகுறுப்பை ஏற்படுத்த, அதில் சிலிர்த்தவள், கூச்சம் ஒரு பக்கம் இருந்தாலும், அவன் நெருக்கம், அவன் வாசனை பூவிழியை ஏதோ செய்தது.

அந்த உணர்வுகள் அவளுக்கு வித்தியாசமாகத்தான் இருந்தது. இருந்தும் அதைத் தள்ளி வைத்துவிட்டு, தன் மார்பைக் கட்டிக்கொண்டிருந்தவனின் முகத்தைப் பிடித்து வலுக்கட்டாயமாகத் தன்னிடமிருந்துப் பிரித்தவள், “ஏன்டா… என்னை இப்படி இம்சை பண்ற? நீ நினைக்கிற மாதிரி எல்லாம் என்னால சத்தியமா இருக்க முடியாது. நீ என்னைக் கட்டாயப்படுத்தி முத்தம் கொடுத்தாலோ, இப்படி ஒண்ணா கட்டிக்கிட்டுப் படுத்தாலோ, எனக்கு உன்மேல காதல் வராதுடா. புரிஞ்சுக்கோ… ப்ளீஸ்” என்றாள் பூவிழி.

அவள் பேசுவதையே பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு, தேன் உண்ணும் நினைப்பில் இருந்தவனுக்குப் பூவிழி சொல்வதெல்லாம் காதிலேயே ஏறவில்லை.

அமைதியாகத் தன்னையே வீரா பார்த்துக்கொண்டிருக்க, அவனைத் தன்னிடமிருந்து விலக்கிவிட்டாள்.

அவள் இடையில் இருந்த வீராவின் கையை மெல்ல விலக்கிவிட்டு, வீராவிடம் இருந்து தள்ளிப் படுத்துக்கொண்டாள்.

கட்டிலை விட்டு இறங்க நினைத்தாள் பூவிழி. ஆனால், இறங்காமல் அப்படியே படுத்துக்கொண்டிருந்தாள். எங்கே மீண்டும் தன்னைத் தூக்கி வந்து கட்டிலில் போட்டு கட்டிக்கொண்டு படுப்பானோ என்று பயம் வேறு அவளுக்கு.

வீராவும் என்ன நினைத்தானோ, எதுவும் பேசாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

பின் “சரி, உனக்கு என்மேல காதல் வரும்போது வரட்டும். எனக்குப் பிரச்சனை இல்லை” என்றான் வீரா.

“அப்பாடா! இப்போவாவது என் நிலைமை அவனுக்குப் புரியுதே” என்று நினைத்து நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் பூவிழி.

“ஆனா, எனக்கு உன்மேல காதல் வந்திருச்சே… எவ்வளவு வருஷமா நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன். நான் உன்னை வழக்கம் போலக் காதலிக்கிறேன்” என்று அவள் மார்புக்கு நேராகப் படுத்திருந்தவன், உடலை நிமிர்த்தி அவள் முகத்திற்கு நேராகத் தன் முகத்தைக் கொண்டு வந்தவன், பூவிழியின் இதழைத் தன் விரலால் தடவிக்காட்டி, “எனக்கு இது வேணும்” என்றான்.

அதில் அதிர்ந்தவள், “டேய்…” என்று அவனை முறைத்து, தன் உதட்டில் இருந்த வீராவின் கையைத் தட்டிவிட, அதற்குள் அவளிடம் முன்னேறித் தன் முத்தத்தில் தேன் எடுத்தான் அவள் இதழில்.

பூவிழி அவனை அடித்து அடித்து அவளுக்குக் கை ஓய்ந்ததுதான் மிச்சம். அவள் அடித்து ஓயும் வரை விடாமல் முத்தமிட்டவன், பூவிழி அமைதியான பின்புதான் அவள் இதழை விடுவித்தான்.

வீராவை அடித்து ஓய்ந்தவள் சோர்வாக மூச்சு வாங்க அவனைப் பார்க்க… லேசாக மூச்சு வாங்கிய வீராவும் அவளையே வெறிக்க வெறிக்கப் பார்த்தான்.

‘என்ன இவன் எதுவும் பேசாம இப்படிப் பார்க்குறான்? இப்போ என்ன செய்றது?’ என்று பூவிழி யோசித்துக்கொண்டிருக்க…

சட்டென்று வீரா திரும்பி, பூவிழிக்கு முதுகு காட்டிப் படுத்துக்கொண்டான்.

‘இவன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கான்? இப்படி என் விருப்பம் இல்லாமல் என்கிட்ட அத்துமீறி நடந்துகுறானே. இவனை நான் என்னதான் சொல்றது? எவ்வளவு சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டேங்குறானே’ என நொந்துகொண்ட பூவிழி, கோபமாக அவன் முதுகைப் பார்த்துக்கொண்டு படுத்திருந்தாள்.

அவள் முன் வெறுமையான முதுகைக் காட்டி வீரா படுத்திருக்க, அவன் முதுகில் இடது தோளுக்குக் கீழே ஒரு மச்சம் இருந்தது. அதைப் பார்த்ததும் பூவிழிக்கு அந்த மச்சத்தைத் தொட்டுப் பார்க்க வேண்டும் என்று தோன்ற…

சட்டெனத் தன் மனதில் எழுந்த எண்ணத்தை நினைத்தவள், ‘உன் புத்தி எவ்வளவு கேவலமா போகுதுடி. கொஞ்சம் கூட உனக்கு வெக்கம், மானம் எதுவுமே கிடையாதா? அவனை அத்தனை திட்டு திட்டிட்டு, இப்ப நீ வெக்கமில்லாமல் அவன் முதுகைப் பார்த்துக்கிட்டு இருக்கிற. ச்சி… தூ…’ என்று தன்னையே திட்டிவிட்டு திரும்பிப் படுத்துக்கொண்டாள்.

அந்த அறையில் இருவரின் மூச்சுக்காற்றின் சத்தம் மட்டுமே கேட்டது. சிறிது நேரத்தில் இருவரும் தங்களையும் அறியாமல் தூங்கிப்போயினர்.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.