தப்பு 30
“சொல்லுங்க அண்ணா! இந்த பையன் சொல்றது எல்லாம் உண்மையா? காவிரியையும், அவ பையனையும் நீங்க ஏன் பிரிச்சிங்க ?”என்று புரியாமல் கேட்டார் பர்வதம்.
“அத்தை என்ன நீங்க என்னை பையன்னு சொல்றிங்க. உங்க மாப்பிள்ளைன்னு சொல்லுங்க” என்றான் யுவன்.
அவனை திரும்பி ஒரு பார்வை பார்த்த பர்வதம் “சொல்லுங்க அண்ணா , எனக்கு எதுவுமே புரியல. யார் சொல்றதை நம்புறதுனு தெரியல” என்று அவர் பதிலுக்காக காத்திருந்தார் பர்வதம்.
“பர்வதம் அது.. அது வந்து.. ‘ என்று ராஜேந்திரன் பதில் சொல்ல தடுமாற..
“அவர் சொல்ல மாட்டார் அத்தை நானே சொல்றேனே.. ” என்று வீட்டிற்குள் ஆராவின் கையைப் பிடித்துக்கொண்டு உள்ளே வந்தான்.
“வலது காலை எடுத்து வெச்சு வா ஆரா “என்று அவளோடு நுழைந்தவன் . “சொல்லிறட்டுமா? ” என்றான் ராஜேந்திரனிடம்.
அவரோ அரண்டு போய் எங்கே உண்மையை சொல்லிவிடுவானோ என்று பயந்தவர் “வேண்டாம் என்று தலையை ஆட்ட..
“இங்க பாருங்க அத்தை. என் அம்மா இந்த வீட்டுக்கு வேளைக்கு வந்து எவ்ளோ வருஷம் ஆச்சு?” என்றான்.
“ஒரு பதினெட்டு , இருபது வருஷம் இருக்கும் தம்பி ” என்றார்.
“ம்ப்ச்.. தம்பியா? மாப்பிள்ளைன்னு சொல்லுங்க அத்தை” என்றான் சிரித்துக்கொண்டே செல்லமாக.
அவரோ சங்கடமாக கார்த்திகேயனைப் பார்க்க..
“கூப்பிடு.. வேற வழி இல்லையே. இனி இந்த கல்யாணத்தை மாத்த முடியுமா? என்ன?”என்றார்.
அவர் சொல்வதும் சரி தான் என்று தலையை ஆட்டியவர் “ம.. மாப்பிள்ளை” என்றார்.
அவர் சொன்னதும் தான் தாமதம் “தேங்க் யூ அத்தை!” என்று அவர் கையைப் பிடித்து குலுக்கினான்.
அவரோ சங்கடமாக அவனிடம் இருந்து கையை உறுவிக்கொண்டவர். “சரி சொல்லுங்க மாப்பிள்ளை. உன் அம்மாவும், நீயும் பிரிய என் அண்ணா எப்படிக் காரணம் ஆக முடியும்” என்றார்.
“ஏன்னா! என்னை யார்க்கும் தெரியாம என் அம்மாகிட்டே இருந்து பிரிச்சு ஒரு ஹாஸ்டெல்ல தங்க வெச்சு, எனக்கு படிப்பு கொடுத்து.. தேவையான வசதி எல்லா செய்து கொடுத்து அவர் புள்ள மாதிரி பாத்துக்கிட்டார். அது தான் காரணமே.. ” என்றான்.
“அவர் உனக்கு நல்லது தானே பண்ணிருக்கார். அப்பறோம் ஏன் என் அப்பா தான் உன் பேமிலி பிரியக் காரணம்னு சொல்ற நீ.. ” என்றான் யுகேன்.
“என் அம்மா கஷ்டப்படுறதை பொறுத்துக்க முடியாம தான் ,என்னை அவங்ககிட்டே இருந்து பிரிச்சு கூட்டிப் போய் இத்தனையும் செய்து கொடுத்தார். அவர் பண்ணினது நல்லது தான் நான் இல்லேனு சொல்லல… ஆனா இத்தனை நல்லது பண்ணினவரு , என் அம்மாகிட்டே இருந்து என்னை பிரிச்சும் வெச்சுட்டார். என் அம்மாவை என்னால பார்க்க முடியல. அவங்ககிட்டே பேச முடியல.. என்னோட சந்தோசத்தை ,வெற்றியை அவங்ககிட்டே சொல்லி சந்தோசப்பட முடியல.. என்னோட கஷ்டமான நேரத்துல அவங்க மடியில் படுத்து அழ முடியல . இதுக்கு எல்லாம் காரணம் அவர் தான் ” என்றான்.
இப்பொது எல்லோருடைய பார்வையும் ராஜேந்திரன் மீது படிய.. அவரோ அமைதியாக நின்று இருந்தார்.
“ஏன் இவர் இப்படி எல்லாம் பண்ணினார்னு எனக்கு காரணம் தெரியும். ஆனா அதை நான் உங்ககிட்டே சொல்ல மாட்டேன். அவர் தான் சொல்லணும் , அதுக்கான உண்மையான காரணம் அவருக்கு மட்டும் தான் தெரியும்” என்றான்.
“நீ காவேரியோட பையன்னா.. அப்போ பூவிழி உன்னோட தங்கச்சியா?” என்ற யுகேனின் பார்வை ராஜேந்திரன் மீது அழுத்தமாகப் படிந்தது.
“இல்ல என் அம்மாவுக்கு நான் ஒரே பையன் தான். பூவிழி யாருன்னு எனக்குத் தெரியாது. சொல்லப்போனா அவளால தான் நான் என் அம்மாவை விட்டுப் பிரிஞ்சேன், ஒரு நாள் இவர் பூவிழி பிறந்த மூணு மாசத்துல என் வீட்டுக்கு அவளை கொண்டு வந்தார், இந்த பொண்ணை நீ தான் வளர்த்தனும், இவளை உன்னோட பொண்ணா வளர்த்தனும், இது யார் குழந்தை என்னனு எதுவும் கேக்கக்கூடாதுனு சொல்லிட்டு என்னை அவங்ககிட்டே இருந்து பிரிச்சு. என் அம்மாவை என்கிட்டே இருந்து கூட்டிப் போனவரே இவர் தான் ” என்றான்.
யாருக்கும் எதுவும் புரியவில்லை. ராஜேந்திரனும் வாயைத் திறப்பதாகத் தெரியவுமில்லை.
கார்த்திகேயன் ராஜேந்திரன் முன் வந்தவர் “மச்சான், என்ன இதெல்லாம் மாப்பிள்ளை சொல்றது எல்லாம் உண்மையா? ஏன் அம்மாவையும், புள்ளையையும் பிரிச்சிங்க? பூவிழி யாரோட குழந்தை? ” என்று அவர் தோளை உலுக்கினார்.
அவர் கையைத் தட்டிவிட ராஜேந்திரன் “என்கிட்டே யாரும் எதுவும் கேக்க வேணாம். நான் எதையும் சொல்றதா இல்ல.. ” என்றவர் யுவனை பார்த்து முறைத்துவிட்டு தன் அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டார்.
பர்வதம் யோசனையாக நின்று இருக்க..
அவர் அருகே வந்த கார்த்திகேயன் “உன் அண்ணாவே வாயைத் திறந்து உண்மையை சொல்லணும். அதுவரை எதுவும் யோசிச்சு பிரயோஜனம் இல்ல.. நீ நம்ம பொண்ணையும் , மாப்பிள்ளையும் கூட்டிப் போய் சாப்பிட வை.. அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம் . இனி அவங்க வாழ்க்கைக்கு என்ன செய்யலாம்னு யோசிச்சு அதை செய்வோம் ” என்று நிதர்சனத்தை ஏற்று அதன் படி வாழ முடிவை எடுத்துவிட்டார்.
“சரிங்க.. .” என்றவர். ஆராவையும், யுவனையும் பார்த்தார்.
“அத்தை! ரொம்ப பசிக்குது. காலைல எழுந்து காபி கூட குடிக்கலை” என்று வயிற்றைத் தடவிக் காட்டினான்.
அவன் யதார்த்தமான பேச்சில் மனம் இளகிப்போனது பர்வதத்திற்கு. ‘முதல்ல பூஜை அறையில விளக்கு ஏத்தி சாமி கும்பிட்டு. அப்பறோம் சாப்பிட போகலாம் ” என்றவர் “யுகேன் நீயும் வா.. “என்று அவர்களை அழைத்துக்கொண்டு பூஜை அரை சென்றார்.
இருவரையும் உள்ளே சென்று தீபம் ஏற்ற சொல்லி பூஜை செய்ய வைத்தவர் அடுத்து அழைத்து வந்து இருவருக்கும் சாப்பிட கொடுத்தார்.
சாப்பிட்டு முடித்து ஆராவுக்கு தூக்கம் வருகிறது என்று சொல்லவும் “மாப்பிள்ளை நீங்களும் நேரமே எழுந்துட்டீங்க தானே.. ஆராவோட தூங்குறதுன்னா தூங்குங்க ” என்றார் பர்வதம்.
இருவரையும் தனியே விட யோசிக்கவில்லை அவர் . அதுதான் வயிற்றில் குழந்தையுடன் வந்துவிட்டாளே இனி தனியே இருவரையும் பிரித்து வைத்து என்ன பயன் என்று அவர் நினைத்துவிட்டார்.
“சரிங்க அத்தை ” என்று ஆராவோடு அறைக்குள் செல்லப் போனவனை “ஒரு நிமிஷம் ” என்று யுகேனின் அழைப்பு நிறுத்தியது.
“உன்கிட்டே கொஞ்சம் பேசணும்” என்றான்,
“இப்பொவேவா.. ” என்று ஆராவை ஏக்கமாகப் பார்த்தான் யுவன்.
“ம்ம்.. ஆமா..” என்றான் யுகேன்.
“ஆரா நீ தூங்கு நான் ப்ரோகிட்டே பேசிட்டு வரேன் ” என்று அவளை அனுப்பிவிட்டு யுகேனிடம் வர..
“அத்தை, மாமா.. நீங்களும் வாங்க ” என்று மூவரையும் அழைத்துக்கொண்டு ஹாலுக்கு வந்து அமர்ந்தான்.
அனைவரும் சோபாவில் அமர. .
“ஆராவை நீ கல்யாணம் செய்துட்டதுக்காக நாங்க உன்னை இந்த வீட்டு மாப்பிள்ளையா ஏத்துக்கிறோம் . ஆனா உன்னைப் பத்தி எங்க யாருக்கும் எதுவும் தெரியாது , நீ என்ன பண்ணிட்டு இருக்க? எங்க இருக்க? இப்படி எந்த விஷயமும் எங்களுக்குத் தெரியாது. ” என்றான்.
“அவ்ளோ தானா ப்ரோ.. சொல்லிட்டா போகுது ” என்றவன் தன் பாக்கெட்டில் இருந்து விசிட்டிங் கார்டை எடுத்து அதை யுகேனிடமும் , கார்திகேயனிடமும் நீட்டினான்.
இருவரும் அதை வாங்கி பார்த்துவிட்டு புருவம் உயர்த்த..
“மாப்பிள்ளை நீங்க.. நீங்க தான் யூ ஒன் கம்பெனியோட எம் டி யா!” என்று அதிர்ந்து கேட்டார்.
“ம்ம்ம். .ஆமா மாமா ” என்று தோள்களை குலுக்கினான்.
“குட்.. ஐடி லெவெல்ல உன்னோட கம்பெனி தான் முதல் இடத்துல இருக்கு. வாழ்த்துக்கள் ” என்றவன் எழுந்து கொள்ள..
“ப்யூட்டர்ல நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு ப்ராஜெக்ட் செய்யலாம் ” என்று கையைக் கொடுத்தான் யுவன்.
“அஃப்கோர்ஸ் ” என்று கைகளை குலுக்கியவன் “அத்தை உன் மருமகன் ஒரு நல்ல பொசிஷன்ல தான் இருக்கான் . நம்ம ஆரா சந்தோசமா இருப்பா. நீங்க கவலைப் படாதீங்க. ” என்று அவருக்கு நம்பிக்கையான வார்த்தைகளைக் கூறினான்.
யுகேன் நேற்றே யுவனைப் பற்றி அனைத்தையும் விசாரித்துத் தெரிந்து கொண்டான் , பர்வதத்திற்கு தன் மகளின் வாழ்க்கை குறித்து உள்ளுக்குள் பயம் இருக்கும் என்று தெரியும் அவனுக்கு, அதனால் தான் அவர்களை வைத்தே அனைத்தையும் அவன் வாயாலேயே சொல்ல வைத்து அவர்கள் குழப்பத்திற்கு முடிவை கொடுத்திருந்தான்.
பர்வதத்தின் முகம் இப்பொது தான் சற்று தெளிந்தது போல இருந்தது . அவர் பார்வை இப்பொது யுவனின் மேல் படிய..
“என்னைப் பத்தி இன்னும் எதுவும் தெரிஞ்சுக்கணுமா சொல்லுங்க. எல்லாமே சொன்னதுக்கு அப்பறோம் நான் தூங்கபோறேன் ” என்றான்.
“எதுவுமில்ல.. நீ போய்த் தூங்கு ” என்றான் யுகேன்.
“ஓகே.. ” என்றவன் ஆராவின் அறை எங்கே இருக்கிறது என்று கேட்டு அவள் அறைக்கு சென்றுவிட..
“அத்தை நீங்க எதுவும் கவலைப் பட வேணாம். யுவன் பார்க்க நல்ல பையனா தான் இருக்கான். எதுவும் தப்பா இருக்காதுன்னு நம்புங்க. அப்படியே எதுவும் இவனால் பிரச்சனை வந்தா அதை நான் பார்த்துகிறேன்” என்றான்.
“சரிப்பா , நடந்தது நடந்து போயிருச்சு , இனி அதை மாத்த முடியாது. இனி நடக்குறதையாவது சரியா நடத்தணும், நானும் , உன் அத்தையும் போய் ஒரு நல்ல நாள் பார்த்துட்டு வரோம். ஊரை கூட்டி இவங்க கல்யாணத்தை எல்லாருக்கும் தெரியப்படுத்தனும் இல்லையா? சின்னதா ஒரு ரிசெப்ஷன் ஒன்னு வெச்சுடலாமா?: என்றார்.
“அதுக்கு என்ன மாமா தாராளமா செய்துடலாம். சின்னதா என்ன க்ராண்டாவே ரிசெப்ஷன் வேச்சுரலாம். நீங்க நாள் மட்டும் பார்த்து சொல்லுங்க , மத்த எல்லாத்தையும் நான் பார்த்துகிறேன் ” என்றான் சந்தோசமாக.
“சரிப்பா நாங்க இப்போவே நம்ம ஜோசியரைப் பார்த்துட்டு வரோம் “என்று பர்வதத்தை கூட்டிக்கொண்டு கிளம்பி இருந்தார்.
யுகெனும் ஆபீஸ் கிளம்ப மேலே சென்றுவிட..
இங்கே ஆராவின் அறைக்குள் வந்த யுவன் அவள் உறங்கிவதைப் பார்த்து மெல்ல அவள் அருகே வந்து படுத்தவன் அவள் போர்வைக்குள் கையை நுழைத்து அவள் மெல்லிய இடையை வருடி..
“தூக்கமா பேபி.. “என்றான்.
“ம்ஹும்.. உனக்காக தான் வெயிட்டிங் ” என்று அவன் கையை பிடித்து தன்னோடு மேலும் இறுக்கி அணைத்துக்கொண்டவள் அவன் கைவளைவில் கண்கள் மூடி அப்படியே படுத்திருக்க..
“நமக்கு கல்யாணம் ஆகிருச்சு பேபி.. “என்றான்,
“ம்ம்ம் ஆமா ..” என்றாள் ஆரா.
“அப்போ பஸ்ட் மோர்னிங் கொண்டாடலாமா?” என்றான்.
மெல்ல இதழ் வளைத்து சிரித்தவள் “ம்ம்..” என்று வெட்கி சிரித்தாள்.
அவள் சம்மதம் சொன்ன அடுத்த நொடி அவன் இதழ்களும், கைகளும் அவள் உடலில் அத்துமீறத் துவங்கி இருந்தது.
அவள் போர்த்தி இருந்த போர்வைக்கு விடுதலை அளித்தவன் “பேபி.. ” என்றான்.
“ம்ம்.. ” என்றாள் மோன நிலையில்.
“ஐ லவ் யூ..” என்றான்.
“லவ் யூ டூ .. யுவன் ” என்று திரும்பி அவனை அணைத்துக் கொண்டு அவன் இதழில் மோகமும், காதலுமாக முத்தம் வைத்தாள் ஆரா.
“பேபி உன் லிப்ஸ் ரொம்ப சாப்ட் டி.. ” என்று அவள் கீழ் இதழை தன் பற்களால் கவ்வி இழுத்தவன் சின்ன சின்னதாக முத்தம் வைத்தவன் அவள் இதழை அழுந்த முத்தம் வைத்து பற்களுக்கு இடையில் வைத்து அவள் இதழை மென்று தின்று கொண்டிருந்தான்.
அவன் மோகம் தலைக்கு ஏற.. முத்தம் இன்னமும் ஆழமானது. இருவரின் உடையும் அனாதைகள் ஆனது.
சற்று நேரத்தில் மூச்சு முட்ட தன் இதழை யுவனிடன் இருந்து பிரித்தவள் மூச்சு வாங்க அவன் நெஞ்சில் கை வைத்து முத்தம் கொடுக்க வந்தவனை தடுத்து நிறுத்தியவள் “யுவன் மெதுவா.. வலிக்குது எனக்கு.. ” என்று தன் இதழை நாவால் தீண்டி அதன் வலியை மட்டுப்படுத்த முயன்றால்.
“எனக்கும் புரியுது பேபி .. ஆனா என்னால உன்னை பார்த்தாலே கண்ட்ரோல் பண்ண முடியல.. நான் என்ன பண்ரது” என்று அவள் கையை தன் மேல் இருந்து பிரித்து தலைக்கு மேலே அவள் கையை உயர்த்திப் பிடித்தபடி சொன்னான்.
“எனக்கும் தான் கண்ட்ரோல் பண்ண கஷ்டமா இருக்கு..” என்று வெட்கத்தில் தலையை அவள் கவிழ்த்துக் கொள்ள..
அவள் முகத்தில் இருந்து கீழ் இறங்கி கழுத்தில் செல்லமாகக் கடித்தவன் “அப்பறோம் என்னை மட்டும் சொல்ற.. நீயும் தான் என் லிப்சை கடிச்சு வெச்சிருக்க.. ” என்று நிமிர்ந்து அவளை பார்த்தவன் தன் இதழில் கசிந்த ரத்தத்தை அவளை பார்த்துக்கொண்டே நா கொண்டு துடைத்தான்.
தன் கீழ் இதழைக் கடித்து வெட்கத்தை மறைக்க முயன்றவள் அவனைய பார்க்க..
அவள் கையை தன் ஷர்ட் கொண்டு கட்டிலின் விளிம்பில் கட்டியவன் அவள் விழிகளைப் பார்த்துட்கொண்டே ஆராவின் இதழில் மீண்டும் இதழைப் பதித்து முன்பு தந்தது போல முத்தம் கொடுத்தவன் அதே வேகத்தில் கீழ் இறங்கி அவள் உடல் முழுதும் சின்ன சின்னதாய் பற்கள் கொண்டு செல்லமாக கடித்து அவளுக்கு வலியையும் , இன்பத்தையும் ஒரு சேர கொடுத்தான்.
அவளோ வெட்கம் பிடுங்கித்தின்ன .. நெளிந்தவள் யுவனைப் பார்க்க..
அவளை பார்த்துக்கொண்டே கீழ் இறங்கி அவள் புதையலில் தன் இதழ் பதித்து முத்தம் வைத்தவன் “உன்னோட லிப்ஸ் மாதிரியே.. செம்ம சாப்ட பேபி.. ” என்று கண்ணடித்தான்.
அவனின் இந்த அதிரடியான காதலிலும், அடாவடித்தனத்திலும் தானே காதல் வயப்பட்டாள் ஆரா..
“யுவன் ப்ளீஸ் இதை கழட்டி விடுங்க.. எனக்கு இப்படி படுக்க ஒரு மாதிரி இருக்கு. ” என்று சிணுங்கினாள்.
“வெய்ட் பேபி.. இன்னோரு லிப்ஸையும் டேஸ்ட் பண்ணிட்டு வந்து கழட்டிவிடறேன்” என்று குனிந்து முத்தம் பதிக்கத் துவங்கியவன் அவள் தன்னிலை மறந்து கால்கள் வலுவிழந்து உயரத்தில் சந்தோசமாக மிதப்பதை கண்டபின் தான் மேலேறி வந்து அவள் கைகளுக்கு விடுதலை அளித்தான்.
அடுத்த நொடி அவன் கழுத்தை இருக்க கட்டிக்கொண்டு அவன் இடையில் தன் கால்கள் போட்டு இறுக்கி தன் பக்கம் இழுத்தவள் “என்னைக் கொள்ளுற யுவன் நீ.. “என்று அவன் இதழை மூர்க்கமாக முத்தமிடத் துவங்கினாள்,
அவள் பாராட்டை சந்தோசமாக ஏற்றுக்கொண்டவன் அவளுள் கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவி.. தன்னை முழுமையாக அவளுள் தொலைத்து மோகக்கடலில் இருவரும் ஒன்றாக மீண்டும் பயணிக்கத் துவங்கி இருந்தனர்.
