PART-2
“பூவிழி! நான் சொல்றதைக் கொஞ்சம் கேளு அடம் பிடிக்காத ” என்று அவளைக் கீழே இறங்க விடாமல் பிடித்துக்கொண்டான்.
“இல்ல மாமா எனக்கு அம்மாவைப் பார்க்கணும். ” என்று அவள் அடம் பிடிக்க. .
“ஏய் அவங்க தூங்குறாங்க டி.. கொஞ்ச நேரம் கழிச்சு நானே உன்னைக் கூட்டிப் போறேன். இப்போ பேசாம படு.. ” என்றான்.
அவள் வயிற்றைத் தள்ளிக்கொண்டு பிடிவாதம் பிடிப்பதை அவனால் பார்க்க முடியவில்லை.
அவளும் சொல்வதைக் கேட்காமல் காவேரியைப் பார்ப்பதிலேயே குறியாக இருக்க..
அவர்களோடு இருந்த நர்ஸ்களுக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை.
பூவிழியை அமைதியாக்க அவர்களுக்கு வலி தெரியவில்லை. ஏன் என்றால் அவளை உறங்க வைக்க கொடுத்த மருந்தும் வேலை செய்யவில்லை. “சார் இவங்களை கொஞ்சம் பாத்துக்கோங்க நான் போய் டாக்டரை கூட்டிட்டு வரேன் ” என்று ஒரு நர்ஸ் வெளியே போக..
அதற்குள் கையில் இருந்த ட்ரிப்ஸ்ஸை கழட்டிவிட்டு கட்டிலை விட்டு பூவிழி கீழே இறங்கிவிட்டாள்.
“ஐயோ! மேடம் என்ன பண்ணி வெச்சிருக்கீங்க.. இப்படிப் பண்ணக் கூடாது. நில்லுங்க ” என்று அவளை பிடிக்க நர்ஸ் போராட..
யுகேனோ பூவிலியின் செயலில் திகைத்துப் போனவன் அவளை இழுத்து தன் கை வளைவிற்குள் நிற்க வைத்தவன் “நர்ஸ் நீங்க ட்ரிப்ஸ் மாட்டி விடுங்க.. ” என்று அவளை இறுக்கப் பற்றிக்கொண்டான்.
கையில் வழிந்த குருதியை நிறுத்த முற்பட..
அவ்ளோ பிடிகொடுக்காமல் திமிறினாள் காவேரிக்கு எதுவோ ஆகிவிட்டது என்ற பயம் அவளுக்கு. ஏற்கனவே அவர் தன்னை பெற்ற தாய் இல்லை என்று தெரிந்து நொந்து போனவளுக்கு. அவள் கண் முன்னேயே மயங்கி விழுந்தவருக்கு எதுவும் ஆகிருக்குமோ என்று பயம் வேறு தொற்றிக்கொள்ள.. அந்த எண்ணமே அவளை இந்த அளவுக்கு பிடிவாதம் பிடிக்க வைத்தது,
அவளை பிடிக்க முடியாமல் திணறிய யுகேன் அவள் கர்ப்பம் காரணமாக அவனால் அவளை அதட்டவும் முடியவில்லை.
கட்டிலில் அமர்ந்தவன் அவளை இழுத்து தன் மடியில் அமர்த்தி அவள் முகத்தை தன்னைப் பார்க்குமாறு திரும்பியவன் “பூவிழி நான் சொல்றதைக் கொஞ்சம் கேளு.. உன் அம்மா எழுந்ததும் அவங்ககிட்டே நானே உன்னை கூட்டிட்டு போறேன் ” என்றான்.
“இல்ல மாமா , அவங்க தூங்கினாலும் பரவால்ல. நான் அவங்களை ஒரு தரம் பாக்கணும். ப்ளீஸ் என்னை விடுங்க.. “என்று அவனிடம் கெஞ்சினாள்.
அவள் பேசிய நேரம் நர்ஸ் அவள் கையைப் பற்றி மீண்டும் ட்ரிப்சை போட்டுவிட்டிருக்க..
“ஏய் கொஞ்சம் சொல்றதைக் கேளு டி.. அவங்க தூங்குறாங்க. இப்போ நாம போனா டிஸ்டர்பா இருக்கும் . நீயும் கொஞ்சம் ரெஸ்ட் எடு அப்பறோம் போலாம் ” என்றான்.
“ம்ஹும்.. இல்ல இல்ல மாமா எனக்கு என் அம்மா வேணு. அவங்களை நான் பாக்கணும் ” என்று அழுத்தவள் கையில் போட்டிருந்த ட்ரிப்சை மீண்டும் கழட்டப் போக..
“மேடம் வேணாம் ” என்று அவள் கையைப் பற்ற வந்தார் நர்ஸ்.
யுகேனும் அவள் செயலில் பதறியவன் சட்டென ட்ரிப்சி கழட்டப் போன அவள் கையை ஒரு கையால் பிடித்தவன் மற்றொரு கையால் அவள் முகத்தை பற்றி தன்னை நோக்கி திருப்பியவன் அவள் இதழில் தாமதிக்காமல் இதழ் பதித்து அவளை கட்டுக்குள் கொண்டு வர முயன்றான்.
அவன் எதிர் பார்த்தது போலவே பூவிழி யுகேனின் இந்த ஒற்றை முத்தத்தில் கரைந்து போனவள் அவன் கை வளைவில் அசையாமல் இருக்க..
அவன் முத்தமிடுவதை பார்த்த நர்ஸ் “ஐயோ ” என்று முகத்தை மூடிக்கொள்ள..
அப்போது உள்ளே வந்த டாக்டரும், நர்ஸும் இவர்களை பார்த்து சற்று அதிர்ந்து தான் போயினர்.
அவர்களை பார்த்த யுகேன் கண்களால் எதுவும் செய்ய சொல்லி புருவம் சுருக்க..
அதை புரிந்து கொண்ட டாக்டரோ.. பூவிழியை உறங்க வைக்க ஊசியை எடுத்து வந்து போட்டார்.
சற்று நேரத்தில் அவள் பிடிவாதம் மட்டுப் பட்டிருக்க. .அவள் இதழில் இருந்து மென்மையாக தன் இதழைப் பிரித்த யுகேன் அழுது வடிந்த பூவிழியின் முகத்தைப் பார்த்தவன் தன் கையால் அவள் கண்ணீர் வழிந்த முகத்தை துடைத்து விட்டு அவள் தலை முடியை சரி செய்தான்.
“மாமா.. மாமா.. அம்மா.. நல்லா நல்லா தானே இருக்காங்க” என்றாள்.
“ஏய் நான் சொல்லி தான் கேக்கல நீ.. இதோ டொக்டர் இருக்கார் அவர்கிட்டே நீயே கேளு ” என்றான்.
“ம்மா.. உங்க அம்மாவுக்கு எதுவும் ஆகல அவங்க நல்லா தான் இருக்காங்க. நீங்க பயப்படுற அளவுக்கு எதுவும் இல்லை ” என்றார்.
“நிஜமா தான் சொல்றிங்களா டாக்டர் ” என்று அவரை நம்பாமல் கேட்டாள் பூவிழி.
அவள் குழந்தை தனத்தை கண்டு சிரித்தவர் “அவங்களுக்கு எதுவும் இல்ல கொஞ்சம் ப்ரெஷர் கூடிருக்கு அவ்ளோ தான். “என்றவர். “நர்ஸ் இவங்க நல்லா தூங்கி எப்போ எழுந்துக்கறாங்களோ அப்போ இவங்க அம்மாவை பார்க்க கூட்டிட்டுப் போங்க சரியா ” என்றார்.
“ஓகே டாக்டர் ” என்று நர்ஸ் பதில் சொல்ல .
“பார்த்துக்கோ டாக்டர் நீ நல்லா தூங்கி எழுந்த அப்பறோம் தான் உன் அம்மாவை பார்க்க கூட்டிப் போறதா சொல்லிருக்கார். இப்போ நீ என்ன செய்யணும் ” என்றான்.
அவன் மார்பில் தலை சாய்த்து இருந்தவள் யுகேனை நிமிர்த்து பார்த்து தூங்கணும் ” என்று சொல்லும்போதே அவள் கண்கள் லேசாக தூக்கத்தில் செருகத் துவங்கியது.
சரி நீ தூங்கு என்று தன் மடியில் அமர்த்திக்கொண்டே அவளை தூங்க வைத்தான் யுகேன் .
பூவிழியும் அவன் மார்பில் சாய்ந்து கொண்டே உறங்கி இருக்க.. இருவரையும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று டாக்டரும் , இரு நர்ஸ்களும் வெளியேறி இருந்தனர்.
பூவிழி உறங்குவதை பார்த்து மெல்ல சிரித்தவன் “அமுக்காஞ்சி மாதிரி இருந்துட்டு கொஞ்ச நேரத்துல எல்லாரையம் திணற விட்டுட்டியே ” என்று நினைத்தவன் அவள் கன்னத்தை செல்லமாகக் கிள்ளினான்.
