Episode – 2
உண்மையாவே ஷாலினிக்கு அவன் கூட பேச ஆசை. அதனால் அவனை உள்ளே வைக்கச் சொன்னாள்.
நான் ரவுண்ட்ஸ் போயிட்டு வந்துடறேன் என்று சொல்லிவிட்டு வெளியே கிளம்பி விட்டாள்.
“இங்கேயே உட்கார்ந்து இவன் கூட பேசிக்கிட்டு இருந்தா… நாம இவனைப் பார்த்து ஜொல்லு விடுறது ஸ்டேஷனில் மத்தவங்களுக்கு தெரிஞ்சிரும்” என்று மனதில் நினைத்தவாறு.
ஒரு நிமிடம் நின்றவள் “கான்ஸ்டபிள் அந்த லோக்கியோட பைல எடுத்துட்டு வா” என்று அதை வாங்கிக்கொண்டு ஜீப்புக்கு சென்றாள்.
டிரைவரிடம் வண்டியை எடுக்கச் சொல்லிவிட்டு… லோகியை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் அவள் ஃபைலை திறந்தாள். ஃபைலை ஒவ்வொரு பக்கமாக திருப்ப அவளுக்கு சில ஆச்சரியங்கள் கிடைத்தது.
சீக்கிரமா திரும்பி ஸ்டேஷனுக்கு போய் அவன்கிட்ட பேசணும் என்று மனசுக்கு தோன்றியது. ஆனால் இப்போதுதான் வெளியே கிளம்பி இருக்கிறோம். உடனே திரும்பி ஸ்டேஷனுக்கு போனால்… ஜீப் டிரைவரில் இருந்து, கான்ஸ்டபிள் வரைக்கும் எல்லோருக்கும் சந்தேகம் வந்துடும்… என்று நினைத்தவள் ஒரு மணி நேரம் ஜீப்பில் சுத்திவிட்டு திரும்ப போலாம் என்று முடிவு செய்து அமைதியாக உட்கார்ந்து விட்டாள்.
ஸ்டேஷனில் லோக்கியை அடைத்து வைத்த அறையில் ஏற்கனவே ஒருவன் சோகமாக உட்கார்ந்து இருந்தான்.
சோகமாக இருந்தாலும் லோகியை பார்த்தவுடன் “வாங்கண்ணே” என்றான்.
“அவ்வளவு நல்லவனாடா நீ… மூஞ்சில இவ்வளவு சோகத்தை வச்சுக்கிட்டு.. என்னமோ விசேஷத்துக்கு வந்தவங்கள வரவேற்கிற மாதிரி ‘வாங்கண்ணே’ அப்படிங்கிற” என்று யோசித்தவன் மெதுவாக அவன் அருகில் சென்றான்.
“உட்காருங்க அண்ணே… அப்புறம் என்ன கேசு” என்றான் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டே..
“ம்ம்ம்… அல்வா திருடின கேசு…” என்றான் லோகி நக்கலாக.
“ஏண்ணே… உனக்கே இது அசிங்கமா இல்லையா… அல்வாவ போயி திருடியிருக்க… ஷேம் ஷேம்” என்று தலையில் அடித்துக் கொள்ள…
“யார்ரா இவன் ஒரு டைப்பா இருக்கிறான்” என்று யோசித்த லோக்கி…
என் கதையை விடு… நீ என்ன பண்ணிட்டு இங்க வந்த என்று கேட்டான் லோகி.
“அதை ஏண்ணே கேக்குறீங்க…
நான் பெருசா எல்லாம் ஆசைப்பட மாட்டேன்… நிறைய சொத்து சேர்க்கணும்… கார் பங்களா வாங்கி வசதியா இருக்கணும்… அப்படிங்கறதுக்காக எல்லாம் திருடலண்ணே… ஏதோ வயித்து பொழப்புக்காக திருடுறேன்” என்று உத்தமன் மாதிரி சொன்னான்.
வயித்து பிழைப்புக்காக திருடினா மட்டும்… உனக்கு தங்கக் கம்பி போட்ட ஜெயில் தருவாங்களா… டேய் ரொம்ப மொக்கை போடாம… என்ன பண்ணிட்டு உள்ள வந்த அதை சொல்லு… என்றான் லோகி கொஞ்சம் கடுப்பாக.
“சரி அண்ணே இந்த தடவை கரெக்டா சொல்றேன்…” என்றவன்
நான் ஒரு வீட்டில திருடப் போனேன்… அங்க உள்ள போயி பீரோவெல்லாம் திறந்துட்டேன்… சரி நகை தான் உள்ள இருக்கும்… எடுத்துட்டு கிளம்பலாம் அப்படின்னு பார்த்தா…
உள்ள நிறைய புக் இருந்துச்சு… நானெல்லாம் ஒரு சின்ன பேப்பர் கிடைச்சதுனாலே… அதுல ஏதாவது இன்ஃபர்மேஷன் இருக்கும்… அத வச்சு நம்ம அறிவ வளத்துக்கலாம்னு தேடுற டைப்ணே…” என்று நாசா சயின்டிஸ்ட் ரேஞ்சுக்கு பேசியவனை கடுப்புடன் பார்த்த லோக்கி…
சரி சரி நீ முறைக்காத நான் சொல்றேன்…என்றவன் தொடர்ந்தான்.
அங்க வேற நிறைய புக் இருந்துச்சா… என்னோட ஆர்வம் அதிகமாகி… அதில் இருந்து ஒரு புக்கை எடுத்து படிக்க ஆரம்பிச்சேன்… அது என்னடான்னா… தமிழ் இலக்கியம் புக். எனக்கு தமிழ் மேல ரொம்ப ஆர்வம்ண்ணே… அதனால நேரம் போனதே தெரியாமல் படிக்க ஆரம்பிச்சிட்டேன்…”
கொஞ்ச நேரத்துல அந்த வீட்டுக்காரர் எந்திரிச்சு அங்க வந்துட்டாரு. வந்தவர் கோபப்படுவார்னு பார்த்தால்… அவர் ஒரு தமிழ் வாத்தியாராம்… நான் அந்த நேரத்துல உட்கார்ந்து தமிழ் படிச்சிட்டு இருந்தத பாத்துட்டு…
“தம்பி உனக்கு தமிழ் மீது இவ்வளவு ஆர்வமா…. அப்படின்னு கேட்டவரு… எனக்கு இலக்கணம் இலக்கியம்ன்னு அன்னைக்கு பொழுதுக்கும் கிளாஸ் எடுத்தாரு….
எடுத்து முடிச்சவர் அப்படியே விட்டாரா… இவ்வளவு நல்ல பையனா இருக்க… உனக்கு இந்த திருட்டு குணம் இருக்கக்கூடாது… அதனால ரெண்டு நாளைக்கு ஜெயில்ல இருந்தா தான் உனக்கு அறிவு வரும்னு சொல்லி என்னை கொண்டு வந்து இங்கே விட்டுட்டு போயிட்டாரு… என்றான் அருண் பீல் பண்ணியவாறு…
“ஆனா அவர் ரொம்ப நல்லவருண்ணே…. நல்லா சொல்லிக் கொடுத்தாரு” என்றான் அப்பாவியாக.
லோகிக்கு இதெல்லாம் கேட்க தலை சுற்றி விட்டது… “டேய் உனக்கு இரக்கமே இல்லையா… இதெல்லாம் ஒரு கதைன்னு சொல்றியே…” என்று கேட்க…
ஆப்புல வால் மாட்டிக்கிட்ட குரங்கு போல முழிச்சான் அருண்.
அப்போது வெளியே ஜீப் சத்தம் கேட்க…
“ஐ நம்ம ஆளு வந்துருச்சு…” என்று ஃப்ரஸ் ஆனான் லோகி.
உள்ளே வந்த ஷாலினி நேராக செல்லுக்கு சென்று லோக்கியை வெளியே அழைத்தாள்.
“உன்னோட ஃபைல் பார்த்தேன். என்ன பெரிய ஹீரோ மாதிரி ஆதரவு இல்லாதவங்களுக்கு எல்லாம் நிறைய பணம் கொடுத்து இருக்க…
சென்டிமென்ட் ஃப்ளாஷ் பேக் ஏதாவது வச்சிருக்கியா…” என்றாள் சிரித்துக் கொண்டே.
“என்ன மேடம் நீங்க… திருடனா இருந்தா அடுத்தவங்களுக்கு ஹெல்ப் பண்ண கூடாதா… இருக்கிறவங்க கிட்ட திருடுறோம்… சிரமப்படுறவங்களுக்கு கொடுக்கிறோம் இதுல என்ன இருக்கு…” என்றான் கேஷுவலாக.
தான் உதவி செய்வதையும் பெருமையாக அவன் நினைத்துக் கொள்ளவில்லை.
மேடம் நாங்க நேரடியா திருடறோம்… உங்கள மாதிரி கவர்மெண்ட் வேலைல இருக்கிறவங்க, பிசினஸ் பண்றவங்க… நீங்க எல்லாம் ரொம்ப நேர்மையாவா இருக்கீங்க…
என்று கேட்டான்.
ஷாலினிக்கு கோபம் வந்து அவனை முறைத்தாள்.
மேடம் நான் எல்லாரையும் சொல்லல… ஆனா அதிகபட்சம் இங்கே சிஸ்டமே அப்படித்தானே இருக்கு… நாம எல்லாருமே ஏதோ ஒரு வகையில ஏமாத்திட்டும் இருப்போம், ஏமாந்தட்டும் இருப்போம் கரெக்டு தானே…
என்று சொல்லவும்…
சரி இதுக்கு மேல இவன் கிட்ட பேசினா… எது தப்பு எது சரின்னே தெரியாம போயிடும் என்று நினைத்தவள்…
“ஆமா இன்னொன்னும் கேட்கணும்னு நினைச்சேன் உங்க அப்பா போலீஸ் இன்ஸ்பெக்டரா” என்றாள்.
“ஆமாம் மேடம்… ரொம்ப நேர்மையான போலீஸ் ஆபீஸராக இருந்தவர்… கிட்டத்தட்ட 15 வருஷமா அவர காணோம்… உயிரோட இருக்காரா இல்லையான்னு கூட தெரியல… நேர்மையாக இருந்ததற்கு அவருக்கு கிடைத்த பரிசு இது” என்றான்.
அப்போது அருண் அவர்களை நிமிர்ந்து பார்த்து… “ப்ரோ உங்க அப்பாவும் போலீஸா” என்று ஆச்சரியமாக கேட்டான்.
ஆமா ஏன் கேக்குற… என்று லோகி கேட்க, “
“எங்க அப்பா போலீஸ் சூப்பிரண்டன்டா இருந்தவரு… ஆனா அவர ஒரு இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொன்னுட்டாரு… அந்த இன்ஸ்பெக்டர் ஒரு நாள் எங்க வீட்டுக்கு வந்து எங்க அப்பாவையும் அம்மாவையும் என் கண்ணு முன்னாலையே சுட்டு கொன்னுட்டாரு… நான் அந்த இன்ஸ்பெக்டர தேடித்தான் அலைஞ்சிட்டு இருக்கேன்…. எப்படியும் அவனை கண்டுபிடிச்சு பழிவாங்காமல் விடமாட்டேன்” என்றான் கோபமாக.
இதற்கு முன்னால் பேசிய அருணிற்க்கும் இப்போது பேசும் அருணுக்கும் லோகிக்கு நிறையவே வித்தியாசம் இருந்தது. அருணின் கண்களில் பழிவாங்கும் கோபம் நிறையவே தெரிந்தது.
இப்போது ஷாலினி லோகியின் பக்கம் திரும்பினாள்.
போலீசா இருக்கிறது கூட சில சமயத்துல டேஞ்சரத் தான் இருக்கு.
என்று லோக்கியிடம் சொன்னாள்.
“அப்ப என் கூட வந்துடுறீங்களா மேடம்… திருடருதில 50- 50 ஷேர் பண்ணிக்கலாம” என்று லோகி கேட்க…
செல்லமாக அவனை அடிக்க கை ஓங்கியவள்… “சரி நீ கிளம்பு… ஆனா ஒரு கண்டிஷன்” என்றாள்.
“கண்டிப்பா இன்னைக்கு ஈவினிங் டின்னர் போலாம் மேடம்” என்றான்.
“என்னது” என்று ஷாலினி கேட்க…
“இல்ல எப்படியும் உங்க கூட டின்னர் வரத்தானே கூப்பிடுவீங்க” என்று லோகி சொல்ல…
“உன்னோட வாய்க்கு நீ எங்காவது பெருசா மாட்டப் போற பாரு என்று சொன்னாள்” ஷாலினி.
“அதான் ஏற்கனவே மாட்டிட்டனே” என்று அவளைப் பார்த்து கண்ணடித்தான் லோகி.
“கொழுப்பு டா உனக்கு” என்று ஷாலினி சொல்லிவிட்டு சரி நீ கிளம்பு என்றாள்.
மேடம் ஒரு ரெக்வஸ்ட்… நான் கூட பரவால்ல… அல்வாவை திருடிட்டு உள்ள வந்தேன்… அவன் ஒண்ணுமே திருடாம உள்ள வச்சிருக்கீங்க… என்று அருணை காட்ட…
“என்னடா நீயும் கிளம்புறியா…” என்று அருணை கேட்க…
“இங்க இருக்கணும்னு எனக்கு என்ன ஆசையா… ஏசி இல்ல… ஃபேன் இல்ல ஒன்னும் இல்ல” என்ற அருணை…
“ரெண்டு பேரும் சேர்ந்துருக்கீங்க பாரு… ஏர்ல பூட்டுன எருமை மாதிரி” என்றாள் ஷாலினி.
“மேடம் என்ன..… என்னை பார்த்தா எருமை மாதிரியே இருக்கு” என்றான் லோகி.
அவனைப் பார்த்து சிரித்தவள் “இல்லை நீ காளை மாதிரி இருக்க…” என்று கொஞ்சம் வெட்கத்துடன் சொன்னாள்.
“நீங்க இந்த காளைய அடக்க வரீங்களா…” என்று லோகி கேட்க…
“டேய் நான் தாண்டா இந்த காளை கிட்ட அடங்கிட்டேன்…” என்று ஷாலினி சொல்ல…
“ஐஐஐ…” என்று சந்தோஷத்தில் ஷாலினியை கட்டி பிடிக்கப் போனான் லோகி.
“டேய் இது ஸ்டேஷன்டா…” என்று ஷாலினி செல்லமாக சொல்ல…
“அப்போ இன்னைக்கு ஈவினிங் மீட் பண்ணுவோம்ல்ல அப்ப கட்டி பிடிச்சுக்கலாமா” என்று கேட்டான் லோகி.
அவள் குனிந்து கொண்டே தலையாட்ட… “ஓகே ஷாலு… நான் கிளம்பட்டா” என்று ஸ்டைலாக சொல்லிவிட்டு அருணை கூட்டிக்கொண்டு கிளம்பினான் லோகி.
