Episode – 19.
அங்கே ஹாஸ்பிடலில் அஞ்சலி பரபரப்பாக இருந்தாள்.
டாக்டர் சொன்னது போல ப்ரீ ட்ரீட்மென்ட்… அதாவது ஆபரேஷனுக்கு முன்னால் செய்ய வேண்டிய ட்ரீட்மென்ட்கள் போய்க்கொண்டிருந்தது.
அருணுக்கும் லோகிக்கும் எந்த விஷயமும் தெரியக்கூடாது. அவர்கள் தேடும் வரை தேடிவிட்டு அப்படியே ஓய்ந்து விடுவார்கள். தான் அருணை கல்யாணம் செய்தால் அதன் தொடர்ச்சியாக ஏதோ ஒரு சூழ்நிலையில் அவன் தனது அப்பாவை அடையாளம் தெரிந்து கொள்ளக்கூடும். என்ன செய்வது என்றெல்லாம் அவளது மனம் கசகசவென்று ஓடிக்கொண்டிருந்தது.
அப்பொழுது அவளது செல்போன் மெதுவாக அழைத்தது.
போனை எடுத்துப் பார்க்க அருண் தான் அழைத்து இருந்தான்.
இவனோட போனை அட்டென்ட் பண்ணாமல் விட்டால் சும்மா கூப்பிட்டு இருப்பான்… இல்லைன்னா எப்படியாவது விசாரிச்சு கண்டுபிடிச்சுட்டு வந்துருவான். அதனால அட்டென்ட் பண்ணி பேசிடலாம் என்று முடிவு செய்தவள்
போனை எடுத்து “ஹலோ” என்றாள்.
“அஞ்சலி எங்க இருக்க, உன்ன பாக்கலாம்னு உன்னோட ஆபீஸ்க்கு போனேன் அங்கே நீ இல்லை” என்று சொன்னான் அருண்.
“கொஞ்சம் உடம்பு சரியில்லை அதனால் ஹாஸ்பிடலுக்கு வந்திருக்கிறேன்” என்று சொன்னால் அஞ்சலி.
“என்ன ஆச்சு என் எலிக்குட்டிக்கு” என்றான் அருண் அக்கறையாக.
அவனது இது மாதிரி பேச்சு தான் அஞ்சலிக்கு ரொம்ப பிடித்தது.
“லைட்டா ஃபீவர் மாதிரி இருந்துச்சு…” அதான் என்றாள்.
“எந்த ஹாஸ்பிடல்” என்று அருண் கேட்க…
ஹாஸ்பிடலின் பெயரைச் சொல்லியவள்… “நீ அங்கெல்லாம் வர வேண்டாம்… நான் பத்து நிமிஷத்துல இங்கிருந்து கிளம்பிடுவேன்” என்று சொன்னால் அஞ்சலி.
சரி என்று போனை கட் பண்ணினான் அருண்.
‘இவன் எல்லாத்தையும் நோண்டி நோண்டி கேட்டுகிட்டே இருக்கான்… இவன்கிட்ட இருந்து மத்த விஷயத்தை எல்லாம் எப்படி மறைக்கிறது’ என்று நினைக்கும் போது அஞ்சலிக்கு தலைசுற்றியது.
அவள் யோசித்துக் கொண்டே கண்மூடி அமர்ந்திருக்க… அப்போது அங்கே டாக்டர் வந்தார்.
“மிஸ் அஞ்சலி… அப்பாவுக்கு சர்ஜரிக்கு முன்னாடி பண்ண வேண்டிய ட்ரீட்மென்ட் எல்லாம் போயிட்டு இருக்கு… இப்ப முகத்தை மூடி ஒரு ஃபேஸ் பேக் போட்டு இருக்காங்க… கொஞ்ச நேரத்துல அதை ரிமூவ் பண்ணிட்டு… அதுக்கப்புறம் ஆபரேஷன் தியேட்டருக்கு கூட்டிட்டு போய் விடுவோம்… ரெண்டு மூணு மணி நேரத்துல ட்ரீட்மென்ட் முடிஞ்சிடும்… யூ டோன்ட் ஒரி… யூ ஆர் கோயிங் டு மீட் யுவர் டாடி வித் நியூ ஃபேஸ்…” என்று சிரித்து படியே சொல்லிவிட்டு டாக்டர் நகர்ந்தார்.
டாக்டர் அவளிடம் சொல்லிவிட்டு நகர… “என்ன அஞ்சலி இதெல்லாம் என்கிட்ட சொல்ல மாட்டியா” என்று கேட்டவாறு பின்னால் நின்று இருந்தான் அருண்.
அருணை பார்த்ததும் அஞ்சலிக்கு தூக்கி வாரி போட்டது.
“மாமாவுக்கு என்ன ஆச்சு… இப்ப உள்ள போய் பார்க்கலாமா” அவரை என்றவாறு ஆர்வமாக அந்த அருகில் நோக்கி சென்றான் அருண்.
“ஏய் அருண்… அங்கே எல்லாம் போகாத… அப்பாவுக்கு ட்ரீட்மென்ட் போயிட்டு இருக்கு…” என்றவாறு அவனை தடுத்து நிறுத்தினாள்.
“ஏன் அஞ்சலி என்கிட்ட இதையெல்லாம் சொல்லவே இல்லை… ஏன் என்னை இன்னும் தள்ளி வைத்து பார்த்துட்டு இருக்க” என்று சென்டிமெண்டாக பேசினால் அருண்.
“டேய் அப்படி எல்லாம் இல்ல… இன்னும் நம்ம விஷயம் அப்பாவுக்கே தெரியாது… இடையில நீ வந்து… அதுவும் இந்த மாதிரி நேரத்துல நம்மள பத்தி தெரிஞ்சா அவருக்கு உடம்புக்கு ஏதாவது பிரச்சனையா ஆயிடும்னு யோசிச்சிட்டு தான் சொல்லலை” என்றால் அஞ்சலி.
“சரி என்னதான் ஆச்சு மாமாவுக்கு” என்று கேட்டான் அருண்.
டக்கென்று யோசித்தவள்… “அவருக்கு முன்னாடி இரண்டு பல்லு எடுப்பா இருக்கும்… அந்த இடத்தை மட்டும் லைட்டா சர்ஜரி பண்ணிக்க ஆசைப்பட்டார் அதுதான்” என்றால் அஞ்சலி.
“ஏய் என்ன விளையாடுறியா… நான் கூட ஏதோ சீரியஸான விஷயமா இருக்குமான்னு யோசிச்சிட்டு இருக்கேன்… நீ என்ன இப்படி சொல்லுற” என்று அவன் பேசிக்கொண்டு இருக்க…
அப்போது அங்கே வந்த ஒரு நர்ஸ்…
“மேடம் அப்பாவ ஆபரேஷன் தியேட்டருக்கு கூட்டிட்டு போயாச்சு… நீங்க உங்க ரூம்ல வெயிட் பண்ணுங்க… ஆப்ரேஷன் கம்ப்ளீட் ஆனதும் நாங்க இன்பார்ம் பண்றோம்” என்று சொல்லிவிட்டு சென்றாள்.
“அப்பாடா என்று நிம்மதி பெருமூச்சு” விட்டால் அஞ்சலி.
“எவ்வளவு நேரம் ஆகும் அஞ்சலி ஆபரேஷன் முடிய” என்று கேட்டான் லோகி.
“மூணு மணி நேரம் ஆகும்” என்றால் அஞ்சலி…
“ஓஹோ மூணு மணி நேரம் கழிச்சு என்னோட மாமா மன்மத ராசா மாதிரி வெளியே வரப் போறார்” என்று சிரித்தான் அருண்.
“சரி வா ரூமுக்கு போகலாம்… இங்கே எதுக்கு சும்மா நின்னுகிட்டு இருக்கணும்” என்றால் அருண்.
“ரூமுக்கு எல்லாம் நீ வர வேண்டாம்… கொஞ்ச நேரத்துல என்னோட அம்மா அங்க வந்துருவாங்க… நீ கிளம்பு அப்பா வெளியில வந்ததும் நான் உனக்கு கால் பண்ணி சொல்றேன்” என்றால் அஞ்சலி.
அஞ்சலி ஒரு பிடிமானமே இல்லாமல் பேசுவது அருணுக்கு ஒரு மாதிரி இருந்தது.
“ஏதோ யோசித்தவன் மெதுவாக அவளிடம்… அஞ்சலி உன்கிட்ட அட்டாச்மெண்டே தெரியலையே… என்னோட லைஃப் ஸ்டைல் உன்னோட லைஃப் ஸ்டைல்ல இருந்து ரொம்ப கீழ இருக்கு. இந்த டைம்ல நான் இதெல்லாம் பேசக்கூடாது… இருந்தாலும் ஓப்பனா இருக்கிறது நல்லது அதனால கேட்கிறேன்… நிஜமாவே உனக்கு என்னை பிடிச்சிருக்கா” என்று கேட்டான் அருண்.
“ஏய் என்னடா இப்படி எல்லாம் கேக்குற… இப்போ நான் இருக்கிற நிலைமையில எப்படி பேசணும்னு எதிர்பார்க்குற…” என்று எதிர் கேள்வி கேட்டவள்
“இந்த டைம்ல நம்மள பத்தி அம்மா அப்பாவுக்கு தெரிய வேண்டாம் என்று தான் நான் நினைச்சேன்… அப்பாவோட ஹெல்த் கண்டிஷன் நல்லா அனுப்புறம் நம்மள பத்தி அவங்க கிட்ட நானே சொல்றேன்… அதுவரைக்கும் வெயிட் பண்ண மாட்டியா” என்று கொஞ்சம் சீரியஸாக கேட்க…
அருணுக்கு மனசு சமாதானம் ஆகவில்லை. “சரி… நான் கிளம்புறேன் அஞ்சலி” என்று சொல்லிவிட்டு மெதுவாக நடக்க ஆரம்பித்தான்.
அவன் திரும்பி போவதை பார்க்கும் போது அஞ்சலிக்கு ‘தான் ரொம்ப பேசியது’ போல தோன்றியது.
அவளுக்கும் மனசு ஒரு மாதிரியாக இருக்கவே…
அதன் பின்னாடியே வேக வேகமாக சென்று அவன் கையைப் பிடித்தவள்
“சாரிடா… எனக்கு ரொம்ப குழப்பமா இருந்துச்சு அதான் கொஞ்சம் ஹார்சா பேசிட்டேன்” என்றவாறு…
“சரி வா அம்மா வர கொஞ்சம் லேட் ஆகும்… அதுவரைக்கும் நீ இருந்துட்டு போ” என்று அவனது கையை பிடித்து அழைக்க…
டக்கென்று அவளை நிமிர்ந்து பார்த்த அருணின் கண்கள் கலங்கி இருந்தது.
“இந்த மாதிரி உறவெல்லாம் எனக்கு புதுசு அஞ்சலி… ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் இப்பதான் லோகி, நீ எல்லாம் என்னோட லைஃப்ல வந்திருக்கீங்க… அந்த சந்தோஷத்தை சில சமயத்துல நான் கொஞ்சம் அதிகமா உரிமையை எடுத்துக்கிறேன்…” என்று மெதுவாக முணுமுணுக்க…
“டேய் ரொம்ப யோசிக்காத டா… என்கிட்ட உனக்கு எல்லா உரிமையும் இருக்கு… சரி வா… ரூமுக்கு போய் பேசிக்கொள்ளலாம்” என்று அவர் இழுத்துக் கொண்டு ரூமுக்கு சென்றாள்.
ரூமுக்குள் இழுத்துச் சென்றவர் அவனை அங்கிருந்த சோஃபாவில் உட்கார வைத்தாள்.
அப்படியே அவன் முன்னாள் முட்டி மடக்கி அமர்ந்தவள்… அவனது கண்களைப் பார்க்க… அருணின் கண்களில் ஏக்கம் மட்டுமே தெரிந்தது.
“டேய் ரிலாக்ஸா இருடா… நான் இருக்கேன் உனக்கு” என்று சொல்லியவள்… மெதுவாக தன் இரு கைகளாலும் அவனது முகத்தை நிமிர்த்தினாள்.
நிமிர்த்தியவள் மெதுவாக அவனது கண்களில் தன் இதழ்களை பதித்தாள்.
அந்த இதழ்கள் தந்த இதமான உணர்வில்… அப்படியே மயங்கி விட்டான் அருண்.
தன் முகத்தை தூக்கி அவனது நெற்றியில் அழுத்தமாக முத்தமிட…
அந்த முத்தத்தில் அவளது ஆன்மாவே அவனுக்குள் இறங்கியது. இந்த வாழ்க்கைக்கு இதுவே போதும் என்று தோன்ற அப்படியே கண்களை மூடி அமர்ந்து கொண்டான் அருண்.
சில நிமிடங்கள் அந்த அரவணைப்பை தந்தவள் மெதுவாக விலகி அருகில் இருந்த இருக்கையில் உட்கார்ந்தாள்.
அந்த சுகத்தில் லயித்துப் போயிருந்த அருண்….
மயக்கத்திலிருந்து வெளிவந்தவனைப் போல் கண்கள் திறந்து… அஞ்சலியைப் பார்த்து மெதுவாக சிரித்தவன்…
“எனக்கு இன்னும் சோகம் போகல… ஏன் அதுக்குள்ள ட்ரீட்மென்ட் நிறுத்திட்ட” என்று கேட்டான்.
இந்த கிண்டல் பேச்சு மட்டும் குறையவே மாட்டேங்குது டா உனக்கு என்று அவள் சிரிக்க…
இப்பொழுது அருண் எழுந்து அவள் அருகே சென்றான்…
அஞ்சலியின் ஸ்பரிசம் அவனுக்கு ஆறுதலை மட்டும் தரவில்லை… பல நேரங்களில் ஆறுதலான அணைப்பு… மோகத்தையும் உடன் அழைத்து வந்துவிடும் அல்லவா…
அதுபோலத்தான் இப்பொழுது அந்த ஆறுதலான அணைப்பு காதலன் காதலி என்ற உறவு முறையின் உரிமையில் காதலையும், சுகத்தையும் தேடியது.
அவன் அவளை நெருங்கி அவளது தோள்களை தொட… அவளுக்கும் அந்தத் தொடுதல் உணர்ச்சி நரம்புகளை தூண்டி விட்டிருந்தது.
அப்படியே குனிந்து அவளது கழுத்தில் முத்தமிட… உணர்ச்சியில் அவள் முதுகு தானாக வளைந்து அவனை நோக்கி சென்றது…. இப்போது அவளை முதுகோடு சேர்த்து அணைக்க… சூடான அவளது அதரங்கள் அவனது நெஞ்சில் உரச… அங்கே கொஞ்சம் கொஞ்சமாக நெருப்பு பற்ற ஆரம்பித்தது.
சட்டென அவளை கட்டி அணைத்து அவள் இதழ்களில் வேகமாக முத்தம் கொடுக்க ஆரம்பித்தான்.
அந்த அணைப்பு அவர்கள் இருவருக்குள்ளும் இருந்த மன அழுத்தத்தை எங்கோ விரட்டி இருந்தது.
அத்தனை கவலைகளையும் அழுத்தத்தையும் தீர்க்கும் ஒற்றை மருந்து இந்த அரவணைப்பும், அஃதலும், அதனோடு சேர்ந்து வரும் மோகமும் தானே…
இப்பொழுது உடலும் மனமும் ஒன்றாய் இணைந்து சுகத்தை மட்டும் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தது.
ஆடை ஒரு தடையாக இருக்க அதை தாண்டி அவள் அங்கங்களின் ஸ்பரிசத்தை மெல்ல மெல்ல தெரிந்து கொள்ள அவன் கைகள் முன்னேற..
எல்லையை அடைந்து விட இருவரும் நினைத்தாலும் அந்த இடம் அதற்கான சூழலை தரவில்லை… அதை உணர்ந்தவன் சட்டென தன் கையை விலகிக்கொண்டவன், அவள் இதழை மட்டும் ஆசை தீர முத்தம் வைத்து விடுவித்தான்.
மோகத் தீ கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி அவர்கள் சூழ்நிலையின் கட்டுப்பாட்டுக்குள் மெதுவாக வந்து சேர்ந்தனர்.
சற்றே விலகியவர்கள்… விரைவாக இந்த தீ அணைக்கப்பட வேண்டும் என்று மனதிற்குள்ளேயே இருவரும் பேசிக்கொண்டனர்.
