News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

தப்பு 40, 18+ PART-1

by Sinamika Writes
1.1K views
A+A-
Reset

தப்பு 40

“என்னங்க விடுங்க என்னை. நேத்து தெரியாம எனக்கு அது வேணும்னு சொல்லிட்டேன் உங்ககிட்டேன் . அதுக்குன்னு என்னை இப்படி தூங்க விடாம இம்ஸை பண்ணிட்டே இருப்பிங்களா?”என்றாள் பூவிழி.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

“ஹே!.. நான் தான் உன்னை இம்சை பண்றேனா? தூங்கிட்டு இருக்க என்னை ரசிக்குறேன்னு சொல்லிட்டு முத்தம் கொடுக்குறதும்.. என் முடியை இழுக்குறதும்னு.. சும்மாவாடி நீ இருந்த. இப்படி எல்லாம் நீ பண்ணினா அப்பறோம் நான் சும்மா இருந்தாலும் அவன் சும்மா இருக்க மாட்டானே.. அவன் போவோம் இல்ல.. ” என்றான் குளிக்க சென்றவளை குளிக்க விடாமல் கையைப் பற்றிக்கொண்டு பாத்ரூம் வாசலில் நின்று இருந்தான்.

“சரிங்க.. அதான் அதுக்கும் , நீங்க பண்ணினத்துக்கும் சரியாகிருச்சே.. இப்போ என்னங்க உங்களுக்கு மணி எட்டு ஆகுது. இன்னும் ரூமைவிட்டு வெளியேவே போகல.. அம்மா என்ன நினைப்பாங்க. என்னை குளிக்கவும் விட மாட்டேன்னா என்ன அர்த்தம் விடுங்க என்னை ” என்று சிணுங்கினாள் .

“நான் உன்னை குளிக்கவேணாம்னா சொன்னேன். கூட நானும் வரேன்னு தானே சொல்றேன் . என்னவோ நாம இன்னிக்கு தான் ஒண்ணா குளிக்குற மாதிரி இப்படி வெட்கப்படுற.. ” என்றவன் “வா டி.. குளிக்கலாம் ” என்று அவளை இழுத்தவன் நின்ற இடத்திலேயே இருவரின் ஆடைகளுக்கு விடுதலை அளித்து பூவிழியை அலேக்காக தூக்கிக்கொண்டு போய் பாத் டப்பில் மெல்ல இறக்கிவிட்டான்.

அவளோ வெட்கபட்டுக்கொண்டே.. அவனைப் பார்த்தபடி டப்பினுள் அமர..

தண்ணீரை திறந்து விட்டு அதில் லிகுவிட் சோப்பை ஊற்றி நுரை வர நன்கு கலந்துவிட்டு. தண்ணீரின் வெதுவெதுப்பை அளந்தவன் அவள் பின்னால் வந்து அமர்ந்து பூவிழியை தன் மார்பில் சாய்த்துக் கொண்டான்.

“என்ன மாமா இது.. இப்படி தான் வந்து உக்காரனுமா? ஏன் என் எதிர்ல உக்கார்ந்தா என்ன ?” என்றாள்.

“அங்க உக்காந்தா இப்படி உரசிட்டு இருக்க முடியுமா டி.. “என்றவன் சோப்பு நுரையை எடுத்து அவள் தோளில் வைத்து தேய்த்துவிடத் துவங்கினான்.

அவள் கழுத்து , தோள்பட்டை, கைகள் என தேய்த்துவிட்டவன் அப்டியே அவள் தோளில் இருந்து கைகளைக் கீழ் இறக்கி தண்ணீருக்குள் இருந்த அவள் மேனியில் தவழவிட்டான்.

சுடுநீரில் அமர்ந்து இருந்தவளுக்கு உடல் சுகமாக இருக்க.. அவன் தோளில் தலை சாய்த்துப் படுத்திருந்தவள் யுகேனின் கைகள் செய்யும் வித்தையில் நெளியத் துவங்கினாள்.

“ஏய் அமுக்காஞ்சி இப்போ எதுக்கு இப்படி நெளியுற.. நீ சும்மா இருந்தா தானே நானும் சும்மா இருப்பேன். அப்பறோம் நான் தான் எல்லாமே பண்ணின மாதிரி நீ சீன கிரியேட் பண்ணுவ.. ” என்றான்.

“இப்பவும் நீங்க தான் கையை வெச்சுட்டு சும்மா இருக்க மாட்டேங்குறீங்க. எனக்கு குளிச்சு விட்றேன்னு சொல்லிட்டு என்ன பண்ணிட்டு இருக்கீங்க மாமா நீங்க.. ‘என்று  அவன் விரல்கள் அவள் மொட்டுக்களையே தீண்டி தீண்டி அவளை கிறங்க வைத்துக்கொண்டிருக்க.. அந்த ஜாலத்தில் தன்னைத் தொலைத்து கிறங்கிப் போய் அவன் மீது சாய்ந்திருந்தாள்.

அவளை தன் மடியில் அமர்த்திக்கொண்டவன் “இப்பவும் உனக்கு நான் தேவை தான் டி.. பாரு கொஞ்ச நேரம் வரை வேணாம் வேணாம்னு வீம்பு பண்ணிட்டு இப்போ எவ்ளோ என்ஜாய் பன்றேன்னு ” என்று அவள் காதோரம் கிசு கிசுக்க..

சட்டென அவன் பேச்சில் விழித்துக்கொண்டவள் “ம்ஹும்.. நீங்க ரொம்ப மோசம். என்னை சும்மா இருக்காம ஏதாவது பண்ணி தூண்டி விட்டுட்டு கடைசில நான் தான் எல்லாம் வேணும்னு சொன்னேன்னு என்னையே கிண்டல் பண்றீங்க.. “என்றவள் திரும்பி அவன் மார்பில் அடிக்க. .

“ஹேய்!.. நான் உண்மையை தான் சொல்றேன் டி. உன்னால என்கூட இருக்கறதை நினைக்காம இருக்க முடியுறதே இல்ல.. அதான் இப்படி நான் தொட்டதும் உருகிப் போற.. நீ இப்படி வீக்கா இருந்துட்டு என்னை தப்பு சொல்ற.. ” என்று தன்னை அடித்தவள் கையைப் பற்றி அவளை தன் பக்கம் மேலும் இழுத்தான்.

“நான் வீக் எல்லாம் கிடையாது… நீங்க தான் நீங்க தான் என்னை வீக்… ” என்று பேசிக்கொண்டிருந்தவள் “அம்மாஆ!.. ” என்று அந்த பாத்ரூமே அதிரும் வண்ணம் கத்தி இருந்தாள்.

சிரித்துக்கொண்டிருந்த யுகேந்திரன் பூவிழியின் அலறலில் ஒரு நிமிடம் உறைந்து போனான்.

அவளோ அவன் தோள்களைப் பற்றிக்கொண்டு “மாமாஆ!.. வலிக்குது.. ” என்று கண்களை இருக்க மூடி கத்த ஆரம்பிக்க..

“ஹே! பூவிழி… ஒண்ணுமில்ல.. இப்போ ஹாஸ்பிடல் போய்டலாம்  “என்று அவசரமாக அவளைத் தன்னிடம் இருந்து பிரித்தவன் டப்பில் இருந்து முதலில் இறங்கிய யுகேந்திரன் பூவிழியை தூக்க முயன்றான். ஆனால் இருவர் உடலிலும் சோப்பு நுரை ஒட்டி இருக்க.. அவளைத் தூக்க முடியாமல் வழுக்கிக்கொண்டு போனாள் பூவிழி.

இப்படியே அவளை தூக்கினாள் இருவர்க்கும் ஆபத்து என்று உணர்ந்தவன் டப்பில் இருந்த தண்ணீரை வெளியே திறந்துவிட்டு..  நீராக ஷவரின் கீழ் நின்று அதைத் திறந்து  நின்றவன் வேக வேகமாக தன் உடலில் இருந்த சோப்பு நுரையை கழுவி விட்டு பூவிழியிடம் வந்தான்.

டப் முழுவதும் காலியாகி இருக்க.. தன் உடலை டவலால் சுற்றி மறைத்தவன் தண்ணீர் ஸ்பிரேயறையெடுத்து அவள் உடலில் இருந்த சோப்பை அவசர அவசரமாக கழுவினான்.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

அவளோ வலி பொறுக்க முடியாமல் “அம்மாஆ!” என்று அலறிக்கொண்டிருந்தாள்.

அவளைக் குளிப்பாட்டிவிட்டு பின் டவலை எடுத்து அவள் உடலில் சுற்றி தூக்கியவன் பாத்ரூமில் இருந்து வேகா வேகமாக வெளியே வர.. ஈரத்தாள் தரை வழுக்கி பூவிழியோடு கீழே விழப்போனான்.

ஒரு நிமிடம் ஒரே நிமிடம் தான் தன்னை சுதாரித்து விழாமல் சமாளித்தவன் வெளியே வந்து அவளை மெத்தையில் அமரவைத்துவிட்டு அவசர அவசரமாக அவள் உடலில் இருந்த டவலை கழட்டிவிட்டு நைட்டியை எடுத்து அவளுக்கு அணிவித்தவன் வேகமாக ரூம் கதவை திறந்தான்.

அவள் அலறல் சத்தம் வெளியில் கேட்டிருக்க வேண்டும் , காவேரி அவர்கள் அறை வாசலை தட்ட.. சரியாக யுகேனும் அறைக்கதவை திறந்திருந்தான். “யுகேன் என்னப்பா ஆச்சு? பூவு ஏன் அழறா” என்றார் பதற்றமாக.

“ம்மா.. அவளுக்கு வலி வந்திருச்சு.. ” என்று பதற்றமாக சொன்னவன் அங்கு அண்ணா எங்க? அவரை காரை எடுக்க சொல்லுங்க.. “என்றான்.

காவேரி அறைக்குள் துடித்துக்கொண்டிருந்த பூவிழியைப் பார்த்துவிட்டு “நீ அவளை தூக்கிட்டு வாப்பா நான் போய் காரை எடுக்க சொல்றேன்  “என்று திரும்பி வாசலுக்கு வந்தவர் “அங்கன்னா.. ” என்று சத்தமிட்டுக்கொண்டே வர..

அங்கே வெளியே வாசலில் வந்து நின்ற காரையும், அதில் இருந்து இறங்கிய ஆளையும் பார்த்து அப்படியே உறைந்து போனார்.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.