News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

மூர்க்கன் 70

by Sinamika Writes
1.1K views
A+A-
Reset

மூர்க்கன் 70

“ஆர்யா! ஆர்யா! ஆர்யா! “என்று ராவண் , இளங்கிளியின் மகனுக்கு அவர்கள் குடும்பத்தின் மூத்தவரான வேதவள்ளி தன் கொள்ளுப் பேரனின் காதில் மூன்றுமுறை பெயரை உச்சரித்தார்.

“ஹய்யா! குட்டித் தம்பி பேரு ஆர்யா.. நான் ஆதி, இவ அல்லி, என் தம்பி ஆர்யா” என்று கை தட்டி தன் தம்பியின் பெயரைக் கேட்டு சந்தோசமாக சொல்லிக்கொண்டிருந்தான் ஆதி.

வேதவள்ளிக்கு அடுத்து ராவண் , இளங்கிளி பெயரைக் கூற..

தாய்மாமன் முறைக்கு கர்ணன் வந்து குழந்தைக்கு தங்க சங்கிலி போட்டு , ஆர்யாவின் பெயரை அவன் காதில் சொல்ல.. அவனைத் தொடர்ந்து மற்றவர்கள் வந்து குழந்தைக்கு பெயர் சொல்லி வாழ்த்து வழங்கினார்கள்.

விடியற்காலையில் பூஜைகள் சிறப்பாக நடைபெற்று பெயர் வைக்கும் விழாவை இரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

இளங்கிளி அனைவரையும் சாப்பிட அழைத்து அனைவர்க்கும் பரிமாறிக்கொண்டிருக்க..

அவளிடம் வந்த கர்ணன் “கனி, எனக்கு ஒரு இம்போர்ட்டண்ட் க்ளையண்ட் மீட் இருக்கு. நான் கிளம்பறேன் . அம்மா இங்க இருக்கட்டும். ஈவினிங் நான் வந்து அவங்களை பிக் அப் பண்ணிக்கிறேன் ” என்றான்.

“சரின்னா சாப்டிங்க தானே..” என்றாள் இளங்கிளி.

“சாப்பிட்டேன் மா.. ” என்றவன் “அம்மா, ஸ்வீட் அதிகம் எடுத்துக்காதீங்க. மறக்காம பிரஷர் மாத்திரையும் எடுத்துக்கோங்க ” என்று தன் தாய்க்கு கட்டளையிட..

“டேய் நான் பாத்துக்கிறேன். நீ கிளம்பு டா ” என்று தன் மகனின் அக்கரையை உள்ளுக்குள் நினைத்து பெருமை கொண்டாலும் அதை காட்டிக்கொள்ளாமல் பேசினார் கர்ணனின் அம்மா நளினி .

“சரிம்மா ” என்றவன் “சரி நான் கிளம்பறேன் ” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பப் போக..

“சார்.. சார்.. சார் ” என்று அவன் வழியை அவசரமாக மறைத்துக்கொண்டு வந்து நின்றாள் நிலா.

“ஹே! என்ன டி இது கெளம்புறவரை அந்த நிறுத்திகிட்டு ” என்று சரோஜினி அங்கே வர..

“அம்மா நானும் தான் இன்னிக்கு ஆபீஸ் போகணும். ஒரு முக்கியமான வேலை இருக்குனு சொன்னேனே மறந்துட்டியா?” என்றவள் “சார் என் வண்டி சர்வீஸ்க்கு விட்டிருக்கேன். இன்னும் ரெடியாகல.. அதனால.. ‘ என்று நிலா தயங்க.

“அதனால என்னம்மா என் மகனும் ஆபீஸ் தானே போறான். நீ அவன்கூட போயிடு ” என்றார் நளினி .

அவரை சட்டென திரும்பி முறைத்த கர்ணன். “ஆபீஸ் இருக்குனு தெரியும் இல்ல அப்போ முன்னாடியே வண்டியை அரேஜ் பண்ணிருக்க வேண்டியது தானே.. ” என்றான் கடுமையான குரலில்.

“ஹையோ! சார் அது பிரச்சனை இல்ல. நான் எனக்கு வண்டி அரேஞ் பண்ணிட்டேன். அது வர கொஞ்சம் லேட் ஆகும்போல.. அதான் உங்ககிட்டே ஒரு ஹல்ப் அன் ஹௌர் பெர்மிஸ்ஸின் கேக்க வந்தேன் ” என்றாள்.

அவள் பெர்மிஸ்ஸன் கேட்டதும் தன் கை கடிகாரத்தில் மணியைப் பார்த்தவன் “சரி சீக்கிரம் வந்திரு. சொன்ன டைம் விட.. லேட் பண்ணினா அப்பறோம் ஓன் டே சம்பளம் கட் பண்ணிருவேன் ” என்றவன் அங்கிருந்து கிளம்பி விட..

“ஒரு நாள் சம்பளத்தை கட் பண்ணிருவேன் ” என்று அவனைப் போல மனதிற்குள் பேசியவன் “மண்டகசாயம்.. மண்டகசாயம்.. “என்று திட்டியும் கொண்டவள்

“ஏன் ஆன்டி உங்க பையன் எபபவும் இப்படி தான் சிடு சிடுன்னு இருப்பாரா? நானும் பாத்துட்டே இருக்கேன் வேளைக்கு சேர்ந்த நாள்ல இருந்து இவர் இப்படியே தான் இருக்கார் ” என்றாள் நிலா.

“என்னம்மா பண்றது , அவன் கடந்து வந்த பாதை அப்படி. அவன் வளர்ந்து வந்த சமயத்துல அவனுக்குன்னு யாரும் நல்லது சொல்லி வளர்க்க ஆள் இல்ல. ஒரே பையன்னு நானும் அவனுக்கு செல்லம் கொடுத்து கெடுத்துவெச்சுட்டேன். அதுக்கு அப்பறோம் அவன் சேர்ந்த சேர்க்கை எல்லாம் தப்பா தான் இருந்துச்சு.” என்று பெருமூச்சு விட்டவர்.

“என் பையன்னால நீ உன் புருஷனை பிரிஞ்சு இருந்திருக்க.. அதெல்லாம் இப்பவும் சொல்லி சொல்லி அவன் பெரிய தப்புப் பண்ணிட்டதா சொல்லி வருத்தப்பட்டுட்டே இருப்பான் ” என்றார்.

அவர் சொன்னது கேட்டு இளங்கிளி அதிர்ச்சியோடு அவரைப் பார்க்க..

“அவன் திருந்திட்டேன்னு வந்து என் கால்ல விழுந்து செஞ்ச தப்பை எல்லாம் சொல்லி மன்னிப்புக் கேட்டான் ம்மா.. அப்போ தான் இவன் உனக்கு எவ்ளோ கஷ்டத்த கொடுத்திருக்கான்னு தெரிய வந்துச்சு ” என்றார் நளினி .

“அம்மா அதெல்லாம் முடிஞ்சு போன கதை. இப்போ தான் அண்ணா முன்ன மாதிரி இல்லையே நீங்க ஏன் அதை எல்லாம் இன்னமும் நினைச்சிட்டு இருக்கிங்க” என்று அவரை ஆறுதல்படுத்தினாள் கிளி.

“ஆன்டி சாரி, நான் சும்மா தான் சாரை பத்திக் கேட்டேன். நீங்க இவ்ளோ பீல் பண்ணுவிங்கனு தெரிஞ்சிருந்தா நான் அவரை பத்தி பேசிருக்கவே மாட்டேன் ” என்று வருத்தப்பட்டாள் நிலா.

“பரவால்ல ம்மா.. நான் எதுவும் நினைக்கல.. ” என்றவர் “எனக்கு கொஞ்சம் தண்ணி கொண்டு வாடா.. மாத்திரை போடணும் ‘ என்றார்.

“இருங்க ஆன்டி நான் போய் எடுத்துட்டு வரேன் ” என்று நிலா சென்றுவிட..

அவள் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த நளினியோ … ‘இந்த மாதிரி ஒரு பொண்ணை என் பையனுக்கு தேடிப் பிடிச்சு கட்டி வெக்கணும் ” என்றார் யதார்த்தமாக,

“அதுக்கு என்னம்மா பேசாம இவளையே நம்ம கர்ணன் அண்ணனுக்கு கட்டி வெச்சிருங்களேன் ” என்றபடி அங்கு வந்தாள் கயல்.

அவள் சொன்னது கேட்டு சரோஜினி முதற்கொண்டு மற்ற இருவரும் அதிர்ச்சியாக கயலைப் பார்க்க..

“என்ன அப்படிப் பாக்குறீங்க ” என்றவள் “அக்கா , எப்படியும் நிலாவுக்கு ஒரு நல்ல பையனாப் பார்த்து கல்யாணம் செய்து வெக்குறது தானே.. அவளுக்கும் கல்யாண வயசு வந்திருச்சு தானே.. தெரியாதவங்க யாருக்கோ கல்யாணம் பண்ணி வெக்குறதை விட , நம்ம கர்ணன் அண்ணாவுக்கே பண்ணி வெச்சுடலாமே..” என்றாள் இளங்கிளியிடம்.

“நீ சொல்றதும் நல்லா  தான் இருக்கு. என் அம்மாகூட சொல்லிட்டு இருந்தாங்க நிலாவுக்கு வரன் பாக்க ஆரம்பிக்கனுன்னு ” என்றாள்.

“நீங்களும் நானுமே சம்மந்தம் பேசிட்டு இருக்கோம். பேச வேண்டியவங்க பேசணுமே..

” என்ற கயல் திரும்பி சரோஜினியையும் , நளினியையும் பார்த்தாள்.

அவர்கள் இன்னமும் பேசாமல் இருக்க..

“சரோஜாம்மா என்ன யோசிக்கிறீங்க.. எங்க கர்ணன் அண்ணாவுக்கு உங்க பொண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்க சம்மதமா உங்களுக்கு ” என்றாள்.

“கயல் என்ன டி இது திடீர்னு வந்து இப்படி கேக்குற.. நான் இன்னும் அதை பத்தி எல்லாம் யோசிக்கவே இல்ல டி ” என்றார் சரோஜினி.

” எனக்கு சம்மதம்மா , நிலா பாக்க நல்ல பொண்ணு போல தான் தெரியுறா .நான் என் பையன்கிட்டே பேசிட்டு என் முடிவை சொல்றேன். உங்களுக்கும் இந்த கல்யாணத்துல இஷ்டம்னா நிலாகிட்டே பேசிட்டு உங்க முடிவை சொல்லுங்க. எதுன்னாலும் சொல்லுங்க நான் எதுவும் நினைக்க மாட்டேன் ” என்று சரோஜினியின் கையைப் பற்றி அழுத்தினார் நளினி.

“என்ன சொல்லணும் என் அம்மா உங்ககிட்டே ” என்று  தண்ணீர் கிளாசோடு வந்தவள் அதை நளினியிடம் நீட்டினாள்.

அதை வாங்கிக்கொண்டவர் “அதை அவங்களே சொல்லுவாங்க நீ கேட்டுட்டு சொல்லு ” என்றவர் “நான் மாத்திரை சாப்பிடுறேன் ” என்று அங்கிருந்து சென்றுவிட..

அவரோடு இளங்கிளியும், கயலும் சென்றுவிட..

“என்னம்மா சொன்னாங்க அந்த ஆன்டி ” என்றாள் நிலா ஆர்வமாக.

“நல்ல விஷயம் தான் சொன்னாங்க டி. அது உனக்கும்.. கர்.. ” என்று அவர் முழுதாக  சொல்ல வரும் முன் நிலாவின் கையில் இருந்த போன் அலறியது.

அதை எடுத்துப் பார்க்க.. விஜேஷ் தான் அவளுக்கு அழைத்திருந்தான்.

“அம்மா, நான் கிளம்பறேன். வண்டி வந்திருச்சு ” என்றவள் தன் அறைக்குள் சென்று பையை எடுத்துக்கொண்டு கிளம்பி இருந்தாள்.

“அவசரத்துல போறா.. நாளைக்கு இளங்கிளியோட கோவில் போறோம் இல்ல அங்க ஜாதகம் வெச்சு சாமி கும்பிட்டுட்டு அப்பறோம் இது பத்தி பேசிக்கலாம் ” என்று அவர் செல்லும் தன் மகள் வாழ்க்கை நல்லமுறையில் அமையப் போகிறது என்று நினைப்பில் இருந்தார்.

ஆனால் இந்த கல்யாணப் பேச்சே அவள் வாழ்வில் பல இன்னல்களையும், அவமானங்களையும் தரப்போகிறது என்று சரோஜினிக்கு தெரிந்திருந்திருக்க வாய்ப்பே இல்லை.

இது எதுவும் அறியாத நிலாவோ அவர்கள் வீட்டைவிட்டு சற்று தள்ளி நின்று இருந்த விஜேஸுடன் பைக்கில் ஏறியவள் அவனை பின்னிருந்து அணைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பி இருந்தாள்.

“என்ன விஜேஷ் இவ்ளோ லேட் , அந்த மண்டகசாயம் வேற ஒரு நிமிஷம் லேட்டானாலும் என் ஒரு நாள் சம்பளத்தைப் பிடிச்சுப்பேன்னு சொல்றான். சீக்கிரம் போ.. டைம் ஆகிடப்போகுது ” என்று நிலா அவசரப்பட..

“நீ இன்னிக்கு ஆபீஸ் போனா தானே அவன் உன்னைத் திட்டுவான். நாம தான் இன்னிக்கு என் வீட்டுக்குப் போறோமே.. ” என்றான்.

“டேய் விளையாடுறியா? ஒரு முக்கியமான மீட்டிங் இன்னிக்கு இருக்கு. நான் மட்டும் இன்னிக்கு ஆபீஸ் போகல அப்பறோம் என் வேலை அவ்ளோ தான். வீடு வரைக்கும் வந்து என்னை உண்டு இல்லேனு ஆகிருவார் டா அவர் ” என்றாள்.

“அப்போ என் வீட்டுக்கு நீ வர மாட்ட அப்படித்தானே.. ” என்று அவன் கோபித்துக்கொள்ள..

அவனை மேலும் இறுக்கி அணைத்தவள் சற்று நேரம் யோசித்துவிட்டு “சரி அப்போ இப்படிபண்ணலாம் ” என்றவள் “ஆனா நீ என் வீட்டுக்கு வா.. ” என்றாள்.

“உன் வீட்டுக்கா இப்போ எப்படி  டி.. எல்லாரும் இருப்பங்களே.. நீயும் நானும் பிரியா பேசவே முடியாது ” என்றான் விஜேஷ் மிகவும் நல்லவன் போல..

“இப்போ இல்ல டா .. நாளைக்கு தான் ” என்றவள் அவன் ஹெல்மெட் தலையில் செல்லமாக குட்டிவிட்டு “நாளைக்கு எங்க அக்கா பேமிலி , எங்க பேமிலினு எல்லாரும் கோவிலுக்குப் போறாங்க. என் வீட்ல யாரும் இருக்க மாட்டாங்க. நான் ஏதாவது சொல்லி கோவில் வரலன்னு சொல்லி சமாளிச்சுடறேன் சரியா ?” என்றாள்.

“அப்படியா!” என்று  சந்தோசமான விஜேஷ் “அவங்க எப்போ போவாங்க? எப்போ வருவாங்க?”என்றான்.

“ம்ம்.. ” என்று அவன் பின்னால் அமர்ந்து இருந்த நிலா விஜேஸின் தோளில் முகத்தை வைத்து அழுத்தியவள் “நாளைக்கு ஏர்லி மோர்னிங் கிளம்புறாங்க. அந்த கோவில் இருக்க இடம் ரொம்ப தூரம்னு சொன்னாங்க. சோ நாளைக்கு நைட் தங்கிட்டு திரும்ப நாளன்னைக்கு பூஜை எல்லாம் முடிச்சிட்டு அப்ரோம் தான் வருவாங்க. எப்படியும் டூ டேஸ் ஆகிடும் ” என்றாள்.

“ஆகா… என் வீடா இருந்தா ரெண்டு மணி நேரம் தான் கிடைச்சிருக்கு, இவ ரெண்டு நாளைக்கு இல்ல பிளான் போட்டு கொடுக்கிறா.. செம்ம மஜா தான். அப்போ இவளை வெச்சு ரெண்டு நாளும் செய்யணும்” என்றவன் அடுத்தடுத்து என்ன செய்யலாம் என்று பிளான் போட்டுக்கொண்டே அவளை அழைத்துக்கொண்டு  ஆபீஸ் சென்றான்

பார்க்கிங்கில் வந்து வண்டியை நிறுத்த அவன் பின்னால் இருந்து இறங்கிய நிலா “அப்போ நாளைக்கு வீட்டுக்கு வந்திருடா.. உனக்கு என் கையாலையே நான் சமைச்சு போடறேன் . நீயும் நானும் சாப்பிட்டுட்டு டிவி பார்க்கலாம். சரியா ” என்று அவன் கன்னம் தட்டிவிட்டு அவள் சென்றுவிட..

“நீ சமைச்சதை சாப்பிட நான் வரல டி.. சமைஞ்ச உன்னையே சாப்பிட நானும், என்னோட பிரெண்ட்ஸும் வரப்போறோம் ” என்றபடி பைக்கை நிறுத்திவிட்டு தன் நண்பனுக்கு போனில் அழைத்தவன். “மச்சி, ரெண்டு நாளைக்கு செம்ம மஜாவா இருக்கப் போறோம். நீ மறக்காம நம்ம மத்த ரெண்டு பிரெண்ட்ஸையும் கூட்டிட்டு நாளைக்கு நான் சொல்ற நேரத்துக்கு நான் சொல்ற இடத்துக்கு வந்திரு  ” என்றான்.

“டேய் ரெண்டு நாளைக்கா!.” என்று ஆச்சர்யப்பட விஜெஸின் பிரென்ட் “செம்ம டா செம்ம.. அப்போ ரெண்டு நாளும் குடி கும்மாளம் தான். ” என்றான்.

“டேய் இரு.. இரு.. அவசரப்படாத.. குடிக்க தான் கூப்பிட்டேன்னு நினைக்குறியா? அது தான் இல்ல. என் ஆபீஸ்ல ஒரு ஒருத்தியை உஷார் பண்ணிருக்குன்னு சொல்வேனே அவ நாளைக்கு தனியா வசமா மாட்டிருக்கா டா.. அதனால நாளைக்கு காலையில நான்.. அதுக்கு அப்பறோம் நீங்க சரியா.. “என்றவன் இடத்தை சொல்லிவிட்டு  போனை வைத்தான்.

இது எதுவும் தெரியாத நிலாவோ நாளை விஜேஸுடன் சந்தோசமாக நேரம் செலவழிக்க வீட்டில் உள்ளவர்களை எப்படி சமாளித்துவிட்டு வீட்டில் இருக்கலாம் என்று பிளான் போட்டுக்கொண்டிருந்தாள்.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.