அயோக்கியன் 37
மறுநாள் காலை விடிந்தும் விடியாததுமாக எழுந்து குளித்துக் கிளம்பிக்கொண்டிருந்தான் வேலு.
தூக்கக் கழகத்தில் கண் விழித்துப் பார்த்த திகழ் அவன் ரெடியாகி இருப்பதை கவனித்துவிட்டு மெல்ல எழுந்து அமர்ந்தாள்.
“எழுந்துட்டியா? ” என்றவன் அவள் அருகே வந்து அவள் முகத்தைக் கைகளால் தாங்கி நின்றான்.
“ஹ்யேய்! என்ன பண்ற நான் இன்னும் குளிக்கல.. ” என்று அவனிடம் இருந்து தன் முகத்தைத் திருப்ப முயன்றாள்.
“ப்ச்.. அதனால என்ன இப்போ ” என்றவன் “குட் மார்னிங் போர்ஜெரி ” என்று அவள் முகத்தருகே நெருங்கி செல்ல..
தன் உதட்டில் புறங்கையை வைத்து மறைத்தவள் “நான் இன்னும் பிரஷ் பண்ணல.. ” என்று சொன்னாள்.
“நம்மோட பஸ்ட் லிப் லாக் இப்படி எல்லாம் கொடுக்க மாட்டேன். அதை நான் சேவ் பண்ணி வெச்சிருக்கேன் ” என்றவன் அவள் நெற்றியில் அழுந்த முத்தம் வைத்தான்.
அந்த சபரிசத்தில் காமம் இல்லை, அவன் கொடுத்த இந்த முத்தத்தில் காதல் இருந்தது, அவள் மீது அவன் காட்டும் அன்பு அப்பாமாக அவளுக்கு புரிந்தது.
இல்லை அவன் புரிய வைக்கிறான் என்று தான் சொல்ல வேண்டும். முத்தம் வைத்துவிட்டு அவளை விட்டுப் பிரிந்தவன் “ராகவ் வந்த கார் அச்சிடேன்ட் ஆகியிருக்கு ” என்றான்.
“ஹையோ! என்ன ஆச்சு ?” என்று திகழ் பதற..
“எந்த பிரச்னையும் இல்ல. அச்சிடேன்ட் ஸ்பாட்க்கு ராக்கி போயிருக்கான். அந்த அச்சிடேன்ட் தானா நடக்கல.. யாரோ இதை ஆள் வெச்சு செய்திருக்காங்க ” என்றான்.
திகழ் அதிர்ச்சியாக அவனைப் பார்க்க..
“ராக்கி சரியான நேரத்துக்கு அந்த ஸ்பாட்டுக்கு போயிருக்கான். இப்போ அவங்க ரெண்டு பெரும் சேப் தான். நீ பேனிக் ஆக வேணாம். அந்த விசயமா தான் நான் கிளம்பறேன் ” என்றவன் “நீ தூங்கிட்டு இருந்ததால நானே டிரஸ் செலக்ட் பண்ணி போட்டுகிட்டேன். இது ஓகேவா?” என்று விலகி நின்று தான் போட்டிருந்த ஆடையை அவளிடம் காட்டிக் கேட்டான்.
ஒரு பக்கம் அச்சிடேன்ட் விஷயம் கேள்விப்பட்டு அதிர்ச்சியாக இருந்தாலும் , மறுபக்கம் வேலுவின் இந்த அணுகுமுறை அவளையும் அறியாமல் அவன் பால் ஈர்த்திருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
அவனை ஏற இறங்கப் பார்த்தவள் கைகள் இரண்டையும் காட்டிக்கொண்டே “ம்ம்.. ஓகே தான் . உனக்கும் நல்ல டேஸ்ட் இருக்கு ” என்றாள் .
“அப்பாடா அப்போ நல்லா இருக்கு அப்படித்தானே.. ” என்றவன் “உனக்கு மேட்ச் ஆகணுமே “என்றான்.
அவன் சொன்னதில் மென்மையாக சிரித்தாள் திகளினி.
“சரி இனிமேல் நீ தூங்கப் போறதுக்கு முன்ன எனக்கு அடுத்த நாள் போட வேண்டிய டிரஸ் எல்லாம் எடுத்து வெச்சிரு. நான் எப்போ எந்த நேரம் கிளம்புவேன்னு எனக்கே தெரியல.. ” என்றான்.
“நிஜமா தான் சொல்றியா நீ, நானே தான் தினம் உனக்கு டிரஸ் எடுத்த வெக்கணுமா?” என்றாள்.
“ஏன் மாட்டியா?” என்றான் அவனும்.
“ம்ம்ம்.. சரி பாவம் இவ்ளோ தூரம் நீ கெஞ்சிக் கேக்குற.. அதனால எடுத்து வெச்சுடறேன் இனி ” என்றாள்.
“ஓகே ” என்று அவள் கன்னம் தட்டி சிரித்தவன் “நீ தூங்கு நான் கிளம்பறேன் ‘ என்று தன் போனை எடுத்துக்கொண்டு மீண்டும் அவளிடம் வர..
அவள் என்ன என்பது போல பார்த்தாள்.
“நான் உனக்கு கிஸ் கொடுத்தேன். அதே போல நீயும் எனக்கு கிஸ் கொடுக்கலாமே.. “என்றான்.
“நம்ம பஸ்ட் லிப் லாக் சேவ் பண்ணி வெச்சிருக்கேன்னு சொன்னியே.. அப்போ இருந்து நீ கேக்காமலேயே நான் உனக்கு கிஸ் தரேன். இப்போ கிளம்பு ” என்றவள் அவனை பார்க்க முடியாமல் போர்வையை முகம் வரை போர்த்திக்கொண்டு படுத்துவிட..
“ச்சே.. இதை சொல்லாமலேயே இருந்திருக்கலாம் . ஒரு கிஸ் ஆச்சும் கிடைச்சிருக்கு எனக்கு ” என்று வாய்விட்டே அவன் புலம்ப..
போர்வைக்குள் இருந்த திகழினியோ வேலு புலம்புவதைக் கேட்டு இலுக்குள் சிரித்துக்கொண்டாள்.
இங்கே ராகவ் வீட்டில் அவன் காலையில் தூங்கி இருந்ததில் இருந்து ஓவியாவை அவன் பார்க்கவே இல்லை. எப்போதும் அவனைக் கட்டிக்கொண்டு அவன் மார்பில் உறங்குபவளை அவன் தான் எழுப்பிவிடுவான். இன்று அவன் கண்விழிப்பதற்கு முன்பே அவள் எழுந்து சென்றிருக்க..
“என்ன அதிசயம் என் ஓவி செல்லம் இன்னிக்கு சீக்கிரம் எழுந்துட்டா போல.. ” என்றபடி எழுந்து உடலை நெட்டி முறிக்க கைகளை மேலே தூக்க..
அவன் காயம் ஏற்பட்டிருந்த கையில் சுரீர் என்று வலி ஏற்பட..
“அம்மாஆ!.. ” என்று அவன் வலியில் அலறியே விட்டான்.
அவன் கத்திய மறுநொடி “ராகவ்! என்ன ஆச்சு?” என்று அவசரமாக பாத்ரூமிற்குள் இருந்து அரைகுறையாக
ஓடி வந்தவளைப் பார்த்தவன் “ஓய்! என்னடி கோலம் இது.. ” என்று சோப்பு முறைகள் உடலில் அங்கங்கே இருக்க.. டவலை சுற்றியபடி அதை ஒற்றைக் கையில் பிடித்திருந்த ஓவியாவைப் பார்த்துக் கேட்டான்.
“ராகவ் நீ எதுக்கு அம்மான்னு கத்தின. என்ன ஆச்சு?” என்று அவன் அருகே வயிற்றைத் தள்ளிக்கொண்டு வந்தவள் ராகவ்வை கீழும் , மேலும் பார்த்தவள். அவன் நெற்றியில் இருந்த காயம், கையில் முகத்தில் இருந்த காயங்களை ஆராய்ச்சி செய்தாள்.
அவள் பதற்றத்தை பார்த்ததும் தான் அவனுக்கு உரைத்தது நேற்று நடந்த சம்பவத்தினால் ஓவியா பயந்திருக்கிறாள் என்று.
அவள் கைகைளைப் பற்றி நிறுத்தியவன் “ஓவி! எனக்கு எதுவும் இல்ல டி நான் நல்லா தான் இருக்கேன். நீ எதுக்கு இப்ப இவ்ளோ சீரியஸ் ஆகுற.. ‘ என்று அவளை இழுத்து தன் அருகே அமர்த்திக்கொண்டான்.
“இல்ல ராகவ், நீ அம்மான்னு கத்தினதும் உனக்கு ஏதோ ஆகிருச்சுனு நினைச்சு பயந்துட்டேன் . உனக்கு ஏதும் இல்லையே. எதுக்கு கத்தின.. ” என்றாள் மீண்டும்.
“நான் தான் எனக்கு ஒன்னும் இல்லேனு சொல்றேனே டி, ஆதி பட்டத்தை மறந்துட்டு கையை மேல தூங்கிட்டேன். வலி சுள்ளுனு கையை இழுத்திருச்சு அதுல தான் கத்திட்டேன்” என்றவன் அவள் முகத்தை தாங்கி “நான் நல்லா தான் இருக்கேன் டி.. நீ இந்த மாதிரி வயித்துல குழந்தையை வெச்சுட்டு இப்படி ஓடி எல்லாம் வராத . எங்கையும் விழுந்தா என்ன டி ஆகுறது. ” என்று அதட்டலாக சொன்ன ராகவ். “இங்க பாரு எனக்கு எதுவுமில்லை நான் நல்லா தான் இருக்கேன். அதை முதல்ல உன்னோட இந்த குட்டி மூளைக்குள்ள பதிய வை சரியா?” என்றவன் கட்டிலில் இருந்து கீழ் இறங்க..
“சரி ” என்று தலையை ஆட்டிய ஓவியவோ தன் முன்னே வெற்று தேகத்துடன் நின்று இருந்தவனைப் பார்த்தாள்.
நெற்றியில், கன்னத்தில் பிளாஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. கையில் சிராய்ப்பு காயங்கள் பார்க்க சிவந்து அந்த இடமே கன்றிப்போய் லேசாக வீங்கியும் இருந்தது, படிக்கட்டு தேகத்தில் வெந்நிற ஷார்ட்ஸ் அணிந்து போலீஸ் கட் அடித்த சிகை லேசாகக் களைந்து என அவள் முன் நின்று இருந்தவனை ஆசையாக, காதலாகப் பார்த்தாள் ஓவியா.
வயிற்றை தள்ளிக்கொண்டு ஈர உடலுடன் மார்புவரை டவளைக் கட்டிக்கொண்டு அமர்ந்து இருந்தவளை அவனும் ரசித்துக்கொண்டு இருந்தான்.
“என்ன டி அப்படிப் பாக்குற.. மோர்னிங் ஒர்க் பண்ணி ரொம்ப நாள் ஆச்சு , நீயும் அரை குறையா என் முன்னாடி வந்திருக்க.. ” என்று அவளுக்கு இரு பக்கமும் கைகளை ஊன்றி அவள் உயரத்திற்குக் குனிந்தவன் அவள் மூக்கோடு மூக்கு உரசப் பார்த்தான்.
“அ.. அது நீ கத்தினதால நான் என்னவோ , ஏதோனு அவசரத்துல வந்துட்டேன். நீ முதல்ல வழி விடு.. அடி பட்டு வந்திருக்கு ரெஸ்ட் எடுக்கிறதை விட்டுட்டு , எக்சர்சைஸ் பண்ணனுமா உனக்கு ” என்று அவன் மார்பில் கை வைத்து பின்னுக்கு தள்ளினாள்.
மார்பில் இருந்த அவள் கையை விளக்கவிடாமல் பிடித்துக்கொண்டவன் தன் மேனியை அவள் கை பிடித்து வருட செய்து “இப்போ சொல்லு.. நான் ரெஸ்ட் எடுக்கட்டுமா? இல்ல எக்சர்ஸை பண்ணட்டுமா?” என்று மேலும் அவளை நெருங்கி இருந்தான்.
அவன் மூச்சுக்காற்று அவள் முகத்தில் பட்டு தாறுமாறாய் அவள் உணர்வுகளை எழுப்பிக்கொண்டிருந்தது.
“அது.. அதெல்லாம் ஒன்னும் வேணாம். சும்மா இப்படி எல்லாம் பண்ணினா நான் மயங்கிருவேன்னு நினைக்குறியா? உன்னோட பிளான் எல்லாம் என்கிட்டே ஒர்க் அவுட் ஆகாது போலீஸ் மச்சான். நீ நகரு எனக்கு நேரம் ஆச்சு கீழ போகணும் “என்று அவன் கைக்குள் இருந்த தன் கையை விளக்க முயன்றாள்.
“ஓஹோ.. நான் உன்னை மயக்கணுமா?” என்று நக்கலாக சிரித்தவன் “நீ தான் டி என்கிட்டே மயங்கி இருக்க.. ” என்று அவன் படிக்கட்டு தேகத்தை அவளையும் அறியாமல் வருடிக்கொடுத்துக்கொண்டிருந்தவள் கையைப் பற்றி இன்னும் கொஞ்சம் கீழ் இறக்கி.. “இப்போ சொல்லு.. ஒர்க் அவுட் பண்ண வருவியா? மாட்டியா?” என்றான் குறும்பாக சிரித்தபடி.
அவன் தாடையில் விழுந்த குழியை ரசித்துக்கொண்டே அவன் பால் சொக்கிப் போனவள் சட்டென தன்னை சமன் செய்து கொண்டு அவள் கையை வேகமாக பின்னுக்கு இழுத்துக் கொண்டவள். “டேய் போலிஸ் ஒரு பொண்ணுகிட்ட இப்படி எல்லாம் நடந்துகிறது பெரிய தப்பு. நான் உன் மேல கமீஸனர் ஆபீஸ்ல கம்பளைண்ட் கொடுத்திருவேன் பாத்துக்கோ.. ” என்று அவனை தள்ளி விட்டு கீழ் இறங்கியவள் பாத்ரூம் நோக்கி நடக்க ,,
“ஒய் திருட்டுக் கழுதை , என் மேல கம்பளைண்ட் கொடுக்கிறதா இருந்தா நான் எல்லாம் பண்ணி முடிச்சதும் மொத்தமா கம்பளைண்ட் கொடுத்துக்கோ.. “என்று அவள் கட்டி இருந்த டவலை பிடித்து இழுத்து அவிழ்த்து இருந்தான்.
அதில் அதிர்ந்த ஓவியா தன் கை கொண்டு மேனியை மறைக்க முயல..
அதைக் கண்டு வாயில் கை வைத்து சிரித்தவன் அவளை நோக்கி டவலை சுற்றிக்கொண்டே வந்து அந்த டவலால் அவளை வளைத்துப் பிடித்தவன் “இன்னிக்கு எனக்கு ஒர்க் அவுட் பண்ணியே ஆகணும்.. டாட்…’ என்று டவலை சுண்டி இழுக்க..
அவன் இழுத்த வேகத்தில் அவன் மார்போடு ஒட்டிக்கொண்டு நின்றவள் அவனை நிமிர்ந்து பார்க்க..
“ஓகேவா? இல்லையா?” என்றான்.
இரு வெற்று தேகமும் உரசிக்கொண்டு அந்த நொடியில் அவளுக்குள் காதல் வெள்ளம் ஆர்பரிக்கத் துவங்க.. இனி அவள் வேண்டாம் என்று சொன்னால் தானே அவனை அப்படியே இறுக்கி அணைத்தவள் “வேணம்னா விடவா போற நீ என்ன “என்றவள் அவன் விழிகளைப் பார்த்துக்கொண்டே அவன் மார்பில் தன் இதழ்களை ஈரம் செய்து பதிக்கத் துவங்கி இருந்தாள்.
ஒர்க் அவுட் பண்ணினாங்களா? இல்லையா? நாளை பார்க்கலாம்
