ஆன்லைன் 14
“எதுக்கு டா இவ்ளோ அவசரமா என்னை வர சொன்ன.. ” என்று கேட்டபடி ஆர்யனின் அலுவலகத்திற்குள் நுழைந்தான் நெடுமாறன்.
“எல்லாம் ஒரு விஷயமா தான் மச்சி.. எதுக்கு இப்படி டென்ஷன் ஆகுற.. ” என்று அவனை வாசலுக்கே சென்று வரவேற்ற ஆரியன் மாறனை கட்டிக்கொண்டு வரவேர்த்தவன் முகத்தை சுளித்துக்கொடேன் அவனை விட்டுப் பிரிந்து “என்ன டா சரக்கு இது, இப்படி நாத்தம் அடிக்குது ” என்றான்.
“அப்டியா! ” என்றவன் “இன்னிக்கு ஒரு புது பார் ஓபன் ஆகிருந்துச்சு அங்க இருந்து வாங்கி வந்த ட்ரிங்க்ஸ் குடிச்சேன். அது தான் போல.. ‘ என்றவன் தன் சட்டையை முகர்ந்து பார்க்க.. அவனுக்கே அந்த வாடை ஏதோ போல இருந்த்து.
“இப்படியே உன்னைக் கூட்டிப்போனா எனக்கு தான் கேள்வி வரும். முதல்ல உள்ள வா வந்து என்னோட ஷர்ட் போட்டுக்க..’ என்று தன் கேபினுக்கு அழைத்து சென்று தன்னுடை வெள்ளை நிற சட்டை ஒன்றை எடுத்து அவனிடம் நீட்ட..
“டேய் வைட் எனக்கு செட்டே ஆகாது. வேற சட்டை இருந்தா குடு “என்றான்.
“டேய் இது நாளைக்கு கமிஷனரை என் கல்யாணத்துக்கு இன்வைட் பண்ணப் போறதுக்காக கொண்டு வந்த ஷர்ட் . என்கிட்டே இதை தவிர வேற இல்ல..
‘ என்றான் ஆர்யன்.
“ம்ம்ம்.. ‘என்று அவனை மேலும் கீழும் பார்த்த மாறன் “உன் சட்டையைக் கழட்டி கொடு.. “என்றான்.
“டேய் அப்போ நான் எதைப் போடுகிறது. மேல வேற என்னோட கொலீக்ஸ் , நம்ம பிரெண்ட்ஸ் எல்லாரும் வந்திருக்காங்க டா.. ” என்றான்.
“அதுக்கு தான் என்னை வர சொன்னியா? எனக்கு தான் அவங்களை மீட் பண்ணினா பிடிக்காதுன்னு தெரியும் இல்ல.. அப்பறோம் எதுக்கு என்னை வர சொன்ன.. ” என்று கோபமாக பேசியவன் “நீ நகரு நான் வீட்டுக்கு கிளம்புறேன் ” என்று ஆர்யனைத் தாண்டி செல்லப்போனான்.
அவன் கையைப் பற்றி தன் முன் நிறுத்திய ஆர்யன் “இப்போ எதுக்கு டென்ஷன் ஆகுற . அவங்க எல்லாம் என்ன டா செய்தாங்க.. எதுக்கு உன் கோபத்தை அவங்ககிட்டே காட்டுற.. ” என்றான் ஆர்யன்.
“இவனுங்க யாரும் எதுவுமே செய்யல அது தான் இங்க பிரச்சனையே.. எனக்கு என்னனு இவனுங்க எல்லாம் அவனவன் வேலையை பார்த்துட்டு இருந்ததால தான மகிழன்… மகிழன் இப்போ நம்ம கூட இல்ல.. ” என்றான் ஆத்திரம் பொங்க.
“டேய் மகிழன் உனக்கு தம்பி மட்டும் இல்ல , அவன் என்னோட பிரெண்ட் தெரியும் தானே. அவனுக்கு நடந்தது யாருக்கும் நடைந்திருக்கக் கூடாது தான். அதுக்காக நீ இன்னும் எவ்ளோ நாளைக்கு அதையே நினைச்சிட்டு இருப்ப. சேரக்கூடாத இடத்துல சேர்ந்து பண்ணக் கூடாத காரியத்தைப் பண்ணிட்டு இன்னிக்கு அவன் எங்க இருக்கான்.. என்ன பண்ணிட்டு இருக்கான் இப்படி எதுவுமே தெரியாம இருக்கோம்“ என்று தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு பேசிய ஆர்யன்.
“அவன் தான் வாழ்க்கையை கெடுத்துட்டு இருக்கவங்க நிம்தியை குழைச்சிட்டுப் போயிட்டான்னா நீயும் இப்போ அதையே தான் டா செய்துட்டு இருக்க. இப்படி எவ்ளோ நாளைக்கு மது, போதைனு பொறுப்பில்லாம சுத்திட்டு இருக்கப் போற.. உன் அப்பா, அம்மாவைப் பத்தி கொஞ்சம் யோசனை பண்ணிப் பார்த்தியா? அவங்களுக்கு மட்டும் மகிழனோட இழப்பு வலிக்காதுன்னு நினைச்சிட்டு இருக்கியா?” என்று கோபத்தில் இருந்தவனை நிதானத்திற்கு கொண்டு வர எண்ணி பேசினான் ஆர்யன்.
“எனக்கு என்னனு அவனை தண்ணி தெளிச்சு விட்டவங்க தானே அவங்க. அவங்களுக்கு எப்படி அவன் மேல அக்கறை வரும் . இப்போ நான் கெட்டுப்போறேன்னு அவ்ளோ கவலைப்பட்ட அவங்களுக்கு , மகிழன் இதே நிலையில் இருந்த அப்போ அவனை அதுல இருந்து வெளிய கொண்டு வர எந்த முயற்சியும் எடுக்களையே ” என்றான் ஆத்திரம் பொங்க.
“டேய் உனக்கு தெரியுமா டா , மாமா மகிழனைக் காப்பாத்த எவ்ளோ செலவு செய்தாருனு.. அவனை எப்படியாவது கூட வெச்சுக்கணும்னு எவ்ளோ செலவு செய்தருனு உனக்கு தெரியாது டா,. ” என்று மாறனின் அப்பா விருதாச்சலத்திற்கு ஆதரவாகப் பேசினான்.
“இங்க பாரு டா நீ ஏதோ அவசரம்னு கூப்பிட்டேன்னு தான் கிளம்பி வந்தேன். இப்படி வெட்டியா கதை பேச கூப்பிட்டிருந்தேன்னு தெரிஞ்சிருந்தா நான் வந்திருக்கவே மாட்டேன் டா .. ” என்றான் மாறன்.
“எனக்கும் இந்த வெட்டிப் பேச்சு பேச துளியும் இஷ்டமில்லை மாறா. ஆனா இவனுங்களை வர வெச்சதுக்கு ஒரு காரணம் இருக்கு” என்றான் ஆர்யன்.
“என்ன காரணம், முதல்ல இவனுங்களை என்ன சொல்லி இங்க கூப்பிட்டிருக்க.. இந்த குடிகாரன் வருவான் அவனை எல்லாரும் சேர்ந்து கலைக்கலாம்னு தான் இவனுங்கள வர சொல்லிருக்கியா?” என்றான் மாறன்,
“டேய் நா எதுக்கு உன்னை இவ்ளோ பேர் முன்னாடி கூப்டு வெச்சு அவமானப்படுத்தப் போறேன். இன்னிக்கு ஒரு முக்கியமான ஆள் வந்திருக்கு அதுக்காக தான் உன்னை இங்க வர சொன்னதே” என்றான் ஆர்யன்.
“யார் வந்திருக்கா ?” என்றான் முறுவல் விடுங்க.
“அட்சரா” என்றான் ஆர்யன்,
அந்த பெயரைக் கேட்ட அடுத்த நொடி அந்த அறையை விட்டு வேகமாக வெளியேறி இருந்தான் மாறன்.
“டேய் .. டேய் .. அவசரப்பட்டு காரியத்தைக் கெடுத்துறாத… அவளை இங்க வர வைக்க நான் எவ்ளோ பிளான் பண்ணிருக்கேன் தெரியுமா? உன்னையும், என்னையும் பத்தி அவளுக்கு தெரியாம இருந்ததால தான் அவளை இன்னிக்கு இங்க வர வைக்க முடிஞ்சது . நீ உன் இஷ்டத்துக்கு அவகிட்டே போய் மகிழனைப் பத்தி பேசி காரியத்தை கெடுத்துறாத “என்று அவன் பின்னாலேயே சென்ற ஆர்யன் மாறனின் பின்னிருந்து அணைத்துப் பிடித்திருந்தவன் அவனை இழுத்துக்கொண்டு தன் அறைக்குள் சென்றான்.
“டேய் விடுடா .. விடு டா என்னை. அவளை எதுக்கு டா இங்க கூப்பிட்டிருக்க.. அவளுக்கும் இங்க இருக்கவங்களுக்கும் என்ன டா சம்மந்தம் இருக்கு” என்றான் தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல்.
“இருக்கு டா சம்மந்தம் இருக்கு.. இவ்ளோ நாள் அவ பேரை மட்டும் வெச்சிட்டு ஊர் முழுக்க தேடிட்டு இருந்தோம், ஆனா இப்போ அவ நம்ம இடத்துல இருக்கா. நம்ம ரமேஷ் இருக்கான் இல்ல அவனை அவ தான் கல்யாணம் பண்ணிக்கப் போறா. அவனோட கேர்ள் பிரெண்டா தான் அந்த அக்ஷ்ரா இங்க வந்திருக்கா. அதனால தான் சொல்றேன் கொஞ்சம் பொறுமையா இருன்னு… அப்பறோம் இவ்ளோ நாள் பட்ட கஷ்டத்துக்கு பலனே இல்ல மச்சான் கொஞ்சம் புரிஞ்சுக்கோ.. ” என்று கெஞ்சினான் ஆர்யன்.
அவன் கைக்குள் இருந்த மாறனோ இன்னமும் ஆத்திரம் தீராமல் வேக மூச்சுக்கள் எடுத்தவன் . “சரி விடு என்னை ” என்று அவன் கையை தன்னில் இருந்து பிரித்து விட்டான் மாறன்.
“டேய் எதுவும் பிரச்சனை பண்ணிடாத மச்சான்” என்றான்.
“இல்ல பண்ண மாட்டேன் “என்றவரிடம் இருந்து மெல்ல தன் பிடியை ஆர்யன் தளர்த்த..
“அவளை!.. அவள சும்மா விடக்கூடாது.” என்று மீண்டும் வெளியே செல்லப் போனான்.
“டேய் ! ” என்று மீண்டும் அவனை அறைக்குள் இழுத்து தள்ளி கதவையே அடைத்திருந்த ஆர்யன்,
“உனக்கு மகிழனைப் பார்க்கணுமா? வேணாமா?” என்றான்.
வந்த கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறிக்கொண்டிருந்த மாறனுக்கு போதையின் கலவையும் அவன் ரத்தத்துல தன் வேலையை காட்டி இருக்க… அவனோ உட்சபட்ச கோபத்தில் என்ன செய்வது எப்படி தன் கோபத்தை கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் அந்த அறைக்குள் இருந்த பொருட்களை எல்லாம் தூக்கிப்போட்டு உடைக்க ஆரம்பித்து இருந்தான்.
“டேய் .. டேய் முட்டாள் என்ன பண்ற.. இது ஒன்னும் வீடு இல்ல.. என்னோட ஆபிஸ் ” என்று மாறனின் கையைப் பற்றி இழுக்க..
“நான் இப்போ இருக்க மெண்டாலிட்டிக்கு வெளிய வந்தா அவளை என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. “என்று கத்தினாள் மாறன்,
“உன்னை கூப்பிட்டது தான் பெரிய தப்பகிருச்சு இப்போ.” என்றவன் “நீ எங்கையும் வர வேணாம். நானே அவளை டீல் பண்ணிக்கிறேன். ” என்றவன் “நான் வர வரைக்கும் நீ இந்த ரூம்க்குள்ளையே இரு ” என்று அவனை உள்ளே பூட்டிவிட்டு சென்று இருந்தான் ஆர்யன்.
“ஆஹ்!.. ஆஹ்!.. ” என்று கத்தி தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வர முனைந்தான் மாறன் ஆனால் அவனால் முடியவில்லை.
“மகிழா!.. எங்க டா இருக்க?.. உன்னால தான் நான் இப்படி ஆனதே.. எங்க போய்த்தொலைஞ்ச” என்று கத்தி கத்தி அவன் தொண்டை தண்ணி வற்றி இருக்க..
சுற்றும் முற்றும் குடிக்க தண்ணீரை தேடினான். ஆர்யன் அறையில் இருந்த ப்ரிட்ஜ் அவன் கண்ணில் பட.. அதை திறந்து அதில் இருந்த சில்லென்ற தண்ணீரை எடுத்து குடித்தவன் அப்படியே அதை தன் தலையில் இருந்து ஊற்றி தன் கோபத்தைத் தணிக்க முயன்றான்.
இப்பொது தான் அவனுக்கு கொஞ்சம் தன்னிலை உணரும் நிலை உருவானது. அப்டியே அங்கே இருந்த சோபாவில் போய் பொத்தென விழுந்தான்.
“சார்!.. சார்… ” என்று அப்போது ஒரு பெண்ணின் குரல் அந்த அறைக்குள் கேட்க..
சோபாவில் படுத்திருந்தவன் அந்த குரலைக் கேட்டதும் அது மீராவின் குரல் என்று புரிந்து போக..
சட்டென சோபாவில் இருந்து எழுந்தவன் தன் பேண்ட் பெக்ட்டில் இருந்த போனை எடுக்கப் போனான் ஆனால் அவன் போன் அங்கே இல்லை.
போனை எங்கே எங்கு தேடிக்கொண்டே எழுந்து அறையில் தேடினான்.
அவன் பண்ணின களேபரத்தில் பாக்கெட்டில் இருந்த போன் எங்கோ பறந்து விழுந்திருந்தது, மீண்டும் மீரா அவனை அழைத்தாள்.
“சார், என்ன ஆச்சு உங்களுக்கு , நீங்க போன இடத்துல எதுவும் பிரச்சனையா?” என்றாள்.
அவள் பதற்றமாக இருக்கிறாள் என்று அவள் குரலை வைத்தே கணித்தவன். “மீரா! மீரா ஒரு நிமிஷம் ” என்று தட்டுத் தடுமாறியபடி அந்த அறைக்குள் தன் மொபைலை தேடி அலைபாய்ந்தவன் ஒருவழியாக அவள் குரல் வந்த திசையை வைத்து போனை அந்த அறையின் ஓரத்தில் இருந்த புக் செல்பின் கீழ் கண்டு பிடித்தான்.
அதை எடுக்கப் போனவன் சட்டென்று எடுக்காமல் கையை பின்னுக்கு இழுத்துக்கொண்டவன் “என் முகத்தை அவ பாத்திருப்பாளோ.. ” என்று தோன்றியது அவனுக்கு. உடனே தன் பாக்கெட்டில் இருந்த கர்ச்சிப்பை எடுத்து தன் முகத்தை மறைந்துக் கட்டிக்கொண்டவன் குனிந்து போனை எடுத்துப் பார்த்தான்.
அதில் அவள் தெரிந்தாள் “சார்!.. சார்.. இருக்கீங்களா? ஏதாவது பேசுங்க ” என்று இன்னமும் பதற்றம் குறையாமல் அவள் பேசினாள்.
அவள் பேசியதை வைத்தே தான் திரையில் அவளுக்குத் தெரியவில்லை என்று நினைத்தவன் போனில் பார்க்க… அவன் கிளம்பும்போது வீடியோவையும், ஆடியோவையும் மியூட் செய்திருந்தான்.
ஆனால் இப்போது ஆடியோ மட்டும் போன் விழுந்ததில் எதிலோ பட்டு ஆடியோ ஆன் ஆகி இருக்க.. அதில் தான் அவள் இங்கு நடப்பதை கேட்டிருக்கிறாள் என்று அவனுக்குத் தோன்றியது.
“மீரா!.. ” என்று அவன் குரலைக் கேட்டதும் தான் அவளுக்கு கொஞ்சம் நிம்மதியானது,
“சார்! எங்க இருக்கீங்க? எதுவும் பிரச்சனையா? ” என்று கேட்டாள்.
“மீரா ஒன்னும் ப்ரோப்லேம் இல்ல. .நான் நல்லா தான் இருக்கேன்”என்றான்.
“அங்க ஒரே சத்தமா இருந்திச்சு.. ஏதோ விழுந்து உடையுற போல எல்லாம் இருந்துச்சு . சண்டை எதுவும் போட்டீங்களா சார் . உங்களுக்கு எதுவும் ஆகளையே.. ” என்று மிகவும் பதற்றமும், தடுமாற்றமும், தவிப்புமாக கேட்டவளை திரையில் பார்த்தான்.
