உங்கள் உரையில் உள்ள ‘வீரா’ என்ற பெயரை ‘சூர்யா’ என்று மாற்றி, எழுத்துப்பிழை, வாக்கியப் பிழை, கமா, புல் ஸ்டாப், மேற்கோள் குறியீடு போன்றவற்றைச் சரிசெய்து கொடுத்துள்ளேன்.
சூர்யாவும், வினுவும் சேர்ந்து ஜானை அடித்துத் துவைத்துப் போட்டுவிட்டு, சோபாவில் அமர்ந்திருந்த யாராவிடம் வந்தனர். இருவரும் அவளைப் பார்த்தனர்.
யாரா போதை அதிகமானதால் அரை மயக்கத்தில் இருந்தாள்.
அவள் அருகில் தரையில் ஒரு காலை மண்டி இட்டு அமர்ந்த சூர்யா, அவள் முகத்தைப் பிடித்து உயர்த்தியவன், “என்ன யாரா இது? இப்படியா கேர்லெஸ்ஸா இருப்ப? ஏற்கனவே அம்மாவும் அப்பாவும், ‘எங்க ரெண்டு பேரையும் உன்னைச் சரியாக் கவனிச்சுக்கிறது இல்லை’ன்னு திட்டிட்டு இருக்காங்க. இப்போ நீ, அந்த ஜான் பண்ணின வேலையில் இப்படி இருக்க. இந்த நேரம், உனக்காக வெச்சிருக்கிற கார்ட்ஸ் அம்மா கிட்டே நியூஸ் கொண்டு போயிருப்பாங்க. இன்னும் கொஞ்ச நேரத்தில் அம்மா எனக்குக் கால் பண்ணிக் கத்தப் போறாங்க,” என்றான்.
“சூர்… நான் வேணும்னு எதுவும் செய்யலை. என்னோட ஃபிரெண்ட்ஸ் கூடத்தான் நான் ஜூஸ் குடிச்சிட்டு இருந்தேன். நான் அந்த ஜூஸைக் குடிச்ச பிறகுதான் எனக்கு இந்த மாதிரி ஆகிருச்சு. அதுக்கு இந்த ஜான் தான் காரணம். நான் என்ன செய்வேன்?” என்று உளறிக் கொண்டே சொன்னாள்.
அவளால் அதற்கு மேல் பேச முடியாமல் மயங்கி இருக்க, யாராவைத் தூக்கி தன் தோளில் போட்டுக்கொண்ட வினு, “சூர்… நம்ம கார்ட்ஸ் இவளை இன்னும் பார்க்கலை. அவங்க வந்து யாராவைப் பார்ப்பதற்குள் நம்ம அவளை அழைச்சிட்டுப் போயிடலாம். எப்படியும் நைட் தானே நாம கிளம்புறோம்? அதுக்குள்ள இவ சரியாகிடுவான்னு நினைக்கிறேன்,” என்றவன், “சரி சூர்… நீ அவங்களை எல்லாம் கவனிச்சுட்டு நம்ம வீட்டுக்கு வந்துவிடு. நான் இந்த பார்ட்டி ஹாலின் பின்னால் பார்க்கிங்கிற்குச் செல்லும் வழியில் இவளை அழைச்சிட்டு நான் வீட்டுக்குக் கிளம்புறேன்,” என்று சொல்லிவிட்டு வினு சென்றான்.
சூர்யா, அவர்கள் சென்றதை உறுதி செய்துகொண்டவன், நேராகப் பார்ட்டி நடக்கும் இடத்திற்கு வந்தான். யாராவின் ஃபிரெண்ட்ஸ் இடம் வந்தவன், “யாரா வினுவுடன் கிளம்பி விட்டாள்” என்று சொல்லி, அவர்களிடம் இருந்து சொல்லிக்கொண்டு முன் வாசல் வழியாக சூர்யா புறப்பட்டான்.
அவன் சென்ற பிறகு, பாத்ரூம் சென்ற யாரா இன்னும் வரவில்லை என்று அவளுடைய கார்ட்ஸ்கள் வந்து அவள் நண்பர்களிடம் கேட்க, அவள் அப்போதே வினுவுடன் வீட்டிற்கு கிளம்பி விட்டதாகக் கூறவும், அவர்களுக்கு எந்த சந்தேகமும் வராமல் போகவே, இவர்களும் கிளம்பி சூர்யா, வினு, யாரா இருக்கும் அவர்கள் வீட்டிற்குக் கிளம்பினர்.
இரவு ஃபிளைட் என்பதால் தன் பிசினஸ் மீட்டிங்கை சீக்கிரம் முடித்துவிட்டு நேராக ஏர்போர்ட் வந்துவிடுவதாக சூர்யா வினுவிற்கு மெசேஜ் அனுப்பிவிட்டு மீட்டிங் அறைக்குள் சென்றான்.
விக்ரம் நடத்திக் கொண்டு இருக்கும் கிங்ஸ் ஸ்டுடியோ இப்போது உலக அளவில் பிரபலம் ஆகிவிட்டது. அதற்கு முக்கிய காரணம் சூர்யாவும், வினுவும் தான். இருவரும் டிசைனிங் சம்பந்தமான படிப்பை முடித்துவிட்டு நேராகத் தன் தந்தையின் பிசினசை எடுத்து நடத்த ஆரம்பித்த முதல் வருடத்திலேயே நல்ல லாபத்துடன் அவர்களது பிசினஸ், முன்பு இருந்ததை விடவும் பிரபலமானது. சூர்யா பிசினஸைப் பார்த்துக்கொள்ள, அவர்கள் கிங்ஸ் ஸ்டுடியோவின் மெயின் மாடலாக வினு வலம் வந்து கொண்டிருக்கிறான். அவன் இப்போது உலகப் புகழ்பெற்ற மாடல்களின் முதல் மூன்று இடத்தில் இருக்கிறான்.
அந்த முதல் இடத்தைப் பிடிக்கத்தான் இப்போது முழு மூச்சாக மாடலிங்கில் இறங்கி அதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு இருக்க, சூர்யா முழுக்க முழுக்கத் தனியாக பிசினசை எடுத்து நடத்திக் கொண்டிருக்கிறான். இருவரும் டெக்சாஸில் நடைபெறும் ஃபேஷன் வீக்கிற்கு வினு கலந்துகொள்ள வந்திருக்க, எப்படியும் யாரா காலேஜ் முடிந்ததும் இந்தியா வர வேண்டியிருந்ததால், சூர்யாவும் டெக்சாஸ் வந்துவிட்டான்.
இன்று யாராவின் காலேஜின் கடைசி நாள் என்பதால், தன் நண்பர்களிடம் சூர்யாவையும் வினுவையும் இன்ட்ரோடுயூஸ் செய்துவைக்க வேண்டும் என்று, அவர்களை மாலை பார்ட்டி நடக்கும் இடத்திற்கு வரச் சொல்லியிருந்தாள். அவர்களை வர சொன்னதிலும் ஒரு வகையில் நல்லதாகப் போய்விட்டது. சூர்யாவும், வினுவும் மட்டும் இன்று வந்திருக்கவில்லை என்றால் யாராவின் நிலை பரிதாபத்திற்கு உரியதாகப் போயிருக்கும்.
யாராவை படிப்பு முடிந்து இந்தியா திரும்பியதும் அவளுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று மீனு விக்ரமிடம் நச்சிக் கொண்டிருக்க, இந்த நிலையில் யாரா இப்படி ஒரு சிக்கலில் மாட்டியிருக்கிறாள் என்று மீனுவிற்குத் தெரிந்தால், உடனே அவளது கல்யாண ஏற்பாடுகளை யாரையும் கேட்காமல் நடத்தி விடுவாள்.
சூர்யா தனது முக்கியமான டீலிங்கை முடித்துவிட்டு நேராக ஏர்போர்ட் வந்துவிட, டெக்சாஸில் இவர்களுக்கு என்று பிரத்யேகமாகத் தனி விமானம் காத்திருக்க, ஏற்கனவே யாராவும் வினுவும் வந்து அங்கு சூர்யாவிற்காகக் காத்திருந்தனர். சூர்யா வந்ததும் விமானம் கிளம்ப, ஃபிளைட்டில் ஏறியவுடன் சூர்யா நேராக யாரா இருக்கும் அறைக்குச் சென்று அவள் எப்படி இருக்கிறாள் என்று பார்க்கச் சென்றான். யாரா பெட்டில் படுத்தபடி கையில் இருந்த மொபைல் ஃபோனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தாள். போதையின் தாக்கம் இன்னும் லேசாக அவளுக்கு இருக்க, தன்னை நிதானப்படுத்திக் கொள்ளவே கேம் விளையாடிக் கொண்டு இருந்தாள்.
சூர்யாவைப் பார்த்ததும் எழுந்து அமர்ந்தவள், சூர்யாவைப் பார்த்து, “அந்த ஜானை என்ன செஞ்சே?” என்றாள். சூர்யாவின் பின்னால் வந்த வினு, “அவன் இந்த நேரம் எந்த ஹாஸ்பிடலில் எமர்ஜென்சியில் அட்மிட் ஆகி இருக்கான்னு யாருக்குத் தெரியும்?” என்றான் வினு சிரித்துக் கொண்டே. “இதைத்தான் செய்திருப்பீர்கள் என்று எனக்கு முன்னமே தெரியும்,” என்று யாராவும் சிரித்தாள்.
சூர்யா அவள் தலையைப் பாசமாக வருடி விட்டவன், “சரி, நீ கொஞ்ச நேரம் நல்லாத் தூங்கு, ரெஸ்ட் எடு. நீ இப்படியே ரெஸ்ட் எடுக்காமல் விளையாடிக் கொண்டு இருந்தால், இந்தியா செல்லும்போது மிகவும் டயர்டாகிவிடுவாய். பிறகு அம்மா உன்னைப் பார்த்துவிட்டு எங்கள் இருவரையும் தான் திட்டுவார்,” என்றான். அவள் சிரித்துக் கொண்டே, “அதையெல்லாம் நான் பார்த்துக்கிறேன் சூர். நீ போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு. நீ தான் ரொம்ப டயர்டா இருக்க,” என்றாள்.
“உங்க ரெண்டு பேரையும் விட நான் தான் ரொம்ப டயர்டா இருக்கேன். ஆஸ் எ மாடலா நான் தான் அதிகமா ரெஸ்ட் எடுத்துக்கணும். அப்போதான் என்னோட ப்ரொபஷனல் மாடலிங் பண்ணும் போது என் முகம் ரொம்ப ஃப்ரெஷ்ஷா, யங்கா தெரியும்,” என்றான். “உன்னைத்தான் முதலில் தூங்க விடாமல் செய்யணும்,” என்று சொல்லி யாரா வினுவின் கையைப் பிடித்து இழுத்து தன் அருகில் அமர்த்திக் கொண்டவள், “சூர் நீ போ. நாங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் பேசிட்டு அதுக்கப்புறம் ரெஸ்ட் எடுக்கிறோம்,” என்றாள்.
வினுவின் கையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு யாரா அமர்ந்திருக்க, அவளிடமிருந்து தப்பிக்க முடியாமல் அடங்கிப் போனவன்போல எதுவும் பேசாமல் அவளிடம் அமர்ந்திருந்தான் வினு. இவர்கள் இருவரையும் பார்த்த சூர்யா சிரித்துக் கொண்டே தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்றவன், தன் மேல் அணிந்திருந்த கோட்டையும், டையையும் கழட்டி வைத்துவிட்டு, சட்டை பட்டன் இரண்டைக் கழட்டி விட்டவன், சட்டையை முட்டிக்கு மேல் வரை உயர்த்தியவன், அவனுக்காகப் போடப்பட்டிருந்த பெட்டில் மேலே பார்த்தவாறு கால் மேல் கால் போட்டு, தலைக்கு இரண்டு கைகளையும் தலையணை போல முட்டுக் கொடுத்துப் படுத்துக்கொண்டான்.
டெக்சாஸ் வந்ததிலிருந்து சிறிது கூட ஓய்வில்லாமல் பிசினஸ், மீட்டிங், நண்பர்கள் என்று அங்கும் இங்கும் அலைந்ததில் சூர்யாவிற்கு மிகவும் களைப்பாக இருக்க, படுத்த ஓரிரு நிமிடத்திலேயே உறங்கிவிட்டான்.
பச்சை பசேல் என்று புல்வெளியில் சில பறவைகளும், மிருகங்களும் அங்கு இருந்த ஏரியில் தண்ணீர் குடித்துக் கொண்டிருக்க, அந்த இடமே மிகவும் அமைதியாக, பார்ப்பதற்கு சொர்க்கலோகமே எப்படி இருக்குமோ, அதுபோலவே மிகவும் அமைதியாக அந்த இடம் இருந்தது. சுற்றிலும் செடி கொடிகள், அந்த இடத்தை வானத்திற்கு கீழே படர்ந்து இருக்க, சூரிய வெளிச்சமே உள்ளே இங்கு ஒன்றும் அங்கு ஒன்றுமாகத் தெரிந்துகொண்டிருக்க, லேசாக இருள் சூழ்ந்திருந்த அந்த இடத்தில் தெரிந்த சூரிய வெளிச்சம் தண்ணீரில் பட்டு மின்னியது.
அந்த இடத்தை சுற்றிப் பார்த்து நடந்து கொண்டு இருக்க, அவன் ஏரியின் பக்கம் வரும் பொழுது, சூரியனின் ஒளிபட்டு தண்ணீரின் மேல் பிரகாசித்துக் கொண்டிருக்க, அதில் தெரிந்த தன் முகத்தைப் பார்த்த சூர்யா, தன்னையே ஒரு நிமிடம் ரசிக்கத்தான் செய்தான். அவனையே ரசித்துக் கொண்ட சூர்யா, “தன்னைப்போல் இந்த உலகில் வேறொருவர் இருக்க முடியாது,” என்று எண்ணிக் கொண்டு இருக்கும்போது, அவன் தோல் மீது கை வைத்து அவன் அருகில், அதே தண்ணீரில் தெரிந்த பிம்பத்தின் அருகில் எட்டிப் பார்த்தான் வினு.
அவனைத் திரும்பிப் பார்த்துச் சிரித்த சூர்யா மீண்டும் திரும்பித் தண்ணீரில் பார்க்க, சாந்தமான வட்டமான முகம், சிவந்த அந்த முகத்தில் இரு கண்களும் அமைதியைப் பிரதிபலிப்பது போல இருக்க, அந்த கண்களில் தெரிந்த பச்சை விழிகள் அந்தச் சாந்தமான முகத்திற்கு சம்பந்தமே இல்லாமல் இருந்தது. வில் போன்று வளைந்து இருந்த அந்தப் புருவத்திற்கு நடுவே இருக்கிறதா இல்லையா என்று பார்க்கும் அளவிற்கு ஒற்றைப் பொட்டு வைத்து அதன் மேல் லேசாகத் திருநீற்றுக் கீற்று பூசி இருக்க, அதற்கு மேலே சூர்யாவின் கண்கள் செல்ல, சூரிய வெளிச்சம் ஏரியில் பட்டுப் பிரதிபலித்த அந்தப் பிம்பத்தில் ஒரு பெண்ணின் முகம் தெரிய, அவள் வெற்றிக் குங்குமம் வைத்து மிகவும் சாந்தமாகச் சிரித்தபடி சூர்யாவின் அருகில் வந்தவள், “சூர்யா மாமா, என்ன அப்படி பார்க்குறீங்க? என்னை யாருன்னு உங்களுக்கு அடையாளம் தெரியலையா?” என்று கேட்கிறாள்.
சூர்யாவும், தன்னை உரிமையாக மாமா என்று அழைத்துக் கொண்டு தன் அருகில் நின்று இருக்கும் அந்தப் பச்சைவிழி முகத்தாளைப் பார்த்து, “ம்ஹும்… நீ… நீங்க யாருன்னு எனக்குத் தெரியலை,” என்றான் சூர்யா. அவன் தனக்கு எதிரே இருந்த பெண்ணை யார் என்று தெரியவில்லை என்று சொன்னதும், சாந்தமாக இருந்த அந்தப் பெண்ணின் முகம் திடீரென சோகமாக மாறியது.
“என்ன மாமா இப்படிச் சொல்லிட்டீங்க? நீங்கதானே என் கழுத்துல தாலி கட்டுவீங்க. அதுக்குள்ள என்ன, உங்களுக்கு மறந்து போயிடுச்சா?” என்று சொல்லிக் கொண்டு, அவள் அணிந்திருந்த புடவைக்குள் இருந்து தாலியை வெளியே எடுத்துப் போட்டவள், “இதோ பாருங்க, நீங்க என் கழுத்துல கட்டின தாலி இன்னும் என் கழுத்தில் தான் இருக்கு. என்னை தெரியலையா மாமா? நல்லா ஞாபகப்படுத்திப் பாருங்க,” என்று அவன் எதிரில் நின்றிருந்த அந்தப் பெண் அவனிடம் வலிய வந்து பேச, அந்தப் பெண்ணின் குரல் தேனை விடவும் மிகவும் கேட்பதற்கு இனிமையாக இருக்க, அவள் கேட்ட கேள்விக்குத் தானாக இல்லை என்று தலையாட்டினான்.
“உங்களுக்கு என் கழுத்துல தாலி கட்டுனது ஞாபகம் இருக்காது மாமா. அது எனக்கு நல்லாவே தெரியும். ஆனால் நீங்க எப்போ என் கழுத்துல தாலி கட்டுனீங்களோ அப்போல இருந்து நான் உங்களை மட்டும் தான் நினைச்சுட்டு வாழ்ந்துட்டு இருக்கேன். சீக்கிரமா என்னை வந்து உங்க கூட அழைச்சிட்டுப் போங்க மாமா. இந்த இடம் பார்க்கறதுக்குச் சொர்க்கமாகத் தெரிந்தாலும் இங்கே எனக்காக இருப்பது யாருமே இல்லை. நான் மட்டும் தனியாக இருக்கிறேன். என்னை உன் கூடவே வச்சுக்கோ மாமா. என்னை உன் கூட கூட்டிட்டுப் போ மாமா,” என்று அவனை நோக்கி கை நீட்டிக்கொண்டு அந்தப் பெண் வர, “என்னை வந்து அழைச்சிட்டுப் போய் உங்க கூடவே வச்சுக்கோங்க மாமா. நான் எப்பவும் உங்க பக்கத்திலேயே இருக்கணும்னு ஆசைப்படுறேன்,” என்று சொல்லிக் கொண்டே அந்தப் பச்சை நிற விழியுடைய பெண் சூர்யாவை நெருங்கி வந்தாள்.
அந்தப் பெண் தன்னைத்தான் அவளுடைய கணவன் என்று சொல்லி உரிமைகொண்டாடிக் கொண்டு சூர்யாவின் அருகில் வர, அவளை அருகில் வரவிடாமல் தடுக்க சூர்யா பின்னால் நகர்ந்து கொண்டே சென்றவன், பின்னால் இருந்த ஏரியில் கால்தவறி உள்ளே விழுந்தான். தண்ணீருக்குள் விழுகிறோம் என்று நினைத்துக் கொண்டு கனவில் இருந்த சூர்யா, மெத்தையிலிருந்து கீழே விழ, தூக்கத்தில் இருந்து விழுந்த வேகத்தில் கண் விழித்த சூர்யா தன்னைச் சுற்றிலும் பார்க்க, வினுவும் யாராவும் சூர்யாவை எழுப்பிக் கொண்டு இருந்தனர்.
அவர்களைக் கண்விழித்ததும் புரியாமல் சூர்யா பார்க்க, “என்ன சூர்யா இப்படிப் பாக்குற? இந்தியா வந்துடுச்சு. சீக்கிரம் எழுந்து வா,” என்ற யாரா, நான்கு வருடங்களுக்குப் பிறகு தன் குடும்பத்தைச் சந்திக்கப் போகும் சந்தோஷத்தில் அவனை எழுப்பிவிட்டு ஃபிளைட்டிலிருந்து கீழே இறங்கிச் சென்றாள். அவள் பின்னாலேயே சிரித்துக் கொண்டு சென்ற வினு, “ஏன் யாரா, பார்த்துப் போடி. கீழே விழுந்துடாத,” என்று அவள் பின்னால் செல்ல, ஆனால் சூர்யாவோ மிகவும் குழப்பத்தோடு எழுந்தவன், தன் கோட்டையும், டையையும் எடுத்து மாட்டிக்கொண்டு ஃபிளைட்டிலிருந்து கம்பீரமாக இறங்கினான்.
சூர்யா தனி விமானத்தில் இருந்து இறங்கி வர, தங்கள் மூன்று பிள்ளைகளும் ஒன்றாக நீண்ட நாட்களுக்குப் பிறகு வருவதைக் காண்பதற்காக மீனு, விக்ரம் இருவரும் அங்கே வந்திருந்தனர். யாரா ஃபிளைட்டிலிருந்து இறங்கியதும் புறத்தில் நின்றிருந்த மீனவையும், விக்ரமையும் பார்த்தவள், அவர்களை நோக்கித் தன் கைகள் இரண்டையும் நீட்டியவாரே “அம்மா… அப்பா…” என்று அழைத்துக் கொண்டு ஓடிப் போய் விக்ரமையும், மீனுவையும் சேர்த்து கட்டிக் கொண்டாள். இருவரும் யாராவை நெற்றியில் முத்தமிட்டவர்கள், “எப்படி இருக்க யாரா? உன் காலேஜ் எல்லாம் நல்லபடியா முடிஞ்சதுதானே?” என்று கேட்டனர்.
“ஐ’ம் குட் அப்பா…” என்று சொன்னவள், விக்ரமின் தலையைப் பார்த்து, “என்னப்பா, உங்களுக்கு முடி எல்லாம் நரைச்சிருச்சு?” என்று சொல்ல, உடனே மீனு, “ஏன், உன் அப்பாவுக்கு ஒண்ணும் அவ்வளவா நரைக்கலை. இருக்கிற கருப்பு முடியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இரண்டு மூன்று வெள்ளை முடி மட்டும்தான் தெரிகிறது,” என்றாள். “அப்பாவை மட்டும் எதுவும் சொல்லிடக் கூடாதே. உடனே என்கிட்ட வம்புக்கு வந்திருவ. நான் இப்போதுதான் இந்தியா வந்திருக்கேன். வந்ததுமே நீ என்னைக் வம்புக்கு இழுக்காத மம்மி,” என்றவள், “சரி வாங்க, போகலாம்,” என்று அவர்கள் இருவரையும் அழைக்க, “என் பிள்ளைங்க ரெண்டு பேரும் வரட்டும். அவங்களோட போகலாம்,” என்று மீனு யாராவுடன் செல்லாமல் நின்று இருக்க, பின்னால் வந்து வினு மீனுவைக் கட்டிக்கொள்ள, அதை அருகில் இருந்து பார்த்த விக்ரம், “வந்துட்டாண்டா அம்மா பிள்ளை. எப்ப பாரு அம்மாவோட முந்தானையைப் பிடிச்சுக்கிட்டு இனி சுத்த ஆரம்பிச்சிடுவான். என் பொண்டாட்டி பக்கத்துல என்னை போகவே விடமாட்டான்,” என்று வினுவை திட்டிய விக்ரம், ஃபிளைட்டில் இருந்து இறங்கி ஏதோ யோசனையுடன் சூர்யா நடந்து வருவதைப் பார்த்தவன், தன் அருகில் சூர்யா வந்ததும், சூர்யாவின் தோளில் கை போட்டு நண்பன்போல அவனுடன் பேசிக்கொண்டு சிறிது தூரம் அங்கிருந்து நகர்ந்து வந்தான்.
சூர்யாவின் தோளிலிருந்து கையை எடுத்த விக்ரம், தனக்கு எதிரே சூர்யாவை நிற்க வைத்து, அவன் முகத்தைப் பார்த்து, “என்ன ஆச்சு சூர்யா? ஏதோ குழப்பத்திலேயே இருப்பது போலத் தெரிகிறது. உனக்கு பிசினஸில் எதுவும் பிரச்சனையா? இல்லை எதுவும் ஒர்க் டென்ஷனா?” என்று கேட்டான் விக்ரம்.
“நோ டேட். அது எல்லாம் ஒண்ணும் இல்லை. எனக்கு கொஞ்சம் டயர்டா இருக்கு அவ்வளவுதான். நான் கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தால் சரியாய்ப் போய்விடும்,” என்று சொல்ல, “சரி வா சூர்யா. அப்போ சீக்கிரமா கிளம்பலாம்,” என்று சொல்லி விக்ரம் சூர்யாவை அழைத்துக் கொண்டு முன்னே செல்ல, மீனு யாராவிடமும் வினுவிடமும் பேசிக் கொண்டு இருந்தவள், தன் மற்றொரு மகன் சூர்யா வந்ததும் தன்னை மறந்துவிட்டு, விக்ரம் அவர்கள் மூவரையும் தாண்டிச் செல்வதைப் பார்த்தவள், “உன் அப்பாவுக்கு அவர் செல்ல மகன் சூர்யாவைப் பார்த்ததும் நம்மையெல்லாம் மறந்துவிட்டார்,” என்று சொல்லிச் சிரித்தவள், “சரி வாங்க நம்மளும் கிளம்பலாம். இல்லைன்னா நம்ம மூணு பேரையும் மறந்துட்டு அவங்க ரெண்டு பேரும் போயிடுவாங்க,” என்று சொல்லி யாராவையும், வினுவையும் அழைத்துக் கொண்டு அவர்களோடு சென்றாள் மீனு.
யாரா, மீனு, வினு, விக்ரம் நால்வரையும் ஒரு காரில் ஏற்றி வீட்டிற்குச் செல்லச் சொல்ல, “இப்போதான் டெக்சாஸ் போய் ஒரு வாரம் கழிச்சு இந்தியாவுக்கு வந்திருக்க. வந்ததும் ஆபீஸ் வேலைன்னு மறுபடியும் ஓய்வு இல்லாம சுத்தணுமா சூர்யா? வீட்டுக்கு வந்து ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு கூடப் போகலாம் இல்ல?” என்று தாயின் அக்கறையோடு மீனு கூற, சூர்யா தனக்கு ஆபீஸில் ஒரு முக்கியமான வேலை இருப்பதாகவும், அதை முடித்துவிட்டு இரவு வீட்டுக்கு வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு வேறு ஒரு காரில் கிளம்பினான்.
“இவனைத் திருத்தவே முடியாது,” என்று நால்வரும் கிளம்பி வீட்டிற்குச் செல்ல, எங்கே சூர்யா தன் கனவில் வந்து தன்னை உரிமையாகக் கணவன் என்று சொல்லும் அந்தப் பச்சை நிற விழியுடைய பெண் யாராக இருக்கும் என்ற யோசனையோடு ஆபீஸிற்குப் பயணப்பட்டான்.
