Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 68

உன் ரகசிய ரசிகை நான் 68

by Layas Tamil Novel
305 views

EPISODE 68

முதல் நாள் கல்லூரிக் கனவுகளுடன் காலேஜ் பஸ்ஸில் வந்து கொண்டு இருந்தாள் ராதா… அவள் ஏறிய இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் கீர்த்தியும் ஏறிக்கொண்டாள்.

கீர்த்தி பஸ்ஸில் ஏறியதும் அவளைப் பார்த்துக் கைகாட்டி தன் இருக்கைக்கு வரச் சொல்லி சைகை செய்தாள் ராதா.

பஸ் ஏறியதும் முதல் சீட்டில் இடம் பிடித்து இருந்தாள் ராதா… கீர்த்தியும் ராதாவும் பேசிக்கொண்டு வந்தனர்.

“ராதா இன்னிக்கு நீ… ரொம்ப அழகா வந்திருக்க… இந்த ஹாப் சேரி உனக்குச் சூப்பரா இருக்கு…” என்று கீர்த்தி சொல்ல… “இன்னைக்கு மட்டும் தான் ஹாப் சேரி… நாளையில் இருந்து நான் சுடி… மாதிரி தான் போட்டுட்டு வரப் போறேன்.”

“எனக்கு நிறைய டிரஸ் துர்கா அக்கா எடுத்து கொடுத்திருக்காங்க… ஷிவுக்கும் கொடுத்தாங்க அவ வேணாம் சொல்லிட்டா… அந்த மாடர்ன் டிரஸ் எல்லாம் இருக்கு… அதையும் என்னையே போட்டுக்கச் சொன்னாங்க… எனக்கு அதை எல்லாம் எப்படி உங்கள மாதிரி ஸ்டைலா போட்டுட்டு வராதுனு தெரியலை” என்றால் ராதா.

“நீ வீட்டுக்குப் போனதும் அந்த டிரஸ் எல்லாம் எனக்கு ஃபோட்டோ எடுத்து அனுப்பு. அந்த டிரெஸ்ஸுக்கு எப்படி ஹேர்ஸ்டைல் பண்ணனும் நான் சொல்றேன்.”

“அப்படி இல்லையின்னா என் அக்கா கிட்ட கேளு அவ சூப்பரா சூஸ் பண்ணுவா…” என்றால் கீர்த்தி. “ஓகே கீர்த்தி நான் வீட்டுக்குப் போனதும் உனக்கு ஃபோட்டோ அனுப்பறேன்” என்றவள். தன் கையில் இருந்த இரண்டு கவர்களில் ஒரு கவரை கீர்த்திவிடம் நீட்டினால்.

அதைப் பார்த்த கீர்த்தி, “ஏய் என்ன இது?” என்றால் கீர்த்தி.

“திறந்து பாரு கீர்த்தி…” என்றாள் ராதா.

கவரை பிரித்துப் பார்த்த கீர்த்தி, “ஏய்.. என்ன இது டிரஸ் இருக்கே!” என்றால் கீர்த்தி..

“ஆமா கீர்த்தி. துர்கா அக்கா நிறைய டிரஸ் கொடுத்தாங்க… நான் அவ்வளவு டிரஸ் போடவா போறேன். அதனால உனக்கும், நிலானிக்கும் கொண்டு வந்தேன்.”

“நீங்க ரெண்டு பேரும் ஒரே மாதிரி தானே இருக்கீங்க… அப்போ உன்னோட சைஸ் அவங்களுக்குச் சரியா இருக்கும்னு எனக்குத் தெரியும். அதான் ரெண்டு பேருக்கும் எடுத்து வந்தேன்” என்றால்.

ராதா கொடுத்ததிற்கு மறுப்பு ஏதும் சொல்லாமல் வாங்கிக் கொண்டால் கீர்த்தி.

இவர்கள் இருவரும் கதை பேசிக்கொண்டு இருக்க… திடீர் என்று பஸ் நிறுத்தப்பட்டது. பஸ் கதவைத் திறந்து கொண்டு யாரோ வர… யாதேச்சையாக முன்னாள் இருந்த இருவரும் நிமிர்ந்து பார்க்க அங்கே சந்தோஷ் மேலே ஏறி வந்து கொண்டு இருந்தான்.

சந்தோஷைப் பார்த்ததும் தூக்கி வாரிப் போட்டது ராதாவுக்கு அன்று ஆஃபீஸ் ரூமில் முத்துவுடன் பார்த்ததோடு சரி… அதன் பிறகு சந்தோஷை மறந்தே போனாள்.

ஆனால் இப்போது இவர்கள் காலேஜ் பஸ்ஸில் பார்த்ததும் அன்று இவள் முத்துவிடம் இவனை பற்றிப் பேசியதும்… அதன் பின் சந்தோஷ் ராதாவை முறைந்ததும் இவளுக்கு நன்றாகவே நினைவில் இருக்கிறது.

இன்று வேறு இவனைப் பார்த்து விட மனதிற்குள்ளேயே புலம்பினால், “கடவுளே… இது என்ன காலேஜ் வந்த முதல் நாளே எனக்கு வந்த சோதனை… இவன் எதுக்கு இந்தப் பஸ்ஸில் ஏறணும்” என்று நினைத்தவள்… அவனையே பார்த்துக்கொண்டு அமர்ந்து இருக்க…

சந்தோஷ் உள்ளே ஏறியதும் ராதாவைப் பார்த்ததும் கடுப்பானான். இவள் எங்கே இங்கே என்று நினைத்தவன் அன்று இந்த காலேஜில் தானே அட்மிஷன் போட வந்ததாகக் கூறினால் என்று நினைத்தவன் அவளைப் பார்க்க… அவளும் அவனைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

சந்தோஷ் தன்னைப் பார்க்கிறான் என்று தெரிந்ததும் ராதா சட்டென்று தன் தலையைக் குனிந்து கொண்டாள்.

“ஐயோ… பாக்குறானே.. பாக்குறானே…” என்று புலம்ப… அவள் அருகில் இருந்த கீர்த்தி… “ஏய் ராதா இவரை தானே நீ அன்னைக்குக் கிண்டல் பண்ணி பேசிட்டு இருந்தே… இவர் எதுக்கு நம்ம காலேஜ் பஸ்ஸில் வராரு…” என்று கேட்க..

“எனக்கு என்னடீ தெரியும்… நானும் உன்கூட தானே வரேன்” என்றால் ராதா.. “நீ கொஞ்ச நேரம் பேசாம வா கீர்த்தி… அந்த ஆள் எதுவும் கேட்டுற போறான் எனக்குப் பயமா.. இருக்கு” என்றால் ராதா.

இருவரும் எதுவும் பேசாமல் அமைதியாகத் தங்கள் போனைப் பார்த்துக் கொண்டு வர… சந்தோஷ் ராதாவையே பார்த்துக் கொண்டு அங்கே டிரைவரின் பக்கத்தில் இருந்த சீட்டிலேயே அமர்ந்து கொண்டான்.

ராதா லேசாகத் தலையை நிமிர்த்திப் பார்க்க… சந்தோஷ் அவள் எதிரில் இருந்த சீட்டில் அமர்ந்து டிரைவருடன் பேசிக்கொண்டு இருந்தவன். ராதா இவனைப் பார்க்கவும் சட்டென்று திரும்பி ராதாவைப் பார்க்க….

அவன் இப்படிச் சட்டென்று பார்க்கவும் ராதாவுக்கு அதிர்ச்சி ஆகி கண்கள் அப்படியே விரிந்தது… அவள் தன்னை அப்படி கண் இமைக்காமல் பார்ப்பதைப் பார்த்த சந்தோஷ்…

ராதாவின் மை இட்ட விழிகளை ரசிக்க அவன் இறுக்கிய முகம் ராதாவின் முகத்தை ரசித்ததும் மென்மையானது… மறுபடியும் அவன் முகம் இறுகிவிட்டது.

அவன் முகத்தைப் பார்த்துப் பயந்தவள் தலையை லேசாகக் குனிந்து கொண்டு… “லூசு… லூசு.. எப்படி முறைக்குறான் பாரு… ஒரு சின்னப் பொண்ணு தெரியாம ஏதோ பேசிட்டாலே… பரவாயில்லை… சின்னப் பொண்ணு தானேன்னு கொஞ்சமாவது இரக்கம் இருக்கா.. பாரு முகத்தை உர்ருன்னு வெச்சுட்டு இருக்கான்.”

“படத்துல வர வில்லன்கள் தானே இப்படி முகத்தை எப்போ பாரு உர்ர்ருன்னு வெச்சிட்டு இருப்பாங்க… இவன் அவங்க எல்லாரையும் மிஞ்சிடுவான் போல… உம்மனாமூஞ்சி…” என்று தன் வாய்க்குள்ளேயே…. முனகிக் கொண்டாள்.

அவள் வாய்க்குள் முனகுவதை ராதாவின் உதடு அசைவை வைத்தே.. அவள் என்ன சொல்கிறாள் என்று தெரிந்ததும் முதலில் லேசாகச் சிரித்தவன் பின் தன்னை உம்மனாமூஞ்சி என்று சொன்னது தெரிந்து அவளை முறைக்க ஆரம்பித்தான்.

சிறிது நேரத்தில் காலேஜ் வந்துவிட… சந்தோஷ் இறங்கி நேராக ஆஃபீஸ் ரூமிற்குச் செல்ல… அவன் பின்னால். இறங்கிய ராதாவும், கீர்த்தியும் செல்லும் அவனையே பார்த்தவர்கள், “அப்பாடா… ஆஃபீஸ் ரூம் தானே போறான். அங்கே தானே ஏதோ வேலை போல..” என்று ராதா நினைத்துக்கொண்டே கீர்த்தியுடன் அவர்கள் டிபார்ட்மென்டிற்குச் சென்றனர்.

கிளாஸ் ரூமிற்கு வந்ததும் இவர்களுக்காகவே காத்திருந்த… நிலானி தன் கைகளை அசைத்து அவர்கள் இருவரையும் தன் அருகில் வரச் சொல்லிச் சைகை செய்ய.. நிலானியைப் பார்த்ததும் இருவரும் அவள் அருகில் சென்று அமர்ந்து கொள்ள…

மூவரும் அரட்டை அடிக்க ஆரம்பித்தனர். தான் கொண்டு வந்த ஆடையை நிலானிக்குக் கொடுத்தாள் ராதா.. நிலானி வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் விடாப்பிடியாக அவள் கையில் திணித்து விட்டு… “என்னை உன்னோட ஃபிரெண்ட்ன்னு நினைத்தால் இதை வெச்சுக்கோ.. இல்லைன்னா கொடு…. நானே வெச்சுக்கறேன்…” என்று அவள் கையில் இருந்து பேக்கை ராதா பிடுங்கப் போக… “இல்லை… இல்லை… நான் வெச்சுக்கிறேன் கொடு…” என்று வாங்கி வைத்துக்கொண்டாள் நிலானி.

சிறிது நேரத்தில் வகுப்பு தொடங்க… ஏற்கனவே அவர்களுக்கு ஹெச்ஓடி ஆக இருந்த ஸ்டாப்… உள்ளே வந்தார்… அவரைப் பார்த்து கீர்த்தி, “இவர் தான் எங்க டிபார்ட்மென்ட் ஹெச்ஓடி” என்றால்.

உள்ளே வந்த அவர் வாசலைப் பார்த்து, “வாங்க சார்” என்று அழைக்க… அனைவரும் வாசலைப் பார்க்க… அவர்கள் கிளாஸின் உள்ளே… வந்தான் சந்தோஷ்… ஆண்களும் பெண்களும் அவனையே ஆச்சர்யமாகப் பார்க்க… உள்ளே வந்த சந்தோஷை… “இவர் தான் இனிமேல் உங்க டிபார்ட்மென்டிற்கு ஹெச்ஓடி…” என்று அறிமுகம் செய்து வைத்தார்.

பெண்கள் எல்லாம் இவ்வளவு ஹேண்ட்சமாக ஹெச்ஓடியைப் பார்த்ததும் எழுந்து நின்று அவனைப் பார்த்து ஓஹோ…. என்று கத்த…

ஆண்கள் அனைவரும் அவன் உடற்கட்டை பார்த்து வாய் பிளந்தவாறு அமர்ந்து இருந்தவர்கள்… பெண்கள் கத்தவும்… ஆண்கள் அனைவரும் சந்தோஷை வரவேற்கும் விதமாக எழுந்து நின்று கை தட்டினர்.

அனைவரும் அவனைச் சந்தோசமாக வரவேற்க… இங்கே ஒருத்தி மட்டும் இவனைப் பார்த்ததில் இருந்து பயந்து நடுங்கினாள்… “ஐயோ… இவன் என்ன என் டிபார்ட்மென்டில் ஹெச்ஓடி யாக வர வேண்டுமா… கடவுளே… இப்படி என் காலை வாரி விட்டாயே…” என்று கடவுளுடன் சண்டை இட்டுக் கொண்டு இருந்தாள்.

சந்தோஷை அறிமுகம் செய்து வைத்துவிட்டு பழைய ஸ்டாப் சென்றுவிட… சந்தோஷ் அனைவரையும் அமரச் சொல்லிவிட்டுத் தன்னை அறிமுகம் செய்தவன் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தச் சொல்லிவிட்டு அங்கே இருந்த டேபிளில் சாய்ந்து நின்று கொண்டான்.

ஒவ்வொருவராக தங்களை அறிமுகம் செய்ய… கீர்த்திகா… நிலானியை அடுத்து ராதா எழுந்து நின்றாள்… அவளைப் பார்த்ததும் அவ்வளவு நேரம் நார்மலாக இருந்த சந்தோஷ்… கடுப்பானான்.

ராதா எழுந்து நின்று எதுவும் பேசாமல் இருந்தாள். அவள் எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க… நிலாணியும், கீர்த்தியும் ராதாவைப் பேச சொல்லிச் சைகை செய்ய… அனைவரும் ராதாவையே பார்த்தனர்.

அவள் சந்தோஷைப் பார்த்ததில் இருந்து பயந்து நடுங்கிக் கொண்டு இருந்தாள். சந்தோஷ் அவள் எதுவும் பேசாமல் நின்று இருப்பதைப் பார்த்தவன். கடுப்பாக… “ஹலோ மிஸ்…. எல்லாரும் அவங்களை அறிமுகம் செய்துகொண்டனர்.”

“நீங்க எல்லோருடையை நேரத்தையும் வேஸ்ட் பண்றீங்க சீக்கிரம் சொல்லிட்டு உக்காருங்கள்” என்று அதட்ட….

அவன் அதட்டவும் அதிர்ந்த ராதா….

“என் பெயர் ராதா…”

“நான் செகண்ட் இயர் இந்த காலேஜில் இன்று தான் ஜாயிண்ட் பண்ணினேன்.”

“+2 வில் எங்க டிஸ்ட்ரிக்ட்யில் நான் தான் ஸ்டேட் ஃபஸ்ட்” என்றாள்.. அவளைப் புருவம் உயர்த்திப் பார்த்தவன் அவளிடம் அவள் ஹாபி என்ன.. என்ன எல்லாம் பிடிக்கும்… பிடிக்காது என்று நிறைய கேள்விகளை கேட்டான்..

மற்ற யாரிடமும் கேட்காமல் ராதாவிடம் மட்டும் நிறைய கேள்விகள் கேட்டான்.

இதை எல்லாம் கவனித்த மற்ற மாணவர்கள் அதிசயம் போலக் கேட்டுக் கொண்டு இருந்தனர். தனக்கு வேண்டிய தகவல்களை எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்ட பின்பு தான் அவளை உட்காரச் சொன்னான்.

இன்று முதல் நாள் வகுப்பு என்றதால் பாடம் நடத்தாமல் மாணவர்களுடன் சகஜமாகப் பேசி அன்றைய வகுப்பை முடித்து விட்டு ஸ்டாப் ரூமிற்குச் சென்றான்.

ஸ்டாப் ரூம் செல்லும் பொழுது ராதாவைப் பார்த்து ஸ்டாப் ரூம் வா… என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

அவன் சென்றதும் ஸ்டாப் ரூம். செல்லாமல் அமர்ந்து இருந்த ராதாவை கீர்த்தி, “ஏய்… நீ சார்றை பார்க்கப் போகலையா… அவர் சொல்லிட்டுப் போய் ரொம்ப நேரம் ஆச்சு…” என்று சொல்லி ராதாவை. போகச் சொல்ல.

“ஏய் கீர்த்தி எனக்கு அவனைப் பார்க்கப் போகப் பயமா… இருக்குடீ… அன்னிக்கே நீ பார்த்தேல்ல நான் அவனை கிண்டல் பண்ணிட்டேன்னு என்னை எப்படி முறைச்சான்னு… அந்த கோபம் அவனுக்கு இன்னும் கண்டிப்பா இருக்கும். அதனால தான் என்னை தனியா வரச் சொல்லிட்டுப் போறான் நான் போகலை” என்று அழுவது போல முகத்தை வைத்துக்கொண்டு சொல்லிவிட்டுச் சந்தோஷை பார்க்கப் போகவே இல்லை ராதா…

அவளிடம் நிலானியும், கீர்த்தியும் எவ்வளவோ சொல்லியும் ராதா சந்தோஷிற்குப் பயந்து கொண்டு போகவே இல்லை.

ராதாவை வரச் சொல்லியும் அவள் வெகு நேரம் ஆகியும் வராமல் போகவே… தான் சொல்லியும் கேட்காமல் தன்னைப் பார்க்க ராதா வராமல் போகவும் ஆத்திரம் அவன் தலைக்கு மேலே ஏறிவிட்டது. நேராக எழுந்து அவள் கிளாசிற்கு கோபத்துடன் கிளம்பினான் சந்தோஷ்.

சங்கவி துர்காவை வேண்டாம் என்று சொல்லிவிட்டு அவளுக்குப் பதிலாகத் தானே மாடலிங் செய்வதாகக் கூறி ரெடி ஆகச் சென்றால்.

துர்காவை தனக்குத் தேவையானவற்றைச் செய்ய… வரச் சொல்லிவிட்டு சாரா இருந்த அறைக்குச் சென்றால்.

துர்காவை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருந்த சாரா… கதவு திறக்கும் சத்தம் கேட்க… துர்கா தான் வருகிறாள் என்று நினைத்துப் பார்க்க… அங்கே சங்கவி உள்ளே வர அவள் பின்னே சங்கவி சொல்வதற்கு எல்லாம் தலையை ஆட்டிக்கொண்டு வந்தாள் துர்கா..

சங்கவி நேராகச் சென்று மேக் அப் செய்யும் சேரில் சென்று அமர்ந்து கொள்ள… அவர்களுக்காக வரவழைக்கப் பட்ட மேக் அப் கலைஞர் சாராவுக்கு முடித்து விட்டுச் சங்கவிக்கு மேக் அப் செய்ய ஆரம்பித்தனர்.

இதையெல்லாம் பார்த்த சாரா… துர்காவைப் பார்க்க… அவள் வேலையில் தீவிரமாக இருந்தாள்.

ஷோவிற்கான நேரம் நெருங்கவும் அனைத்து மாடல்களும் தயாராக இருக்கிறார்களா.. என்று சரிபார்க்க துர்கா இங்கேயும் அங்கேயும் ஓடி ஓடி வேலை பார்த்துக் கொண்டு இருந்தாள்.

யார் யாருக்கு என்ன தேவை என்று பார்த்து பார்த்துச் செய்தால். விக்கிக்கும், கதிருக்கும் துர்காவை இப்படிப் பார்க்க மிகவும் கஷ்டமாக இருந்தது..

சங்கவி மேக் அப் ஆர்ட்டிஸ்ட் இடம் வேலை வாங்குகிறேன் என்று அவர்களைப் போட்டுப் பாடாய்படுத்தி விட்டால்.

அவளுக்கு மேக் அப் முடித்து விட்டு அவர்கள் விட்டால் போதும் என்று அங்கிருந்து அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்று விட்டனர்.

சங்கவி துர்காவை அழைத்து இது சரி இல்லை அது சரி இல்லை என்று அவளிடம் புகார் சொல்லிக் கொண்டே இருந்தாள்.

இதை எல்லாம் பார்த்த சாராவுக்கே கடுப்பாக இருந்தது. இதை எல்லாம் விட சங்கவி துர்காவிடம் சொல்லி அந்த பாக்ஸை எடுத்து வா… என்றால் சங்கவி. சொன்ன பாக்ஸை எடுத்து வந்து அவளிடம் நீட்ட…

“இதை என்ன என் கையில் கொண்டு வந்து கொடுக்கவா எடுத்து வரச் சொன்னேன். அதில் இருப்பதை எடுத்து எனக்குப் போட்டு விடு” என்றால் சங்கவி.

துர்காவும் அந்த பாக்ஸைத் திறந்து பார்க்க… அதில் ஒரு ஜோடிக் காலனிகள் இருந்தது. அதைப் பார்த்ததும் ஒரு நிமிடம் துர்கா அப்படியே நிற்க… பின் அந்த காலனிகளை எடுத்துச் சங்கவியின் காலுக்குக் கீழே வைக்க…

சேரில் சாவதானமாக அமர்ந்து இருந்த சங்கவி, “என்ன பார்த்துட்டு இருக்கே போட்டு விடு” என்று துர்காவின் முகத்தருகே அவள் காலை நீட்ட….

துர்கா எதுவும் சொல்லாமல் சங்கவிக்கு இரண்டு காலிலும் காலனிகளை மாட்டி விட்டாள்.

அவன் தனது காலைப் பிடித்து மாட்டி விட அதைப் பார்த்துக் கொண்டு இருந்த சங்கவி உளுக்குள், “ஏய் துர்கா நீ எப்பவும் என் காலிற்குக் கீழே தானே இருக்கனும். அந்த ஆதியை கல்யாணம் பண்ணிக்கிட்டா நீ பெரிய ஆளா ஆகிடுவியா.. என்ன” என்று நினைத்துத் தன் மனதிற்குள்ளேயே துர்காவை வஞ்சகமாக எண்ணிக்கொண்டு இருந்தாள்.

துர்கா சங்கவியிடம், “உன்னுடைய காலணி சரியாக இருக்கிறதா இல்லையா என்று ஒரு முறை நடந்து பார்த்துக் கொள்… இல்லை என்றால் மேடை ஏறும்போது எதுவும் பிரச்சனை ஆகி விடும்” என்று சொன்னாள். “எனக்கு எல்லாம் தெரியும் உன் வேலையை மட்டும் நீ பார்” என்றால் சங்கவி.

இதை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த சாராவும், தூரத்தில் இருந்து இதைப் பார்த்துக் கொண்டு இருந்த விக்கியும், கதிரும் சங்கவியின் மேல் பயங்கர கோபம் கொண்டனர்.

சாராவினால் எதுவும் செய்ய முடியாத நிலை. துர்காவிடம் அவள் நல்ல முறையில் நடந்து கொண்டாலும். மற்றொரு மாடலின் விஷயத்தில் தலையிடக் கூடாது என்று அமைதியாகி விட்டாள்.

கதிர் இந்தக் காட்சியைக் கண்டு கோபம் கொண்டு சங்கவியிடம் சண்டை இட அங்கிருந்து செல்லப் போக… விக்கி அவன் கையைப் பிடித்து நிறுத்தியவன், “இப்போதைக்கு எதுவும் செய்யாமல் அமைதியாக இரு ஷோ ஆரம்பித்துவிட்டது” என்று கதிரை அங்கிருந்து வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றான்.


ஷோ ஆரம்பித்துவிட… அனைத்து மாடல்களும் ஒவ்வொருவராக ஸ்டேஜிற்குச் செல்ல ஆரம்பித்தனர். இங்கே டென்மார்க்கில் இருந்து கொண்டு இந்த முக்கியமான ஷோவைத் தன் புது கிளையன்ட்களுடன் பார்த்துக் கொண்டு இருந்தான் ஆதி.

இந்த ஷோ உலக அளவில் ஆதியின் பிராண்டை மேலும் முன்னேறிச் செல்ல உதவும் முக்கியமான ஷோ இது.

இதில் ஒரு சிறு தவறு கூட வராமல் பார்த்துக் கொள்ள மிகவும் தீவிரமாக வேலை செய்து கொண்டு இருந்தனர் ஆதியின் நிறுவனத்தில் வேலை செய்த அனைவரும் இரவு பகல் பாராமல் கடந்த இரண்டு மாதங்களாக வேலை செய்கின்றனர்.

டென்மார்க்கில் தீ விபத்து மட்டும் நடக்காமல் இருந்து இருந்தாள் ஆதியும் இங்கு இருந்திருப்பான்.

ஷோ ஆரம்பித்து இதுவரை அவன் பிராண்டிற்கான பங்களிப்புகள் அனைவர்க்கும் பிடித்துப் போய் இருந்தது.

உலக நாடுகளில் இருந்து பெரிய பெரிய ஃபேஷன் பத்திரிகைகளும்… பெரிய டிவி சேனல்களும் வந்து இருந்தனர். இந்த நிகழ்ச்சி உலக அளவில் ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்க…

இப்போது வரை வந்த மாடல்கள் எல்லாம் ஆன்லைனில் விற்று விட்டதோடு அல்லாமல் ப்ரீ ஆர்டர்கள் வந்து குவிந்துவிட்டது.

ஆர்டர்கள் இதற்கு மேல் எடுக்க முடியாமல் அவர்கள் கொள்முதல் செய்து வைத்ததை விட அதிகம் வந்துவிட அப்படியே நிறுத்தி வைத்து இருந்தனர்.

அடுத்து இரண்டு முக்கிய ஆடைகளின் அணிவகுப்பு நடக்கப் போகிறது. இந்த ஆடையின் ஸ்டைலை பார்ப்பதற்கும், அதன் வடிவமைப்பை பார்ப்பதற்காகவும் மிகவும் ஆர்வமாகப் பார்த்துக் கொண்டு இருந்தனர் அந்த நிகழ்ச்சியில் பங்குகொண்டிருந்த முக்கிய கலைஞர்களும், அதைப் பார்த்துக் கொண்டு இருந்த மக்களும்.

துர்கா சங்கவியிடம், “உன்னுடைய ஹீல்ஸ் சரியாக இல்லாத மாதிரி இருக்கிறது. நீ கொஞ்சம் நான் சொல்வதைக் கேள்..” என்றவள் தன் கையில் வைத்திருந்த காலணிகளை சங்கவியிடம் கொடுத்து, “இதை அணிந்து கொள்ள” சொல்ல… துர்கா எதுவும் தப்பாக நடந்து விடக்கூடாது என்று கடவுளிடம் வேண்டி விட்டு. சாராவை கவனிக்கச் சென்று விட்டாள்.

சங்கவி மேடை ஏறிய சில நிமிடங்களில் அவள் பின்னால் சாராவும் மேடை ஏற வேண்டும்.

இவர்கள் இருவரும் மேடை ஏறுவதற்காக விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டு பாடல் ஒலிக்க…. ஆரம்பித்தது….

முதலில் மேடை ஏறிய சங்கவி ஒரு நிமிடம் நின்றவள் பின் ராம்ப் வாக் செய்ய ஆரம்பித்தாள். சங்கவி மேடை ஏறியதும் அவள் மீது மட்டும் விளக்கு ஒளி படரும் படி வைத்திருக்க… அவள் நடந்து செல்லும்போது விளக்கும் அவளைத் தொடர்வது போல அமைக்கப்பட்டு இருந்தது.

கீழிருந்து மேலாக அவள் ஆடையை வெளிச்சத்தில் அங்குலம் அங்குலமாக அதில் அமைக்கப்பட்டிருந்த டிசைனை காட்டிக்கொண்டு வந்தது.

நெருப்பு வண்ண நிற ஆடை விளக்கு ஒளியில் அங்குலம் அங்குலமாக ஜொலிக்க ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக விளக்கு ஒளி அதிகரிக்க…

சங்கவியை மொத்தமாக அந்த விளக்கு ஒளியில் காட்ட…. டென்மார்க்கில் இருந்து நேரலையில் பார்த்துக் கொண்டு இருந்த ஆதி சங்கவியைப் மேடையில் பார்த்ததும் அதிர்ச்சி ஆனவன் அவள் மேடையில் சரியாக நடக்காமல் ஆடிக்கொண்டே நடந்து வந்து கொண்டு இருந்தாள்.

ஆதி தன் மொபைலை எடுத்து கதிருக்கு அழைக்க…. அவன் மொபைலை சைலன்ட்யில் போட்டு வீட்டிருந்ததால் போனை எடுக்க வில்லை.

பின் விக்கிக்கு அழைக்க… அவன் இரண்டு மூன்று ரிங்கில் எடுத்திருந்தான். விக்கி போனை எடுத்ததும் “சொல்லு ஆதி” என்று கேட்க….

“அங்கே என்ன நடந்து கொண்டு இருக்கிறது விக்கி” என்றான் கடும் கோபத்தில். “ஆதி அது வந்து….” என்று விக்கி பேச தடுமாற….

“என்ன விக்கி என்ன ஆச்சு ஏன் சங்கவி மேடையில் இருக்கிறாள்” என்றான். “அது வந்து…” என்று விக்கி இழுக்க…. “அதை பிறகு நான் தெரிந்து கொள்கிறேன்… நீ முதலில் மேடைக்குப் போ…. அங்கே சங்கவி ஏதோ சொதப்புகிறாள்… அவளால் எதுவும் பிரச்சனை ஆகப்போகிறது” என்று ஆதி விக்கியை அவசரப்படுத்த….

“என்ன சொல்ற ஆதி எனக்குப் புரியலை” என்றான் விக்கி. “நீ முதலில் மேடைக்குப் போ…” என்று போனை வைத்தான். ஆதி சொன்னதும் விக்கி நேராக மேடைக்கு ஓடினான்.

போனை வைத்து விட்டு ஆதி டிவியில் என்ன நடக்கிறது என்று பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தான்.

ஸ்டேஜில் முதலில் சங்கவி நன்றாக நடந்து வந்து கொண்டு இருக்க …. திடீர் என்று அவள் அணிந்திருந்த ஹீல்ஸ் உடைந்து விட…. மேடையில் அப்படியே தடுமாறி… கீழே விழப் போனாள் சங்கவி….

அவள் கால் இடறிக் கீழே விழும் சமயம் அவளைக் கீழே விழாமல் ஒரு கரம் வந்து பிடித்துக்கொண்டது…. தன்னைச் சுதாரித்துக் கொண்டு எழுந்து நின்ற சங்கவி தன் காலில் இருந்த ஹீல்ஸைப் பார்க்க அது ஒரு புறம் உடைந்து போய் இருந்தது.

ஹீல்ஸ் உடைந்த ஆத்திரத்தில் இருந்த சங்கவி தன்னைத் தாங்கிப் பிடித்திருந்தது யார் என்று நிமிர்ந்து தனக்கு எதிரே இருந்தவரைப் பார்க்க… அப்படியே அதிர்ச்சியில் சங்கவி உறைந்து போய் நின்றாள்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured