Home Uncategorizedஅவளை உன் பக்கத்துலையே வெச்சுக்கோ மூர்க்கன் 47

அவளை உன் பக்கத்துலையே வெச்சுக்கோ மூர்க்கன் 47

by Layas Tamil Novel
11 views

மூர்க்கன் 47

“டேய் ஈஸ்வர்! இது மோகனோட இடம் தானே.. இங்க ஏன் டா என்னை வர சொன்ன.. ” என்று ஈஸ்வர் அனுப்பிய லொகேஷனுக்கு வந்து தன் காரை நிறுத்தி இருந்த ராஜ் போனில் அழைத்து அவனிடம் கேட்டான்.

“ஆமா டா.. சீக்கிரம் உள்ள வா.. ” என்று போனை கட் செய்திருந்தான் ஈஸ்வர்.

“என்ன ஆச்சு இவனுக்கு, ஊருக்கு வந்ததையும் சொல்லல.. இங்க வந்தவன் நேரா எதுக்கு இந்த மோகனை பார்க்க வந்திருக்கான்” என்று யோசனையோடு இறங்கியவன் வாசலில் கைகால்களில் காயங்களோடு சரிந்து சேரில் அமர்ந்து இருந்த செக்கியூரிட்டியை பார்த்ததுமே அவனுக்கு ஏதோ புரிந்தது போல தோன்ற.. வேகமாக வீட்டிற்குள் நுழைந்தான் ராஜ்.

அங்கே அவன் கண்ட காட்சி ராஜ்ஜினால் நம்பவே முடியவில்லை. அந்த இடமே அலங்கோலமாக இருக்க.. ஈஸ்வர் அமர்ந்து இருந்த கோலமே அவனுக்கு அங்கே மிகப்பெரிய கலவரம் ஒன்று நடந்து முடிந்திருக்கிறது என்று புரிந்து போனது. அவன் அமர்ந்து இருந்த கோலம் அப்படி … ஈஸ்வர் அங்கிருந்த சோபாவில் முகம், சட்டை என ரத்த கரைகளுடன் அமர்ந்து இருந்தான். அவன் மடியில் மித்ரா தலை வைத்து கண்மூடி அமைதியாக உறங்கிக்கொண்டு இருந்தாள்.

“டேய் ஈஸ்வர் இந்தா டா டீ கேட்டியே.. இந்த வீட்ல எது எங்க வெச்சிருந்தாங்கன்னு கண்டுபிடிச்சு ஒரு டீ போட்டுட்டு வரதுக்குள்ள போதும்னு ஆகிருச்சு டா.. ” என்று டீயை ஆற்றிக்கொண்டே அங்கிருந்த கிச்சனுக்குள் இருந்து வந்தார் பார்வதி,

என்ன டா நடக்குது இங்க.. என்ற ரீதியில்  அவர்களை அதிர்வோடு பார்த்தவன். “ஏ அத்தை .. எங்க வந்து யார் வீட்டு கிச்சன்ல டீ போட்டுட்டு இருக்க நீ… இது யார் வீடுன்னு தெரியுமா உனக்கு. அந்த மோகனும், அவ அக்காவும் மட்டும் இங்க நடக்குறதை பார்த்தா அவ்ளோ தான், அப்பறோம் அந்த லேப் எலியோட சேர்த்து உங்களையும் பிடிச்சு வெச்சிருவா.. ” என்றான் ராஜ்.

“யாரு? .. அந்த சொங்கிப்பய மோகனா?” என்று நக்கலடித்தவர் டீயை ஈஸ்வர் கையில் கொடுத்துவிட்டு அவன் அருகே சாவதானமாக அமர்ந்தவர் “அந்த ரூமுக்குள்ள போய் பாரு..” என்றார்.

அவர் காட்டிய அறையை பார்த்துவிட்டு ஈஸ்வரை பார்த்தான் ராஜ்.

“அவன் உயிரோட இருக்கானா? இல்லையான்னு தெரியல.. நீ செக் பண்ணிடு” என்றான் பார்வதி தந்த டீயை அருந்திக்கொண்டே..

மேலும் அதிர்ந்த ராஜ் வேகமாக அவர்கள் கட்டிய அறைக்குள் வேகமாக சென்றான்.

அது ராஜ்ஜின் படுக்கை அறை தான். அங்கே கட்டிலில் உடல் இருக்க.. தலைகீழாக சரிந்த நிலையில் தரையில் தலை தொங்கிப்போய் கிடந்தான் மிகன், அவன் உடல் முழுதும் ரத்தம் வலிந்து இருந்தது. அவனை அப்படி பார்த்தவன் வேகமாக அவன் அருகே வந்த ராஜ் அவன் உயரத்திற்கு குனிந்து பார்த்தான்.

மோகன் முகத்தில் ஈயாடவில்லை, “என்ன டா பண்ணி வெச்சிருக்க இவனை.. ” என்று புலம்பிக்கொண்டே மண்டி இட்டு அமர்ந்தவன் மோகன் முகத்தருகே தன் கையை கொண்டு சென்று அவன் நாசியில் விரலை வைத்து மூச்சு இருக்கிறதா என்று பார்த்தான்.

அவன் உயிரோடு இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. “ஐயோ! செத்துட்டானா?” என்று அதிர்ந்து எழுந்த ராஜ் வேகமாக அந்த அறையை விட்டு வெளியேறி இருந்தான்.

டீயை குடித்து முடித்திருந்த ஈஸ்வர் அங்கே தன் மடியில் படுத்திருந்த மித்ராவை எழுப்பிக்கொண்டிருந்தான்.

“மித்து … டேய் .. எழுந்திரு.. நாம வீட்டுக்கு போகலாம்” என்றான்.

“ம்ம்.. ஈஸ்வர் நான் இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறேனே.. எனக்கு தூக்கம் வருது என்று அவன் இடையை தன் இருகைகளாலும் வளைத்து கிடுக்கிப்பிடி போட்டு பிடித்துக்கொண்டவள் அவன் வயிற்றுக்குள் தன் முகத்தை புதைத்தாள்,

“டேய் என்ன பிக்னிக்கா எல்லாரும் வந்திருக்கீங்க.. அந்த மோகனை சாவடிச்சிட்டு இங்க சாவகாசமா உக்காந்து    டீ குடிச்சிட்டு இருக்க… அவ எங்க டா.. ” என்று அந்த இடத்தை ஆராயத்துவங்கினான் ராஜ்.

“யாரு?” என்றபடி மித்ராவின் தலையை மென்மையாக வருடிக்கொண்டே கேட்டான் ஈஸ்வர்.

“அந்த மோகனோட அக்கா அதான் அந்த ரக்ஷணா.. அவ எங்க டா . அவளையும் கொன்னுட்டியா?” என்று அங்கே இருந்த அறை முழுதும் தேடினான். யாரும் அங்கே இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

அங்கேயே மற்றொரு அறை இருக்க.. அதை திறக்கப் போனவன் திரும்பி ஈஸ்வரை பார்த்தான்.

அவனோ இதற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்ற ரீதியில் மென்மையாக மித்ராவை எழுப்பிக்கொண்டிருந்தான்.

அவனை முறித்துக்கொண்டு அந்த அறையை திறந்துகொண்டு உள்ளே சென்றவன் அது ஒரு வாயில் போல இருந்தது.. அந்த இடத்தில இருந்து மற்றொரு அறைக்கு செல்ல வழி இருக்க.. அங்கே சென்றவன் அது ரக்ஷணா பயன்படுத்தும் லேப் என்று பார்த்ததுமே புரிந்து கொண்டான்.

அது முற்றிலுமாக சேதப்படுத்தப்பட்டு இருந்தது. அதுவும் ஈஸ்வரின் வேலையாக தான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டவன் அந்த லேப் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றான்.

“இங்க வெச்சு தான் மித்ராவோட வாழ்க்கையை நாசம் பண்ணினாங்க இவங்க ரெண்டு பேரும், அவங்களுக்கு இது தேவை தான் ” என்று நினைத்தவன் திரும்பி வெளியே செல்லப்போக.. அப்போது அங்கே இருந்த கண்ணாடி குடுவை கீழே விழுந்து நொறுங்கியது,

வேகமாக சத்தம் வந்த திசையில் திரும்பி பார்த்தவன் அங்கே அருகே சென்று பார்த்தான். அந்த டேபிளில்  இருந்து கீழே விழுந்திருந்த குடுவையையும் பார்த்தான். இது படி இங்க இருந்து விழுந்திருக்கும் என்று நினைத்துக்கொண்டே சட்டென குனிந்து டேபிளுக்கு கீழே பார்க்க.. அங்கே ஒளிந்திருந்த ரம்யா ராஜ்ஜை பார்த்ததும் தான் கையும், களவுமாக மாட்டிகொண்டோமே என்று தன் நிலை நினைத்து நொந்து கொண்டவள் அவனை இறைஞ்சும் பார்வை பார்க்க..

“ஹேய்! நீ யாரு? இங்க என்ன பண்ற?” என்றான் அவளை வெளியே வரும்படி சைகை காட்டிக்கொண்டே..

“சார்.. நான்.. அது வந்து.. நான் இங்க வேலை தான் பாக்குறேன் சார், மத்தபடி எனக்கும் இங்க நடக்குற எதுக்கும் சம்மந்தம் இல்ல..” என்று தன்னிலை வாக்குமூலம் கொடுத்தாள் ரம்யா.

“ஓஹோ!.. நீ இங்க வேலை பாக்கறியா?” என்றவன் சட்டென ஏதோ நினைவு வந்தவனாக “உன் பேரு ரம்யா தானே.. ” என்றான்.

அவளும் ஆச்சர்யமாக அவனை பார்த்தவள் “சார் என் பேரு எப்படி உங்களுக்கு தெரியும்.. ” என்று கேட்டாள்.

“கயல் தெரியுமா உனக்கு.. ” என்றான் நக்கலாக.

“தெ ..தெரியும் சார்..” என்றாள் நடுங்கிக்கொண்டே..

“அவளை அந்த ரக்ஷணாகிட்ட.. போட்டு கொடுத்தது நீ தானே.. ” என்றான் கோபமாக.

அவளோ அமைதியாக நிற்க..

“நல்லா வசமா தான் மாட்டிருக்க.. ” என்றவன் “வெளிய வா.. ” என்று லேப்பை விட்டு வெளியேறி இருக்க.. அவன் பின்னால் தான் வசமாக மாட்டிக்கொண்டதை எண்ணி நொந்துகொண்டே சென்றாள் ரம்யா.

“டேய் நாங்க அத்தையை பார்க்க போறோம்., நீ இங்க இருந்து எந்த தடயமும் இல்லாம எல்லா வேலையும் முடிச்சிட்டு வந்திரு.. ” என்றான் ஈஸ்வர்.

“பாவம் செய்றது நீ அதை அழிக்குறது நானா.. “என்றான்.

“டேய் என் புள்ள என்ன டா பாவம் பண்ணினான். அவன் நல்லது தானே பண்ணிருக்கான். மித்ராவை இந்த நிலைக்கு ஆளாகினவனை பார்த்துட்டு சும்மா விட்டு வைக்க முடியுமா. அதான் இந்தியா வந்ததும் உங்களை பார்க்க கூட வராம நாங்க இங்க வந்தோம் ” என்றார் பார்வதி.

“நீ எல்லாம் ஒரு தாயா.. அவன் தான் வந்ததும் வராததுமா நிதானம் இல்லாம நடந்துக்கறான்னா நீயும் அவனுக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்க அத்தை . இது நல்லாவா இருக்கு ” என்றான் அவரை முறைத்துக்கொண்டே..

அவனை முறைத்த பார்வதி “உன் தங்கச்சி படுற பாட்டை பக்கத்துல இருந்து பார்த்திருந்தா நீ இப்படி பேச மாட்ட .. ” என்றவர் ஈஸ்வரின் தோளில் சாய்ந்து இருந்த மித்ராவை ஒரு கணம் பார்த்துவிட்டு அவர் வெளியேறி இருந்தார்.

“கார் கீ.. ” என்று ராஜ்ஜை நோக்கி கையை நீட்டினான்.

“ஈஸ்வர் இவங்க ரெண்டு பேரும் யாரு? நம்மளை மாதிரி அவங்களும் கல்யாணம் பண்ணிகிட்டாங்களா?” என்றாள் மித்ரா.

“எது.. ” என்று ராஜ் அதிர்ந்து தன் பின்னால் இருந்த ரம்யாவைப் பார்க்க..

“ஐயோ! இல்ல மித்ரா இவர் யாருன்னே எனக்கு தெரியாது” என்று வேகமாக முன்வந்தாள் ரம்யா.

“மித்ரா!” என்று புருவம் சுருக்கிய ஈஸ்வர் “இவளை உனக்கு தெரியுமா?” என்றான்.

“ஏன் தெரியாது டா.. நம்ம மித்ராவை அந்த ரக்ஷணா டோர்சேர் பண்றதுக்கு ஹெல்ப் பண்ணினதே இவ தானே.. ” என்றான்.

“இங்க வா.. ” என்றான் ரம்யாவை .

அவளோ சற்று நடுங்கிக்கொண்டே ஈஸ்வர் முன் வந்து நின்றாள்.

அவளை ஆழமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு “மித்ரா இப்போ பழசை எல்லாம் மறந்துட்டு இருக்கா.. அதுக்கு காரணம் அவளுக்கு நீங்க கொடுத்த போதை பொருள் தான்” என்றான்.

“ஹையோ! நான் கொடுக்கல சார். ரக்ஷணா மேடம் தான்.. ” என்று இழுத்தாள்.

“சரி நீ அவகிட்ட தானே வேளைக்கு இருக்க.. ” என்றான்.

“ம்ம்.. ஆமா ” என்றாள் தலையை கவிழ்த்துக்கொண்டே..

“அப்போ அவ செய்யுற வேலை எல்லாம் உனக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கும் ” என்றான் ஈஸ்வர்.

“ம்ம்.. ஆமா ” என்றாள் அதுக்கும்.

“அப்போ மித்ராவுக்கு கொடுத்த போதை மருந்துக்கு மாத்து மருந்து கண்டுபிடிச்சிருக்குறதும் உனக்கு தெரியும்னு நினைக்குறேன்” என்றான்.

“ம்ஹும்.. இல்ல சார் எனக்கு தெரியாது” என்றாள் வேகமாக.

“சரி அப்போ அந்த மோகன்கூட சேர்த்து இவளை புதைச்சிறு ராஜ்.. ” என்றான் சிறிதும் யோசிக்காமல்.

“ஐயோ! சார்.. நான் .. நான் என்னை விட்ருங்க.. ” என்று அங்கிருந்து நழுவி செல்ல பார்த்தாள் ரம்யா.

“எங்க ஓடுற..” என்று அவள் கையை பற்றி இழுத்து ஈஸ்வர் முன் நிப்பாட்டினான் ராஜ்,.

“அந்த மருந்து எனக்கு வேணும் இப்போவே.. ” என்றான்.

“சார் அது வந்து.. ” என்று ரம்யா தயங்க..

சற்றும் யோசிக்காமல் தன் பாக்கெட்டில் இவ்வளவு நேரம் மறைத்து வைத்திருந்த பிஸ்டலை ரம்யாவின் நெற்றிப்பொட்டில் வைத்தவன் “எனக்கு மருந்து வேணும்” என்றான் ஒவொரு வார்த்தையிலும் அழுத்தம் கூட்டி .

“ஐ!.. ஈஸ்வர்.. துப்பாக்கியா.. என்கிட்டே குடு.. ” என்று அவன் கையில் இருந்த துப்பாக்கியை மித்ரா கை நீட்டி கேட்க..

அவள் கையில் துப்பாக்கியை வைத்து அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தவன் மித்ராவின் கையில் இருந்த துப்பாக்கியைப் பிடித்து ரம்யாவின் நெற்றிப்பொட்டில் வைத்தவள் “மித்து நான் அஞ்சு எண்ணுவேன். அதுக்குள்ள உனக்கு கொடுக்க வேண்டிய மருந்து எங்க இருக்குன்னு இவ சொல்லலையின்னா யோசிக்காம சுற்று இவளை ” என்று அவள் பின்னால் நின்று இரு கைகளையும் கட்டிக்கொண்டு ரம்யாவை அழுத்தமாக பார்த்தான்.

“சார்! வேணாம் ப்ளீஸ்.. என்னை விட்ருங்க.. என்னை நம்பி என் குடும்பம் இருக்கு.. ” என்று கண்ணீரோடு அவனை பார்த்தாள்.

“மருந்தை கொடுத்துட்டா உயிரோட போய்டலாம்.. ” என்றவன் “ஒன்.. ” என்றான்.

மித்ராவோ துப்பாக்கியை இயக்குவதற்கு ஆரவமாக இருக்க..

“சார்.. ” என்றாள் ரம்யா கெஞ்சுதலோடு..

“ஏன்மா அந்த மருந்து எங்க இருக்குன்னு சொல்லிட வேண்டியது தானே.. அவன் கேட்டது கிடைக்கலையினா சொன்னதை செஞ்சிருவான்” என்றான் ராஜ்.

“டூ.. ” என்றான் ஈஸ்வர்.

“ஈஸ்வர் பைவ் வேணாம், த்ரீ சொன்னதும் சூட் பண்ணட்டுமா?” என்றாள் ஆர்வமாக,

“இவ என்ன இவ்ளோ ஆர்வமா இருக்கா இவ … ” என்று நினைத்த ராஜ், “மித்து சுட்டா அவ செத்திருவா.. ” என்றான்.

“உன் பொண்டாட்டி செத்துப்போயிருவான்னு உனக்கு பயமா இருக்கா?” என்றாள் அவள்.

“பொண்டாட்டியா!? ” என்றவன் “என்னவோ பண்ணு.. ” என்று கையை விரித்துவிட..

“மித்து ரெடியா? ” என்று அவள் கவனத்தை தன் பக்கம் திருப்பி இருந்தான் ஈஸ்வர்.

“ம்ம்.. ரெடி ஈஸ்வர் நீ 3 சொல்லு நான் சூட் பண்றேன்” என்று துப்பாக்கியை ரம்யாவின் நெற்றிப்பொட்டில் வைத்தாள்.

“ஹேய்.. இரு நான் சொல்லிடறேன்.. ” என்று ரம்யா பதறியவள் “சார் நானே அந்த மருந்தை அடுத்து தரேன்.. ” என்று வேகமாக லேபிற்குள் ஓடியவள் இரண்டு பாட்டில்களை கொண்டு வந்து அவனிடம் நீட்டினாள்.

“இது மித்ரா யூஸ் பண்ணின ட்ரக். இது அதுக்கான மத்து மருந்து ” என்றாள் அவசரமாக.

அவளை ஈஸ்வர் புரியாமல் பார்த்தவன் “கியூர் பண்ற மருந்து தானே கேட்டேன் இதை எடுத்துக்கு எடுத்து வந்திருக்க..” என்றான்.

“கியூர் பண்ற மருந்து தானே கேட்டேன்… இதை எதுக்கு எடுத்துட்டு வந்திருக்க?” என்று ஈஸ்வர் புரியாமல், அதே சமயம் எச்சரிக்கை கலந்த குரலில் கேட்க…

ரம்யா நடுங்கும் கரங்களுடன் அந்த இரண்டு பாட்டில்களையும் அவனுக்கு நேராக நீட்டினாள். “சார்.. சார்.. தப்பா நினைச்சுக்காதீங்க. மித்ரா மேடம்க்கு அந்த ரக்ஷணா கொடுத்தது சாதாரண போதை மருந்து இல்லை. அது அவங்க மூளையோட நினைவாற்றல் பகுதியை முற்றிலுமா முடக்கி வச்சிருக்கு. அதான் அவங்க இப்போ எதையுமே யோசிக்க முடியாம ஒரு குழந்தை மாதிரி இருக்காங்க.”

அவள் பயத்தில் மூச்சிரைக்கத் தொடங்க, விபரத்தை வேகமாக சொல்லத் துவங்கினாள், “நீங்க நேரடியா இந்த மாற்று மருந்தை கொடுத்தா, அது அவங்க உடம்புல கண்டிப்பா வேலை செய்யாது சார். முதல்ல இந்த ட்ரக்கைக் கொஞ்சமா அவங்க உடம்புல செலுத்தணும். அது அவங்க மூளையில தூங்கிட்டு இருக்கிற பழைய நினைவுகளை டிரிகர் பண்ணி எழுப்பும். பழைய நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமா வர்றப்போ, அவங்க மூளை பயங்கரமான அழுத்தத்துக்கு உள்ளாகும். அந்தச் சரியான நேரத்துல இந்த மாற்று மருந்தை கொடுத்தா மட்டும்தான், அவங்க மூளை பழைய நிலைக்குத் திரும்பும். இல்லைன்னா அவங்க உயிருக்கே ஆபத்தாயிடும் சார்!” என்றாள்.

ரம்யா சொல்லி முடிப்பதற்குள், ஈஸ்வரின் முகம் ஆத்திரத்தில் சிவந்தது. சட்டென அவளது கழுத்தைப் பற்றிச் சுவற்றோடு அழுத்திப் பிடித்தவன், “ஏற்கனவே என் பொண்டாட்டி வாழ்க்கையை நாசம் பண்ணின அதே மருந்தை, மறுபடியும் அவ உடம்புல செலுத்த சொல்றியா? உன்னை இப்போவே…” என்று பற்களைக் கடித்தான்.

“டேய் ஈஸ்வர்! விடுடா அவளை…” என்று ராஜ் ஓடிவந்து ஈஸ்வரைப் பலவந்தமாகப் பிடித்து இழுத்தான்.

“நிதானமா யோசிடா. மித்ரா முழுசா குணமாகணும்னா வேற வழி இல்லைன்னு அவ சொல்றா. நாம இந்த ரிஸ்க்கை எடுத்துதான் ஆகணும்” என்றான் ராஜ் அவனது தோளை அமுக்கி.

ஈஸ்வர் தன் கைகளைத் தளர்த்தினாலும், அவனது இதயம் கோபத்திலும் தவிப்பிலும் ஏறி இறங்கியது. அவன் மடியில் இருந்த மித்ராவைப் பார்த்தான். அவளோ இன்னும் அந்தத் துப்பாக்கியைக் கையில் வைத்தபடி, “ஈஸ்வர்.. ஏன் அவங்களை அடிக்கிறீங்க? பாவம்…” என்று மழலையாகக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

“அவளை சுடனும்னு சொல்லிட்டு துப்பாக்கியை கையில வெச்சிட்டு , நல்லவ மாதிரி ஏன் அடிக்குறன்னு கேக்குறாளே.. ” என்று ராஜ் அவளை பார்த்தான்.

ரம்யாவிடம் இருந்த மருந்தை பறித்து எடுத்தவன் மித்ராவிடம் இருந்து துப்பாக்கியை வாங்கிவிட்டு அவளை தோளோடு அணைத்துப் பிடித்தவன் “நாங்க கிளம்புறோம். நீ இதை எல்லாம் சரி பண்ணிட்டு வந்து சேரு ..” என்று நடந்தான் ஈஸ்வர்.

“அப்போ இவளை என்ன செய்றது.. ” என்றான் ராஜ்.

வாசல் வரை சென்றவன் நின்று திரும்பி ரம்யாவை பார்த்தவன் “ரக்ஷணாவுக்கு ஒரு நல்ல அசிஸ்டன்ட் வேணுமே அவளை விற்று.. ” என்றான்.

“டேய் என்ன டா பேசுற.. இவளை வெளிய விட்டா இங்க நடந்ததை எல்லாம் அவகிட்டே சொல்லுற மாட்டா..” என்றான் ராஜ்.

“சொல்லணும்னு அவசியம் இல்ல. ரக்ஷணா இங்க நடக்குறதை எல்லாம் பார்த்துட்டு தான் இருக்கா.. ” என்றவன் நிமிர்ந்து அங்கே இருந்த சிடிவ் கேமெராவை காட்டினான்.

அவன் சொன்னது போலவே அங்கே நடப்பதையும், பேசியதையும் பார்த்துக்கொண்டு இருந்தாள் ரக்ஷணா.

சிசிடிவியை நேரடியாக பார்த்த ஈஸ்வரோ.. அதன் முன் வந்து நின்று “அடுத்து நீ தான்.. ” என்று துப்பாக்கியை அந்த கேமெராவின் முன் நீட்டி சொன்னவன் ஒரு நிமிடம் அழுத்தமான பார்வையை பதியைவிட்டுக்கொண்டே கையில் இருந்த துப்பாக்கியின் ட்ரிக்கரை அழுத்த அடுத்த நிமிடம் பலத்த சத்தத்தோடு அந்த கேமரா நொறுங்கி விழுந்தது.

“ஹே.. ” என்று ராஜ் தன் காதை பொத்திக்கொண்டான்.

“ஈஸ்வர்!” என்று அந்த சத்தத்தில் பயந்து அவனை இறுக்கிக் கட்டிகொண்டாள் மித்ரா.

“ஒன்னுமில்ல டா செல்லம் ” என்று அவளை அனைத்துக்கொண்டவன் ராஜ்ஜை பார்த்தான்.

அவனோ சற்று அதிர்ச்சியோடு கண்கள் மூடி நின்று இருந்தான்.

அவனை பார்த்து சிரித்துவிட்டு அங்கிருந்து வெளியே சென்றுவிட..

மித்ராவும் ராஜ்ஜை பார்த்துவிட்டு “அவங்களுக்கும் பயந்துட்டாங்களா ஈஸ்வர்.. ” என்றாள்.

“ம்ம்.. ஆமா அதான் அவங்க புருஷனை கட்டிபிடிச்சிருக்காங்களே.. ” என்றான்.

  அங்கே ராஜ்ஜின் பின்னால் நின்று இருந்த ரம்யா அவனை பின்னிருந்து அணைத்தபடி நின்று இருந்ததால் .

வெளியே வந்த ஈஸ்வர் கார் கதவை ரிமோட் மூலம் ஓபன் செய்ய.. அதன் அருகே அந்த இடத்தை பார்த்துக்கொண்டு இருந்த பார்வதி அவர்களை பார்த்தார்.

“அம்மா போலாமா? “என்று வந்து அவருக்கு கதவை திறந்துவிட… அவரும் ஏறி அமர்ந்து கொண்டவர் “மித்ரா வா வந்து உக்காரு.. ” என்று தன் அருகே சீட்டை தட்டி அவளை அழைக்க..

“ம்ம்… நான் ஈஸ்வர் பக்கத்துல தான் உக்காருவேன்” என்று அவன் கழுத்தை கட்டிக்கொண்டு சிறுபிள்ளை போல குதித்தாள் .

“போடா அவளை உன் பக்கத்துலையே வெச்சுக்கோ.. ” என்று அவர் கதவை அடைக்க..

அவனும் சிரித்துக்கொண்டு வந்து மித்ராவை தன் அருகே அமர செய்துவிட்டு காரை கிளப்பி இருந்தான்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured