EPISODE 2
“சார்… சார்.. பெருசு… அப்பா… தாத்தா… நிருபரே… ப்ளீஸ் நான் சொல்றது மட்டும் கேளுங்க முடியாதுன்னு மட்டும் சொல்லாதீங்க..” என்று குணவானின் பின்னால் கெஞ்சி கொண்டே சென்றாள் ரதி .
“முடியாது ரதி விளையாடாத அந்த ராக்கி எவ்ளோ பெரிய ஆள் தெரியுமா? அவனை சுத்தி எப்பவும் ஆபத்து நிறைஞ்சு இருக்கும் . அதுமட்டுமா அவனே ஒரு ஆபத்தானவன் . யாரை.. எப்போ? என்ன செய்வான்னு யாருக்கும் தெரியாது. அபப்டி பட்டவனை கூட இருந்து அவன் நடவடிக்கைகளை கண்காணிச்சு உன் கதையை எழுத நான் சம்மதிக்கவே மாட்டேன் . அதை மீறி நீ அந்த ராக்கியை வெச்சு கதை எழுதுவேன்னு சொன்னா .. நான் கண்டிப்பா நம்ம பாஸ்கிட்டே சொல்லி உன்னை வேற டிபார்ட்மெண்டில் தூக்க போட சொல்லிடுவேன் பாத்துக்கோ..” என்று கறாராக ரதியிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட…
அவரிடம் எவ்வளவு கெஞ்சியும் வேலை ஆகவில்லையே என்று சோகத்தில் அமர்ந்து இருந்தாள் ரதி.
“என்ன டி உன் ஐடியா கேட்டுட்டு சீனியர் முடியாதுன்னு சொல்லிட்டு போறது தெரியுது. .அப்படி என்ன டி அவர்கிட்டே சொன்னா அவ்ளோ கோபமா போறாரு ” என்று ரதியிடம் வந்து நின்றாள். தினம் கவனி பத்திரிக்கை பிரிவில் பொழுதுபோக்கு பிரிவில் வேலை செய்யும் கமலி.
“ஏய் இங்க வாடி.. உன்கிட்டே கேக்குறேன் நீ சொல்லு ” என்றவள்.
“நான் என்னோட இராக்கதன் கதைக்கு ஒரு நல்ல ஹீரோ மெடீரியல் வேணும்னு தேடிட்டு இருந்தேனே அவன் கிடைச்சுட்டான் தெரியுமா !” என்றாள் மிகவும் ஆர்வமாக .
“என்ன டி சொல்ற ! நிஜமாவா ! உன்னோட ஹீரோவை கண்டு பிடிச்சுட்டியா ! யாரு அவன் ? எங்க இருக்கான். அவனை எங்க பிடிச்ச.. எப்படி பிடிச்ச… எப்போ பார்த்த.. ” என்றாள் கமலி மிகவும் ஆர்வமாக .
“எவ்ளோ கேள்வி டி கேப்ப … இரு ஒன்னொன்னா சொல்றேன் ” என்று நேற்று காலையில் ரவியின் வீட்டிற்கு சென்றத்தில் இருந்து அங்கே ராக்கியை பார்த்தது வரை கமளியிடம் கூறிவிட்டு அவன் கூடவே இருந்து ராகியை கேரக்டர் ஸ்டடி செய்து அவள் கதையில் அவனை ஹீரோவாக வைத்து எழுதபோவதாக கூறிவிட்டு கமலின் அபிப்ராயம் என்ன என்று ஆர்வமாக அவளையே பார்த்துக்கொண்டு இருந்தாள் ரதி.
“ஏய்!! லூசு பக்கி .. என்ன விளையாடுறியா… அவன் எவ்ளோ பெரிய ரௌடி தெரியுமா.. அவன் வில்லன் டி ஹீரோ கிடையாது. அவன் கூடவே இருந்து அவனை ஸ்டடி பண்ண போறியா டி நீ..” என்று பொரிந்தாள் கமலி.
“என்ன டி ஆளாளுக்கு அவனை பத்தி ரொம்ப பில்ட் அப் பண்றீங்க.. அவன் பாக்க கொஞ்சம் நீ சொல்ற மாதிரி ரவுடி மெடீரியால் தான் நான் இல்லேனு சொல்லல.. ” என்று கமலியை பார்த்தவள். “ஆனாலும் என்னோட கதைக்கு அவன் தான் ஹீரோ அதை முதல்ல தெரிஞ்சுக்கோ ” என்று கமலின் கையை பிடித்துக்கொண்டு குழைந்தாள் ரதி.
“என்ன டி சொன்னா புரிஞ்சுக்கவே மாட்டியா .. அவனை நீ நினைக்குற மாதிரி எல்லாம் சாதாரணமா பார்க்க கூட முடியாது. அவன் முதலமைச்சருக்கு எல்லாமுமா இருக்கிறவன். அவரோட பினாமின்னு கூட சொல்லலாம் . அவர் அரசியல்ல இவ்ளோ உயரத்துக்கு வந்ததுக்கு முக்கிய காரணமே இந்த ராக்கி தான் தெரிஞ்சுக்கோ. நேத்து அந்த ரவியை அடிச்சது வெறும் சாம்பிள் மட்டும் தான்” என்ற கமலி .
“அவன் அந்த முதலமைச்சருக்காக எத்தனை பேரை கையை , காலை உடைச்சிருக்கான் தெரியுமா? எவ்ளோ பேர் இவன் மிரட்டலுக்கு பயந்து ஊரை விட்டே… ஓடிருக்காங்க தெரியுமா. பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் இவனோட விசுவாசத்தை பார்த்து அவங்களுக்கு வேலை செய்ய இவனை கூப்பிட்டிருக்காங்க . ஆனா இவனுக்கு முதல் அமைச்சர் தான் எல்லாமே . அவர் கண்ணை காட்டினா இவன் கருவறுத்துட்டு வந்து நிப்பான் டி அவ்ளோ கேடு கெட்டவன் டி அவன் ” என்று மிகத் தீவிரமாக பேசிக்கொண்டே ரதியை பார்க்க…
ரதியோ ராக்கியை பற்றி கமலி சொன்னதை எல்லாம் பேட்டி எடுக்க செல்லும்போது பாக்கெட் வாய்ஸ் டெக்கை ஆன் செய்து ரெகார்ட் செய்து கொண்டு இருந்தாள் .
அதை பார்த்ததும் கடுப்பான கமலி “அவள் கையில் இருந்த வாய்ஸ் டெக்கை பிடிங்கியவள் “ஏய் நான் எவ்ளோ சீரியஸா சொல்லிட்டு இருக்கேன். நீ நான் சொல்றதை எல்லாம் ரெகார்ட் பண்ணிட்டு இருக்க… நான் சொல்றதோட சீரியஸ்னெஸ் உனக்கு புரியுதா? இல்லையா? உன்னோட இந்த ஐடியாவை இத்தோட தலை முழுகிடு. அவனுக்கு மட்டும் நீ அவனை பத்தி கதை எழுத தான் அவன்கூட இருந்து கேரக்டர் ஸ்டடி பண்ணுறேன்னு தெரிஞ்சுதுன்னு வை உன்னை… நம்ம ஆஃபீச , ஏன் உன் குடும்பத்தை ஒருத்தரையும் விட்டு வைக்க மாட்டான். பின்விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும் டி… ” என்று ரதியை எச்சரித்தாள் .
அவள் கையில் இருந்த வாய்ஸ் டெக்கை வாங்கிக்கொண்ட ரதி “நீ சொல்றது எல்லாம் கேட்க கொஞ்சம் பயமா தான் இருக்கு. .என் குடும்பம் வரைக்கும் பிரச்சனை வரும்னு வேற சொல்ற… எதுக்கு டி வம்பு அவனை பத்தி நீ எனக்கு சொன்ன தகவல் போதும். நானே ஏதாவது யோசிச்சு என் கதையை எழுதுறேன் அவன் பக்கமே நான் போக மாட்டேன் டி.. போதுமா ” என்று மிகவும் சீரியசாக ரதி கமிலியிடம் கூறினாள் .
“அப்படி ஒரு வழியா நான் சொன்னதோடு சீரிஸ் என்னனு புரிஞ்சுதே அதுவரைக்கும் நிம்மதி டி எனக்கு. வீணா உன் லைஃபை நீயே ரிஸ்க் பண்ணிக்காத “என்று தன் தோழிக்கு எடுத்து சொல்லி புரிய வைத்தவள் .
“சரி டி.. நீ பாரு.. நான் இன்னிக்கு ஒரு இன்டெர்வியூ எடுக்க போகணும் . ” என்று கிளம்பினாள் கமலி.
ரதிக்கு கமலி சொல்வது சரிதான் என்று தோன்றியது . ஒரு கதை எழுத வீணாக தன் குடும்பத்தை ஆபத்தில் இழுத்து செல்ல அவள் விரும்ப வில்லை .
“ம்ஹும்.. எப்படியும் என் கதைக்கு ஹீரோ அவன் இல்லேன்னு முடிவாகிருச்சு . முதல்ல இந்த கதையை ஸ்டார்ட் பண்ணனும் .. அந்த ராக்கியை ஸ்டடி பண்ணலையின்னாலும் அவனை பத்தி ஏதாவது கிடைக்குற நியூஸை வெச்சு
எழுதுவோம் ” என்று முடிவெடுத்தவள் ,
தினம் கவனி பத்திரிக்கையில் அவர்களுக்கென இருக்கும் வலை தளத்தில் ராக்கியை பற்றி ஏதேனும் தகவல் கிடைக்குமா என்று தேட துவங்கி இருந்தாள் .
“என்ன டா இது ஆளாளுக்கு ராக்கியை கெட்டவன், வில்லன் கையை ஓடைப்பன் காலை முறிப்பான் , அடிப்பான், வெட்டுவான் , கொள்ளுவான், கிள்ளுவான்னு ஆளாளுக்கு அவனை பத்தி சொல்லுறாங்களே வாங்க இப்போ யார் கையை , காலை முறிக்குறான்னு பாத்துட்டு வருவோம் “
“ராக்கி வேணாம் ராக்கி … சொன்ன கேளு தேவை இல்லாம இங்க வந்து வீணா என் தொழிலை கெடுக்காத. உனக்கு என்ன வேணும்னு சொல்லு நான் தரேன் . அதை விட்டுட்டு இப்படி வந்து பிரச்சனை பண்ணாத ” என்று முகமெல்லாம் ரத்தம் தெரிந்திருக்க.. பயந்துகொண்டே ராக்கியிடம் கெஞ்சிக்கொண்டு இருந்தான் குணா .
“இங்க பாரு ஒழுங்கா நான் சொல்றதை முன்னமே கேட்டிருந்தா நீ இப்படி என்கிட்டே கெஞ்சிட்டு இருக்க வேண்டிய அவசியமே இல்ல.. எப்போ நான் சொல்றதை கேட்காம நீ வேலை பாத்தியா அப்போவே உன் டைம் முடிஞ்சு போயிருச்சு ..” என்று தன் சட்டையை மேலே தூக்கிவிட்டு தன்னோடு வந்த அடியாட்களை பார்த்து
” டேய் இவனை பேச விட்டு வேடிக்கை பார்க்கவா இங்க வந்தோம். வந்தோமா வந்த வேலையை முடிச்சோமான்னு இல்லாம இப்படி இவனை பேசவிட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்களா” என்று குணாவை நெருங்கியவன்.
” என்ன டா சொல்லிகிட்டே இருக்கேன் எவ்ளோ வாட்டி தான் நான் உனக்கு ட்ரெயினிங் கொடுக்குறது. என்கிட்டே தொழில் கத்துக்கணும்னு நினைச்சா மட்டும் போதாது . நான் செய்யறதை எல்லாம் பக்கத்துல இருந்து பாத்து கத்துக்கணும். ஒரு காலை கூட உன்னால சரியா வெட்ட முடியல.. என்ன டா நீ எல்லாம் ரௌடின்னு சொல்லிட்டு ஊரை ஏமாத்திட்டு இருக்க..” என்று தன்னோடு எப்போதும் பள்ளி போல ஒட்டிக்கொண்டு திரியும் அவன் அல்லக்கை மாரீஸ் கையில் இருந்த அரிவாளை பிடுங்கியவன் .
குணாவின் தோளில் கை வைத்து அவனை பார்த்தான்.
“வேணாம் ராக்கி சொன்னா கேளு நீ சொல்றது எல்லாம் நான் செய்றேன் . தயவு செய்து இங்க இருந்து போய்ட்டு ” என்று குணா கெஞ்சினான் .
“ம்ஹும்.. நான் முடிவு பண்ணினா பண்ணினது தான் ” என்று தன் அரிவாளை ஓங்கினான் .
அங்கு நடபப்தை எல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த ஆட்கள் எல்லாம் ராக்கி அடுத்து என்ன செய்வான் என்று தெரிந்ததும் தங்கள் கண்களை இருக்க மூடிக்கொண்டனர் . குழநதைகள் அதை பார்த்தாள் பயந்துவிடுவார்கள் என்று அவர்களை சிலர் அங்கிருந்து அழைத்து சென்றுவிட.. சிலர் குழந்தைகளின் கண்களை மூடிக்கொண்டனர் .
அவர்களை எல்லாம் பார்த்து பழக்கப்பட்டவன் என்பதால் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் ஓங்கிய அரிவாளுக்கு வேலை கொடுத்திருந்தான். அவன் வெட்டியா வேகத்தில் உடலில் இருந்து கால் தனியாக தெறித்து தரையில் விழுந்தது .
அங்கிருந்தவர்கள் எல்லாம் ராக்கி செய்த செய்லை சகிக்க முடியாமல் அவனை வசை பாடினர்.
அது அவன் காதில் விழுந்தாலும் அதை கண்டுகொள்ளாமல் கீழே விழுந்து இருந்த காலை கையிலெடுத்து “அடடா இப்படி கீழே விழுந்து அழுக்காகிருச்சே.. ” என்று யோசித்தவன் “சரி அதான் இன்னொரு கால் இருக்குல்ல… ” என்று கையில் இருந்த காலை அருகே வைத்துவிட்டு மற்றொரு காலை கையால் பிடித்துக்கொண்டு சரியாக வெட்டி எடுத்தான்.
“இப்போ ஓகேவா டா ” என்று மாரீஸிடம் காலை தூக்கி காட்ட..
“சூப்பர் ராக்கி தங்கச்சி கேட்ட மாதிரி லெக் பீஸ்ல சதை அதிகமா வர மாதிரி வெட்டி கொடுத்துட்டே.. ” என்று ராக்கி கையில் பிடித்து இருந்த கோழியின் லெக் பீஸை பார்த்து பெருமையாக சொன்னான் மாரீஸ்.
“ஏய் குணா … எங்களுக்கு எல்லாம் கரி கிடைக்குமா ? கிடைக்காதா ? இவன் இங்க இருக்கான்னு தெரிஞ்சிருந்தா நான் நம்ம முக்குல இருக்க கறிக்கடைக்கே போயிருப்பேன் ” என்று ஒரு கிழவி குணாவிடம் எரிந்து விழுந்தது .
“ஏய் கிழவி உனக்கு இங்க கரி எல்லாம் கிடையாது . முக்குனா மூச்சு தெறிச்சு பரலோகம் போற வயசுல உனக்கு கரி கேக்குதா .. போ … போய் நேத்து வெட்டுன கறியை கழுவாம வெட்டி வெச்சிருப்பான். அவன் கடையிலேயே போய் உன் ஊத்த பல்லுக்கு கரி வாங்கி தின்னு … போ.. முதல்ல இங்க இருந்து நடையை கட்டு ” என்று அந்த கிழவியை வெறுப்பேற்றிவிட்டு திரும்பி தன் தங்கைக்காக கறிக்கடையில் சந்தையாக உள்ள கோழியாக பார்த்து அவனுக்கு தேவையானதை வெட்டிக்கொண்டு இருந்தான் ராக்கி.
“கிழவி ஒரு ரெண்டு நிமிஷம் பொரு நான் ராக்கிக்கு கொடுத்து அனுப்பிட்டு உனக்கு போட்டு தரேன் ” என்று அவரை சமாதானம் செய்தவன் .
“ராக்கி உனக்கு எப்படி வேணும்னுமோ அதே மாதிரி நான் உனக்கு வீட்டுக்கே கறியை வெட்டி கொடுத்து விடறேன் . தயவு செஞ்சு இங்க இருந்து கிளம்பு . சண்டே அதுவுமா இப்படி காலையிலேயே வந்து என் வியாபாரத்தை கெடுக்காத ” என்று குணா ராக்கியின் கையில் இருந்த கறிவேட்டும் அருவாளை வாங்கிக்கொண்டு கெஞ்சினான்.
“அப்போ என் தங்கச்சி கேட்ட மாதிரி கறியை வெட்டி இதோ இவன்கிட்டே கொடுத்து விட்டுரு நான் வெட்டின லெக் பீஸையும் சேர்த்து போட்டு கொடு. .நீயும் கெஞ்சுறா அதனால போன போவுதுனு போறேன் சரியா ” என்று அங்கிருந்து கிளம்பி இருந்தான் ராக்கி .
“அப்பாடா ஒருவழியா போய் தொலைஞ்சான் ” என்று அங்கிருந்தவர்கள் நிம்மதியானார்கள் .
இங்கே கறிக்கடையில் இருந்து வீட்டிற்குள் nulaintha ராக்கியை எப்போது வீட்டிற்கு வருவான் என்று கையில் துடைப்பத்தை வைத்துக்கொண்டு காத்திருந்தாள் அவன் தங்கை ஓவியா .
