EPISODE 13
குணவானுடன் ஹோட்டலுக்கு வந்த ரதி அங்கே அவளை நீக்கி வந்த ராக்கியை பார்த்து அதிர்ந்தாள்.
“இவனா! இவன் எங்க இங்கே… ” என்று யோசனையோடு ரதி ராக்கியை பார்த்தாள்.
“ஓய் 250! என்ன இந்த பக்கம் ” என்றான் அவளை வந்து இடித்துக்கொண்டு..
அதை பார்த்த கமலி குணவானிடம் ” என்ன பெருசு இப்படி வந்து ரதியை பிடிச்சிட்டு நிக்குறான். இவளும் அமைதியா இருக்காளே… ” என்று கேட்டாள்.
“இவன் தான் ராக்கி… என்னை கடத்தி கட்டி வெச்சிருந்தாங்கனு சொன்னேனே அவன் தான் ” என்றார் .
அவர் சொன்னதும் ராக்கியையும் , ரதியையும் பார்த்தவள் . “சரி தான் இவனை வெச்சு தான் கதை எழுத போறாளா.. ஆள் பாக்க சும்மா ஜிம் பாடி மாதிரி இல்ல இருக்கான். இவை டைட்டிலுக்கு ஏத்தவனா தான் இருக்கான் ” என்று நினைத்துக் கொண்டாள் கமலி.
“என்ன 250 அப்படி பாக்குற.. ” என்றான் ராக்கி .
“நீ… நீங்க இங்க என்ன பண்றீங்க.. ” என்றாள் ரதி அவனை விட்டு தள்ளி நின்று.
அதை கவனித்தவன் காட்டிக்கொள்ளாமல் “பத்மா அக்கா பிரியாணி வேணும்னு கேட்டாங்க அதான் அவங்களுக்கு வாங்க வந்தேன் ” என்றான்.
“பத்மா அக்கா! ” என்று யார் என்று தெரியாமல் ரதி பார்க்க..
“நம்ம CM சம்சாரம் ” என்றான் பெருமையாக.
“ஓ! CM வீட்டுக்கு எடுபிடி வேலை பாக்குறதை எவ்ளோ பெருமையா சொல்றான் ” என்று நினைத்துக்கொண்டவள் .
“சரி நீங்க பாருங்க .. நாங்க போறோம் ” என்று திரும்பி ” கமலி போலாமா… ” என்று அவளை அழைத்துக்கொண்டு அங்கிருந்து செல்ல போக…
“எங்க போற 250 … சாப்பிடலையா ” என்றவன் அப்போது தான் அங்கிருந்த குணவானை பார்த்தான்.
“என்ன பத்திரிக்க … நீ எங்க இந்த பக்கம் . ஆமா யார் இந்த புள்ள… ” என்று கமலியை பார்த்து கேட்டான்.
“ந.. நா… கமலி… ரதியோட பிரென்ட் ” என்றாள் பயந்துகொண்டே…
“என்னது! கோமாளியா… இப்படி எல்லாமா பேரு வெக்குறாங்க.. ” என்று கேட்டுக்கொண்டே கையில் பார்சலுடன் வெளியே வந்தான் மாரீஸ்.
அவனை முறைத்த கமலி “என் பேரு கமலி.. ” என்றாள் அழுத்தமாக.
“சரி வெச்சுக்க.. அதுக்கு என்ன இப்போ… ” என்றவன் .
“அட நம்ம அண்…. ” என்று நாக்கை கடித்துக்கொண்டவன் .
“என்ன ராக்கி 250 பீடா இங்க என்ன செய்யுது ” என்றான்.
“ம்ம்ம்.. பார்த்தா தெரியல… கடைக்கு சாப்பிட வந்தோம் ” என்றாள் கமலி மாரீஷை பார்த்து .
“பின்ன ஹோட்டலுக்கு சாப்பிட தான் வருவாங்க வேற எதுக்கு வருவாங்க… ” என்றான் நக்கலாக .
“ஏய் ரதி ! யாரு டி இவன் ? வந்ததுல இருந்து கடுப்பை கிளப்பிட்டு இருக்கான் ” என்றாள் மாரீஷை முறைத்துக்கொண்டே .
“இவன் ராக்கியோட அல்லக்கை டி.. கொஞ்சம் அபப்டி தான் வாய் பேசுவான் . நீ அட்ஜஸ்ட் பண்ணிக்கோ…” என்று கமலியை சமாதானம் செய்தவள்.
“டேய் சும்மா இரு எதையாவது பேசிகிட்டு இருக்க வேண்டியது” என்று மாரிஸை அதட்டிய ராக்கி. “பார்சல் வாங்கிட்ட இல்ல நீ கிளம்பி போய் அக்காவுக்கு பார்சல் கொடுத்துவிட்டு நேரா வீட்டுக்கு வந்துடு.. அ .. அப்புறம் ஓவியாவுக்கு பார்சல் வாங்கினியா ” என்று கேட்டான்.
“முதல்ல ஓவிக்கு வாங்கிட்டு தான் அக்காவுக்கே பார்சல் சொன்னேன்” என்றான் இரண்டு கைகளிலும் இருந்த அவரை முகத்துக்கு நேராக தூக்கி காட்டியபடி.
“சரி கிளம்பு” என்று மாரீஷை கிளப்புவதிலேயே ராக்கி குறியாக இருக்க.
“ஆமா என்ன எங்க தனியா கிளம்ப சொல்ற நீயும் தானே கூட வர ” என்றான் மாரிஸ் ,
“டேய் என்னோட 250 பீடாவ நான் இப்பதான் பார்த்து இருக்கேன். அவ கூட கொஞ்ச நேரம் இருந்துட்டு அப்புறம் வரேன், நீ முதல்ல கிளம்பு கேள்வி கேட்டு என்ன கடுப்பு அடிக்காத அப்புறம் செவில திருப்பிடுவேன் ஜாக்கிரதை” என்று ராக்கி மாரிசிடம் குனிந்து அவனுக்கு மட்டும் கேட்கும் படி எச்சரிக்க..
“சரி சரிப்பா புரிஞ்சுது அதுக்கு ஏன் செவில திருப்பிடுவேன்னு சொல்ற..”என்றவன் ராக்கி விட்டு விலகி நின்று “நான் கிளம்பறேன்” என்று கமலியை பார்த்து சுட்டுக் கொண்டே அங்கிருந்து கிளம்ப..
“அய்ய ஆளையும் மூஞ்சியையும் பாரு இது இழிப்பு வேற.. சகிக்கல” என்று உருவத்தை சுருக்கி கொண்டு முகத்தை திருப்பினாள் கமலி
“இது என்ன அவன் கூட கிளம்பாம இந்த ரவுடி பையன் இங்கேயே இருக்கான்” என்று ரதி யோசித்தபடி திரும்பி குணவானையும் கமலியையும் பார்த்தாள்.
அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திருதிருவென விழித்துக் கொண்டு ராக்கியையும் ரதியையும் மாறி மாறி பார்க்க ..
“ஆமா பத்திரிக்கை இது யாரு உன் பொண்ணா” என்று கமலியை பார்த்து கேட்டார் ராக்கி .
“ம்ஹும்.. இல்லை இல்லை… நான் இவர் வேலை பார்க்கிற அதே பத்திரிகையில் தான் வேலை பார்க்கிறேன். இவ என்னோட பிரண்டு இவளை பார்க்க நான் வந்தேன் இவரும் ரதி அவருக்கு செஞ்ச உதவிக்காக நன்றி சொல்றதுக்கு என் கூட கிளம்பி வந்தாரு” என்று கமலி சொல்லி சமாளித்தாள்.
“சரி சரி உன் பேர் என்ன?” என்றான் அதட்டலாக.
“க … கமலி” என்றாள்.
“சரி நீங்க கிளம்புங்க.. நாங்க இங்க சாப்பிட வந்தோம்” என்று ராக்கியை கிளம்ப சொல்லிவிட்டு “ஏய் ரதி வா டி… பெருசு நீயும் வா… ” என்று அவர்களை வர சொல்லிவிட்டு ரதி முன்னே செல்ல…
கமலியும் , குணவானும் ராக்கியை தயக்கமாக பார்த்தபடி ரதியின் பின்னால் செல்ல…
“இங்க ஒருத்தன் இவளுக்காக போகாம நிக்குறேன் . என்னை கண்டுக்காம இவ பாட்டுக்கு போறாளே… ரொம்ப தான் கொழுப்பு இந்த பீடாவுக்கு.. இவள …. ” என்று அவர்கள் பின்னால் சென்றான் ராக்கி.
ஒரு டேபிளை தேர்வு செய்து மூவரும் சென்று அமர போனார்கள் .
குணவான் சென்று அமர அவருக்கு எதிரே இருந்த சேரில் ரதி அமர்ந்தாள். அவள் அருகில் சென்று கமலி அமரப் போக…
திடீர் என்று கமலியின் தோளை தொட்டு யாரோ அழைக்க.. யார் என்று கமலி திரும்பிப் பார்க்க அந்த நேரம் பார்த்து ராக்கி கமலியை முந்திக்கொண்டு ரதியின் அருகில் போய் அமர்ந்துகொண்டான் ராக்கி.
“ஏய்.. கமலி.. நீ.. ” என்று ரதி அவளை அழைக்க…
“ஒய் கம்பளி….. நீ .. நீ போய் அந்த பத்திரிக்க பக்கத்துல போய் உக்காரு போ…” என்று அவளை ஏவினான்.
கமலி ரதியை செய்வதறியாது பார்க்க…
“ம்ச்… நீங்க எதுக்கு என் பக்கத்துல வந்து உக்காந்திருக்கிங்க… நீங்க.. நீங்க முதல்ல இங்க இருந்து எழுந்து போங்க.. போய் அங்கிள் பக்கத்துல உக்காருங்க… ” என்று அவனை எழுப்பிவிட முயன்றாள்.
“இப்போ என்ன ஆச்சு… ஏன் உன் பிரெண்ட் அங்க உக்காந்தா சாப்பிட மாட்டாங்களா.. என்ன ” என்று காமாலையை ராக்கி முறைக்க..
அவள் தானாக சென்று குணவானின் அருகில் அமர்ந்து கொண்டாள் .
ரதிக்கு கடுப்பாக இருந்தது . ராக்கியை முறைத்துக்கொண்டு அமர்ந்து இருக்க.. அதை கண்டும் காணாமல் “அப்பறோம் பத்திரிக்க … என்ன எல்லாரும் ஒண்ணா சாப்பிட வந்திருக்கீங்க… எதுவும் விசேஷமா ” என்றான்.
“அது சும்மா தான்.. ” என்று அவர் கூறினார்.
“சரி சரி என்ன சும்மா இருக்கீங்க.. யார் யாருக்கு என்ன வேணும்னு ஆர்டர் சொல்லுங்க… இங்க இறால் தொக்கு நல்லா இருக்கும் ” என்றவன்.
“ஆமா எல்லாரும் நான் வெஜ் சாப்பிடுங்க தானே… ” என்றான்.
“அதெல்லாம் சார்.. ரெண்டு கையையும் சாப்பிடுவோம்.. ” என்று கமலி ஒரு ஆர்வத்தில் சொல்லிவிட.. அவளை டேபிளுக்கு கீழே காலை நீட்டி உதைத்த ரதி “சும்மா இருக்க மாட்டியா டி… “என்று ஜாடை செய்து மிரட்டினாள்.
“சாரி டி.. ” என்று நெளிந்தாள் கமலி .
“நீங்க முழிக்கிறதை பார்த்தா ஆர்டர் பண்ற மாதிரியே தெரியல நானே ஆர்டர் கொடுக்கிறேன் ” என்றவன் பேரர்… என்று கையை காட்ட…
வேகமாக அவனை நோக்கி ஓடி வந்த பேரர் “சார்! ” என்று பவ்வியமாக நின்றான்.
“உங்க ஹோட்டல்ல ஸ்பெஷல் இட்டம்ஸ் இருக்கு இல்ல.. அதை எல்லாம் எங்க டேபிளுக்கு எடுத்துட்டு வா… ” என்றான்.
“சார் வழக்கமா நீங்க சாப்பிடற ஐட்டம்ஸ் தானே ” என்றார் பேரர்.
“ஆமா அதே தான் போ.. போய் எடுத்துட்டு வா.. ” என்று அவரை அனுப்பி வைத்தவன்.
“அப்பறோம் பீடா.. என்ன எதுவுமே பேசாம இருக்க.. ஏதாவது பேசு.. ” என்று அவள் தோளில் இடித்தான்.
“ம்ச் .. சும்மா உக்கார முடியாதா உன்னால.. கொஞ்சம் தள்ளி உக்காருரியா ” என்று தன் சேரை சற்று தள்ளி ரதி நகர்த்தி அமர..
அவள் சென்ற திசையிலேயே ராக்கியும் தன் சேரை நகர்த்தினான்.
அவனை திரும்பி ரதி முறைக்க… “என்ன பீடா இது இப்படி என்னை முறைச்சிட்டே.. இருக்க.. கொஞ்சம் சிரிச்சு பேசலாமே.. .” என்றான்.
“ம்ப்ச்.. என்ன நீ சும்மா சும்மா என்னை 250 பீடானு கூப்டுட்டே இருக்க.. என்ன பேரு இது… ” என்று முகத்தை சுளித்தாள்.
அவள் அருகில் நெருங்கி வந்தவன் ரதிக்கு மட்டும் கேட்கும் விதமாக “ஏன் முகத்தை இப்படி சுளிக்குற.. அதுவா உன்னை காருக்கு பின்னாடி ஒளிஞ்சிட்டு இருந்த அப்போ நான் பார்த்தேனா அப்போ உன்னோட லிப்சை பார்க்கும் போது நல்லா 2 ரூபா 50 பைசா பீடாவை போட்டா உதடு எப்படி சிவக்குமோ அப்டி சிவப்பா இருந்துச்சு.. இதோ இப்போ கூட பாரேன் உன் லிப்ஸ் பீடா மாதிரி ரெட்டா தான் இருக்கு… ” என்று அவள் உதட்டை பார்வையால் சுட்டி காட்டினான் .
அவன் தன் உதட்டை கண்களால் கபளீகரம் செய்வதை பார்த்தவள் சட்டென்று தன் உதட்டை வாய்க்குள் மறைத்துக் கொண்டு அவனை பார்க்க…
“இப்போ மறைச்சு என்ன செய்றது.. அதான் அன்னிக்கு என்னை வெச்சு வெச்சு… செஞ்சியே.. உன் உதட்டால .. ” என்று அவள் கண்களை பார்த்து…
அவனை முறைத்தவள் திரும்பிக்கொள்ள…
ராக்கி ஏதோ தங்களுக்குள் ரதியிடம் ரகசியம் பேசுவதும் , அதை கேட்டு ரதி முறைப்பதும் என்று இருக்க.. அதை எல்லாம் பார்த்துக்கொண்டு குணாவனும் , கமலையும் ஒருவரை ஒருவர பார்த்துக்கொண்டு இங்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் விழித்தனர்.
ராக்கி சொன்ன உணவுகளை எல்லாம் இரண்டு பேரர்கள் கொண்டு வந்து அவர்கள் டேபிளை நிறைத்து இருக்க… அதை எல்லாம் பார்த்ததுமே மூவருக்கும் பசி அடங்கி விடும் போல இருந்தது,
“என்ன தம்பி இது இவ்ளோ ஐட்டம் வந்திருக்கு.. எங்களால இதெல்லாம் சாப்பிட முடியாது” என்று குணவான் சொல்ல…
“நீ கிழம் பத்திரிக்க .. அதனால உன்னால சாப்பிட முடியாலையின்னு சொல்லு.. அதுக்காக இவங்க சாப்பிட மாட்டாங்கன்னு சொல்லாத..” என்றவன் அவர் அருகில் அமர்ந்து கமலியை பார்க்க…
அவள் கொண்டு வந்த ஐட்டம்கள் அனைத்திலும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து தன் தட்டில் எடுத்து வைத்து சாப்பிட்டு கொண்டு இருந்தாள் .
“அடிப்பாவி.. ” என்பது போல குணவான் கமலியை பார்க்க.. அவள் அதை சட்டை செய்யாமல் காரியத்தில் கண்ணாக இருந்தாள் அதாங்க சாப்டுட்டு இருக்கா…
“அட கூச்சப்படாம எடுத்து போட்டு சாப்பிடு பெருசு.. ” என்று ராக்கியும் அவர்களை போல குணவானை பெருசு என்று அழைத்தான்.
அவர் வேறு வழி இல்லாமல் சாப்பிடத் துவங்க…
ரதியை திரும்பி பார்த்தான் அவள் எதை சாப்பிட்டு ஆரம்பிப்பது என்று தெரியாமல் அமர்ந்து இருக்க…
“உனக்கு என்ன ஆச்சு பீடா சாப்பிடு ” என்றவன் ஒரு பிளேட்டை எடுத்து அதில் அங்கு வைத்திருந்த உணவுகளை தட்டில் நிறைத்து அவள் முன் நீட்ட..
தட்டில் இடமே இல்லாமல் உணவை நிறைத்திருந்ததை பார்த்து “என்னை என்ன உன்ன மாதிரி சாப்பிடறவன்னு நினைச்சியா இப்படி நிறைச்சு வெச்சிருக்க.. எனக்கு இதெல்லாம் வேணாம். எனக்கு பசிக்கல … ” என்று ரதி உணவை உன்ன மறுக்க…
“அட என்ன பீடா இது இப்படி சாப்பிடாம இருக்க.. நீ இப்படி சாப்பிட்றதுனால தான் இப்படி ஒல்லியா இருக்க..” என்றான்.
“என்னை பார்த்தா ஒல்லியா இருக்க மாதிரி இருக்கா… அது சரி உன் முன்னாடி யார் வந்து நின்னாலும் ஒல்லியா தான் தெரிவாங்க. நீ தான் நல்லா மலை மாடு மாதிரி பெருசா இருக்கியே… நீவேனும்னா இதை எல்லாம் சாப்பிடு எனக்கு இது போதும் ” என்று அங்கே இருந்த ஒரு ரொட்டியையும் சிறிது கிரேவியையும் எடுத்து வைத்து கொறிக்க துவங்க…
அவள் சாப்பிடுவதை பார்த்தவன் “நீ சொல்றது என்னவோ சரி தான் நான் தப்பா சொல்லிட்டேன். நீ ஒல்லி எல்லாம் இல்ல தான் நல்லா குஷ்பூ இட்லி மாதிரி புசுன்னு இருக்க… ” என்று அவளை ஏக்கமாக பார்த்தபடி கூறினான்.
“ம்ம்ம்.. தெரியுது இல்ல… பேசாம நீ கைல வெச்சிருக்க சாப்பாட்டை நீயே சாப்பிடு.. ” என்று அவன் எதை இட்லி மாதிரி இருக்கிறது என்று சொல்கிறான் என்று தெரியாமல் சாப்பிட்டு கொண்டு இருந்தாள்.
சாப்பிட்டு முடித்து குணாவனும் , கமலியும் எழுந்து கை கழுவ செல்ல…
ரதியும் சாப்பிட்டு முடித்தவள் ராக்கியை பார்க்க.. அவன் தன் பிளாட்டில் இருந்த உணவுகளை மிகவும் ரசித்து ருசித்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தான்.
ஆள் பார்க்க தான் ரௌடி ஆனால் மிகவும் பொறுமையாக நீட்டாக சாப்பிட்டுக்கொண்டு இருந்தான். அதை பார்த்தவளுக்கு ஆச்சர்யமாக இருக்க.. அவன் சாப்பிடும் அழகை அவளையும் அறியாமல் பார்த்துக்கொண்டு இருந்தாள் .
சாப்பிட்டுக்கொண்டு இருந்தவன் “போதும் என் அழகை ரசிச்சது இந்தா இதை சாப்பிடு ” என்று சட்டென்று அவள் வாய்க்குள் உணவை திணிக்க…
“அவ்…ம்ம்.. ம்ம்… ” என்று பேசமுடியாமல் அவள் வாயில் நிறைந்திருந்த உணவை சாப்பிட்டவள் வாயில் இருந்ததை விழுங்கிவிட்டு அவனை திட்ட வாயை திறக்க… “இன்னும் வேணுமா … இரு.. ” என்றவன் மீண்டும் தன் தட்டில் இருந்த உணவை எடுத்து அவளுக்கு ஊட்டி விட ஆரம்பித்தான். அவள் பேச வாயை எடுக்க ரதியை பேச விடாமல் உணவை அள்ளி அவள் வாயில் திணித்துக்கொண்டே இருந்தான். அதற்கு பிறகு ரதி எதுவும் பேச வில்லை.
அவள் அமைதியானதும் சாப்பிட்டு முடித்த ராக்கி சாப்பிட்ட தட்டிலேயே கையை கழுவியவன் “நீயும் இதுலையே கழுவு ” என்றான்.
“ம்ஹும்.. ம்ஹும்..” என்று ரதி அவசரமாக தலையை ஆட்ட …
“அட குடு கையை… ” என்று அவள் கையை இழுத்தவன் ராக்கியே ரதியின் கையை கழுவியவன் பின் தன் கையை தண்ணீரில் நனைத்து அவள் வாயை துடைத்துவிட்டு டிஸ்ஸுவை எடுத்து அவள் வாயில் இருந்த ஈரத்தை துடைத்துவிட்டான்.
“ஏய்.. நான் என்ன சின்ன பொண்ணா .. இதெல்லாம் எனக்கு செஞ்சுட்டு இருக்க… ” என்று அவனை முறைத்தாள்.
“ஆமா எனக்கு நீ சின்ன பொண்ணு தான். என் சாக்கோவுக்கு அடுத்து நீ தான் ” என்றான்.
“சாக்கோவா !! அது யாரு ” என்றாள் ரதி.
“ஓவி பாப்பா தான்.. அவளுக்கு அடுத்து நீதான் எனக்கு சின்ன பொண்ணு… என் குட்டி பாப்பா… ” என்று அவள் தாடையை பிடித்து ராக்கி கொஞ்ச…
அவன் கையை தட்டி விட்டவள் “நீ முதல்ல எனக்கு வழியை விட்டுறியா .. “என்று சேரில் இருந்து எழுந்தாள்.
“இரு … ” என்று ராக்கி எழ …
அவனை தள்ளிக்கொண்டு வெளியே வந்தவள் “ஏய் கமலி இன்னுமா டி கையை கழுவுறீங்க.. சீக்கிரம் வாங்க ரெண்டு பேரும் .. இவன் இம்சை தாங்கல … ” என்று அவர்களை அழைத்துக்கொண்டு வெளியே செல்ல…
“ஓய் பீடா என்ன சாப்பிடத்துக்கு காசு குடுக்காம போற… ” என்று ராக்கி அவள் சென்ற திசையை நோக்கி கத்த..
“ம்ம்.. நீ தானே இது நல்ல இருக்கும்.. அது நல்ல இருக்கும்னு வாங்கி குடுத்த.. அப்போ நீயே காசை குடு… ” என்று கிளம்பினாள்.
“போ… போ.. என்கூட பேச பிடிக்காதவ மாதிரி ரொம்ப தான் நடிக்குற… உன் கண்ணுல என் மேல இருக்க லவ்வை நான் கண்டு பிடிச்சுட்டேன். சீக்கிரமே அதை வெளியே கொண்டு வரேன் ” என்றவன்.
“இன்னிக்கு நைட் நான் உன் வீட்டுக்கு வரேன்… இன்னிக்கு நீ எப்படி தூங்குறேன்னு நான் பாக்குறேன் ” என்று அவர்கள் சாப்பிட்ட தட்டை திரும்பி பார்த்தான்.
அவன் சாப்பிட்ட தட்டில் நிறைய நண்டு கூடுகள் இருந்தது. ரதி சாப்பிட சாப்பிட அவளுக்கு நண்டு கூட்டில் இருந்து சதையை எடுத்து நிறைய ஊட்டி இருந்தான்.
பார்க்கலாம் இன்னிக்கு நைட் ரதி என்ன செய்ய போறான்னு…
