EPISODE 14
இரவு வீட்டிற்கு வந்த ராக்கி நேராக குளியல் அறைக்கு தான் சென்றான் . ரதிக்கு மட்டும் ஊட்டி விட நினைத்து வாங்கிய நண்டில் அவளுக்கு ஊட்டிவிட்டுக்கொண்டே தானும் சாப்பிட்டிருக்க.. அதன் பின் விளைவு ராக்கியின் உடலில் சூட்டை கிளப்பி இருந்தது.
ஷவரில் பச்சை தண்ணீரை திறந்து விட்டு சூட்டை தனித்துக்கொண்டு இருந்தான். நீண்ட நேரம் ஷவரில் நின்றவனுக்கு ஓர் அளவுக்கு உடல் சூடு தணிந்து இருந்தது.
குளித்துவிட்டு உடை மாற்றிவிட்டு ஒரு கை இல்லாத பனியனும் , த்ரீ போர்த் ட்ராயரும் அணிந்து வந்தவன் ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டு இருந்த ஓவியாவிடம் வந்தான்.
“என்ன அண்ணா!! அண்ணி கூட கேண்டில் லைட் டின்னரா! இன்னிக்கு… ” என்று அவன் தோளில் இடித்துக்கொண்டு கேட்டாள்.
“அதுக்கு உன் அண்ணி சம்மதிக்கணுமே… எங்க அவ என்னை பார்த்தாலே எரிஞ்சு எரிஞ்சு விழறா… ” என்றான்.
“நீ என்ன பண்ணின அவங்க எரிஞ்சு விழற அளவுக்கு ” என்றாள் ஓவியா.
“ம்ம்.. நான் என்ன பண்ணினேன்… பாவமே சரியா சாப்பிடலையேன்னு கொஞ்சம் என் தட்டுல இருந்த சாப்பாட்டை எடுத்து அவளுக்கு ஊட்டி விட்டேன், அதுக்கு போய் அவ்ளோ கோவிச்சுக்கறா.. என்னை அடிக்காத குறை தான். ” என்றான் ராக்கி.
“ஓஹோ… நீ ஊட்டி விட்டிருக்கியா அண்ணிக்கு ” என்று ஆச்சர்யமாக கேட்டாள்.
“ம்ம்… ” என்று அவளுக்கு ஊட்டி விட்ட தன் கை விரல்களை ஆசையாக பார்த்தான்.
அவள் மென்மையான இதழில் உரசிவிட்டு வந்த தன் விரல்கள் எவ்வளவு பாக்கியம் செய்திருக்கிறது என்று அவனுக்கு தோன்றியது.
“அண்ணா!.. அண்ணா!!.. என்ன அதுக்குள்ள என்ன யோசனை ” என்றாள்.
“ம்ஹும்.. ஒண்ணுமில்ல டா.. நீ சாப்பிட்டியா மாரீஸ் சீக்கிரமே கொண்டு வந்து சாப்பாடு கொடுத்தானா… ” என்றான்.
“ம்ம்ம்.. சாப்பிட்டேன் ,மாரீஸும் சாப்பிட்டு தான் கிளம்புச்சு… ” என்றவள் “சரி ண்ணா ! நீ கொஞ்ச நேரம் டிவி பாரு நான் போய் சீக்கிரமா தூங்குறேன். நாளைக்கு என் பிரெண்ட்ஸ் கூட சேர்ந்து ஒரு ப்ரொஜெக்ட் விஷயமா வெளிய போகணும் ” என்றாள் .
“அண்ணா நீ இப்படி அண்ணிகிட்டே எடுத்ததுமே ரொம்ப ஓவரா உரிமை எடுத்துட்டு ஊட்டி எல்லாம் விடாத.. அப்பறோம் அதுவே அவங்களுக்கு உன்மேல வெறுப்பு வரவும் வாய்ப்பு இருக்கு.. கொஞ்சம் கொஞ்சமா அண்ணிகூட பேசி பழகி அவங்க மனசு முதல்ல இடம் பிடி அப்பறோம் எல்லாமே தானாவே நாடாகும் ” என்று தன் அண்ணனுக்கு அறிவுரை கூறினாள் ஓவியா
“சரி டா பெரிய மனுசி.. இனிமேல் பாத்து நடத்துகிறேன் உன் அண்ணிகிட்டே போதுமா… இப்போ நீ போய் தூங்கு ” என்று அவளை அனுப்பிவிட்டு டிவி ரிமோட்டை எடுத்து ஒவ்வொரு சேனலாக மாற்றிக்கொண்டு வந்தான். “என்ன இன்னிக்கு எந்த படமும் நமக்கு செட் ஆகற மாதிரி ஓடலையே … ” என்று யோசித்தவன் . “சரி பாட்டு வெப்போம் ” என்று மியூசிக் சேனல் ஒன்றை மாற்றி பாட்டை கேட்டுக்கொண்டே தன் மொபைலை எடுத்து ரதியின் வாட்ஸாப்ப்பை ஓபன் செய்தான்.
அவளுக்கு மெசேஜ் அனுப்பலாமா?வேண்டாமா? என்று யோசித்துக்கொண்டு இருந்தவன் . ரதியின் வாட்ஸாப்ப் ஆன்லைன் என்று காட்டவும் ஆர்வமானவன்
“ஹலோ 250.. ” என்று கூடவே கண்களில் ஹார்டின் இருக்கும் ஒரு ஸ்மைலியை சேர்த்து அனுப்பினான்.
அவன் மெசேஜ் அனுப்பிய அடுத்த நொடியே ரதி அவன் மெசேஜை பார்த்துவிட்டாள் என்பதற்கு அறிகுறியாக ப்ளூ டிக் வந்தது.
“அட என்ன அதுக்குள்ள மெசேஜை பார்த்துட்டா… ” என்றான் அடுத்த மெசேஜை தட்டி விட்டான் .
“அக்கா! அது யாரு ரௌடின்னு சேவ் செஞ்சு வெச்சிருக்க.. அவங்க உனக்கு மெசேஜ் பண்ணிருக்காங்க ” என்றாள் .
உடைமாற்றி விட்டு வெளியே வந்த ரதி “இன்னிக்கு என்ன ரொம்ப வேர்க்குது .. வர வர வெயில் ஜாஸ்தியாகிட்டே போகுது சமாளிக்கவே முடியலை ” என்று புலம்பிக்கொண்டே ஏசியை ஆன் செய்துவிட்டு வந்தவள் மாளவிகா பேசியதை கேட்டு
“ஏய் மாலு உன்னை யார் என் வாட்சப்பை எடுத்து நோண்ட சொன்னது. போனா ஏதோ பாக்கணும்னு போன் கேட்டியேன்னு அன் லாக் பண்ணி கொடுத்தா உனக்கு என்ன வேணுமோ அதை மட்டும் பாக்க வேண்டியது தானே… ” என்று அவளிடம் இருந்து தன் போனை பிடிங்கியவள் லாக் செய்துவிட்டு தன் அறையில் இருந்து வெளியே வந்தாள்.
“அக்கா! சாரி … ப்ளீஸ் உன் போனை குடேன். அதுல நம்ம போன மாசம் அம்மாவோட வீடு சைடு கல்யாணத்துக்கு போனோமே.. அப்போ நான் போட்டு வந்த டிரஸ் நல்லா இருக்குன்னு என் பிரெண்ட்ஸ்கிட்டே சொன்னேன். அவங்க அந்த போட்டோஸ் கேக்குறாங்க.. ” என்றாள் .
“ஏன் உன் போன்லையே இருக்குமே.. அதையே அனுப்ப வேண்டியது தான டி.. அவளை ஏன் தொந்தரவு செய்ற.. அவளே இப்ப தான் வேலை முடிஞ்சு வந்திருக்கா… ” என்று சோபனா ஹாலுக்கு வந்தார்.
“அம்மா .. என்னோட போன் பழைய மாடல். அக்கா போன்ல தான் போட்டோஸ் எல்லாமே நல்லா இருக்கும் ” என்று ரதியின் போனை கேட்டு அடம்பிடித்தாள் .
“அந்த போட்டோஸ் எல்லாமே நான் லேப்டாப்பில் ஏத்தி வெச்சிருக்கேன் . நீ அதுல இருந்து உன் போனுக்கு ஷேர் பண்ணிக்கோ… ” என்றாள் ரதி.
“சரிக்கா .. நான் எடுத்துகிறேன் ” என்று லேப்டாப்பை எடுக்க சென்றாள் மாளவிகா.
“அம்மா ராகவ் எங்க இன்னும் வரலையா… ” என்றாள் ரதி .
“அவனோட பிரெண்ட்ஸை பார்த்தது ரொம்ப நாள் ஆச்சுன்னு அவங்களை பார்க்க போய் இருக்கான். லேட் ஆகும்னு சொன்னான் டி… ” என்றார் சோபனா.
“சரிம்மா அப்பா… ” என்றாள் .
“இதோ வந்துட்டேன் டா அப்பா… ” என்று கையில் ஒரு கவருடன் வீட்டிற்குள் நுழைந்தார் மூர்த்தி .
“அப்பா! ஏன் இவ்ளோ லேட்டா வரீங்க. எங்க போயிருந்திங்க.. ” என்றாள்.
“நான் ஆபீஸ்ல இருந்து சீக்கிரமே கிளம்பிட்டேன் டா…. வர வழியில என்னோட பழைய பிரெண்ட் ஒருத்தனை பார்த்தேன். அவன்கிட்டே பேசிட்டு இருந்ததுல நேரம் போனதே தெரியல… ” என்றார்.
“சரிங்க.. அது என்ன கைல கவர்” என்றார்.
“இதுவா.. நம்ம ஏரியால புதுசா ஒருத்தன் குல்ஃபி வித்துட்டு போனான். சரி அப்படியே எல்லாருக்கும் வாங்கிட்டு வந்தேன்” என்றார்.
“அப்பாடா.. குலஃபியா குடுங்க குடுங்க… எனக்கு இன்னிக்கு என்னவோ ரொம்ப வேர்க்குது” என்றவள் அவர் கையில் இருந்த கவரை வாங்கி அதில் இரண்டு குல்ஃபிகளை எடுத்துக்கொண்டாள் .
“அக்கா எனக்கு.. ” என்று அவள் கையில் இருந்த குல்ஃபியை மாளவிகா பிடுங்க போக…
“மாலு இதுல இருக்கு டா.. நீ சாப்பிடு ” என்று மூர்த்தி மாளவிகாவுக்கு எடுத்து நீட்டினார்.
சோபனாவும், மூர்த்தியும் கூட குல்ஃபியை சாப்பிட.. ரதியிடம் இருந்த குலஃபீ மட்டும் பச்சை நிறத்தில் இருக்க.. மற்றவர்களுக்கு எப்போதும் போன மஞ்சள் நிறத்தில் குல்ஃபி இருந்தது,
“அப்பா ! அக்காவுக்கு மட்டும் ஸ்பெஷல் குல்ஃபியா… எனக்கு அது வேணும் ” என்றவள் ரதி கையில் பிரிக்காமல் இருந்த குல்ஃபியை வாங்க போனாள் .
“ஏய்! மாலு போ.. இது எனக்கு தான் ” என்றவள் “நான் என் ரூமுக்கு போய் சாப்பிடுகிறேன்” என்று தன் அறைக்கு சென்றுவிட்டாள் ரதி.
மாளவிகா ரதியை ஏக்கமாக பார்க்க.. “அப்பா உனக்கு நாளைக்கு அதே பிளேவர் கேட்டு வாங்கி தரேன் . இப்போ இதை சாப்பிடு ” என்று தன் மகளை சமாதானம் செய்து குல்ஃபியை சாப்பிட வைத்தார்.
“சோபனா இந்தா இதை பிரிட்ஜில் வெச்சிரு ராகவ் வந்தா சாப்டுக்கட்டும் ” என்று சோபனாவிடம் மீதியை கொடுத்தார்.
இங்கே ரூமுக்கு வந்த ரதி கையில் இருந்த பச்சை நிற குல்ஃபியை சாப்பிட்டு முடித்தவள். மற்றொரு கவரில் இருந்த குல்ஃபியை பிரித்து பார்த்தாள்.
“ச்சே .. இது நோர்மல் குல்ஃபி தான். பச்சை கலர் நல்லா டேஸ்ட் டிஃபரெண்டா இருந்துச்சே… ” என்று ஏமாந்தவள் அதையும் விடாமல் சாப்பிட்டு முடித்தாள்.
இங்கே ரதிக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு அவள் ரிப்ளைக்காக காத்திருந்தவன் மீண்டும் போனை எடுத்து பார்த்துவிட்டு “எங்க மெசேஜை பார்த்துட்டு எதுவும் பதில் அனுப்பாம இருக்காளே.. ஒரு வேல என் மேல கோபமா இருக்காளோ … ” என்று யோசித்தவன் “சரி பேசாம போன் பண்ணி பேசிடலாமா… ஓவி வேற.. நான் கொஞ்சம் அதிகமா செய்துட்டு மாதிரி கேட்டாலே.. ” என்று யோசித்தவன் ரதிக்கு வாட்சப்பிலேயே கால் செய்ய நினைத்தவன் மணியை பார்த்தான். 10 என்று காட்டியது .
“இவ்ளோ நேரம் ஆகிடுச்சே.. ஒரு வேல தூங்கிருப்பாளோ.. ” என்று மீண்டும் வாட்சப்பில் ரதி ஆன்லைனில் இருக்கிறாளா என்று பார்த்தான்.
அதில் ஆப்லைன் காட்டியது .
யோசனையோடு போனையே பார்த்துக்கொண்டு இருந்தவன் ரதியின் வாட்ஸாப்ப் ஆன்லைன் வந்ததும் சட்டென்று ரதிக்கு கால் செய்துவிட்டான்.
அவசரத்தில் நார்மல் கால் செய்வதற்கு பதிலாக வீடியோ கால் செய்துவிட…
“அய்யய்யோ! இந்த நேரத்துல வீடியோ கால் பண்ணினா என்னை தொலைச்சிருவாளே .. இப்போ என்ன செய்றது ” என்று போனை கட் செய்ய போக… அதற்குள்ளாக ரதி அவன் வீடியோ காலை அட்டென்ட் செய்துவிட்டாள்,
“உனக்கு நேரம் காலமே எதுவும் கிடையாதா… இப்படி நேரம் கெட்ட நேரத்துல தான் கால் பண்ணுவியா.. அதுவும் வீடியோ கால். அதுவும் இந்த நேரத்துல… ” என்று போனை அட்டென்ட் செய்ததும் பட படவென பட்டாசாக எடுத்து தள்ளினாள் ரதி.
“சரி சரி.. திட்டாத உனக்கு வாய்ஸ் கால் பண்ண தான் நினைச்சேன் . நீ ஆன் லைன் வந்ததும் சந்தோஷத்துல தெரியாம வீடியோ காலை டச் பண்ணிட்டேன் ” என்றான் ராக்கி .
“ஓ! நான் ஆன்லைன் வந்தா உனக்கு அவ்ளோ சந்தோசமா… ” என்றாள் ரதி .
“ஆமா… ” என்று சோபியாவில் சாய்ந்து படுத்துக்கொண்டே பேசினான் ராக்கி .
“சரி சொல்லு எதுக்கு நீ எனக்கு கால் பண்ணின.. .” என்றாள்.
“சும்மா தான் நீ என் மேல கோபமா இருக்கியான்னு தெரிஜுக்கலாம்னு தான் கால் பண்ணினேன் ” என்றான்.
“எதுக்கு கோபம் ” என்றாள் தெரியாமல்.
“அதுவா.. நான் ஹோட்டல்ல உனக்கு ஊட்டி விட்டேனே. நீயும் போகும்போது என்னை முறைச்சுட்டே போனியே.. நான் ஓவியாகிட்டே சொல்லி புலம்பினேன். அவ தான் உன்கிட்டே மன்னிப்பு கேக்க சொன்னா .. அதான் சாரி கேட்கலாம்னு உனக்கு மெசேஜ் அனுப்பினேன். நீ பார்த்துட்டு ரிப்ளை பண்ணல அதான் கால் பண்ணினேன்” என்றான் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு.
அவன் முகம் வாடுவதை பார்த்து சிரித்தவள் “சரி சரி அப்போ வள வழன்னு பேசாம சாரி கேளு நான் போனை வெக்கணும் ” என்று அவனை அவசர படுத்தியவள் தன் உடலில் புழுக்கம் அதிகம் ஆக அவள் பனியனை சரி செய்துகொண்டே கழுத்தில் வழிந்த வியர்வையை துடைத்துவிட்டுக்கொண்டே போனை மேஜை மேல் வைத்தவள் ராக்கியிடம் பேசிக்கொண்டே எழுந்து சென்று ஏசியை அதிக படுத்திவிட்டு வந்தாள்.
அப்போது அவள் அணிந்து இருந்த நைட் ட்ரெஸ்ஸை பார்த்த ராக்கி வாய் அடைத்து போய் இருந்தான்.
