Home Uncategorizedஇராக்கதனின் ரதி அவள் part-1-15

இராக்கதனின் ரதி அவள் part-1-15

by Layas Tamil Novel
236 views

EPISODE 15

மயக்கம் தெளிந்து கண்களை சுருக்கிக்கொண்டு எழுந்த ரதி  நெளிந்துகொண்டே திரும்பி படுக்க… அவள் முகத்தருகே ராக்கியின்  முகம் அவள் மூக்கை உரசிக்கொண்டு இருந்தது.

அவனை அங்கு பார்த்தவள் பட்டென்று எழுந்து அமர்ந்தவள் அந்த அறையை  நோட்டம்விட்டாள்

அறையின் நடுவில் ஒரு பெரிய மரக்கட்டில்  போட்டிருக்க அதில் தான் ரதி அமர்ந்து இருந்தாள். அந்த அறை சுவற்றில் WWF இல் வரும் அனைவரின் படமும் ஒட்டப்பட்டு இருந்தது . அதற்கு மத்தியில் ராக்கியின்  சட்டையில்லா புகைப்படம் மாட்டப்பட்டு இருந்தது .

அதை வாயை திறந்து பார்த்தவள் . அவன் உடற்கட்டை கண்டு ஆச்சர்யப்பட்டவள் “இப்போ இது ரொம்ப முக்கியம் அவன் எப்படி இருந்த உனக்கு என்ன முதல்ல அவன் இருக்கருங் இடத்துக்கு நீ எப்படி வந்தேன்னு யோசிச்சியா ” என்று அவள் மனம் ரதியின் மூளையை தட்டி எழுப்பியது.

உடனே தன் அருகில் திரும்பி ராக்கியை  பார்க்க.. அவள் திரும்பிய நேரம் ராக்கி  அவள் முகத்தருகில் தன் முகத்தை கொண்டு வர .. இருவரின் இதழும் உரசிக்கொண்டது . சட்டென்று அவனை விட்டு ரதி விலக…

“அஹ்!! நேத்து நைட் எல்லாம் முத்தம் வேணும்.. நீ வேணும்னு என்ன அந்த டார்ச்சர் பண்ணின.. இப்போ என்ன என்னை பார்த்ததும் ஜகா வாங்குற… ” என்று தன் அருகில் இருந்தவள் இடையில் கைகொடுத்து தன்னோடு இறுக்கி பிடித்தான்.

“ஷ்… ” என்று அவன் பிடியில் முகத்தை சுளித்தவள் .

“ஏய்! நீ என்ன பண்ணிட்டு இருக்க.. இப்படி என்கிட்டே ரொம்ப ஓவரா  அட்வான்டேஜ் எடுத்துகிற.. உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க டா… ” என்று கதியவள் அவனை விட்டு வேகமாக விலகி கட்டிலில் இருந்து எழுந்து நின்றாள்.

ரதியை என்ற இறங்க பார்த்து ரசித்தவன் குப்புற படுத்துக்கொண்டு கன்னத்தில் கைவைத்த படி ரதியை நிமிர்ந்த்து பார்த்தவன் “சும்மா சொல்ல கூடாது பீடா என்னோட ட்ரேஸ்ல நீ ரொம்ப அழகா இருக்க… ” என்றான்.

அவன் சொன்னதும் அவசரமாக தன்னை குனிந்து பார்த்தவள் ஆவென வாயை பிளந்தாள் .

ராக்கியின்  சட்டையும், லுங்கியும் அணிந்து இருந்தாள்  ரதி .  

“ஏய் உன் டிரஸ் நான் எப்படி ?,.. ஆமா  நான் எப்படி இங்க வந்தேன். இது யாரோட இடம் ” என்று அவன் அறையை ஆராய்ந்தபடி ரதி கேட்டாள்.

“இது என்னோட பெட் ரூம் தான் நீதான் நேத்து நைட் எனக்கு போன் பண்ணி உன்னை என் வீட்டுக்கு கூட்டிட்டு போக சொன்ன.. உன் வீட்ல இருக்குறவங்க உன்னை தடுத்த்தும் இனி நீ என்கூட தான் இருப்பேன். அந்த வீட்டுக்கு வரமாட்டேன்னு சண்டை எல்லா போட்டுட்டு வந்தியே அதை மறந்துட்டியா… ” என்றான்.

ராக்கி சொன்னதை கேட்டு அதிர்ந்தவள் “நீ.. நீ… பொய் சொல்ற..  நான் உனக்கு போன் பண்ணினேனா … இல்ல … ” என்று அவள் மறுக்க..

“நீயே நல்ல யோசிச்சு பாரு உன்னை போய்  குளிச்சிட்டு வான்னு நான் வீடியோ கால்ல சொன்ன அப்போ நீ குளிச்சிட்டு வந்து எந்த நிலைமையில் எனக்கு கால் பண்ணினேன்னு யோசிச்சு பாரு அப்போ நான் சொல்றது எல்லாம் புரியும் ” என்று அவளை ஒரு மார்க்கமாக பார்த்தான்.

“என்ன இவன் பார்வை இப்படி இருக்கு.. நேத்து குளிச்சுட்டு வந்து இவனுக்கு நான் கால் பண்ணினேனா ! நான் எந்த நிலைமையில் இவனுக்கு கால் பண்ணினேன் ” என்று ரதி யோசிக்க…

அவளுக்கு எதுவுமே நினைவில் வராமல் அவளை பழி  வாங்க..”ஐயோ ! கடவுளே.. எனக்கு நேத்து நைட் என்ன நடந்துச்சுனே தெரியலையே…” என்று தலையை பிடித்துக்கொண்டு கட்டிலில் அமர்ந்தாள்.

“அண்ணா! அண்ணியை எதுக்காக இப்படி டென்ஷன் பண்ணிட்டு இருக்க…  பாவம் அவங்களே என்ன நடந்துச்சுனு தெரியாம குழம்பி போயிருக்காங்க நீங்க என்னடான்னா அவங்களை  இப்படி கடுப்பேத்திட்டு இருக்க… ” என்று கையில் டீ  கப்புடன் அவர்கள் இருந்த அறைக்குள் நுழைந்தாள்  ஓவியா அவள் பின்னால்  மாரீஸும் கையில் காபி கப்புடன் வந்தான்.

“ஆமா நீ என்னை இப்போ என்னனு கூப்பிட்ட… ” என்று ஓவியாவை கேட்டாள்  ரதி.

“அய்யய்யோ அவசரத்துல அண்ணின்னு வாய் தவறி சொல்லிட்டேனே… இப்போ என்ன செய்றது ” என்று ஓவியா விழித்தாள்.

“அதை விடு.. ” என்று பேச்சை திசை திருப்பிய மாரீஸ்.

“என்னம்மா.. சிங்காரி.. தூங்கி எழுந்துட்டியா… நைட் என்ன சரக்கு போட்ட… எங்க எல்லாரையும் அந்த பாடு படுதிட்ட… ” என்றான்.

அவனை புரியாமல் ரதி பார்க்க…

“என்ன  சீனியர் மார்ஸ் என்ன சொல்றான்னு புரியலையா உங்களுக்கு ” என்றாள் ஓவியா.

ஆமாம் என்று ரதி தலையை ஆட்ட…

“முதல்ல இந்த காபியை குடிங்க .. நான் நடந்ததை  சொல்றேன் ” என்றவள் காபியை ரதியிடம் குடுத்துவிட்டு நேற்று ரதியிடம்  ராக்கி  போன் பேசியதில் இருந்து ராக்கி  சென்சார் செய்து என்னவெல்லாம் ஓவியாவிடம் சொன்னானோ அதை எல்லாம் ஒன்றுவிடாமல் சொன்னவள்.

“உங்க வீட்ல இருந்து நேரா உங்களை கூப்டு ஹாஸ்பிடல் போய்ட்டாரு அண்ணா.. அங்க உங்களை செக் பண்ணின டாக்டர் நீங்க ட்ரக் எடுத்திருக்கிங்கன்னு சொல்லிருக்காரு ” என்றாள்.

“என்ன சொல்ற ஓவியா நான் ட்ரக்  எடுத்திருக்கேனா! அதெல்லாம் இல்ல… ” என்று பதறினாள் ரதி.

“ஓய்  பீடா பதறாத.. நேத்து நைட் நீ சாப்டியே குல்பி அதுல தான் போதை மருந்து கலந்து வித்திருக்காங்க. நீ சாப்பிட்டு போட்ட குல்பி கவரை எடுத்துட்டு போய்  அதில் ஒட்டி இருந்த ஐஸை  டெஸ்ட் பண்ணி பார்த்ததுல தெரிஞ்சிருச்சு. டாக்டர்  செக் பண்ணிட்டு உனக்கு போதை இறங்க எப்படியும் 4 மணி நேரம் ஆகிடும் அதுவரை உன்னை கவனமா பாத்துக்க சொன்னாரு” என்றான்.

“அப்போ ஹாஸ்பிடல்ல இருந்து நீ என்னை உன் வீட்டுக்கு கூப்டு வந்துட்டியா” என்றாள்.

“ம்ஹும் கூப்டு வரல.. உன்னை மகாராணி மாதிரி கையில தூக்கிட்டு  வந்துச்சு எங்க ராக்கி அதை தெரிஜுக்க… ” என்றான் மாரீஸ்.

“ஆமா இவனே எப்போன்னு அலையுறான் . இதை வேற பெருமையா இந்த லூசு சொல்லுது” என்று நினைத்தவள்.

“உங்க அண்ணனை யாரு என்னை தூக்கிட்டு வர சொன்னது . ஏன் எனக்கு கால் இல்லையா நான் நடந்து வர மாட்டேனா… ” என்றாள்.

“ஆமாமா … உனக்கு நல்லாவே நடக்க தெரியும் அதையும் நீயே பாரு ” என்று மாரீஸ் தன் மொபைலில் இருந்து ஒரு விடியோவை ரதியிடம் காட்டினான்.

அதில் வீட்டில் அணிந்திருந்த நைட் கவுன் அணிந்திருந்த ரதியை ராக்கி தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் வர…

“ம்ஹும்..ம்ஹும்.. என்னை இறக்கி விடு டா ரௌடி ராஸ்கல். எனக்கு நடக்க தெரியும் நீ சும்மா சும்மா என்னை தூக்கிட்டு தெரியாத… ” என்று அவன் கையில் இருந்து துள்ளிக்குதித்து கீழே இறங்கி இருந்த ரதி.

அவள் இருந்த இடத்தை சுற்றி பார்த்தவள் எதிரே இருந்த ஓவியாவை பார்த்து “ஏய் மினுக்கி.. நீ இங்க என்ன பண்ற… ” என்று ஓவியாவின் தோள்களில் கையை போட்டு அவள் மேல் சாய்ந்தாள்.

“அண்ணா என்ன இது அண்ணியை  இந்த கோலத்துல நம்ம வீட்டுக்கு தூக்கிட்டு வந்திருக்க… ஆமா…  அண்ணி ஏன் ஒரு மாதிரி இருக்காங்க ” என்றாள்  தன் மேல் விழுந்த ஓவியாவை தாங்கி பிடித்த படி.

“அண்ணி .. அண்ணி.. ” என்று ஓவியா வார்த்தைக்கு வார்த்தை கூப்பிடுவதை கேட்ட ரதி அவளை பார்க்க…

ஓவியா அசடு வழிய சிரித்தவள் “அது வந்து .. நீங்க .. நேத்து ” என்று சமாளிக்க முயல…

அவளை முறைத்தவள் மீண்டும் மொபைலில் கவனம் செலுத்தியவள் “அதை உங்க அண்ணிகிட்டேயே கேளு.. ஏன் அவ இப்படி இருக்கான்னு ” என்று சொல்லிவிட்டு ராக்கி சோபாவில் போய் அமர…

“என்ன ஆச்சு அண்ணி.. ஏன் ஒரு  மாதிரி இருக்கீங்க… வாங்க வந்து இப்படி உக்காருங்க… ‘ என்பர் ஓவியா அவள் கையை பிடிக்கப்போக…

“எனக்கு ஒண்ணுமில்ல நான் நல்ல தான் இருக்கேன் . நீ என் கையை விடு முதல்ல ” என்று அவள் கையை உதறிய ரதி.

“டேய் ரௌடி ராஸ்கல் முதல்ல என் வீடு சோபாவில் இருந்து எழுந்திரு டா.. எனக்கு தூக்கம் வருது நான் தூங்கணும் ” என்று அவனை நோக்கி இரண்டு அடி  தான் எடுத்து வைத்திருப்பாள் அப்படியே கால் இடறி தரையில் பொத்தென விழ…

அதை பார்த்தவள் “ஷ்… ” என்று முகத்தை சுளித்தவள் அதற்கு மேல் விடியோவை பார்க்காமல் ஆப்  செய்துவிட்டு எதிரே இருப்பவர்களை பார்த்தாள்.

“இப்போ புரிஞ்சிருக்குமே நான் ஏன் உன்னை தூக்கிட்டு வந்தேன்னு.. “என்று அவளை நக்கல் செய்தான் ராக்கி .

“அண்ணா நீ சும்மா இரு.. அண்ணியே ஏற்கனவே டென்ஷன்ல இருக்காங்க ” என்றவள்.

“நேத்து நீங்க சாப்பிட குல்பியால தான் இவ்ளோ பிரச்னையும். நான் தான் உங்களை கூட்டிட்டு போய்  என்னோட நைட்டியை போட்டு விட்டேன். ஆனா என் அண்ணன் நேத்து உங்கள ஹாஸ்பிடல்ல  இருந்து கூட்டிட்டு வந்தப்பறோம் டிரஸ் மாத்திட்டு வந்துச்சு. அதை பார்த்துட்டு என் அண்ணன் போட்டிருக்க அதே டிரஸ் தான் வேணும்னு அடம்பிடிச்சு என் அண்ணன் ட்ரெஸ்ஸை கழட்டி வாங்கிட்டு தான்  மறுவேலை பார்த்திங்க அண்ணி …” என்று சிரித்தாள் ஓவியா.

“என்னை அண்ணினே  முடிவு பண்ணிட்டாளா இவ … இதெல்லாம் இவனோட வேலையா தான் இருக்கும் ” என்று ராக்கியை திரும்பி முறைத்துக்கொண்டே கையில் இருந்த காபியை குடித்தாள்.

ராக்கியும் காபியை குடித்துக்கொண்டே ரதியை பார்வையாலேயே பருகினான்.

அப்போது ரதியின் போனிற்கு கால் வர.. அதை சார்ஜ் போட்டு வைத்திருந்த ஓவியா எடுத்து வந்து ரதி கையில் கொடுத்தவள் “அண்ணி உங்க வீட்ல இருந்து தான் கால். ஏதாவது சொல்லி சமாளிச்சிருங்க.. ” என்றாள்.

அவளிடம் போனை  வாங்கியவள் போனை பார்த்தாள்  சோபனா தான் அழைத்திருந்தார். யோசனையோடு காலை அட்டென்ட் செய்து “ஹலோ அம்மா! ” என்று தான் சொல்லி இருப்பாள்.

“ஏய் ரதி எங்க டி கலங்கார்த்தாளையே கிளம்பி போய்ட்ட.. எங்க போறேன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டு போக மாட்டியா டி.. ” என்று அவர் பொரிந்து தள்ள…

“ஷ்!! அம்மா! ஏன் இப்படி கத்துறிங்க… நான் கமலி கூட வெளியே வந்துட்டேன். எல்லாரும் தூங்கிட்டு இருந்திங்க ஏன் எழுப்பணும்னு சொல்லாம வந்துட்டேன். நான் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவேன். நீங்க போனை வையுங்க அவரை போலவே விடாமல் போன் பேசிவிட்டு வைத்தவள்” பெருமூச்சுவிட்டவள் சோபாவில் அமர…

“அண்ணி சூப்பர்.. நல்லா சமாளிச்சீய்ங்க போங்க… ” என்றாள்.

“மினுக்கி என்னை எதுக்கு நீ அண்ணி அண்ணின்னு கூப்டுட்டே இருக்க… ” என்றாள்  அதட்டலாக…

“அது.. பியூச்சர்ல என் அண்ணியா வரப்போறிங்க.. .இப்போ இருந்தே கூப்டு பழகிக்கிறேன் அண்ணி ” என்றாள்.

“அது நடக்காது . இனிமேல் நீ என்னை இப்படி கூப்பிடாத  சரியா ” என்றாள்  கறாராக.

ரதி சொன்னதை கேட்டு ஓவியாவின் முகம் வாடிவிட.. அதே சோகத்தோடு ராக்கியை பார்த்தாள்.

அவளிடம் வந்தவன் “நீ கவலையே படாத  என்னிக்கு இருந்தாலும் என் பீடா தான் இந்த வீட்டுக்கு என் பொண்டாட்டியா வர போறா.. சரியா ” என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும்படி.

“சரிண்ணா ” என்று சந்தோசமானவள் “அண்ணி … ” என்று ரதியை கூப்பிட…

ரதி ஓவியாவை முறைக்கவும் “சாரி சீனியர்.. நீங்க என் ரூமுக்கு போய்  குளிச்சிட்டு வாங்க நான் உங்களுக்கு சாப்பிட டிபன் ரெடி பண்ணி வெக்குறேன் ” என்று கிச்சனுக்கு செல்ல…

ஓவியாவின் அறையை மாரீஸிடம் கேட்ட ரதி அவள் அறைக்குள் சென்று கதைவடைத்தாள்.

“என்ன ராக்கி  உன் பீடா வழிக்கு  வராது போல.. இப்படி விறைப்பா இருக்கா.. ” என்றான் மாரீஸ்.

“அவ வெளியில  தான் பாக்க  விறைப்பா இருக்கா ஆனா உள்ளுக்குள்ள நான் இருக்கேன் டா.. அது நேத்து நான் அவ கூட இருந்த அந்த ஒரு ராத்திரியே போதும் . அவ மனசுகுள்ள நான் எப்பவோ பட்டா போட்டுட்டேன் டா… ” என்றான்.

“சரி நீ சொன்னது மாதிரி இருந்தா சந்தோசம் தான் ” என்றவன் ஓவியாவுடன் கிச்சனில் உதவி செய்ய போனான்.

ரதி குளித்து முடித்து வந்தவள் அவளுக்காக ஓவியா சமைத்து வைத்ததை பார்த்து வாய் அடைத்து போனாள் .

ரதியை அமர வைத்து அவளை சாப்பிடவைத்து ராக்கியுடன் அனுப்பி வைத்தாள்  ஓவியா.

வழி  எங்கும் ஒரு வார்த்தை கூட ராக்கியிடம் பேசாமல் வந்தவள். அவள் வீட்டுப் பக்கத்தில் வந்ததும் வண்டியை நிறுத்தியவன் “நீ இங்கையே இறங்கிக்க உன் வீட்டுல யாராவது நம்ம ரெண்டு பேரையும் சேர்த்து பார்த்துட்டா அப்பறோம் உனக்கு தான் பிரச்சனை ஆகும்” என்றான்.

அவள் எதுவும் பேசாமல் வண்டியை விட்டு இறங்கி ராக்கியிடம் சொல்லிக்கொள்ளாமல் நடந்தாள்.

அதை கண்டு ராக்கிக்கு  உள்ளுக்குள் சற்று வருத்தமாக இருந்தாலும் அதை பெரிதாக காட்டிக்கொள்ளாமல் வண்டியை ஸ்டார்ட் செய்தான்… சட்டென்று நின்ற ரதி திரும்பி ராக்கியை பார்த்தாள்.

அவள் திரும்பியதும் சந்தோசமானவன் சிரித்தமுகமாக அவளையே பார்க்க…

“நேத்து நான் இருந்த நிலைமைக்கு நீ என்கிட்டே எவ்ளோ அட்வான்டேஜ் வேணா எடுத்திருக்கலாம். ஆனா நீ ரொம்ப கண்ணியமா  நடந்துக்கிட்டே.. அதுக்கு தேங்க்ஸ்” என்றாள்.

“நான் அவ்ளோ நல்லவன் எல்லாம் இல்ல.. நேத்து நான் என்னோட பிரம்மச்சரியத்தை கடைபிடிச்சதுக்கு ஒரு காரணம் இருக்கு,, ” என்றான் ராக்கி.

“என்ன காரணம் ” என்றாள் ரதி .

“உன்னை கல்யாணம் பண்ணினத்துக்கு அப்பறோம் தான் இந்த ராக்கி கண்ணன் கழியணும்னு காத்துட்டு இருக்கேன்”என்றான் குறும்பாக…

“கண்ணன்.. கழியனும் … ” என்று புரியாமல் அவனை பார்த்தவளுக்கு ராக்கி  சொன்னதன் அர்த்தம் புரியவே…

“போடா ரௌடி ராஸ்கல் ” என்று வெட்கபட்டுக்கொண்டே திரும்பி அவள் வீட்டிற்கு ஓடி விட்டாள்.

“டேய் ரௌடி சீக்கிரமே உன்னோட பிரம்மச்சர்யத்தை கலைக்க நேரம் வந்திருச்சு போல.. ” என்று தனக்கு தானே பேசிக்கொண்டு எங்கிருந்து கிளம்பி இருந்தான்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured