Home Uncategorizedஇராக்கதனின் ரதி அவள் part-1-16

இராக்கதனின் ரதி அவள் part-1-16

by Layas Tamil Novel
203 views

EPISODE 16

“டேய் ராக்கி  என்ன டா  கொஞ்ச நாளா சரியா வீட்டு பக்கம் வர்ரதில்லன்னு உன் அண்ணி கம்ளைண்ட் பண்ணிட்டு இருக்கா… என்ன ஆச்சு உடம்பு எதுவும் சரிய இல்லையா” என்றார் சிவராஜன்.

“அதெல்லாம் எதுவும் இல்லன்னா.. நான் நம்ம வேலையா தான் வெளிய போக  வர இருந்தேன். அதனால வீட்டுக்கு சரியா வரல அதனால அண்ணி அப்படி சூலி இருப்பாங்க. நான் சாயங்காலம் வேலை முடிச்சிட்டு அண்ணியை போய்  பாக்குறேன் ” என்றான் பவ்வியமாக .

” சரி டா..  அப்பறோம் நான் ஒரு பத்து நாள் உன் அண்ணியோட கனடா போகலாம்னு இருக்கேன். என் பொண்ணு வேற என்னை அங்க வரசொலிட்டே இருக்கா. நான் அஃபிஸியல் வேலையை எல்லாம் என் பிஏ கிட்டே பார்க்க சொல்லிட்டேன். மத்த வேலை எல்லாம் நீ இருந்து கவனமா பத்துக்குவா தானே ” என்றார்.

“அதெல்லாம் நான் பார்த்துகிறேன் அண்ணா.. நீங்க வேற எதுவும் வேலை இருந்தா ஒரு போன் பண்ணுங்க போதும் நான் செய்துடறேன் ” என்றான்.

“சரி இன்னிக்கு முக்கியமான ப்ரோக்ராம் இருக்கு அது உனக்கு நியாபகம் இருக்கில்ல.. சரியாய் 2 மணிக்கு நாம போல்ஸ் ஹெட் ஆபிஸ்ல இருந்தாகணும் நீ சரியா வேலையை முடிச்சிட்டு இங்க 1 மணிக்கு வந்திரு… ” என்றவர் தன் பியேவை அழைத்து  “அந்த போட்டியை ராக்கிகிட்டே குடுத்திரு” என்றார்.

“ஐயா ! சொல்றேனேன்னு தப்பா எடுக்காதிங்க… எப்படி இவனை நம்பி இவ்ளோ பெரிய பொறுப்பை எல்லாம் கொடுக்கிறிங்க.. இவன் நம்மளை ஏமாத்த மாட்டான்னு  என்ன நிச்சயம் ” என்று தன் கையில் இருந்த பெட்டியை ராக்கியிடம் தராமல் CM இடம் கேட்டான் அவர் பிஏ ராஜரத்தினம்.

“இங்க பாரு நான் என் விசயத்துல  நம்பிக்கை வெக்குற ஒரே ஆள் ராக்கி  தான். அவன் எந்த சூழ்நிலையிலும் எனக்கு துரோகம் பண்ண பண்ண மாட்டான் அதை தெரிஞ்சுக்க நீ முதல்ல… நீ என்கிட்டே வந்து 2 வருஷம் தான் ஆச்சு.. ஆனா இவன் என்கிட்டே 8 வயசுல இருந்து வேளைக்கு இருக்கான். தேவை இல்லாம கேள்வி கேக்குறதை விட்டுட்டு முதல்ல அந்த போட்டியை அவன்கிட்டே குடு ” என்றார் கோபமாக.

ராஜரத்தினம் அதற்கு மேல் எதுவும் பேசாமல் ராக்கியிடம் பெட்டியை நீட்ட…

அதை வாங்கிகொண்டவன் “அண்ணா எனக்கு எந்த பிரச்னையும் இல்ல.. பேசாம இந்த பினாமியில வர பணப்பொறுப்பை எல்லாம் நம்ம ராஜரத்தினதுக்கே கொடுத்திருங்க.. நான் மத்த வேலை எல்லாம் பார்த்துகிறேன்” என்றான் ராக்கி பவ்வியமாக CM  பார்த்து .

“டேய் ராக்கி  இந்த பண டீலிங்., வரவு செலவு கணக்கு எல்லாம்  உனக்கும், எனக்கும் மட்டும் தான் . இதுல யார் வந்தாலும் அதை நான் ஒத்துக்க மாட்டேன். இவன் சொன்னதை எல்லாம் கேட்டுட்டு நீ முடியாதுனு சொன்னா நான் விட்டுடுவேனா… முதல்ல இதை சேர்க்க வேண்டிய இடத்துல சேர்த்துட்டு நேரா ப்ரோக்ராம் நடக்குற இடத்துக்கு வந்திரு சரியா ” என்றவர் தனது கட்சி அலுவலகத்தில் இருந்து கிளம்பி சென்றார்.

அவர் பின்னால்  சென்ற ராஜரத்தினம் “உன்னை எவ்ளோ நாள் தான் இப்படி இந்த ஆளு நம்பிட்டு இருக்கான்னு நானும் பாக்குறேன் டா.. ஒரு நாள் இல்ல ஒரு நாள் இந்த பணத்தை எல்லாம் நீ தூக்கிட்டு ஓடப் போற… அப்பறோம் தெரியும் இந்த ஆளுக்கு ” என்று ராக்கியை பற்றிய தன் எண்ணங்களை யோசித்துக்கொண்டே ராக்கியை  முறைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றார்.

அவன் பார்வையில் இருந்த வெறுப்பை ராக்கியால் உணர முடிந்தது.  அதை கண்டுகொள்ளாமல் தன் வேலையை கவனிக்க சென்றான்.

ராஜரத்தினத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இப்பொது விட்டது பின்னாளில் சிவச்சந்திரன்னுக்கும், ராக்கிக்கும் இடையே பிரச்னையை ஏற்படுத்தும் என்று அவனுக்கு தெரியாது.

சிவராஜன் கொடுத்த பணத்தை சேர்க்க வேண்டிய இடத்தில சேர்த்துவிட்டு நேராக தலைமை காவல் அதிகாரிகள் நடத்தும் இடத்திற்கு சென்றான்.

சிவராஜன் வருவதற்கு முன்பாகவே ராக்கி வந்துவிட்டான். அங்கே பாதுகாப்பெல்லாம் சரியாக இருக்கிறதா என்று தன்  தரப்பில் சரிபார்த்துக்கொண்டவன் போனில் சிவராஜனின் அஃபிஷியல் பாதுகாவலர்களுக்கு செய்தி அனுப்பிய பின் தான் CM கார் கிளம்பி இருந்தது.

CM நிகழ்ச்சி நாடாகும் இடத்திற்கு வர..  வாசலிலேயே அவருக்காக காத்திருந்த ராக்கி  அவர் காரின் பின்னால்  ஓடி வந்தவன் கார் நின்றதும் சிவராஜன் அமர்ந்து இருந்த கார் கதவை திறந்துவிட்டு அவரை பத்திரமாக மேடைஏற்றி அமர வைத்தவன் அவர் பின்னால் CM  மிற்கு பாதுகாப்பாக நின்று கொண்டான். அவன் பின்னால் CM  Z கேட்டகிரி ஆட்கள் நின்று கொண்டனர். அந்தத் அளவுக்கு சிவராஜன் ராக்கிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். அவனை நம்புகிறார்.

தலைமை காவல் அதிகாரி குருசாமி வந்தவர் சிவராஜனுக்கு மரியாதையை செலுத்திவிட்டு நேராக பதவியேற்பு விழாவை நடத்த சொல்லி உத்தரவிட்டார்.

இன்று போலீஸ் துறையில் பல்வேறு பிரிவுகளில் புதிதாக ட்ரைனிங் முடிந்து வந்தவர்களுக்கு பதவியேற்பு நடக்கிறது.

பதவிப் பிரமாணம்என்பது, போலீஸ் இலாக்காவில் ஒரு பதவியை ஏற்றுக்கொள்வதற்கு முன் அந்தப் பதவியின் கடமைகளையும் பொறுமைகளையும் நிறைவேற்றுவதாகவும், சட்டதிட்டங்களை பின்பற்றுவதாகவும், நாட்டின் அரசியலமைப்பு மற்றும் சட்டதிட்டங்களை பாதுகாப்பதாகவும் ஒரு நபர் எடுக்கும் உறுதிமொழியாகும். 

கடை நிலை ஊழியரின் இருந்து முக்கிய பொறுப்பில் பதவி வகிப்பவர்கள் வரை இந்தூர் இந்த பதவி பிரமாணம் நடக்க இருக்கிறது.

தலைமை கான்ஸ்டபிள்,  உதவி  சப் கான்ஸ்டபிள் , தலைமை காவல் அதிகாரிகள் என்று  காவல் துரையின் பல்வேறு இலாக்காவில் இருந்து பதவி ஏற்க வந்திருந்தவர்கள் குடும்பமும் இங்கு கூடி இருந்தது ,

ஒவ்வொருவராக அழைத்து அவர்களுக்கான பொறுப்பில் சேர்வதற்கான ஆர்டர்களை கொடுத்துக்  கொண்டு இருக்க…

இதையெல்லாம் மேடையில் முதலமைச்சருக்கு பின்னால் நின்று பார்த்துக்கொண்டு இருந்த ராக்கி தூரத்தில் தன்னை யாரோ குறுகுறுவென பார்ப்பதை உணர்ந்தவன் அந்த திசையை திரும்பிப்பார்க்க…

அது பத்திரிக்கையாளர்களுக்காக இங்கு நடக்கும் நிகழ்வுகளை படம் பிடிக்க ஒதுக்கி இருந்த இடம் .

அத்தனை காமெராக்களும் பதவியேற்பு நிகழ்ச்சி நடக்கும் இடத்தை போகிஸ் செய்து இருக்க… ஒரே ஒரு கேமரா மட்டும் ராக்கி  நின்று இருந்த இடத்தை போகஸ் செய்திருந்தது. அவன் அந்த கேமராவை உற்று கவனிக்க ஆரம்பித்தான்.

ராக்கிக்கு  முதலில் தன்னை தான் அந்த கேமரா போகஸ் செய்கிறது என்று தோன்றிக்கொண்டு இருக்க..  ஆனால் அவனுக்கு  ஏதோ சரி இல்லை என்று மட்டும் தோன்றியது .

அது நீண்ட நேரம் முதலமைச்சர் இருக்கும் இடத்தையே போகஸ் செய்யவும் தன் அருகில் நின்று இருந்த கார்ஸிடம் திரும்பி ஏதோ கூறினான்.

அடுத்து முதலமைச்சர் திரு சிவராஜன் அவர்கள் IPS அதிகாரியாக பதவி ஏற்க இருக்கும் திரு ராகவ்  மூர்த்திக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார்  என்று குருசாமி சிவராஜனை மேடைக்கு அழைத்தார்.

ராகவ் மூர்த்தி என்ற பெயரை கேட்டதும்  ராக்கிக்கு எங்கோ இந்த பெயரை கேட்டது போல இருக்கிறதே என்று யோசனையோடு வருவது யார் என்று பார்க்க ஆவலானான்.

சிவராஜன் எழுந்து அங்கே கூடி இருந்த மக்களை பார்த்து கையை உயர்த்தி தன் சந்தோசத்தை வெளிப்படுத்திக்கொண்டே முன்னே வந்தார்.

அவர் வந்து  நின்றதும் ராகவ் பெயரை அழைக்க.. தான் அமர்ந்து இருந்த இடத்தை விட்டு எழுந்து மேடை நோக்கி நடந்து வந்தான்.

அவனை பார்த்த மாத்திரத்திலேயே ராக்கிக்கு  ஆச்சர்யமானது. தான் யூகித்தது சரி தான் என்று நினைத்துக்கொண்டவன் .

“இவன்  இன்னிக்கு பதவி ஈர்ப்பு விழாவிற்கு வந்திருந்தாள் அப்போ கண்டிப்பா இவன் குடும்பம் மொத்தமும் வந்திருக்குமே!… அப்போ நம்ம ஆளும் இங்க தான் இருப்பா.. ” என்று ஆர்வமாக மேடைக்கு கீழே பதவி ஏற்க வந்த குடும்பங்கள் அமர்ந்து இருந்த இடத்தில் ரதியும், அவள் குடும்பமும் எங்கே இருக்கிறார்கள் என்று தேட துவங்கினான்.

அவன் கண்ணிற்கு மூர்த்தி, சோபனா, மாளவிகா மூவரும் தென்பட்டார்களே ஒழிய ரதியை அங்கு காணவில்லை. “இவ மட்டும் எங்க போனா… எப்பவும் என்னை அலைய விடறதே இவ வேலையா போயிருச்சு.. இருக்கட்டும் அண்ணனை அனுப்பிட்டு இவளை தேடிக்கலாம்” என்று நினைத்தவன் மேடையில் ராகவிற்கு சிவராஜன் பதவிப்பிரமாணம் செய்துவைக்க.. அதை பார்த்துக்கொண்டு இருந்தான்.

ராகவ்வும் , சிவராஜனும் போட்டோவிற்கு போஸ் கொண்டு இருக்க.. அப்போது தூரத்தில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த துப்பாக்கி குண்டு சிவராஜனை நோக்கி வந்தது.

அதை கண்டதும்  “அண்ணா!! ” என்று அலறிக்கொண்டு ராக்கி சிவராஜனை நோக்கி ஓட…

அதற்குள் சிவராஜனை அந்த பாய்ந்து வந்த குண்டில் இருந்துமுதலமைச்சரை காப்பாற்றும் பொருட்டு அவரை அந்த இடத்தை விட்டு இழுத்தவன் அவரோடு சேர்ந்து தரையில் விழுந்திருந்தான் ராகவ் .

“அண்ணா! உங்களுக்கு எதுவும் இல்லையே.. ” என்று சிவராஜன் அருகில் வந்த ராக்கி அவரை முழுவதும் ஆராய்ந்தான்.

“இல்ல ராக்கி எனக்கு எதுவும் ஆகல .. நல்ல வேலை இந்த தம்பி இருந்ததுனால நான் தப்பிச்சேன்” என்றவர் ராக்கியின் உதவியுடன் எழுந்து நின்றவர் அப்போதுதான் ராகவ்வை கவனித்தார்.

அவரோடு சேர்ந்து எழுந்து நின்றிருந்த ராகவ் அவர் உயிரை பறிக்க இருந்த அந்த துப்பாக்கி குண்டை குறுக்கே புகுந்து தன் இடது தோள்பட்டையில் வாங்கி இருந்தான்.

“தம்பி உங்க தோள்பட்டையில் இருந்து ரத்தம் வருது… ” என்று சிவராஜன் பதற…

“சார் அது ஒரு பிரச்னையும் இல்ல… நீங்க முதல்ல இங்க இருந்து SAFE ஆ போகணும். நீங்க முதல்ல இங்க இருந்து கிளம்புங்க… ” என்றவன் ராக்கியை பார்த்தது இவரை முதல்ல இங்க இருந்து அழைச்சிட்டு போங்க..  என்று தனக்கு பட்ட குண்டடியைக் கூட பொருட்படுத்தாமல் அந்த இடத்தில் இருந்து அவரை பத்திரமாக அனுப்பி வைப்பதிலேயே குறியாக இருந்தான்.

ராக்கிக்கும் ராகவ் சொல்வது தான் சரி என்று தோன்ற…

“அண்ணா நீங்க முதல்ல இங்க இருந்து கிளம்புங்க… நான் பார்த்துகிறேன்” என்றவன் திரும்பி CM இன்  கார்ட்ஸ்களை அளித்தவன் அவர்களோடு சேர்ந்து முதலமைச்சரை பத்திரமாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தவன் அடுத்த நொடி ராகவ்வை நோக்கி மேடைக்கு வந்தான்.

அதற்குள் ராகவ்வை அங்கே இருந்த ஆட்கள் அழைத்து சென்றுவிட…

சிவராஜனை குறிவைத்து கொள்ள நினைத்த அந்த ஆள் யாரென்று புரியாமல் அந்த  இடத்தை நோட்டம் விட துவங்கினான்.

அங்கிருந்த அனைவரையும் வெளியே செல்ல விடாமல் இந்த நிகழ்வுக்கு காரணம் யாராக இருக்கும் என்று காவல் துறையினர் சோதனையிட துவங்கி இருந்தனர்,

ராக்கியும் அவர்களோடு சேர்ந்து சந்தேகப்படும்படியாக இருந்தவர்களை தனியே அடைத்து வைக்க சொல்லி இருந்தான்.

ரதியின் குடும்பத்திடமும் விசாரித்து இருக்க… அவர்கள் ரங்காவின் பெற்றோர்கள் என்று ராக்கி கூறவும் அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

“தம்பி என் பையன் அவனுக்கு ஒன்னும் இல்லய்யே.. ” என்று சோபனா அழுத படி கேட்க…

“ராகவ்க்கு தொல்ல  குண்டு பாய்ஞ்சிருக்கு… நான் உங்களுக்கு கார் அனுப்பறேன். நீங்க நேரா ராகவ் இருக்க ஹாஸ்பிடலுக்கு போய்டுங்க… ” என்றவன் . மூர்த்தி , மாளவிகா இருவரையும் பார்த்துவிட்டு “ஆமா ரதி எங்கே ?” என்றான் அவளை அங்கு காணாத வருத்தத்தில்.

“நாங்க வரும்போது எங்க கூட தான் இங்க வந்தா தம்பி.. ஏதோ போன் வந்துச்சுன்னு எழுந்து போனா.. அப்பறோம் அவ வரல ” என்றார் மூர்த்தி..

“சரி நீங்க முதல்ல கிளம்புங்க… நான்  ரதியை அனுப்பி வேகுறேன் ” என்று அவர்களை அனுப்பியவன் ரதியை தேட துவங்கினான்.

அவன் அந்த இடத்தை சுற்றிலும் ரதியை தேடிக்கொண்டு வர… அவன் காலிற்கு கீழே ஒரு போன்  தரையில் விழுந்திருந்தது . அதை எடுத்து பார்த்தவன் அது ரதியின் போனை போலவே இருக்க…

அதன் திரையை ஆன் செய்தான் . அதில் அவள் புகைப்படம் ஸ்க்ரீன் சேவராக இருக்க… ராக்கிக்கு பதற்றம் ஆனது . கையில் இருந்த போனை பார்த்தவன் சுற்றிலும் ரதி எங்கும் இருக்கிறாளா  என்று பார்த்தவன் மீண்டும் அவள் மொபைலை பார்த்தான்.

அவன் பதற்றத்திற்கு காரணம் ரதியின் போன் திரையில் படிந்திருந்த ரத்தக்கறை தான்.

ராக்கிக்கு ரதிக்கு என்ன ஆனதோ என்று பதற்றம் அதிகம் ஆனது .

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured