EPISODE 17
ரதியின் செல்போனில் படிந்திருந்த ரத்தக்கறையை பார்த்தவனுக்கு தூக்கி வாரிப்போட்டது . அவளை பித்து பிடித்தவன் போல அந்த அரங்கம் முழுவதும் தேடித்திருந்து கொண்டு இருந்தான்.
அப்போது அவனிடம் வந்த முதலமைச்சரை பாதுகாக்கும் ஆட்களில் ஒருவர் வந்து “ராக்கி அண்ணா… சந்தேகப்படற மாதிரி 4 பேரை அர்ரெஸ்ட் பண்ணி ஒரு ரூம்ல போட்டு பூட்டி வெச்சிருக்கோம்” என்றான்.
“சரி அவங்களை நம்ம இடத்துக்கு கூப்டு போய்டு. நான் வந்துடறேன் ” என்றான்.
“சரிண்ணே… நான் அந்த 5 பேரையும் கூப்டு நம்ம இடத்துக்கு போறேன் ” என்றான்.
“சரி ” என்றவன் பிறகு அவனை திரும்பி பார்த்து “4 பேருன்னு சொன்ன… இப்போ என்ன 5 பேரை கூப்டு போறேன்னு சொல்ற.. ” என்றான்.
“அந்த போட்டோ எடுத்த ஆளை நீங்க தானே தூக்க சொன்னிங்க ” என்றான்..
“ஓ! சரி அப்போ நீ கிளம்பு . எனக்கு முக்கியமான வேலை ஒன்னு இருக்கு நான் முடிச்சிட்டு நேரா நம்ம இடத்துக்கு வந்துடறேன் ” என்று அவனை அனுப்பி வைத்தவன்.
ரதியை பற்றி எதுவும் தகவல் கிடைக்குமா என்று தேடிப்பார்த்தவனுக்கு எந்த ஒரு சின்ன தகவலும் கிடைக்கவில்லை. பித்து பிடித்தவன் போல எல்லா இடமும் சுற்றி திரிந்தவன் ரதியின் போனில் அவளுக்கு தெரிந்தவர் எண் ஏதாவது இருக்குமா என்று பார்ப்பதற்காக அவள் போனை ஆன் செய்தான். அது கீழே விழுந்து டிஸ்பிலே உடைந்திருக்க… ஸ்க்ரீன் ஆன் மட்டுமே ஆனதே ஒழிய அதை அவனால் ஓபன் செய்ய முடியவில்லை. தவிர பாஸிவ்வ்ர்டும் போட்டு இருந்தது.
“ச்சே… ” என்று நொந்து கொண்டவன் அடுத்து என்ன செய்வது ரதிக்கு என்ன ஆனது என்று புரியாமல் அந்த மைதானத்தின் நடுவில் தலையை பிடித்துக்கொண்டு நின்று இருந்தான்.
அவன் இதயம் திக்..திக்… என்று அடித்துக்கொண்டது.
ரதி கூட்டத்தோடு கூட்டமாக அங்கிருந்து தப்பித்துவிட்டாளா? இல்லை கூட நெரிசலில் அவளுக்கு எதுவும் அடி பட்டிற்குமா… என்று யோசித்தான்.
அவள் போனில் படிந்திருந்த ரத்தக்கறையை யோசித்தவன் ஒரு வேலை ராகவிற்கு அடிபட்டதை பார்த்துவிட்டு அவனிடம் வர நினைத்தவள் கூட நெரிசலில் அடிபட்டு கீழே விழுந்திருப்பாளோ… என்று நினைத்தவன்.
இங்கே நடநத சம்பவத்தில் வந்திருந்த மக்கள் பயத்தில் இங்கிருந்த தப்பிக்க எண்ணி நெரிசலில் மாட்டிக்கொண்டு அடிபட்டிருக்க… அவர்களை ஹாஸ்பிடல் அழைத்து செல்லும்போது மற்றவர்களோடு ரதியையும் ஹாஸ்பிடல் அழைத்து சென்றிருப்பார்களோ… என்று நினைத்த அடுத்த நொடி தன் ஜீப்பை எடுத்துக்கொண்டு அவர்களை அட்மிட் செய்திருந்த ஹாஸ்பிடல் விபரம் கேட்டு அந்த இடத்திற்கு கிளம்பி இருந்தான்.
இங்கே குண்டடி பட்டு ராகவ்வை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்திருக்க…
அவன் இடது தோள்பட்டையில் குண்டு ஆழமாக இறங்கி இருக்க.. அவனுக்கு ரத்தம் அதிகம் வெளியேறி இருந்தது. உடனே ராக்வவிற்கு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று டாக்டர் ராகவிற்கு ஆபரேஷன் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்ய சொன்னவர் .
ராகவ்விற்கு AB நெகடிவ் வகை ரத்தம் என்பதால் அந்தத் ரத்த வகைக்கு பொருந்தும் வகையிலான A-, B- மற்றும் O- வகை ரத்த வகை இருப்பவர்கள் யாரேனும் இருந்தால் சீக்கிரம் அவர்களை அழைத்து ராகவிற்கு ரத்தம் வழங்க ஏற்பாடு செய்ய சொல்லிவிட்டு . தங்கள் ஹாஸ்பிடலிலும் ராகவ்விற்கு சீக்கிரமே ரத்தம் கிடைக்க ஏற்பாடு செய்ய சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார்.
ராகவ் ரத்த வகைக்கு ரதியின் ரத்த வகையான O- பிளட் பொருந்தும் என்று மூர்த்தி உடனே ரதிக்கு கால் செய்தார்.
இங்கே ரதியை தேடிக்கொண்டு ஜீப்பில் விரிந்திருந்த ராக்கி அவள் போன் அடிக்கவும் அவசரமாக அதை எடுத்து பார்த்தான். அதில் MY APPA என்று போட்டிருக்க… போனை அட்டென்ட் செய்த ராக்கி “சொல்லுங்க சார் ” என்றான்.
ரதியின் போனில் ஒரு ஆண் குரல் கேட்கவும் “தம்பி இது என் பொண்ணு ரதி போன் தானே.. ” என்றார் .
“ஆமா சார் இது ரதி போன் தான். நான் ராக்கி பேசுறேன். நீங்க ராகவ் கூட ஹாஸ்பிடல் போனதும் நான் ரதியை அந்த விழா நடந்த இடத்தில தேடினேன். அங்க ரதியோட போன் மட்டும் தான் கிடைச்சுது . ரதியை தேடி தான் இப்போ நான் போயிட்டு இருக்கேன். ” என்றான்.
“என்ன தம்பி சொல்றிங்க! ரதிக்கு எதுவும் ஆகிடுச்சா.. ” என்று மூர்த்தி பதட்டமாக பேச…
“என்னங்க சொல்றிங்க.. ரதிக்கு எதுவும் பிரச்சனையா ! போன்ல யாருங்க.. ” என்று அதிரிச்சியில் பேசாமல் நின்று இருந்தவரை பார்த்துவிட்டு அவர் கையில் இருந்த மொபைலை வாங்கி காதில் வாய்த்த சோபனா .
“”ஹலோ யாருங்க பேசுறது. என் பொண்ணு ரதிக்கு என்ன ஆச்சு? அவளுக்கு ஏதாவது பிரச்சனையா? ” என்று அழுத்தவர்.
“கடவுளே!! இபப்டி ஒரே நேரத்துல என் ரெண்டு பிள்ளைகளையும் ஆபத்துல கொண்டு வந்து விட்டுட்டியே இது உனக்கே நியாயமா… ” என்று ராக்கியை பேசவிடாமல் சோபனா அழ …
“ஹலோ! அம்மா… அம்மா.. நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க.. ” என்று ராக்கி பேசிக்கொண்டே ஜீப்பை ஓடியவன் அவன் வர வேண்டிய ஹாஸ்பிடலுக்கு வந்தவன் , அந்த ஹாஸ்பிடலில் தான் ராகவ்வையும் அனுமதித்திருக்கிறார்கள் என்று நேராக ரிசெப்ஷனில் விசாரித்துவிட்டு ஆபரேஷன் தியேட்டருக்கு வந்தான் .
“அம்மா! என்னம்மா ஆச்சு.. அக்காவுக்கு என்ன பிரச்சனை ஏன் அழறீங்க..” என்று மாளவிகா யாருக்கு என்ன ஆனதோ என்று பதற்றத்தில் சோபனாவை பார்த்தாள் .
“அம்மா! ரதிக்கு ஒன்னும் இல்ல.. அவளுக்கு எதுவும் ஆகிருக்காது . நீங்க தைரியமா இருங்க ” என்று அவர்கள் இருந்த இடத்திற்கு வந்த ராக்கி சோபனாவிற்கும் மற்றவர்களுக்கும் தைரியம் சொல்லிக்கொண்டு அங்கு வந்தான்.
அவனை பார்த்ததும் வேகமாக அவனிடம் சென்ற சோபனா ராக்கியின் கையை பிடித்துக்கொண்டவர் “தம்பி என்ன ஆச்சுப்பா .. ரதி எங்கேன்னு தெரியலையா உங்களுக்கு ” என்றார் பதற்றமாக.
“இல்லம்மா.. அவளை தேடி தான் நான் இங்க வந்தேன் ” என்றவன் . “ராகவ்வை டாக்டர் பார்த்துட்டாங்களா.. ஆபரேஷன் செய்ற அளவுக்கு அடி ரொம்ப பட்டிருக்கா… ” என்றான்.
“ஆமா தம்பி ராகவ்வ்க்கு ரத்தம் அதிகமா வெளியேறி இருக்குன்னு டாக்டர் சொன்னாங்க. அவன் தோளுல துப்பாக்கி குண்டு ஆழமா இறங்கிருக்கு அதனால் தான் இந்த அளவுக்கு ரத்தம் போயிருக்குன்னு சொல்லி அவனுக்கு உடனடியா ஆபரேஷன் பண்ணனும்னு சொல்லி கூப்டு போயிருக்காங்க.. அவனுக்கு ரத்தம் வேணும்னு டாக்டர் எங்களை ஏற்பாடு செய்ய சொன்னாரு. அவனோட பிளட் ரொம்ப RARE டைப் அதனால தான் நான் ரதிக்கு கால் பண்ணினேன்.அவளோடது O- ” என்றார்,
“ரதி இப்போ எங்க இருக்கான்னே தெரியலை சார் . நாம முதல்ல ராக்வவை காப்பாத்த தேவையான வேலையை பார்க்கலாம். ரதியை நான் பத்திரமா கொண்டு வந்து உங்ககிட்டே சேர்க்குறேன் . அது என்னோட பொறுப்பு. நீங்க முதல்ல ராகவ்வை பாருங்க ” என்றான்,
“சரி தம்பி நீங்க இருக்க நம்பிககையில் தான் நாங்க இருக்கோம். நான் எனக்கு தெரிஞ்சவங்ககிட்டே ராகவ்வுக்கு பெருந்துற மாதிரியான ரத்த வகை கிடைக்குதான்னு செக் பண்றோம் ” என்றவர் தன் மொபைலை எடுத்து தெரிந்தவர்களுக்கு கால் செய்ய ஆரம்பித்தார் .
மளவிகாவிடம் வந்தவன் “ராக்வவுக்கு எந்த மாதிரியென பிளட் டைப் தேவை படுது ” என்று விசாரித்தான். தனக்கு தெரிந்தவர்களிடம் ரத்தம் கிடைக்க ஏற்பாடு செய்ய்ய…
மாளவிகா ராகவ்வுக்கு பொருந்தக்கூடிய ரத்த வகைகளை சொல்லவும். “ஓவியாவுக்கு A- தான் . நான் அவளுக்கு கால் பண்ணி உடனே இங்க வர சொல்றேன் ” என்று அவன் போனை எடுத்து ஓவியாவுக்கு அழைத்தான்.
அவன் அழைத்ததும் ஓவியாவின் போன் அவன் பக்கத்தில் ஒலிப்பது போல தோன்ற திரும்பி சத்தம் வந்த திசையை பார்க்க…
மாரீஸுடன் அவர்கள் இருந்த இடத்தை நோக்கி ஓட்டமும் , நடையுமாக பதற்றமாக அங்கு வந்து நின்றாள்.
“ஓவி…!” என்று ராக்கி பேச..
“அண்ணா! உனக்கு ஒன்னும் இல்லையே.. முதலமைச்சருக்கு துப்பாக்கி சூடுன்னு டிவியில் பிளாஷ் நியூஸ் வந்துச்சு. அதை பார்த்ததும் நான் பயந்துட்டேன் . சீனியரோட தம்பிக்கும் குண்டடி பட்டிருக்குன்னு கேள்விப்பட்டேன் . இருக்கும் எதுவும் பிரச்சனை இல்லையே அவர் நல்லா தானே இருக்கார். உனக்கு எதுவும் இல்லையே ” என்பர் ராக்கியை மேலும் கீழும் பார்த்தபடி கேட்டாள் .
அமைச்சருக்கு எதுவும் இல்லம்மா.. எனக்கும் ஒன்னும் இல்ல… நம்ம அண்ணனுக்கு குண்டடி படாம ராகவ் தான் குறுக்க புகுந்துட்டான். நான் எல்லாமே அப்பறோம் உனக்கு விபரமா சொல்றேன் . ” என்றவன் .
“ராகவுக்கு ஆபரேஷன் செய்ய அவசரமா ரத்தம் தேவைப்படுது. உன்னோட பிளட் டைப் ராகவ்வுக்கு பொருந்துது. நீ முதல்ல உள்ள போய் ரத்தம் ககுடுத்துட்டு வா.. மத்ததை அப்பறோம் பேசிக்கலாம் ” என்று ஓவியாவை அங்கு வந்த நர்ஸிடம் விபரம் சொல்லி உள்ளே அனுப்பி வைத்தான்.
“நீங்க இங்க பாத்துக்கோங்க… நான் ரதியை பேதி ஏதாவது விஷயம் தெரியுதான்னு பார்த்துட்டு தகவல் சொல்றேன் ” என்று மூர்த்தியிடமும், சோபனாவிடமும் சொன்னவன்.
“மாரி .. ஓவி வந்ததும் அவளுக்கு சாப்பிட எதுவும் வாங்கி குடுத்து பாத்து வீட்டுக்கு கூப்டு போ சரியா . நான் கிளம்பறேன் ” என்று அங்கிருந்து ரதியை தேடி புறப்பட்டு இருந்தான்.
ஓவியாவின் ரத்தம் கிடைத்ததும் ராக்வவிற்கு ஆபரேஷன் துவங்கி இருந்தது .
ஹாஸ்பிடலை விட்டு வெளியே வந்த ராக்கி தன் ஜீப்பை எடுக்க போக…
அப்போது முதலமைச்சரிடம் இருந்து அவனுக்கு போன் வந்தது.
அதை அட்டென்ட் செய்தவன் “அண்ணா! ” என்றான்.
“டேய் ராக்கி எங்க டா போன.. என் உசுருக்கு குறிவெச்சவன் யாருன்னு கண்டு பிடிச்சுட்டியா டா.. ” என்றார் ஆத்திரம் அடங்காமல் .
“அண்ணா… ஒரு 5 பேரை சந்தேகத்துல புடிச்சு நம்ம இடத்துல அடைச்சு வெச்சிருக்கேன். நம்ம ஆளுங்க எல்லாரும் அங்க தான் இருக்காங்க ” என்றான்.
“அப்போ நீ எங்க டா இருக்க.. ” என்றார் சிவராஜன்.
“அண்ணா.. அது வந்து.. ” என்று ராக்கி ரதியை பற்றி சொல்லத்தயங்க…
“என்ன டா .. என்ன ஆச்சு ! உனக்கு எதுவும் அடி பட்டிருச்சா… நான் அவசரத்துல நீ எப்படி இருக்கேன்னு கூட கவனிக்காம கிளம்பி வந்துட்டேன் டா… ” என்று வருந்தினார்,
“இல்ல.. எனக்கு எதுவும் இல்ல ண்ணா .. உங்களுக்கு எதுவும் ஆகாம குண்டடி பட்டு குறுக்க புகுந்து குண்டடி வாங்குன அந்த போலீஸ் எனக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்களோட தம்பி. அதான் அவங்களுக்கு எப்படி இருக்குன்னு பார்த்துட்டு போலாம்னு வந்தேன். தவிர.. அந்த போலீசோட அக்காவை காணோம்னு அவங்க குடும்பம் ரொம்ப பதட்டத்துல இருந்துச்சு . அவங்களுக்கு தைரியம் சொல்லிட்டு இப்போதான் ஹோச்பிடலில் இருந்து கிளம்பறேன் ” என்றான்.
“அப்படியா ! உனக்கு தெரிஞ்சவங்க தானா அவங்க.. அந்த தம்பி மட்டும் இல்லேன்னா இந்த நேரம் நீ உன் அண்ணனை உயிரோடவே பாத்திருக்க முடியாது டா… அந்த தம்பிக்கு ஆபரேஷன் முடிஞ்சு வெளிய வந்ததும் சொல்லு . நான் உன் அண்ணியோட நேர்ல போய் பார்த்து நன்றி சொல்லிட்டு வரேன் ” என்றார்.
“சரிண்ணே சொல்றேன் . நீங்க பத்திரமா இருங்க.. உங்களை கொல்ல நினைச்சது யாருனு தெரிஞ்சுது அவனை உங்க முன்னாடி நான் கொண்டு வந்து நிப்பாட்டறேன்” என்றான்.
“நீ செய்வேன்னு எனக்கு தெரியும் ராக்கி.. .” என்று ராக்கிக்கு தன் மேல் இருக்கும் அக்கறை, பாசம் அறிந்தவராக சிவராஜன் கூற…
“நான் போனை வெச்சுடறேன் “என்றான்.
“டேய் ராக்கி ஒரு நிமிஷம் “என்றவர்.
“நீ இப்போ அந்த ஆளுங்களை அடைச்சு வெச்சிருக்க நம்ம இடத்துக்கு தானே போற.. ” என்றார்.
“அங்க தான் போறேன் அண்ணா… ” என்றான்.
“சரி நீ போ… நான் கொஞ்ச நேரத்துல அங்க வரேன். என்னை எதுக்காக்க கொல்ல முயற்சி பண்ணினனாங்கனு நான் தெரிஞ்சுக்கணும் ” என்றார்.
“நான் சொன்னதும் நீங்க அங்க வந்தா போதும் அண்ணா… ‘ என்றவன் போனை வைத்துவிட்டு கிளம்பி இருந்தான்.
ராக்கியின் இடத்திற்குள் நுழைந்தவன் ஆவேசமாக அங்கிருந்த ஒரு பெரிய இரும்பு ராடை எடுத்துக்கொண்டு அங்கு சந்தேகத்தின் பேரில் அடைத்து வைத்திருந்தவர்கள் இருக்கும் அறைக்கு சென்றவன் .
“டேய் எவன்டா அது என் அண்ணனை கொல்ல நினைச்சது. எவ்ளோ தைரியம் இருந்தா இப்படி ஒரு காரியத்தை துணிஞ்சு செஞ்சிருப்பீங்க… உங்களால அங்க வந்திருந்த எத்தனை பேருக்கு அடிபட்டிருக்கு தெரியுமா,… எவ்ளோ பேர் காயம் ஆகி ஹாஸ்ப்பிடல்ல அட்மிட் ஆகிருக்காங்க தெரியுமா… ” என்று சிவராஜன், ராகவ், ரதி மூவரையும் இந்த நிலைக்கு ஆளாக்கியது யார் என்று தெரிந்துகொள்ளும் ஆத்திரத்தோடு அங்கே கட்டி வைக்கப்பட்டு இருந்தவர்களில் ஒருவனை நோக்கி தன் கையில் இருந்த ராடை கொண்டு அவன் முகத்தை பதம் பார்த்திருக்க…
“அம்மா!! ” என்று அலறி தரையில் மயங்கி சரிய…
அவன் குரலோடு சேர்ந்து மற்றொரு குரலும் “அம்மா! ” என்று அலறிக்கொண்டு இருந்தது .
அந்த குரலை கேட்டதும் ராக்கியின் முகம் பிரகாசம் ஆகிவிட… குரல் வந்த திசையை திரும்பி பார்த்தவனுக்கு அங்கே ரதி ஒரு சேரில் கட்டிவைக்கப்ட்டு இருக்க… “ரதி!… ஏய் 250 பீடா…. ” என்று அவளை நோக்கி ராக்கி ஓடி வந்தவன் அவளை அப்படியே சேரோடு சேர்த்து தூக்கியவன் ரதியை பார்த்த சந்தோசத்தில் அவனையும் அறியாமல் அவளுக்கு முத்தம் கொடுத்திருந்தான்.
ராக்கி தீவிரமாக முத்தம் வைத்திருக்க.. அதை உணரும் நிலையில் இப்பொது ரதி இல்லை. அவளுக்கு முத்தம் கொடுத்துவிட்டு அவள் உதட்டை பிரிந்து ரதியை பார்க்க….
அவளோ துவண்டு ராக்கியின் தோளில் சரிந்து இருந்தாள்
