Home Uncategorizedஇராக்கதனின் ரதி அவள் part-1-19

இராக்கதனின் ரதி அவள் part-1-19

by Layas Tamil Novel
197 views

EPISODE 19

ரதியை நேரில் பார்த்த பின் தான் மொத்தக் குடும்பத்திற்கும்  நிம்மதியாக இருந்தது.

“ஏய் ரதி எங்க டி போன.. உன்னை காணாம நாங்க எல்லாம் எவ்ளோ தவிச்சுபோய்ட்டோம் தெரியுமா ” என்றார் மூர்த்தி.

“அப்பா.. நான் கூட்டத்துல மாட்டிகிட்டேன். எல்லார்கூடவும் என்னையும் சேர்த்து பிடிச்சு வெச்சுட்டாங்க .. உங்களுக்கு கால் பண்ணி சொல்லலாம்னா  என் போனும் கூட்டத்துல எங்கையோ விழுந்திருச்சு ” என்றாள்  ரதி .

“அதான் உங்க பொண்ணு திரும்ப வந்தாச்சில்ல அங்கிள் விடுங்க.. ” என்ற ராக்கி “ராகவ்வுக்கு இப்போ எப்படி இருக்கு. ஆபரேஷன் எல்லாம் நல்ல படியா முடிஞ்சிருச்சா ” என்று நலம் விசாரித்தான் அக்கறையாக.

“ஆபரேஷன் நல்ல படியா முடிஞ்சிருச்சு தம்பி. நல்ல நேரத்துல ஓவியா வந்து ரத்தம் குடுத்ததுனால எந்த பிரச்னையும் இல்ல ப்பா… ” என்றார் சோபனா.

“அம்மா ராகவ் எப்போ வெளிய கூப்டு வருவாங்க ” என்றாள் ரதி.

“மயக்கம் தெரிஞ்சதும் பார்த்துட்டு ரூம்க்கு கூப்டு வந்திருவோம்னு சொன்னாங்க. இப்பவே மணி 11 ஆச்சு. எப்போ வருவாங்கனு சரியா தெரியல.. .” என்றார் .

“சரிம்மா நீங்க மூணு பேரும் வீட்டுக்கு கிளம்புங்க.. ராகவ் வந்தா நான் கூட இருந்து அவனை பார்த்துகிறேன் ” என்றாள் ரதி.

“இல்ல ரதி நீயும், மாலுவும் வீட்டுக்கு கிளம்புங்க.. நாளைக்கு அவளுக்கு காலேஜ் இருக்கு.. உனக்கும் வேலை இருக்குல்ல… நாளைக்கு  நைட் வேணா நீங்க ரெண்டு பேரும்  இங்க ராகவ் கூட இருங்க … ” என்றார்.

இருவரும் ஹோச்பிடலில் இருக்கிறோம் என்று எவ்வ்ளவு சொல்லியும் சோபனா பிடிவாதமாக அவர்களை வீட்டிற்கு கிளம்ப சொல்ல..

“அம்மா தான் அவ்ளோ சொல்ராங்க இல்ல.. நீங்க ரெண்டு பெரும் கிளம்புங்க.. நான் உங்களை வீட்ல விட்டுட்டு கிளம்பறேன் ” என்றான் ராக்கி .

“எங்களுக்கு வீட்டுக்கு போக தெரியும் . நாங்க கேப் புக் பண்ணி வீட்டுக்கு போய்க்கிறோம் . நீங்க எங்களுக்கு செய்த உதவிக்கு ரொம்ப தேங்க்ஸ் இப்போ நீங்க கிளம்புங்க ” என்றாள் ரதி முகத்தில் அடித்தார் போல..

“ஏய் ரதி என்ன டி பேசுற… தம்பி மட்டும் இன்னிக்கு இல்லேன்னா ராகவ்வுக்கு இவ்ளோ சீக்கிரத்துல ஆபரேஷன் பண்ணி இருக்க முடியாது. உன்னையம் தேடி பிடிச்சு இங்க கூட்டிட்டு வந்திருக்க முடியாது. ” என்று ரதியை கடிந்து கொண்டார்.

“ஆமா என்னை அடைச்சு வெச்சதே இவன் தான். இவனை நல்லவன் மாதிரி என் வீட்ல புரியாம பேசுறாங்க ‘ என்று நினைத்தவள் .

“சரிம்மா.. நான் எதுவும் சொல்லல… விடுங்க… எங்க ரெண்டு பேரையும் யாரும் வீட்ல விட வேணாம் நாங்க கேப் புக் பண்ணி போய்க்கிறோம்” என்றாள் ரதி ராக்கியுடன் செல்ல மறுத்தாள் .

“ஒய் பீடா நீ ஏன் என் கூட வர மாட்டேன்னு சொன்னேன்னு எனக்கு நல்லாவே தெரியும். இருக்கட்டும் ஒரு நாள் இல்ல ஒரு நாள் என் கூட தனியா நீ நைட் ட்ரேவல்  பண்ணுவ.. அப்போ என்ன செய்வேன்னு நான் பாக்குறேன் ” என்று நினைத்தவன்.

“சரிங்க ஆன்டி அவங்க கிளம்பட்டும் . வீட்ல ஓவி தனியா இருப்பா.. நான் கிளம்பறேன் “என்று முகத்தை சோகமாக வைப்பது போல காட்டிக்கொண்டு ராக்கி வீட்டிற்கு கிளம்ப…

“பாரு டி தம்பி முகமே மாறிடுச்சு.. உன்னால தான் தம்பி முகத்தை  தொங்கபோட்டுட்டு போகுது .” என்றார் சோபனா.

“ஆமாமா .. அவன் சோகமா போறான் நீ அவனை கூப்டு வந்து சமாதானம் பண்ணு . நாங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு போறோம் ” என்று கேப் புக் செய்தவள் வந்ததும் ரதியும், மாளவிகாவும் கிளம்பி வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

ஹோச்பிடலில் இருந்து நேராக வீட்டிற்கு செல்லாமல் தன் இடத்திற்கு சென்றிருந்தான் ராக்கி .

உள்ளே கோபமாக நுழைந்தவன் தலைகீழாக கட்டி வைக்கப்பட்டு இருந்தவன் அருகில் வந்தவன் “என்ன டா வாயை திறந்து எதுவும் சொன்னானா … ” என்று தொங்கிக்கொண்டு இருந்தவனின் முடியை கொத்தாக பிடித்தபடி கேட்டான்.

“இல்ல ராக்கி எவ்ளோ அடிச்சு கேட்டாலும் வாயவே தொறக்க மாட்டேங்குறான் ” என்றான் ராக்கியின்  கையாள்.

“இவனை எதுக்கு டா தேவை இல்லாம அடிக்கணும். பாக்க வேண்டியவங்களை  பார்த்து கொடுக்க வேண்டியதை கொடுத்தா உண்மை தானா வரப்போகுது” என்றவன்.

தன் மொபைலை எடுத்து யாருக்கோ வீடியோ கால் செய்தவன் அதை கொண்டு வந்து அவன் முகத்திற்கு நேராக கொண்டு வந்தான் ராக்கி.

வீடியோ காலில் தெரிந்த அவன் வீட்டை பார்த்தவன் “என் வீடு.. என் வீடு எப்படி உங்களுக்கு… ” என்று அவன் வீட்டை பார்த்ததில் தொங்கிக் கொண்டு இருந்தவன் பயத்தில் ராக்கியை பார்த்தான்.

“இங்க பாரு நீ யாரு? உன் குடும்பம் எங்க இருக்கு… உனக்கு வேண்டியவங்க எங்க இருக்காங்கன்னு  எல்லா டீடைல்ஸும் என்கிட்டே இருக்கு. உன் 2 வயசு பொண்ணும், உன் பொண்டாட்டியும் உள்ள தூங்கிட்டு இருக்காங்க. என் ஆளுங்க உன் வீட்டுக்கு முன்னாடி தான் இருக்காங்க . நீ மட்டும் உண்மையை சொல்லல.. வெளிய நிக்குற என் ஆளுங்க கதவை உடைச்சிட்டு உள்ள போய்டுவாங்க… பாவம் உன் பொண்டாட்டி நீ ஏதோ வேலை விஷயமா வெளிய போயிருக்கேன்னு நினைச்சிட்டு  நிம்மதியா தூங்குது. அவங்களுக்கு நீ பண்ற வேலை தெரிஞ்சா உன்னை வீட்டுக்குள்ள சேர்க்குமோ என்னவோ… ” என்று அவன் குடும்பம் தன் கையில் இருக்கிறது என்று அவனை எச்சரித்தான்.

“ராக்கி !! என் குடும்பத்தை எதுவும் பண்ணிறாத ” என்று கெஞ்சினான்.

“அப்போ சொல்லு நீ யாரு ? எதுக்காக CM ஐ  கொல்ல வந்த.. உன்னை யாரு இந்த வேலையை செய்ய சொல்லி அனுப்பினது ” என்றான் ராக்கி .

“சொல்லிடறேன்.. சொல்லிடறேன் ராக்கி. என் பேரு அன்பு . நான் எதிர்கட்சி தலைவர் தங்கபாண்டியன் வீட்ல வேலை பாக்குறேன். அடுத்த எலெக்ஷன்ல சிவராஜன் ஐயாவை எதிர்த்து நின்னா  தங்கபாண்டியன் ஐயா ஜெயிப்பாரான்னு ரகசியமா கணக்கெடுப்பு செஞ்சிருக்காரு. அதுல தங்கபாண்டியன் ஐயாவுக்கு  ஜெயிக்கருத்துக்கான வாய்ப்பு 0 சதவீதம் கூட கிடையாதுன்னு வந்திருச்சு”என்றவன் ராக்கியை பார்க்க…

“ம்ம்.. அப்பறோம் என்ன  சொல்லு… ” என்று ராக்கி அதட்ட…

அதை கண்டு பயந்தவன் “ஏற்கனவே நடந்த ரெண்டு எலெக்ஷன்லயும் எங்க ஐயா தோத்து போய்ட்டாரு. அதனால 10 வருஷம் வீணாகிருச்சு. அவரைவிட வயசு குறைவா இருக்குற உங்க ஐயா அரசியலுக்கு வந்து கொஞ்ச வருசத்துல மக்கள் மனசுல இடம் புடிச்சது. இப்படி எல்லாம் சேர்ந்து அவரை நிம்மதி இல்லாம செஞ்சிருச்சு” என்றான் தலைகீழாக தொங்கியபடி.

அன்பு மூச்சு விட சிரமப்படுவதை பார்த்த ராக்கி தன் ஆடைகளிடம் கண்ணைக் காட்ட… அவன் ஆட்கள் வந்து அன்புவை கவனமாக கீழே இறக்கி அவனுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்தனர்.

அதை வாங்கி வேகா வேகமாக குடித்தவன் “எங்க ஐயா உங்க ஐயாவை கொல்ல சொல்லி வெளிய ஆளுங்களை செட் பண்ணலாம்னு தான் நினைச்சிருந்தார். ஆனா அவங்களை யாரையும் நம்ப முடியாதுன்னு  என்னை கூப்டு இந்த வேலையை செய்ய சொன்னாரு. அதுக்கு லட்சக்கணக்குல பணமும் குடுத்தாரு. பணத்தை பார்த்ததும் நானும் கொஞ்சமும் யோசிக்காம இந்த வேலையை செய்ய ஒத்துக்கிட்டேன். ஆனா சொன்ன மாதிரி என்னால எதையும் செய்ய முடியல… இப்போ உங்ககிட்டே மாட்டிக்கிட்டேன் .” என்று தலை கவிழ்ந்தான்.

“சரி அப்போ தங்கபாண்டி தான் இந்த் வேலையை செய்ய சொல்லி உனக்கு பணம் குடுத்தாரு அப்டி தானே ” என்றான் ராக்கி .

ஆமாம் என்று  அன்பு தலையை ஆட்ட…

“சரி இப்போ என்ன பண்ணலாம் நீயே சொல்லு… ” என்று முடிவை அன்பிடமே விட்டுவிட்டான் ராக்கி.

“நான் வேணும்னா போலீஸ்ல அப்ரோவரா மாறி உண்மையை சொல்லிரவா… ” என்றான் தயக்கமாக,

“அப்படி நீ செஞ்சா உங்கொய்யா.. உன்னையம், உன் குடும்பத்தையும் உயிரோட விட்டுருவான்னு நீ நினைக்குறியா ” என்றான் ராக்கி .

“ம்ஹும்.. இல்ல தான் கண்டிப்பா என் குடும்பத்தையும் என்னையும் கொன்னு  புதைச்சிருவாரு ” என்று பயந்தான் அன்பு.

“அப்போ என்ன பண்ணலாம் ” என்று யோசித்த ராக்கி..

“டேய் வர்க்கீஸ்.. நம்ம ரெட்டி ஊர்ல இருக்காரான்னு நம்ம பசங்களுக்கு போன் போட்டு கேளு ” என்றான்.

“சரிண்ணே… ” என்று போனை எடுத்துக்கொண்டு வெளியே சென்ற வர்கீஸ் பேசிவிட்டு உள்ளே வந்தவன் “அண்ணே..  ரெட்டி அண்ணா ஊர்ல தான் இருக்கார் . நம்ம பசங்க சொன்னாங்க ” என்றான்.

“சரிடா… ” என்றவன் திரும்பி அன்புவை பார்த்து .

“இங்க பாரு நீ எங்க இருக்கேன்னு காட்டிக்காம கொஞ்ச நாள் நான் சொல்ற இடத்துல போய்  இரு.. இங்க நிலைமை சரி ஆகி உங்கொய்யாவே உன்னை மறுக்கும்போது நீ இங்க வந்தா போதும் ” என்றவன் .

“நீ உன் பொண்டாட்டி புள்ளையை கூப்டு ஆந்திரா போய்ட்டு.. இங்க இருந்தா உனக்கு மட்டும் இல்ல உன் பொண்டாட்டிக்கும் தான் பிரச்சனை . நீங்க எங்க இருக்கீங்கன்னு கொஞ்ச நாளைக்கு உன் சொந்தக்கரவங்களுக்கு கூட சொல்லல வேணாம் ” என்றான்.

அன்புவுக்கு இப்போது ராக்கி  சொல்வதை தவிர வேறு செய்வதற்கு துணிவு இல்லை. தனக்கும் தன் குடும்பத்திற்கும் இப்போதைக்கு பாதுகாப்பு தான் மிகமுக்கியம் என்று யோசித்தவன் ராக்கி சொன்னதற்கு சம்மதம் தெரிவித்தான்.

“வர்கீஸ் நீ அன்புவை அவன் வீட்டுக்கு கூப்டு போ.. இவங்களை கூப்டு நீயும் நம்ம பசங்களும் நேரா ரெட்டி வீட்டுக்கு கொண்டு போய் விட்டுட்டு வாங்க ” என்று அன்புவை தன் ஆட்களுடன் அனுப்பி வைத்தான் .

அவர்கள் சென்றது வீட்டிற்கு கிளம்பியவன் தன் மொபைலை எடுத்து கால் செய்தவன் “டேய் மாரிஸ்  இன்னும் அந்த அன்பு வீட்டை  தங்கபாண்டியன் ஆளுங்க நோட்டம் விட்டுட்டு தான் இருக்கானுங்கள? ” என்றான்.

“ஆமா ராக்கி இங்க இருந்து போக மாட்டேங்குறாங்களே…” என்று மாரீஸ் சலித்துக்கொள்ள…

“கொஞ்ச நேரத்துல அன்பு அங்க வந்திருவான். அவனை பாதுகாப்பா நம்ம ரெட்டி வீட்டுக்கு குடும்பத்தோட அனுப்ப போறேன் . அவன் அங்க வரும்போது ரங்கபாண்டியன் ஆளுங்க அங்க இருக்க கூடாது . அவங்களுக்கு அன்புவை பத்தி எந்த தகவலும் போக கூடாது. அவன் குடும்பம் பத்திரம் ” என்றான்.

“நீ சொல்லிட்டே இல்ல ராக்கி என்கிட்டே விட்டுடு நான்  பாத்துக்கிறேன் “என்று போனை வைத்தான் மாரீஸ்.

என்ன தான் ரவ்டித்தனம் செய்தாலும் ராக்கி  அப்போதும் அடுத்தவர் நலனில் அக்கறை கொள்கிற ஆள்  அதனால் தான் அன்பு குடும்பத்திற்கு எந்த ஆபத்தும் இல்லாமல் அவர்களை ஊரைவிட்டே அனுப்பி வைக்கிறான் .

ஒரு வாரமாக ஹாஸ்பிடலில் இருந்த ராகவ் உடல் நலன் தெரியதில் வீட்டிற்கு டிஸ்சார்ஜ் ஆகி வந்துவிட… 

ரதியின் புதிய கதை தினம் கவனி கதைத்தளத்தில் வெளியாகி மக்களிடம் சரியான வரவேற்பை பெற துவங்கி இருக்க…

அந்த கதை ஓவியா கண்ணில் பட்டுவிட்டது .

இப்பொது ஓவியா என்ன செய்ய போகிறாள். அந்த கதையில் வருவது ராக்கி  தான் என்று அவளுக்கு தெரிந்துவிடுமா… கண்டுபிடித்துவிட்டால் ரதியின் நிலை என்னவாகும்

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured