EPISODE 20
“ரதி! ரதி! ” என்று சத்தமிட்டுக்கொண்டே அவள் கேபினுக்கு வந்திருந்தாள் கமலி.
“ஏய் கமலி ! என்ன டி ஆச்சு ? ஏன் இவ்ளோ வேகமா வர.. ” என்று அவளை பார்த்தாள் ரதி.
“ஏய் நீ எழுதின இராத்திரியின் இராக்கதன் ஸ்டோரி ரீலீஸ் பண்ணின ஒரு வாரத்துல கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் படிச்சிருக்காங்க . நம்ம பத்திரிக்கையில் இதுவரை வெளியான கதைகள்ல… உன்னோட கதை தான் ஒரே வாரத்துல இவ்ளோ ரீடேர்ஸ் படிச்சிருக்காங்க.. அடுத்து எபிசொட் எப்போ எப்போன்னு.. நம்ம சைட்க்கு மெயில் , கமெண்ட் , போன் கால்ன்னு நிறைய பேர் கேட்டுட்டு இருக்காங்க ” என்றாள் மிக சந்தோசமாக.
“நானும் பார்த்தேன் கமலி நிறைய பேர் படிச்சிருக்காங்க. நானே இதை எதிர்பார்க்கள .. “என்று ரதியும் அவளோடு சேர்ந்து தன் சந்தோசத்தை பகிர்ந்துகொள்ள…
“ஏய் உனக்கும் உன்னோட இராக்கதனுக்கும் இடையில் என்ன டி போயிட்டு இருக்கு.. ஸ்டோரி தொடக்கமே அமர்க்கலாமா இருக்கு. என்ன உன் ஆளை இதுல வெறும் ரௌடியா மட்டும் காட்டி இருக்க… அரசியல் அது இதுன்னு எதுவும் இல்லாம வித்யாசமா போகுது கதை களம் ” என்று இந்த ஒரு வாரத்தில் ரதி போஸ்ட் செய்த எபிசோடுகளை ஒன்று விடாமல் புப்லிஷ் செய்ததுமே முதல் ஆளாக படித்து தெரிந்து கஃண்டு ரதியிடம் கேட்டாள்.
“ஆமா டி கதையை கொஞ்சம் நான் மாத்தி தான் எழுதிருக்கேன் . அதுல வர எல்லாரோட போரையும், இடம் , வேலை , தொழில் இப்படி எல்லாமே மாத்தி தான் எழுதிருக்கேன் ” என்றாள் ரதி .
“அது சரி உன்னோட ரவுடி பேருக்கும் செராக்க்டருக்கும் கொஞ்சமும் சம்மந்தமே இல்லையே டி.. ஏன் அந்த பேரை நீ சூஸ் பண்ணின.. ” என்றாள் சந்தேகமாக .
“அதுவா .. ராக்கியோட உண்மையான பேர் ரங்கநாதன். ஆனா அவனுக்கும், அவன் தங்கச்சிக்கு தவிர அந்த பேர் வேற யாருக்கும் தெரியாது. அவனை எல்லாருக்கும் ராக்கின்னு தானே தெரியும்., அதனால தான் என் கதையில் அவனோட உண்மையான பேரை ஹீரோவுக்கு வெச்சுட்டேன் . எல்லாரும் அவனை செல்லமா ராணான்னு கூப்பிட்ற மாதிரி வெச்சிருக்கேன். ரங்கா ல வர ர வையும் , நாதனல வர நா வையும் எடுத்தேன் கொஞ்சம் எழுத்தை மாத்தி போட்டு ராணான்னு வெச்சுட்டேன் எப்படி… ” என்று பெருமையாக கேட்டாள் ரதி ,
“சூப்பர் டி.. அப்பறோம் அந்த ராணாவுக்கு ஏத்த ஜோடியா உன் பேர் நல்ல இருக்கு ஊர்வசி . இது உன் அப்பா முதல்ல உனக்கு வெக்க இருந்த பேர் தானே ” என்றாள் கமலி.
“ஆமா கமலி அதே தான் எப்படி என் திறமை” என்று சட்டையை தூக்கிவிட்டுக் கொண்டாள் ரதி .
“அதெல்லாம் ஓகே தான் . நான் கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லு.. உனக்கும் ராக்கிக்கும் நடுவுல என்ன டி நடக்குது, நீ எழுதினதை வெச்சு பார்க்குற அப்போ . உன்னை பார்த்ததுமே நம்ம ரவுடி விழுந்துட்டார் போல… அந்த பல்லியை பார்த்து நீ பயக்குறதும் , அவர் அதை சாக்கா வெச்சு உன் உதட்டை கவ்வுறதும். ஒரே ரொமான்ஸ் அள்ளி தெளிக்குற மாதிரி இல்ல இருக்கு… ” என்றாள் கமலி.
ரதியை சந்தேகத்தின் பேரில் தன இடத்துக்கு கூடி சென்று பாம்பை வடித்து விளையாடியதை அவள் கதையில் பல்லியாக மாற்றி இருக்க அதை தான் கமலி இப்பொது ரதியிடம் கேட்டாள்.
“ஏய் அது சும்மா கதைக்காக எழுதினது. அப்படி எல்லாம் எதுவும் நடக்கல… ” என்று ரதி மழுப்பினாள் .
“உண்மையா தான் சொல்றியா டி.. என்கிட்டே இருந்து எதையும் மறைக்களையே… ” என்று கமலி சந்தேகமாக ரதியை பார்க்க..
“உண்மை தான் டி .. கதையில் ஒரு சுவாரஸ்யம் வேணாமா.. அதுக்காக தான் அப்படி எழுதினேன் . மத்தபடி எங்களுக்குள்ள அப்படி எல்லாம் எதுவும் இல்லை… ” என்றவள் திரும்பி தன் சிஸ்டமில் அடுத்த அத்தியாயத்தை எடிட் செய்ய ஆரம்பித்தாள்.
“ஏய் நெஸ்ட் எபிசொட் எழுதுட்டியா! ” என்று ஆர்வமாக ரதியின் அருகில் ஒரு ஸ்டூலில் இழுத்துப்போட்டு அமர்ந்தாள் கமலி .
“ம்ம்ம்.. எழுதிட்டேன் டி.. சின்ன சின்ன கரெக்ஸ்ன் மட்டும் தான் பேலன்ஸ் இருக்கு.. அதான் பாத்துட்டு இருக்கேன்” என்றாள் .
“நீ அதெல்லாம் அப்பறோம் பாத்துக்கோ… முதல்ல நான் படிச்சுகிறேன் அப்பறோம் நீ எடிட் பண்ணிக்கோ.. ” என்று ரதியின் சேரை நகர்த்திவிட்டு முன்னே வந்தவள் ரதி எழுதி இருந்த எபிசோடை வாசிக்க துவங்கினாள் .
“ஏய்! நான் தான் வெப்சைட்ல போஸ்ட் பண்ணுவேனே அங்க போய் படிச்சுக்கோ டி ” என்று அவளிடம் இருந்து சிஸ்டத்தை தன் பக்கம் திருப்ப முயன்றாள்.
“ஏய் போடி! அதுவரை எனக்கு பொறுமை இல்ல.. நான் படிச்சுகிறேன் ” என்று ரதியை அருகே வரவிடாமல் பிடித்துக்கொண்டு கதையை படிக்க ஆரம்பித்தாள்.
“இவ இருக்காளே கொஞ்சம் கூட பொறுமை இல்லாதவ.. ” என்று புலம்பிய படி தன் மொபைலை எடுத்துக்கொண்டு தனியே சென்றாள்.
தன் மொபைல் கேலரியை ஓபன் செய்தவள் ராகவ் பதவியேற்பு விழாவில் ராக்கிக்கு தெரியாமல் அவனை எடுத்த போட்டோக்களை எல்லாம் கேமெராவில் இருந்து தன் மெயிலுக்கு ட்ரான்ஸபெர் செய்திருந்தவள் அந்த புகைப்படங்களை ஒவ்வொன்றாக பார்க்க ஆரம்பித்தாள் .
ராக்கி அன்று அவள் கேமெராவை முழுவதுமாக கவனிக்காமல் விட்டது ரதிக்கு ஒரு வருகையில் நிம்மதியாக இருந்தது . அவன் மட்டும் அன்று இந்த புகைப்படங்களை பார்த்திருந்தாள். ரதியை தலையில் தூக்கி கொண்டாட ஆரம்பித்திருப்பான். அவள் தன்னை காதலிப்பதாக முடிவே செய்திருப்பான். அதன் பிறகு அவன் நெருக்கம் தன்னோடு அதிகம் ஆகிவிட்டிருக்கும் என்று யோசனையோடு அவன் புகைப்படங்களை பார்த்துக்கொண்டு இருந்தாள். இல்லை இல்லை அவளையும் அறியாமல் ராக்கியை ரசித்துக்கொண்டு இருந்தாள் என்று தான் சொல்ல வேண்டும் .
“இவன எந்த கோணத்துல பார்த்தாலும் பிடிக்குதே… ஒரு போட்டோவில் கூட இந்த ரவுடி ராஸ்கல் அசிங்கமாவே தெரியல.. ” என்று யோசித்தவள் அடுத்த போட்டோவை பார்த்தவள் .
கைகளை கட்டிக்கொண்டு CM பின்னால் நின்று இருந்த ராக்கி அவள் நின்று இருந்த திசையை ரதியின் கேமெராவை நேருக்கு நேராக பார்த்துக்கொண்டு இருந்த புகைப்படத்தை கண்டதும் அவள் கண்கள் அந்த போட்டோவிலேயே நிலை குத்தி இருந்தது .
ராக்கியின் பார்வை கூர்மையாக… ஒரு வித சந்தேகத்தோடு பார்த்துக்கொண்டு இருந்தது. அதை விட அவன் பார்வையில் இருந்த குறு குறுப்பு அவள் இதயத்தை ஒரு நிமிடம் அசைத்துப் பார்த்தது.
ரதியின் இதயத்தை அந்த மன்மதன் தன் காதல் அம்பை ராக்கியின் குறுகுறு பார்வையால் துளைத்திருந்தார்.
அவளால் தன் கர்வத்தை வேறு பக்கம் திருப்பவே முடியவில்லை. உள்ளுக்குள் காதல் உணர்வுகள் பெருக்கெடுக்க ஆரம்பித்து இருக்க… அவள் இதயத்தில் பார்வை அம்பால் துளைத்திருந்தவனை இப்போதே பார்க்க வேண்டும் என்று ஆர்வம் தோன்ற ஆரம்பித்து இருந்தது.
அடுத்த நொடி தன் கேபினுக்கு வந்தவள் ஹேண்ட்பேக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.
அதற்குள் படித்துவிட்டு எழுந்த கமலி, “ஏய் ரதி எனக்கு என்னவோ நீ எழுதி இருக்கிறதை பார்த்தா… கதைக்காக உன் ஹீரோ , ஹீரோயினுக்கு ரொமான்ஸ் வெச்சது மாதிரி தெரியல… உங்க ரெண்டு பேருக்குள்ள நடக்குறதை நீ உன் கதையில் … I MEAN ஸ்டோரியில் இருக்க ஜோடிங்களுக்கு வெச்ச மாதிரி இருக்கு… ” என்று கேட்டுக்கொண்டே எழுந்தாள் .
அவளை தாண்டி சென்றிருந்த ரதி “இதுவரை லேசா எங்களுக்குள்ள நடந்ததை என் கற்பனையோடு சேர்த்து எழுதி இருந்தேன். ஆனா இனிமேல் நீ படிக்கறது முழுக்க… உண்மையா என்ன நடக்கப் போகுதோ .. அதை எழுத போறேன். நீயே படிச்சு எங்க ரெண்டு பேருக்குள்ள… I MEAN ஸ்டோரியில் வர அவங்க ரெண்டு பேருக்குள்ள என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கோ… ” என்று சொல்லிவிட்டு வேகமாக அங்கிருந்து கிளம்பி இருந்தாள் அவள் இராக்கதனை காண ஆவலாக …
வாசல் வரை வந்தவளுக்கு வீட்டிற்குள் செல்ல மிகவும் தயக்கமாக இருந்தது . வண்டியை நிறுத்திவிட்டு நின்றிருந்தவள் “இவ்ளோ தூரம் கிளம்பி வந்துட்டோம் அப்புறமும் இவனை போய் பார்க்க ஏன் யோசிக்குறேன். பேசாம திரும்பி போய்டலாமா? ” என்று வாசல் கேட்டை திறக்க போனவள் திரும்பி தன் வண்டி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இடத்திற்கு செல்ல போனாள்.
“ஏய் நீ என்ன அவனை பாக்கணும்னு சொல்லவா இங்க வந்த.. இல்லையே.. சும்மா இந்த பக்கம் வந்தேன் அப்படியே உன் வீட்டுக்கும் வந்துட்டு போலாம்னு வந்தேன்னு சொல்ல வேண்டியது தானே… ” என்று அவள் மனம் அவளுக்கு எடுத்து சொல்லிக்கொண்டு இருந்தது.
“அதெப்படி நீ சொன்ன மாதிரி நான் போய் அவன்கிட்டே சொல்ல முடியும் . அப்படி சொன்னா அவன் கண்டு பிடிச்சிர மாட்டானா!.. அவன் லேசு பட்ட ஆள் இல்லையே… பொருக்கி சரியான பொருக்கி ஆச்சே.. ஆளை பார்த்ததும் என்னை இழுத்து வெச்சு முத்தம் கொடுத்தவன் தானே அந்த பொருக்கி… இப்ப மட்டும் நான் அவனை பாக்கணும்னு ஆர்வமா வந்தேன்னு வை என்னை ஏதாவது செய்தாலும் செய்திடுவான். எதுக்கு வம்பு நான் பேசாம திரும்பி வீட்டுக்கே போய்டுறேன் ” என்று தன் மனதிடம் மல்லுக்கட்டிக்கொண்டு இருந்தாள்.
“ஏய் அது ஏதோ அன்னிக்கு நடந்தது அவன் இன்னும் அதையே நினைச்சிட்டு இருப்பானா.. நீ யோசிச்சு பாரு. அவனுக்கு என்ன உன்னை பாக்குற அப்போ எல்லாம் உன் வாயை கடிக்குறது தான் வேலைன்னு நினைச்சிட்டு இருக்கியா… அவனுக்கு ஆயிரம் வேலை இருக்கும் . இந்த ஒரு வாரத்துல அவன் உன்னை பத்தி நினைச்சானா.. உன்கிட்டே பேசணும்னு யோசிச்சனான்னு எல்லாம் உனக்கு தெரியுமா என்ன.. அப்டி இருந்திருந்தா அவனே உனக்கு போன் இல்ல மெசேஜ் பண்ணி இருக்கலாம் தானே.. .” என்று அவளுக்கு அடுத்து கூறியது.
“ஆமா !!! நீ சொல்றதும் சரி தான்… ” என்று அவள் யோசிக்க…
“சரி நீ ரொம்ப யோசிக்குற பேசாம நீ திரும்பி போய்டு.. கிளம்பு கிளம்பு… ” அங்கிருந்து விரட்டியது அவள் மனம்.
“ஆமா நீ சொல்றதும் சரி தான் நான் பேசாம திரும்பி போறேன் ” என்று அவள் திரும்பி சோகமாக நடக்க…
“ஓய்! திருடி!!.. என் வீட்டு முன்னாடி என்ன பண்ணிட்டு இருக்க… ” என்று உள்ளிருந்து வந்த குரலை கேட்டு அப்படியே நின்று விட்டாள்.
“என்ன பிரீஸ் ஆகிட்ட .. அப்போ நான் சொன்னது சரி தான். என் வீட்ல யாரும் இல்லேன்னு தெரிஞ்சு எனக்கு தெரியாம என் வீட்ல இருந்து எதையோ திருடிட்டு போறியா… ஒழுங்கா என் வீட்ல இருந்து எடுத்ததை திருப்பி குடுத்துட்டு போய்ட்டு… இல்ல… உன்னை 420 கேஸ்ல பிடிச்சு உள்ளே போட்டுட்டுடுவேன் ” என்றான் நக்கலாக..
அதை கேட்டு அதிர்ந்தவள் கோபமாக திரும்பி தன் முன்னே நின்று இருந்தவனை நேருக்கு நேராக பார்த்தவள் . அவன் பார்வையை எதிர் கொள்ள முடியாமல் பார்வையை மாற்றிக்கொண்டவள் .
“இங்க பாருங்க.. யாரை பார்த்தது 420ன்னு சொல்றிங்க… அப்படி எதையும் நான் உங்க வீட்ல இருந்து திருடிட்டு போகல… பாவமே குண்டடி பட்டு இருந்தவருக்கு ரத்தம் குடுத்தோமே.. இப்போ உடம்பு எப்படி இருக்குன்னு ஒரு அக்கறையில விசாரிக்க வந்தா எனக்கு திருட்டு பட்டம் காட்டுறீங்களே… தெரியாம தான் கேக்குறேன் .. உங்க வீட்ல இருந்து நான் அப்படி என்ன திருடிட்டு போனேன் ” என்று அவன் முன் கையை நீட்டிக்கொண்டு வர…
தன் முன் நீட்டிய கையை பிடித்து தன் இதயத்தில் வைத்து அழுத்தி பிடித்தவன் ” என் வீட்ல இருந்து நீ எதையும் திருடல … ஆனா இதோ என்னோட குட்டி நெஞ்சை தான் நீ திருடிட்ட … ” என்று ஓவியாவை பார்த்து ராகவ் கூறினான்.
அதை சிறிதும் எதிர்பாராத ஓவியா… ராகவ்வின் இதய துடிப்பை அவள் கை வழியே உணர்ந்த அடுத்த நொடி… அவள் இதயம் எக்கு தப்பாக எகிற துவங்க… அவள் நாடியை பிடித்திருந்தவனுக்கு ஓவியாவின் இதயத்துடிப்பை உணர்ந்தவன் அடுத்த நொடி அவள் கையை பிடித்து இழுத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான்
