Home Uncategorizedஇராக்கதனின் ரதி அவள் part-1-28

இராக்கதனின் ரதி அவள் part-1-28

by Layas Tamil Novel
184 views

EPISODE 28

 ஹாலில் வீடு பெயிண்ட் அடிப்பதற்காக துணிகளை எல்லாம் ஒன்று சேர்த்து மூட்டையாக கட்டி போட்டு இருக்க.. அதன் மேல் ராக்கி அமர்ந்து இருந்தான்.

 அவனுக்கு எதிரி இருந்த ஒரு காலி சிலிண்டர் மீது ராகவ் அமர்ந்திருக்க இருவரும் எதுவும் பேசிக் கொள்ளாமல் ஒருவரை ஒருவர் பார்த்தபடி இருந்தனர்.

 கிச்சனுக்குள் அவர்கள் இருவருக்கும் காபி போட்டுக் கொண்டிருந்தால் ஓவியா.

ஆனால் அவள் முகம்  வெளிறிப் போய்   பேய் அறைந்தது போல ஒரு வித பயத்தோடு தான் இருந்தது.

அவள் அப்படி இருந்ததற்கு காரணம் ராகவ்வும்,  ஓவியாவும் வசமாக மாட்டிக் கொண்டதால் தான்.

இங்கே வெளியே ஹாலில் மாமனும் மச்சானும் ஆளுக்கு ஒரு பக்கம் முகத்தை தூக்கிக்கொண்டு அமர்ந்திருக்க…

கிச்சனுக்கு உள்ளே இருந்தவாறு அவர்களை எட்டிப் பார்த்த 

மாரீஸ் காபி போட்டுக் கொண்டிருந்த ஓவியாவிடும் வந்தவன்.

“நான் மட்டும் சரியான நேரத்துக்கு வரல இந்த நேரம் ராக்கிகிட்ட நீங்க ரெண்டு பேரும் வசமா மாட்டி இருப்பிங்க. உங்க ரெண்டு பேரையும் அப்படி பார்த்து எனக்கே அவ்ளோ ஷாக்கா இருந்துச்சு. நான் பார்த்தது மட்டும்  உங்க அண்ணன் மட்டும் பார்த்து இருந்தான்.  இந்த நேரம் அதோ  வெளியே வீராப்பா விறைச்சிட்டு உட்கார்ந்து இருக்கானே.. அவனை என்ன செஞ்சு இருப்பான்னு தெரியாது” என்று மாரிஸ் ஓவியாவிடம்  சொல்லிக் கொண்டிருந்தான்.

ராகவ்வும், ஓவியாவும் முத்தம் கொடுத்துக்கொண்டு இருந்ததை பெயிண்டர்களை அழைத்துக்கொண்டு முதலில் வந்த மாரிஸ் தான் பார்த்திருந்தான்.. 

அவன் அதிர்ச்சியாக அவர்களை பார்த்தபடி நின்று இருக்க அப்போதுதான் எதையோ எடுப்பதற்காக தன் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே வந்த ராக்கி ஓவியாவை அழைத்துக் கொண்டே வர…

அந்த சத்தத்தில் தான் தீவிரமாக முத்தம் கொடுத்துக் கொண்டிருந்த  இவர்கள் இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து நின்று அதிர்ச்சியாக திரும்பி வாசலை பார்த்தனர்.

அங்கே நல்ல வேலையாக ராக்கிக்கு பதிலாக மாரிஸ் தான் நின்றிருந்தான். அதனால் இருவரும் இப்போது தப்பித்து இருந்தனர்.

மாரிஸ் பேசியதை கேட்டு ஒருவித பதட்டத்தோடு காபியை டம்ளரில் ஊற்ற போனவள் அதை தரையில் கொட்டி விட..

அவள் கையிலிருந்த காபி பாத்திரத்தையும் வடிகட்டியையும் வாங்கிய மாரிஸ் “நீ முதல்ல தள்ளி நில்லு இப்ப எதுக்கு இவ்வளவு பதட்டப்படுற நான் உன் அண்ணன்கிட்ட எதுவும் சொல்லிக் குடுத்துடுவேன்னு  நினைக்கிறாயா? அதெல்லாம் ஒன்னும் இல்ல..”  என்று காபியை டம்ளரில் வடிகட்டி  ஊற்றினான். 

 “மாரீஸ் தயவு செய்து அண்ணன்கிட்ட எதையும் போட்டு கொடுத்துறாதடா… அப்புறம்  பெரிய பிரச்சனையாகிடும் அண்ணனோட கல்யாணம் நிற்கிறது கூட வாய்ப்பு இருக்கு” என்று பதட்டமாக பேசினால் ஓவியா.

“ அட என்ன ஓவிய நீ இது கூட தான் எனக்கு தெரியாது நீ கவலைப்படாத நான் எதையும் உன் அண்ணன் கிட்ட சொல்ல மாட்டேன் நீ எந்த போலீஸ லவ் பண்றது ஒரு வகையில நல்லது தான் ரெண்டு பேரும் ஒரே வீட்ல பொண்ணு குடுத்து பொண்ணு எடுக்குறீங்க ஒருத்தரை ஒருத்தர் அனுசரிச்சு சப்போட்டா இருக்கும் உங்க அண்ணனுக்கும் சரி உனக்கும் சரி, ஒரு நல்ல குடும்பம் அமைஞ்சிருக்கு” என்றவன் ஓவியாவை பார்த்துவிட்டு.

“அத நான் போய் கெடுப்பேனா என்ன உங்க அண்ணன் கல்யாணம் பண்ற வரைக்கும் இந்த விஷயத்தை தெரியாம பார்த்துக்கணும். அதை நான் பாத்துக்குவேன். நீயும் அந்த போலீஸ் மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க. இன்னைக்கு கதவை திறந்து போட்டுட்டு ஆள் வர்றது கூட தெரியாம ரொம்ப தீவிரமா லவ் பண்ணிக்கிட்டு இருந்தீங்க இந்த மாதிரி எதையும் செஞ்சு வச்சு யார்கிட்டயும் மாட்டிக்காதீங்க” என்று ஓவியாவை ஜாக்கிரதியாக காதலிக்க சொல்லிவிட்டு காபி இடையே எடுத்துக் கொண்டு வெளியே சென்றான்.

மாரிஸ் காபி ட்ரையோடு வருவதை பார்த்த ராக்கி “என்னடா நீ காபி எடுத்துட்டு வர ஓவி எங்க?” என்றான்.

“அதுவா காபியை கொட்டுடுச்சு அதனாலதான் நான் எடுத்துட்டு வந்தேன்” என்று மாரிஸ் சொல்ல..

“என்னது ஓவியா காபியை கொட்டிட்டாளா! அவளுக்கு எதுவும் சூடு பட்டுடுச்சா?” என்று ராக்கி, ராகவ் இருவருமே ஒரு சேர அதிர்ச்சியாக எழுந்து கிச்சனை நோக்கி நகர.. 

 அவர்கள் இருவரும் ஒரு சேர எழுந்து வருவதை பார்த்த மாரிஸ் ஆச்சரியமாக பார்க்க அவன் பின்னால் வந்த ஓவியாவிற்கும் அதே ஆச்சரியம்தான்.

 மாரிஸ் ஓவியாவும் தன்னை ஆச்சரியத்தோடு பார்ப்பதை உணர்ந்து கொண்ட ராகவ் அப்படியே நின்றுவிட..

ஓவியாவை பார்த்த ராக்கி வேகமாக அவளிடம் வந்தவன் “ஓவி என்ன ஆச்சு காபிய மேல கொட்டிட்டியா..  சூடு பட்டுடுச்சா” என்று அவளை தீவிரமாக ஆராய்ந்த படி பேசினான். 

“இல்லண்ணா… அதெல்லாம் எதுவும் இல்லை காபி தரையில தான் கொட்டிடுச்சு. என் மேல கொட்டல” என்று அவனிடம் பதில் சொல்லிவிட்டு ராகவ்வை பார்த்தாள்.

 அவளுக்கு ஒன்றுமில்லை என்று தெரிந்ததும் ராகவ் சற்று நிம்மதியானான்.

 அவன் சென்று மீண்டும் அந்த காலி சிலிண்டர் மீது அமர்ந்து கொள்ள அவனுக்கு மாரிஸ் காபியை கொடுத்தான்.

 ஓவியாவை தன்னோடு அழைத்து வந்த ராக்கி “ஆமா என் தங்கச்சி காபி எதுவும் ஊத்திட்டான்னு  நான் தான் பதட்டப்பட்டு போனேன்.ஆனா நீ எதுக்கு அவளுக்காக பதட்டப்பட்ட” என்று சந்தேகமாக ராகவ்வை கேட்டான்.

 ராக்கி அப்படி கேட்டதும் ராகம் சிறிதும் யோசிக்காமல் “ஏன் உங்களுக்கு மட்டும்தான் அவங்க மேல அக்கறை இருக்குமா? யார் மேல காபி கொட்டி இருந்தாலும் அதை கேள்விப்பட்டால் எல்லாருக்குமே ஒரு பதட்டம் வரும் அதுதான் நானும் செஞ்சேன்” என்றான்.

 அவன் சொல்வது சரியாக இருப்பது போல உணர்ந்தவன் வெறுமனே தலை ஆட்டிவிட்டு “நானும் வந்ததிலிருந்து பார்க்கிறேன் நீ எதுக்காக என் வீட்டுக்கு வந்தேன்னு எதுவுமே சொல்லலையே” என்றான்.

 “நீங்க வந்ததுல இருந்து எதுவுமே என்கிட்ட கேக்கல அதனால நானும் எதுவும் சொல்லல” என்று ராகவ்வும் விடாப்பிடியாக ராக்கிக்கு வம்படியாக பதில் கூறினான்.

“ சரி இப்ப சொல்லு என்ன விஷயமா இங்க வந்த” என்றான் 

“ம்ம்.. எங்க வீட்டுக்கு மருமகனா வரப்போற உனக்கு பிரேஸ்லெட்டும், மோதிரமும் எடுக்கணுமா அதுக்கு அளவு வாங்கிட்டு வர சொல்லி அம்மா அனுப்பி வச்சாங்க”என்றான்.

 “அதெல்லாம் எதுக்கு எனக்கு மோதிரம் வாட்ச் இந்த மாதிரி எல்லாம் எதுவுமே வேண்டாம்” என்றான்.

 நீ… என்று சொல்ல வந்த ராகவ் “நீங்க வேண்டாம்னு தான் சொல்வீங்க. ஆனால் செய்ய வேண்டியது எங்க முறை அதனால சீக்கிரமா கேட்டுட்டு என்ன கால் பண்ண சொன்னாங்க.  அம்மாவும் அப்பாவும் இப்போ ஜ்வெல் ஷாப்புக்கு தான் கிளம்பி போயிட்டு இருக்காங்க” என்றான்.

“என்னது நகை கடைக்கு அத்தையும், மாமாவும்  போயிருக்காங்களா அதுவும் எனக்கு நகை எடுக்கவா..   இத முதல்லயே சொல்லக்கூடாதா நாங்களும் கிளம்பி வந்திருப்போம் இல்ல.. எப்படியோ என் பொண்டாட்டியா வரப்போறவளுக்கு தாலிக்கொடி நான் தானே எடுக்கணும்” என்றவன்.

“டேய் மாறிசு நீ இருந்து இந்த வீட்டு வேலை எல்லாம் கவனிச்சுக்கோ… ஓவி நீ கிளம்பி வா நம்ம போய் அத்தை மாமா கூட சேர்ந்து ஷாப்பிங் பண்ணிட்டு வரலாம்” என்று ஓவியாவை தன்னோடு அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்ப..

ராகவும் அவனின் இந்த தடாலடி பேச்சை கேட்டு ஆச்சரியமாக கிளம்பி வெளியே வந்தான். உனக்காக காத்திருந்த அவன் பிரிண்ட் பைக்கில் ஏறி அவர்களோடு தன் அம்மா அப்பா சென்ற நகை கடைக்கு ராகவ்வும் சென்றான்.

 இங்கே காபி ஷாப்பிற்கு வந்த கமலியும் ரதியும் தங்கள் சாப்பிடுவதற்காக ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்தனர்.

 “சொல்லுடி என்கிட்ட எதுவும் பேசனும்னு சொன்னியே என்ன?” என்றாள் ரதி.

“அதுவா உனக்கும் உன் ஆளுக்கும்  கல்யாணம் பிக்ஸ் ஆயிடுச்சு. இதுவரை நீ நம்ம ஆபீஸ்ல வேலை பார்க்கிறதோ உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வெச்சு கதை எழுதுறதையோ அவர்கிட்ட சொல்லி இருக்க மாட்ட… எப்படியும் இன்னும் ஒரு வாரத்தில் உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகப்போகுது.  அவர்கிட்ட நீ என்ன சொல்ல போற.. கதை எழுதுவதை  கூட விடு.. நீ இங்க தான் வேலை பார்க்கிறேன்னு எப்படி சொல்ல போற” என்றாள் கமலி.

“இத நான் மறந்துட்டேன்னு நீ நினைக்கிறியாடி.. எனக்கும் இது மனசுக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கு. எங்க வீட்ல வந்து அவன் நேரடியா பேசி கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கினதிலிருந்து இது ஒன்னு தான் என் மைண்ட்ல ஓடிட்டு இருக்கு.  சரியான சமயம் பார்த்து அவன்கிட்ட கல்யாணத்துக்கு முன்னாடியே நான் வேலை பார்க்கிற விஷயத்தை கண்டிப்பா சொல்லணும். அப்போ தானே கல்யாணத்துக்கு அப்புறமும் என்னால் வேலைக்கு வர முடியும்” என்றாள் ரதி 

 “ஏண்டி நீ நம்ம பத்திரிக்கை ஆபீஸ்ல வேலை செய்றத சொன்னா உன் ஆளு எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க உனக்கு எதுவும் ஐடியா இருக்கா” என்றால் கமலி.

“ இல்லடி இப்ப வர எந்த ஐடியாவுமே இல்ல அவன் ஏற்கனவே ஒரு முறை அவன பத்தி நம்ம பத்திரிக்கையில் வெளிவந்த நியூஸ் பார்த்து தானே நம்ம எடிட்டர் தூக்குனான். அந்த நியூஸ் வந்தப்போ அதை போட்டோ எடுத்துதே நான் தான்னு தெரிஞ்சா என்ன செய்வானோ தெரியல. எனக்கு அதை நினைச்சாலே பக் பக்குன்னு இருக்கு.. அவன் எதுவும் கேட்டால் என்ன  சொல்லி சமாளிக்கிறது என்று தெரியவில்லைடி” என்றாள்.

 அந்த நேரம் ரதியின் போன் ஒலிக்க அதை பார்த்தவள் ராக்கி தான் அவனுக்கு அழைத்திருந்தாள்.

 “உன் ஆள பத்தி பேசினாலே அவருக்கு மூக்கு வேர்த்திடும்  போல இருக்கு கரெக்டா போன் பண்ணிட்டாரு” என்று கிண்டல் செய்தாள் கமலி.

 “ஷ்…ஒரு நிமிஷம் இரு% என்று அவளை அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு போனை அட்டென்ட் செய்து காதில் வைத்தாள்.

 “ஓய் பீடா! எங்க இருக்க? என்ன பண்ணிக்கிட்டு இருக்க?” என்றான்.

“ நான் கமலி கூட ஒரு காபி ஷாப்ல இருக்கேன்” என்றாள்.

 “அந்தக் கோமாளி கூட அப்புறம் பேசிக்கோ.. இப்ப நீ கிளம்பி நான் சொல்ற இடத்துக்கு வா..  உன் வீட்டிலயும், நானும்  உனக்காக நகை எடுக்க வந்திருக்கோம்” என்று சொன்னவன் ஃபோனை வைத்துவிட்டு அவளுக்கு வாட்ஸ் அப்பில் லொகேஷனை அனுப்பினான்.

 “என்னடி என்ன சொல்றாரு உன் ஆளு” என்றாள் கமலி.

“ஒன்னும் இல்லடி எனக்காக நகை எடுக்க எல்லாரும் ஜுவல்லரி ஷாப் போய் இருக்காங்க. என்னையும் கிளம்பி நகை செலக்ட் பண்ண வரச் சொன்னான்” என்றவள் வந்த காபியை அவசர அவசரமாக குடித்துவிட்டு 

“சரி கமலி நான் கிளம்புறேன். நாளைக்கு மீட் பண்ணலாம்” என்று அங்கிருந்து கிளம்ப போக..

அவள் கைப்பிடித்து நிறுத்திய கமலி “ஏய் அனேகமா உனக்கு தாலிக்கொடி எடுக்கத் தான் கூப்பிடறாங்கன்னு நினைக்கிறேன். அதுக்கு முன்னாடியே நீ உன் ஆளுகிட்ட இங்க வேலை பாக்குற விஷயத்தை பத்தி சொல்லிடு அப்பதான் அவர் என்ன நினைக்கிறார்னு உனக்கு புரியும்” என்று சொல்லி அவளை அனுப்பி வைத்தாள்.

கமலியிடம் தலையாட்டி விட்டு ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு நகை கடைக்கு வந்த ரதி தன் மொபைலை எடுத்து ராக்கிக்கு கால் செய்து “எங்கே இருக்க?” என்று கேட்டாள்.

“நகை கடையில தான்.. நீ என்ன போன் பண்ணிக்கிட்டு இருக்க இன்னும் வரலையா?” என்றான்.

“ நான் வந்துட்டேன் கடைக்கு வெளியே தான் நிற்கிறேன்” என்றால் 

“அப்போ உள்ள வர வேண்டியது தானே” என்றான்.

“ இல்ல நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும். நீ வெளியே வரியா..ஒரே நிமிஷம்”என்றால்.

சற்று யோசித்தவன் சரி என்று கூறி  போனை கட் செய்தவன். மற்றவர்களை நகையை பார்க்க சொல்லிவிட்டு நகைக்கடையில் இருந்து வெளியே வந்து பார்க்க..

பார்க்கிங் ஏரியாவில் ரதி நின்று கொண்டிருந்தாள்.

“என்ன பீடா!   கடைக்குள் வராம அப்படி என்ன என்கிட்ட பேசணும்னு வர சொன்ன” என்று கேட்டபடி அவளிடம் வந்தான்.

“நான் உன்கிட்ட ஒரு விஷயத்தை இத்தனை நாளா மறைச்சிட்டேன் ராக்கி என்று தயங்கிப்படியே அவனைப் பார்த்து சொன்ன ரதி.

“ என் வேலையை பத்தி என்ன பத்தி உன்கிட்ட எதுவுமே நான் சொல்லலையே” என்றாள்.

 “இவ்வளவு தானா.. இத சொல்லத் தான் இங்க வந்தியா.. அத பத்தி எல்லாம் எனக்கு எந்த பிரச்சினையும் இல்ல. இதையேன் நீ இவ்வளவு தூரம் யோசிச்சிட்டு இருக்க. நீ வா முதல்ல கடைக்கு போகலாம்” என்று அவள் தோளில் கை போட்டு ராக்கி அவளை உள்ளே அழுத்தி செல்லப் போக..

“ இல்ல ராக்கி இத சொல்லாம எனக்கு என்னவோ போல இருக்கு நீ ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேளேன்” என்று அவனை பிடித்து நிறுத்தினாள்.

“என்ன சொல்லணும் நீ அந்த தினம் கவனி பத்திரிக்கையில தான் வேலை பாக்குற.. உன் கூட அந்த கோமாளியும், கிழவனும் வேலை பாக்குறாங்க  அவ்வளவு தானே” என்றான்.

 ராக்கி சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியாக அவனை ரதி பார்க்க..

“ இப்ப எதுக்கு நீ இவ்வளவு ஷாக் ஆகுற உன்னை ஃபர்ஸ்ட் டைம் அந்த கிழவனோட சேர்த்து வைத்து மீட் பண்ணதுக்கு பிறகு உன்ன பத்தி விசாரிச்சு தெரிஞ்சுகிட்டேன். நீ என்கிட்ட இருந்து மறைக்கிறதுக்கு காரணம் நான் அந்த கிழவன என்ன போட்டோ எடுத்ததுக்காக பிடித்து வைத்து மிரட்டியது தானே” என்றவன் 

“ நீ எனக்கு பத்திரிகையில வேலை பாக்குறேன்னு மட்டும் தெரிஞ்சுக்கல என்ன பத்தி எழுதின ஆர்டிக்கலுக்கு போட்டோ எடுத்தது நீ தான்  தெரிஞ்சுகிட்டேன் “ என்றான்.

 “அப்புறம் ஏன் இதுவரை அதை பற்றி நீ என்னிடம் எதுவுமே பேசல” என்றாள்.

 “ என்ன பத்தி எழுதின ஆர்டிகிள் நினைச்சு கோவம் இருந்துச்சு ஆனா அந்த போட்டோவை நீதான் எடுத்தேன்னு தெரிஞ்சதும் அந்த கோபம் இல்லாம எங்க போச்சுன்னு எனக்கே தெரியல இது ஒரு பெரிய விஷயமாகவும் எனக்கு தோணல” என்றான்.

 ரதி அது ஒரு பெரிய விஷயமாக எனக்கு தெரியல முதல்ல அவனை அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டிருக்க “போதும் வா எவ்வளவு நேரம் இப்படி என்ன ஷாக் அடிச்சவன் மாதிரியே பார்த்துக்கிட்டு இருப்ப உள்ள எல்லாரும் வெயிட் பண்ணுறாங்க” என்று அவள் தோளில் கை போட்டு தனக்கு மனைவியாக போகிறவர்களுக்கு தாலிக்கொடி எடுக்க கடைக்கு அழைத்துச் சென்றான்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured