EPISODE 30
“கெட்டி மேளம்! கெட்டி மேளம்! ” என்று ஐயர் சத்தமிட ..
கோவில் மண்டபத்தில் ஓரமாக அமர்ந்திருந்த வாத்திய கோஷ்டிகள் மேளம் கொட்ட துவங்க…
ஐயர் நீட்டிய தாலியை மிக சந்தோசமாக வாங்கிய ராக்கி ரதியின் கழுத்தில் கட்டினான்.
அவன் தாலி கட்டவும் கண்களை மூடி கடவுளை வேண்டி தனது இந்த வாழ்க்கையின் அடுத்த கட்டம் நல்ல முரையில் செல்ல வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
ரதியின் கழுத்தில் தாலியை கட்டிவிட்டு அவள் முகத்தை பிடித்து தன் பக்கம் திருப்பினான் ராக்கி .
கண்கள் திறந்து அவனை ஏறிட்ட ரதியின் கண்களில் துளிர்த்திருந்த கண்ணீரை பார்த்தவன்.
“நான் இருக்கேன் டி.. எதுக்கு அலற.. ” என்றவன் அவள் நெற்றியில் முத்தம் வைத்தான்.
வார்த்தைகளை கேட்டவள் மனம் லேசாவதை போல உணர்ந்தவள் மெல்ல சிரித்தாள்.
இந்த அழகிய தருணத்தை தன் கேமெராவில் புகைப்படம் எடுத்துக்கொண்டார் போட்டோக்ராபர்.
“மாம்ஸ் போதும் இது கோவில் ” என்று மாளவிகா கிண்டல் செய்ய…
“ஏன் கோவிலா இருந்தா என் பொண்டாட்டிக்கு முத்தம் குடுக்க கூடாதா.. ” என்றான் திரும்பி அவளை பார்த்து.
“ம்ஹும்.. குடுக்க கூடாது .. முதல்ல கையை குடுங்க .. முத்தமெல்லாம் வீட்ல போய் வெச்சுக்கோங்க மாம்ஸ்…” என்று ராஜு ராக்கியின் கைகளை பிடித்து குலுக்கியவன் “வாழ்த்துக்கள் மாம்ஸ் எங்க அக்காவை கண்கலங்காம பாத்துக்கோங்க… ” என்று வராத கண்ணீரை துடைத்தான்.
அவனை “யாரு டா இவன்” என்பது போல பார்த்தான் ராக்கி .
“இது ராஜு .. என் சித்தப்பா பையன்” என்று அறிமுகம் செய்து வைத்தாள் ரதி.
“அறிமுகம் எல்லாம் அப்பறோம் வெச்சுக்கோங்கோ.. முதல்ல பெண்ணும் , மாப்பிள்ளையும் எழுந்திருங்கோ… ” என்றார் ஐயர்,
இருவரும் எழுந்து நிற்க அவர்கள் கைகளை கோர்த்து இருவரின் சுண்டு விரல்களையும் இணைத்து பட்டு துணி கொண்டு சுற்றி முடிச்சிட்டவர் . “அக்னி குண்டத்தை மூணு முறை சுத்தி வாங்கோ..” என்றார்.
மூன்று முறை அக்னியை வளம் வந்தவர்கள் அவர்கள் திருமணத்திற்காக வந்திருந்த முக்கிய உறவுகளுக்கு வணக்கம் சொல்லி அவர்கள் இங்கு வந்து வாழ்த்தியதற்கு நன்றி கூறினர்,
பின் “பொண்ணு மாப்பிள்ளை அப்படியே வந்து பொண்ணோட அம்மா, அப்பா கிட்டே ஆசிர்வாதம் வாங்கிக்கோங்க.. ” என்று அழைத்தார்.
ராக்கியும், ரதியும் சென்று மூர்த்தி , சோபனா காலிலும், பின் கந்தவேலு , ராஜம் இருவரிடமும் காலில் விழுந்து ஆசி வாங்கினார்.
அடுத்து அவர்கள் திருமணத்தை கண்டு மனம் நெகிழ நின்று இருந்த குணாவனிடம் வந்தவர்கள் “எங்களை ஆசிர்வாதம் பண்ணு பெருசு.. ” என்று ரதி அவர் காலில் விழ .. அவளோடு சேர்ந்து ராக்கியும் விழுந்தான்.
அதை அவர் சற்றும் எதிர்பார்த்திராதவர் “என்ன ரதி இதெல்லாம் என் கால்ல போய் ” என்று அவசரமாக இருவரையும் தூக்கிவிட்டார்.
“என் அம்மா அப்பா மாதிரி தான் நீயும் எனக்கு பெருசு.. ” என்று சிரித்தாள் ரதி அவள் சொன்னதை கேட்டு அவர் நெகிழ்ந்து போனார்.
“போதும் எடிட்டரே .. நீ பாட்டுக்கு எமோஷனல் இவங்களுக்கு வாங்கி வெச்ச கிப்ட்டை குடுக்க மறந்துரைத்த.. ” என்று அவரை இடித்தால் கமலி.
“அதை நீயே உன் கையாள குடுத்துடு கமலி ” என்றார் குணவான்.
தன் பர்ஸை திறந்த கமலி அதில் இருந்த கவரை எடுத்து ரதி ராக்கி இருவரின் கைகளிலும் கொடுத்தாள் .
“என்ன பெருசு கத்தையா கொடுப்பேன்னு நினைச்சேன் . இது என்ன ஒத்தையா இருக்கும் போலையே … ” என்று ராக்கி குணாவனை கேட்டான்.
அவன் பேசினாலே குணவானுக்கு ஏனோ உள்ளுக்குள் உதறல் எடுத்துவிட..
“அட என்ன பெருசு இது இன்னும் என்னை பார்த்து நடுங்குனா என்ன அர்த்தம் . நாம எல்லாம் இப்போ ஒரே பேமிலி ” என்றவன் அவர் கையில் கொடுத்த கவரை ரதியிடம் இருந்து வாங்கி பிரித்துப்பார்த்தான்.
அதை பிரித்தவன் “என்ன பெருசுனு இது ஏதோ டிக்கெட் மாதிரி இருக்கு ” என்று எடுத்து முழுமையாக பார்த்தவன் “அட எனக்கும் என் பொண்டாட்டிக்கும் ஹனிமூன் கொண்டாட குலுமணாலிக்கு பிலைட் டிக்கெட் இருக்கு… ” என்றான்.
அதை கேட்டு ஆச்சர்யமான ராஜு… “என்ன நீங்க புதுசா கல்யாணம் ஆனவங்களை ஹனிமூன் அனுப்புற அஜெனஸி வெச்சிருக்கீங்களா!.. அதனால தான் எங்க அக்காவுக்கும், மாமாவுக்கும் இந்த கிப்ட்டா ” என்று கமளியிடம் வழிந்தான் .
அவனை ஒரு மார்க்கமாக பார்த்தவன் “என்னை பார்த்தா எப்படி தெரியுது உனக்கு.. ” என்று அவனை முறைத்தவள் .
“ஏய் ரதி இன்னிக்கு மதியம் 1.40க்கு உங்க ரெண்டு பேருக்கும் பிலைட் . உங்க பஸ்ட் நயிட்டை ரெண்டு பேரும் குலுமணாலியில் தான் கொண்டாட போறீங்க… அங்க நீங்க தங்குறதுக்காக ஒரு வில்லாவே தனியா பெருசு புக் பண்ணிருக்கு தெரியுமா! ஏதோ என்னால முடிஞ்சது இந்த டிக்கெட்ஸ் தான் ” என்றாள் கமலி.
“பெருசு! கமலி! என்ன இது?? எதுக்கு இதெல்லாம் ” என்று ரதி குரல் தழுதழுக்க கேட்டாள் .
“நான் என்ன பெருசா செய்துட்டேன் . நீயும் கமலையும் எனக்கு பொண்ணுங்க தான் . உங்க ரெண்டு பேருக்கும் இதெல்லாம் செய்றது என்னோட கடமை ” என்றார்.
“அப்போ பெருசு என்னோட கல்யாணத்துக்கும் இது மாதிரியே செய்வியா எனக்கு ” என்றாள் .
“கண்டிப்பா செய்துடறேன். நீயும் கல்யாணம் பண்ணு ” என்றார்.
“இதுக்காகவே நான் சீக்கிரமா கல்யாணம் பண்ணனும் பெருசு ” என்று கமலி கூற..
“ஆஹா! கமலி .. அப்போ நம்ம ரெண்டு பேரும் சீக்கிரமே ஹனிமூன் போக போறமா.. “என்று ராஜு கூற…
அவன் அருகில் நின்று இருந்த மாளவிகா “ஓஹோ.. பார்த்ததும் காதலா… இதுல ஹனிமூன் கனவு வேறையா… ” என்றாள்.
“ஏய் சத்தமா பேசாத அந்த கமலி காதுல விழுந்திர போகுது . நான் வந்ததுல இருந்து இவ என்னை என்னவோ ஆகாதவன் மாதிரி பாத்துட்டு இருக்கா.. ” என்றான்.
“அப்போ உன் காதல் கனவை இங்கைஏ குழி தோண்டி புதைச்சிறு.. ” என்றாள் மாலு,
“என்ன மாலு இப்படி சொல்ற.. உன் அண்ணன் காதலுக்கு நீ ஹெல்ப் பண்ணகூடாதா ” என்றான்.
“எங்க அண்ணன் யாரையும் காதலிக்கலையே .. ” என்று அவர்களை விட்டு சற்று தள்ளி ஊரென்று முகத்தை வைத்து இருந்த ராகவ்வை பார்த்தாள்.
“நான் சட்டைக்கு காஞ்சி போட்டுட்டு நிக்குற உன் அண்ணனை சொல்லல.. இதோ உன் பக்கத்துல நிக்குற இந்த அண்ணனை தான் சொன்னேன் ” என்றான் ராஜு.
“ஆமா நீயும் எனக்கு அண்ணா தானே… ” என்று அவனை பார்த்து சிரித்த மாளவிகா.
“சரி சரி இந்த பங்க்சன் எல்லாம் முடியட்டும். நானே உனக்கு ஒரு நல்ல ஐடியா குடுக்கிறேன் ” என்று அவனுக்கு வாக்கு அளித்தாள் .
“ரொம்ப தேங்க்ஸ் மாலு.. என் தங்கச்சி இல்ல டி நீ.. என் காதலை வளர்க்க வந்த ஏன்ஜெல் நீ.. ” என்றான்.
“ரொம்ப ஐஸ் வெக்காத டா.. அண்ணா… ” என்றாள்.
“ம்ம்ம்.. என்ன ரெண்டு பேரும் ரகசியம் பேசுறீங்க.. போங்க எல்லாரும் கோவிலுக்கு போறாங்க பாரு.. ” என்று பின்னால இருந்து ராகவ்வின் குரல் அதட்டலாக கேட்க…
இருவரும் நெஞ்சை பிடித்துக்கொண்டு ராகவ்வை திரும்பி பார்த்து “இப்படி தான் சத்தம் இல்லாம வந்து எங்கள பயமுறுத்துவியா.. ” என்றவர்கள் .
அவன் இறுகிய முகத்தை பார்த்து “எப்போ பாரு இப்படி விறைப்பாவே இருக்க ராகவ் அண்ணா. கொஞ்சம் ரிலாக்ஸா இரு. அப்போதான் உன்னையும் நாலு பொண்ணுங்க பார்க்கும் ” என்றான் ராஜு.
“என்னை யாரும் பார்க்க வேண்டிய எந்த அவசியமும் இல்ல.. ” என்று தூரத்தில் சோக முகத்தோடு நின்று இருந்த ஓவியாவை பார்த்தப்படி கூறினான்.
“அப்போ கடைசி வர நீ பாச்லர் தான் ” என்றவன் “வா மாலு நாம போகலாம் ” என்று கமலியின் பின்னால் சென்றான்.
ராக்கியின் பின்னால் சோபனா, ராஜம் இருவருடனும் கோவிலுக்குள் சென்ற ஓவியா ராகவ்வை திரும்பி திரும்பி பார்த்தபடி சென்றாள்.
அவள் சேலை அணிந்து தன்னிடம் முதலில் காட்டாமல் கிளம்பி கோவிலுக்கு வந்துவிட்டாள் என்று அவள் மீது கோபத்தில் இருந்தான் ராகவ்.
இங்கு வந்ததில் இருந்து அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவள் காதலனாக அல்லாமல் ,சாதாரணமாக கூட ஓவியாவிடம் பேசவில்லை ராகவ் .
அவனின் இந்த கோப முகம் ஓவியாவுக்கு புதிது என்பதால் அவள் மிகவும் கவலை பட்டாள் .
ராகவ்விடம் எப்படியாவது பேசிவிட வேண்டும் என்று ஓவியா பலமுறை முயன்றும் அவளால் பேசமுடியவில்லை.
எல்லோரும் இருந்ததால் ரிஸ்க் எடுக்க விரும்பாமல் தன் மொபைலில் இருந்து ராகவிற்கு பல மெசேஜ்கள் அனுப்பியும் அவனிடம் இருந்து எந்த பதிலும் இல்லை .
அனைவரும் கோவிலுக்கு சென்று பூஜை முடித்துவிட்டு நல்ல நேரம் முடிவதற்குள் இரு வீட்டிற்கும் அழைத்து சென்று பாலும், பழமும் கொடுத்து சம்பிரதாயங்களை முடித்திருந்தனர்,
“இந்த பொண்ணு பிலைட் டிக்கெட்டை சாயங்காலம் போல புக் பண்ணி இருக்க கூடாதா.. இப்படி கல்யாணம் ஆன மதியமே புக் பண்ணி வெச்சுட்டு இப்போ பாரு எவ்ளோ அறிபரியில் எல்லாமே செய்ய வேண்டி இருக்கு… ” என்று புலம்பிக்கொண்டே ராஜத்தோடு சமையலில் இருந்தார் சோபனா.
“விடுங்க அக்கா கல்யாணம் ஆன கையோட எப்படி போய்ட்டு வரத்துக்கெல்லாம் ஒரு குடுப்பணை வேணும். நம்ம ரதி போயிட்டு வரட்டும் . நீங்க சமையலை சீக்கிரம் முடிங்க.. நேரம் ஆகிடப்போகுது ” என்று அவருடன் சேர்ந்து மதிய விருந்திற்கு தீவிரமாக வேலைகள் செய்தார் ராஜம்.
“ஆன்டி.. ஏன் என்னை திட்டுறீங்க.. கல்யாணம் ஆனதும் அப்போவே ஹனிமூன் போறது எல்லாம் ஒரு கிக்கு தெரியுமா ” என்றாள்.
“என்னத்த கிக்கோ போ.. பெரியவங்க நல்ல நேரம் பார்த்து மாப்பிள்ளையும், பெண்ணையும் அனுப்பி வெக்க முடியாம .. அவங்களே ஊருக்கு போய் அவங்களே எல்லா சம்பிரதாயமும் செய்திருவங்களா …” என்றார் சோபனா.
“அதை பத்தி எல்லாம் நீங்க கவலையே பட வேணாம். இவங்க பஸ்ட் நைட்டுக்கு நீங்க எப்போ நேரம் குறிச்சிருக்கீங்கன்னு என்கிட்டே சொல்லுங்க.. சரியா அத்தனை மணிக்கு இவங்களை ரூமுக்குள்ள அனுப்ப ஏற்பாடு செய்றேன் ” என்றாள்.
“ஏன் க்கா… நீயும் அவங்க கூட போய் இருந்து சாங்கியம் எல்லாம் செய்து கொடுக்க போறியா ” என்றாள் மாலு.
“நான் போகவேண்டிய அவசியம் இல்ல ஆன்டி.. அங்க நாங்க ஏற்பாடு பண்ணி இருக்க ஆள் நைட் எல்லா வேலையும் பக்காவா செய்து வெச்சிருவாரு . அதோட நீங்க சொன்னதையும் செய்துட்டா போகுது ” என்றவள் “நீங்க முதல்ல மணியை சொல்லுங்க மத்ததை நான் பார்த்துகிறேன்” என்றாள்.
இங்கு இவர்கள் எல்லாம் சகஜமாக பேசிக்கொண்டு இருக்க.. ஓவியா மட்டும் மிகவும் சோகமாக காய்களை நறுக்கிக்கொண்டு இருந்தாள்.
“ஓவியா என்ன ஆச்சு உனக்கு காலையில் இருந்தே உன் முகம் சரி இல்லையே… ” என்றார் சோபனா.
அவர் குரலை கேட்டு தான் தன்னிலைக்கு வந்த ஓவியா “அத்தம்மா.. அதெல்லாம் எதுவும் இல்ல.. காலையில் சீக்கிரமே எழுந்துட்டேன் . அதான் கொஞ்சம் டையர்டா இருக்கு ” என்றாள்.
“டையர்டா இருக்கா.. இதை ஏன் என்கிட்டே நீ முன்னமே சொல்லல.. பாவம் நீ ஒத்தையாளா உன் வீட்ல எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்த இல்ல அப்டி தான் இருக்கும் ” என்ற சோபனா “நீ போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு ” என்றார்.
“இல்ல அத்தம்மா.. எனக்கு இப்போ படுத்தா தூக்கம் வராது . நான் அப்ரோமா ரெஸ்ட் எடுக்குறேன் ” என்றவள் கைகளை நறுக்க துவங்கினாள்.’
ரதி, ராக்கியை அமர வைத்து செய்து வைத்த விருந்தை அவர்களுக்கு பரிமாறி அமர்க்கள படுத்தி விட்டனர் சோபனாவும், ராஜமும்.
அவர்கள் சாப்பிட்டுவிட்டு அனைவரிடமும் சொல்லிக்கொண்டு ஹனிமூனிற்கு கிளம்ப..
ஓவியாவை அவள் வீட்டில் தங்க வைக்காமல் தன் வீட்டிலேயே தன்னோடு இருக்கும் படி அவர் கூற..
அவர்களின் கட்டளைக்கு இணங்கி அவளும் ரதியும், ராக்கியும் திரும்பி வரும் வரை ராகவ் வீட்டில் தாங்கிக்கொள்வதற்கு ஒப்புக்கொண்டாள்
