Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 128

உன் ரகசிய ரசிகை நான் 128

by Layas Tamil Novel
295 views

EPISODE 128

ஆதியின் கம்பெனியில் இருந்து அனைத்து ஊழியர்களும் வந்திருந்தனர். பவனும் மதுவும் சிம்லா சென்றுவிட, ரியாவும் லதாவும் விவேக்குடன் வந்திருந்தார்கள்.

அவளுக்கு ஆதியின் வீட்டு ஆட்களைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது என்பதால் தனியாக வரச் சங்கடமாக இருக்க, அவர்கள் இருவருடனும் ஒட்டிக் கொண்டு ரியா கதிர்-கீர்த்தி திருமணத்திற்கு வந்திருந்தாள்.

ரியாவை அமரச் சொல்லிவிட்டு, லதாவும் விவேக்கும் துர்காவைப் பார்க்க ஆதியிடம் அனுமதி கேட்க…

“இதற்கு எதற்கு என்னிடம் அனுமதி கேட்டுட்டு இருக்கே லதா? நான் துர்காவைக் கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி இருந்து நீ துர்கா கூட நல்ல தோழியா இருக்கே. அவளைப் பார்க்க எதுக்கு என்கிட்டே அனுமதி கேட்டுட்டு இருக்கே?” என்றவன், “போய் பார்த்துட்டு வாங்க,” என்று சொல்லி அவர்கள் இருவரையும் அனுப்பி வைத்தவன், “கொஞ்சம் ஜாக்கிரதையா பார்த்துக்கோங்க அவளை,” என்றான் ஆதி.

உடனே லதா, “அதெல்லாம் நாங்க அவளைப் பத்திரமா பார்த்துக்கிறோம் பாஸ். நீங்க கவலையே படாதிங்க,” என்றவள், விவேக்கை அழைத்துக் கொண்டு துர்காவைப் பார்க்க அவள் அறைக்குச் சென்றாள்.

அவர்களை அனுப்பிவிட்டுத் திரும்பி வந்த ஆதியை, வெங்கடாசலம் அழைத்தார். அவரிடம் வந்த ஆதியை, “இவன் தான் என்னோட மூத்த பையன் ஆதி. என்னோட எல்லா பிசினஸையும் இவன் தான் பார்த்துட்டு இருக்கான்,” என்று சந்தோஷின் அப்பா முத்துவிடம் ஆதியை அறிமுகம் செய்து வைத்தார்.

ஆதி அவரைப் பார்த்து “வணக்கம்,” என்றான். அவரும் பதில் வணக்கம் வைத்துவிட்டு, “வெங்கடாசலம், உன்னோட பையன் அப்படியே பார்க்க உன்னை மாதிரியே இருக்கான். நான் சின்ன வயசுல உன்னை எப்படிப் பார்த்தேனோ, அதே போல இருக்கு இப்போ உன் பையனைப் பார்க்க,” என்றார் முத்து.

“ஆமாம் ஆமாம்டா. எல்லாரும் ஆதியைப் பார்த்துட்டு நீ சொல்றதைப் போலத் தான் எல்லாரும் சொல்லுவாங்க,” என்றார் வெங்கடாசலம்.

பின் ஆதியிடம் திரும்பி, “ஆதி, இவன் எனக்குப் பால்ய நண்பன். இவனோட சின்ன மகன் ஸ்ரீக்கு நம்ம ஆஃபீஸில் வேலை வேணும்னு கேக்குறான். அவன் படிப்பு முடிச்சிட்டு அவங்க ஊர்ல ஒரு கம்பெனியில் அக்கௌண்ட்ஸ் டிபார்ட்மெண்டில் வேலை பார்த்துட்டு இருக்கான்னு சொன்னான். நீ கொஞ்சம் என்னனு கேட்டுச் செஞ்சு கொடுக்கிறியா ஆதி?” என்றார் வெங்கடாசலம்.

“சரிப்பா,” என்றவன், முத்துவிடம் திரும்பி, “அங்கிள், உங்க பையன் நம்பர் கொடுங்க. நான் பேசிக்கிறேன்,” என்றான் ஆதி.

“நம்பர் எதுக்கு தம்பி? அவன் இங்கேயே இருக்கான். நீங்களே அவன்கிட்டே கேளுங்க,” என்றவர், தனக்குப் பின்னால் அமர்ந்து இருந்த ஸ்ரீயை அழைக்க…

அவர்களிடம் வந்தவனைக் காட்டி, “இது தான் என்னோட சின்ன மகன் ஸ்ரீ,” என்று அறிமுகம் செய்து வைத்தார்.

ஸ்ரீயிடம் திரும்பி ஆதியையும் வெங்கடாசலத்தையும் அறிமுகம் செய்து வைத்தவர், “தம்பி, நீங்களும் என் மகனும் பேசிட்டு இருங்க. என் பெரிய பையன் கார் ‘பார்க்’ பண்ணிட்டு வரப் போனான். இன்னும் அவனை ஆளையே காணோம். நான் அவன் எங்கேன்னு பார்த்துட்டு வரேன்,” என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினார்.

ஆதி ஸ்ரீயிடம் சில விஷயங்களைக் கேட்டுவிட்டு, அவனை இரண்டு நாட்கள் கழித்து ஆஃபீஸில் வந்து பார்க்குமாறு கூறிவிட்டுச் சென்றான்.

___________________

ஆதி சென்றதும் தன் இருக்கையில் அமரப் போன ஸ்ரீயிடம் கமலா, “டேய், எனக்கு மாத்திரை சாப்பிடணும். நீ என் கூட சாப்பிட வாடா ஸ்ரீ. மாத்திரை போடலைன்னா எனக்கு அப்புறம் ஒரு மாதிரி ஆகிடும்,” என்று சொல்ல…

“சரி வாம்மா,” என்று சொல்லி அவளை அழைத்துக்கொண்டு சாப்பிடும் இடத்திற்குச் சென்றான். இருவரும் சாப்பிட அமர, ஒவ்வொருவராக வந்து அவர்கள் அமர்ந்த வரிசையில் அமர்ந்து கொண்டு இருந்தனர். இலையில் ஸ்வீட்டில் ஆரம்பித்து வரிசையாக வந்து உணவு பரிமாறிக் கொண்டு இருக்க…

குலாப்ஜாமுனைப் பரிமாறிக்கொண்டு ஒருவர் வர… எல்லோருடைய இலையிலும் வைத்துக் கொண்டு வந்து கொண்டு இருந்தார். ஸ்ரீயின் இலையில் குலாப்ஜாமுனை வைத்துவிட்டு அடுத்த இலைக்கு வைக்க… “இன்னொரு ஜாமூன் வைங்க அண்ணா,” என்று ஒரு பெண் கேட்க, அவர் இன்னொரு ஜாமூனை வைத்துவிட்டுச் சென்றார்.

அவர் சென்றதும், அந்தப் பெண் இலையில் இருந்த ஜாமூனை எடுத்துத் தன் வாயில் வைத்து, கண்கள் மூடி “ம்ம்ம்….ம்ம்ம்…..” என்று சொல்லி ஜாமூனை ரசித்து ருசித்துக் கொண்டு இருந்தாள்.

அவள் அப்படிச் சத்தம் எழுப்பவும், “என்னடா இது? சாப்பிடும் இடத்தில வந்து இப்படியா சத்தம் செய்றது?” என்று சொல்லித் தன் அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்த பெண்ணைப் பார்க்க…

அவள் கண்கள் மூடி…. ரசித்துச் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் அழகைப் பார்த்தவன், அப்படியே அவள் அழகில் சொக்கித்தான் போனான்.

ஜாமூனில் இருந்த சர்க்கரைப்பாகு அவள் ரோஸ் நிற இதழில் பட்டு, அவள் இதழை அந்த லைட் வெளிச்சத்தில் பளபளவெனக் காட்ட…

அதை ரசித்தவாறே தன் அருகில் இருந்த அந்தப் பெண்ணைப் பார்க்க… அவள் அடுத்த ஜாமூனை எடுக்கக் கண்களைத் திறக்க… அருகில் அமர்ந்து தன்னைப் பார்த்துக் கொண்டு இருந்த ஸ்ரீயைப் பார்த்த அந்தப் பெண், அப்படியே அசடு வழிய சிரித்துவிட்டு, “ஒரு பொண்ணு சாப்பிடுறதை இப்படி வாயைத் திறந்து பார்த்துட்டு இருந்தா, அந்தப் பொண்ணு எப்படி நிம்மதியாச் சாப்பிட முடியும்?” என்றவள், “கொஞ்சம் கூட மேனர்ஸ் தெரியாதவங்களா இருக்கீங்களே,” என்றவள், “உங்க இலையில் இருக்கிறதைப் பார்த்துச் சாப்பிடுங்க,” என்று அவனை முறைக்க…

“சாப்பிடும்போது சத்தம் இல்லாமல் சாப்பிடணும்னு சொல்ற மேனர்ஸ் உங்களுக்கு முதல்ல இருக்கா?” என்றவன், அவளை ரசிப்பதைத் வெளியில் காட்டிக் கொள்ளாமல் திரும்பிச் சாப்பிட ஆரம்பித்தான்.

அவனை முறைத்தவள், “நான் எப்படிச் சாப்பிட்டால் இவனுக்கு என்ன? எனக்குப் பிடிச்சிருக்கு. நான் சாப்பிடுறேன். வந்துட்டான் மேனர்ஸ் பத்தி பேச,” என்று முனகியவள், அடுத்த ஜாமூனை எடுத்து அதே போலச் சாப்பிட…

அவள் கண் மூடியதும் நிமிர்ந்து அவளைப் பார்த்து ஸ்ரீ புன்னகை செய்தவன், தன் இலையில் இருந்த ஒரு ஜாமூனை எடுத்து அவள் இலையில் வைத்துவிட்டுச் சாப்பிட ஆரம்பித்தான்.

ஜாமூனைச் சாப்பிட்டு முடித்துக் கண் திறந்து பார்க்கையில், தன் இலையில் இன்னொரு ஜாமுன் இருப்பதைப் பார்த்தவள், “நான் ரெண்டு தானே வாங்குனேன்? எப்படி இன்னொன்னு வந்துச்சு?” என்று யோசித்தவாறே பார்க்க…

“ப்ச்… யாரு வெச்சா என்ன? நமக்கு ஜாமுன் தான் முக்கியம்,” என்று அதை எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தாள்.

அவள் தான் வைத்த ஜாமூனைச் சாப்பிட்டதும் ஸ்ரீ அவளை நினைத்துச் சிரித்தவன், சாப்பிட ஆரம்பிக்க, அவன் அருகில் அமர்ந்து இருந்த அந்தப் பெண் அவனுக்கு முன்பாகவே சாப்பிட்டு விட்டு எழுந்து சென்றுவிட்டாள்.

அவன் அம்மாவைச் “சீக்கிரம் சாப்பிடச் சொல்ல…” “முடிச்சுட்டேன்டா… வா போகலாம்,” என்றவர். “சாப்பிடக் கூட விடாமல் அப்படி அவசரமா என்ன வேலை இருக்குன்னு என்னை இழுத்துட்டுப் போறே?” என்று அவனைத் திட்டிக் கொண்டே அவன் அம்மா அவனுடன் செல்ல…

அப்போது தான், தன் அருகில் சாப்பிட்டுக் கொண்டு இருந்த அந்தப் பெண் தன் பர்ஸை டேபிளிலேயே வைத்துவிட்டுச் சென்றுவிட்டாள். அதை எடுத்துக் கொண்டு வந்தவன், கை கழுவும் இடத்தில் அந்தப் பெண்ணைத் தேட… அவள் அங்கு இல்லை. “எங்கே போயிருப்பாள்?” என்று ஸ்ரீ அவளைத் தேடிக் கொண்டு வர…

அவள் ஐஸ் கிரீம் கொடுக்கும் இடத்தில் நின்று கொண்டு ஐஸ் கிரீம் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள். “சரியான சாப்பாட்டு ராமி போல,” என்று நினைத்தவன், அவனும் ஒரு ஐஸ் கிரீமை வாங்கி வந்து அவள் சாப்பிட்டுக் கொண்டு இருந்த கிண்ணத்தில் வைக்க…

அவனைப் பார்த்தவள், “ஹலோ! யாருங்க நீங்க? எனக்கு ஐஸ் கிரீம் தர்றீங்க?” என்று கேட்க…

“நான் உங்க இலையில் வைத்த ஜாமூனை மட்டும் சாப்பிட்டீங்களா? அதே போல நினைத்து இந்த ஐஸ் கிரீமையும் சாப்பிடுங்க,” என்றான் ஸ்ரீ.

அவன் சொன்னதைக் கேட்டு, “அப்போ நீங்க தான் எனக்கு ஜாமூன் வெச்சீங்களா?” என்றாள் அந்தப் பெண்.

“ஆமாம்,” என்று ஸ்ரீ தலையை ஆட்ட…. “நீங்க எதுக்கு எனக்கு ஜாமூன் வெச்சீங்க?” என்றாள் அந்தப் பெண்.

“நீங்க ஜாமூன் சாப்பிடுவதைப் பார்க்க அழகா இருந்துச்சு. அதான் இன்னொரு முறை இந்த அழகைப் பார்க்க ஆசையா இருந்தது. அதான் உங்க இலையில் வெச்சேன்,” என்றான் ஸ்ரீ.

அவன் அப்படிச் சொல்லவும் அந்தப் பெண்ணிற்குச் சிரிப்பு வந்துவிட, அதை அவனிடம் காட்டிக் கொள்ளாமல், “இப்போ எதுக்கு இங்கே வந்து என்னை ‘டிஸ்டர்ப்’ பண்ணிட்டு இருக்கீங்க?” என்றாள்.

“நான் ஒன்னும் உங்களை ‘டிஸ்டர்ப்’ பண்ணலை. நீங்க தான் என்னை ரொம்ப ‘டிஸ்டர்ப்’ பண்ணுகிறீர்கள்,” என்று ஸ்ரீ சொல்ல… அவன் அவளைப் பார்த்ததில் இருந்து அவளை நினைத்து மிகவும் ‘டிஸ்டர்ப்’ ஆக இருப்பதாக நினைத்து அந்த வார்த்தையைச் சொன்னான்.

“ஹலோ! நான் என்னங்க பண்ணினேன்?” என்றாள் அந்தப் பெண்.

“நீங்க எதுவும் பண்ணலை. உங்க பர்ஸை அங்கே வெச்சிட்டு வந்துட்டீங்க. உங்களைத் தேடிக் கொண்டு வந்து கொடுத்துட்டுப் போகலாம்னு தான் வந்தேன். என்னோட வேலையைப் பார்க்க விடாம உங்களைக் கண்டுபிடிச்சுக் கொண்டு வந்து கொடுக்கிறேன் இல்ல. என் வேலையைக் கெடுத்த நீங்க தான் என்னை ரொம்ப ‘டிஸ்டர்ப்’ பண்றீங்க,” என்று சொல்லிவிட்டு அவளிடம் பர்ஸை நீட்ட…

அதை அவனிடம் இருந்து வேகமாக வாங்கியவள் அந்தப் பர்ஸை வாங்கித் திறந்து பார்க்க… “ஏங்க! தேடிக் கொண்டு வந்து பர்ஸைத் தரேன். இப்படி என் முன்னாலேயே பர்ஸைச் சரி பார்த்து என்னை இப்படி ‘இன்சல்ட்’ பண்றீங்களே,” என்றான் ஸ்ரீ.

“அப்படி எல்லாம் எதுவும் இல்லைங்க. எங்க அண்ணா எனக்காக ஆசையா வாங்கி கொடுத்த பர்ஸ் இது. அதான் அவன் அதில் எனக்காக ஒரு சின்ன ஸ்வாமி சிலை கொடுத்தான். அதை நான் இந்த பர்ஸில் தான் வைத்து இருக்கிறேன். அது இருக்கிறதா என்று பார்த்தேன்,” என்று விளக்கம் சொன்னவள், அவனிடம் அந்தச் சிலையை காண்பித்து, “இது தான்,” என்று காட்டினாள்.

“உங்க அண்ணா என்றாள் உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா?” என்றான் ஸ்ரீ.

“ஆமாம்,” என்றால் அந்தப் பெண்.

“கொடுத்து வெச்சவங்க நீங்க. எனக்கும் தான் ஒரு அண்ணன் இருக்கானே. எனக்கும் அவனுக்கும் சின்ன வயசுலிருந்தே ஆகாது,” என்றான் ஸ்ரீ.

“ஆனா நானும் என் அண்ணாவும் அப்படி கிடையாது,” என்றாள் அந்தப் பெண்.

ஸ்ரீயின் அம்மா அவனை அழைக்க, “சரிங்க, நான் கிளம்புறேன்,” என்று சொன்னவன், “என் பேரு ஸ்ரீ,” என்றவன். “இஃப் யூ டோன்ட் மைன்ட், உங்க நேம் என்னனு நான் தெரிஞ்சுக்கலாமா?” என்றான்.

“நான் ஏன்? உங்க கிட்டே என் பேரைச் சொல்லணும்?” என்றாள் அந்தப் பெண்.

“என்னங்க இது? நான் என் பேரைச் சொன்னேனே,” என்றான் ஸ்ரீ.

“நான் கேட்டேனா?” என்றாள் சிரித்துக் கொண்டே…

“சரியான ஆளுங்க நீங்க,” என்றவன், “சரி, நீங்க சொல்லாட்டி போங்க. நான் உங்களுக்கு எப்பவோ பேர் வெச்சிட்டேன்,” என்றான்.

“என்ன பேரு வெச்சீங்க எனக்கு?” என்றாள் ஆர்வமாக …

“நீங்க எனக்கு உங்க பேரைச் சொல்ல மாட்டிங்கலாமாம். நான் மட்டும் உங்களுக்கு வைத்த பெயரைச் சொல்லனுமா? அதெல்லாம் முடியாது,” என்றான் ஸ்ரீ.

“சரி சரி, சீக்கிரம் என்னோட நிக் நேமைச் சொல்லுங்க. எனக்குப் போகணும்,” என்று அந்தப் பெண் கேட்க… “ம் சரி, சரி,” என்றவள் தன் பெயரைச் சொல்ல, “நல்ல நேம்,” என்றான் ஸ்ரீ.

“சரி சரி, சீக்கிரம் என்னோட நிக் நேமைச் சொல்லுங்க. எனக்குப் போகணும்,” என்று அந்தப் பெண் கேட்க…

“அதை நான் உங்களை அடுத்த முறை சந்திக்கும் போது சொல்றேன்,” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான். “அடப்பாவி, என்கிட்டயேவா?” என்று நினைத்தவள், அவனைப் பார்த்துச் சிரித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினாள்.


சந்தோஷின் துணிச்சலான செயலுக்குப் பிறகு ராதாவைப் பார்க்க வந்த துரை, அவள் கழுத்தில் இருக்கும் தாலியைப் பார்த்ததும் என்ன செய்வார்?

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured