Fling 9
கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கடந்துவிட்டன. லண்டனில் ஏற்பட்டிருந்த பெரும் தொழில்நுட்பச் சிக்கலைச் சரிசெய்துவிட்டு, இறுதியாகத் தீரன் இந்தியா திரும்பினான்.
அவனது கவனம் முழுவதும் இன்னமும் ‘Paru_1’ என்று தன்னைச் சொல்லிக்கொண்ட அகலிகாவைத் தேடுவதில்தான் இருந்தது.
ஆனாலும், அவனது சொந்த பிசினஸ் அவனை இப்போது வேறொரு முக்கிய நிகழ்ச்சிக்கு இழுத்து வந்தது.
அவன் இந்தியா திரும்பியதற்கு முக்கிய காரணம், அவனது நெருங்கிய nanbanum Business Partner நண்பனுமான முகேஷ்ஷின் திருமண நிச்சயதார்த்தம் தான்.
தீரன் சும்மா வரவில்லை. அவனுடன் ரியாவையும் அழைத்து வந்திருந்தான.
தீரனும், ரியாவும் சிறு வயதிலிருந்தே ஒருவருக்கு ஒருவர் பழக்கம், மேலும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் அவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள்.
அவர்கள் இருவரும் முகேஷின் நிச்சயதார்த்தத்திற்கு மிகக் நேர்த்தியாக உடை அணிந்து வந்திருந்தனர்.
முகேஷ்ன் திருமண நிச்சயதார்த்த மண்டப வாசலில் வந்து காரை நிறுத்தினான் தீரன்.
அவனோடு சேர்ந்து இறங்கிய ரியா தீரனின் கையைப் பிடித்துக்கொண்டு முகேஷை வாழ்த்தும் ஆர்வத்துடன் உள்ளே நுழைந்தாள்.
அந்த மண்டபமே மிகவும் ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதை ஆச்சரியமாக பார்த்த ரியா.
“தீரன், பாரு! முகேஷ் நிச்சயதார்த்தம் எவ்வளவு கிராண்டா நடக்குதுன்னு! என்கேஜ்மென்ட்டையே இவ்வளவு கிராண்டா நடத்துறான் ” என்று ரியா உற்சாகமாகப் பேசினாள்.
“ஆமாம் ரியா. முகேஷ் எல்லாத்தையும் பிரம்மாண்டமா பண்றவன்,” என்ற தீரன், அவளது பேச்சைக்கூடக் கவனிக்காமல் ரியாவோட மண்டபத்திற்குள் நுழைந்தவன் பார்வை முதலில் மண்டபத்தின் மேடையை நோக்கிக் சென்றது.
அங்குதான் அவனது பார்வை நிலைத்தது.
அங்கே பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்தது தீரனின் விழிகள்.
மேடையில், நடக்கப் போகும் நிச்சயதார்த்தத்திற்குத் தயாராக, முகேஷின் அருகில் மணப்பெண் நின்றிருந்தாள். அவளைப் பார்த்ததும் தீரனுக்கு நம்பமுடியாத அதிர்ச்சி. அவன் கால்கள் அப்படியே உறைந்து போனது.
முகேஷ் அருகே நின்றிருந்தது வேறு யாருமில்லை அகலிகா தான்.
தீரன் கண்களைக் கசக்கி, மீண்டும் ஒருமுறை பார்த்தான். அவனது மூளை ஒரு கணம் வேலை செய்வதை நிறுத்தியது.
‘இவளை இங்கே எப்படி எதிர்பார்க்க முடியும்?’ என்று மனதுக்குள் குழப்பம் ஏற்பட்டது.
அவன் உடனே குழப்பத்துடன் ரியாவைப் பிடித்து, “ரியா, இவ… இவளோட பேர் என்ன?” என்று மெதுவாகக் கேட்டான்.
“யாரு தீரன்? முகேஷோட ஃபியான்ஸியவா?..” இன்று மேடையில் அழகாக பட்டு சேலை அணிந்து நின்றிருந்த அகலிகாவை பார்த்து கேட்டாள்.
ஆமாம் என்பது போல அவர்களை மீதி இருந்த விழிகளை நகர்த்த முடியாமல் அப்படியே நின்று இருந்தால் தீரன்
“அவ பேர்தான் அகலிகா. முகேஷோட அம்மாவுக்கு ரொம்பப் பிடிச்ச பொண்ணாம். ஒரு மாசத்துக்கு முன்னாடிதான் எல்லாத்தையும் அவசரமா முடிவு பண்ணினாங்களாம்,” என்றாள் ரியா.
அவள் சொன்ன பெயரைக் கேட்டதும், தீரனின் குழப்பம் இன்னும் அதிகரித்தது. ‘Paru_1’ என்று ஆப்பில் பேசியவள், தன்னோடு ஹோட்டலில் முழு இரவும் இருந்தவள் பெயர் பாரு இல்லையா? அகலிகா தான் அவள் உண்மையான பெயரா? என்று கேள்விகள் எழுந்தது அவனுக்குள்.
இரண்டு மாதங்களுக்கு முன், வேறு ஒருவனால் ஏமாறியதாகச் சொன்னவள், இப்போது இவ்வளவு பெரிய தொழிலதிபரைத் திருமணம் செய்யத் தயாராகிவிட்டாளா?
மேடையில் இருப்பவளின் உண்மையான பெயர் அகல் காத்தானா என்ற சந்தேகம் இன்னும் தீரனுக்கு தீரவில்லை.அவன் விழிகளை மேடையை ஒட்டி வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை நோக்கி நகர்த்தினான்.
அதில் பொன்னெழுத்துக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது:
முகேஷ் & அகலிகா எங்கேஜ்மெண்ட் என்று போட்டிருந்தது.
தீரனுக்கு ஒட்டுமொத்த உலகமும் தலைகீழாகச் சுழல்வது போலிருந்தது. ‘அகலிகா! இவள் ஏன் தான் ஏமாந்துவிட்டதாக பொய் சொன்னாள்? என்னுடன் ‘Fling’ செய்துவிட்டு, உடனடியாக ஒரு பெரிய பணக்காரனைத் திருமணம் செய்துகொள்ளத் தயாராகிவிட்டாளா?’ அவனுள் கோபம் மூண்டது.
அவள் அணிந்திருந்த பட்டுப் புடவையும் நகைகளும் பிரகாசமாக இருந்தாலும், அவள் முகத்தில் எந்தவிதச் சந்தோஷத்தின் சுவடும் இல்லை. அவள் ஏதோ ஒரு யோசனையில், கடமைக்காக நின்றிருப்பது போலிருந்தது.
மேடையின் அருகில் நின்று, முகம் வாடி இருந்த அகலிகாவையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் தீரன்.
இவ்வளவு நெருக்கமான இடைவெளியில், அவளுடன் இருந்த பிறகும், அவள் தன்னைக் கவனிக்கவில்லை என்பது அவனுக்கு விசித்திரமாக இருந்தது.
தன் அருகில் ரியா நிற்பதைக்கூட மறந்து, கடந்த இரண்டு மாதங்களாகத் தான் தேடியவளை, இந்த மேடையில்தான் கண்ட அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தான் தீரன்
மேடையில் முகேஷுடன் நிச்சயதார்த்தத்திற்குத் தயாராக நின்றிருந்த அகலிகாவைப் பார்த்த அதிர்ச்சியில், தீரன் அப்படியே உறைந்துபோய் நின்றிருந்தான்.
அவர்களுக்கு வாழ்த்து சொன்ன வந்தவர்களிடம் மென்மையாக புன்னகைத்து தலை சுத்து கொண்டு இருந்தவளை பார்க்க பார்க்க தீரனுக்கு கோபம் அதிகமானது.
அவனது கோபம், குழப்பம், மீண்டும் அவளைப் பார்த்த மகிழ்ச்சி எனப் பல உணர்வுகள் ஒரே நேரத்தில் உள்ளுக்குள் அலைமோதின.
ரியா, அவனது கையைப் பிடித்தபடி, “என்ன தீரன், அங்கேயே நிக்கிற? வா, அவங்களுக்கு விஷ் பண்ணலாம்,” என்று அவனை மேடைக்கு இழுத்தாள்.
சரியாக அந்த நேரத்தில், முகேஷ் மேடையிலிருந்து தீரனைப் பார்த்தவன். “டேய் ஆதித்யா! வாடா! ஏன் அங்கேயே நிக்கிற? இங்க வா,” என்று உற்சாகமான அவனை மேடைக்கு அழைத்தான்.
அவன் குரலைக் கேட்டதும், அதுவரை முகேஷுடன் நின்றிருந்த அகலிகா, இயல்பாகத் திரும்பிப் பார்த்தாள். அவள் கண்கள், சரியாகத் தீரனின் மீது விழுந்தது.
ரியாவுடன் கை கோர்த்து அசையாமல் நின்றிருந்த தீரனைப் பார்த்ததும், அவள் உடல் முழுவதும் ஒரு மின்சாரம் பாய்ந்ததைப் போல அதிர்ந்து போனாள்.
‘தீரன்! இவனா? இவன் இங்க எப்படி?’ கடந்த இரண்டு மாதங்களாக அவள் அடக்கி வைத்திருந்த நினைவுகள், உணர்வுகள் அனைத்தும் ஒரே நொடியில் உயிர்பெற்று அவள் கண் முன் நின்று இருக்க தன்னிலை மறந்து அவனையே பார்த்துக்கொண்டு இருந்தால் அகலிகா.
அவள் முகத்தில் ஒரு கணம், தன்னை அறியாமல் ஒரு பூரிப்பு வந்தது. அவனைக் கண்டதில் வந்த திடீர் மகிழ்ச்சி அது. ஆனால், அடுத்த நொடி, அவள் முகத்தில் ஒரு இறுக்கம் குடி கொண்டது.
‘நான் இப்போது வேறு ஒருவனுக்கு மனைவியாகப் போகிறேன்’ என்ற உண்மை அவளது உணர்வுகளைத் தடுத்து நிறுத்தியது.
அகலிகா உடனடியாகத் தனது கவனத்தைத் திருப்பிக் கொண்டாள். அவள் மேடையில் நடந்து கொண்டிருந்த நிச்சயதார்த்த சடங்குகளைப் பார்ப்பது போலத் தலைகுனிந்தாள்.
தன்னைப் பார்த்ததும் அவள் முகத்தில் ஒரு நொடியில் எழுந்த உணர்வுகளை கவனிக்க தீரன் தவறவில்லை முகேஷ் பார்த்து சிரித்தவன் அகிலிகாவை பார்த்தபடியே மேடை ஏறி வந்தான்.
அவர்கள் அருகில் வருவதை உணர்ந்த அகலிகா திரும்பி திறனை நேருக்கு நேராக பார்த்தாள்.
தீரனும், அகலிகாவும் விழிகளை இமைக்காமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
அவர்கள் மத்தியில் எந்தப் பேச்சும் இல்லை. ஆனால், இருவருக்கும் ஹோட்டலில் இருந்த நினைவுகள் வந்து இருவரையும் ஆடிப்படைத்தது.
அந்தப் பார்வையில் இருந்து இருவராலும் மீள முடியவில்லை.
இருவரின் மனதிலும் ஆயிரம் கேள்விகள் எண்ணங்கள் ஓடியது.
மேடை ஏறிய தீரன் என்ன செய்யப் போகிறான்.
அகலிகா தீரனை எப்படி எதிர்கொள்ளப் போகிறாள்
தொடரும்…
