Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 172

உன் ரகசிய ரசிகை நான் 172

by Layas Tamil Novel
229 views

Episode 172

துர்காவைப் பார்த்துவிட்டு உங்கள் வீட்டிற்கு கிளம்பிய கதிரும் கீர்த்திகாவும் காரில் சென்று கொண்டு இருக்க…

கீர்த்திகா என்றும் இல்லாமல் இன்று தான் மிகவும் சந்தோஷமாக இருந்தாள்.

“என்ன கீர்த்து, துர்காவிற்கு பழைய நினைவுகள் எல்லாம் வந்துடுச்சுன்னு நீ ரொம்ப சந்தோஷமா இருக்கியா? உன் முகத்தில் அப்படியே அந்தச் சந்தோஷம் பிரதிபலிக்குது” என்று கேட்டான் கதிர்.

“ஆமாம் கதிர். ரொம்ப நாளைக்கு பிறகு நான் ரொம்பச் சந்தோசமா இருக்கேன். எங்கே என் அக்காவுக்கு இப்படி பழைய நினைவுகள் எல்லாம் வராமலேயே போய் விடுமோ, என்னை அவளுடைய தங்கை என்பதையே முழுவதுமாக மறந்து விடுவாளோ என்று பயந்து கொண்டே இருந்தேன்” என்றால் கீர்த்திகா.

கதிர், “பழைய நினைவுகளை எல்லாம் மறந்திருந்தாலும் கூட துர்கா உன்னிடம் நன்றாகத் தானே பேசிப் பழகினாள்?” என்று கேட்டான்.

“நான் இல்லைன்னு சொல்லல கதிர், ஆனால் அக்கா என்கிட்ட முதலில் வைத்திருந்த பாசம், ஒருவித அன்பு எனக்குப் பழசு எல்லாம் மறந்த அக்காகிட்ட இருந்து கிடைக்கல” என்றால் கீர்த்திகா.

அவள் சொல்வதின் அர்த்தம் கதிருக்கு புரிய, சரி என்று அவன் வீட்டிற்கு காரைச் செலுத்தாமல் நேராக அவளை வேறொரு இடத்திற்கு அழைத்துச் சென்றான்.

கீர்த்திகா, “கதிர் நாம வீட்டுக்குப் போகலையா? இப்போ எங்கே போறோம்?” என்று கேட்டாள்.

அவள் சிரித்துக் கொண்டே எதுவும் பேசாமல் காரைச் செலுத்த, கீர்த்திகாவும் அதற்கு மேல் கதிரிடம் எதுவும் பேசாமல் அமைதியானாள்.

கீர்த்திகாவை அழைத்துக் கொண்டு கதிர் ஒரு பெரிய பில்டிங்கிற்குள் நுழைந்தான்.

காரை விட்டு இறங்கிய கீர்த்திகா அந்தக் கட்டிடத்தையே அண்ணாந்து பார்த்து ஆச்சரியப்பட்டவள், கதிரைப் பார்த்து… “கதிர் இது யாருடைய இடம்? இங்கே எதுக்கு நாம வந்து இருக்கோம்?” என்று கேட்டால்.

“இது நம்மோட பில்டிங் தான் கீர்த்து” என்றான்.

“என்ன சொல்ற கதிர்? இதுவரைக்கும் நீ இதைப்பற்றி என்கிட்ட எதுவுமே சொன்னதில்லை” என்று கேட்டாள்.

“அதுக்காகத் தானே உன்னை நான் இப்போ இங்கே கூட்டிட்டு வந்து இருக்கேன். உன்கிட்ட நான் எப்பவோ சொல்லி இருக்க வேண்டியது. அதுக்குள்ள துர்காவிற்கு ஆக்சிடென்ட் ஆகி நிலைமை எதுவும் சரியில்லாமல் இருந்ததால் தான் உன்கிட்ட முன்னாடியே சொல்ல முடியாமல் போயிடுச்சு” என்றான்.

பின் கீர்த்திகாவின் கையைப் பிடித்து அந்தக் கட்டிடத்திற்குள் கதிர் அழைத்துச் செல்ல…

கதிருடன் அந்தக் கட்டிடத்திற்குள் வந்த கீர்த்திகா அதன் உள்ளே இருந்த கட்டிட வடிவமைப்புகளைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டாள்.

கதிர் இந்த பில்டிங்கில் இன்டீரியர் எல்லாம் ரொம்ப சூப்பரா இருக்கு. யார் பண்ணினது இதையெல்லாம்? ரொம்ப வித்தியாசமா எல்லாமே இருக்கு இல்ல?” என்று பேசிக்கொண்டே அவனுடன் அந்தக் கட்டிடத்தில் இருந்த இன்டீரியர் டிசைன் எல்லாம் ரசித்தவாறு சென்றாள்.

கதிரும் எதுவும் கூறாமல் ஆமாம் என்று தலையாட்டியபடி, அவளை உள்ளே அழைத்துக் கொண்டு கட்டிடத்தில் இருந்த வேறு ஒரு தளத்திற்கு அழைத்துச் சென்றான்.

அந்தத் தளத்தில் இருந்தவர்களை எல்லாம் ஒரு சிறு புன்னகையோடு கடந்து சென்ற கதிர் நேராக அங்கிருந்த ஒரு கேபினுக்குச் செல்ல…

அந்தக் கேபினின் வாசலில் ‘சி.இ.ஓ மிஸ்டர் கதிர்’ என்று எழுதி இருந்தது.

அதைப் பார்த்தபடி கதிருடன் அவன் கேபினுக்குள் வந்த கீர்த்திகா கேபின் கதவு சாற்றியதும் வேகமாக அவன் முன்பு வந்து நின்றவள். அவன் இரு கைகளையும் பிடித்துக் கொண்டு, “இது உன்னோட ஆபிஸா கதிர்?” என்று கேட்டாள்.

சிரித்துக் கொண்டே கதிர் ஆமாம் என்று தலையாட்ட…

“ஏண்டா இவ்வளவு நாளா இதைப்பற்றி என்கிட்ட சொல்லல? இது எந்த மாதிரியான கம்பெனி?” என்று கேட்டாள்.

“உனக்கு சர்ப்ரைஸ் பண்ணனும் என்பதற்காகத்தான் நான் இந்தக் கம்பெனியைப் பற்றி எதுவுமே உன்கிட்ட சொல்லல. நீயும் நானும் பழகுறதுக்கு முன்னாடியே நான் இந்த ஆபீஸை ஆரம்பித்து விட்டேன். அப்போது ஒரு சிறிய நிறுவனமாகத் தான் இது இருந்தது. சிறிது சிறிதாக என்னுடைய உழைப்பை இதில் போட்டு நான் இந்த நிறுவனத்தை இவ்வளவு தூரம் கொண்டு வந்திருக்கிறேன்” என்றவன்.

கீர்த்திகாவை அழைத்துக் கொண்டு போய் தன்னுடைய சீட்டில் அமர வைத்து, “இந்த பிசினஸ் என்னன்னு தானே கேட்டே?” என்றவன் அவள் முன்னால் இருந்த கம்ப்யூட்டரை ஆன் செய்து அதில் இருந்த டிசைன்களை எல்லாம் கீர்த்திகாவிற்கு ஓபன் செய்து காட்டினான்.

அவள் பார்த்தவளுக்கு ஒவ்வொரு டிசைனும் ஒவ்வொரு வடிவமைப்பிலும் வித்தியாசமாக இருக்க, இதை எல்லாம் பார்த்தவள் “இதையெல்லாம் நீதான் டிசைன் பண்ணினாயா கதிர்?” என்று ஆச்சரியமாகக் கேட்டாள்.

“ஆமாம்” என்று தலையாட்டியவன், “அப்பாவிற்காகத்தான் அண்ணனுடன் சேர்ந்து நான் அந்தப் பிசினஸை எடுத்து நடத்திக் கொண்டு இருந்தேன். ஆதிக்குடைய நோய் பற்றி உனக்கு நன்றாகவே தெரியும். ஆதி தன்னை வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருந்ததனால் தான் நான் அவனுக்குப் பதிலாக எல்லா வேலையையும் செய்து கொண்டே இருந்தேன். இப்போது தான் ஆதி பூரணமாக குணமடைந்து விட்டானே. அவனே எல்லா வேலையும் பார்த்துக் கொண்ட பிறகு எனக்கு அங்கு என்ன வேலை இருக்கிறது. அதனால் தான் என்னுடைய இத்தனை நாள் கனவை இப்போது முழுவதுமாக கவனித்துக் கொள்ளலாம் என்று நினைத்து, அதைச் செயல்படுத்துவதற்கு முன்னால் உன்னை முதலில் இங்கே அழைத்து வந்து இதையெல்லாம் சுற்றிக் காட்டிவிட்டு அதன் பிறகு முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்று இருந்தேன்” என்றான் கதிர்.

“அப்போ நீ இனிமேல் ஆதி மாமா ஆபீசுக்கு போக மாட்டியா?” என்று கேட்டாள் கீர்த்திகா.

“அது எப்படி இத்தனை நாள் பார்த்த பிசினஸை விட்டுவிட்டு மொத்தமாக வருவது? அப்படி எல்லாம் இல்லை. இதை முழு நேரமாக பார்த்துக் கொள்வேன். இடையே அங்கேயும் சென்று வருவேன்” என்று சொன்னான் கதிர்.

கீர்த்திகாவிற்குத் தன் தொழிலைப் பற்றிய விபரங்களை முழுவதுமாக எடுத்துச் சொல்லி கொண்டிருந்தான் கதிர்.


ரூபேஷின் அம்மாவைச் சந்தித்து விட்டு வந்ததிலிருந்து ஷிவு குழப்பத்திலேயே இருந்தால்.

‘அவன் பெயரில் ஆதி மாமா அவன் கேட்கும் அளவிற்குச் சொத்துக்களை எழுதி வைப்பதாகச் சொன்ன பிறகுதான் என்னை திருமணம் செய்து கொள்ளவே சம்மதித்து இருக்கிறான். என் மீது துளியும் காதல் இல்லாதவனை நான் எப்படி திருமணம் செய்து கொள்வது? அவன் அம்மாவிடம் வேறு நான் அவனை திருமணம் செய்து கொள்கிறேன் என்று வாக்கு கொடுத்து விட்டேன். நான் சொன்னதை நம்பி அவர் நாளை இங்கே வந்து என்னைப் பெண் கேட்க வருவார். நான் எப்படி இந்த விஷயத்தை எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லையே.’

தன்னுடைய அம்மா அப்பாவிற்குத் தன்னுடைய நிலைமை தெரிந்தால் என்ன ஆவது என்று யோசித்தவள்.

லேசாக மிரண்டு இருந்த தன் வயிற்றைத் தடவியப்படியே, ‘தன் வயிறு மேலும் பெரிதாகி வீட்டில் இருப்பவர்களுக்கு எல்லாம் உண்மை தெரிவதற்கு முன்பாகவே இந்தத் திருமணத்தை எப்படியும் நடத்த வேண்டும். வேறு வழியே இல்லை. ரூபேஷின் அம்மா சொல்வது போல என் குழந்தை இந்த உலகிற்கு வரும்போது அதன் அப்பாவும் அதனுடன் இருந்தால் தானே என் குழந்தைக்கு மதிப்பு. வேறு வழியே இல்லை. அவனைத் திருமணம் செய்துதான் ஆக வேண்டும்’ என்று முடிவெடுத்துக் கொண்டால் ஷிவு.

தன் வயிற்றில் கை வைத்துத் தடவியப்படியே இதையெல்லாம் யோசித்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்திருந்த ஷிவுவை அவள் அறையின் வெளியில் நின்று கனகா பார்த்துக் கொண்டு இருந்தார்.

‘என்னை யாரோ பார்ப்பது போல உணர்ந்த’ ஷிவு வாசல் பக்கம் திரும்பிப் பார்க்க… அங்கே கனகா கையில் பால் டம்ளர் உடன் நின்று இருந்தார்.

ஷிவு கனகாவைப் பார்த்ததும் தன் வயிற்றில் இருந்து கையை வேகமாக எடுத்தவள், அவள் அம்மாவைப் பார்த்து, “ஏன் அம்மா உள்ளே வராம அங்கேயே நின்னுட்டு இருக்கீங்க? உள்ளே வாங்க” என்று அவரை அழைத்தாள்.

இவ்வளவு நேரம் யோசனையோடு நின்று இருந்தவர் எதுவும் பேசாமல் உள்ளே வந்து அவர் கையில் இருந்த பால் டம்ளரை ஷிவுவின் கையில் கொடுத்துவிட்டுத் திரும்பிச் செல்லப் போக…

“அம்மா…” என்று அழைத்து அவர் கையைப் பிடித்து நிறுத்திய ஷிவு பெட்டில் இருந்து எழுந்து வந்து அவர் முன்பு நின்றவள் அவர் முகத்தைப் பார்க்க…

கனகா எதுவும் பேசாமல் அமைதியாக ஷிவுவைப் பார்க்க…

“ஏன் எதுவும் பேச மாட்டேங்கிறீங்க அம்மா? என்ன ஆச்சு உங்களுக்கு? உடம்பு எதுவும் சரியில்லையா?” என்று சொல்லி அவர் நெற்றியைத் தொட்டுக் காய்ச்சல் எதுவும் இருக்கிறதா என்று அக்கறையாகப் பார்த்தாள் ஷிவு.

“எனக்கு எதுவும் இல்லை ஷிவு. நான் நன்றாகத் தான் இருக்கிறேன். உனக்குத் தானே உடம்பு சரியில்லை” என்றவர் அவள் வயிற்றைத் தடவியபடி ஷிவுவின் முகத்தைப் பார்க்க..

ஷிவுவிற்கு அவள் அம்மாவுக்குத் தன் வயிற்றில் குழந்தை இருக்கும் விஷயம் தெரிந்து விட்டதே என்று அதிர்ச்சியானது.


துர்கா ஆதிக்காக ஹாலில் காத்திருக்க…

அவள் வீட்டில் வேலை செய்பவர்களால் எல்லாம் ஆதியையும், துர்காவையும் சேர்த்து கிண்டல் செய்து கொண்டு இருக்க… அவர்களின் கேலியும் கிண்டலும் துர்காவுக்கு வெட்கத்தை உண்டு பண்ண…

அதே வெட்கத்தோடு வாசலைத் திரும்பிப் பார்த்த துர்கா, ஆதி மது அருந்தி தள்ளாடியபடி சங்கவியின் தோளில் சாய்ந்து வீட்டிற்குள் வந்து கொண்டு இருந்தான்.

அவனைத் தன் தோளில் சாய்த்துப் படியே சங்கவி துர்காவைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தபடி ஹாலுக்குள் வந்தால்.

ஆதியும், சங்கவியும் ஒன்றாக அதுவும் இந்த நிலையில் வருவார்கள் என்று எதிர்பார்க்காத துர்கா அதிர்ச்சியில் உறைந்து போய் அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டு இருக்க…

ஆதியைப் ஹாலில் இருந்த சோபாவில் அமர வைத்து விட்டு சங்கவி தன் தோள்கள் எல்லாம் வலிப்பது போலத் தன் கைகளை இப்படியும் அப்படியும் ஆட்டித் தன் உடலை வளைத்து நெட்டி முறித்தவள்.

துர்காவிடம் வந்து, “என்ன அப்படிப் பார்க்கிறே துர்கா? இப்படி ஆதி என்கூட ஒண்ணா வந்தேன்னு பார்த்தியா?” என்று கேட்டாள்.

துர்கா எதுவும் பேசாமல் சங்கவியையும், சோபாவில் படுத்து இருந்த ஆதியையும் பார்த்தவள் கண்களில் கண்ணீரோடு நின்று இருக்க…

“உன்னை இப்படிப் பார்ப்பதற்கு எனக்கு எவ்வளவு சந்தோசமாக இருக்கிறது தெரியுமா?” என்றவள்.

“வழக்கம் போல உன் புருஷன் தான் ஆதி ஆஃபீஸில் இருந்து உன்னை பார்க்கத் தான் ஆசை ஆசையாக கிளம்பி வந்துட்டு இருந்தான். நான் சரியா உன்னை பார்க்க அவன் வீட்டிற்கு கிளம்பியதும் ஆதிக்கு போன் செய்து அவனை நான் உடனே பார்க்க வேண்டும் என்று அவனைப் போனிலேயே வற்புறுத்தி நான் இருந்த பாருக்கு அவனை வரவழைத்தேன்” என்றவள் அங்கு நடந்ததை துர்காவிற்கு விவரிக்க ஆரம்பித்தாள்.

“நான் இருந்த பாருக்கு ஆதியை வரச் சொல்லி அவனுக்காக நான் காத்திருந்தேன். பரவாயில்லை நான் அவன் அழைத்ததும் என்னைப் பார்க்க வருவான் என்று நினைக்கவே இல்லை. அவன் மனதில் இன்னமும் என்னைப் பற்றி அவனுக்கு ஒரு சாஃப்ட் கார்னர் இருப்பது அப்போது தான் நான் புரிந்து கொண்டேன்” என்றவள் மீண்டும் அங்கு நடந்ததைக் கூற ஆராம்பித்தாள்.

தன்னைத் தேடி வந்த ஆதியிடம், “ஏன் ஆதி இவ்வளவு டென்ஷன் ஆகுறே… நான் என்ன அவ்வளவு அகாதவளா போய்ட்டேன்னா.. நீ என்னை ஒரு காலத்தில் லவ் பண்ணினே தானே. அந்த கரிசனம் கூடவா உனக்கு என் மேல் இல்லாமல் போனது?” என்று பாவமாகக் கேட்டவள்.

தன் எதிரில் இருந்த சேரைக் காட்டி அவனை அதில் அமரச் சொல்லி கண்களாலேயே சொல்ல… ஆதிக்கும் எதுவும் பேசாமல் அவள் எதிரில் அமர்ந்தான்.

“சரி சொல்லு எதற்கு என்னை இங்கே வரச் சொன்னே?” என்றான் ஆதி.

அவன் அப்படி கேட்டு முடிக்கும் முன் சங்கவி சற்றும் எதிர்பார்க்காத நேரம் பார்த்து எழுந்து ஆதியின் அருகில் வைத்தவள், அவன் அருகில் இருந்த சேரை இழுத்து போட்டு அவன் அருகில் அமர்ந்தவள்.

அவன் முகத்தையே சிறிது நேரம் கூர்ந்து கவனித்தவள், “எப்படி ஆதி நீ இப்படித் திடீர் என்று அழகானே… எனக்கு ஆச்சர்யமா இருக்கு. என் கூடச் சுவிட்சர்லாந்தில் இருந்த போதே ட்ரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணிட்டேன்னு கேள்வி பட்டேன் உண்மையா?” என்றால் சங்கவி.

அவள் தன்னை ஏதோ முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று அழைத்து வந்துவிட்டு, இப்போது தேவையில்லாததை எல்லாம் பேசுகிறாளே என்று அவள் மேல் கடுப்பான ஆதி அங்கிருந்து எழுந்து செல்லப் போக..

சட்டென அவன் கையைப் பிடித்துச் சங்கவி இழுக்கவும் அவள் மீதே போய் ஆதி விழுந்து விட்டான்.

பதறி அடித்துக் கொண்டு ஆதி சங்கவியின் மேல் இருந்து எழுந்தவன், “ஏய் உனக்கு அறிவுனு கொஞ்சமாவது இருக்கா?” என்றவன்.

சங்கவியிடம் இருந்து விலகிச் சென்று சற்றுத் தள்ளி நின்றவன், “நீ என்னை எதுக்கு வரச் சொன்னேன்னு சொல்ல போறியா இல்லையா?” என்றான்.

“நான் ஆதி நான் உன்கிட்ட மனசு விட்டுப் பேசணும்னு தான் உன்ன இங்க வரச் சொன்னேன். நீ இப்படி என்னை யாரைப் போல நடத்துவது எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு” என்றால் சங்கவி.

“உன்னிடம் பேச எனக்கு விருப்பமில்லை” என்றான் ஆதி.

“அப்படி சொல்லாத ஆதி. முதல்ல நீ என்னை தானே விரும்பின? என்னைக் கல்யாணம் பண்ணிக்க மணமேடை வரைக்கும் வந்தவன் தானே நீ…. அன்னைக்கு நான் ஏதோ புத்தி மாறி போய் அப்படி நடந்துகிட்டு உன்னை வேண்டாம் என்று சொல்லிட்டேன். அதனால தானே நீ இந்த துர்காவைக் கல்யாணம் பண்ணின? இல்லைன்னா இந்த நேரம் நீயும் நானும் கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருந்திருப்போம் இல்லையா?” என்று கேட்டாள் சங்கவி.

சங்கவி உண்மையாகவே மனம் வருந்தி ஆதியிடம் பேச…

சங்கவி வருத்தப்படுவதைப் பார்த்த ஆதிக்குக் கஷ்டமாக இருக்கவும், அதே ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், “இப்போ எதுக்கு இந்தத் தேவையில்லாத பேச்செல்லாம் பேசிக்கிட்டு இருக்கே சங்கவி. அது எல்லாம் முடிந்து போன விஷயம். முடிந்து போனதை எப்போதுமே திரும்பிப் பார்ப்பதில் எனக்கு விருப்பமில்லை” என்றான் ஆதி.

அவன் கையைப் பிடித்துக் கொண்டு, “அப்படி சொல்லாதே ஆதி. உன் மனசுல நான் இன்னும் இருக்கேன்னு எனக்கு நல்லா தெரியும். உன் அம்மா வற்புறுத்தி தான் துர்காவே உனக்குக் கல்யாணம் பண்ணி வச்சாங்க என்கிறது எனக்கு மட்டும் இல்லை அன்னைக்குக் கல்யாணத்துக்கு வந்திருந்த எல்லாருக்குமே தெரியும். துர்கா கழுத்துல தாலி கட்டிட்டேன் என்கிற ஒரே காரணத்துக்காக நீ என்னை வெறுத்து ஒதுக்குகிறேன்னு எனக்கு நல்லா தெரியும் ஆதி. உன் மனசுல இன்னமும் நான் இருக்கேன்” என்று அடித்துக் கூறினாள் சங்கவி.

சங்கவி சொன்னதைக் கேட்டு எரிச்சல் அடைந்த ஆதி. “ஏய்…. இதை பேசத்தான் என்னை இங்கே வரச் சொன்னியா?” என்று கடுப்பானவன்.

“உண்மையான காதல் எதுன்னு எனக்கு என் துர்கா உணர்த்தி இருக்கா… அப்படிப்பட்ட என் துர்காவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு உன்னை இன்னும் நான் என் மனசுல நினைச்சுட்டு இருக்கேன்னு நீ சொல்றதுல துளியும் அர்த்தம் இல்லை. நீ என்ன சொன்னாலும் என் மனசுல நீ இல்ல…. எப்போ நீ என்னை அத்தனை பேர் முன்னாடி அசிங்கப்படுத்தி என் குடும்பத்தையும் அவமானப்படுத்துனியோ, அப்பவே உன்னை என் மனசுல இருந்து முழுவதுமாகத் தூக்கி எறிஞ்சிட்டேன். நீ வீணா கற்பனை பண்ணிக்கிட்டு உன் வாழ்க்கையை வீணடிச்சுட்டு இருக்கேன்னு நான் நினைக்கிறேன். வீணா என்னை டிஸ்டர்ப் பண்றதை நிறுத்திடு. என் துர்கா உயிருக்கு நீ ஆபத்து விளைவித்த போதே உன்னை என்னால் என்ன வேண்டுமானாலும் செய்திருக்க முடியும். நீ இன்று வரை உயிரோடு இருப்பதற்கு காரணமே உன் அம்மா மட்டும்தான். அவருக்காகத் தான் நான் உன்னை இத்தனை நாள் உயிரோடு விட்டு வைத்திருக்கிறேன். இல்லை என்றால் உன்னை என்றோ கொன்று புதைத்து இருப்பேன். இந்த நேரம் உன்னை புதைத்த இடத்தில் செடி முளைத்திருக்கும்” என்று கோபமாகச் சங்கவியைப் பார்த்துக் கூறினான் ஆதி.

ஆதி இப்படித் தன்னை எதிர்த்து இருந்து பேசுவதை சங்கவியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

“உண்மையாகவே நான் உன் மனதில் இல்லையா?” என்று கேட்டாள் சங்கவி கோபமாக.

“எப்படி கேட்டாலும் என்னுடைய பதில் இல்லை என்பது மட்டும்தான்” என்றான் ஆதி.

“அப்போ எனக்குப் ப்ரூஃப் பண்ணு. உன் மனசுல நான் இல்லைன்னு சொல்லி” என்று கேட்டாள் சங்கவி.

“உன்கிட்ட ப்ரூஃப் பண்ணனும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை” என்றால் ஆதி.

“உன் மனசுல நான் இல்லைங்கிறத என்கிட்ட ப்ரூஃப் பண்ணாம வேற யார்கிட்ட ப்ரூஃப் பண்ணுவ? உன் பொண்டாட்டிய துர்கா கிட்டையா?” என்று கேட்டாள்.

“என் துர்காவுக்கு என் மனதில் என்ன இருக்கிறது என்பதை நான் சொல்லாமலேயே அவளுக்குப் புரியும். அவளிடம் நான் என்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு எப்போதுமே வந்ததும் இல்லை…. இனியும் வராது” என்றான் ஆதி.

“உன்னோட மனைவியைப் பற்றிய புராணத்தைக் கேட்க நான் இங்கே வரவில்லை. எனக்கு இப்போது தெரிந்து கொள்ள வேண்டும். உன் மனதில் நான் இருக்கிறேனா? இல்லையா? என்று எனக்கு இப்போது இங்கேயே நிரூபித்துக் காட்டு” என்றால் சங்கவி.

“உன்கிட்ட நான் நிரூபிக்கணுமா? சரி நீயே சொல்லு. நான் என்ன செய்தால் என் மனதில் நீ இல்லை என்பதை நம்புவாய்?” என்று அவளிடமே கேட்டான் ஆதி.

ஆதி தன் வழிக்கு வந்து விட்டான் என்று உணர்ந்து கொண்ட சங்கவி.

“நான் சொல்றது இப்போ இங்கே என் கண் முன்னாடியே நீ செய்தால் உன் மனதில் நான் இல்லை. அந்த துர்கா தான் இருக்கிறாள் என்று நான் நம்புறேன்” என்றால் சங்கவி.

“சரி…” என்றான் ஆதி.

அவன் சேரை தனக்கு மிகவும் அருகில் இழுத்துப் போட்டு, அவன் கையைப் பிடித்திருந்தவள், அதில் அமர வைத்த சங்கவி அவன் கைக்குள் தன் கையை கோர்த்து அவனை விளங்கமாகப் பார்த்துச் சிரித்தாள் சங்கவி.

அவள் தன்னிடம் இவ்வளவு நெருக்கமாகக் கைகோர்த்து அமர்ந்து இருப்பதை காணச் சகிக்காமல், ‘இவளுக்குப் பாவம் பார்த்து நான் இங்கே வந்தது தான் நான் செய்த மிக பெரிய தவறு’ என்று வருந்தினான் ஆதி.

You may also like

1 comment

S joshna December 4, 2025 - 12:48 pm

Ayooo intha sangavi romba panra 🤨🧐

Reply

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured