Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 182

உன் ரகசிய ரசிகை நான் 182

by Layas Tamil Novel
114 views

Episode 182

ப்ரியாவிடம் பேசிவிட்டு வீட்டிற்கு வந்த ஸ்ரீ, அவள் சொன்னதற்கு என்ன அர்த்தம் என்று புரியாமல் யோசனையோடு சோபாவில் அமர்ந்தான்.

ஸ்ரீயும் தனக்குத் தெரிந்த வழிகளில் எல்லாம் யோசித்துப் பார்த்துவிட்டான். ஆனால் ப்ரியா, “ஒரு பொண்ணு ஏன் உன்கிட்ட அப்படி நடந்துகொள்கிறாள்னு தெரிஞ்சிக்கிட்டு வா,” என்று சொன்னதற்கு என்ன அர்த்தம் என்று புரியாமல் குழம்பிக்கொண்டிருந்தான்.

அப்போது சமையலறையில் இருந்து சந்தோஷிற்கும் தனக்கும் காபி போட்டு எடுத்துக்கொண்டு வெளியே வந்த ராதா, வரவேற்பறையில் (ஹாலில்) ஸ்ரீ அமர்ந்திருப்பதைப் பார்த்தாள்.

அவனிடம் வந்து, “டேய் ஸ்ரீ, நீ எப்போ வந்த? நீ வந்ததே எனக்குத் தெரியலையே! சொல்லியிருந்தால் உனக்கும் சேர்த்து நான் காபி போட்டிருப்பேனே,” என்றாள் ராதா.

“அதெல்லாம் பரவாயில்லை ராதா, நீ ஒரு நிமிஷம் இங்கே வா… இப்படி வந்து உட்காரு. நான் உன்கிட்ட ஒன்னு கேட்கணும்,” என்றான் ஸ்ரீ.

சோபாவில் ராதா அமர்ந்துகொண்டு, சந்தோஷிற்கு கொண்டு வந்த காபியை ஸ்ரீயிடம் நீட்டிக் குடிக்கச் சொல்ல…

“அப்போ அவனுக்கு…?” என்றான் ஸ்ரீ.

“அவனுக்கு நான் வேற காபி போட்டு கொடுத்திருக்கேன். நீ ஏதோ கேட்கணும்னு சொன்னியே, என்ன?” என்றால் ராதா.

“அது வந்து ராதா, என் ஆபீஸ்ல ஒரு பையன் ஒரு பொண்ணை ரொம்ப சின்சியரா லவ் பண்ணிட்டு இருக்கான். அந்தப் பொண்ணு பின்னாடியே எங்க போனாலும் போறது. அந்தப் பொண்ணு சாப்பிடப் போனா இவனும் பின்னாடியே போறது. அந்தப் பொண்ணு வேற ஏதாவது வேலையா இருக்கும்போதும் எல்லாம், ஒரு இடம்கூட விடாம அந்தப் பொண்ணு பின்னாடியே சுத்திக்கிட்டு இருந்தான்.”

“ஆனால் அந்தப் பொண்ணு இவனை எப்பப் பார்த்தாலும் திட்டிக்கிட்டே இருக்கும். அவன் பக்கத்துல போனாலே, ‘உனக்கு வேற வேலையே இல்லையா? எப்பப் பார்த்தாலும் என் பின்னாடியே சுத்திக்கிட்டு இருக்கே!’ன்னு சொல்லி திட்டுவா. அவனுக்கும் என் பின்னாடி சுத்திச் சுத்தி டயர்ட் ஆயிடுச்சு.”

“ஒரு நாள் அவனோட மாமா, அதே ஆபீஸ்லதான் வேலை பார்க்கிறார். அந்த மாமா இவனை கூப்பிட்டு, ‘இப்படி அந்தப் பொண்ணு பின்னாடியே சுத்திட்டு இருந்தா அந்தப் பொண்ணு உன்னைத் திரும்பி கூடப் பார்க்க மாட்டா. அதனால கொஞ்ச நாளைக்கு நீ அவ இருக்குற பக்கமே தலை வச்சுப் படுக்காத. நீ இப்படி இருந்தாதான் அவளே உன்னைத் தேடி வருவா’ன்னு சொன்னார்.”

“சரி, அந்தப் பையன் அவர் சொன்ன மாதிரி இருந்தாரா?” என்று கேட்டாள் ராதா.

“ஆமா, அப்படித்தான் இருக்கேன்,” என்று அவன் பின்பு சுதாகரித்துக் கொண்டு, “இல்ல இல்ல, அந்தப் பையன்… அவனைச் சொன்னேன். அவன் அப்படித்தான் இருக்கான்,” என்றவன்.

“அந்தப் பொண்ணு, அவனும் பேசாமல் இருந்துவிட்டு வரும்போது, அந்தப் பொண்ணே வந்து, ‘ஏன்டா என்கிட்ட வந்து பேச மாட்டேங்குற? நார்மலா எல்லார் கிட்டயும் பேசுற மாதிரி கூட ஏன் பேச மாட்டேங்குறீங்க?’ அப்படின்னு அந்தப் பையன் கிட்ட சண்டைக்கு வந்தா.”

“அந்தப் பையனும், ‘உண்மையாகவே உங்ககிட்டப் பேசுற மாதிரி இவ்வளவு நாளா உங்க பின்னாடி சுத்திட்டு நான் தப்பு பண்ணிட்டேன். உங்களுக்கு விருப்பம் இல்லாதப்போ நான் எதுக்கு உங்க பின்னாடி சுத்தி என்னோட டைமையும், உங்க டைமையும் வேஸ்ட் பண்ண வேண்டும்?’ என்று அந்தப் பையன் சொல்லிட்டான்.”

“சரி, அதைக் கேட்டு அந்தப் பொண்ணு என்ன சொல்லுச்சு?” என்றால் ராதா.

“அதுக்கு அந்தப் பொண்ணு சொன்னா… ‘ஒரு பொண்ணு பின்னாடி பையன் சும்மா சும்மா சுத்தி வந்தான்னு அவனத் திட்டிக்கிட்டே இருக்கா அப்படின்னா, அதுக்கு ஒரு காரணம் இருக்கு’னு சொன்னா.”

“சரி, அது என்ன காரணம்?” என்று கேட்டாள் ராதா.

“அது தெரிஞ்சா நான் ஏன் உன்கிட்ட வந்து கேட்கப் போறேன்?” என்றான் ஸ்ரீ.

“என்ன சொல்ற? நீ என்கிட்ட என்ன கேட்கணும்?” என்றால் ராதா புரியாமல்.

“அது… அது ஒன்னும் இல்ல ராதா. அந்தப் பையன் என்கிட்ட, ‘அந்தப் பொண்ணு இப்படித் திட்டிக்கிட்டே இருந்துச்சுன்னா, அதுக்கு ஒரு காரணம் இருக்கு’ன்னு அவன்கிட்ட சொன்னதா சொல்லி, என்கிட்ட ‘அது என்ன காரணம்?’ என்று கேட்டான். அதைத்தான் யோசிச்சுக்கிட்டு இருந்தேன். நீ வந்துட்ட,” என்றான்.

“சரி, நீ அவனுக்குப் பதில் சொன்னியா?” என்று கேட்டாள் ராதா.

“இல்லையே ராதா. நானும் எவ்வளவோ யோசிச்சுப் பார்த்துட்டேன். எனக்கு எதுவுமே பிடிபடல. எனக்குத் தெரிஞ்சா தானே நான் போய் அந்தப் பையன் கிட்ட சொல்ல முடியும்? அப்புறம் தானே அவன் அந்தப் பொண்ணு கிட்ட போய் சொல்ல முடியும்?” என்றான் ஸ்ரீ.

“இப்போ உனக்கு என்ன, அந்தப் பொண்ணு ஏன் அப்படி சொன்னான்னு தெரிஞ்சுக்கணும், அவ்வளவுதானே?” என்றால் ராதா.

“என்ன ராதா இவ்வளவு சாதாரணமா சொல்ற? உனக்கு அப்போ அந்தப் பொண்ணு ஏன் அப்படி சொன்னான்னு தெரியுமா?” என்றான் ஸ்ரீ.

“நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லு. அதுக்கப்புறம் நீ கேட்டதுக்கு நான் பதில் சொல்றேன்,” என்றால்.

“சரி,” என்று தலையாட்டினான் ஸ்ரீ.

“சரி சொல்லு, அந்தப் பொண்ணை எவ்வளவு நாளா அந்தப் பையனுக்குத் தெரியும்?” என்றால்.

சற்று யோசித்த ஸ்ரீ, “சுமார் ஒரு ஆறு மாசமா தெரியும்” என்றான்.

“ஓஹோ! ஆறு மாசமா தெரியுமா…” என்றவள். “அந்தப் பொண்ணை அந்தப் பையன் முதல்ல எப்போ, எங்கே சந்திச்சான்னு தெரியுமா?” என்றால் ராதா.

“ஓ, நல்லாவே தெரியுமே! அந்தப் பொண்ணை ஒரு கல்யாணத்துலதான் ஃபர்ஸ்ட் மீட் பண்ணினான். நல்லா ஞாபகம் இருக்கு. அவனும் அந்தப் பொண்ணு பக்கத்துல பக்கத்துலதான் உட்கார்ந்து சாப்பிட்டு இருந்தாங்க. அப்ப கூட அந்தப் பொண்ணு இலையில் வைத்த குலோப் ஜாமுனை ரசிச்சு, ருசிச்சு, மெய் மறந்து கண்ணை மூடி டேஸ்ட் பண்ணிச் சாப்பிட்டாள்,” என்றான்.

“சரி சரி. அந்தப் பொண்ணுகிட்ட அவனோட காதலை (லவ்) ஃபர்ஸ்ட் சொன்னானா இல்லையா?” என்றால்.

“இல்ல. அவன் லவ் பண்றேன்னு அந்தப் புள்ளைகிட்ட முதல்ல சொல்லவே இல்லை. சும்மா அந்தப் பொண்ணு பின்னாடி சுத்திக்கிட்டே இருந்தான். ஒரு நாள் அந்தப் பையனோட தெரிஞ்சவங்க வந்து, அந்தப் பொண்ணு முன்னாடியே, ‘இவன் அந்தப் பொண்ணை ஒன் சைடாக லவ் பண்ணிட்டு இருக்கான்’னு போட்டு உடைச்சிட்டா. அதுக்கு முன்னாடி வரைக்கும் கொஞ்சமாத்தான் திட்டிக்கிட்டு இருந்தா அந்தப் பொண்ணு. அவன் லவ் பண்ணான்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் ரொம்பத் திட்ட ஆரம்பிச்சிட்டா,” என்றால் ஸ்ரீ.

“லவ் பண்றேன்னு தெரிஞ்ச பிறகு, அவ உன்கிட்ட எதுவுமே கேட்டுக்கலையா?” என்றால் ராதா.

“இல்லையே, எதுவுமே கேட்கல. ஆனா, வழக்கத்தை விட ரொம்பத் திட்ட ஆரம்பிச்சிட்டா. ‘அதை ஏன் பண்ணின? இதை எதுக்கு எடுத்துட்டு வந்த? ஏன் என் பின்னாடி சுத்திட்டு இருக்க? உனக்கு வேலை இல்லையா? போய்ப் வேலையைப் பாரு’ அப்படின்னு ஏதாவது சொல்லி திட்டிட்டே இருப்பா,” என்றான்.

“இப்படி எல்லாம் திட்டிட்டு இருந்தவள், திடீர்னு பேசாமல் போனதுனால… அவளே திரும்பி வந்து உன்கிட்ட, சாரி சாரி, அந்தப் பையன்கிட்ட பேசலைன்னு சண்டை போட்டாளா?” என்றால் ராதா.

“ஆமா, அவன் பேசாம ஒரு வாரமா இருந்தான். அதனால அந்தப் பொண்ணே வந்து அவன்கிட்ட, ‘ஏன் பேச மாட்டேங்குற?’ அப்படின்னு சொல்லி சண்டை போட்டா.”

ஸ்ரீ சொன்னதையெல்லாம் கேட்டு, ராதா யோசிப்பது போலக் கன்னத்தில் கை வைத்து யோசித்துக் கொண்டிருக்க…

ஸ்ரீ அவளைப் பார்த்தவன், “என்ன ராதா யோசிக்கிற? உனக்கு ஏதாவது புரிஞ்சுதா? அந்தப் பொண்ணு ஏன் அப்படி சொன்னான்னு உனக்கு ஏதாவது பிடிபட்டுச்சா?” என்றால்.

“ஓ, நல்லா பிடிபட்டுச்சு!” என்றால் ராதா.

“பிடிச்சு சொன்னதும்,” ஸ்ரீயின் முகம் பிரகாசமாக, “சொல்லு ராதா, அந்தப் பொண்ணு ஏன் அப்படி சொன்னேன்னு சொல்லு,” என்று அவளிடம் ஆர்வமாகக் கேட்க…

கையிலிருந்த காபிக் கப்பை எதிரில் இருந்த மேசை (டேபிள்) மீது வைத்தவள், ஸ்ரீயின் கையில் இருந்த காபிக் கப்பை வாங்கி அதையும் மேசையிலேயே வைத்துவிட்டு எழுந்தவள்.

சோபாவில் அமர்ந்திருந்த ஸ்ரீயின் எதிரே வந்து நின்றவள், அவன் காதைப் பிடித்துத் திருகி, “யாருடா அந்தப் பொண்ணு?” என்றால் ராதா.

“எந்தப் பொண்ணு ராதா?” என்றால் ஸ்ரீ எதுவும் தெரியாதவன் போல.

“டேய் டேய், நீ ரொம்ப நடிக்காத சரியா… நீ உன் ஃப்ரெண்டோட கதைன்னு சொல்ல ஆரம்பிக்கும்போதே நான் கெஸ் பண்ணிட்டேன், அது கண்டிப்பா நீயாத்தான் இருக்கும்னு. ஒழுங்கா சொல்லு, அந்தப் பொண்ணு யாரு? உன் கூடத்தான் வேலை பார்க்கிறாளா அவ?” என்று கேட்டாள் ராதா.

இவ்வளவு நேரம் தானே தன் வாயால் அனைத்தையும் கூறி, ராதாவிடம் வசமாக மாட்டிக்கொண்டோமே என்று இப்போதுதான் ஸ்ரீக்கு புரிந்தது.

ராதாவைப் பார்த்து இளித்துக் கொண்டு, “என் கூடத்தான் வேலை பார்க்கிறா ராதா. உன்னோட கல்யாணத்துலதான் நான் அந்தப் பொண்ணை மீட் பண்ணினேன். அவ பேரு ரியா. பிறகு ஆதி மாமா ஆபீஸ்ல வேலைக்குச் சேர்ந்த பிறகுதான் ரியா அங்கே வேலை பார்க்கிறது எனக்குத் தெரியும். ரியா கூடப் பேசிப் பழகி, கொஞ்சம் கொஞ்சமா என் மனசுல இருக்குறதை ரியாவுக்குப் புரிய வைக்கலாம்னு நினைச்சேன். ஆனா, அதுக்குள்ள ஒரு மீட்டிங்குக்கு வந்த சங்கவி, நான் ரியாவை ஒன் சைடாக லவ் பண்றது கண்டுபிடிச்சு அவகிட்ட போட்டு கொடுத்துட்டா…”

“சங்கவி வந்து ரியாவிடம் நான் அவளைக் காதலிக்கிறேன்னு சொல்ற வரைக்கும், அப்பப்போ ஏதாவது நார்மலா பேசிக்கிடுவோம். நான் அவளை லவ் பண்றேன்னு தெரிஞ்சதுக்குப் பிறகுதான் என்னைப் ரொம்பத் திட்ட ஆரம்பிச்சிட்டா,” என்றான் ஸ்ரீ.

அவன் சொல்வதை எல்லாம் தெளிவாகக் கேட்ட ராதா, அவன் காதிலிருந்து கையை எடுத்தவள்.

“அடேய் முட்டாள்! அந்தப் பொண்ணு உன்ன லவ் பண்றடா! அதனாலதான், நீ வேலை செய்கிற நேரத்தில் எல்லாம் வந்து அவளைத் தொந்தரவு (டிஸ்டர்ப்) பண்ணிட்டு இருக்கேன்னு சொல்லி உன்னைத் திட்டிருக்கா.”

“என்ன ராதா சொல்ற? நிஜமாத்தான் சொல்றியா? அவ என்னை உண்மையாவே லவ் பண்றாளா?” என்று ஆர்வமாகக் கேட்டான் ஸ்ரீ.

“ஆமாடா. நீ வேணா நாளைக்குப் போய் அவளை அவகிட்ட நேரடியாகக் காதலைச் சொல்லு. அவ எந்த மறுப்பும் சொல்லாம கண்டிப்பா ‘ஓகே’ சொல்லிடுவா,” என்றால் ராதா.

“அப்படி மட்டும் நீ சொன்ன மாதிரி நடந்துச்சுன்னா, உனக்கு நாளைக்கு நான் ட்ரீட் வைக்கிறேன்,” என்று ஸ்ரீ எழுந்து தன் அறைக்குச் செல்லப் போக…

“டேய் இருடா ஸ்ரீ! எங்க அதுக்குள்ள ரூமிற்குப் போற? நான் டிபன் ரெடி பண்ணிட்டேன். சாப்பிட்டு அப்புறம் போய்ப் படுத்துக்கோ,” என்று ராதா சொல்ல…

“இல்ல ராதா, எனக்குப் பசியே இல்லை. நான் போய்த் தூங்குறேன்,” என்று சொல்லிவிட்டுத் தன் அறைக்குச் சென்று கதவை அடைத்துக் கொண்டான்.

“சரி, அந்தப் பொண்ணு உன்ன லவ் பண்றேன்னு தெரிஞ்சிருச்சில்ல? இனி உனக்கு எங்கே சாப்பாடு, தண்ணி எல்லாம் இறங்கப் போகுது?” என்று சொல்லிக்கொண்டு, மேசையிலிருந்து இரண்டு காபிக் கப்பை எடுத்துக்கொண்டு ராதா திரும்ப…

அவள் பின்னால் நின்றிருந்த சந்தோஷின் மீது மோதி நின்றாள்.

அவனை நிமிர்ந்து பார்த்தவள், “ஆத்தி! இவன் எப்ப வந்தான்?” என்று யோசித்தவள், “அச்சச்சோ! இவனுக்குப் போட்ட காபியைத்தான் ஸ்ரீக்குக் கொடுத்துட்டேனே…” என்று யோசித்தவாறே சந்தோஷைப் பார்க்க…

“என்னடி, உன் கொழுந்தனோடு நீயும் என்னமோ ரொம்ப நேரமா பேசிக்கிட்டு இருந்தீங்க. நான் வந்து நின்னது கூடத் தெரியாம அவ்வளவு சீரியஸா பேசிக்கிட்டு இருக்கீங்க. அவன் என்னடான்னா, இங்கே நான் ஒருத்தி நிக்கிறது கூடத் தெரியாம ஒரு சந்தோஷமா அவன் ரூமுக்குப் போறான்,” என்றான் சந்தோஷ் கோவமாக.

“அதுவா வாத்தி, உன் தம்பி யாரோ ஒரு பொண்ணை லவ் பண்றானாம். அவளை எப்படிச் சம்மதிக்க வைக்கிறதுன்னு என்கிட்ட யோசனை கேட்டுட்டு இருந்தான். அதைத்தான் சொல்லிட்டு இருந்தேன்,” என்றால் ராதா.

“ஏய் என்னடி சொல்ற? அவன் லவ் பண்றானா? அவனுக்கு என்னடி வயசாச்சு? இப்பவே லவ் பண்ணிட்டு சுத்திக்கிட்டு இருக்கானா? இப்பதானே வேலைக்குப் போயிருக்கான். இன்னும் செட்டில் ஆகல, எதுவுமே செய்யல. அதுக்குள்ள என்ன லவ் வேண்டி இருக்கு?” என்றான் சந்தோஷ் கோபமாக.

“நானும் தான் எதைப் பற்றியும் கவலைப்படாமல் காலேஜுக்கு ஜாலியா போய்க்கிட்டு இருந்தேன். நீ எப்போ என்னை லவ் பண்றேன்னு சொன்னியோ, அன்னைக்கே எல்லாம் போச்சு. நீ மட்டும் படிச்சுட்டு இருக்குறப்போ என்ன லவ் பண்ணலாம். உன் தம்பி வேலைக்குதானே போயிட்டு இருக்கான், ஏன் அவன் லவ் பண்ணக் கூடாதா?” என்றால் ராதா.

“அங்கே சுத்தி இங்கே சுத்தி எப்பவும் இங்கே வந்து நிற்கிறாளே இவ! இவளைச் சமாளிக்கவே முடியலையே,” என்று மனதில் சந்தோஷ் நினைத்துக் கொள்ள…

“என்ன, சமாளிக்கவே முடியலன்னு தானே யோசிச்சுட்டு இருக்க? எனக்குத் தெரியாதுன்னு நினைச்சியா?” என்று ராதா கையிலிருந்த காபிக் கப்பை கீழே வைத்துவிட்டு, சோபாவின் மேல் ஏறியவள், அவன் கழுத்தில் கையைப் போட்டு.

“ஆனா, என்ன இருந்தாலும் உன் தம்பிக்கு உன் அளவுக்கு அறிவு இல்லை. அந்தப் பொண்ணு இவன்கிட்ட லவ் பண்றேன்னு மறைமுகமா சொல்லி இருக்கு. இவனுக்குத்தான் அது புரியல,” என்றால் ராதா.

அவள் சொன்னதைக் கேட்டு, சந்தோஷ் தன் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ள…

அதைப் பார்த்துச் சிரித்தவள், “ரொம்பத்தான் பண்ணாத. சரி நகரு. நான் போய்ப் உனக்குக் காபி போட்டு எடுத்துட்டு வரேன்,” என்று சொல்லி சோபாவில் இருந்து ராதா கீழே இறங்கப் போக…

இடுப்பில் கை கொடுத்து அப்படியே தூக்க…

கழுத்தில் தன் கைகளைப் போட்டுக் கீழே விழாமல் பிடித்துக்கொண்ட ராதா, “வாத்தி! இறக்கி விடுங்க கீழே! என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்றால்.

“பார்த்தா தெரியலையா? என் பொண்டாட்டி ரொம்ப நாள் கழிச்சு என்னைப் பாராட்டிப் பேசியிருக்கா. அதுக்கு நான் பரிசு தர வேண்டாமா?” என்று சொல்லி அவளைத் தன் படுக்கை அறைக்குள் அழைத்துச் சென்று மெத்தையில் படுக்க வைத்தவன், படுக்கை அறைக் கதவைச் சாத்திவிட்டு அவள் மேல் பாய்ந்தான்.

❤️

ராதா, நிலானி, கீர்த்திகா மூவரும் மதியம் உணவுக் கூடத்தில் (கேண்டீனில்) சாப்பிட்டுக்கொண்டு இருக்க…

சந்தோஷைத் தேடி ஒருமுறை அவன் கிளாசுக்கு வந்த தீபா அங்கு சாப்பிட வந்திருந்தாள்.

தோழிகளுடன் சிரித்துப் பேசிக்கொண்டு வந்த தீபா, ராதா, நிலானி, கீர்த்திகா ஆகியோரின் மேசையையும் தாண்டி உணவுக் கூடத்திற்குள் சென்றாள். அவளை முதலில் பார்த்தது கீர்த்திகாதான்.

ராதாவை அழைத்து, “அங்க பாருடி! இவளைத் தானே அன்னைக்கு நம்ம டிபார்ட்மெண்டுக்கு வந்து உன் புருஷன் கூடச் சிரிச்சு சிரிச்சு பேசிக்கிட்டுப் போனாளே, அவதானே அந்தப் பொண்ணு?” என்றாள்.

கீர்த்திகா யாரைச் சொல்கிறாள் என்று திரும்பிப் பார்த்த ராதா, அங்கே உணவுக் கூடத்தில் சாப்பிட உணவு வாங்கிக்கொண்டிருந்த தீபாவை பார்த்து, “ஆமா, இவள்தாண்டி அன்னைக்கு என் புருஷன் கூடச் சிரிச்சுச் சிரிச்சு பேசிக்கிட்டு இருந்தது. இவ கிளாசுக்கு வர்றதுக்கு முன்னாடியே சந்தோஷ் என்கிட்ட ஒருமுறை இந்தப் பொண்ணைப் பத்தி சொல்லியிருக்கான். ‘ஜூனியர் ஸ்டூடண்ட் ஒரு பொண்ணு ரொம்ப அழகா இருக்கா… என்கிட்ட நல்லா பேசுறா’ன்னு அவனே என்கிட்ட சொன்னான்டி,” என்றால் ராதா.

“சரி, அதுக்கப்புறம் நீ உன் புருஷனை கவனிச்சியா (வாட்ச் பண்ணியா)? அந்தப் பொண்ணைப் பத்தி எதுவும் உன்கிட்ட பேசினாரா? இல்ல, இந்தப் பொண்ணு திரும்பவும் எங்கேயாவது இடையில் பார்த்துப் பேசிக்கிட்டாங்களா?” என்று கேட்டாள் கீர்த்திகா.

“இல்லடி, இவரு அதுக்கப்புறம் என்கிட்ட அவளைப் பத்தி எதுவுமே பேசல,” என்றால் ராதா.

“சரி, அவளைக் கூப்பிட்டு சும்மா பேசிப் பார்ப்போமா? அவள் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கலாமா?” என்றால் கீர்த்திகா.

நிலானி இவர்கள் இருவரையும் பேசுவதைப் பார்த்தவள், “ஏன் இப்போ எதுக்குடி தேவையில்லாத பிரச்சினையை இழுக்குறீங்க? அந்தப் பொண்ணுதான் சந்தோஷ் சார் வழியிலேயே வரலையே. அப்புறம் எதுக்கு வீணா அவளைக் கூப்பிட்டு வச்சுப் பேசப் போறீங்க? பேசாம இருங்க,” என்றால்.

“ஏய் நீ சும்மா இருடி… அவகிட்டே பேசிப் பார்த்தால் தான் தெரியும். அவ சாரைப் பற்றி என்ன நினைக்கிறான்னு தெரிஞ்சுக்கலாம்,” என்றாள் கீர்த்திகா.

அதற்குள் உணவை வாங்கிக்கொண்டு, அவர்கள் இருந்த மேசைக்கு அடுத்த மேசையில் வந்து அமர்ந்தாள் தீபாவும் அவரது நண்பர்களும்.

தன் மேசையில் இருந்தவாறு கீர்த்திகா தீபாவை பார்க்க, தீபாவும் எதார்த்தமாக இவர்கள் இருக்கும் பக்கம் திரும்பவும், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

உன்னைப் பார்த்து மெல்லச் சிரித்த கீர்த்திகா, தங்களிடம் வரும்படி சைகை காட்ட…

தீபா, “என்னையா?” என்று கேட்க, “ஆமா, உன்னைத்தான் மா! இங்கே,” என்று அழைத்தாள் கீர்த்திகா.

முதலில் சிரித்துப் பேசியவள், இப்போது சற்று கடுமையாகப் பேசவும், தீபாவின் முகம் மாறிவிட்டது.

யோசனையுடன் தன் நண்பர்களைப் பார்க்க… அவர்கள், “நாங்க இங்கேதானே இருக்கோம், நீ போய் என்னன்னு கேட்டுட்டு வா, பார்த்துக்கலாம்,” என்று சொல்ல, லேசாகத் தைரியம் வந்தவளாக தீபா எழுந்து கீர்த்திகா இருந்த மேசைக்குச் சென்றாள்.

தீபா அவர்கள் மேசைக்கு வந்து அமைதியாக நின்றவள், அவர்கள் மூவரையும் பார்க்க, நிலானி தீபாவை பார்த்து, “ஹலோ,” என்று சிரித்தாள்.

தீபாவும் பதிலுக்கு நிலானியிடம் “ஹலோ” சொல்ல…

அவளைத் திரும்பி ராதாவும் கீர்த்திகாவும் முறைக்க…

“என்னடி! இப்போ உங்களுக்குப் பிரச்சினை? பேசாம இருங்க. அந்தப் பொண்ணைப் பார்த்தாலே பாவமா இருக்கு,” என்று நிலானி சொல்ல…

“சும்மா இருடி. உனக்கு ஒன்னும் தெரியாது,” என்று அவளை அடக்கிய கீர்த்திகாவும் ராதாவும் தீபாவிடம் திரும்பி, “ஆமா, சந்தோஷ் உனக்கு எப்படித் தெரியும்?” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தார்கள்.

“அவர் எங்களோட டிபார்ட்மெண்டில் தான் வகுப்பு (கிளாஸ்) எடுத்துட்டு இருக்காரு. ஏன்?” என்று கேட்டாள்.

“இல்ல, ஒரு நாள் அவரைத் தேடி நீ எங்க கிளாசுக்கு வந்த. வந்து அவர்கிட்ட சிரிச்சுச் சிரிச்சுப் பேசிக்கிட்டு இருந்தியே. அவ்வளவு நெருக்கமா (க்ளோஸா) நீயும் அவரும்?” என்று கேட்டாள் கீர்த்திகா.

இவர்கள் சந்தோஷைப் பற்றிப் பேசவும், ஏன் இப்படி எல்லாம் கேள்வி கேட்கிறார்கள் என்று யோசித்தவள், அவர்களுக்குத் தகுந்தாற்போல தீபாவும் அடக்கமில்லாமல் பதில் பேச ஆரம்பித்தாள்.

“நான் அவர் கூட நெருக்கமா இருந்தால் உங்களுக்கு என்ன? நீங்க ஏன் அதைப் பற்றி எல்லாம் என்கிட்ட கேட்கிறீங்க?” என்றால் தீபா.

“என்னம்மா இப்படி எல்லாம் பேசுற? கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லணும். நாங்களும் யாருன்னு தெரியுமா? உன்னோட சீனியர்ஸ். அதை ஞாபகத்துல வச்சுட்டுப் பேசு,” என்றனர்.

“நீங்க சீனியர்ஸ்ங்கிறதுனால நீங்க என்ன கேட்டாலும் அதுக்கு நான் பதில் சொல்லணும்னு ஏதாவது ரூல்ஸ் இருக்கா காலேஜில்? இல்ல, நீங்க என்னைக் கேலி (ராக்) பண்ணுறீங்களா?” என்று கேட்டாள் தீபா.

தாங்கள் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லாமல், தங்களை மதிக்காமல் பேசிய தீபாவைக் கண்டதும் ராதாவிற்கும் கீர்த்திகாவிற்கும் கோபம் தான் வந்தது.

“நாங்க உன்னைக் கேலி பண்ணவெல்லாம் கூப்பிடல. நாங்க கேட்ட கேள்விக்கு நீ பதில் சொல்லு, அது போதும்,” என்றால் ராதா.

“நான் சந்தோஷ்கிட்ட எப்படிப் பேசினால் உங்களுக்கு என்ன? ஆமா, நீங்க ஏன் அதையெல்லாம் என்கிட்ட கேட்கிறீங்க? உங்களுக்கு அவருக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்டாள் தீபா.

“அதையெல்லாம் உன்கிட்ட நாங்க சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சந்தோஷ் சார் கூடச் சிரிச்சுப் பேசுற அளவுக்கு இனி அவர் கூட நெருக்கமா இருக்கியா?” என்று கேட்டாள் கீர்த்திகா மீண்டும்.

“ஆமா, நானும் அவரும் ரொம்ப நெருக்கம் தான். ஏன், நான் அவரை லவ் பண்றேன். உங்களுக்கு என்ன வந்துச்சு இப்போ?” என்றால் தீபா.

தீபா சொன்னதைக் கேட்டதும், நிலானி, கீர்த்திகா, ராதா மூவரும் அதிர்ச்சியாகி, தங்கள் முகத்தைப் பார்த்துக்கொண்டு தீபாவை பார்க்க…

“இப்போ உங்க சந்தேகம் தீர்ந்துடுச்சா? நான் போகலாமா?” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றாள் தீபா.

படிச்சிட்டு மறக்காம கமெண்ட் பண்ணுங்க

You may also like

1 comment

S.joshna December 9, 2025 - 1:26 pm

Akka inaki episode vera level 💋😯😘😍

Reply

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured