Episode 187
ரூபேஷ் ஷிவுவின் மீது பயங்கர கோபத்தில் இருந்தான்.
தன்னை அவள் அக்காவை (துர்காவை) வைத்து அறைக்குள் அழைத்துச் சென்று, அடித்து மிரட்டி இந்தத் திருமணத்திற்குச் சம்மதிக்க வைத்துவிட்டாள். தான் போட்ட கணக்குகளில் பாதி மட்டுமே நிறைவேறி இருக்க… இன்னும் கொஞ்சம் முறுக்கிக் கொண்டு இருந்திருந்தால் ஷிவுவின் அப்பா (துரை) அவர் சொத்துக்களை விற்று ஷிவுவிற்குச் சீர் செய்கிறேன் என்று சொன்னது நடக்காமல் போனது என்ற கோபத்தில் இருந்தான். அந்தப் பணமும் பல கோடிகள் வரும் என்று கணக்கு போட்டு இருக்க… இப்போது ஆதி சொன்னது போல ஐந்து கோடி மட்டும் தான் தனக்குக் கிடைக்கிறது என்று வருத்தத்தில் இருந்தான்.
இதற்கெல்லாம் காரணம் ஷிவுதான் என்று அவள் மீது கோபத்திலேயே அவள் கழுத்தில் தாலியைக் கட்டியவன், அவள் காதருகில் குனிந்து, “நினைச்சதைச் சாதிச்சிட்டேன்னு நிம்மதியா இருக்கியா? இன்னையோட உன்னோட நிம்மதி போச்சுன்னு நினைச்சுக்கோ… உன் வீட்டில் இருக்கவங்க கிட்டே இன்னைக்கே எவ்வளவு சந்தோஷமா பேச முடியுமோ அவ்வளவு சந்தோஷமா பேசி வெச்சுக்கோ. இதுக்கு அப்பறம் நீ தினம் தினம் அவங்க கிட்டே போன் பண்ணி, நான் செய்யுற கொடுமையை எல்லாம் சொல்லி அழுகவே உனக்கு நேரம் பத்தாது,” என்றான் ரூபேஷ்.
அவன் சொல்வதைக் கேட்டு அதிர்ச்சியான ஷிவு, உறைந்து போய் ரூபேஷைப் பார்க்க… “என்னடி பார்க்கிறே? கொன்றுவேன். திரும்பு,” என்றான் குரூரமாக.
அவன் பேசியதைக் கேட்டதும் ஷிவுவிற்கு அடிவயிறு பயத்தில் ஏதோ செய்தது. அவள் முகத்தைப் பிடித்து அனைவரும் பார்க்குமாறு திருப்பியவன், “என்ன ஷிவு இது.. எல்லாரும் நம்மையே பார்க்கிறாங்க பாரு,” என்றான்.
ஷிவுவும் தன்னைச் சுற்றி இருக்கும் தன் குடும்பத்தையும், ரூபேஷின் அம்மாவையும் வரவழைக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்தவள். குனிந்து தன் கழுத்தில் தொங்கிக்கொண்டு இருக்கும் தாலி தனக்குச் சந்தோஷத்தைத் தரப் போகிறதா, அல்லது அதுவே தன் கழுத்தை நெறிக்கப் போகிறதா என்று யோசித்தபடி இருக்க…
ரூபேஷ் ஷிவுவிடம் எதையோ சொல்லி மிரட்டுகிறான் என்று புரிந்துகொண்ட ஆதியும் துர்காவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள… ஆதி கிளம்புவதற்கு முன்னே, “ஷிவுவிற்கு ஆறுதலாக நாலு வார்த்தை தைரியம் சொல்லி அனுப்பு,” என்றான் துர்காவிடம்.
திருமணம் முடிந்ததும் தம்பதிகளுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு வந்தவர்கள் கிளம்ப… மிகவும் நெருங்கிய சொந்தங்கள், உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே மண்டபத்தில் இருந்தனர்.
திருமணம் முடிந்து வழக்கமாகச் செய்ய வேண்டிய சம்பிரதாயங்களை எல்லாம் வேண்டா வெறுப்பாக இருவருமே செய்து முடித்துவிட்டு, மண்டபத்தில் வந்து இருந்த சொந்தங்களோடு தனித் தனியாக அமர்ந்து கதை பேசிக் கொண்டு இருந்தனர்.
ரூபேஷ் அவன் நண்பர்கள் சிலருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தான்.
“அப்பறோம்டா மச்சான், சொன்ன மாதிரியே பெரிய பணக்கார வீட்டில தான் பொண்ணு எடுத்திருக்க போல இருக்கு. நீ நினைச்ச மாதிரியே லைஃப்ல செட்டில் ஆகிட்ட…” என்றான் ஒருவன்.
“அட ஏன்டா நீங்க வேற… நான் கல்யாணம் பண்ணிக்கிட்டவளோட அப்பன் ஒன்னும் அவ்ளோ பெரிய ஆள் கிடையாது,” என்றான் ரூபேஷ்.
“என்னடா மச்சான் சொல்றே…. அப்பறம் எப்படி இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதம் சொன்ன நீ? உன்னோட லட்சியமே கோடீஸ்வரன் வீட்டுப் பொண்ணைக் கல்யாணம் பண்றது தானே. அப்பறம் எப்படிடா இப்படி நீ நினைச்ச மாதிரி எதுவும் இல்லாத இடத்துல எப்படிப் பொண்ணு எடுத்த?” என்றான் ஒருவன்.
“நான் இவளைச் சும்மா கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு நினைச்சீங்களா? அதுதான் இல்லை. இவளோட மாமனார் (துர்காவின் கணவன்) இந்தியாவிலேயே நம்பர் ஒன் பணக்காரன். ஷிவு கூட ஒண்ணா வேலை (ஒர்க்) பண்ணும் போதே அவளைப் பத்தி நிறையத் தெரிஞ்சுகிட்டேன். சொந்தக்காரங்க யாரு? அவங்க அம்மா அப்பா யாரு? அவங்களுக்குச் சொத்து மதிப்பு எல்லாம் எவ்வளவு இருக்கு? இவளால் எனக்கு எதுவும் பிரயோஜனம் இருக்கா? அப்படின்னு நிறையத் தெரிஞ்சுகிட்டேன். எல்லாம் தெரிஞ்ச பிறகுதான் அவகிட்ட லவ் பண்றேன்னு சொல்லி நான் பிரபோஸ் பண்ணினேன். அது மட்டும் இல்லாம இவளைக் கல்யாணத்துக்கு முன்ன இருந்தே கர்ப்பம் ஆக்கினால் எனக்கு 10 லட்சம் ரூபாய் தரேன்னு சொல்லி ஒரு பொண்ணு சொல்லுச்சு. நான் எப்படி என்ன நினைச்சாலும் ஷிவு கூட நெருங்கவே முடியல… ஆனா, அவளோட ஃப்ரெண்டுன்னு ஒருத்தன் அவள் கூடச் சுத்திட்டு இருந்தவன், அவளுக்குப் பரீட்சை குழியில என்கிட்ட வந்து நல்ல வசமா மாட்டிக்கிட்டான். நான் நினைச்ச மாதிரியே அவளைக் கர்ப்பமாக்கிட்டு எனக்கு 10 லட்சம் ரூபாயும் கிடைச்சிடுச்சு. அதை வச்சு தான் என்னோட அம்மாவுக்கு ஆப்பரேஷன் பண்ணினேன்,” என்றான் ரூபேஷ்.
அவனுடன் இருந்த மற்றொரு தோழன், “இந்த ரூபேஷ், ஏன்டா இப்படி மாறிட்ட? உன்னை எல்லாம் இந்த மாதிரி நீ கிடையாது. பொண்ணுங்க மேல எவ்வளவு மரியாதையா நடந்துக்குவ. அப்படிப்பட்ட நீ… காலேஜ்ல படிக்கும்போது உன் பின்னாடி எத்தனை பொண்ணுங்க, அதுவும் பணக்கார வீட்டுப் பொண்ணுங்க எல்லாம் சுத்துனாங்க. ஆனா, நீ அவங்களையெல்லாம் திரும்பி கூடப் பார்க்கல. எப்போ நீ காலேஜ் முடிச்சு வேலைக்குப் போக ஆரம்பிச்சியோ, அதுக்கு அப்புறம் தான் நீ ரொம்ப மாறிட்ட,” என்றான் அந்த நண்பன்.
“என்னடா செய்றது? எப்பவும் ஒரே மாதிரி நல்லவனா இருக்க இந்தச் சமூகம் நம்மள விடுவதில்லை. என் அப்பா இருக்கிற சொத்து எல்லாம் சூதாட்டம், அது இதுன்னு வச்சு வித்துட்டுப் போயிட்டான். என் அம்மாவுக்கு இதயத்தில் (ஹாட்ல) பிரச்சனை (ப்ராப்ளம்) இருக்குன்னு காலேஜ் கடைசி வருடத்தில் (ஃபைனல் இயர்ல) தான் எனக்குத் தெரியும். டாக்டர், ‘எவ்வளவு சீக்கிரம் உங்க அம்மாவுக்கு ஆப்பரேஷன் பண்ண முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவங்க உடம்பு நல்லபடியா தேறி குணமாகும்,’ என்று சொன்னாங்க. அம்மாவுக்கு ஆப்பரேஷன் பண்ணணும்னு பணத்துக்காக நான் என் சொந்தக்காரங்க கிட்ட எத்தனை பேர் காலில் போய் விழுந்திருப்பேன் தெரியுமா? ஒருத்தன் கூட ஒரு பைசா கொடுக்கல. எல்லாரும் என்னைப் பிச்சைக்காரன் மாதிரியே பார்த்தாங்க… நானும் பணத்துக்காக எத்தனை வருஷம் கஷ்டப்பட்டு வேலை பார்த்தேன் தெரியுமா? என்னதான் பெரிய அளவில் வேலை பார்த்தாலும், என்னால லட்சங்களைச் சம்பாதிக்க முடியல. நான் வேலைக்குச் சேர்ந்து ரெண்டு வருஷத்துக்கு மேல ரொம்பக் கடினமாக உழைத்து என்ன பிரயோஜனம்? ‘இன்கிரிமென்ட்’ என்கிற பேர்ல சுண்டைக்காய் காசுதான் கொடுத்தானுங்க. இதை வச்சு என் அம்மாவுக்கு எப்படி ஆப்பரேஷன் பண்றது? அதனால்தான் நான் ஒரு பணக்கார வீட்டுப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு முடிவு பண்ணினேன். அப்பையாவது என்ன நாலு பேரு மதிப்பாங்க, என் அம்மாவுக்கு ஆப்பரேஷன் பண்ணி அவங்க நல்லபடியா பார்த்துக்க முடியும் என்று நினைத்தேன். அதுக்குத் தகுந்த மாதிரி கல்யாணத்துக்கு முன்னாடி கர்ப்பம் ஆகிட்டா… அதுல வந்த பணத்தை வைத்துதான் என் அம்மாவுக்கு ஆப்பரேஷனை பண்ணினேன்,” என்றான் ரூபேஷ்.
இப்போது ரூபேஷைத் தன் நண்பர்களுடன் அறிமுகப்படுத்தி வைக்கலாம் என்று அவனைப் பார்க்க வந்த துரை (ஷிவுவின் அப்பா). ரூபேஷ் ஏதோ முக்கியமான பேசிக் கொண்டிருக்கிறான். அவனை அழைக்கலாமா, வேண்டாமா என்று அவர்கள் அருகில் வந்து நின்றிருக்க…
அவர் வந்து பின்னால் நின்றது தெரியாத ரூபேஷ் தன் நண்பர்களிடம் மீண்டும் பேச ஆரம்பித்தான்.
“ஒன்னே ஒன்னு மிஸ் ஆயிடுச்சு. நான் கல்யாணம் பண்ணிக்கிட்டவளோட அப்பன் இவளுக்கு ஏதோ சீர் செய்றேன்னு ஊரில் இருக்கிற நிலத்தை எல்லாம் விற்றுக் காசு தரேன்னு சொன்னான். ஏற்கனவே இவளைக் கல்யாணம் பண்ண முடியாதுன்னு நான் இருந்தபோதுதான், இவன் மாமன்காரன் (ஆதி) வான்டடாக வந்து, ‘ஏற்கனவே ஷிவு உன்னால் கர்ப்பம் ஆகிட்டா. இன்னும் தாமதப்படுத்திட்டு (லேட் பண்ணிட்டு) இருந்தா, அவள் கர்ப்பமாக இருக்கிறது வீட்டில் இருக்கிற எல்லாருக்குமே தெரிஞ்சு பெரிய பிரச்சினையாகிடும். அதனால, எவ்வளவு சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க. அப்படி நீ மட்டும் அவளைக் கல்யாணம் பண்ணிட்டா… நீ அவ கழுத்துல தாலி கட்டுன அடுத்த நிமிஷம் அக்கவுண்டில் அஞ்சு கோடி ரூபாய் பணத்தை டெபாசிட் பண்றேன்னு சொன்னான்.’ அதனால்தான் நான் இவ கழுத்துல தாலி கட்டவே சம்மதிச்சேன். எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்தில என் அக்கவுண்டுக்குச் சொன்னது மாதிரி அஞ்சு கோடி ரூபாய் பணம் வந்துடும்,” ஏனென்றால் ரூபேஷ் தன் தொலைபேசியை (போனை) ஆன் செய்து பார்த்துக்கொண்டே…
இதையெல்லாம் கேட்டு ரூபேஷின் பின்னால் கோபமே உருவமாக நின்றிருந்த துரை. தன் மகளின் வாழ்க்கையைக் கெடுத்து அவளை நிம்மதி இல்லாமல் செய்த ஒருவனுக்காகத் தன் மகளைத் திருமணம் செய்து கொடுத்தோம் என்று நினைத்து துரையின் கோபம் அதிகமானது.
அதே கோபத்தோடு வேகமாக ரூபேஷின் முன்பு வந்து நிற்க… அந்த நேரத்தில் துரையை அங்கே எதிர்பார்க்காத ரூபேஷ், அது எதையும் காட்டிக் கொள்ளாதவன் போல எழுந்து நின்று, “வாங்க மாமா,” என்றான்.
“ஏண்டா ராஸ்கல்! கல்யாணத்துக்கு முன்னாடி என் பொண்ணை ஏமாத்திக் கர்ப்பம் ஆக்கிட்டு, அவளைக் கல்யாணம் பண்ணிக்க உனக்குத் தெரியாம இத்தனை திட்டம் (பிளான்) பண்ணி என் மருமகன் கிட்ட வேற பணம் வாங்கி இருக்க… இந்த விஷயம் எல்லாம் நீ என் பொண்ணு கழுத்துல தாலி கட்டுறதுக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தால், உன்னை அப்பவே கண்டம் துண்டமாக வெட்டிப் போட்டுட்டுப் போயிருப்பேன். இப்பவும் உன்னைக் கெடுத்துப்போடுவேன். என் பொண்ணு தாலி கட்டுன அடுத்த நிமிஷமே விதவை ஆகிட்டாலும் பரவாயில்லை என்று உன்னை நான் இங்கேயே கொன்னு போடப் போறேன்,” என்று சொல்லிவிட்டு ரூபேஷின் கழுத்தைப் பிடித்து நெரிக்க ஆரம்பித்தார் துரை.
‘ஷிவுவின் அப்பா எல்லா விஷயமும் தெரிந்து விட்டது,’ என்று ஒரு பக்கம் பயமாக இருந்தது. அவர் தன்னிடம் நடந்துகொள்வதே நினைத்து அதிர்ந்து போனான். தன் மகள் கழுத்தில் தாலி கட்டியவன் என்று மரியாதை கூட இல்லாமல் தன் கழுத்தை நெரிப்பவரைப் பார்த்து அதிர்ச்சியானவன், அவரிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள ரூபேஷ் போராடினான்.
ஆனால் துரை ரூபேஷின் கழுத்தில் இருந்து கையை எடுக்கவே இல்லை. ‘இதனால்தான் கொஞ்ச நாளா என் போகப் பொண்ணு சந்தோஷமாகவே இல்லாம எதையோ பறிகொடுத்தது போலவே இருந்தாளா! என் பொண்ணு வாழ்க்கையை, அவன் நிம்மதியைக் கெடுத்த உன்னைச் சும்மா விடமாட்டேன்டா,’ என்று சீறிப்பாய்ந்து அவன் கழுத்தில் இருந்து கையை எடுக்காமல், அவனைக் கொன்றே தீருவேன் என்ற முடிவில் துரை ரூபேஷின் கழுத்தை நெரித்துக் கொண்டிருக்க…
ரூபேஷிடம் இருந்து துரையைப் பிரிக்க அவனது நண்பர்கள் அனைவரும் அவரைப் பிடித்துப் பின்னால் இழுக்க முயற்சிக்க, ஆனால் ஒருவராலும் கூடத் துரையை அசைக்கவே முடியவில்லை.
திடீரென மண்டபத்தில் சலசலப்பு ஏற்படவும், சுற்றி இருந்த சொந்தங்கள் எல்லாம், ‘என்ன’ என்று பார்க்க… ரூபேஷின் கழுத்தைப் பிடித்து நெரித்துக்கொண்டு இருந்த துரையைப் பார்த்ததும் அனைவருமே அதிர்ச்சியாகி விட்டனர்.
துரை செய்வதைப் பார்த்து அதிர்ந்த கனகா, துர்கா, ஆதி வேகமாக அவரிடம் வந்து, அவர் கையில் இருந்து ரூபேஷைப் பிரிக்க மிகவும் போராடினர்.
கனகா அவர் கால்களில் விழுந்து, “தயவுசெய்து நம்ம பொண்ணு வாழ்க்கையைக் கேள்விக்குறி ஆக்கிடாதீங்க. மாப்பிள்ளை கழுத்தில் இருந்து கையை எடுங்க,” என்று கெஞ்ச…
தன் மனைவி தன் மகளுக்காகத் தன்னிடம் காலில் விழுந்து கெஞ்சுவதைத் தாங்க முடியாத துரையின் கைகள், ரூபேஷின் கழுத்தில் இருந்து தானாக விடுபட்டது.
அவர் ரூபேஷின் கழுத்தில் இருந்து கையை விட்டதும் எழுந்து நின்ற கனகா, “ஏங்க, என்ன காரியம் பண்ணிட்டீங்க.. இவரைப்போ நம்மளோட மாப்பிள்ளே. நம்ம பொண்ணு கழுத்துல தாலி கட்டி இருக்காரு. நீங்க இப்படி நடந்துகிட்டா நாளைக்கு அவர் இதையே சாக்கா வச்சு நம்ம பொண்ணைக் கஷ்டப்படுத்த மாட்டாரா?” என்று கேட்டார் கனகா.
“என்னடி சொன்ன? என் பொண்ணைக் கஷ்டப்படுத்திடுவானா? இத்தனை நாள் கஷ்டப்படுத்தினது போதாதுன்னு இன்னும் கஷ்டப்படுத்த நினைக்கிறானா? அப்படி மட்டும் இவன் நடக்கட்டும், அடுத்த நிமிஷம் கண்டம் துண்டமாக வெட்டிப் போட்டுட்டு நான் ஜெயிலுக்குப் போயிடுவேன்,” என்றார் துரை.
“என் பொண்ணு கல்யாணத்துக்கு முன்னாடி கர்ப்பமாக்கிட்டு, அவளைக் கல்யாணம் பண்றதுக்கு எத்தனை நிபந்தனை (கண்டிஷன்) போட்டு இருக்கான்னு எனக்கு இப்பதான் தெரிஞ்சுது. அது எல்லாம் உனக்குத் தெரியாதுடி கனகா,” என்றார் துரை.
“எனக்கு இது எல்லாம் முன்னாடியே தெரியும்,” என்று தயங்கியபடி கனகா அழுது கொண்டே துரையிடம் கூறினார்.
கனகாவிற்கு விஷயம் ஏற்கனவே தெரியும் என்பதைக் கேட்டதும் துரைக்கு அதிர்ச்சியாகி விட்டது.
“ஏண்டி, உனக்கு முன்னாடியே இந்த விஷயம் தெரியும்னா என்கிட்டே இருந்து ஏன் மறைச்ச? அப்பவே நான் இவனை வெட்டிப் போட்டு இருப்பேனே,” என்று மீண்டும் துரை ரூபேஷின் கழுத்தை நெரிக்கப் போக…
அவரைப் பிடித்துத் தன் அருகில் இழுத்து நிறுத்திய ஆதி, “நீங்க இப்படிப் பண்ணக் கூடாதுன்னு தான் அத்தை உங்ககிட்டே இருந்து இதை மறைச்சிட்டாங்க மாமா,” என்றான்.
துர்காவும் வந்து கனகாவிற்கு அப்போது பரிந்து பேச… “உங்களுக்கும் இந்த விஷயம் தெரியும், அப்படித்தானே? நீங்க எல்லாம் என்கிட்டே வேண்டும் என்றே மறைச்சிட்டீங்க,” என்று துரை அவர்களிடம் கோபித்துக் கொண்டார்.
“அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல மாமா. நம்ம ஷிவு உடைய வாழ்க்கை கேள்விக்குறியாகக் கூடாது என்று நாங்க கொஞ்சம் பொறுமையாகப் போனோம். முன்னாடியே உங்ககிட்ட இந்த விஷயத்தைச் சொல்லி இருந்தால், நீங்க இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிச்சிருப்பீங்களா? மாட்டீங்க தானே,” என்றான் ஆதி.
“கண்டிப்பா சம்மதித்திருக்க மாட்டேன் ஆதி. என் பொண்ணு கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த நிலைமைக்கு ஆளானவனுக்கு நான் எதுக்கு என் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்து இருக்கணும்? ஒரு பொண்ணைக் கெடுத்தவனுக்கே அவனைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தா, அந்தப் பிரச்சினை அதோட சரியாயிடும்னு எல்லாரும் நினைச்சுக்கிட்டு இருக்காங்க. அது தான் இல்லை. தான் விரும்பி காதலித்து ஒருத்தன் தன்னை ஏமாத்திட்டான்னு தெரிஞ்சும். அந்தப் பொண்ணு அவன் கையாலேயே தாலி கட்டிக்கிறதுதான் ரொம்பப் பெரிய கொடுமை ஆதி. எனக்கு விஷயம் தெரிஞ்சதும் ஷிவு மேல கோபம் இருக்கு. எப்படி கல்யாணத்துக்கு முன்னாடியே ஒருத்தனை நம்பி ஏமாந்து போயிட்டாள் என்கிற கோபம். அதுக்காக நான் என் பெண்ணை வெறுத்து ஒதுக்கெல்லாம் வெச்சிட மாட்டேன். இப்படிப்பட்டவன் ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு, என் பொண்ணு வாழ்க்கை பூரா கஷ்டப்படுவதை விட…. கல்யாணத்துக்கு முன்னாடி கர்ப்பம் ஆகிட்டாங்கற பேரோட என் கூடவே நிம்மதியா அவளை நான் இருக்க வைத்திருப்பேன். இப்ப கூடக் கனகா என் பொண்ணுக்காகக் கெஞ்சினா. அதனால மட்டும்தான் இவனை நான் உயிரோட விட்டு வச்சிருக்கேன். தெரிஞ்சோ தெரியாமலோ என் பொண்ணு கழுத்துல தாலியைக் கட்டிட்டான். அதுதான் அவன் செஞ்ச ஒரே நல்ல விஷயம். என் பொண்ணுக்குப் பூவும் பொட்டும் வேணும், அதுக்காகத்தான் இவனை நான் இப்போ உயிரோட விட்டு வச்சிருக்கேன். முதல்ல இவனை இங்கிருந்து போகச் சொல்லு. இவனைப் பார்த்தாலே எனக்குக் கொலை பண்ணனும்னு தான் தோணுது. என் பொண்ணை நான் இவன் கூட அனுப்புறதா இல்லை. இப்படிப்பட்டவன் கூடப் போய் என் பொண்ணு வாழணும்னு அவசியம் கிடையாது. என் பொண்ணு அவன் வீட்டில் போய் யாரோ ஒருத்தி மாதிரி வாழ்றதை விட, என் வீட்ல மகாராணி மாதிரி இருப்பா,” என்றார்.
அவர் சொன்னதைக் கேட்டுப் பதறிய கனகா, “ஏங்க என்னங்க பேசுறீங்க? நம்ம பொண்ணு கல்யாணம் ஆனதுக்கப்புறம் நம்ம கூட இருந்தா அவளை ஊரார் எல்லாம் என்ன பேசுவாங்க? ‘வாழா வெட்டியா வந்து அவ அம்மா அப்பா வீட்டுல இருக்கான்னு’ தானே பேசுவாங்க. அந்தப் பேச்சு நம்ம பொண்ணுக்குத் தேவையா?” என்றார்.
அவர்கள் பேசுவதையெல்லாம் கேட்டு அழுதபடி ஷிவு நின்றிருக்க… துர்காவும் ராதாவும் அவள் அருகில் நின்று ஷிவுவிற்கு ஆறுதல் சொல்லி அவளைத் தேற்ற முயன்றனர்.
இவ்வளவு நேரம் துரை பேசுவது எல்லாம் கேட்டு அமைதியாக நின்று இருந்த ரூபேஷ், “அம்மா, வாங்க போகலாம். அவர் பொண்ணில் தாலி கட்டிட்டு இருக்கிற ஒரு மரியாதை கூட இல்லாம இத்தனை பேர் முன்னாடி என்னைக் கழுத்துல நினைச்சுக் கொல்லப் பார்த்தார். இவர் பொண்ணு கூட இனிமேல் நான் வாழ முடியாது. அவர் பொண்ணு அவர் வீட்டிலேயே ராணி மாதிரி இருந்துட்டுப் போகட்டும்,” என்று சொல்லிவிட்டு ரூபேஷ் அவன் அம்மாவின் கையைப் பிடித்து மண்டபத்தில் இருந்து கிளம்பிப் போக…
ரூபேஷின் கையை உதறிய அவன் அம்மா, “நான் என் மருமகள் வராம அந்த வீட்டுக்கு வர மாட்டேன்,” என்று நின்றுவிட்டார்.
அவரையே திரும்பி முறைத்த ரூபேஷ், “இப்போ நீங்க என் கூட வரீங்களா இல்லையா? அவளே நம்ம வீட்டுக்கு வரேன்னு சொன்னாலும் இனிமேல் நான் அப்புறம் நம்ம வீட்டுக்குள்ள சேர்த்துக்கிறதா இல்லை,” என்று ரூபேஷ் சொல்லி முடித்த அடுத்த நொடி.
ராதாவும் துர்காவும் “என்னடா சொன்ன?” என்று சொல்லி ஆளுக்கு ஒரு புறமாக வந்து ரூபேஷின் சட்டையைப் பிடித்துக் கொண்டனர்.
“நீ யாருடா எங்க ஷிவுவை வேண்டாம்னு சொல்றதுக்கு? உன்னை அவள் வேண்டாம்னு எப்பவோ ஒதுக்கித் தள்ளிட்டா. வயித்துல வளர குழந்தைக்கு ஒரு அப்பன் வேணும், அதுக்கு ஒரு இனிஷியல் வேணும்கிறதுக்காக மட்டும்தான் உன்னைக் கல்யாணம் பண்ணச் சம்மதிச்சா. உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு உன் கூட உன் வீட்டுக்கு வருவாள் என்று நீ நினைச்சுக்கிட்டு இருந்தியா? அதுதான் இல்ல. உன் கழுத்துல தாலி கட்டிக்கவே முதல்ல ரொம்ப யோசிச்சா… பிறகு உன்னோட அம்மா வந்து அவ்வளவு தூரம் இறங்கி இவ கிட்ட கெஞ்சினதுனால தான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க அவ ஒத்துக்கிட்டா. அவங்க மட்டும் அவகிட்ட இப்படி வந்து இறங்கிப் பேசாமல் இருந்திருந்தால், உன்னைக் கல்யாணம் பண்ணிக்காமலேயே தைரியமாக அவ வயித்துல வளர குழந்தையைப் பெத்து எடுத்திருப்பா. அந்தக் காலம் மாதிரி உன்கிட்ட ஏமாந்து போயிட்டா நம்ம வாழ்க்கையை அத்தோட முடிஞ்சிடுச்சுன்னு தன் வாழ்க்கையை முடிச்சுக்க நினைச்சுக்கிற பொண்ணுங்க எல்லாம் இப்போ கிடையாது. தன்னோட வாழ்க்கையில எவ்வளவு பெரிய பிரச்சினை வந்தாலும், அதைத் தாண்டி ஜெயிச்சு வரப் பக்குவமும் தைரியமும் நம்ம பொண்ணுங்களுக்கு மட்டும்தான் இருக்கு. ஒருத்தன் நம்ம கிட்ட அன்பா பாசமா பேசிட்டா அப்படிங்கிறதுக்காக அவன்கிட்ட தன்னையே கொடுக்கத் துணிஞ்ச பொண்ணுங்க தான். அதே காதலிச்சவன் தன்னை ஏமாற்றிவிட்டுப் போயிட்டாங்க என்பதற்காக மனசு உடைஞ்சு போய், ஒடுங்கிப் போய் மூலையில் அடைஞ்சு கிடக்குற பொண்ணுங்க எல்லாம் இப்போ கிடையாது. அவனைத் தன் வாழ்க்கையில் இருந்து தூக்கி எறிஞ்சிட்டுத் தன் வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போகப் பொண்ணுங்க எப்பவும் மனதளவில் தயாராகிட்டாங்க. நீ ஷிவுவை வேண்டாம்னு சொல்லிட்டுப் போயிட்டா…. என் அக்கா உடைஞ்சு போய் மூலையில் ஒதுங்கிடுவான்னு நினைச்சியா?” என்று ராதா ஒரு பக்கம் ரூபேஷின் சட்டையைப் பிடித்து உலுக்க…
மற்றொரு பக்கம் துர்கா கோபமே உருவாக, “உன்கிட்ட நான் அன்னைக்கே எச்சரித்து தானே அந்த ரூமில் இருந்து வெளியே அனுப்பினேன். ‘ஒழுங்கா என் தங்கச்சியை வச்சு குடும்பம் நடத்துற வழியைப் பாரு’ன்னு சொன்னேனா இல்லையா? தான் சொன்னதை மீறி இன்னைக்கு என் தங்கச்சியை வேண்டாம் என்று சொல்லிட்டுப் போற அளவுக்கு உனக்குத் தைரியம் வந்துடுச்சா உனக்கு?” என்று அவன் கழுத்தை துர்கா நெரிக்க…
ராதாவும் துர்காவும் ரூபேஷின் கழுத்தைப் பிடித்து நெரித்துக்கொண்டு அவனை மிரட்டுவதைப் பார்த்த கனகா, வேகமாக அவர்களிடம் வந்து, “அடியே…. என்னடி பண்ணிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்? முதல்ல மாப்பிள்ளை கழுத்திலிருந்து கையை எடுங்க,” என்று அவர்கள் இருவரின் கையையும் எடுத்துவிட்டார்.
கனகா வந்து இவர்கள் இருவரிடமும் இருந்து காப்பாற்றியதும் தான் ரூபேஷிற்குப் போன உயிர் வந்தது போல இருந்தது. அவன் முன்பு ஷிவுவிற்கு ஆதரவாகத் துர்கா, ராதா, துரை ஆக்ரோஷமாக நின்று இருப்பதைப் பார்த்த ரூபேஷிற்கு, அப்போதுதான் ‘ஷிவு தன்னிடம் வந்து மாட்டிக் கொள்ளவில்லை. தான் வந்து ஷிவுவின் குடும்பத்திடம் மாட்டிக் கொண்டோம்,’ என்று புரிந்தது.
அதே அதிர்ச்சியோடு ஷிவுவைத் திரும்பி ரூபேஷ் பார்க்க… பின்னால் இருந்து தன் அலங்காரம் செய்து இருந்த சடையை முன்னாள் தூக்கிப் போட்டு, அத்தை சினுங்கலோடு வந்த ராதா, துர்காவைத் தாண்டி, முன்னாள் நின்று இருந்த தன் அப்பாவின் தோள் மேல் கையை வைத்து ஸ்டைலாக நின்றவள்.
“இப்பவே உன் ஃப்ரெண்ட்ஸ் கிட்டே சந்தோஷமா பேசிக்கோ… நாளைல இருந்து நான் உன்னைப் படுத்துற பாட்டில் உனக்கு அவங்க கிட்டத் தினமும் புலம்பவே நேரம் பத்தாது,” என்று ஷிவு, சற்று முன் தாலி கட்டும்போது ரூபேஷ் சொன்ன வசனத்தையே திரும்ப அவனிடம் திமிராகச் சொன்னபடி நின்றாள்.
இவர்கள் எல்லாம் ரூபேஷின் முன்பு நிற்கும் தோரணையைப் பார்த்தவனுக்கு, ஏதோ ரவுடிக் கும்பலிடம் தெரியாமல் வந்து மாட்டிக்கொண்டோமோ என்பது போல அவர்கள் முன்பு நின்று இருந்தான்.

1 comment
Inaki episode super vera level ponga 😘💋🤗❤️