Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 216

உன் ரகசிய ரசிகை நான் 216

by Layas Tamil Novel
97 views

EPI 216

விசாலாட்சியை உடல்நிலை சரியில்லாமல் ஹாஸ்பிடலில் அட்மிட் செய்து இருந்த விஷயம் அவரது சொந்தங்கள் அனைவருக்கும் தெரிந்து விட…

கேள்விப்பட்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்து இருந்தனர் அனைவரும்.

துர்கா ஆதி வெங்கடாசலம் மூவரும் தான் விசாலாட்சி அழைத்து வந்து ஹாஸ்பிடலில் அட்மிட் செய்தனர்.

கீர்த்திகா கோவித்துக் கொண்டு அவள் வீட்டிற்கு அழைத்துச் செல்ல சென்றிருக்கும்போது கதிருக்கு ஆதியிடம் இருந்து தன் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை என்பதை கூற அவன் நேராக அங்கிருந்து அப்படியே ஹாஸ்பிடலுக்கு வந்து விட்டான்.

என்ன விஷயம் கேள்விப்பட்ட வடிவம் முருகன் ராதா சந்தோஷ் ஸ்ரீயும் கூட அங்கு வந்து இருந்தான்.

மாதவியின் கல்யாண வேலைகளில் இருந்த விக்கி விக்கிக்கும் விஷயம் தெரிய வர அவசரமாக இருந்த இடத்திலிருந்து குடும்பத்துடனே ஹாஸ்பிடலுக்கு வந்திருந்தான் விக்கி.

இத்தனை பேர் விசாலக்ஷ்மி உடல்நிலை சரியில்லை என்று கேள்விப்பட்டதும் உண்மையான அக்கறையோடும் பாசத்தோடும் அவரைக் காண ஹாஸ்பிடலுக்கு வந்து இருக்க ஆனால் அவர் இந்த நிலைமைக்கு காரணமாக இருந்த சங்கவி மட்டும் ஹாஸ்பிடல் வரவில்லை.

செண்பகம் அருகில் இருந்து கோவிலுக்கு சென்று இருப்பதால் அவரை அழைத்துக் கொண்டு கனகாவையும் துறையையும் தன்னுடன் அழைத்து வருவதாக கூறி மிகவும் சாவகாசமாக கிளம்பி ஹாஸ்பிடலுக்கு வந்தால் சங்கவி.

உள்ளுக்குள் ஒரே கொண்டாட்டத்துடன் இருந்தாலும் அவள் முகத்தில் அப்பட்டமாக சோகம் அப்படி இருப்பது போல வெளியில் நடித்துக் கொண்டிருந்தாள்.

விசாலாட்சியின் உடல்நிலை குறித்து கேள்விப்பட்டு செண்பகம் பதட்டமாக ஹாஸ்பிடல் வந்தவர் நேராக துர்காவிடம் சென்று அன்னிக்கு என்ன ஆச்சு துர்கா ஏன் திடீர் என்று அவங்களுக்கு நெஞ்சு வலி வந்துச்சு என்று பதைப் பதைப்பாக கேட்டார்.

செண்பகம் துர்காவிடம் விசாலாட்சி உடல்நிலை இப்படி ஆனதுக்கு காரணம் என்ன என்று கேட்டதும் துர்காவின் பார்வை தன்னிச்சையாக தன் எதிரே நின்று இருந்த கீர்த்திகாவையும் தன் அம்மா வடிவையும் நோக்கி சென்றது.

தன் அம்மா மட்டும் கொஞ்சம் புரிந்து பேசி இருந்தால் தன்னத்தை இந்த நிலைமைக்கு வந்திருக்க வாய்ப்பே இருந்திருக்காது.

கீர்த்திகாவும் அவர் சொல்பேச்சை கேட்டு நம்பாமல் என்னிடம் நம் அத்தை இடமும் சண்டை விட்டு சென்றதால் தான் இன்று அவர் இந்த நிலைமையில் இருக்கிறார் என அவர்கள் இருவரையும் பார்த்து நினைத்துக் கொண்டால் துர்கா.

செண்பகத்தின் கேள்வியில் துர்கா தன்னையே பார்ப்பதை கவனித்த கீர்த்திகா. என்ன அக்கா என்னைய பார்த்துட்டு இருக்க சொல்லு என்னால தான் அத்தைக்கு இப்படி உடம்பு சரி இல்லாம போச்சுன்னு எல்லார்கிட்டயும் சொல்லி உன் வாயாலயே எனக்கு கெட்ட பேர் வாங்கி கொடு என்று அங்கு ஹாஸ்பிடல் என்று கூட அவர் பார்க்காமல் அங்கேயும் சண்டைக்கு சென்றால் கீர்த்திகா.

நான் வாய் திறந்து சொல்லலைன்னாலும் அதுதானே உண்மை கீர்த்திகா.

அம்மாவும் நீயும் மட்டும் கொஞ்சம் பொறுமையா நிதானமா யோசிச்சு இருந்தீங்கன்னா இப்போ இவ்வளவு பெரிய சங்கடத்துக்கு நீங்க ரெண்டு பேரும் வந்திருக்க மாட்டீங்க…

உங்களால தான் அத்தை ஹாஸ்பிடல் உடம்பு முடியாம நெஞ்சுவலி வந்து அட்மிட் ஆயிருக்காங்க.

அவங்களுக்கு இப்படி ஆனதுக்கு காரணம் அம்மாவும் நீயும் தான் என்றாள் துர்கா.

அவள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த வடிவு கோபமாக துர்காவிடம் வந்தவர் அவங்க இப்படி ஆனதுக்கு காரணம் நானும் கிருத்திகாவும் தான் சொல்றியா…

அப்போ நாங்க இந்த மாதிரி பேசுறதுக்கு காரணம் யாரு? நீதானே… அப்போ உன்னால தான் உன் அத்தைக்கு உடம்பு சரி இல்லாம போச்சு.

நீ மட்டும் பழைய துர்காவாக இருந்திருந்தால் இந்த அளவுக்கு ஆக விட்டிருப்பியா?

என்னையும் உன் தங்கச்சியையும் யாரோ போல தானே நீ நடத்துற..

இப்ப கூட பாத்தியா உன் தங்கச்சின்னு கூட பாக்காம…உன்னை இத்தனை வருஷமா வளர்த்த அம்மா என்று கூட நினைக்காம இத்தனை பேர் முன்னாடி எங்க மேல யோசிக்காமல் பழியை தூக்கி போடுற..

இதுவே உன்னை பெத்த அம்மாவா இருந்தா என்னை இப்படி எல்லாம் செய்திருப்பியா? என்றார் வடிவு.

துர்காவிடம் வடிவு பேசுவதை கேட்ட கனகா வடிவிடம் வந்து வடிவு என்ன ஆச்சு உனக்கு? துர்கா எப்பவுமே அந்த மாதிரி நடந்துக்கிட்டது இல்ல.

ஏன் இப்படி எல்லாம் நீ பேசுற என்ன விட உனக்குத்தான் அவளை நல்லா தெரியும்.

நீ தான் இத்தனை வருஷம் அவளை வளர்த்திருக்க… நீயே இப்படி துர்காவைப் பற்றி பேசலாமா? என்று கனகா வடிவிடம் கேட்டார்.

என்ன மன்னிச்சிடு கனகா நான் ஒன்னும் வேணும்னு துர்கா மேல அபாண்டமும் பழி போடணும்னு பேசல ஆனா அவ முன்ன மாதிரி இல்ல ரொம்பவே மாறிட்டா.

அவளுக்கு தலையில அடிபட்டு யாருன்னு தெரியாம தள்ளி வச்சு பார்த்தப்ப கூட எங்க மனசு இப்படி வலிக்கல.

ஆனா இப்போ இவன் நடந்துக்கிறது எல்லாம் பார்த்தா இப்ப இருக்கிறதை விட அந்த மாதிரி இருந்திருந்தா கூட நல்லா இருந்திருக்கும் போல…

எங்களை யாரோ மாதிரி அப்போ தள்ளி வைத்து பார்த்த துர்கா இப்ப இருக்குற துர்காவுக்கு எவ்வளவோ மேல் என்று தோணுது என்றார் வடிவு.

அவர் அப்படி பேசியதை கேட்டு பொறுக்க முடியாமல் அம்மா என்ன பேசுறீங்க நீங்க ஏன் இப்படி எல்லாம் நடந்துக்கிறீங்க.

யார் சொல்லி இப்படி எல்லாம் உங்களுக்கு பேச வருது.நான் எப்போ உங்களை தள்ளி வைத்து பார்த்து நடந்துகிட்டேன்.

உங்களையும் கீர்த்திகாவையும் தவிர எனக்கு இந்த உலகத்துல இத்தனை வருஷத்துல யாரு இருந்தாங்க.

நீங்களும்,கீர்த்திகாவும் தானே என்னோட உலகம். நீங்களே இப்படி பேசினா நான் என்னம்மா செய்வேன் என்று கண்களில் கண்ணீரோடு பேசினால் துர்கா.

துர்கா பேசியதை காதில் வாங்காத வடிவு நீ எங்கள அப்படி நினைச்சிருந்தா இன்னிக்கு நான் கோபமா வீட்டை விட்டு வந்திருக்கும் போது எழுந்து என் பின்னாடி வந்து அம்மா ஏன் இப்படி பண்ணீங்கன்னு என்ன கட்டிப்புடிச்சுக்கிட்டு இருப்பியா? இல்லையா? அதுதானே உன்னோட துர்கா.

ஆனால் நீ என்ன செய்த போனா போகட்டும் என்று கேட்டார் வடிவு.

அம்மா அப்படி எல்லாம் இல்லை என்று துர்கா தன்னிலை விளக்கம் கூற வர…

பேசுவதை கைநீட்டி தடுத்த வடிவு வேண்டாம் துர்கா இப்போ நம்ம தேவையில்லாம இங்கே சண்டை போட்டுட்டு இருக்கோம்.

நீ அன்னைக்கு என்ன ஆச்சுன்னு முதல்ல பார்க்கலாம் அதுக்கப்புறம் நம்ம பிரச்சனையை வைத்துக்கொள்ளலாம் என்று துர்காவின் பேச்சை அத்தோடு கத்தரித்தார் வடிவு.

துர்காவுக்கு தன் அம்மா தன்னிடம் எப்படி நடந்து கொள்வதை தாங்கவே முடியவில்லை.

கண்களில் கண்ணீரோடு கீர்த்திகாவை பார்க்க கீர்த்திகாவிற்கு துர்கா அப்படி பார்க்கவும் அவள் மனது ஏதோ வலித்தது…

இருந்தும் தன் மனதை கல்லாக்கி கொண்டு அமைதியாக கதிருடன் நின்று கொண்டாள்.

அவள் இயலாமையோடு நின்று தன் அம்மாவையும் கீர்த்திகாவையும் பார்த்துக் கொண்டு இருக்க…

அவள் அருகில் வந்த ஆதி துர்கா தோலில் கை போட்டு தன்னோடு சேர்த்து அணைத்தபடி… அங்கிருந்து வெளியே அழைத்துச் சென்றான்.

பிரம்மை பிடித்தவள் போல ஆதியுடன் வெளியே வந்த துர்கா அவனோடு எதுவும் பேசாமல் அமைதியாக சென்றாள்.

துர்கா சங்கடப்படுவதை பார்த்துக் கொண்டு ஆதியால் சும்மா இருக்க முடியவில்லை.

ஒரு புறம் தன் அம்மா உள்ளே ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டிருக்க மறுபுறம் துர்கா எங்கே நொந்து போய் அவர் இருப்பதை பார்த்தவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

அவன் துர்கா அருகில் அமர்ந்து அவள் கையைப் பிடித்துக் கொண்டவன். துர்கா இங்க பாரு என்னை பாரு என்று உன் முகத்தை பிடித்து திருப்பி தன்னை பார்க்க வைத்தான்.

அவள் அழுத விழிகளோடு ஆதியைப் பார்க்க…

இங்க பாரு நீ இப்படி உடைஞ்சு அழுதுட்டு இருக்குற அளவுக்கு விஷயம் அவ்வளவு பெருசா ஒன்னும் நடந்திடல.

ஒரு சின்ன மிஸ் அண்டர் ஸ்டாண்டிங் தான் இத்தனைக்கும் காரணமாக இருக்கும்.

நீ கவலைப்படாத எல்லாம் சீக்கிரம் சரியாயிடும் என்று அவளுக்கு ஆறுதல் கூறினான் ஆதி.

இல்ல ஆதி அம்மா பேசியது எல்லாம் நீ கேட்ட தானே நான் அவங்கள யாரோ மாதிரி நடத்துறேன்னு சொல்றாங்க.

அவங்க கிட்ட நான் அப்படி நடந்துக்குவேனா?

அம்மா தான் புரியாமல் பேசுறாங்கன்னா இந்த கீர்த்திகாவுமா அப்படி நடந்துக்கணும்.

என்னால அவங்க ரெண்டு பேரும் இப்படி என்கிட்ட பேசறதும் நடந்து கொள்வதும் பார்த்துட்டு சும்மா இருக்க முடியல ரொம்ப வலிக்குது ஆதி என்று தன் இதயத்தை தொட்டுக்காட்டி சொன்னால் துர்கா.

துர்கா மிகவும் மன வேதனையோடு பேசுவதை பார்த்த ஆதிக்கு அவள் தலையை வாஞ்சியாக தடவி கொடுத்தவன்.

இங்கே பார் துர்கா நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோ… அம்மாவை ஹாஸ்பிடல் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு கூட்டிட்டு போறதுக்குள்ள இந்த பிரச்சனை எல்லாம் சரியாகிவிடும் என்றான் ஆதி.

ஆதி சொன்னதை கேட்டதும் எப்படி ஆதி சரியாகும் அவங்களை எப்படி நீ பேசி சமாதானம் செய்யப் போற…

நான் சொல்லியே அம்மாவும் கீர்த்திகாவும் புரிஞ்சுக்காத அப்போ நீ சொல்லியா அவங்க கேட்க போறாங்க என்றால் துர்கா.

நானும் முயற்சி பண்ணி பாக்குறேன் துர்கா எனக்கு கண்டிப்பா என்னால முடியும்னு நம்பிக்கை எனக்கு இருக்கு என்றான் ஆதி.

ஆதி துர்காவையும் தேடிக் கொண்டு விக்கியும் கதிரும் ஹாஸ்பிடல் விட்டு வெளியே வர…

ஆதியும் துர்காவும் கேண்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்தவர்கள் அவர்களை நோக்கி வந்தனர்.

என்ன துர்கா மூக்கு சிந்திகிட்டு அழுதுட்டு உக்காந்துட்டு இருக்க என்று கேட்டபடி விக்கி வந்து அவள் அருகில் அமர்ந்தான்.

கதிரும் துர்கா எதிரி அமர்ந்தவன் மூஞ்சி ரொம்ப அசிங்கமா இருக்கு நீ தயவு செய்து அழுதுறாத உன்னை பார்க்கவே முடியல என்றான்.

இருபது பேர் தன்னை கேலி பேசுவதை கேட்ட துர்கா ஆதியைத் திரும்பிப் பார்த்து பாரு ஆதி இரண்டு பேரும் என்கிட்ட எப்படி பேசுறாங்கன்னு என்று அவனிடம் கம்ப்ளைன்ட் செய்தால்.

உடனே ஆதி சிரித்துக்கொண்டு விக்கியையும் கதிரையும் பார்த்து டேய் எதுக்குடா என் பொண்டாட்டிய இரண்டு பேரும் வம்பு இழுக்கிறீங்க என்றான் ஆதி.

என்னது உன் பொண்டாட்டிய நாங்க ரெண்டு பேரும் எதுக்கு வம்பு இழுக்க போறோம் அவ எங்களோட ஃபிரண்ட் எங்க பிரண்டு கிட்ட நாங்க எப்படி வேணாலும் பேசுவோம் அது எங்க உரிமை என்றான் விக்கி.

ஓஹோ உன்னோட ப்ரெண்டா அப்போ உங்க எல்லாருக்கும் பிரண்டாகறதுக்கு முன்னாடியே துர்கா என்கூட தான் பிரண்டா இருந்தா அது தெரியும் தானே உனக்கு என்றான் ஆதி.

ம்ம்ம்… ம்ம்… தெரியும் தெரியும் நல்லாவே தெரியும் எங்களுக்கு.. என்றவன்.

துர்கா இடம் திரும்பி ஏ துர்கா கீர்த்திகா தான் புரியாம சின்ன பொண்ணு மாதிரி பேசுறானா நீ ஏன் அதை பெருசா எடுத்துக்கிற.

உன்னை திட்ற உரிமை உன் அம்மாவை தவிர வேற யாருக்கு இருக்கு.

உன் அம்மா தானே உன்னை திட்டினார்கள் அதனால இதையெல்லாம் பெருசா எடுத்துக்காத அவங்களே சீக்கிரம் சரியாயிடுவாங்க என்றான் விக்கி.

கண்களை துடைத்துக் கொண்டே விக்கியிடும் நிஜமா அவங்க சரியாயிடுவாங்களாடா என்று கேட்டால் ஆர்வமாக..

ஆமா கண்டிப்பா சரி ஆயிடுவாங்க அவங்க ஏன் முதல்ல அந்த மாதிரி பேசினாங்கன்னு நம்ம தெரிஞ்சுகிட்டா அவங்கள சரி செய்ய சுலபமா இருக்கும் என்ற விக்கி.

அதுக்கு முதல்ல இவன் பொண்டாட்டிய கூப்பிட்டு வச்சு நாக்க புடுங்கிக்கிற மாதிரி நாலு கேள்வி கேட்கணும் அப்போதுதான் உண்மையாவே என்ன நடந்துச்சுன்னு நமக்கு தெரியும் என்றான் விக்கி.

அதுக்கு அவசியமே இல்ல சண்டை நடக்கும்போது நானும் அண்ணாவும் அங்கேதான் இருந்தோம் அத்தைக்கு துர்கா அம்மா அப்பா கூட இருக்கும்போது நானும் கீர்த்திகாவும் மட்டும் அவங்கள விட்டு தனியா இருக்கிறது புடிக்கல அதனாலதான் அப்படி பேசி இருக்காங்க கிருத்திகாவாவது கொஞ்சமாவது அவங்க அம்மாவ சமாதானப்படுத்துற மாதிரி பேசி இருந்தா இவ்ளோ பிரச்சனை வந்திருக்காது என்றான்.

இப்போ என்னடா பண்றது என்று விக்கி கேட்க…

இப்போதைக்கு எதுவும் செய்ய வேண்டாம் போற போக்கிலேயே எல்லாம் பார்த்துக்கலாம் இப்போ வாங்க நாம போய் அம்மாவ பாப்போம் அவங்களுக்கு எப்படி இருக்குன்னு பார்க்கலாம் என்று ஆதி அவர்களை அழைக்க…

முன்னாடி போ நாங்க துர்கா கூட காபி குடிச்சிட்டு வரேன் என்று விக்கி ஆதியை நான் போக சொல்ல…

என்னடா நீங்க எப்ப பார்த்தாலும் என்னையும் என் பொண்டாட்டியும் பிடிக்கவில்லை இருக்கீங்க முதல்ல உங்க ரெண்டு பேரையும் துர்கா கிட்ட இருந்து பிரிக்கணும் என்றான் ஆதி.

சரி… சரி… பிரிச்சுக்கோ… என்று அலட்சியமாக பதில் அளித்த விக்கி.

இப்ப முதல்ல இங்க இருந்து கிளம்பு…சும்மா வெட்டியா நின்னு பேசி டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்காத அம்மாவை பாரு… என்று விக்கி ஆதியை விரட்ட..

ஆமா அண்ணா உனக்கு இங்க என்ன வேலை அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம மீட் பண்ணி இருக்கப்போ பொண்டாட்டிய தனியா தள்ளிட்டு வந்து ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு இருக்கியா? என்று கேட்டான் கதிர்.

டேய் நீங்க பேசுனது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்ல என்று ஆதி கதிரின் கைபிடித்து இழுத்தவன் அப்போ உனக்கு இங்க என்ன வேலை.

அவங்க ரெண்டு பேரும் காபி குடிச்சிட்டு வரட்டும் நீ வா நாம போய் அம்மாவை பார்க்கலாம் என்று சொல்லி கதிரை இழுத்துக் கொண்டு செல்ல…

அவர்கள் இருவரையும் பார்த்து தலையசைத்து விட்டு ஆதியும் கதிரும் உள்ளே செல்ல விக்கியும் துர்காவும் சற்று நேரம் கேண்டினில் பேசிவிட்டு துர்கா சற்று ரிலாக்ஸ் ஆகிவிட்டால் என்று தெரிந்ததும் விக்கி அவளை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான் .

அதற்குள் விசாலாட்சிக்கு ட்ரீட்மென்ட் செய்துவிட்டு டாக்டர் வெளியே வர… அவர் ஆதி இடமும் கதிரிடமும் வந்து அவங்களுக்கு சின்ன மைல்ட் அட்டாக் தான் வந்திருக்கு..

அவங்க அதிகமான ஸ்ட்ரெஸ் ல இருக்காங்கன்னு நினைக்கிறேன் நீங்க கொஞ்சம் அவங்ககிட்ட பொறுமையா பேசுங்க….அவங்கள ஸ்ட்ரெஸ் ஆக்குற எந்த விஷயத்தையும் அவங்க கிட்ட கொண்டு போகாதீங்க ஆகின்றவர் இன்னைக்கு ஒரு நாளைக்கு அப்செர்வேஷன்ல இருக்கட்டும் பார்த்துட்டு நாளைக்கு அவங்கள டிஸ்சார்ஜ் பண்ணிட்டு ரூம் என்றார்.

டாக்டர் சென்ற பிறகு ஒவ்வொருவராக சென்று விசாலாட்சியை பார்த்துவிட்டு வந்தனர்.

அவரால் பேச முடியவில்லை மிகவும் சோர்ந்து போய் இருந்ததால் அவரை யாரும் அதிகம் தொந்தரவு செய்யாமல் அங்கிருந்து கிளம்பினர்.

இங்கு நடந்ததை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சங்கவி எப்படி இவங்க மட்டும் இவ்வளவு சீக்கிரம் ஒரு பிரச்சனையிலிருந்து வெளியே வந்துட்டாங்க…

நானும் ஏதாவது குடைச்சல் கொடுத்துட்டே இருக்கலாம்னு பார்த்தா ஒவ்வொரு தடவையும் யோசிச்சு எதுவுயும் செய்தால்.

அதை எல்லாம் சீக்கிரமே சரி செய்துட்டு அதை விட்டு வெளியே வர மாதிரியே எனக்கு ஏன் தோணுதே….

ம்ஹும்… இதை இப்படியே விடக்கூடாது இந்த சண்டையை சீக்கிரமாக சமாதானம் ஆகுற அளவுக்கு கொண்டு போக விடுவே கூடாது ஏதாவது செஞ்சு இந்த சண்டையை பெருசாக்கிடணும் என்று யோசித்தபடி செண்பகத்துடன் வீட்டிற்கு கிளம்பினால் சங்கவி.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured