EPI 217
ஒரு நாள் ஹாஸ்பிடலில் வைத்திருந்து விசாலாட்சியை அடுத்த நாள் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டனர் அனைவரும்.
வீட்டு வாசல் வரை வந்த விசாலாட்சியை ஆரத்தி கரைத்து அவருக்கு திருஷ்டி சூட்டிய கனகா விசாலாட்சி வீட்டுக்குள் அழைக்க…
என்னோட சின்ன மருமகளும் மருமகனும் வீட்டுக்குள்ள வராம நான் இந்த வீட்டுக்கு வரமாட்டேன் என்றார்.
இப்படி சொன்னதும் அதிர்ச்சியான கீர்த்திகாவும் கதிரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு விசாலாட்சியின் அருகில் வந்தவர்கள் பார்த்து என்ன இப்படி செய்கிறீர்கள் என்பதுபோல கேட்க…
விசாலாட்சி கீர்த்திகாவின் கையைப் பிடித்துக் கொண்டு என்னை என்ன செய்ய சொல்ற கீர்த்திகா.
இப்படி நீ திடீர்னு சண்டை போட்டுட்டு இந்த வீட்டை விட்டுவிட்டு போவேன் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.
இந்த வீடு என் சொத்து சுகம் இது எல்லாத்தையும் விட எனக்கு என் குடும்பம் தான் ரொம்ப முக்கியம்.
நான் அப்படி நினைச்சுட்டு இருக்கிறப்போ நீ இந்த குடும்பமே வேண்டாம் அப்படின்னு சொல்லிட்டு வீட்ட விட்டு வெளியே போனா என்ன அர்த்தம்.
எனக்கு என் இரண்டு மகனும் வேணும் கீர்த்திகா அவங்களோட என் ரெண்டு மருமகள்களும் வேணும்.
நீ என் வராத இந்த வீட்டுக்குள்ள நானும் போக மாட்டேன் என்று பிடிவாதமாக விசாலாட்சி வாசலிலேயே நிற்க…
அதை ஏன் இப்படி பிடிவாதம் பண்றீங்க நேத்து நடந்தது எல்லாம் மனசுல வச்சுட்டு தான் இப்படி பேசுறீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியுது.
எனக்கு கோபம் தான் நான் இல்லைன்னு சொல்லல அதுக்காக நீங்க இப்படி நடந்து கொள்வது சரியில்ல நீங்க பண்றது எனக்கு தான் கஷ்டமா இருக்கு என்று கீர்த்திகா சொல்ல..
உன்ன கஷ்டப்படுத்தணும் என்பதற்காக நான் இப்படி செய்யல கீர்த்திகா உண்மையாகவே நான் உன்ன எங்க கூடவே இந்த வீட்டில இருக்க சொல்லித்தான் கூப்பிடுறேன்.
நீ கேட்டதிலும் ஒரு வகையில் நியாயம் இருக்கத்தானே செய்கிறது ஒரு மகனை மட்டும் பக்கத்தில் வைத்துவிட்டு இன்னொரு மகனை தள்ளி வைக்கிறது எந்த விதத்தில் நியாயம் என்றார் விசாலாட்சி.
கீர்த்திகா பேசாமல் அமைதியாக நின்று இருக்க அவள் அருகில் நின்றிருந்த கதிரின் கையை பிடித்து இழுத்த விசாலாட்சி டேய் கதிர் நான் சொன்னது உன் பொண்டாட்டி கேக்க மாட்டா நீயாவது சொல்லி அவளை நம்ம வீட்டுக்கே அழைச்சிட்டு வந்துடுடா என்று அவர் கெஞ்ச…
அம்மா நீங்க முதல்ல உள்ளே வாங்க மத்ததெல்லாம் அப்புறம் பேசிக்கலாம் என்று விசாலாட்சி அமர்ந்திருந்த வீழ்ச்சேரை தள்ளப் போக…
விசாலாட்சி உள்ளே வர மறுத்துவிட்டார். அவர் அருகில் வந்த துர்கா அத்தை அவங்க ரெண்டு பேரும் இனிமேல் எங்கேயும் போய் இருக்கப்போவதில்லை.
நம்ம வீட்டுக்கு தான் வர போறாங்க நீங்க கவலைப்படாம உள்ளே வாங்க என்று விசாலாட்சியை அழைக்க…
என்ன துர்கா சொல்ற என்று கேட்டார் விசாலாட்சி புரியாமல்.
நான் ஏற்கனவே கதிர் கீர்த்திகா உடைய திங்ஸ் எல்லாத்தையும் ஆளை விட்டு இங்கே எடுத்துட்டு வர சொல்லியாச்சு…
அவங்க அங்கே போனாலும் திரும்பி நம்ம வீட்டுக்கு தான் வந்து ஆகணும் அவங்களுக்கு வேற வழியே இல்லை என்று சொன்ன துர்கா.
கீர்த்திகாவை திருப்பி பார்த்து முறைத்தவள் ஒழுங்கா உள்ளே வந்துடு…இல்லன்னா நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது என்று கீர்த்திகாவை மிரட்டி விட்டு விசாலாட்சியின் சேரை தள்ளிக்கொண்டு உள்ளே சென்றாள் துர்கா.
உள்ளே செல்லும் துர்காவையே அதிர்ச்சியாக பார்த்து நின்று கொண்டிருந்த கிருத்திகாவும் கதிரையும் அவர்கள் பின்னால் இருந்த செண்பகம் இருவரின் கையைப் பிடித்து அந்த வீட்டுக்குள் அழைத்து வந்தார்.
இதற்கு மேலும் தாங்கள் பிடிவாதம் செய்தால் நன்றாக இருக்காது என்று அமைதியாக செண்பகத்துடன் கதிரும் கீர்த்திகாவும் வந்தனர்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த வெங்கடாசலம் ஆதியிடம் திரும்பி எப்படிப்பட்ட விஷயத்தையும் உன்னோட அம்மாவும் துர்காவும் ஏதாவது செஞ்சு சீக்கிரம் சரி கட்டிடறாங்க இல்ல ஆதி என்றார்.
ஆமாம் அப்பா….அம்மாவை போலத்தான் துர்காவும் யாருமே கஷ்டப் படக்கூடாது சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கிறவங்க என்ற ஆதி தன் மனைவியை பெருமையாக பார்த்தபடி அவர்களோடு உள்ளே நுழைந்தான்.
விசாலாட்சி அளித்து வந்த துர்கா அவரை அழைத்துக் கொண்டு அவர் அறையில் விட்டு விட்டு கிச்சனுக்கு வந்து விசாலாட்சி சாப்பிட காரமில்லாமல் உணவு சமைக்க ஆரம்பித்தாள்.
கீர்த்திகாவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை நேற்று வேறு துர்காவையும் விசாலாட்சியும் மனம் நோகும்படி கோபத்தில் ஏதேதோ பேசி விட்டாள்.
துர்கா அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் உரிமையோடு தன்னிடம் பேசுவதை பார்த்த கீர்த்திகாவிற்கு ஒரே குழப்பமாக இருந்தது நம்ம சொல்வதை நம்புவதா அல்லது துர்கா நடந்து கொள்வதை நம்புவதா என்று தெரியாமல் குழப்பத்திலே துர்காவைத் தேடி கிச்சனுக்கு வந்தாள் கீர்த்திகா.
கிச்சனுக்கு வந்த கீர்த்திகா துர்கா அருகில் சென்று நிற்க அவள் வந்து இருப்பது தெரிந்தும் துர்கா கீர்த்திகாவை கண்டுகொள்ளாமல் சமையல் செய்து கொண்டு இருந்தாள்.
துர்காவோடு சேர்ந்து கனகாவும் செண்பகமும் மற்றவர்களுக்கு உணவு சமைத்துக் கொண்டு இருக்க…
கிச்சன் மேடையில் அமர்ந்தவாறு சங்கவி அங்கு நடப்பதை எல்லாம் வேடிக்கை பார்த்தபடி கையில் கேரட்டை கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தால்.
என்ன இந்த கீர்த்திகாவுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்ல நேத்து தான் அப்படி வாய்கிழிய பேசி துர்கா கிட்ட சண்டை போட்டுட்டு போனா
ஆனா இப்போ பாரு அவ கிட்ட பேசுற மாதிரி வந்து நின்னுட்டு இருக்கா.. இவ இப்படி வந்து நிற்கிறது சரியில்லையே நம்ம போட்ட பிளான் எல்லாம் வீணாயிடுமே இப்போ ஏதாவது செய்யணும் என்று சங்கவி யோசித்துக் கொண்டிருக்க…
அக்கா என்று கீர்த்திகா தயங்கிய வாரே துர்காவை அழைத்தால்.
துர்கா எதுவும் பேசாமல் உணவு சமைத்துக் கொண்டு இருக்க…
கீர்த்திகா அவள் அருகில் வந்து துர்காவின் கையை பிடித்துக் கொண்டு அக்கா ப்ளீஸ் இப்படி என்கிட்ட பேசாம இருக்காத… நான் எதுவும் தெரியாம உன்கிட்ட இப்படி பேசிட்டேன் என்ன மன்னிச்சிடு நான் பேசுனது தப்புதான் அக்கா ப்ளீஸ் என்ன மன்னிச்சிடு என்று கீர்த்திகா துர்காவிடம் கெஞ்சினாள்.
அவள் பிடித்திருந்த கையை உதறிய துர்கா திரும்பி கனகாவிடம் எதையோ கேட்டு சமைக்க அதை எடுத்து தரச் சொல்ல…
கனகா துர்கா கேட்ட பொருளை எடுத்து அவள முன் நீட்டிய உடனே குறுக்கே வந்து வேகமாக அந்த பொருளை வாங்கி தன் கையில் வைத்துக்கொண்ட கீர்த்திகா.
அக்கா தயவுசெய்து என்கிட்ட பேசு ப்ளீஸ் அப்பதான் நான் இதை உன்கிட்ட கொடுப்பேன் என்று அவர் கையில் வைத்திருந்த பொருளை கொடுக்காமல் வைத்துக் கொள்ள…
சீப்ப ஒளிச்சு வச்சுட்டா கல்யாணம் நடக்காதுன்னு சொல்லுவாங்களே அந்த மாதிரி இதை எடுத்து நீ வச்சுக்கிட்டா என்னால சமைக்க முடியாதுன்னு நெனச்சிட்டியா நீ என்கிட்ட ஒன்னும் பேச வேண்டாம் நான் தான் உனக்கு யாரோ மாதிரி ஆயிட்டேனே நேத்து என்ன என்ன பேச்சு பேசின நீ இப்போ வந்து அக்கா மன்னிச்சிடுன்னு சொன்னா எல்லாத்தையும் மறந்துட்டு நான் உன்னை மன்னிப்பேன் என்று நீ நினைச்சிட்டு இருக்கியா அதுதான் இல்ல என்று சொன்ன துர்கா கீர்த்திகாவை கண்டுகொள்ளாமல் வேலை செய்ய ஆரம்பித்தால்.
இவர்கள் இருவர இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த சங்கவி இறங்கி வந்து துர்கா நருகில் நின்று என்ன துர்கா இப்படி உதாசீனப்படுத்தி பேசுற….
கீர்த்திகாவையே தவறை உணர்ந்து உன்கிட்ட வந்து மன்னிப்பு கேட்கிறாளே… நீ அவளை மன்னித்துவிடுவது தானே ஒரு நல்ல பெண்ணுக்கு அழகு.
இப்படியே அவளை மன்னிச்சு விடாம அவளை ஏன் திட்டுற என்று கீர்த்திகாவிற்கு சங்கவி வக்காலத்து வாங்கிக் கொண்டு வந்தால்.
அவள் எதற்காக இப்படி தானாக வந்து தனக்கும் கீர்த்திகாவுக்கும் இடையில் வருகிறாள் என்று துர்காவிற்கு நன்றாகவே புரிந்தது.
ஆனால் அங்கு அவர்கள் இருவரை தவிர மற்றவர்கள் எல்லாம் இருப்பதால் துர்காவால் நேரடியாக சங்கவியிடம் பேச முடியவில்லை.
கீர்த்திகா விட சங்கவியையும் முரைத்த துர்கா எனக்கு என்ன செய்யணும்னு நல்லா தெரியும்.நீ வந்து விழுந்து ஒன்னும் சமாதானம் செய்ய வேண்டாம் என்றாள்.
நீ சொன்னதே கேட்பியாவிடம் திரும்பி பாருக் கீர்த்திகா நான் உனக்கும் உன் அக்காவுக்கும் சண்டை வரக்கூடாது என்கிற நல்ல எண்ணத்தில் தானே உங்க ரெண்டு பேரையும் சமாதானப்படுத்த வந்தேன்.
ஆனால் சமாதானப்படுத்த வந்த என்னையும் உன் அக்கா எப்படி பேசி நடத்துறான்னு நீ பார்த்ததான… அப்போ உன்னோட நிலைமை என்னன்னு நீ யோசித்து பாரு என்று கீர்த்திகாவிடம் பொரியை கிள்ளி போட…
சங்கவி சொல்வதை யோசித்த கீர்த்திகா நீ சொல்றதும் சரிதான் சங்கவி என்றவள் தன் கையில் வைத்திருந்த பொருளை கீழே வைத்துவிட்டு துர்கா சமைத்துக் கொண்டிருக்க… அவளிடம் வந்த சங்கவி துர்காவின் கையில் இருந்த கரண்டியை விடுக்கென்று பிடுங்கியவல்.
நீ ஒன்னும் என் அத்தைக்கு சாப்பாடு செஞ்சு கொண்டு போக வேண்டாம். நானே செஞ்சு அத்தைக்கு கொடுத்துக்குறேன் நீ போய் உனக்கு வேற வேற வேலை இருந்தா பாரு என்று துர்காவை வேலை செய்ய விடாமல் கீர்த்திகா அவளை அங்கிருந்து துரத்த..
என்னவோ பண்ணுங்க என்று சொன்ன துர்கா கையே தன் கையை கழுவி விட்டு சேலை தலைப்பில் கையில் இருந்த இடத்தை துடைத்து வாரே தன்னரைக்கு சென்றால்.
இங்கே எப்போது துர்கா வேலையெல்லாம் முடித்துவிட்டு அறைக்கு வருவாள் என்று அவளை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.
ஆதி காத்திருந்தது போல அவனை காக்க வைக்காமல் சீக்கிரமாகவே அறைக்கு வந்தால் துர்கா.
அவள் உள்ளே நுழைந்ததும் துர்காவின் கைய பிடித்து விடுக்கன எழுத்து அவளை தன்னுடைய சேர்த்து இழுத்து அணைத்துக் கொண்டான் ஆதி.
ஆதி இப்படி தன்னை திடீரென்று அழைப்பான் என்று அறியாத துர்கா சற்று பயந்து விட…
அவளைப் பார்த்து சத்தமாக சிரித்த ஆதி என்ன துர்கா பயந்துட்டியா இந்த ரூமுக்குள்ள என்னையும் உன்னையும் தவிர யார் வரப்போறாங்க என்றவன்.
ஏய் பொண்டாட்டி வர வர நீயும் உன் புருஷனையும் சரியா கவனிக்கிறதே இல்ல என்றான்.
அப்படியா அப்படி என்ன நான் என் புருஷனை கவனிக்காம விட்டுட்டேன் என்று அவனை கட்டிக் கொண்டு கேட்டால் துர்கா.
என்னன்னு உனக்கு தெரியாதா என்று ஆதி குறும்பாக துர்காவையே பார்த்து கேட்க…
அவன் எதற்காக இப்போது அடி போடுகிறான் என்பதை புரிந்து கொண்ட துர்கா அவன் மார்பில் அடித்து…
அதுக்குள்ள என்ன ஆதி உனக்கு அவசரம் இப்போ மணி என்ன ஆகுது மதிய சாப்பாடு இன்னும் யாரும் சாப்பிடல ஹாஸ்பிடல் இருந்து வந்ததிலிருந்து இன்னும் ஒரு வேலையும் ஆகல….
அதெல்லாம் ராத்திரிக்கு வச்சுக்கலாம் இப்போ வேண்டாம் என்று சொன்ன துர்கா தன்னோடு ஒட்டி நின்ற ஆதியை விழித்து விலக்கிவிட்டு குளிப்பதற்காக ஆடையை எடுத்துக்கொண்டு பாத்ரூம் நோக்கி செல்ல…
பாத்ரூம் நோக்கி செல்லும் துர்காவைப் பார்த்தவாறு அப்போ இப்போ எனக்கு எதுவுமே கிடையாதா…?? என்று ஏக்கத்தோடு துர்காவையே பார்த்துக் கொண்டு நின்றான் ஆதி.

1 comment
Inaki episode super akka 💐💗💝👀