Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 222

உன் ரகசிய ரசிகை நான் 222

by Layas Tamil Novel
83 views

EPI 222

போதியையும் மாதவியையும் அவர்கள் இருந்த அறைக்கு வந்து அவளிடம் பத்திரத்தை நீட்டி கையெழுத்து போடச் சொல்லி மாதவி வளர்ந்த ஆசிரமத்தில் இருப்பவர்களை எதுவும் செய்து விடுவதாக சொல்லி சங்கவி மிரட்டி கொண்டிருந்தாள்.

அவள் கையெழுத்துப் போட்டாலும் அவள் குடும்பத்தில் இருப்பவர்கள் எல்லாம் கையெழுத்து போட்டால்தான் அந்த சொத்துக்கள் எல்லாம் அவளுக்கு வரும் என்று போதி லாஜிக்காக பேச…

அது எல்லாம் நீ எந்த கவலையும் பட வேண்டாம் போதி நான் ஏற்கனவே அவங்க எல்லார்கிட்டயும் கையெழுத்து வாங்கிட்டேன் என்று கீழே இருந்த ஒரு பத்திரத்தை எடுத்து அவன் முகத்திற்கு நேராக நீட்ட…

அதை வாங்கிப் பார்த்த போதி அதிர்ச்சியாக எப்படி இவங்க கிட்ட கையெழுத்து வாங்கின என்று அவளை பார்த்து கேட்க…

ஏன் போன எபிசோடு கமெண்ட்ல நீயே பார்த்தியா? இல்லையா? நான் எப்படி அவங்கள மிரட்டி கையெழுத்து வாங்கி இருப்பேன்னு எல்லாரும் எவ்வளவு கோவமா கமெண்ட் பண்ணி இருந்தாங்க.

அவங்க கிட்ட நல்லவன் மாதிரி நடிச்சு கையெழுத்து வாங்கி இருப்பேன்னு ப்ரீத்தி சொன்னா…

அதேபோல நிலானியை விஷம் கொடுத்து கொன்னுடுவேன்னு சொல்லி அவங்கள மிரட்டி கையெழுத்து வாங்கிடுவேன்னு கீது சொன்னா…

இவங்க ரெண்டு பேரும் கெஸ் பண்ணது எல்லாம் செய்யலாம் என்று தான் நான் முதல்ல நினைச்சேன்.

ஆனா இது எல்லாம் ஒரு சின்ன விஷயம் தான் அவங்களுக்கு இதுக்காக ஒன்னும் சட்டுனு இறங்கி இவங்க எல்லாரும் கையெழுத்து போட மாட்டாங்க…

அப்படியே சொன்ன பேப்பர்ல மற்றவர்கள் எல்லாம் கையெழுத்து போட சம்மதித்தாலும் என் அப்பா…என்று சொன்னவள் சாரி அந்த வேதாச்சலம் நிச்சயம் சம்மதிக்க மாட்டார் .

உன்னத்தான் அந்த நிலானி வயித்துல இப்போதான் உருவாகி இருக்கிற அந்த கருவை அவளுக்கு தெரியாமையே கலைச்சிடுவேன்னு சொல்லி மிரட்டி அவங்க கிட்ட எல்லாம் கையெழுத்து வாங்கிட்டேன் என்றாள் சங்கவி.

அவள் நிலானியின் வயிற்றில் இருக்கும் கருவை கலைத்து விடுவேன் என்று மிரட்டியதை சொன்னதை கேட்ட மாதவிக்கு சங்கவி இவ்வளவு மோசமானவளா என்று அதிர்ச்சியாக அவளையே பார்த்தாள்.

அதையெல்லாம் கண்டு கொள்ளாத சங்கவி சீக்கிரம் இந்த பேப்பர்ல கையெழுத்து போட போறியா? இல்ல உன் மொத்த ஆசிரமமும் வெடித்து சிதறதை இப்போ கண்கூட பார்க்க போறியா? என்று சங்கவி மாதவியை மிரட்ட…

அவள் சொன்னதை செய்தாலும் செய்து விடுவாள் என்று வேகமாக கீழே கிடந்த டாக்குமென்ட்களை எடுத்து ஒன்று சேர்த்து கையில் வைத்தவள் போதியை ஒரு பார்வை பார்த்துவிட்டு பேனாவை எடுத்து மலமலவென அனைத்து காகிதத்திலும் கையெழுத்து போட ஆரம்பித்தாள்.

இப்போ மாதவி அவள் சொத்துக்களை எல்லாம் சங்கவிக்கு எழுதி வைப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை அவனிடம் இல்லாத வசதி வாய்ப்பா…

ஆனால் இப்படி மாதவிக்கு நியாயமாக சேர வேண்டியதை சங்கவி மிரட்டி வாங்குவது அவனால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.

மாதவி கையெழுத்து போட்டு முடித்ததும் அவள் கையில் இருந்த டாக்குமெண்டை வெடுக்கென்று பிடுங்கிய சங்கவி வரட்டா என்று சொல்லிவிட்டு அவர்கள் அறையைத் தாண்டி வெளியே செல்ல போக…

சங்கவி என்று அந்த அறை அதிரும்படி அவளை அழைத்தான் போதி.

அவனை சாதாரணமாக திரும்பிப் பார்த்த சங்கவி என்ன என்றால் திமிராக…

இப்போ வேணா என் பொண்டாட்டிக்கு நியாயமா சேர வேண்டிய சொத்துக்களையும் அவளோட உரிமையையும் எழுதி வாங்கி இருக்கலாம்.

ஆனால் கூடிய சீக்கிரமே இது எல்லாம் உன்கிட்ட இருந்து பிடுங்கி என்னோட மாதவி கிட்ட நான் கொடுக்கத்தான் போறேன் என்றான் போதி.

ஓ அப்படியா அதையும் தான் பார்க்கலாமே நான் நீ என்ன செய்றேன்னு பாக்குறதுக்காக காத்துக்கிட்டு இருக்கேன் என்று சொல்லி சிரித்தவள் மாதவியை பார்க்க…

அக்கா இனிமேல் அந்த ஆசிரமத்து பக்கமே தயவுசெய்து போய்விடாதிங்க அங்கு இருக்கிறவங்களையாவது நிம்மதியாக இருக்க விடுங்க…

அவங்க எல்லாம் ஏற்கனவே அவங்களுக்குன்னு உறவுகள் என்று சொல்லிக்க யாருமே இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருக்காங்க என்று மாதவி சங்கவியிடம் கூற…

தன் கையில் இருக்கும் பத்திரத்தை காட்டி இது எனக்கு சொந்தமாகவே இருக்கிற வரைக்கும் அங்கு இருக்கிற யாருக்கும் எந்த பிரச்சனையும் வராது என்று சொல்லி சிரித்தவள்.

அவர்கள் இருவரையும் பார்த்து ஹேப்பி வெட்டிங் டே என்று இருவருக்கும் வாழ்த்து சொல்லிவிட்டு வெளியே சென்றாள்.

அவள் அறையை விட்டு வெளியே சென்றதும் மாதவி அவள் பேசியதை எல்லாம் நம்ப முடியாமல் கேட்டபடி அப்படியே நின்று இருக்க…

அவள் அருகில் வந்த போதி நீ எதற்கும் கவலைப்படாத மாதவி அவ உன்கிட்ட இருந்து வலுக்கட்டாயமா எழுதி வாங்குன உன்னோட சொத்துக்கள் எல்லாம் நான் உனக்கே திரும்ப வாங்கி தரேன் என்றான் போதி.

இல்ல போதி அப்படி எதுவும் நீங்க செய்ய வேண்டாம் எனக்கு அந்த சொத்துக்குள்ள எல்லாம் ஒரு பெரிய விஷயமே கிடையாது என்னை இத்தனை வருஷமா பாதுகாப்பா வளர்த்த அந்த ஆசிரமம் உன்னை எனக்கு தேடிக் கொடுத்த அந்த ஆசிரமத்தை நான் இழக்க விரும்பல அதனால எனக்கு எதுவுமே வேண்டாம் இந்த விஷயத்தை இத்தோட விடுங்க என்றால் மாதவி.

மாதவி அப்படி சொன்னதும் போதியால் எதுவும் மறுத்து பேச முடியவில்லை அவளிடம் சரி என்று தலையாட்டியவன் அவளை தன் தோளில் சாய்த்துக் கொள்ள…

சங்கவியிடம் இருந்து எப்படியாவது அந்த சொத்துக்களை பாதுகாப்பாகவும் கவனமாகவும் மாதவியிடம் சேர்த்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

இருபொருளும் எதுவும் பேசாமல் அமைதியாக அப்படியே நின்று இருக்க அப்போது அவர்கள் அறைக்கதவை தட்டிக்கொண்டு கதவை திறந்தவாறு உள்ளே வந்தால் ரதி.

உள்ளே வந்தவள் போதியும் மாதவியும் ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு நின்று இருப்பதை பார்த்தவள் வந்த வேகத்தில் திரும்பி நின்று.

ஐயோ…மாமா என்ன பண்ணிட்டு இருக்கீங்க இங்கேயே ஃபஸ்ட் நைட் கொண்டாட ஆரம்பிச்சிட்டீங்களா என்று நக்கல் செய்தபடி கூற…

ஏய் ரதி உனக்கு வாய் ரொம்ப அதிகமாயிடுச்சு என்று மாதவியை தன் கைக்குள் நிறுத்தியவாறு திரும்பி அவளை இப்போது பார்க்க…

நான் திரும்பலாமா? இல்ல…இன்னும் உங்க பொண்டாட்டிய கட்டி புடிச்சிட்டு தான் நிக்கப் போறீங்களா? என்றால் ரதி திரும்பாமல்.

திருப்பித் திரும்பு…ரொம்ப ஓவரா பண்ணாத என்று போதி ரதியை திட்ட…

அவர்கள் இருவரையும் பார்த்து சிரித்தபடி திரும்பிய ரதி உங்களையும் மாதவியையும் வீட்டுக்கு நல்ல நேரம் முடியறதுக்குள்ள போகணும்னு அத்தை மாமா உங்களை சொல்லி என்ன அனுப்பி வச்சாங்க என்றால் ரதி.

சரி நீ போ நாங்க ரெண்டு பேரும் வாரோம் என்றால் போதி மாதவியை பார்த்து சிரித்தபடி…

என்ன அனுப்பிட்டு மறுபடியும் உங்க பொண்டாட்டி கூட நீங்க ரொமான்ஸ் பண்ணலாம்னு நினைக்கிறீங்களா? அதுதான் முடியாது.

அதெல்லாம் வீட்டுக்கு போய் பார்த்துக்கோங்க என்று வேகமாக மாதவியிடம் வந்து அவள் கையைப்பிடித்து இழுத்துக் கொண்டு..

நீங்க மெதுவா வாங்க உங்க பொண்டாட்டிய நான் முன்னாடி கூட்டிட்டு போறேன் என்று சொல்லி மாதவியை அவனிடமிருந்து பிரித்து அறைக்கு வெளியே இழுத்து வந்தால் ரதி.

என் பொண்டாட்டிய கூட்டிட்டு போன பிறகு எனக்கு இங்கே என்ன வேலை நானும் உங்க கூடவே வரேன் என்று சொல்லி சிரித்தவாறு போதியும் அவர்கள் பின்னால் சென்றான்.

ரதியும் மாதவியும் முன்னே வர…. போதி அவர்கள் பின்னால் சிரித்தபடி வருவதை பார்த்த போதியின் குடும்பத்திற்கு அவன் இப்படி சந்தோசமாக சிரித்த முகமாக வருவதை பார்த்து நிம்மதியாக இருந்தது.

அவர்கள் இருவரும் வந்ததும் அனைவரும் மண்டபத்திலிருந்து நேராக வீட்டிற்கு கிளம்ப ஆதியும் அவன் குடும்பமும் அங்கிருந்து நேராக தங்கள் வீட்டிற்கு செல்வதாக விக்கியிடமும், நிலனியிடமும் கூறிவிட்டு கிளம்பினார்கள்.

❤️

போதி,மாதவி திருமணத்தில் கலந்து கொண்டு நேரமே கிளம்பி வீட்டிற்கு ராதாவும் சந்தோசும் வந்து விட்டனர்.

துர்கா உடன் டென்மார்க் செல்ல வேண்டி இருந்ததால் அந்த வேலையை எல்லாம் முடித்துவிட்டு இரவு லேட் ஆகத்தான் வீட்டிற்கு வந்தான் ஸ்ரீ.

அவன் வீட்டிற்குள் நுழையும் போதே ஹாலில் கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு கோபமாக அமர்ந்து இருந்தால் ராதா.

அவள் கோபமாக அமர்ந்திருந்ததை பார்த்த ஸ்ரீ ஐயோ இப்போ போய் இவ கிட்ட பேச்ச கொடுத்தா அவ்வளவுதான் வசமா மாட்டிக்குவோம்.

இவ கிட்டே எதுவும் பேசாம அமைதியா ரூமுக்கு போயிடனும் என்று நினைத்தவாரே ராதாவை தாண்டி மெல்ல தன்னறைக்கு செல்ல போக …

சரியாக அவள் பின்னால் அவளைத் தாண்டி ஸ்ரீ கடந்து செல்ல போக அப்போ ஸ்ரீயின் பாக்கெட்டில் இருந்து போன் அலற ஆரம்பித்தது.

அவசரமாக தன் பாக்கெட்டில் இருந்த போனை எடுத்து பார்க்க ரியா தான் அவனுக்கு அழைத்திருந்தாள்.

இவ எதுக்கு இந்த நேரத்துல கால் பண்ணி இருக்கா? சரியா ராதாகிட்ட என்னை மாட்டிவிடுறதுக்குனே எனக்கு கால் பண்ணுவா போல இருக்கே… என்று அவசரமாக காலை கட் செய்துவிட்டு நிமிர அவனை திரும்பி பார்த்தபடி சோபாவில் அமர்ந்திருந்தால் ராதா.

போச்சு…வசமா இவகிட்ட மாட்டிக்கிட்டேனா என்று நினைத்தவன் ராதாவை பார்த்து என்ன ராதா இங்கே உட்கார்ந்து இருக்க நீ இன்னும் தூங்கல மணி 10 ஆக போகுது என்றான் ஸ்ரீ.

எனக்கு தூக்கம் வரல அதனாலதான் இங்கே இருக்கேன். நீ வந்ததும் உனக்கு சாப்பாடு எடுத்து வச்சிட்டு அப்புறம் தூங்கலாம்னு உக்காந்திருக்கேன் என்றால் ராதா.

அச்சோ நீங்க ரெண்டு பேரும் ஃபங்ஷன்லையே சாப்பிட்டு வந்து இருப்பீங்கன்னு நான் வெளியிலேயே கடையில சாப்பிட்டு வந்துட்டேனே என்றான்.

பரவால்ல ஒன்னும் பிரச்சனை இல்ல நீ வந்தா உனக்கு மேகி செஞ்சு கொடுக்கலாம் என்று தான் உட்கார்ந்து இருந்தேன் என்றால்.

மேகி செஞ்சதுக்கு தான் இவ்வளவு பில்டப் கொடுக்கிறாளா?என்று நினைத்தவன்.

எப்படியும் இவகிட்ட ஏன் கோபமா இருக்க சோகமா இருக்கேன்னு நம்மள கேட்காம இங்கிருந்து அனுப்ப போறதில்ல வீணா பேச்சை வளர்த்திட்டு இருக்கு அதுக்கு நேரடியா கேட்டு விடுவோம் என்று நினைத்த ஸ்ரீ.

ஏன் ஒரு மாதிரியா இருக்க ராதா உனக்கு உடம்பு எதுவும் சரி இல்லையா? என்றான் ஸ்ரீ.

அவன் அப்படி கேட்டதும் தான் தாமதம் சோபாவில் அமர்ந்திருந்தவள் வேகமாக எழுந்து வந்து ஸ்ரீ இன் முன்னாள் நின்று அது ஏன் கேக்குற ஸ்ரீ நாங்க பங்க்ஷன் முடிஞ்சு வீட்டுக்கு வந்துட்டு இருந்தோமா என்று ஆரம்பித்தால் ராதா.

போதி மாதவியின் கல்யாணத்தை முடித்துக் கொண்டு புல்லட்டில் பின்னால் அமர்ந்த ராதா சந்தோஷம் இடுப்பில் தன் கையை வளைத்து பிடித்தவாறு அவன் தோளில் முகத்தை வைத்துக்கொண்டு அவனுடன் பேசியபடியே வந்து கொண்டிருந்தாள்.

அவள் சுற்றிலும் வேடிக்கை பார்த்தபடியே அவனுடன் பேசிக்கொண்டு பைக்கில் சென்று கொண்டு இருக்க…

திடீரென சந்தோஷின் தோளில் வேகமாக தட்டி பைக் நிறுத்த சீக்கிரமா என்று அவனை அவசரப்படுத்த…

என்ன ஆச்சு ஏன் என்று சந்தோஷ் பைக்கை ஓட்டிக்கொண்டு கேட்க நீ முதல்ல பைக்கை நிறுத்துடா சீக்கிரம் என்று அவனை அவசரப்படுத்த.

சரி சரி இருடி அவசரப்படுத்தாத என்று சாலையில் இருந்து மெதுவாக பைக்கை ஓரமாக கொண்டு வந்து நிறுத்தியவன் திரும்பி அவளை பார்க்க…

அவன் பைக் நிறுத்திய அடுத்த நொடி பைக்கில் இருந்து இறங்கி வேகமாக சாலையை கடந்து ஓடினாள் ராதா.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured