Home Uncategorizedஅவளுடன்(அகலியுடன்) ஒரு நாள்! தொடருமா? தீரனே! FLING 37

அவளுடன்(அகலியுடன்) ஒரு நாள்! தொடருமா? தீரனே! FLING 37

by Layas Tamil Novel
9 views

FLING 37

அகலிகா தீரனின் அலுவலகக் கேபினுக்குள் நுழைந்தபோது, அங்கிருந்த ஏர்கண்டிஷனர் குளிரையும் மீறி அவளது உடல் கோபத்தில் கொதித்துக்கொண்டிருந்தது. தீரன் தனது நாற்காலியில் மிகவும் அலட்சியமாக, கால்களை மேஜை மேல் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தான். ஒரு விலையுயர்ந்த சிகரெட்டைப் பற்றவைத்து, அதன் புகையை மெதுவாக மேலே ஊதிக் கொண்டிருந்தான்.

அகலிகா அவனைக் காணாதவள் போலத் தன் கையில் இருந்த கோப்புகளை மேஜை மீது படாரென்று வைத்தாள்.

“தீரன்! லண்டன் ப்ராஜெக்ட் முடிச்சதுக்கான சப்மிஷன் டாக்குமெண்ட்ஸ் , இந்த ப்ராஜெக்ட் ஏற்கனவே முடிஞ்சு நான் இந்தியா கிளம்பியும் வந்தாச்சு. அதுக்கு அப்புறமும் இது எதுக்கு இந்த டாக்குமெண்ட்ஸ் எல்லாம் கேக்குறீங்க?” என்றவள்   “இதோ நீங்க கேட்ட ஃபைல்ல சீக்கிரம் கையெழுத்துப் போடுங்க.  எனக்கு உங்க முகத்தைப் பார்க்கக்கூட இஷ்டம் இல்ல. ” என்றாள், அவளது குரல் கோபத்தில் நடுங்கிக் கொண்டிருந்தது.

தீரன் சிகரெட்டை ஒருமுறை ஆழமாக இழுத்துவிட்டு, புகையை அவள் முகத்திற்கு நேராக ஊதினான்.

அகலிகா முகத்தைச் சுளித்துக்கொண்டு பின்வாங்கினாள்.

“ஏன் அகலிகா? ஏன் இவ்வளவு அவசரம்? ஏன்… முகேஷ் வெளிய கார்ல உனக்காக வெய்ட் பண்ணிட்டு இருக்கானா? இல்ல, போன்ல ‘அஹி குட்டி… சீக்கிரம் வா’ன்னு மெசேஜ் அனுப்பிட்டே இருக்கானா?” – அவன் குரலில் இருந்த அந்த ஏளனம் அகலிகாவின் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது.

“தீரன்! பார்த்துப் பேசுங்க. முகேஷைப் பத்திப் பேச உங்களுக்கு எந்தத் தகுதியும் இல்லை. அவர் ஒரு நல்ல மனுஷன். உங்களைப் போல ஒரு சாக்கடை கிடையாது அவர்,” என்று அகலிகா கத்தினாள்.

தீரன் மெல்லத் தன் இருக்கையிலிருந்து எழுந்து, அவளை நெருங்கி வந்தான். அவனது கண்கள் சிவந்திருந்தன.

“நல்ல மனுஷனா? ஆமாம்… அவன் நிஜமாவே ரொம்ப நல்லவன் தான். ஆனா அந்த நல்லவனுக்குத் தெரியுமா? அவன் கடடிக்கப்போறப் பொண்ணு லண்டன்ல ஒருத்தன் கூட ‘பிளிங்’  வச்சுட்டு இருந்தான்னு? அவன் மடியில படுத்துட்டு இருந்தான்னு தெரியுமா? ‘தீரன்… ப்ளீஸ் என்னைத் தொடாதீங்க’ன்னு நீ சொன்னப்ப எல்லாம் நான் நிறுத்தாம உன்னைத் எடுத்துகிட்டேனே…  நான் உன்னை ஸ்பரிசிச்சதில் நீயாவே வந்து என்னை எடுத்துக்க சொல்லி கேட்டியே இதெல்லாம் அவன்கிட்ட சொல்ல மாட்டியா?” என்று அவள் கோபத்தை மேலும் அதிகரித்தான்.

அகலிகா கோபம் தாங்காமல் திறனை பார்த்தாள் . “ச்சீ! நீங்க எல்லாம் மனுஷன் இல்ல. என்னை உங்க ஆசைக்கு பாடிய வெச்சீங்க, என்னை பழசக் மெயில் பண்ணுணிங்க, அதை எல்லாம் தாண்டி எனக்கு வேற வழியே இல்லாம நான் உங்ககிட்டே சரண்டர் ஆனேன். ஆனா அதை எல்லாம் எவ்ளோ கேவலமா பேசுறீங்க” என்றவள் தீரனின் கன்னத்தில் ஓங்கி அறையப் போனாள்.

ஆனால், தீரன் மின்னல் வேகத்தில் அவளது மணிக்கட்டைப் பிடித்துத் திருகினான்.

“விடுங்க! என் கையை விடுங்க! நீங்க ஒரு மிருகம் தீரன்… ,” என்று அகலிகா வலி தாங்க முடியாமல் கத்தினாள்.

“மிருகம் தான்! ஆனா இதே மிருகத்தோட அணைப்புல தானே நீ லண்டன்ல மயங்கிக் கிடந்தே? அப்போ நான் மனுஷனாத் தெரிஞ்சேனா? இப்போ ஊருக்குத் திரும்பின உடனே, உனக்குக் கௌரவம், பத்தினித்தனம் எல்லாம் பொத்துக்கிட்டு வருதா? முகேஷ் பணக்காரன்… அவன்கிட்ட போய்ப் படுத்தா உன் குடும்பத்தோட கஷ்டம் தீரும்னு முடிவு பண்ணிட்டியா? எவ்வளவு டி விலை பேசினான் முகேஷ் உனக்கு?” என்று தன்னை அகலிகா முழுவதும் வெறுக்க வேண்டும் என்று தன் மனதை கல்லாக்கிக்கொண்டு வார்த்தைகளில் விஷம் தடவி அவள் மீது எறிந்தான்.

அகலிகாவின் கண்கள் இப்போது நெருப்பைக் கக்கின. “விலை பேசுறதுக்கு நான் ஒன்னும் நீங்க பப்புல  வச்சுருந்த அந்தப் பொண்ணு கிடையாது தீரன்! என் குடும்பக் கஷ்டத்துக்காக நான் முகேஷைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்… ஆமாம்! ஆனா அவர் உங்களை மாதிரி ஒரு பொம்பளைப் பொறுக்கி கிடையாது. அவர் ஒரு பெண்ணை எப்படிக் கௌரவிக்கணுன்னு தெரிஞ்சவர்.” என்றாள்.

தீரன் அவளது கையை இன்னும் பலமாகப் பிடித்துத் தன் பக்கம் இழுத்தான். அவர்களுக்கிடையே நூலிழை இடைவெளிதான் இருந்தது. “பெண்ணைக் கௌரவிக்கத் தெரியாதவன்கிட்ட எதுக்கு டி உன் வாழ்க்கையைத் தோத்துட்டு நிக்கிறே? நான் ஒரு பொறுக்கின்னு தெரிஞ்சும், எதுக்கு என் கண்ணைப் பார்த்து இவ்வளவு தைரியமாப் பேசுறே?”

“ஏன்னா… உங்களைப் பார்த்தா எனக்கு இப்போ பயம் வரல தீரன்… அருவருப்பு தான் வருது! உங்க கூட இருந்த அந்த ஒரு நிமிஷத்தை நினைச்சா, எனக்கு என்னையே செருப்பால அடிச்சுக்கணும் போல இருக்கு. நீங்க யாரையும் காதலிக்க மாட்டீங்க… உங்களுக்கு அன்புனா என்னன்னே தெரியாது. நீங்க ஒரு வெறும் உடல் சுகம் தேடுற அற்பப் பிறவி!”

அகலிகா மூச்சிரைக்கப் பேசினாள். தீரன் அவளை ஒரு கணம் வெறித்துப் பார்த்தான். அவனது இதயத்தின் ஏதோ ஒரு மூலையில் அவளது வார்த்தைகள் ரத்தக் காயத்தை ஏற்படுத்தின. ஆனால், அவன் அதை மறைத்துக்கொண்டு குரூரமாகச் சிரித்தான்.

“தீரன்! என் வாழ்க்கையை விடுங்க. உங்களை நம்பி ஒரு பொண்ணு இருக்கா… ரியா! அவ ஒரு சின்னக் குழந்தை மாதிரி உங்களை நம்பிட்டு இருக்கா. அவளுக்காவது உண்மையா இருக்க முடியுமா உங்களால? அடுத்தவன் வாழ்க்கையில மண்ணை அள்ளிப் போடத் துடிக்கிறீங்களே… முதல்ல ரியாவுக்கு நீங்க செய்யுற துரோகத்தை நினைச்சுப் பாருங்க. உங்களை மாதிரி ஒருத்தன் கூட வாழப்போற அந்தப் பொண்ணை நினைச்சா எனக்குப் பரிதாபமா இருக்கு,” என்றாள் அகலிகா.

தீரனின் பிடி தளர்ந்தது. அவன் கண்களில் ஒரு நொடி வலி மின்னி மறைந்தது.

“ரியா பத்திப் பேச உனக்கு என்ன தகுதி இருக்கு அகலிகா? நான் அவளைக் கல்யாணம் பண்ணிக்கிறது ஒரு பிசினஸ் டீல் . ஆனா உனக்கும் எனக்கும் நடுவுல இருந்தது… அது ஒரு சாக்கடை உறவு! அதோட இங்கிருந்து கிளம்பு. இனிமே என் முன்னாடி வந்து நிக்காதே. முகேஷ் காலடியில் போய் விழு… அவன்கிட்ட உன் பொய்யான அன்பைக் காட்டு. என்கிட்ட உன் நாடகம் செல்லாது!” என்று அவளைத் தள்ளிவிட்டான்.

அகலிகா தடுமாறி விழுந்தாள். மேஜையில் மோதி அவளது நெற்றியில் லேசான காயம் ஏற்பட்டது. ஆனால், அவள் அதை உணரவில்லை. அவளது மனக்காயம் அத்தனைப் பெரிதாக இருந்தது.

எழுந்து நின்று, தன் உடையைச் சரி செய்துகொண்டாள். “கண்டிப்பாப் போவேன் தீரன். முகேஷை நான் கல்யாணம் பண்ணிக்கிறது என் தனிப்பட்ட விஷயம். உங்களை மாதிரி ஒரு சாக்கடைக்காக நான் என் வாழ்க்கையை வீணாக்க மாட்டேன். முகேஷ் எனக்கு ஒரு புது வாழ்க்கையைத் தருவாரு… ஆனா நீங்க? ஒவ்வொரு நாளும் ஒரு புதுப் பொண்ணு கூடப் படுத்துட்டு, ஒரு நிம்மதி இல்லாத வாழ்க்கையைத் தான் வாழப்போறீங்க. உங்க சாபமே அதுதான் தீரன்!”

அகலிகா ஃபைல்களை எடுத்துக்கொண்டு, கதவை ஓங்கி அறைந்துவிட்டு வெளியேறினாள்.

அவள் சென்ற பிறகு, தீரன் தன் மேஜை மீது இருந்த மதுப் பாட்டிலை எடுத்துச் சுவரில் எறிந்தான். அது சுக்குநூறாக உடைந்து சிதறியது.

அவன் அப்படியே தரையில் அமர்ந்தான். அவனது கையில் இருந்த காயம் ரத்தம் சிந்தியது.

“மன்னிச்சிடு அகலிகா… மன்னிச்சிடு டி! நான் உன்னை ஒரு சாக்கடைன்னு சொன்னது… உன்னை நீயே அருவருப்பா நினைக்கணும்னு தான். நீ என் மேல வச்சுருக்கிற காதலைக் கொன்னுட்டா தான், உன்னால முகேஷ் கூட வாழ முடியும். எனக்காக நீ அழக் கூடாது டி… என்னை வெறுக்கணும். உன்னோட இந்த வெறுப்பு தான் எனக்குத் தேவை. ஆனா, ரியாவுக்கு நான் உண்மையா இருக்கணும்னு சொன்னியே… அங்க தான் நீ என்னைக் கொன்னுட்டே அகலிகா. எனக்கு உன் மேல இருக்குற காதலைச் சொல்லவும் முடியாம, ரியாவுக்குத் துரோகம் செய்யுறதைக் கேட்கவும் முடியாம… நான் ஒரு பிணமா வாழ்ந்துட்டு இருக்கேன் டி!”

தீரன் ஒரு அரக்கனைப் போலச் சிரித்தான். அந்தச் சிரிப்பிற்குப் பின்னால் அவன் இதயங்கள் சிதைந்து இருந்தது .

அகலிகா அலுவலகத்தை விட்டு வெளியே வந்து தன் கார் கதவைத் திறந்தாள். அவளது கண்கள் மங்கலாகத் தெரிந்தன. அவள் காரைச் ஸ்டார்ட் செய்ய திராணி இன்றி ஸ்டியரிங்கில்  தலை சாய்த்து விம்மி விம்மி அழுதாள்.

‘ஏன் தீரன்? ஏன் இப்படி மாறிட்டீங்க? லண்டன்ல நான் பார்த்த அந்த அன்பான கண்கள் எங்கே? இப்போ நான் பார்க்கிற இந்தக் குரூரமான கண்கள் யாருடையது? நீங்க ஒரு பிளேபாய்னு எனக்கே தெரியும்… ஆனா என் மனசை இவ்வளவு மோசமாக் காயப்படுத்துவீங்கனு நான் நினைக்கவே இல்லையே!’

இப்பொது அகலிகாவின் இதயம் தீரன் பேசியதை எல்லாம் ஒன்று விடாமல் அவளுக்கு கொண்டு வந்தது. தன்னை கேவலமாக பேசியவன் முன்பு தான் தலை நிமிர்ந்து வாழ வேண்டும். சமூகத்தில் ஒரு நல்ல அந்தஸ்தில் உயர வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு தோன்றியது.

முகேஷ் அவள் மீது காட்டிய அக்கரையும் அவன் தன உணர்வுகளுக்கு கொடுத்த மதிப்பையும் எண்ணினாள் 

அகலிகா ஸ்டியரிங்கில் இருந்து தலை நிமிர்ந்தபோது, அவளது கண்கள் சிவந்திருந்தாலும் அதில் ஒரு தெளிவு பிறந்தது. அவளது கண்ணீர் வழிந்த தடங்கள் காய்ந்திருந்தன.

“இல்ல… இனி அழமாட்டேன்! எனக்காக அழுத காலம் முடிஞ்சு போச்சு. தீரன்… நீ என்னை ஒரு சாக்கடைன்னு சொன்னேல? அதே சாக்கடையில இருந்து ஒரு தாமரையா மாறி வந்து உன் முன்னே நிக்கப் போறேன். நான் யாரு, என் அந்தஸ்து என்னன்னு உனக்குக் காட்றேன். உன் முன்னாடி நான் தன்மானத்தோட வாழ்ந்து காட்டுறது தான் உனக்கு நான் கொடுக்குற பதிலடியா இருக்கும்!” என்று நினைத்தவள் காரைக் கிளப்பினாள்.

அவளது பார்வையில் இப்போது ஒரு தீர்க்கம் இருந்தது. மேலிருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த தீரனின் இதழ்களில் ஒரு கசப்பான புன்னகை. “குட்… இதே வேகத்தோட ஒரு நல்ல முடிவா எடு அஹி, முகேஷுகிட்டே உனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம்னு சொல்லி அவனையே கல்யாணம் பண்ணிக்கோ அஹி. அப்போதான் நீ பாதுகாப்பா இருப்பே.” என்று அவள் வாழ்க்கை நன்றக இருக்க வேண்டுமென்று நினைத்தான்

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured