மன்மத மாறன் மல்லிகையின் நாயகன்
“மாயா! என்ன இது… வீட்ல எல்லாரும் இருக்காங்க!” என்று தன் மேல் வேண்டுமென்றே உடல் உரசி, காந்தமாய் ஒட்டி நின்றவளை விலக்க மனமில்லாமல் உதட்டளவில் மட்டும் தடுத்தான் அதர்வா. அவளது மெல்லிய இடையில் தன் கைகளைப் பதித்து, மேலும் தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டான்.
அவனுடைய இந்த கள்ளத்தனமான செய்கையை ரசித்தபடியே, அதர்வாவின் அகன்ற மார்பில் தன் முகம் புதைத்து கொஞ்சலாகப் பேசினாள் மாயா. “யாரு இருந்தா என்ன டார்லிங்? அதான் நம்ம விஷயம் எல்லாருக்கும் ஏற்கனவே தெரியுமே… அப்புறம் என்ன பயம்?”
“அதுவும் சரிதான்…” என்றவன், அவள் தந்த தீண்டலில் தன் நிதானம் இழக்கத் தொடங்கினான். அவளது கண்களில் தெரிந்த காதலைக் கண்டவன், மோகம் நிறைந்த குரலில், “இப்போ என் செல்லத்துக்கு என்ன வேணும்?” என்றான்.
“அதுவா… ஒரு கிஸ் வேணும். அதுவும் இப்போவே, இந்த நிமிஷமே!” – அதர்வாவின் மோக உணர்வுகளுக்கு தீனி போடும் விதமாக காற்றில் ரகசியம் பேசினாள் மாயா.
“கிஸ் மட்டும் போதுமா?…” என்று அவளது இதழ்களுக்குள் தன் இதழ்களைப் புதைக்க அதர்வா நெருங்கிய அந்த நொடி, அறைக்கதவு சற்றே திறந்தது.
அவர்கள் அறைக்கு காபி கொண்டு வந்த ரதி, உள்ளே அதர்வாவும் , மாயாவும் தங்களை மறந்து முத்தமிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். நெஞ்சில் இடி விழுந்தது போல் அதிர்ந்து நின்றாள். தன் கணவன் இன்னொரு பெண்ணுடன் இருக்கும் காட்சியைத் தடுக்கவும் முடியாமல், தட்டிக்கேட்கவும் தார்மீக உரிமை இல்லாமல் தவித்தாள். அந்த கொடுமையான காட்சியை மேலும் காண சகிக்காமல், சட்டெனத் திரும்பி நடந்தாள். அவளையும் அறியாமல் விழிகளில் இருந்து கண்ணீர் அருவியெனக் கொட்டியது.
அப்போது அவளுக்கு எதிரே புயலென வந்து நின்றான் மன்மத மாறன். ரதியின் கலங்கிய விழிகளையும், சிவந்த முகத்தையும் கூர்மையாகப் பார்த்தவன், “ரதி… என்ன ஆச்சு? ஏன் அழற?” என்றான் பதற்றமும் அதிகாரமும் கலந்த குரலில்.
சட்டென வழிந்த கண்ணீரைத் தன் புடவைத் தலைப்பால் அவசரமாக ஒற்றி எடுத்தவள், “ஒண்ணுமில்ல மாறன்…” என்று தழுதழுத்த குரலில் கூறிவிட்டு, விறுவிறுவென சமையலறைக்குள் செல்ல முற்பட்டாள்.
ஆனால், மாறன் அவளை விடத் தயாராக இல்லை. அவளுக்குப் பின்னால் சென்றவன், சட்டென்று அவளது மென்கரத்தைப் பற்றி தன் பக்கம் இழுத்தான்.
நிலைதடுமாறி அவனது மார்பில் சாய்ந்தவளை, பின்னிருந்து இறுக அணைத்துக் கொண்டான். அவளது கழுத்து வளைவில் தன் இதழ்களைப் பதித்து, வஞ்சகமில்லாமல் அவளது மேனியின் மாசற்ற வாசனையைத் தன் நாசியில் நிறைத்துக் கொண்டே பேசினான்.
“நீ சொல்லலையினா எனக்கு தெரியாதுன்னு நினைக்கிறயா ரதி..?” அவனது குரலில் காதலும் ஏதோ ஒரு மர்மமும் கலந்திருந்தது.
அவனுடைய இந்த திடீர் நெருக்கத்தை கண்டு மிரண்டு போன ரதி, அவனிடமிருந்து விலகப் போராடினாள். ஆனால் மாறனின் இரும்புப் பிடியை அவளால் தளர்த்த முடியவில்லை. “ப்ளீஸ் மாறன்… என்னை விடுங்க…” என்றாள் பயமும் பதற்றமும் தொண்டையை அடைக்க.
“ஏன் ரதி இப்படி விலகிப் போற? எனக்கு உன்கிட்ட உரிமை இருக்கு தானே? அப்புறம் ஏன் நான் உன் பக்கத்துல வந்தாலே பிடிக்காத மாதிரி விலகுற?” என்று அவளது காதோரம் சுடச்சுடக் கேட்டான் மாறன்.
“இல்ல… அப்படி இல்ல…” என்று அவசரமாக அவன் வார்த்தைகளை மறுத்தவள், “எ… எனக்கு கிச்சன்ல வேலை இருக்கு…” என்று தன் முழு பலத்தையும் திரட்டி அவன் கைகளைத் தட்டிவிட்டாள். பதற்றத்துடன் விறுவிறுவென சமையலறைக்குள் நுழைந்து கொண்டாள்.
அவள் பயந்து ஓடுவதையே ஒருவிதக் காதல் கலந்த புன்னகையோடு ரசித்துப் பார்த்தபடி நின்றிருந்தான் மதன்மாறன்.
சமையலறைக்குள் வந்த ரதி, மூச்சிரைக்க சுவற்றில் சாய்ந்தாள். நெஞ்சில் கரம் வைத்து விம்மி அழுதாள்.
“கடவுளே! என்னை ஏன் இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில கொண்டு வந்து நிறுத்தியிருக்க? அங்க என்னடான்னா… எனக்கு தாலி கட்டின புருஷன், இன்னொருத்தியை இந்த வீட்டுக்கே கூட்டிட்டு வந்து அவளைக் கொஞ்சிக்குலாவி முத்தம் கொடுக்குறான். அதை என்னால கேட்க முடியல…”
“ஆனா, என் புருஷனோட தம்பி… ம… மாறன், என்னை அவனோட பொண்டாட்டியா நினைச்சு என்கிட்டே இவ்வளவு அக்கறையா இருக்கான். உரிமை எடுத்துக்கிறான். என்கிட்டே நெருங்கி வர்றான். அவன் பண்றதைத் தடுக்கக் கூட முடியாத நிலையில நான் இருக்கேனே… நான் என்ன செய்வேன்?” என்று தன் விதியை நினைத்து நொந்து போனாள்.
ரதியின் இந்த பரிதாப நிலைக்குக் காரணம் என்ன?
தன் அண்ணன் உயிரோடு இருக்கும்போதே மாறன் ஏன் ரதியைத் தன் மனைவியாகக் கருதி நெருங்குகிறான்?
ரதி ஏன் மாறனை முழுமையாக எதிர்க்க முடியாமல் தவிக்கிறாள்?
ரதிக்கும் அவளது கணவன் அதர்வாவிற்கும் இடையே இருக்கும் அந்த கசப்பான உண்மை என்ன?
INDRU MAALAI EPISODE 1 VARUM, STORY PADICHITU MARAKAMA COMMENT PANNUNGA
நம்ம LAYAS TAMIL NOVELS வெப்சைட்டில் வந்திருக்க அனைத்து கதைகளையும் ஆடியோ வடிவில் கேட்க LAYAS TAMIL AUDIOBOOKS YOUTUBE சேனலில் கேட்கலாம் . சேனல் லிங்க்
