News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

தப்புத் தண்டா காதல் 6

by Layas Tamil Novel
2.2K views
A+A-
Reset

EPISODE 6

ஆராதனா வந்திருக்கிறாள் என்று மதிய சமையல் எல்லாம் தடபுடலாக நடந்திருந்தது. அப்போது தான் அலுவலகத்தில் இருந்து வந்த ராஜேந்திரன், கார்த்திகேயன் இருவருமே ஹாலில் அமர்ந்து பர்வதத்திடம் பேசிக்கொண்டிருந்த ஆராதனாவைப் பார்த்தனர்.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

“ஆரா! எப்போ டா வந்த.. ” என்று கேட்டபடி ராஜேந்திரன் அவளை நோக்கி செல்ல..

“மாமா! நான் வந்து ஜஸ்ட் FIFTEEN மினிட்ஸ் தான் ஆச்சு.. ” என்றவள் துள்ளிக்குதித்து அவர்களை நோக்கி ஓடினாள்.

“நல்லா வளர்ந்துட்டா இல்ல கார்த்திகேயா  “என்றபடி ஆராதனாவை அணைத்து அவள் கேசத்தை மென்மையாக வருடிக்கொடுத்தார்.

“ஆமா மச்சான் ” என்ற கார்த்திகேயன் “ஆரா உன் அப்பாவும் இங்க தான் இருக்கேன் , என்னை நியாபகம் இருக்கா?” என்று கிடலாகப் பேச..

“அப்பா.. கிண்டல் பண்ணாதீங்க.. ” என்றவள் அவரையும் அணைத்துக்கொண்டாள்.

“சரி சரி.. வாங்க சாப்பாடு ரெடியாகிருச்சு. எல்லாரும் ஒண்ணா உக்காந்து சாப்பிடலாம்” என்று மூவரையும் அழைத்தார் பர்வதம்.

“பர்வதம் யுகன் சாப்பிட்டானா?” என்றார் ராஜேந்திரன்.

“ம்ஹும்.. அவன் எங்க வெளிய வந்தான். காலையில அவன் பொண்டாட்டியை ரூமுக்குள்ள கூப்பிட்ட அப்போ பார்த்தேன். இன்னும் அவன் கீழ் வந்த பாடு இல்ல.. இது தான் சாக்குன்னு அந்த வேலைக்காரி மவ.. வீட்ல ஒரு வேலையும் செய்யாம அவன்கூடையே இருக்கா… ” என்று பூவிழியின் மீத்திருந்த ஆத்திரத்தை வார்த்தைகளால் காட்டினார்.

“பர்வதம் எத்தனை முறை சொல்லிருக்கேன். பூவிழி இப்போ இந்த வீட்டு மருமக.. நம்ம  யுகேனோட மனைவி . அவளை நீ இப்படியே சொல்லி கூப்டுட்டு இருக்குறது சரி இல்ல. அவளுக்கான மரியாதையை நீ கொடுத்து தான் ஆகனும் ” என்று சற்று கண்டிப்போடு கார்த்திகேயன் கூற..

“ம்கூம்.. இந்த மனுசனுக்கு நான் பேசினா மட்டும் பொறுக்காது. எப்போ பாரு என்னையே குத்தம் சொல்ல வேண்டியது.. ” என்று நினைத்தவர் “இங்க பாருங்க.. அவளை எனக்கு ஆரம்பத்துல இருந்து அப்படிக் கூப்பிட்டே பழகிருச்சு.. ” என்று சமாளித்தார்.

“காலையில் இருந்து கீழ வரலையா?” என்று புருவம் சுருக்கிய ராஜேந்திரன். பூவிழியும் கீழ வரலையின்னா என்ன அர்த்தம் ஏதோ சரி இல்லையே என்று அவர் மனதிற்குள் தோன்றவே.. “சரி நீ சாப்பாடு எடுத்து வை பர்வதம் , நான் யுகேனை வர சொல்றேன்” என்று தன் அறைக்கு சென்றார்.

“வாடி உனக்கு பிடிச்ச எல்லாமே சமைக்க சொல்லிருக்கேன் . வந்து சாப்பிடு.. ” என்றார் பர்வதம்.

“அம்மா இரு எல்லாரும் வரட்டும் , ஒன்னாவே உக்காந்து சாப்பிடலாம்” என்றாள்.

இங்கே தன் அறைக்குள் வந்த ராஜேந்திரன் இன்டெர்காமில் யுகேந்திரனின் போனுக்கு அழைத்தார்.

அவர் கூப்பிட்ட நேரம் தான் பூவிழியின் ஈரிதழ்களிலும் தன் ஆதிக்கத்தை நிலைநாட்டிவிட்டு அவள் அருகே மூச்சு வாங்க சரிந்து படுத்தான்.

இங்கே அவனிடம் இவ்வளவு நேரம் தன்னை மறந்து லயித்து அவனிடமே மொத்தமாக சரணடைந்து இருந்த பூவிழி போன் சத்தம் கேட்டு தான் நிகழ் உலகம் வந்திருந்தாள். அவளும் அவனைப் போலவே மூச்சு வாங்க படுத்திருந்தவள் துவண்டு போன தன் உடலை அருகே இருந்த போர்வை கொண்டு மெல்ல மூடிக்கொள்ள..

அவள் அருகே படுத்திருந்த யுகேந்திரன் சற்று நேரம் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு போனை அட்டென்ட் செய்து காதில் வைத்தான்.

“ஹலோ! யுகேன்!” என்று ராஜேந்திரன் அழைக்க.

“டேட்! சொல்லுங்க” என்று அவன் அருகே படுத்திருந்தவளை திரும்பிப் பார்த்தபடி பேசியவன் போனை ஸ்பீக்கரில் போட்டு மேஜையில் வைத்தவன் அவள் அருகே படுத்துக்கொண்டு அவள் வேக மூச்சுகள் வாங்குவதை ரசித்தபடி பூவிழியை இழுத்து தன் கை வளைவிற்குள் படுக்க வைத்தவன் அவள் தலைமுடியை வாஞ்சையாக வருடிவிட்டபடி பேசினான்.

“என்ன பண்ற யுகேன் நீயும், பூவிழியும் கீழையே வரலையின்னு உன் அத்தை சொன்னா.. உனக்கு எதுவும் உடம்பு முடியலையா? ” என்றார் .

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“நோ! டேட் , ஐயம் ஆல்ரைட் ” என்றவன் பூவிழியின் போர்வைக்குள் கையை நுழைத்து அவள் மேனியின் மென்மையையும் , அவளின் மென்மையையும் தன் கை கொண்டு வருடிக்கொண்டே பேசினான்.

அவன் விரல்கள் ஸ்பரிசித்து அடுத்த நொடி “ஹா! ” என்று சிறிய சத்தம் பூவிழி எழுப்ப..

“ஷ்!.. எதுக்கு டி சத்தம் போடுற.. டேட் இஸ் ஆன் தி லைன் ” என்று அவள் காதருகே கிசுகிசுத்தவன். அவள் காது மடலை தன் நா கொண்டு மென்மையாக வருடினான்.

அவளுக்கோ உணர்ச்சிகளை அடக்க முடியவில்லை. கை இரண்டை எடுத்து வாயில் வைத்து பொத்திக்கொண்டவள் அவனை இயலாமையோடு பார்க்க..

யுகேனோ.. அவளை கள்ளச்சிரிப்போடு பார்த்தவன் தன் வேளையில் மும்முரமானான்.

பூவிழியின் முனகல் சத்தம் ராஜேந்திரனுக்கு சந்தேகத்தை வரவழைத்தது. இருந்தும் அதை வெளிப்படுத்திக்கொள்ளாமல் “யுகேன் லைன்ல இருக்கியா?” என்றார்.

“ஹா! டேட் இருக்கேன் ” என்றான்.

“சாப்பிட வரலையாப்பா .. பூவிழியும் சாப்பிடணுமே.. இந்த நேரத்துல அவ நேரத்துக்கு சாப்பிடணும் இல்லையா” என்றார் அக்கறையோடு.

“ம்ஹும்.. டேட் , நான் கொஞ்சம் பிசியா இருக்கேன். பூவிழி தான் எனக்கு ஹெல்ப் பண்ணிட்டு இருக்கா.. நீங்க சாப்பிடுங்க.. நான் நைட் டின்னெர்க்கு ஜாயின் பண்ணிக்கிறேன்” என்றவன் அவள் மென்மையான வயிற்றை தடவி தன் குழந்தையை வருடிக்கொண்டே பேசினான்.

“கனடாவில் இருந்து நம்ம ஆரா வந்திருக்கா.. எல்லாரும் ஒண்ணா சாப்பிடலாம்னு வெய்ட் பண்ணிட்டு இருக்காங்க.. ” என்று அவனை கீழே வரவழைக்க அவர் முயற்சிக்க..

“டேட் , நம்ம ஆரா தானே.. நான் நைட் மீட் பண்ணிக்கிறேன். டோன்ட் டிஸ்டர்ப் அஸ் ” என்றான்.

“சரி டா.. உனக்கு வேலை இருந்தா நீ பாரு.. பூவிழியை வர சொல்லு.. உன் அத்தை மட்டும் தனியா வேலை செய்துட்டு இருக்கா.. ” என்றார். அவருக்கு பூவிழி இப்பொது கீழே வர வேண்டும். தன் மகனோடு இன்னமும் கீழே வராமல் அவள் என்ன அறையில் செய்து கொண்டிருக்கிறாள் என்று அவருக்கு தெரிந்தே ஆகவேண்டும் இப்பொது. அந்த எண்ணத்தில் அவர் சொல்ல..

“அத்தைகிட்டே நான் மோர்னிங்கே சொல்லிட்டேன் , இனி பூவிழியை டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுனு. அவங்க எங்க வேலை பாக்குறாங்க, அதுக்கு தான் இவ்ளோ செர்வெண்ட்ஸ் இருக்காங்களே நம்ம வீட்ல ” என்று சொன்னவன் “எங்களுக்கு லஞ்ச் ஒரு ஹால்ப் அன் ஹௌர் கழிச்சு மேல கொடுத்து விட சொல்லுங்க” என்று மேஜையில் இருந்த போனை எடுத்தான்.

அவன் தன்னிடம் இருந்து விலகியதும் போர்வையை மார்போடு சேர்த்துப் பிடித்திக்கொண்டு பூவிழி எழ முயல.. அவள் மார்பில் கையை வைத்து அவளை மீண்டும் படுக்கையில் தள்ளி படுக்க வைத்தவன் . “டேட் நான் வெக்குறேன் ” என்று போனை வைத்திருந்தான்.

“அதுக்கு இல்லப்பா …” என்று அவர் அடுத்து பேச வரும் முன் கால் கட்டானது. அவன் பிடிவதம் அவர் அறிந்ததே.. அம்மா இல்லாத ஒரே மகன், அதனாலேயே அவன் விருப்பத்திற்கும், பேச்சிற்கும் மறுபேச்சு இங்கு யாருக்கும் வராது.

“மாமாஆ! ஏன் போனை வெச்சீங்க, பர்வதம் அம்மா தனியா கஸ்டப்படுவாங்க, நான் போய் அவங்களுக்கு எதுவும் ஒத்தாசை செய்றேன்…” என்று அவள் எழ.

“ஹேய்! சும்மா படு.. நீ போய் தான் அங்க வேலை செய்யணும்னு எந்த அவசியமும் இல்ல. நீ அத்தைக்கு இவ்ளோ நாள் ஒத்தாசையா இருந்தது எல்லாம் போதும். இனி என்னக்கு மட்டும் தான் உன் ஒத்தாசை எல்லாம் இருக்கணும் புரிஞ்சுதா.. ” என்று அவள் முகத்தருகே குனிந்து தன் கம்பீரக் குரலில் அவளை அதட்டி படுக்க வைத்திருந்தான்.

அவளும் கைகளை குறுக்கி முகத்தை மறைத்துக்கொண்டே. அவன் கண்களாப் பார்த்து வேகமாக சரி என்று தலையை ஆட்டினாள்.

“சரி எனக்கு ரொம்ப டையர்டா இருக்கு.. ஹாட் வாட்டர்ல சேர்ந்து குளிக்கலாமா?” என்றான் அவள் விழிகளை ரசித்துக்கொண்டே.

“ஹையோ! நேத்து குளிக்கப் போன அப்போ ஆரம்பிச்சது.. இன்னும் அதுவே முடியல.. இதுல மறுபடியும் குளிக்கணுமா ” என்று நினைத்தவள் “மாசமா இருக்கேன்னு பாவம் பார்த்து உன்கிட்டே மென்மையா மடந்துக்கறேன்னு சொல்லிட்டே என்னை இந்தப் பாடு படுத்துறாரு… ” என்று தோன்றியது அவளுக்கு.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“ஓய்! அமுக்காஞ்சி.. என்ன டி யோசனை,. என்னை மறுபடியும் மனசுக்குள்ள திட்ட ஆரம்பிச்சுட்டியா?” என்று அவளை முறைத்தான் .

“ஹா! இல்ல மாமா.. அது வந்து.. நான் … ” என்று பயந்து அவனையே பார்த்தாள்.

“நீ இல்லேனு சொன்னா நான் விட்ருவேனா.. சொல்லு என்ன சொல்லி என்னை திட்டுன ” என்றான் தன் குரலை வேண்டுமென்றே உயர்த்தி அவளை பயமுறுத்துவது போல பேசினான்.

“ஹா! அது அது வந்து.. நேத்து குளிக்குறேன்னு போனது.. அப்போ இருந்து நீக்க என்னை விடாம இப்போ வரை.. ” என்று தயக்கத்தோடு தன் பார்வையை அவள் அடுத்து பேச முடியாமல் தாழ்த்திக்கொள்ள..

“ஆமா அதுக்கு என்ன இப்போ” என்றான்.

“இல்ல .. இல்ல.. வயித்துல பாப்பா இருக்கறதுனால நீங்க என்கிட்டே மென்மையா நடந்துக்கறேன்னு சொன்னிங்க.. ஆனா இதுவே எனக்கு தாங்க முடியல.. அப்போ பாப்பா இல்லேன்னா என்ன ஆகும்னு நினைச்சேன் ” என்று போர்வையை திருகிக்கொண்டே அவன் முகத்தைப் பார்க்காமல் சொன்னாள்.

அதை கேட்டு சத்தமாக சிரித்தவன் ‘பாப்பா இல்லேன்னா என்ன ஆகும்னு எனக்கும் தெரியல..” என்று சொல்லிவிட்டு அவள் இன்னொசென்ட் முகத்தையும், அவள் பேசியதையும் நினைத்து மீண்டும் சத்தமாக சிரிக்க ஆரம்பித்தான்.

பூவிழியும் எதுக்கு இப்படி சிரிக்குறான் இந்த அமுக்காஞ்சி , சொன்னா நானும் சிரிப்பேன் இல்ல.. என்று அவன் எதற்காக சிரிக்கிறான் என்று தெரியாமலேயே அவன் அருகே படுத்திருந்தாள்.

சிரித்துக்கொண்டே அவளை நெருங்கியவன் “நீ எனக்கு ப்ளாக் மேஜிக் பண்ணி வெச்சுட்டியா , நேத்திலிருந்து நீ என் பக்கத்துலயே இருக்கணும்னு தோணிகிட்டே இருக்கு எனக்கு ” என்றான்,

“பி..பிளாக் மாஜிக்னா ” என்றாள் புரியாமல்.

“ம்ம் இந்த மருந்து வெச்சு ஒரு ஆளை வசியம் பண்ணி வெப்பாங்கன்னு சொல்வாங்கள்ல அதான் பிளாக் மேஜிக்” என்றான் தன் வசியப் புன்னகையால்.

“ஹா! நான் அப்படி எல்லாம் எதுவும் பண்ணல.. எனக்கு அதெல்லாம் தெரியாது ” என்று அவள் அவசரமாக மறுக்க..

“அப்படியா! ” என்று அவள் இதழைப் பார்த்துக்கொண்டே அவள் முகத்தருகே குனிந்தவன். “இங்க பாரு எனக்கு இந்த பெட்டை விட்டு கீழ இறங்க மனசே வர மாட்டேங்குது.. உன்கிட்டே அப்படி என்ன இருக்குன்னு எனக்கும் தெரியல.. ஆனா நீ வேணும்னு கேட்டுகிட்டே இருக்கு.. ” என்று அவள் துடிக்கும் ஆரஞ்சு சுளையை மீண்டும்  உறிஞ்சிக் குடிக்க ஆரம்பித்தான் .

கதை படிச்சிட்டு ஒரு லைக், போன எபிசோட்க்கு கமெண்ட் வரல, இதெல்லாம் வந்தா தானே எனக்கும்தொடர்ந்து கதை எழுத ஆர்வமா இருக்கும். உங்க கமெண்ட் படிக்குற அப்போ சீக்கிரமா அடுத்த எபி எழுதணும்னு தோணும். அதனால உங்க ஆதரவை கமெண்ட்ல சொல்லணும் அப்போதானே அடுத்த எபிசொட் வரும்

You may also like

2 comments

Niranjana July 30, 2026 - 6:46 pm

Super……….❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

Reply
KEERTHU July 30, 2026 - 9:03 pm

Actually sis na daily comment pannura neenga Yenna na oru comment kuda varala nu solluringa unga story ka na waiting la irruka ❤️❤️❤️

Reply

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.