தப்பு 14
“சாப்பிடு.. ” என்றான் யுகேந்திரன் .
“இல்ல நீங்க.. ” என்றாள் இப்போதும் அவன் சாப்பிட்டானா? இல்லையா? என்று தெரியாமல் தான் மட்டும் எப்படி அவனை விட்டு சாப்பிடுவது என்று நினைத்துக் கேட்டாள்.
“உன்ன சாப்பிட சொன்னேன்” என்றான் அதிகாரமாக.
சட்டென அதிர்ந்தவள் வேகமாக தட்டில் இருந்த உணவை பிட்டு சாப்பிடத் துவங்கினாள்.
முதலில் அவன் அதட்டலில் சாப்பிட ஆரம்பித்தவள் பின் பசியில் அவளாகவே அனைத்தையும் சாப்பிட்டு முடித்து இருந்தாள். அவள் சாப்பிட்டு முடியும் வரை அமைதியாக இருந்தவன் . அவள் அருகே வீல் சேரை நகர்த்தி வந்தவன் அவள் கையில் இருந்த தட்டை வாங்கி அருகே வைத்தவன் அவளையே பார்த்தப்படி கையைக் கட்டிக்கொண்டு அமர்ந்து இருந்தான்.
பூவிழி கைகளைப் பிசைந்து கொண்டு அவனையே பார்த்துக்கொண்டு அமர்ந்து இருந்தாள் .
“ஏண்டி சாப்பிடல.. ” என்றான் அதட்டலாக.
“இல்ல அப்போ பசி இல்ல.. அதான் சாப்பிடல.. ” என்று தலையைக் கவிழ்ந்தபடி பதில் சொன்னாள்.
“இங்க பாரு நீ தனி ஆள் இல்ல. உள்ள என் குட்டி இருக்கா இல்ல, அவளுக்கு பசிக்கும்னு உனக்கு தோணலையா? யார் என்ன சொன்னாலும் எப்படிப் பட்ட சூழ்நிலையா இருந்தாலும் உன்னைப் பத்தியும் , உனக்காக இருக்கவங்களைப் பத்தியும் மட்டும் நீ யோசிச்சா போதும். யார் என்ன சொன்னாலும் இதை எப்பவும் நியாபகம் வெச்சுகோ” என்று கனிவாகவும், அதே சமயம் கண்டிப்போடும் சொன்னான்.
அவள் அப்பாவி முகத்தைப் பார்க்கும்போது அவனால் பூவிழியை அதட்டவும் முடியவில்லை.
“ம்ம்.. ” என்று தலையை மட்டும் ஆட்டினாள்.
“சரி படு.. “என்றான்.
“ஹா!” என்று பூவிழி அவனை அதிர்ந்து பார்க்க..
அவள் பார்வையில் இருந்த அதிர்ச்சியைப் பார்த்ததும் அவனையும் அறியாமல் சிரித்துக்கொண்டவன் “அமுக்காஞ்சி.. உன்னை படுத்துத் தூங்க சொன்னேன் டி.. எப்பவும் அதே நினைப்பா உனக்கு.. ” என்றான்.
“ம்ம்.. எனக்கா அதே நினைப்பு . இவர் தான் எல்லா நேரமும் அதைப் பத்தியே நினைச்சிட்டு இருக்கார். நினைச்சிட்டு மட்டுமா இருக்கார். நினைக்கும்போது எல்லாம் என்னை சும்மாவா விடுறார் ” என்று உள்ளுக்குள் யுகேனை திட்டிக்கொண்டே மெல்ல படுத்துக் கொண்டாள்.
“என்ன டி அமுக்காஞ்சி யோசிச்சிட்டு இருக்க?” என்று அவள் முகத்தை வைத்தே கண்டு கொண்டான்.
“ஹா! ஒ.. ஒன்னுமில்லையே.. ” என்று தலையாட்டினாள்.
“அப்போ ஏதோ இருக்கு.. ஒழுங்கா சொல்லு.. ” என்று வழக்கமாக அவளை பொய்யாக அதட்ட..
அவளோ அதற்கு பயந்து போனவள் “எனக்கு அந்த நினைப்பு எல்லாம் இல்ல.. நீங்க தான் எப்பவும் அந்த நினைப்போடையே இருக்கீங்கன்னு நினைச்சேன் ” என்று தன் விரலால் சேலையை சுழற்றியடி சொன்னாள்.
“அப்போ உனக்கு இதெல்லாம் தோணுறதே இல்ல அப்படி தானே.. ” என்றான்.
அவளும் அவனைப் பார்க்காமல் “ம்ம்.. ” என்றாள்.
“அப்போ நான் மட்டும் தான் உன்னை எல்லாமும் பண்றேன் ” என்றான்.
அதற்கும் “ம்ம்.. “என்றாள்.
” அப்போ நான் உன்னை என்ன நினைக்குறேனோ அப்படிப் பண்றேன். நீ அமைதியா எதுவும் பண்ணாம அப்படியே படுத்திரு.. ” என்று வீல் சேரை கட்டிலுக்கு அருகே நகரத்தி கட்டிலில் ஏறியவன் அவனையே அதிர்ச்சியோடு பார்த்துக்கொண்டிருந்தவளை இழுத்து அவள் இதழில் தன் இதழ் பதித்து இருந்தான்.
பூவிழி முதலில் அதிர்ந்தாள் .. பின் கண்கள் மூடி அவனையும் அறியாமல் அவன் முத்தத்தை ரசித்தாள்.. பின் தன்னையும் மறந்து அவன் முத்தத்திற்கு பதில் முத்தமும் வழங்கத்துவங்கி இருக்க..
இப்பொது யுகேனின் இதழ்கள் அவளை முத்தமிடுவதை நிறுத்தி இருக்க.. பூவிழியோ.. இன்னமும் அவன் நெருக்கத்தை ரசித்தவன் அவன் இதழில் தன் இதழ் கொண்டு முத்தமிட்டுக்கொண்டு இருந்தாள்.
அவள் முத்தத்தை அனுபவித்தவன் அவளை தன்னிடம் இருந்து விலக்கி .. “செம்மையா முத்தம் கொடுக்குற அமுக்காஞ்சி நீ.. ” என்றான்.
அப்போது தான் அவனுக்கு தான் மட்டுமே இவ்வளவு நேரம் முத்தம் கொடுத்தோம் என்று தெரியவும் வெட்கத்தில் அவன் மார்பிலேயே முகத்தை புதைத்துக் கொள்ள..
சிரித்தபடியே அவள் தலையை வருடிக்கொடுத்தவன் ” என் அப்பா மிரட்டினார். ஆட்டுக்குட்டி மிரட்டுச்சுன்னு சொல்லிட்டு இனி நீ யாருக்கும் பயப்படக் கூடாது. உனக்கு நான் இருக்கேன். நான் உன்னை பாத்துப்பேன் ” என்று சற்று முன் அவள் சோக முகத்தின் காரணத்தை சரியாக கணித்துக் கூறி இருந்தான்.
அவன் தன் மனதை ஆழமாகப் படித்தவன் போல பேசவும் அவன் மார்பில் முகம் புதைத்திருந்தவள் விழிகள் ஈரம் ஆக .. அது அவன் சட்டையை நனைத்து இருந்தது.
“சரி.. அழாத..” என்று அவளை சமாதானப்படுத்தியவன் தன் மார்போடு சேர்த்து அணைத்தபடி பூவிழியை சிறுபிள்ளை போல உறங்க வைத்தான்
ஒரு மணியைக் கடந்து இருக்கும். பூவிழி உறக்கம் களைந்து மெல்ல கண் விழித்திருக்க அவளைக் கட்டிக்கொண்டு அவளையே பார்த்தபடி படுத்திருந்தான் யுகேந்திரன்.
முதலில் அதிர்ந்தாலும் பின் சுதாரித்துக் கொண்டவள் “என்ன? என்ன அப்படிப் பாக்குறீங்க?” என்று மெல்ல எழுந்து அமர்ந்தாள்.
அவள் வயிற்றில் மென்மையாக கையை போட்டு அவள் பக்கம் நெருங்கிப் படுத்தவன் “என்ன டி பண்ணி வெச்சிருக்க நீ.. ” என்றான்.
அவளோ ஒன்றும் புரியாமல் “என்ன பண்ணினேன்?” என்றாள் கேள்வியாக.
“இப்படி என்னை மயக்கி வெச்சிருக்க டி நீ.. ” என்று அவள் சேலையை விலகி மேடிட்ட அவள் வயிற்றில் மென்மையாக முத்தம் வைத்தவன் நிமிர்ந்து அப்படியே அவளைப் பார்த்தான்.
அவன் முத்தம் தந்ததில் மீசை முடி உரசி குறுகுறுக்க.. அவனை ஒருவித கூச்சத்தோடு பார்த்தவள் ” நான் அப்படி எதுவும் பண்ணலையே.. ” என்றாள் வெட்கச் சிரிப்போடு வேறு எங்கோ பார்த்தபடி.
“அதை என்னை பார்த்து சொல்லு பார்க்கலாம்” என்று அவள் மணிவயிற்றை தடவியவன் மேலே செல்லப்போக…
சரியாக அந்த நேரம் அவன் கை வைத்திருந்த இடத்தில் பூவிழி வயிற்றுக்குள் இருந்து அவன் குழந்தை அசைய அப்படியே உறைந்து நின்றான் யுகேந்திரன். அவன் சிசுவின் அசைவை முதல் முறை உணர்கிறான் அல்லவா.. அந்த அதிர்ச்சி அவனுக்கு.
சட்டெனக் குனிந்து அவள் வயிற்றைப் பார்த்தான் . இப்பொது எந்த அசைவும் இல்லை குழந்தையிடம். “இப்போ அசைஞ்சான் இல்ல.. ” என்றான் பூவிலியிடம்,
“ம்ம்.. ஆமா.. ” என்றாள் அவள்.
“அப்பறோம் மறுபடி ஏன் அசைய மாட்டேங்குறான்” என்றான்.
“அது.. அது வந்து ” என்று அவள் விழிக்க..
அவள் வயிற்றருகே தன் முகத்தை கொண்டு சென்றவன் “குட்டி கண்ணா! இப்போ அப்பாவுக்கு அசைஞ்சு காட்டுங்க பாக்கலாம் ” என்று அவன் குழந்தையிடம் கொஞ்சிப்பேச..
பூவிழியோ அவன் இப்படி குழந்தையிடம் பேசுவதை அதிசயமென பார்த்தாள். யுகேந்திரன் பேசுவான் தான் , ஆனால் இவ்வளவு இலகுவாக பேசுவது தான் அவளுக்கு ஆச்சர்யமே.
“என்ன டி இவன் அசைய மாட்டேங்குறான் ” என்று ஏமாற்றத்தோடு நிமிர்ந்து அவளைப் பார்க்க..
அவளோ யுகேந்திரனையே ரசித்தபடி அமர்ந்து இருந்தாலே ஒழிய.. அவன் பேசியதை கவனிக்கவில்லை.
அதை கண்டுகொண்டவன் “என்னை சைட் அடிக்கிறியா?” என்றான்,
“ம்ஹும்.. இல்ல.. ” என்று பூவிழி வேகமாக தலையை இடவலமாக ஆட்ட..
“பொய் சொல்லாத.. ” என்றவன் “இப்போ என்னையே தான் நீ பாத்துட்டு இருந்த.. ” என்று அவள் இதழை நோக்கி மேலேற ..
அவள் வயிற்றில் இருந்த குட்டி செல்லம் யுகேந்திரன் அவளை நெருங்கும் நேரம் சரியாக மீண்டும் அசைந்தான். அவள் வயிற்றில் கையை வைத்திருந்தவன் இதை உணர. .
“ஹே! இப்போ மறுபடியும் அசையுறான் பாரு.. ” என்று குனிந்து அவள் வயிற்றைப் பார்த்தான்.
அவளோ “ஆமா மாமா, நீங்க என்கிட்டே வரும்போது எல்லாம் அவன் இப்படி தான் பண்ணுவான் ” என்றாள் மென்மையாக.
“அப்போ நான் உன் பக்கத்துல வரது இவனுக்கு சுத்தமா பிடிக்கல… அப்படி தானே..
” என்றான்.
“ஐயோ! அப்படி எல்லாம் இல்ல மாமா.” என்றாள் அவசரமாக.
அவளை முறைத்தவன் “இப்போவே உன் புள்ளைக்கு சப்போர்ட் பண்றியா நீ..” என்றவன் “எங்கே இப்போ நான் உனக்கு முத்தம் கொடுக்குறேன். அவன் என்ன பண்ரான்னு பாக்கலாம்” என்று பூவிழியின் வயிற்றில் ஒரு கையை வைத்துக்கொண்டே மற்றொரு கையை ஊன்று மேல் எழுந்து அமர்ந்தவன் அவள் இதழை நோக்கி முத்தமிடக் குனிய..
இந்த முறை குழந்தையின் அசைவு வேகமாக இருந்தது. சட்டென அவளை விட்டு விளங்கியவன் விழி விரித்து அவள் வயிற்றைப் பார்க்க..
குழந்தை இப்போது மிகவும் வேகமாக இங்கும் அங்கும் அவள் வயிற்றில் உருள்வதை நன்றாக அவனால் பார்க்க முடிந்தது.
வயிற்றில் அசையும் குழந்தையை புருவம் சுருக்கிப் பார்த்தவன் “அப்போ எனக்கு வில்லன் என் அப்பனோட சேர்த்து நீயும் தான்” என்று நினைத்தவன் அவள் வயிற்றில் அசையும் தன் குழந்தையைப் பார்த்துக்கொண்டே பூவிழியை நெருங்க அவன் அசைவு முன்பை விட அதிகமானது.
அவனை முறைத்துக்கொண்டு.. முதல்ல என் பொண்டாட்டி டா அவ.. அதுக்கு அப்பறோம் தான் உனக்கு.. என்று நினைத்தபடி பூவிழியை இழுத்து அணைத்தவன் அவள் இதழில் தன் இதழ் பதித்து இருந்தான்.
தனக்கு போட்டியாக தன் வாரிசு வருவதை கூட யுகேந்திரனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. குழந்தையும் வயிற்றில் உருண்டு புரண்டு கொண்டிருந்தவன் சற்று நேரத்தில் அமைதியுமாகிவிட்டது.
அதை உணர்ந்த யுகேந்திரனின் இதழ்களுக்குள் ஒரு சிறிய புன்னகை எட்டிப் பார்த்தது. குழந்தைக்கும், கணவனுக்கும் இடையில் நாடாகும் விசயம் தெரியாமல் தன்னவன் தந்த முத்தத்தில் மூழ்கி தன்னை அவனிடம் தொலைக்க தயார் ஆகிக்கொண்டிருந்தாள் பெண்ணவள்.
கதை படிச்சீங்களா ஸ்டோரி எப்படிப் போகுது உங்க கருத்துக்களை சொன்னா தானே நான் கதை போக்கு எப்படி இருக்குன்னு புரிஞ்சுக்குவேன். மறுபடியும் எழுத உத்வேகமாக இருக்கும்
