தப்பு 19
என்ன டி சாருக்கு டிரீட்மென்ட் பாக்க தான் போனீங்களா? இல்ல புருசனும், பொண்டாட்டியும் பிளான் பண்ணி ஹனிமூன் எதுவும் போனீங்களா என்று பூவிழியை கிண்டல் செய்தார் கஸ்தூரி.
அக்கா என்ன பேசுறீங்க அதெல்லாம் எதுவுமில்லை.. என்று வெட்கம் கொண்டாள் பூவிழி.
எதுவுமில்லையா? அடியே என்கிட்டேயேவா.. நானும் கல்யாணம் பண்ணி புள்ளை பெத்தவ தான் டி.. இங்க இருந்து போகும்போது இருந்த பூவிழிக்கும், கேரளா போய்ட்டு பத்து நாள் கழிச்சி வந்த பூவிழிக்கும் வித்யாசம் தெரியாமலையா போயிரும் எனக்கு என்றார்.
வித்யாசமா?!.. எ.. என்ன வித்யாசம் நீங்களே சொல்லுங்க எனக்கு அப்படி எதுவும் தெரியலையே.. என்று வெட்கப்பட்டாள்.
ம்ம்.. என்னனு சொல்லட்டா என்றவர். உன் முகத்துல ஒரு சந்தோசம்.. பூரிப்பு.. இருக்கு. முதல்ல இருந்ததைவிட உன் முகம் பளிச்சுனு ஆகிருக்கு. ஒரு தெளிவு இருக்கு ஆளே ஜொலிக்குற டி நீ.. என்று பூவிழி கன்னத்தைக் கிள்ளினார் கஸ்தூரி.
ஷ்.. அஹ்.. அக்கா.. வலிக்குது. என்று சிணுங்கினால் பூவிழி.
நான் லேசா கிள்ளுனதுக்கே இப்படி சிணுங்குற.. உன் புருஷன் சும்மாவா இருந்திருப்பாரு எல்லாம் தானே பண்ணிருப்பாரு. அப்பவும் இப்படித்தான் சிணுங்கிகிட்டே இருப்பியா என்று நக்கலடித்தார்.
நீங்க சும்மாவே இருக்க மாட்டிங்களா.. இங்க இருந்தா என்னை ஏதாவது சொல்லி கிண்டல் பண்ணிட்டு இருப்பிங்க நான் தூங்கப் போறேன் என்றவள் யுகேந்திரனுக்குக் கொடுக்க காய்ச்சிய பாலை ஊற்றிக்கொண்டு மேலே சென்றாள்.
பூவிழியின் சந்தோசத்தையும், வெட்கத்தையும் கண்டு கஸ்தூரிக்கு நிம்மதியாக இருந்தது. அவள் சந்தோசமாக இருப்பதை எண்ணி ஒரு திருப்தி உண்டானது.
இங்கே வெட்கமும், சிரிப்புமாக அறைக்குள் வந்த பூவிழி கதவை சாற்றிவிட்டு உள்ளே வந்தாள்.
அவள் வருவது தெரிந்தும் சட்டை செய்யாமல் யுகேந்திரன் கட்டிலில் அமர்ந்து இருந்தான்.
அறைக்குள் நுழைந்த பூவிழி, கையில் இருந்த பாலை யுகேந்திரனிடம் நீட்டி
“மாமா… பால்…” என்று மெல்லிய குரலில் அழைத்தாள்.
கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்த யுகேந்திரன் அவளைத் தீர்க்கமாக பார்த்துவிட்டு,அவள் கையில் இருந்த டம்ளரை வெடுக்கென வாங்கி, அருகிலிருந்த டேபிளில் கோபமாக வைத்தவன், மீண்டும் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
அவனுடைய கோபம் கண்டு புரியாமல் பார்த்தவள் “என்ன ஆச்சு இவருக்கு என்னைப் பாக்கவே இல்ல..’ என்று யோசனையாக அவன் அருகே மெதுவாக சென்று நின்றாள்,
யுகேந்திரன் இப்போதும் அவளைப் பார்க்காமல் அமர்ந்து இருக்க..
“மாமா… ஏன் இப்படி உர்ருனு இருக்கீங்க? என்ன பாக்க மாட்டேங்குறீங்க. என்ன ஆச்சு? பேசக்கூட மாட்டேங்குறீங்க..“ என்று கேட்டாள்.
“பேசணுமா? என்னடி பேசணும் நான்?” என்று சீறியவன், அவளைத் தன் புறம் இழுத்து நிறுத்தினான். “உன்னை என் பக்கத்துல வந்து உக்கார சொன்னா நீ என்ன பண்ணின..” என்றான்.
பூவிழியோ அவனையே பார்க்க..
“நான் உக்கார சொல்ற அப்போ என் பேச்சை கேக்கணும்னு உனக்குத் தோணல, ஆனா எங்க அப்பா மிரட்டுன அடுத்த செகண்ட் பயந்து உக்காருற… உனக்கு அவர் மேல இருக்குற பயம், என் மேல இருக்குற உரிமையை விட பெருசா போச்சா? சொல்லுடி, நான் யாரு உனக்கு?” என்றவனது குரலில் கோபத்தை விட, தன் மனைவி தன்னிடம் உரிமையாக நடந்துகொள்ளவில்லையே என்ற ஏமாற்றமே அதிகம் இருந்தது.
“அப்படி இல்லை மாமா… அவங்க பெரியவங்க… அதான் அந்தப் பயத்துல…” என்று திக்கியவள் அவனை பார்க்க..
அவனோ அவளை இன்னமும் முறைத்துக் கொண்டு தான் இருந்தான்.
அவன் முகத்தை தன் கைகளால் ஏந்தியவள் “ப்ளீஸ் மாமா… கோபப்படாதீங்க. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு…” என்று அவன் கன்னத்தை மென்மையாகத் தடவினாள்.
அவள் விரல்களின் ஸ்பரிசத்தில் யுகேனின் கோபம் கொஞ்சம் தளர்ந்தாலும், தன் முரட்டுத்தனத்தை அவன் விடவில்லை. அவள் கையைத் தட்டிவிட்டான்.
அவன் பிடிவாதமாக இருப்பதைக் கண்ட பூவிழி, “என்னவாம் இவருக்கு இப்போ.. நான் யாருக்குனு பார்ப்பேன். இவர் பக்கத்துல உக்கரலையின்னா இவர் கோச்சுப்பார். அங்க இவர் அப்பா என் புருஷன் பக்கத்துல போனாலே என்னை முறைக்குறார். என்னை புரிஞ்சுக்க ஆளே இல்ல இங்க ” என்று மனதிற்குள் புலம்பியவள். யுகேனின் இந்த கோபம் கூட நியாயமானது தான் , அவன் காதலுக்கு முன் இந்த கோபம் எல்லாம் ஒன்றுமில்லை என்று அவளுக்கும் புரிந்தது. அவனிடம் தாமாக நெருங்க எப்போதும் ஒரு தயக்கம் பூவிலியிடம் இருக்கும் , அந்தத் தயக்கத்தை விட்டொழித்தாள். மெதுவாகக் கட்டிலில் ஏறியவள், நேரடியாக அவனது மடியில் சென்று அமர்ந்தாள்.
அவளது இந்தச் செய்கையை யுகேன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. கர்ப்பமாக இருக்கும் தன் மனைவி, தன்னிடம் கெஞ்சுவதற்காகத் தன் மடியிலேயே வந்து அமர்ந்ததை உள்ளுக்குள் ரசித்தாலும், முகத்தை இறுக்கமாகவே வைத்திருந்தான்.
தன் இரண்டு கைகளாலும் அவனது கழுத்தைச் சுற்றிக் கட்டிக்கொண்ட பூவிழி, அவனது நெஞ்சில் முகத்தைப் புதைத்துக்கொண்டு, “மாமா… தப்புதான், மன்னிச்சிடுங்க மாமா. நீங்க பேசாம இருந்தா என்னால தாங்க முடியல…” என்று கொஞ்சினாள்.
அவள் கொஞ்சல் அவனுக்குப் பிடித்து இருந்தது. அவன் இதழில் லேசாக புன்னகை மலர.. அதை அவள் கவனிப்பதற்குள் மீண்டும் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டவன் “அப்படியெல்லாம் லேஸ்ல என் மேல இருக்குற கோபம் போகாது,” என்று இறுகிய குரலில் சொன்னான் யுகேந்திரன்.
“இப்போ நான் என்ன பண்ணினா நீங்க என்கிட்ட பேசுவீங்க? உங்க கோபம் குறையனும் எனக்கும், நீங்க என்ன சொன்னாலும் நான் செய்றேன் மாமா…” என்று நிமிர்ந்து அவன் விழிகளைப் பார்த்துக் கேட்டாள்.
அவள் தாமாகவே வந்து வலையில் விழுவதைப் பார்த்த யுகேந்திரனின் உதட்டில் ஒரு மெல்லிய குறுநகை எட்டிப்பார்த்தது. அவளது காதருகே குனிந்தவன், தன் குரலைத் தாழ்த்தி, ஒருவித அதிகாரத்துடன் கிசுகிசுத்தான்.
“நான் என்ன சொன்னாலும் செய்வியா? அப்போ இன்னைக்கு நைட் நான் சொல்றத மட்டும் தான் நீ செய்யணும்… என் இஷ்டத்துக்கு நீ முழுசா சம்மதிக்கணும். ஒத்துக்கிட்டா தான் நான் சமாதானம் ஆவேன்.”என்றான்
அவன் என்ன கேட்கிறான் என்பதைப் புரிந்துகொண்ட பூவிழிக்கு தூக்கிவாரிப்போட்டது. முகம் செக்கச்செவேலென சிவக்க, “மா… மாமா… அதெல்லாம்… அதெல்லாம் முடியாது போங்க …” என்று வெட்கத்திலும் அதிர்ச்சியிலும் திக்கித் திணறி பதில் சொன்னாள்.
“முடியாதா? சரி, அப்போ நீ கீழ இறங்கு. எனக்கு உன் மேல இருக்குற கோபம் எப்பவும் குறையாது,” என்று அவளைத் தன் மடியிலிருந்து இறக்கிவிட முயன்றான்.
அவன் விலகிப் போவதை விரும்பாதவள், அவனை இன்னும் இறுக்கமாகக் கட்டிக்கொண்டு, “இல்ல… இல்ல… நான்… நான் சம்மதிக்கிறேன்…” என்று மெல்லிய குரலில் முனகினாள்.
அவள் சம்மதம் சொன்ன மறுநொடி, யுகேந்திரனின் கோபம் முழுவதும் குறைந்து ஆழமான காதலாக மாறியது. அவள் முகத்தைத் தன் பெரிய கைகளில் ஏந்தியவன், அவள் கண்களை நேருக்கு நேர் பார்த்தான். அந்தப் பார்வையின் தீவிரத்தில் பூவிழிக்கு மூச்சு முட்டியது.
அவன் பார்வையில் இருந்த மோகத்தின் உணர்வுகளைத் தாங்க முடியாமல் தலையை த் தாழ்த்திக்கொண்டாள்.
அவள் மோவாயைப் பற்றி மேலே நிமிர்த்தியவன் “நீ யாருக்காகவும் எதுக்காகவும் பயடனும்னு எந்த அவசியமும் இல்ல, உனக்குன்னு ஒரு மனசு இருக்கு அந்த மனசு என்ன சொல்லுதோ அதை கேட்டு அதுப்படி நடந்துக்க.. உன் விருப்பத்துக்கு மாறா யார் என்ன சொன்னாலும், அது நானாவே இருந்தாலும் நீ என்ன நினைக்குரியோ அதை பயமில்லாம தெளிவா சொல்லு. அப்படியும் அவங்க புரிஞ்சுக்கலையினா அவங்களுக்காக நீ எப்பவும் இறங்கிப்போகணும்னு எந்த அவசியமும் இல்ல சரியா” என்று உரிமையாக சொன்னவன், அவள் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான்.
கண்களை மூடி அந்த முத்தத்தில் இருந்த காதலை அனுபவித்தவள் விழிகள் பட்டென அதிர்ச்சியின் அகல விரிந்தது. காரணம் யுகேனின் கைகள் அவளது மெல்லிய இடையை முகத்தோடு தடவியது. அவள் கர்ப்பமாக இருப்பதை அவனது ஸ்பரிசம் மிகவும் கவனமாக உணர்ந்து செயல்பட்டது.
அவள் அதிர்ந்த விழிகளை பார்த்து சிரித்தவன் அவள் முகத்தைக் கையிலேந்தி முகமெங்கும் முத்தங்களை பதித்தான். லேசாக வளர்ந்திருந்த தாடி அவளது மென்மையான கன்னங்களில் உரசியபோது, பூவிழி சிலிர்த்துப் போனாள். “மாமா…” என்று அவள் கண்களை மூடி சிணுங்க,
சிணுங்கிய அவள் இதழ்களை அவன் இதழ்கள் சிறைபிடித்தன.
அந்த முத்தத்தில் அவனது கோபம், ஏக்கம், உரிமை என அத்தனையும் கலந்து வெளிப்பட்டது. அவனது பிடியின் அழுத்தத்தில் இருந்த பாதுகாப்பும், தீண்டலில் இருந்த காதலும் பூவிழியிடம் இருந்த கடைசி தயக்கத்தையும் உடைத்தெறிந்தது.
இதுவரை மோகத்தின் பிடியில் இருக்கும்போது அவளையும் அறியாமல் மட்டுமே தழுவிய அவள் கைகள் இன்று தானாகவே சென்று அவனது தலைமுடியைக் கோதியது. அவளது அந்த ஸ்பரிசம் ஆணவனின் ஹார்மோன்களை மேலும் தூண்டி விட்டிருக்க..
அவள் இதழில் இருந்து தன் இதழை விளங்கியவன் சட்டென முகத்தை உரென்று மாற்றிக்கொண்டான்.
உடலில் ஏற்பட்ட ரசாயன மாற்றத்தால் தன் நிலை அறியாமல் அவனை அனைத்திருந்தவள் திடீர் என்று முத்தம் தடை படவும் அவனைப் பார்க்க..
அவன் முகம் இறுக்கமாக இருப்பது கண்டு குழம்பிப்போனாள். ஒண்டரம் புரியவில்லை பூவிழிக்கு. “மறுபடியும் கோச்சுட்டாரா? நான் எதுவும் தப்புப் பண்ணிட்டேனா?” என்று யோசனையில் “மாமா.. என்ன ஆச்சு ? திரும்பவும் கோவிச்சுட்டீங்களா?” என்றாள்.
“கோபம் எல்லாம் குறைஞ்சிருச்சு.. ஆனா.. ” என்று அவளை ஒரு மார்க்கமாகப் பார்த்தான்.
“என்ன மாமா ஆனா சொல்லுங்க.. ” என்றாள்.
“நீ என் பேச்சை கேட்காம என் அப்பா சொன்னதைக்க கேட்டதுக்கு நான் உனக்கு தண்டனை கொடுக்கணுமே..” என்றான்.
அவளோ “தண்டனையா! ” என்று வாயைப் பிளக்க..
“ம்ம்.. ஆமா நீ என்கிட்டே மன்னிப்பு கேக்கணும். அது தான் உனக்கு தண்டனை ” என்றான்.
