- Joined
- Oct 6, 2024
- Messages
- 151
அடுத்து நான் எழுதும் புதிய கதை அதிருதடா நெஞ்சம் உன்னாலே. ஆல்பா மேல் ஆன அயனுக்கும் சிட்டுக்குருவியென சிறகடித்து பறக்கும் ரோஜாவிற்கும் இடையிலான காதல் கதை இது.
காலை வாசல் பெருக்கி கோலமிடுவதற்காக அயன் வீட்டு வேலையாள் அவர்கள் வீட்டின் கேட்டை திறந்து கொண்டு வெளியே வர..
அப்போது அயனின் கார் வந்து அவன் வீட்டு வாசலில் முன்பு நின்றது.
அவன் கார் உள்ளே வருவதற்காக கதவை திறந்து விட்டார் அந்த வேலையாள்.
அயன் கார் உள்ளே நுழையும் போதே அதன் பின்னால் கவின்,மித்ரன் இருவருடைய காரும் வந்தது.
இவ்வளவு காலையிலேயே இவர்கள் ட்ரக்கிங் சென்றிருந்தவர்கள் சென்ற வேலை முடித்துவிட்டு வந்திருக்கிறார்களா? என யோசித்தபடி வேலையால் நின்று பார்த்துக் கொண்டு இருந்தார்.
அவரிடம் வந்து தன் காரை நிறுத்திய கவின் கார் ஜன்னலை இறக்கிவிட்டு "என்ன அப்படி பார்த்துட்டு இருக்கீங்க சீக்கிரம் உள்ளே போய் அங்கிள் ஆன்டியை எழுப்பி விடுங்க கையோட ஆரத்தி தட்டையும் ரெடி பண்ணிட்டு வாங்க"என்றான்.
"ஆர்த்தி தட்டா?" என்று அந்த வேலையாள் தலையைச் சொரிய..
"எதுக்கு ஆர்த்தி கரைத்து எடுத்துட்டு வர சொன்னேன்னு இன்னும் கொஞ்ச நேரத்துல உங்களுக்கே புரியும் முத்து அண்ணா போங்க சீக்கிரம் அங்கிள் ஆன்டியை எழுப்பி விடுங்க" என்று அவரை கவின் அவசரப்படுத்த.
"சரிங்க தம்பி!" என்று வேகமாக அவர்கள் வீட்டிற்குள் ஓடியவர். அப்போதுதான் ஜாகிங் செல்வதற்காக இறங்கி வந்த அயனின் அப்பா பாலசுப்ரமணியனை பார்த்து "ஐயா தம்பிங்க எல்லாம் ட்ரெக்கிங் போயிட்டு வந்துட்டாங்க. உங்களையும் அம்மாவையும் எழுப்பி விட சொன்னாங்க. கூடவே ஆர்த்தி தட்டு வேற கரைச்சிட்டு வரணும்னு சொல்றாங்க எனக்கு ஒன்னும் புரியல" என்றார் முத்து.
"ஆரத்தி தட்டா எதுக்கு? இவங்க என்ன போருக்கா போயிட்டு வந்திருக்கானுங்க ஆரத்தி கரச்சு இவனுங்கள வரவேற்கிறதுக்கு. ட்ரக்கிங் தானே போயிட்டு வராங்க அதுவும் மாசம் மாசம் போயிட்டு வராது தானே"என்று யோசித்தவாரே வாசலை பார்த்தார் பாலசுப்ரமணியன்.
அங்கே அயன் வாசலில் ஒரு பெண்ணின் கையை பிடித்து நின்றிருக்க அவள் கழுத்தில் மஞ்சள் கயிற்றில் கட்டிய தாலி தொங்கிக் கொண்டிருந்தது.
அதைப் பார்த்ததுமே அவருக்கு காரணம் புரிய "முத்து நீ போய் ஆரத்தி கரச்சு எடுத்துட்டு வா. நான் போய் தேவகியை எழுப்பிட்டு வரேன்" என்று விட்டு வேகமாக தன் அறைக்கு ஓடியவர் நன்கு படுத்து உறங்கிக் கொண்டு இருந்த தேவகியின் தோளில் தட்டி அவரை அவசரமாக எழுப்பினார்.
"என்னங்க.." என சலித்துக் கொண்டே கண்களை தேய்த்தபடி கட்டிலில் எழுந்து அமர்ந்த வரை "ஏய் சீக்கிரம் போய் முகத்தை கழுவிட்டு வாடி உன் மூத்த மகன் கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்கான். அவனுக்கு ஆரத்தி எடுக்கணும்" என்றார் பாலசுப்ரமணியன்
"என்னங்க சொல்றீங்க...." என்று தூக்கம் முழுவதும் கலைந்தவராக தேவகி அவரைப் பார்க்க.
" எனக்கும் இப்பதாண்டி விஷயம் தெரியும் சீக்கிரம் வா அவன் வாசல்ல காத்துட்டு இருக்கான்" என்று தன் மனைவியை அவசரப்படுத்த
"இரண்டு நிமிஷங்க.." என்று விட்டு வேகமாக பாத்ரூம் சென்று முகம் கழுவி பிரஷ் ஆகிவிட்டு கீழே வர...
பாலசுப்பிரமணியன் சொன்னது போல கழுத்தில் புதிதாக கட்டிய தாலியுடன் பதட்டத்தோடு அயன் பக்கத்தில் ஒரு சிறிய பெண் நின்று இருக்க... அவள் கையைப் பிடித்துக் கொண்டு கம்பீரமாக என் மகன் நிமிர்ந்து நெஞ்சோடு நின்றிருப்பதை பார்த்த தேவகிக்கு இந்த காட்சியை கண்டு சந்தோஷப்படுவதா இல்லை ஆனந்தக் கண்ணீர் வடிப்பதா என்று தெரியவில்லை அவசரமாக அவர் வாசலுக்கு வரவும் முத்து ஆரத்தி கரைத்து எடுத்து வரவும் சரியாக இருந்தது.
அவர் எதுவும் பேசாமல் அந்த ஆரத்தி தட்டை வாங்கி வாசலை விட்டு வெளியே வந்தவர் படிகளில் இறங்கி வந்து தன் மகனுக்கு ஆர்த்தி எடுக்க வர... "ஆன்ட்டி இருங்க என்னோட பிரண்டுக்கு நாங்களும் சேர்ந்து ஆர்த்தி எடுக்கிறோம் " என்று சொல்லி கவின், மித்ரன், ராகவ், ஸ்ரீ நால்வரும் சேர்ந்து தேவகியுடன் அயன், ரோஜாவிற்கு ஆரத்தி சுற்றி அவர்கள் இருவரையும் உள்ளே அழைத்து வந்தனர்.
அவர்களைத் தாண்டி வந்த அயன் தன் அப்பாவை பார்த்து "அப்பா இது ரோஜா" என்று அவளை தன் அப்பாவிடம் அறிமுகம் செய்து வைத்தான்.
ரோஜா அயனின் அப்பாவை பார்த்தவள் அவர் என்ன சொல்லப் போகிறாரோ என யோசித்தபடி பார்க்க அவரோ சிரித்து முகமாக "உள்ளே வாம்மா" என்று தன் மருமகளை அழைத்தார்.
அவள் தயங்கியபடி வாசலில் நின்று இருக்க.. அயன் அவள் கைகளைப் பிடித்து அழைத்துக் கொண்டு உள்ளே வந்தான்.
அவர்கள் பின்னால் ஓடி வந்த தேவகி இருவரும் உள்ளே வந்ததும் "ரெண்டு பேரும் முதல்ல சாமி கும்பிட்டுக்கோங்க" என்று அவசரமாக பூஜை அறைக்கு சென்றவர் "முத்து பூஜைக்கு எல்லா ஏற்பாடும் செய்திருக்க தானே" என்றார்.
"அம்மா எல்லாம் செஞ்சுட்டேன் நீங்க விளக்கை பற்ற வச்சா மட்டும் போதும்" என்றார் முத்து.
"அதுதான் விளக்கேற்ற என் மருமகள் வந்துட்டாளே இனிமேல் நான் எதுக்குப்பா" என்று சொல்லி ரோஜாவை பார்த்து "உன் பேரு என்னமா?" என்றார் தேவகி.
"ரோஜா" என்று குனிர்ந்த தலை நிமிராமல் அவள் பெயரைச் சொல்ல...
அவள் இப்படி அடக்க ஒடுக்கமாக நின்று பதில் பேசுவதை பார்த்து அயன் முதற்கொண்டு மற்றவர்களுக்கும் சிரிப்பு வந்தது. அவளோ அதை காட்டிக் கொள்ளாமல் அங்கே நின்று இருக்க.
"போம்மா நீயும் அயனும் உள்ளே போய் விளக்கு பத்த வச்சு சாமி கும்பிடுங்க" என்றார்.
ரோஜா தயக்கமாக தேவகியை பார்க்க..
" என்னம்மா அப்படியே நிற்கிற போ போய் விளக்கு பத்தவை "என்றார் தேவகி.
"அத எப்படி பற்ற வைக்கிறது" என்று கேட்டாள் ரோஜா.
"எதம்மா?" என்று தேவகி புரியாமல் கேட்க.
"அதான் அத விளக்க... பத்த வைக்க சொன்னிங்களே அதை எப்படி பத்த வைக்கிறது எனக்கு தெரியாதே" என்றாள் ரோஜா.
அவள் விளக்கு பத்த வைக்க தெரியாது என்று சொன்னதும் அதிர்ச்சியாக தேவகி அவளை பார்த்தவர் அதே அதிர்ச்சியோடு தன் மகனை பார்க்க.
அவன் எதுவும் பேசாமல் ரோஜாவை பூஜை அறைக்குள் அழைத்துச் சென்றவன். பூஜை அறையில் இருந்த தீப்பெட்டியை எடுத்து பற்ற வைத்து அங்கே இருந்த ஒரு குத்து விளக்கில் இருந்த திரிகளை ஏற்றி அவளிடம் காண்பித்தவன்.
தன் கையில் இருந்த தீப்பெட்டியை ரோஜாவிடம் நீட்டி அவளுக்கு பக்கத்திலிருந்து விளக்கை பார்வையாலேயே காட்டி பற்றவை என்றான்.
அவளும் சரி என்று தலையாட்டிவிட்டு தீப்பெட்டியை வாங்கி பற்ற வைத்தவள். எரிந்து கொண்டிருந்த தீக்குச்சியை விரல் நடுங்க குத்து விளக்கின் அருகில் கொண்டு செல்ல அதற்குள் அந்த தீக்குச்சி முழுவதும் எரிந்து அவள் கையை சுட்டு விட்டது .
"ஷ்... அம்மா..." என்று அவள் தீக்குச்சியை தரையில் போட... அவள் சேலை மேல் உள்ள வரவும் அவள் சேலையில் பட்டுவிடக் கூடாது என்று அயன் குறுக்கே புகுந்து எரிந்து கொண்டிருந்த அந்த தீக்குச்சியை தன் கையில் பிடித்துக் கொண்டான்.
அதை பார்த்த ரோஜா "டி லூசாடா நீ எறிஞ்சிட்டு இருக்கிற தீக்குச்சி இப்படி கையில் பிடிக்கிற பாரு உன் கையை இந்நேரம் சுட்டு இருக்கும்" என்று அவன் கையை பார்க்க..
"இதை நான் பிடிக்கலைன்னா இந்த தீக்குச்சி உன்னோட சேலையில பட்டிருக்கும் பரவாயில்லையா?" என்றான்.
"சேலை தானடா போனா போயிட்டு போகுது அதுக்காக இப்படி உன் கையில காயம் பண்ணிக்கிறியா" என்று அவன் கையைப் பிடித்து லேசாக தீக்காயம் பட்டிருந்த இடத்தை தன் உதடுகள் குவித்து ஊதிவிட்டாள் ரோஜா.
இங்கே பூஜை அறைக்கு வெளியே நின்று இருந்த பாலசுப்பிரமணியத்திற்கும் தேவிகாவிற்கும் ரோஜா தங்கள் மகனிடம் பேசிய விதத்தை கண்டு ஆச்சரியமாக இருந்தது.
தாங்கள் இருவருமே அயனை ஒருமுறை கூட வாடா போடா என்று கூப்பிட்டு பேசியது கிடையாது.
ஆனால் ரோஜாவை வார்த்தைக்கு வார்த்தை பேசியதை பார்த்து இவர்கள் இருவருக்குமே அதிர்ச்சி தான்.
ஆனால் அவர்கள் இதைப் பற்றி எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை அமைதியாக நின்று பூஜை அறைக்குள் இருவரும் என்ன செய்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டு நின்றிருந்தனர்.
அவர்கள் பின்னால் நின்றிருந்த கவின் மித்திரனிடம் "ஏன்டா இவளுக்கு விளக்கப்பட்டவைக்குவே கை இந்த நடுங்கு நடுங்குது இவளவேற கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்துட்டான். எப்படிடா இவ குடும்பம் நடத்த போறான் . அட்லீஸ்ட் அடுப்பு பத்த வச்சு சுடுதண்ணி வைக்கவாது தெரியுமா இல்லையா அவளுக்கு" என்றான்.
"தீக்குச்சி கூட பிடிக்கறதுக்கு அவ கை நடுங்குதுன்னா அவ எப்படிடா அடுப்பு பத்த வைக்க போறா" என்றான் இவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டு இருந்த ராகவ்.
" ரோஜா அப்போ இருந்து இப்ப வரைக்கும் இன்னும் கொஞ்சம் கூட மாறவே இல்லையா" என்றான் ஸ்ரீ.
" அதைப் பார்த்தாலே தெரியுது இது என்னடா கேள்வி" என்ற கவின் "பேசாம அங்க பாரு" என்றான்.
இங்கே அயன் ரோஜாவின் கையில் இருந்த தீப்பெட்டியை வாங்கி தீக்குச்சியை எடுத்து அவள் கையில் கொடுத்து பிடிக்கச் செய்தவன். அவள் கையைப் பிடித்து தீக்குச்சியை பற்றவைத்து அங்கே இருந்த விளக்கை அவளோடு சேர்ந்து ஏற்றினான்.
விளக்கு ஏற்றி முடித்ததும் அயன் அங்கே இருந்த தட்டை எடுத்து சூடம் பற்ற வைத்து கடவுளுக்கு காட்டியவன் ரோஜாவிடம் நீட்ட.. நான் சூடத்தை தொட்டு கண்களில் ஒற்றி திருநீரை எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டாள்.
"இதெல்லாம் நல்லா பண்ணுடி " என மனதில் நினைத்துக் கொண்டவன் தேவகிக்கும் பாலுவுக்கும் கொடுத்துவிட்டு மற்றவர்களையும் எடுத்துக்க சொல்லி நீட்டியவன் பின்பு தட்டை பூஜை அறையில் வைத்து விட்டு "அம்மா நீங்க ரோஜா கூட பேசிக்கிட்டு இருங்க நான் ரூமுக்கு போறேன்" என்று வேகமாக தன்னரைக்கு சென்று விட்டான்.
அவன் மேலே தன் அறைக்கு செல்லும்வரை அமைதியாக அனைவரும் அவனையே பார்த்திருந்தவர்கள் அயன் தன்னறைக்குச் சென்று கதவை சாற்றிய அடுத்த நொடி ரோஜாவிடம் திரும்பிய கவின் அவள் கையைப்பிடித்து இழுத்துக் கொண்டு வந்து சோபாவில் அமர்ந்த வைத்தவன் அவள் அருகில் அவனும் அமர்ந்து கொள்ள. அவர்களை சுற்றி மற்றவர்களும் அமர்ந்து அவர்களையே பார்த்தனர்.
அவர்களை எல்லாம் புரியாமல் ரோஜா பார்க்க..."சொல்லு எப்படி அயன் உன் கழுத்துல தாலி கட்டுறப்போ நீ தடுக்காம அமைதியா இருந்த.. உங்களுக்குள்ள என்ன நடக்குது" என்று கேள்வி ஆரம்பித்தான் கவின்.
"ஏண்டா இப்படி கேக்குறீங்க ... நான்தான் அவனை என் கழுத்துல தாலி கட்ட சொன்னேன்" என்றாள்.
"என்னடி சொல்ற அவன் எங்க கூட இருந்த வரைக்கும் உன்ன கல்யாணம் பண்ணிக்க போறேன்னு ஒரு முறை கூட சொல்லவே இல்லையே" என்றான் கவின் அதிர்ச்சி மாறாமல்.
"எனக்கு லாஸ்ட் மினிட்ல தான் கன்ஃபார்ம் ஆச்சு அப்புறம் எப்படிடா உங்களுக்கு தெரியும்" என்றாள்.
"கவின் என்னடா ரெண்டு பேரும் பேசிட்டு இருக்கீங்க. எனக்கு எதுவும் புரியல. இங்க என்ன தான் நடக்குது. முதல்ல அயன் எங்க இருந்தான் எப்படி கரெக்டா ரோஜாவுக்கு நடக்க இருந்த கல்யாணத்துக்கு வந்தான்" என்றான் மித்ரன் புரியாமல் .
"உனக்கு தெரியாது அவன் எப்படி வந்தான்னு" என்று அவனை குறும்பாக பார்த்த கவின். "அவன் அங்க வந்ததுக்கு காரணமே நீங்க தான் டா" என்று மித்ரன், ஸ்ரீ இருவரையும் பார்த்து கூறினான்.
"என்ன டா சொல்ற..." என்று இருவரும் அதிர்ந்து பார்க்க.. கவின் நடந்ததை விவரிக்க துவங்கினான்.
இது ஒரு அதீத காதல் கதை. இந்த கதையில் அதிகப்படியான ரொமான்ஸ்களும் அதற்கு தகுந்தார் போல காட்சிகளுக்கு தேவைப்படும் நேரத்தில் விரசமான சில வார்த்தைகளும் இடம்பெறும். நாயகி உடன் நாயகன் நெருங்கி இருக்கும் காட்சிகளில் அதிகப்படியான ரொமான்ஸும், 18 வயதை கடந்தவர்களுமே படிக்கும் படி கதை அமைப்பு இருக்கிறது .