- Joined
- Oct 6, 2024
- Messages
- 151
தாராவை ஏர்போர்ட்டில் இருந்து நேராக தன் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான் லோகி.
வாசலில் லோகியின் கார் வந்து நின்ற வேகத்தை பார்த்து ஹாலில் இருந்த அமலா எழுந்து வாசலுக்கு வர.. அவனுடன் சேர்ந்து தாராவும் இறங்கி வருவதை கண்டு குழப்பமாக லோக்கியை பார்த்தார்.
லோகின் காருக்கு பின்னால் மற்றொரு கார் வந்து நிற்க அதிலிருந்து குமரனும் மல்லியும் இறங்கி வர அவர்களை பார்த்தவர். இதுவும் சரியில்லை என்பதை மட்டும் உணர்ந்தவர் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் "அடடே வா மல்லி நல்லா இருக்கியா. இப்பதான் உனக்கு இந்த வீட்டு பக்கம் வழி தெரிஞ்சுதா" என்று கேட்டுக்கொண்டே மல்லியிடம் சென்றவர்.
" வாங்க அண்ணா நல்லா இருக்கீங்களா" என்றார் குமரனிடம்.
"நல்லா இருக்கேன் மா" என்றவர் "என்ன மன்னிச்சிடு அமலா " என்றார் அவரை தயக்கமாக பார்த்து.
"என்ன அண்ணா எதுக்கு இப்போ மன்னிப்பு கேக்குறீங்க" என்று அமலா புரியாமல் குமரனையும் மல்லியையும் பார்க்க...
வாசல் வரை சென்றிருந்த லோகி அமலா வாசலில் வைத்து குமரன் மல்லி இருவரிடம் பேசிக்கொண்டிருப்பதை பார்த்தவன்.
"அம்மா அவங்கள உள்ள கூட்டிட்டு வாங்க மத்ததெல்லாம் உள்ள வச்சு பேசிக்கலாம்" என்றவன்.
" வா தாரா.. " என்று அவளை அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைய...
அமலாவிற்கு எதுவுமே விளங்கவில்லை "வாங்க அண்ணா உள்ள போகலாம்" என்றவர் மல்லியையும் கைப்பிடித்து உள்ளே தன்னோடு அழைத்துச் சென்றார் அமலா.
லோகியின் வீட்டிற்குள் தன் வலது காலை எடுத்து வைத்து நுழைந்த தாரா "இன்னைக்கு இந்த வீட்டுக்குள்ள நான் வந்து இருக்கேன் சீக்கிரத்திலேயே லோக்கியின் மனசதை மாற்றி என்னை ஊர் அறிய என்ன கல்யாணம் செய்துக்க வைப்பேன். அவன் ஏற்கனவே கல்யாணம் பண்ணினவல அவன்கிட்ட இருந்து பிரிச்சு இந்த வீட்டை விட்டு அனுப்பி வைப்பேன்" என்று மனதிற்கு சபதம் எடுத்துக் கொண்டவள் வீட்டிற்குள் மிகவும் நல்லவள் போல நுழைந்தாள்.
அம்மா குமரன் மல்லி இருவரையும் சோபாவில் அமர வைத்தவர் யோக்கியன் அருகில் நின்று சென்ற தாராவை மேலும் கீழும் பார்த்துவிட்டு முறைத்த அமலா "லோக்கி என்ன விஷயம் பா எதுவா இருந்தாலும் உள்ள வந்து பேசிக்கலாம்னு சொன்னியே.. எதுவும் பிரச்சனையா?" என்றார் சற்று கலக்கமான மனதுடன்.
"ஆமாம்மா கொஞ்சம் அப்படித்தான் வச்சுக்கோங்களேன்" என்றவன் ""எங்கே அப்பாவையும் சித்தாராவையும் காணோம்" என்றான்.
"அடடே வாடா குமரா ஒரு வழியா என் வீட்டுக்கு வந்துட்டியா?" என்று அமலாவை போலவே இவர்களை பார்த்ததும் மனதில் எந்த ஒரு மனஸ்தாபமும் இல்லாமல் லோகின் அப்பா இவர்களை வரவேற்றார்.
"என்னடா பண்றது இப்போ என் பொண்ணு ஏற்கனவே உன் பையனுக்கு பண்ணின பிரச்சனையில உங்க மூஞ்சில எல்லாம் எப்படி முழிப்பேன்னு இருந்தேன். இனிமே உன்ன பார்க்கவோ இந்த வீட்டுக்கு வரவும் முடியாதுன்னு நினைச்சேன். ஆனா லோகி ஓட மனசுக்கு என் பொண்ணு பண்ணுன அவ்வளவு பெரிய தப்பையும் மன்னிச்சு அவளை இங்கே கூட்டிட்டு வந்து இருக்கான். அதனாலதான் அவங்க கூட சேர்ந்து நாங்களும் இங்கே வர வேண்டியது தான் போயிடுச்சு" என்றார் குமரன்.
"சரி விடுடா நான் தாரா ஏதோ சின்ன பொண்ணு லோகி மேல இருந்த ஆசையில அப்படி அவ மேல பொய்யா தகவல் சோசியல் மீடியாவில் பரப்பிட்டா. அதுக்கு யாரு என்ன செய்ய முடியும். நடந்தது நடந்து போயிடுச்சு இனி அதை மறந்துட்டு அடுத்து நடக்க போறத பார்க்கலாம். நீ ஒன்னும் கவலைப்படாத தாராகிட்ட பேசி நானே அவளுக்கு ஒரு நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன்% என்றார் லோகின் அப்பா.
"ஆமா அண்ணா கவலைப்படாதீங்க தாராவுக்கு கண்டிப்பா ஒரு நல்ல பையன் கிடப்பான் அவ வாழ்க்கை நல்லபடியா அமையறதுக்கு நானும் அவரும் பொறுப்பு எடுத்துக்குறோம்" என்றார் அமலா.
குமரனும் அமலாவும் தாரா லோக்கியால் கர்ப்பமாக இருக்கும் விசயம் தெரியாததால் தான் இப்படி எல்லாம் பேசுகிறார்கள் என்று அவர்களுக்கு புரிந்தது. இருந்தும் இந்த விஷயத்தை எப்படி அவர்களிடம் எடுத்து சொல்வது என்று தெரியாமல் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவரை பார்த்துக் கொண்டிருக்க...
" அப்பா சோசியல் மீடியாவுல வெளிவந்த தகவல் எல்லாம் உண்மைதான். தாரா வயித்துல இப்போ என்னோட வாரிசு வளருது" என்று லோகி அவர்கள் இருவரையும் பார்த்து கூறினான்.
லோகி சொன்னதை கேட்டதும் அமலாவிற்கும் அவர் கணவருக்கும் அதிர்ச்சியே "டேய் என்னடா சொல்ற தாரா வயித்துள உன்னோட வாரிசு வளருதா? இதை நீ எங்கள நம்ப சொல்றியா.. முதல்ல இந்த மாதிரி பேசி எங்களை டென்ஷன் பண்றத நிறுத்து. இதெல்லாம் பொய்தானே " என்றார் அமலா பதட்டமாக.
"அம்மா யாராவது இந்த விஷயத்துல பொய் சொல்லுவாங்களா? நான் நிஜமாத்தான் சொல்றேன். தாராவோட வயசுல என்னோட வாரிசு தான் வளருது. அதுக்கு காரணம் நான் தான் தாராவை எதுவும் தப்பா நினைக்காதீங்க. அவ இந்த மாதிரி ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதுக்கு முக்கிய காரணமே நான் தான்" என்றவன்.
அவர்கள் இருவரிடமும் தாரா அவனிடம் காட்டிய வீடியோவை பற்றியும் அவள் கதை கட்டி விட்டதை எல்லாம் உண்மை என்று நம்பி இருந்த லோகி அதையே தன் பெற்றோரிடமும் சொல்லி அவர்களையும் அதை நம்ப வைத்து இருந்தான்.
லோகி சொன்னதை நம்புவதை தவிர அவர்கள் இருவருக்கும் வேறு வழியே இல்லை.
லோகி தாராவின் வயிற்றில் அவன் வாரிசு வளர்கிறது என்று சொன்னதை கேட்டதும் இவர்கள் தலையில் இடிய விழுந்தது போல இருந்தது.எதுவும் செய்ய முடியாத நிலையில் அவர்கள் இருவரும் தாராவை பார்க்க...
தாராவோ அவர்களை பார்த்து உள்ளுக்குள் சந்தோஷப்பட்டாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நேராக அமலாவிடம் வந்து அவர் கையைப் பிடித்துக் கொண்டு.
" ஆன்ட்டி என்ன மன்னிச்சிடுங்க என்னால அந்த ஒரு சூழ்நிலையில எதுவுமே செய்ய முடியல. லோக்கியும் போதை மருந்து சாப்பிட்டு இருந்ததுனால அவனாலயும் எதுவும் செய்ய முடியல.. ஏதோ என்னோட போதாத காலம் இப்படி ஆயிடுச்சு" என்று மிகவும் வருத்தப்படுவது போல நடித்து அவர்களை நம்ப வைத்தாள்.
"தாரா உன்னுடன் நிலைமை எங்களுக்கு நல்லாவே புரியுது. லோகி மட்டும் ஸ்ருதிய கல்யாணம் செய்துக்காமல் இருந்திருந்தால் நானே உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் செய்து வச்சிருக்கேன். ஆனா நாடு விட்டு நாடு வந்து லோகிய சுருதி காதலித்து கல்யாணம் செய்து இருக்கா.. அவள எங்களால ஏமாத்த முடியாது. ஸ்ருதியோட அம்மா ஸ்தானத்திலிருந்து அவளை நான் பார்த்துக்குறேன்னு வாக்கு கொடுத்து இருக்கேன். அவளோட நிலைமையை நீ கொஞ்சம் யோசிச்சு பாரு எங்களுக்கு என்ன சொல்றதுன்னு தெரியல" என்றார் அமலா.
"ஆன்ட்டி என்னால யாருக்கும் எந்த பிரச்சனையும் வேண்டாம். அதனாலதான் நான் இந்த நாட்டை விட்டு ஜெர்மன்ல போய் செட்டில் ஆக முடிவு பண்ணி கிளம்பிட்டேன். ஆனா லோகி தான் வந்து என்ன அவனோட இங்க அழைச்சிட்டு வந்துட்டான்" என்றாள் இந்த நல்லவள்.
" லோகி ஏம்பா நீ என்ன முடிவு எடுத்திருக்க சொல்லு... ஸ்ருதிய மனசுல வச்சுக்கோ அவ உன்னை நம்பி தான் இருக்கா அவளுக்கு வேற யாரும் இல்ல அவ குடும்பத்தை பற்றி உனக்கு நல்லாவே தெரியும் கஷ்டப்படுத்த நினைச்சுடாத " என்றார் அமலா.
"இங்க ஒருத்தி வயித்துல குழந்தையை சுமந்துட்டு வந்து நிற்கிறேன். என்னை பத்தி கொஞ்சமாவது இந்த கிழவி கவலைப்படறாளா. இப்ப கூட அந்த ஸ்ருத்தியை பத்தி தான் கவலை. அவளுக்கு எதுவும் ஆகிடக்கூடாதாம். அப்போ நானும் என் வயதில் வர பிள்ளையும் என்ன செய்வோம். அதை கொஞ்சமாவது இந்த கிழவி யோசிக்குதா" என்று அமலாவை உள்ளுக்குள் வறுத்து எடுத்துக் கொண்டிருந்தால் தாரா.
""அம்மா நான் தெளிவா யோசிச்சிட்டு தான் முடிவு பண்ணி இருக்கேன். முதல்ல தாரா நல்லபடியா குழந்தையா பெத்தெடுக்கட்டும். அதுக்கு அப்புறம் எதுவாக இருந்தாலும் முடிவு பண்ணிக்கலாம்" என்றவன்.
"கொடைக்கானலுக்கு ஷூட்டிங்க்கு போய் இருக்கிற ஸ்ருதி நல்லபடியா அவ வேலையும் முடிச்சுட்டு கிளம்பி வரட்டும். அவ வந்ததும் நேரா அவகிட்ட நடந்ததை சொல்லி அவகிட்ட மன்னிப்பு கேட்கிறேன். அதுக்கப்புறம் ஸ்ருதி என்ன முடிவு எடுக்கிறாளோ அதை பொறுத்து தான் மத்ததெல்லாம்" என்றான் லோகி.
அமலாவிற்கும் லோகின் அப்பாவிற்கும் அதற்கு மேல் என்ன கேட்பது என்று தெரியவில்லை அவர்கள் இப்போது எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறார்கள்.
"லோகி இப்போ தாராவை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்து வச்சிருக்க... ஏற்கனவே தாராவையும் உன்னையும் சேர்த்து வச்சு ஊர் முழுக்க ஏதேதோ பேசிட்டு இருக்காங்க இந்த நிலையில தாராவை இங்கே கூட்டிட்டு வந்து வெச்சிருக்கிறது உன்னோட அரசியல்வாதிக்க வாழ்க்கையை பாதிக்காதா?" என்றார் குமரன்.
"அப்பா நான் செஞ்ச தப்புக்கான விளைவை நான் தான் அனுபவிச்சு ஆகணும். யார் என்ன பத்தி என்ன பேசினாலும் எனக்கு கவலை இல்லை. என்னோட அரசியல் வாழ்க்கையே இதோட முடிஞ்சு போனாலும் அது பத்தி நான் பெருசா எடுத்துக்க போறதில்ல. எனக்கு இப்போ தாரா வயித்துல இருக்குற குழந்தை நல்லபடியா பிறக்கணும். அதுதான் முக்கியம்னு தோணுது. அதேபோல சுருதி இதை எப்படி எடுத்துக்குவான்னு தெரியல. என்னால அவளும் பாதிக்கப்பட்டு இருக்கா அவ என்ன முடிவு எடுக்கிறாளோ அதை அதுக்கு நான் முழுமன்ஸோட சம்மதிக்கணும்னு என் மனச தயார் செஞ்சுட்டேன் . இனி நடக்கப்போற எதுவுமே என் கையில் இல்ல எல்லாமே என் கையை மீறி போயிடுச்சு சுருதி ஷூட்டிங் முடிச்சுட்டு வரட்டும் அதுக்கப்புறம் மத்ததெல்லாம் பேசிக்கலாம் " என்றான் லோகி .
பின் தாராவை பார்த்து "தாரா நீ இங்க இருக்கிற கெஸ்ட் ரூம்ல தங்கிக்கோ உனக்கு என்ன வேணுமோ நீ இருக்கும் இடத்திலேயே எல்லாம் வந்து சேரும். நீ இங்கே இருக்கிற வரைக்கும் உனக்கு துணையா உன்னோட அம்மா அப்பாவும் இங்கேயே இருப்பாங்க. அவங்களையும் கூட தங்க வச்சுக்கோ உனக்கு வேற எதுவும் வேணும்னா தயங்காம என்கிட்டயும் இல்ல என் அம்மா அப்பாகிட்டையும் கேட்டுக்கோ. உனக்கு வேணுங்கற எல்லா வசதியும் இங்கேயே கிடைக்கும். இது எல்லாம் உனக்கு எந்த பிரச்சனையும் இல்லாம நடக்கணும்னா நான் சொல்ற ஒரே ஒரு கண்டிஷனுக்கு மட்டும் நீ சம்மதிக்க வேண்டும்" என்றான் லோகி.
"சொல்லு நோக்கி எனக்காக நீ இவ்வளவு தூரம் இறங்கி வந்து செய்ற நீ எது சொன்னாலும் நான் அதற்கு கட்டுப்பட தயாரா இருக்கேன்" என்றாள் தாரா.
தாராவிற்கு நோக்கி போடும் கண்டிஷன் என்ன?
நாளை பார்க்கலாம்

Author: layastamilnovel
Article Title: வாடகைக் காதலன் 29
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.